அப்படி இருந்தால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பஞ்சு கற்றையைக் கொடுத்து ஒன்றரை மணி நேரம் பல் பிடுங்கிய இடத்தில் வைத்துக் கொள்ளச் சொன்னது தெரிந்திருக்கும்.
*
ஏனென்றால் ரத்தம் உறைந்தால்தான் காயம் குணமாகும்; புது எலும்பு உருவாகும். ரத்தம் உறைவது நிற்காவிட்டால் மற்றுமொரு பஞ்சு கற்றையை இன்னும் ஒரு முறை அரை மணி நேரத்துக்கு முயற்சி செய்யலாம்.
**
முகம், தாடை, கன்னத்தில் மீது ஐஸ் கட்டிகளை வைத்து குளிரச் செய்வது, ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் அருந்துவதுகூட ரத்தம் உறைவதற்காகத்தான். ரத்தம் உறைந்த பின்னரும் அடுத்த 24 மணி நேரத்துக்குக் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியவை.
**
பின்வருமாறு:
புகை பிடிப்பது, புகையிலை மெல்லுவது, மது அருந்துவது, குழல் (நற்ழ்ஹஜ்) வைத்து உறிஞ்சுவது, தீவிரமாக வாய் கொப்பளிப்பது, பல் பிடுங்கிய இடத்தை நாக்காலோ, விரலாலோ தொடுவது கூடாது.
*
மாறாக, நிறைய திரவ உணவை, மிருதுவான, சத்துள்ள உணவை சூடான, மசாலா மிகுந்த உணவைத் தவிர்ப்பது நல்லது. உணவுக்குப் பின் உணவுத் துணுக்குகள் பல் பிடுங்கிய இடத்தில் இல்லாமல் இருக்க இதமாக கொப்பளிக்க வேண்டும்.
*
24 மணி நேரத்துக்குப் பின் இயல்பான நிலைக்கு நீங்கள் வந்து விடுவீர்கள். இயல்பான நிலை திரும்பாமல், ரத்தக் கசிவு அல்லது தீவிர வலி அல்லது தொடர்ந்த வீக்கம் இருந்தால் உடனே உங்கள் பல் மருத்துவரை அணுகுங்கள்.
***
நன்றி தினமணி
***
0 comments:
கருத்துரையிடுக