...

"வாழ்க வளமுடன்"

20 ஏப்ரல், 2011

அழகான பாதாங்களுக்கு பெடிக்யூர் !



பாதங்களை அழகாக்குவதற்கு பெடிக்யூர் செய்து கொள்கிறோம். இதை நல்ல தரமான அழகு நிலையத்தில் செய்து கொள்வதற்கு அதிகமாக செலவாகும். இப்படி செய்து கொண்டாலும், அதை அனேகம் பேர் விரும்புவதில்லை. காரணம், அது மருத்துவ முறையில் இயந்திரத்தனமாக செய்யப்படுகிறது. இதோ, வீட்டிலிருந்தபடியே இதை செய்து கொள்வதற்கு சில ஆலோசனைகள்….





* கால் நகங்களில் ஏற்கனவே இருக்கும் பாலீஷ்களை முதலில் நீக்க வேண்டாம். இதற்கு தேவையான ஸ்க்ரப்பர், கிரீம், துவாலை, காலுறை, செருப்புகள் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.




* நகத்தை வெட்ட வேண்டும். அப்படி வெட்டும் போது, நகத்தை ஒட்ட வெட்டக் கூடாது. கால் இன்ச் அளவிற்கு இடைவெளி விட்டே வெட்ட வேண்டும். நகத்தை வெட்ட மற்றும் நகத்தின் அழுக்குகளை எடுக்க என்று, இரண்டுவிதமாக செயல்படும் நகவெட்டிகளை பயன்படுத்துவது நல்லது.




* பிறகு, மிதமான சுடுநீரில் சிறிதளவு ஷாம்பூ கலந்து, அதில் நம்முடைய கால்களை வைத்து ரிலாக்ஸாக சாய்ந்து அமர்ந்து கொண்டு புத்தகம் படிப்பது அல்லது நமக்கு பிடித்தமான இசையை ரசிப்பது என்று அதை அனுபவிக்கலாம்.


* கால்களுக்கான நல்ல தரமான ஸ்க்ரப்பர், பூமிஸ் கல், அதற்கான பிரஷ் போன்றவற்றை கொண்டு நன்றாக கால்களை தேய்த்துவிட வேண்டும். இதன் மூலம், கால்களில் படிந்துள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும்.




* கால்களை இவ்வாறு தேய்க்கும் போது சிலருக்கு வலி ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படாமல் தவிர்க்க, அதற்கான கிரீம்கள் அல்லது பவுடரை தடவி தேய்க்கலாம். இப்படி செய்வதால், வலி குறைவதுடன் இறந்த செல்களும் இதனுடன் சேர்ந்து உதிர்ந்துவிடும்.



* இந்த செய்முறை முடிந்தவுடன், கால்விரல்களின் கணுப்பகுதியில் உள்ள தேவையில்லாத சதையினை, அதற்கென உள்ள பிரத்யேக கருவியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.




* இது முடிந்தவுடன், அடுத்தது முக்கியமாக செய்ய வேண்டியது கால்கள் மற்றும் நகங்களுக்கு தகுந்த மாய்ஸ்டரைசர் மற்றும் நக கிரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.



* முகத்திற்கு தரமான அழகு சாதனப் பொருட்களை வாங்கி உபயோகிப்பது மட்டும் போதாது. நம்முடைய கால்களையும் நாம் பேண வேண்டும்.
கால்விரல்களுக்கு நல்ல தரமான நகப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டும்.



* பெடிக்யூரை மாதத்திற்கு ஒருமுறையாவது செய்து கொள்வது நம்முடைய பாதங்களை அழகாக, மென்மையாக வைக்கும்.




* நம்முடைய தோழிகளை அழைத்து ஒருநாளில் அனைவரும் சேர்ந்து பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.


***





"வாழ்க வளமுடன்"

தங்கம் + அழகு + ஆபரணம்


* என்றும் மங்காமல் புகழ் தங்குவதால்தான் தங்கத்திற்கு `தங்கம்` என்று பெயரிட்டார் களோ என்னவோ! தங்கம் அழகு ஆபரணம் மட்டுமல்ல. அவசர காலங்களில் அனேக குடும்பங்களின் ஆபத்து காப்பவனாக இருப் பதே தங்கம்தான். நாட்டின் செல்வ வளத்தையும் தங்கத்தால் தான் அளவிடுகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! தங்கம் நீண்ட கால மாகவே ஆபரணமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.


* தங்கம் இருப்பது தெரிந்ததும் அந்த இடத்தில் தொடர்ந்து மண்ணை குடைந்து கொண்டே செல்வார்கள். அப்போது மண் சரிந்து விழாமல் இருக்க பக்கவாட்டில் மரத்தாலோ, சிமெண்டினாலோ அடைப்புகளை ஏற்படுத்துவார்கள்.


200 அடி ஆழம்வரை ஏணி வைத்தே ஏறி இறங்குவார்கள். அதற்கு கீழ் செல்லும்போது இரும்பு கூண்டுக்குள் மனிதர்கள் மற்றும் கருவிகளை வைத்து இறக்குவார்கள். இதில் டெலிபோன் மூலம் தகவல் தொடர்பும் நடக்கும்.


* தங்கம் பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. தங்கம் பாறைகளுக்கு நடுவே கொடிபோல் பரவிக் கிடக்கிறது. தங்கம் படர்ந்தி ருக்கும் அத்தகைய பாறைகளை தங்கப் படிகக் கல் என்கிறார்கள். தங்கம் அடர்த்தியாய் படிந் திருந்தால் சிறிய கொடிபோல் கண்களுக்குப் புலப்படும்.


தங்கத்தை சுரங்கம் தோண்டித்தான் வேட்டி எடுக்க வேண்டும். அதிக ஆழத்தில் தங்கம் காணப்படுவதால் முதலில் தங்கத்தை தேட கழிகள் தோண்டி ஆராய்கிறார்கள்.



* ராஜ திராவகம் எனப்படும் பாதரசத்தில் தங்கம் எளிதில் கரைந்து தங்க டிரை குளோரைடாக மாறும். தனித்த அமிலங்களில் செலினிக் அமிலம் மட்டும் தங்கத்தை கரைக்கும் திறன்கொண்டது. குளோரின், புரோமின், அயோடின் ஆகியவை தங்கத்துடன் நேரடியாகக் கூடும்.


தங்கம் உறுதியற்ற உலோகம். எனவே ஆபரணங் கள், நாணயங்கள் செய்யும்போது தங்கத்துடன் செம்பும், வெள்ளியும் கலக்கப்படுகிறது.


* தங்கத்தின் மதிப்பு எல்லாகாலத்திலும் மாறாமல் இருப்பதால் நாட்டின் செலாவணியை தங்கத்தின் மூலமும் அளவிடுகிறார்கள். இதை தங்கப் பிரமாணம் (கோல்டு ஸ்டாண்டர்டு) என்று குறிப்பிடுகிறார்கள். இம்முறைப்படி நாட்டின் செலாவணியாக ஒரு நாட்டின் பணத்தை, குறிப்பிட்ட எடையளவு கொண்ட தங்கத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.

தங்கப்பிரமாணம் மூன்று வகைப்படும். அவை முழுத்தங்க பிரமாணம், தங்ககட்டி பிரமாணம், தங்கமாற்று பிரமாணம்.



* காகிதப்பணத்தை தங்க நாணயமாகவோ, தங்கக்கட்டியாகவோ மாற்றிக் கொள்வது முழுத் தங்க பிரமாண முறையாகும். ஒவ்வொரு நாட்டு நாணயத்தையும் தங்கத்தால் மதிப்பிட்டு ஒரு நாட்டு செலவாணியை இன்னொரு நாட்டு செல வாணியாக மாற்றி அதற்கு பொன்னைப் பெறலாம். இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் இம்முறை சிலகாலம் கையாளப்பட்டன. உலகம் முழுவதும் தேவையான அளவு தங்கம் இல்லாததால் பிற்காலத்தில் இந்த முறை கைவிடப்பட்டது.



* தங்கம் மஞ்சள் நிறமும், பளபளப்பும் கொண்ட உலோகம். எவ்வளவு காலம் ஆனாலும் தங்கம் காற்றால் பாதிக்கப்படாது. 1063 டிகிரி சென்டிகிரேடு வெப்பநிலையில் தங்கம் உருகும். அப்போது இதன் நிறம் பச்சையாகத் தோன்றும்.


வெப்பத்தையும், மின்சாரத்தையும் எளிதாகக் கடத்தும் தன்மை உடையது. இதனை தகடாக அடிக்கவும், கம்பியாக நீட்டுவதும் எளிது. எனவே ஆபரண ராஜாவாக தங்கம் திகழ்கிறது.


***
thanks ve
l
***



"வாழ்க வளமுடன்"

இயற்கை கலரிங் செய்முறை !



“பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.


“கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது…..


1. டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.


2. இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

*

3. அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!

தேங்காய்க் கீற்று 2
வெள்ளைமிளகு 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

*

4. கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:

இளம் மருதாணி இலை 50 கிராம்
நெல்லிக்காய் கால் கிலோ
வேப்பங்கொழுந்து 2 கிராம்…

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

*

5. இயற்கை கலரிங் முறை:

சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.



***
thanks
***




"வாழ்க வளமுடன்"

குதிகால் செருப்பு-பெண்களுக்கு டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை :)


குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.


* குதிகால் செருப்பணியும் 50 சதவீத பெண்கள் காலில் சுளுக்குடனும், குதிகால் வலியுடனும் அவதிப்படுவதுண்டு.


* குதிகாலின் பின்பக்கம் சிலருக்கு சிவந்து வீங்கியிருக்கும். அவர்களது காயம் வெளியே தெரியாமல் குதிகாலின் உள்ளெலும்பில் கீறலோ அல்லது முறிவோ ஏற்பட்டிருக்கலாம்.


* இயல்பு நிலை பாதிக்கும் வண்ணம் குதிகால் நரம்பு விண்விண்ணெனத் தெறிக்கிற மாதிரி `நியுரோமா’ எனப்படும் கடுமையான வலி ஏற்படலாம்.



* குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும்போது குதிகால் தசைநார்கள் சுருங்கிப் போகும். அதிக உயரமான குதிகால் செருப்புகளை நீண்டநேரம் அணியும் போது முதுகுத் தண்டில் விரிசல் ஏற்பட்டு அதிக அழுத்தம் ஏற்படுவதுடன், முழங்கால் மூட்டுவலியும் ஏற்படும்.

***

இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க டாக்டர்கள் சொல்லும் ஆலோசனை:

குதிகால் செருப்புகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை:

* உங்கள் கால் அளவை சரியாகத் தெரிந்துகொண்டு அதற்குப் பொருத்தமான அதிக உயரமில்லாத குதிகால் செருப்புகளைத் தேர்ந்தெடுங்கள். பிரபலமான கம்பெனி பெயர் மற்றும் செருப்பின் புற அழகில் மயங்கி உங்கள் கால் அளவிற்குப் பொருந்தாத குதிகால் செருப்புகளை ஒருபோதும் வாங்காதீர்கள்.


* பகல் முழுவதும் நீங்கள் நடந்து வேலைமுடித்து மாலையில் வீடு திரும்பும்போது உங்கள் கால் சற்று வீக்கத்துடன் காணப்படும். எனவே நீங்கள் செருப்பு வாங்க காலை நேரத்தை விட இரவு நேரம் பொருத்தமானது.


* நீங்கள் அதிக உயரமாக தெரிய வேண்டும் என்று அளவுக்கு மீறிய 6 அங்குல உயரமுள்ள குதிகால் செருப்புகளை வாங்காதீர்கள். மிக உயரமான குதிகால் செருப்புகளே அதிக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


* 2 அங்குல உயரம் கொண்ட குட்டையான குதிகால் செருப்புகளே ஆபத்தில்லாதவை, பாதுகாப்பானவை.


* குதிகால் செருப்பின் உள்ளிருக்கும் `சோல்` ரப்பரில் ஆனது தானா என்று பார்த்து வாங்குங்கள். ரப்பர் சோல் தான் கால் வழுக்காமல் சிரமமின்றி நடக்க பாதுகாப்பான தாக இருக்கும்.


* குதிகால் செருப்பின் அடிப்பாகம், மேற்பகுதி மற்றும் ஓரங்களின் லைனிங் செயற்கையான வினைல் போன்ற சிந்தடிக் பைபரில் செய்யப்படாமல் இயற்கையான தோலினால் செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும்.


* தோல் செருப்புகளே ஈரத்தை உறிஞ்சும் தன்மை கொண்டவை. அவைதான் காலிற்கு காற்றோட்டமாக அமைந்து பாதுகாப்பு தரும்.


* குதிகால் செருப்பின் முன்பகுதி மேற்புறம் முழுவதும் மூடியிராமல் அங்கங்கே காற்று புகும்படி திறந்த வெளியாக இருக்க வேண்டும்.


* அதிகநேரம் குதிகால் செருப்பணியாமல், குறைந்த நேரம் மட்டுமே உபயோகப்படுத்துங்கள். அழகைவிட பாதுகாப்பான உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.


* குதிகால் செருப்பு காலில் நன்றாகப் பொருந்தும் வண்ணம் வடிவமைப்பு பெற்றிருக்க வேண்டும் அதுவே ஆரோக்கியமானது.


***


நடக்கும்போது கவனிக்க வேண்டியவை:

* குதிகால் செருப்பணிந்தவர்கள் நடக்கும்போது குதிரை நடக்கும் குளம்பொலி சத்தம்போல் கேட்கும். பொருத்தமான குதிகால் செருப்பணிந்த பெண்கள் நடனம் கூட ஆடலாம். ஆனால் பழக்கமில்லாத சில பெண்கள் குதிகால் செருப்புடன் நடப்பதற்குச் சிரமப்படுவர். இத்தகைய பெண்கள் நடப்பதற்கு பயிற்சி எடுக்க வேண்டும்.


* கைகளை முன்னும் பின்னும் நீட்டியசைத்து உடல் எடையைச் சமநிலை செய்து விட்டு நடந்து பழக வேண்டும்.


* குதிகால் செருப்பணிந்தவர்கள் கால்களை எட்டி நடக்காமல் குறுகிய இடைவெளியில் கால்களை எடுத்து வைக்க வேண்டும்.


* மாடிப்படியேறும்போது முன்னங்காலும் குதிகாலும் படியில் ஒன்றுபோல் சமமாகப்பதித்து ஏறவேண்டும்.


* மாடிப்படியில் இருந்து கீழிறங்கும்போது காலின் முற்பாதம் மட்டும் படியில் பதியும்படி கவனமாக நடந்து கீழிறங்க வேண்டும்.


* குதிகால் செருப்புடன் கார் ஓட்டும்போது கார் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் வராது. எனவே குதிகால் செருப்புடன் கார் ஓட்டுவதைத் தவிர்த்தல் நல்லது.


* அதிகாலையில் குதிகால் செருப்பணிந்து நடக்கும்போது குதிகால் வீக்கம் ஏற்படும். இம்மாதிரியான வீக்கம் ஏற்படாமலிருக்க குதிகால் செருப்பணிந்து நடந்தவர்கள் 45 டிகிரி கோணத்தில் காலை நீட்டி கீழே உட்கார்ந்து 10 அல்லது 15 நிமிடநேரம் ஓய்வு எடுத்தல் அவசியம். இப்படி ஓய்வெடுக்கும்போது கால்களிலிருந்து ரத்த ஓட்டம் பிற இடங்களுக்குப் பரவி வீக்கம் குறையும்.


* கால் பாதங்களில் வெந்நீரையும் தண்ணீரையும் மாற்றி மாற்றி ஊற்றிக் கழுவித் துடைத்துவிட்டால் குதிகால் வலியின்றிச் சுகமாக இருக்கும்.


* கால்நீட்டி கீழே உட்கார்ந்து சிறிய பந்தின் மேற்பகுதியில் கால் பாதங்களை அழுத்தி உருட்டுதல், சிறிய கோலிகளை தரையில் போட்டு அவற்றை கால் பாதங்களின் முற்பகுதி விரல் இடுக்கில் அகப்படச் செய்து எடுத்தல் போன்றவை குதிகால் செருப்பு அணிபவர்களின் கால்களுக்கு நல்ல பயிற்சியாகும்.


***
தேங்க்ஸ் நியூஸ்
***




"வாழ்க வளமுடன்"

பருவமடைந்த பெண்களுக்கு, உடல் எடையை சீராக்க !




பெண்களை பெற்றவர்கள், தங்கள் பெண் புத்திசாலியாக, அழகாக இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்வர். வயது வந்ததும், திடீரென உடல் ஊதும்போது, அழகு கெட்டு விடுகிறது. வழவழப்பான சருமம் எண்ணெய் நிறைந்ததாய், முகத்தில் பருவுடன் காட்சியளிக்கிறது. முகத்தில், கழுத்தில், கைகளில், மார்பில், தொடையில் முடி அதிகமாய் வளர்கிறது.




ஆனால், தலையில் முடி உதிர்ந்து, வழுக்கை கூட ஏற்படுகிறது. கழுத்து, கை, அக்குள், தொடை ஆகிய இடங்கள் கருநிறமாய் மாறுகின்றன. சரியாக குளிப்பதில்லையோ என, மற்றவர்கள் நினைக்கும் நிலை ஏற்படுகிறது. கழுத்திலும், அக்குளிலும் கருமையான சிறு சிறு மருக்கள் தோன்றி விடுகின்றன. இவை துணியில் உரசும் போது வலியும், அசவுகரியமும் ஏற்படுகிறது.



இதோடு கூட, மாதவிடாய் சுழற்சியிலும் கோளாறு ஏற்படுகிறது. சில மாதங்களுக்கு மாதவிடாயே ஏற்படாமல், திடீரென அளவுக்கு அதிகமாய் உதிரப் போக்கு ஏற்படும் நிலை உருவாகும். அடி வயிற்றில் கடுமையான வலி, விட்டு விட்டு ஏற்படும். தொட்டால், இன்னும் அதிக வலி ஏற்படும்.
இந்தியாவில், 14 முதல் 40 வயதுக்குட்பட்ட, 30 – 35 சதவீதப் பெண்களுக்கு இந்த பிரச்னை உள்ளது. கர்ப்பப் பை கட்டியால் அவதிப்படுகின்றனர்.




இல்லையெனில் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. கர்ப்பப் பை கட்டியை கண்டறிய, ரத்தப் பரிசோதனை முறை இல்லை. ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, அதிக கொழுப்பு, ரத்த அழுத்தம், ஆண் ஹார்மோன்கள் அதிகமாய் தென்படுதல் ஆகியவை இருக்கலாம். “அல்ட்ரா சவுண்டு ஸ்கேன்’ மூலம் மட்டுமே, கட்டியை கண்டறிய முடியும்.




கட்டி உள்ளவர்களின் கருப்பையில் உள்ள முட்டைகள், போதுமான வளர்ச்சியடைய வழியில்லாமல் போவதால், முதிர்ச்சியும் அடைவதில்லை. இதனால், மாதவிடாயும் ஏற்படுவதில்லை. முட்டை வளர்ந்து, வெளிவந்தால் தான், குழந்தை பிறக்க வழி உண்டாகும். முட்டை முதிர்வடையவில்லை எனில், மகப்பேறுக்கான வாய்ப்பே இல்லாமல் போகும்.




இதனால், பயந்து போகும் பெண்ணின் பெற்றோர், தீர்வு தேடி அலைகின்றனர். மருத்துவரிடம் சரியான ஆலோசனை பெறாமல், இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து மாத்திரைகளை வாங்கிக் கொடுக்கின்றனர். “குடும்ப பாரம்பரியமே இப்படி தான்’ என்று கருதி, மருத்துவரிடம் செல்வதே இல்லை. மூலிகைகள், நாட்டு மருந்துகளை கொடுக்கின்றனர்.





முகத்தில் முடி நீக்குதல், அதிக உடல் எடை குறைத்தல், மாதவிடாய் சீராக்குதல், மகப்பேறுக்கு வழி உண்டாக்குதல் ஆகியவை அவசியம். கருத்தடை மாத்திரைகள் சாப்பிடுவதால், மாதவிடாய் சீராகும்; ஆண் ஹார்மோன்கள் அளவு குறையும். முகத்தில் பருக்களும் குறையலாம்; ஆனால், மகப்பேறு தவிர்க்கப்படும். மாத்திரையை நிறுத்தி விட்டால், மீண்டும் பிரச்னைகள் முளைக்கும்.




நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்தான, “மெட்பார்மின்’ இந்த உபாதைகளை குறைக்கும்; உடல் எடையும் குறையும். சில மாதங்களில், கருத்தரித்தல் நிகழும்.



திருமணமான பெண்கள், கருத்தரிக்க இயலாமல் போனால், அதற்குரிய மருந்துகள் சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனையுடன், “மெட்பார்மின்’ மாத்திரை சாப்பிடுவதை தொடரும் போது, கருத்தரிப்புக்கான மாத்திரைகள் சாப்பிடும் அளவை குறைத்து கொள்ளலாம்.




மகப்பேறுக்கு தயாராக இல்லாதவர்கள், “ஸ்பைரோனோலாக்டோன் சைப்ரோடெரோன் அசிடேட்’ சாப்பிட்டால், முகத்தில், கை, கால்களில் முடி வளர்வதை தவிர்க்கலாம்; மாதவிடாயும் சீராகும். கர்ப்பப் பையில் கட்டி ஏற்பட்டால், வேறு சில பிரச்னைகளும் உருவாகலாம். ஹார்மோன் சீரற்ற நிலையில், கர்ப்பப் பை சுவற்றில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. வளர்சிதை மாற்றம் சீராக இல்லாமல், நீரிழிவு நோய், உயர் கொழுப்பு, ரத்த அழுத்தம், இதய நோய் ஆகியவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு.




மெனோபாஸ் கட்டத்தை அடையும் போது, மாதவிடாய் சீராகும். ஆனால், முகத்தில் முடி வளர்தல், தலைமுடி மெலிதாகுதல், வழுக்கை விழுதல் ஆகிய பிரச்னைகள் உருவாகும்.




மன உறுதியுடன் இருந்தால், மருந்து இல்லாமலேயே இப்பிரச்னையை சரி செய்யலாம். சரிவிகித உணவு, உடற்பயிற்சி ஆகியவை மேற்கொண்டு, உடல் எடையை சீராக வைத்து கொண்டாலே, ஹார்மோன் சுரப்பது சீராகும். அதிக உடல் எடையில் 10 சதவீதத்தை குறைத்தாலே, கர்ப்பப் பையில் கட்டி உள்ளவர்களின் மாதவிடாய் பிரச்னை சீராகும். கர்ப்பப் பை கட்டி உள்ளவர்கள், மற்றவர்களை விட, குறைவான அளவு உணவே உண்ண வேண்டும். மற்றவர்கள் உதவி இன்றி நடப்பது, மாடிப் படிகளில் ஏறி, இறங்குவது, ஒரு மணி நேர நடைபயிற்சி மேற்கொள்வது ஆகியவை, பருவமடைந்த பெண்களுக்கு, உடல் எடையை சீராக்க உதவும். மேலே சொன்ன பிரச்னைகளிலிருந்து வெளிவர உதவும்.



***
thanks google
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "