...

"வாழ்க வளமுடன்"

28 அக்டோபர், 2010

சர்க்கரை இருந்தால் விழித்திரை உஷார்

சர்க்கரை நோயாளிகளுக்கு கண்களிலுள்ள விழித்திரை பாதிப்படைந்து பார்வை மங்கிப் போகலாம்.




அதிகபட்சமாக பார்வையிழப்பும் ஏற்படக்கூடும். இந்தப் பிரச்னை இரு வகை சர்க்கரை நோயாளிகளுக்கும் வரக் கூடும்.

*
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு விழித்திரைப் பகுதியில் ஓடும் ரத்தக் குழாய்கள் வீக்கமடைகின்றன அல்லது விரிவடைகின்றன; கசிவு ஏற்படுகின்றன அல்லது தேவையற்ற புதிய ரத்தக் குழாய்கள் ஏற்படுகின்றன.

*

அதனால் விழித்திரை மறைக்கப்பட்டு பார்வைக் குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் " டயாபடிக் ரெட்டினோபதி ' என்று பெயர்.

*

ஆரம்பத்தில் எவ்வித அறிகுறியும் தெரியாது. வலியோ பார்வை மங்குவதோ இருக்காது. முற்றிய நிலையில் பார்வை மங்கத் தொடங்கிவிடும்.

*

எனவே, கண் மருத்துவரை ஆண்டுக்கொரு முறையாவது சந்தித்து கண்பரி சோதனை செய்து கொள்வது அவசியம். வளர்ந்த நாடுகளிலும் வளரும் நாடகளிலும் இந்ப்பிரச்னை அதகமாக உள்ளது.

*

உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த ரெட்டினோ பதி எனும் கண் கோளாறு பற்றி இந்தியாவில் இன்னும் முறையான கணக் கெடுப்பு நடத்தப் படவில்லை.

*

ஆகவே, அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் விழித்திரை நன்றாக உள்ளதா என்பதைப் பரிசோதிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும். விழித்திரை பாதிக்கப் பட்டுள்ளதா என்பதை நவீன கருவிகள் மூலம் மிக எளிதில் கண்டுபிடித் துவிடலாம்.

*

விழித்திரை பாதிப்பைச் சீர்படுத்த பல் வேறு சிகிச்சைகள் உ ள்ளன. உரிய நேரத்தில் லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம். விட்ரக்டமி எனப்படும் அறுவைச் சிகிச்சையைச் செய்து கொள்ளலாம்.

*

எனவே, சர்க்கரை நோயாளிகள், கண் மீது எப்போதும் ஒரு கண்வைத்திரப்பது நல்லது. அடிக்கடி கண் மருத்துவரிடம் சென்று, பரிசோதனை செய்து கொண்டால் விழித்திரை பாதிப்பால் பார்வை மங்கா மலும் அல்லது பார்வை பறிபோகாமலும் பாதுகாத்துக் கொள்ளலாம்.


***
நன்றி தினமணி!
***



"வாழ்க வளமுடன்"

மூக்கடைப்பைச் சரி செய்ய எளிய வழிகள்!

ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது.



எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும்.

*

ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன.

*

இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு
சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

*

மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில் தொற்றி ஜலதோஷம் மோசமடைகிறது.

*

மூக்கில் ஏற்பட்ட தொற்று காது மற்றும் தொண்டைக்கும் பரவுகிறது. இப்படி ஏற்படும்பொழுது பெரும்பாலான மருத்துவர்கள் என்டிபையோட்டிக்கை பரிந்துரை செய்கிறார்கள்.

*

குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மூக்கடைப்பு இருக்கும் பட்சத்தில் மூக்கால் மூச்சு விட ஆரம்பித்துவிடுவார்கள்.

*

தூங்கும்பொழுது வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குவார்கள். வயின் மூலம் சுவாசிக்கும்பொழுது கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை.

*

இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக வாயனாலேயே சுவாசிக்கும்பொழுது தொண்டை அழற்சி பிரச்னை ஏற்படுகிறது. ஆகையால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும்.

*

ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

*

ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும்.



***
நன்றி - தினமணி
***


"வாழ்க வளமுடன்"

பல் துலக்க சரியான 'பிரஷ்' எது?

பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் டூத் பிரஷ்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. பெரியவர்களுக்கென்றும் சிறியவர்களுக்கென்றும் தனித்தனி அம்சங்களுடன் பிரஷ்கள் உள்ளன.



கடின ரகம், நடுத்தர ரகம், மென் ரகம் என்றும் குச்சங்களின் வளையும் தன்மையை வைத்து வகைப்படுத்தி பிரஷ்கள் விற்கப்படுகின்றன.

*

பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டிக் கொண்டு விளம்பரம் செய்யும்போது மக்களிடையே குழப்பம் ஏற்படுகிறது.

*

பொதுவாக கடின முனைகள் கொண்ட பிரஷ்கள் தேய்ந்து ஈறுகளை வலுவிழக்கச் செய்கின்றன. அதனால் வேர்கள் வெளிப்பட்டு பற்கூச்சத்தை உண்டாக்கும்.

*

ஆகவே, அதை தவிர்த்து மென்மையான அல்லது நடுத்தர வகை பிரஷ்களைப் பயன்படுத்துவது நல்லது. பற்களின் சுத்தத்திற்கு தேய்ப்பதில் தரும் அழுத்தம் முக்கியம் அல்ல. தேய்க்கும் முறையே முக்கியம்.

*

பிரஷ்ஷின் முனைப் பகுதி வாய்க்குள் எளிதில் அடங்கும் அளவுடையதாக இரண்டு பல் அகலத்திற்குக் குச்சங்கள் கொண்டதாய் இருத்தல்அவசியம்.


குழந்தைகளுக்கெனில், மேற்கண்ட அம்சங்களுடன் மிகச் சிறிய முனைகள் கொண்ட பிரஷ் போதுமானது.
*
சீரான உயரம் கொண்டதும், 1 அல்லது 1.25'' நீளம், 5/16'' -3/8'' அகலம் கொண்டதும், 2-4 வரிசைகளைக் கொண்டதும் ஒவ்வொரு கற்றையிலும் 80}86 முனைகள் உள்ளதுமான பிரஷ் சிறந்ததாகும்.

*

லேசான வளைவைக் கொண்ட முனையுள்ள பிரஷ்கள் கடைசி பல் அல்லது ஞானப் பற்களுக்குப் பின்னாலும் சென்றடையும் என்பதால் அவை சிறந்தவையே.

*

பிரஷ் முனைகள் தேய்ந்து கற்றையிலிருந்து விலகி நிற்கும்போதோ அல்லது நான்கு மாதத்துக்கு ஒரு முறையோ மாற்றுதல் அவசியம்.

*

பற்களின் வடிவத்திற்கும், அமைப்பிற்கும் ஏற்ற பிரஷ்ஷை தேர்ந்தெடுக்க முடியாத நிலையில் உங்கள் பல் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுங்கள்.


***
நன்றி தினமணி!
***

"வாழ்க வளமுடன்"

சில இலைகளும் அதன் மருத்துவ குணங்களும்:


துளசி:-

ஜீரண கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி முதலியவற்றிற்கு சிறந்தது. இரத்தத்தில் உள்ள விஷத் தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கின்றது.

***

வில்வம்:-

காய்ச்சல், அனீமியா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்றவற்றிற்குச் சிறந்தது. காலரா தடுப்பு மருந்தாக வில்வம் செயல்படுகிறது. சிவன் கோயில்களில் வில்வ இலை கிடைக்கும்.

***

அருகம்புல்:-

எல்லா நோய்களுக்கும் ஏற்ற சிறந்த மருந்து. காலையில் 9.00 மணிக்கு பசி ஆரம்பித்தவுடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து ஒரு பழம் சாப்பிட்டால் போதும்.


அடுத்து மதியச் சாப்பாடுதான். இந்த மாதி¡¢ செய்தால் எல்லா நோய்களும் குணமடையும். உடல் எடை குறைய, கொலாஸ்டிரல் குறைய, நரம்புத்தளர்ச்சி நீங்க, இரத்தப்புற்று குணமடைய அருகம்புல் ஒரு உலகப் புகழ்வாய்ந்த டானிக். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகா¢க்கச் செய்வதில் சிறந்தது அருகம் புல்தான்.


தோல் வியாதிகள் அனைத்தும் அருகம்புல்லில் நீங்கும். இரத்தத்தில் உள்ள விஷத்தன்மைகளை வெளியேற்றுவதில் திறமையானது. விநாயகர் கோயில்களில் அருகம்புல் கிடைக்கும்.

***

அரச இலை:-

ஏழைகளின் டானிக் அரச இலைச்சாறு, நல்ல மலமிளக்கி, உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது. காம உணர்ச்சிகளைத் தூண்டும்; கர்ப்பப்பைக் கோளாறுகள் மறையும். காய்ச்சலுக்கும் நல்லது. அரசமரத்தின் பழங்கள் மலட்டுத் தன்மையை நீக்கவல்லது. எல்லா விநாயகர் கோவில்களிலும் அரசமரம் இருக்கலாம்.

***

பூவரசு:-

நல்ல டானிக், தீக்காயங்கள், புண்கள், தோல் வியாதிகள், தொழுநோய் எல்லாவற்றிற்கும் இந்த இலையை அரைத்துப் பூசலாம். சாறும் குடிக்க வேண்டும். பேதி, சீதபேதிக்கு சாறு மிகவும் சிறந்தது.

***

கல்யாண முருங்கை (முள் முருங்கை):-

அதிகமான பித்தத்தை நீக்கும். முடி நரைக்காமலிருக்க உதவுகிறது. காய்ச்சலைக் குறைக்கும். நீர் பி¡¢யும், மலமிளக்கி, மாத விடாய்த் தொல்லையை நீக்கும் கிருமிகளை வெளியேற்றும். வீக்கங்களை குறைக்கும். நீ¡¢ழிவு, சீதபேதி, வாதம் குணமடையும், 17 வயது வரை வயதுக்கு வராத பெண்களுக்கு இதன் சாறு நல்ல பலன் தருகின்றது.


வாழைத்தண்டு:-

சிறுநீரகக்கல் (Kidney stone) ஆபரேசன் செய்யாமலேயே குணமடைய பச்சை வாழைத்தண்டு சாறு உதவுகிறது. 100gm தண்டுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு மிக்ஸியில் சட்னிபோல் அரைத்து சாறு பிழிந்தால் ஒரு நபருக்கு ஒரு நேரத்திற்குப் போதுமானது.


பாம்புக்கடி போன்ற விஷத்தை வெளியேற்ற உதவுகிறது. (Very effecitve in kidney disorders).சிறுநீர் தொல்லைகள் வராமல், சிறுநீரகத்தைக் கழுவி சுத்தம் செய்வதற்காக ஆரோக்கியமாக வாழ்பவர்கள் கூட வாரம் இரண்டுநாள் வாழைத்தண்டு சாறு குடிக்க வேண்டும்.

***

கொத்தமல்லி:-

இதுவும் நல்ல டானிக் பசியைத் தூண்டும், பித்தம் குறையும். காய்ச்சல், சளி, இருமல், மூலம், வாதம், நரம்புத்தளர்ச்சி குணமாகும்.

***


கறிவேப்பிலை:-

நல்ல டானிக், பேதி, சீதபேதி, காய்ச்சல், எ¡¢ச்சல், ஈரல் கோளாறுகள் மறையும்.

***

புதினா:-

நல்ல டானிக் சிறுநீர் பிரச்சினை, ஜீரணக் கோளாறு, உஷ்ண நோய்கள் மறையும். சிறந்த மலமிளக்கி.

***

கற்பூர வல்லி (ஓமவல்லி):-


மிகச் சிறந்த இருமல் மருந்து. 5 இலைகளை அப்படியே சாப்பிட்டால் உடனே மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் மறையும். புகழ்பெற்ற இருமல் மருந்துகளைப் போல் விரைவாக செயல் புரியும்.

***

வல்லாரை:-

நல்ல டானிக், எல்லா நோய்களையும் நீக்கும். மஞ்சள் காமாலை, அல்சர், தொழுநோய், யானைக்கால் வியாதி, பேதி, நரம்புத்தளர்ச்சி, ஞாபக சக்தி முதலியவற்றிற்கு சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

***

கண்டங்கத்திரி:-

காசநோய், ஆஸ்துமா, மார்சளி, காய்ச்சல், தொழுநோய், இரத்த அழுத்தம், பக்கவாதம், கல்லீரல் நோய்கள் முதலியவற்றிற்கு மிகவும் சிறந்தது. ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும்.

***

தூது வேளை:-

நரம்புத்தளர்ச்சி மறையும், மார்புச்சளி அகற்றும், தோல் வியாதிக்கும் நல்லது. குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கும், ஞாபகசக்தியை வளர்ப்பதற்கும் இது சிறந்த டானிக் ஒரு நேரத்திற்கு பத்து இலைகள் போதும். காது மந்தம், நமைச்சல், உடல் இளைப்பு முதலியவற்றிற்கும் தூது வேளை நல்லது.

***

குப்பைமேனி:-

ஒரு நேரத்தில் ஐந்து இலை சாப்பிட்டால் போதுமானது. கிருமிகளை வெளியேற்றும். பாம்புக் கடிக்கும் நல்லது. மூட்டுவாதம், சொறி, சிரங்கு, தோல் வியாதி, மூலம் முதலிய நோய்கள் குணமடையும். எந்தப் புண்ணுக்கும் இலையை அரைத்து பூசலாம். சொறி சிரங்குக்கு கட்டாயம் இலையை அரைத்தும் பூச வேண்டும். வெகு நாட்களுக்கு சிரங்கைக் குணப்படுத்தாவிட்டால் அது சிறு நீரகத்தைப் பாதிக்கும்.




மஞ்சள் கா¢சாலங்கண்ணி:-

காமாலை, கண்கோளாறு, கல்லீரல் கோளாறு முதலியவற்றிற்கு சிறந்தது.

***

செம்பருத்தி:-

மாதவிடாய்த் தொல்லைகளையும், சிறுநீர் பிரச்சனைகளையும் குணப்படுத்தும், உடலின் உள்ளே வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், முக்கியமான உடலுறுப்புகளின் மேலுள்ள பாதுகாப்பான சவ்வுகளை (mucus membranes) பாதுகாக்கிறது. காமத்தை வளர்க்கும். சர்க்கரை வியாதிக்கும் நல்லது. இதன் பூக்களையும் சாப்பிடலாம் அதில் தங்கச் சத்து நிரம்பியுள்ளது. பூவிலுள்ள மகரந்தத்தை நீக்கிவிடவும்.

***

மணத்தக்காளி கீரை:-

இதுவும் ஒரு டானிக் சீரணக் கோளாறுகள், வாய்வுத் தொல்லைகள், புற்றுநோய், அல்சர், ஈரல் கோளாறுகள், இருமல், அனீமியா, தோல் வியாதிகள் முதலியவற்றிற்கு நல்லது. உடலுக்கு உள்ளே, வெளியே உள்ள வீக்கங்களை குணப்படுத்தும், குளிர் தாங்கும் சக்தியை அதிகா¢க்கிறது. காயங்களுக்கும், புண்களுக்கும் இலைச்சாறு தடவலாம். அரைத்தும் கட்டலாம். World best ointment.

***

தும்பை:-

பக்கவாதம், சளி, இருமல், தலைவலி, மார்சளி, மூட்டு வாதம் முதலியவற்றைக் குணப்படுத்த சிறந்தது. பாம்புக்கடிக்கு தும்பை இலைச்சாறு பாதியும் வாழைத் தண்டு சாறு பாதியும் கலந்து கொடுக்க வேண்டும். தும்பை இலை ஒரு தடவைக்கு பத்து இலை போதும்.

***

வெங்காயமும் பூண்டும்:-

கிருமிகளை வெளியேற்றும் டானிக், சொறி, சிரங்கு, யானைக்கால் வியாதி, சைனஸ், டான்ஸில், இரத்த அழுத்தம், இருமல், ஆஸ்துமா, காய்ச்சல், காமாலை முதலியன குணமாகும். கொலாஸ்ட்ரால் குறையும். பச்சைப் பூண்டுகளை அதிகமாக சாப்பிடக் கூடாது.


***
thanks tamilworld
***


"வாழ்க வளமுடன்"

எல்லா பழங்களில் உள்ள சத்துகள் :)



மாம்பழம்

வைட்டமின் ஏ 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி, சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன.

மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு மாலைக்கண் நோய் ஏற்படும்.

***

ஆரஞ்சுப் பழம்

வைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.

***


பப்பாளிப் பழம்

வைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.

***

நெல்லிக்கனி

வைட்டமின் சி 600 மி.கி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ.பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும் வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.

***

கொய்யாப்பழம்

வைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது, ரத்த ஓட்டம் சீர்பட உதவும் பற்களும் உறுதிதரும்.

***

சாத்துக்குடி

வைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன. வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.



எலுமிச்சை

கால்ஷியம் 70 மி.கி. வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன. அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.

***

கறுப்பு திராட்சை

வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. நார்ப்பொருள் 2.8 கிராம் உள்ளது. நார்சத்து இருப்பதால் மலச்சிக்கல் நீங்கும்.

***

பச்சை திராட்சை

வைட்டமின் சி, கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. அதோடு நார்சத்து 2.9 கிராம் உள்ளது. பச்சை திராட்சைப் பழச்சாற்றை சாப்பிட தாகம் தணியும் நா வறட்சி நீங்கும்.

***

போ£ச்சம் பழம்

இரும்புச் சத்து 7.3 மி.கி., கால்ஷியம் 120 மி.கி. பாஸ்பரஸ் 50 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி சிறதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.

***

சப்போட்டா

மாவுச் சத்து 21.4 கிராம், இரும்புச் சத்து 2 மி.கி. உள்ளது. வைட்டமின் ஏ.பி மற்றும் கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. ரத்த சோகையைப் போக்கும்.

***

வாழைப்பழம்

கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது (116 கலோ¡¢கள்). தவிர வைட்டமின்கள் ஏ.பி.சி உள்ளன. இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. பூவன்பழம் மலச் சிக்கலைப் போக்க உதவும் நேந்திரன் பழம் ரத்த சோகையை நீக்க உதவும். மலை வாழைப் பழம் ரத்த விருத்தி செய்ய வல்லது.

***

ஆப்பிள்

வைட்டமின்கள் ஏ.சி. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள் சிறிதளவு உள்ளன. தசை வளர்ச்சிக்கும் பற்களின் உறுதித் தன்மைக்கும் உதவும்.

***

தர்பூசணி

இரும்புச் சத்து 7.9 கிராம், கால்ஷியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. நீர்ச் சுருக்கைப் போக்கும். கோடையில் தாகம் தணிக்க உதவும்.

***

புளி

இரும்பு 17 மி.கி. கால்ஷியம் 170 மி.கி. பாஸ்பரஸ் 110 மி.கி. மற்றும் வைட்டமின்கள் ஏ.பி.சி ஆகியவை சிறிதளவு உள்ளன. இரும்புச் சத்துக் குறைவினால் ரத்த சோகை ஏற்படும்.

***

சீத்தாப் பழம்

பொட்டாஷியம் 340 மி.கி. நார்ப்பொருள் 3.1 கிராம் உள்ளன. இது தவிர கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் வைட்டமின்கள் பி, சி-யும் உள்ளன. நார்ச்சத்து குறைவினால் மலச் சிக்கல் ஏற்படும். பொட்டாஷியம் குறைவினால் உடல்சோர்வு ஏற்படும்.

***

அண்ணாசிப் பழம்

இரும்புச் சத்து, வைட்டமின்கள் ஏ,பி,சி உள்ளன. நார்ச்சத்து 0.5கிராம், கால்ஷியம் 20 மி.கி., மாவுப் பொருள் 10.8 மில்லிகிராம் உள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்கும்.

***


மாதுளம் பழம்

பாஸ்பரஸ் 70 மி.கி. உள்ளது. கால்ஷியம், இரும்பு ஆகிய தாதுப் பொருள்கள், வைட்டமின்கள் பி,சி சிறிதளவு உள்ளன. கால்ஷியம் உடலில் சேருவதற்கு பாஸ்பரஸ் உதவுகிறது.



***
thanks tamilworld
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "