...

"வாழ்க வளமுடன்"

22 ஏப்ரல், 2011

உங்கள் வீட்டில் உள்ள தரை பளிச்சிட !!!நீங்கள் எதிர்பார்க்கும் வண்ணம் உங்கள் வீட்டில் உள்ள தரை பளிச்சிட வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டும்தான்.

*

கீறல்கள் மறைய

தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும்.

*

வினைல் தளம்

வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும்.

*

காங்கிரீட் தளம்

சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள்.

*

மார்பிள் தளம்

பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும்.

*

எண்ணை பிசுக்குளை நீக்க

சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்’ என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள்.


***
thanks google
***"வாழ்க வளமுடன்"

செல்ல நாய்க்குட்டிகளை பராமரிக்கும் விழிகள்.


வீட்டில் செல்ல பிராணிகள் வளர்க்கிறீர்களா? செல்ல நாய்க்குட்டிகளை பராமரிக்கும் வழிகளை தெரிந்து கொள்ளுங்கள்…

நாய்கள் வளர்ப்பு பிராணிகளல்ல, வளர்ப்பு பிள்ளைகள் போலவே மாறிவிட்டன. வீட்டுக் காவலுக்காக நாய்களை வளர்த்த காலம் போய், கவுரவத்துக்காக நாய்கள் வளர்பவர்கள் பெருகிவிட்டார்கள். தோற்றத்தில் அழகானது, கம்பீரமானது என்று வகைவகையாக பிரித்து அதிக விலைகொடுத்து நாய்க்குட்டி வாங்கி வளர்க்கிறார்கள். வீட்டு பாதுகாப்பிற்கு ஒரு நாய் என்பதை விட அதற்கு ஜோடியாக இன்னொரு நாயையும் சேர்த்து வளர்க்கத் தொடங்கிவிட்டனர்.

நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில பராமரிப்பு முறைகளையும் கவனித்தால் அவை நலமாக இருக்கும்.

* நாய்க்குட்டியாக வாங்கி வளர்க்க விரும்பினால், குட்டி பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். குழந்தைகள்போலவே அவற்றுக்கும் தாய்பால் அவசியம். 40 நாட்கள் வரை தாய்பால் குடித்து வளர்ந்த பிறகு நாய்க்குட்டியை வாங்கி வளர்க்கலாம்.

* ஒருவேளை நாய்க்குட்டியை பிரித்து, வாங்கி வந்துவிட்டால் அதற்கு மாட்டுபால் கொடுக்கலாம். பாலில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபிறகு கொடுக்க வேண்டும்.

* குட்டி நாய்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை பால் கொடுக்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச்சத்து பானங்களையும் கொடுக்கலாம்.

* நகரசபை, மாநகராட்சியில் அனுமதி வாங்கித் தான் நாய் வளர்க்க வேண்டும். அனுமதியில்லாமல் வளர்த்தாலோ அல்லது தெருவில் நாய்களைத் திரியவிட்டாலோ அவற்றை அப்புறபடுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே அனுமதி பெற்று கழுத்தில் `டை’ கட்டி, வீட்டில் கட்டிபோட்டு வளர்க்க வேண்டும்.

* நாய்களுக்கு சத்துணவு கொடுத்து வளர்க்க வேண்டும். இறைச்சி கொடுத்தால் நாய்கள் கொழுகொழுவென்று வளரும்.

* நாய்கள் தரையில் படுத்துக் கிடக்கும். இதனால் கிருமிகள் தொற்ற நிறைய வாய்ப்புள்ளது. அவற்றுக்கும் சளி, காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு கால்நடை டாக்டரிடம் காண்பிக்கலாம்.

* நாய்களுக்கும் முடி கொட்டும். பொமேரியன் போன்ற முடி அதிகம் உள்ள நாய்களுக்கு முடி உதிர்வதை நாம் பார்க்க முடியும். இரும்புச் சத்து குறைபாடு, வயிற்றில் பூச்சி இருப்பது போன்ற காரணங்களால் முடி உதிரும். வைட்டமின், தாதுஉப்புக்கள் நிறைந்த உணவுகளைக் கொடுத்தால் முடிஉதிர்வதை தடுக்கலாம்.

* எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் நாய்களை படுக்கை அறைக்குள் அனுமதிக்க வேண்டாம்.

* ஏ.சி. அறைக்குள்ளும் நாய்களை அனுமதிப்பதை தவிர்க்கலாம். இதனால் அவற்றுக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

* நாய் பிறந்து 4 மாதத்தில் இருந்து 8 மாதம் வரை 20 நாட்களுக்கு ஒரு முறையும், 8 மாதத்தில் இருந்து உயிரோடு இருக்கும் வரைம் நாயின் எடையை பார்த்து அதற்கேற்ப பூச்சி மருந்து கொடுத்து வர வேண்டும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் சேர்ந்து கொண்டால் அவைகளும் விளையாடத் தொடங்கி விடும். அப்போது ஒன்றையொன்று கடித்துக் கொள்வதும் உண்டு. இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் ஏற்படாது.

* நாய்களால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அதற்கு தடுப்பு ஊசி போட வேண்டும். எல்லாவிதமான தடுப்பு ஊசிகளையும் போட்டு, பாதுகாப்பாக நாய்களை வளருங்கள்.


***
thanks google
***

"வாழ்க வளமுடன்"

குழந்தைகள் விரும்பும் பொம்மைகள் பற்றி ??
குழந்தைப் பருவத்தில் ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் முக்கிய இடம் வகிப்பது பொம்மை. பிறந்தது முதல், மாதங்கள் ஆக ஆக ஒவ்வொரு பருவத்திலும் குழந்தைகள் ஒவ்வொரு விதமான பொம்மைகளை ரசித்து விளையாடி மகிழ விரும்புவார்கள்.

*

முதல் மூன்று மாதங்கள்

முதல் மூன்று மாதங்களுக்கு உங்கள் குழந்தைக்கு விளையாட பொம்மை எதுவும் தேவையில்லை. இந்தப் பருவத்தில் பெரிய ஸ்பாஞ்ச் பொம்மையோ பிளாஸ்டிக் முயல் பொம்மையோ உங்கள் குழந்தையின் கவனத்தைக் கவருவதில்லை. இந்தப் பருவத்தில் விரும்பும் விளையாட்டுப் பொருள் அதன் பெற்றோர்கள்தான்.


உங்கள் கண்கள், விரல்கள், முகம், உடைகள், இவற்றையே திரும்பத் திரும்ப உற்றுப் பார்த்து மகிழும். தன் பிஞ்சு விரல்களால் உங்கள் முகத்தை வருடி மகிழும். இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு விளையாட்டுக் காட்ட விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியது குழந்தையைத் தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டுவதுதான்.


அவ்வாறு செய்தால் குழந்தை தன் கண்களை அகல விரித்துக் கொண்டு வேடிக்கை பார்க்கும். கிலுகிலுப்பை ஒலி கேட்டு பரவசப்படும். இந்தப் பருவத்தில் குழந்தையை பரவசப்படுத்துபவை படுக்கைக்கு அருகில் ஒட்டப்பட்ட வண்ண போஸ்டர்கள், உருண்டு செல்லக்கூடிய விளையாட்டுப் பொருட்கள், கிலுகிலுப்பை ஒலி, மெல்லிய இசை, தாய் பாடும் மெல்லிய தாலாட்டு.


*

மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தைக்கு மிகவும் விரும்பி ரசித்து விளையாடும் பொருள் அதன் கை விரல்கள்தான்.


இந்தப் பருவத்தில் குழந்தை தன் கையைத் தானே திரும்பத் திரும்ப பார்க்கும். விரல்களை மூடித் திறந்து பார்க்கும். மகிழும். கையை வேகமாக அசைத்து மகிழும். சமயங்களில் முகத்தில் வேகமாக இடித்துக் கொள்ளும். விரலை வாயில் போட்டுப் பழகிக் கொள்வதும் இந்தப் பருவத்தில்தான். வாயில் விரல் வைக்க ஆரம்பித்து விடும்.


இந்தப் பருவத்தில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். குழந்தை அருகில் கூர்மையான பொருட்களையோ விழுங்கக்கூடிய பொருட்களையோ வைக்காமல் கவனமாக இருக்கவேண்டும்.


இந்தப் பருவத்தில் அவர்களுக்கு ஏற்ற விளையாட்டுப் பொருட்கள். பிளாஸ்டிக் ஸ்பூன், காற்றடிக்கப்பட்ட கலர் கலராக உள்ள பந்து, காற்றடித்த வண்ண பொம்மைகள்.


*


ஓராண்டு வரை

இந்தப் பருவத்தில் உங்கள் குழந்தை தவழ ஆரம்பிப்பதுடன் சுவரை, மேஜையைப் பிடித்துக் கொண்டு நின்று பழக ஆரம்பிக்கும். மேலும் இப் பருவத்தில் குழந்தைக்கு கையும், காலும் எந்நேரமும் துறுதுறுவென இருக்கும்.எதைக் கொட்டுவது, எதைக் கீழே தள்ளுவது என்று நினைத்தபடி இருக்கும். இவர்களுக்குப் பிடித்த விளையாட்டு மேஜை மேல் உள்ள பொருட்களை சிதற வைப்பதுதான்.

இந்தப் பருவத்தில் அழகாக உட்காரவும், தன்னைச் சுற்றி உள்ள பொருள்களை வேடிக்கை பார்க்கவும் பழகிக் கொள்ளும். விளையாட்டுச் சாமான்களை சேகரித்து ஒரு பெரிய பிளாஸ்டிக் கூடையில் போட்டு அவர்கள் கையில் கொடுத்து விட்டால் ரொம்பவும் சுவாரசியமாய் அதைக் கொட்டிக் கவிழ்ப்பது, திரும்ப எடுத்துப் போடுவது என அதிலேயே நேரம் போவது தெரியாமல் விளையாடி மகிழும்.நகரக் கூடிய சக்கரம் வைத்த பொம்மைகளை நூல்கட்டி இழுத்து விளையாடி மகிழ்வதும் இந்தப் பருவத்தில்தான். அவர்களை கவரக் கூடிய விளையாட்டுப் பொருட்கள்…


சக்கரம் பொருத்தப்பட்ட பொம்மைகள், அழுத்தினால் ஓசை தரக் கூடிய பொம்மைகள், மெத்து மெத்தென உள்ள குஷன் மெத்தைகள்.


*


ஒன்று முதல் இரண்டு வயது வரை

இந்தப் பருவத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளும் ஒன்றுபோல ரசனைத் தன்மை உடையவர்களாகவும், அதற்கு ஏற்றவாறு விளையாட்டுப் பொருட்கள் வைத்து விளையாட விரும்புபவர்களாகவும் இருப்பார்கள்.


சில குழந்தைகள் அமில் பிளாக், பில்டிங் பிளாக் வைத்து விளையாட விரும்புவார்கள். இவர்களுக்கு நாய் பொம்மையோ, கரடி பொம்மையோ, சந்தோஷத்தைத் தராது. சில குழந்தைகள் டி.வி. யைக் கவனித்து இசைக்கேற்ப கை தட்டி ஆடி மகிழும்.

இப்பருவத்தில் குழந்தைகளின் ரசனையைத் தெரிந்து கொண்டு வளர்ப்புச் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட்டுப் பொருட்கள் வாங்கித் தரும் அதே வேளையில், அவசியம் குழந்தைகளின் ரசனை அறிந்து விளையாட்டுப் பொருட்கள் வாங்கித்தர வேண்டும். பொம்மைகளின் முனைகள் கூர்மையானதாக, காயப்படுத்தக் கூடியதாக இருக்கக் கூடாது


***
thanks cnn
***"வாழ்க வளமுடன்"

கு‌ளி‌ர்‌ச்‌சியான க‌ண்ணாடிக‌ள் எப்படி தேர்வு செய்வது ?


கூலிங் கிளாசின் மிக முக்கியமான பகுதி அதன் கண்ணாடி அல்லது லென்ஸ். வாங்குவதற்கு முன் லென்ஸ் சரியாக உள்ளதா அல்லது பார்வையை கோணலாக்குகிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.


ஒரு கண்ணை மூடிக் கொண்டு கண்ணாடி வழியே கதவு முனை போன்ற நேரான பொருளைப் பார்க்கவும். நேராக இல்லாமல் கதவின் முனை கோணலாக தெரிந்தால், வேறு கண்ணாடியைத் தேர்ந்தெடுக்கவும்.பொதுவாக கண்ணாடி, பாலிகார்பனேட் பிளாஸ்டிக், அக்ரிலிக் ஆகியவற்றால் லென்ஸ்தயாரிக்கப்படுகிறது. இவற்றில் கண்ணாடியால் ஆன லென்ஸ் சிறந்தது என்றாலும் இதன் விலையும், எடையும் அதிகம். அத்தோடு எளிதில் உடைந்து விடும்.


அடுத்தபடியாக பாலிகார்பனேட் பிளாஸ்டிக் சிறந்தது. இதில் விரைவில் கோடுகள் விழாது, கண்ணாடி லென்ஸை விட உறுதியானது. விலை மலிவான அக்ரிலிக்கால் ஆன லென்ஸில் வெகு சீக்கிரம் கீறல்கள் விழ வாய்ப்புண்டு.


பல்வேறு நிறங்களில் லென்ஸ் கிடைக்கின்றன. கிரே மற்றும் பச்சை நிறங்களில் உள்ள லென்ஸ் உலகத்தை உள்ளபடியே காட்டும்.


***
thanks val
***

"வாழ்க வளமுடன்"

பிரானா என்கிற கொலைகார மீன்!உலகத்தில் புலி, சிங்கம், வெள்ளைச்சுறா, முதலை போன்ற பிராணிகள் மனிதர்களைக் கொல்கிறவை என்ற கெட்டபெயரைப் பெற்றிருக்கின்றன. ஆனால், தென் அமெரிக்காவின் ஆறுகளிலும், ஏரிகளிலும் காணப்படும் `பிரானா’ என்ற சிறிய மீனைப் போல் பயங்கரமான ஆட்கொல்லி வேறு எதுவும் இல்லை.பார்ப்பதற்குச் சின்னதாக, சாதுவாகத் தோற்றமளித்தாலும், பிரானா, கொடூர குணமுள்ளது. அதன் உடம்புடன் ஒப்பிட்டால், தலை, அளவுக்கு மீறிப் பெரியதாயிருக்கும்.அதற்கு வலுவான மண்டையோடு உள்ளது. அதன் கண்கள் பெரிதாகவும், சிவந்தும் காணப்படும். அதன் வாயில் முக்கோண வடிவில் பற்கள் உண்டு. கீழ்த்தாடை சற்று முன்னுக்கு வந்திருக்கும்.வாயை மூடும்போது மேல்வரிசைப் பற்களுக்கு கீழ்வரிசைப் பற்கள் ஒட்டிப் பொருந்துகின்றன. அதனால் அவை எந்தப் பொருளையும் வெண்ணையைக் கத்தி வெட்டுவது போல வெட்டிவிடும்.


பிரானா என்ற பெயருக்கே `பல்லை ஆயுதமாகக் கொண்ட மீன்’ என்றுதான் அர்த்தம். அது கடித்தால், ஒரு ரூபாய் அளவுக்குச் சதை துண்டாக வந்துவிடும். அமேசான் நதிக்கரையில் வாழும் பல மீனவர்கள் தங்கள் விரல்களை பிரானாவிடம் இழந்திருக்கிறார்கள்.பிரானா நூற்றுக்கணக்கில் கூட்டமாக வந்துதான் வேட்டையாடும். அவற்றின் அழிப்புத்திறன் பயங்கரமானது. ஒருமுறை நீரில் தவறி விழுந்துவிட்ட ஒரு குதிரையைச் சில நிமிஷங்களுக்குள் பிரானாக்கள் எலும்புக்கூடாக்கிவிட்டன. 1976-ம் ஆண்டில் உருபு என்ற ஆற்றில் ஒரு படகு கவிழ்ந்தபோது அதிலிருந்த 35 பயணிகளையும் பிரானாக்கள் தின்று தீர்த்தன.ஆனால், விஞ்ஞானிகள் பிரானாக்களைப் பற்றிய பீதி அனாவசியமானது என்கிறார்கள். அமேசான் பள்ளத்தாக்கில் வசிக்கும் மக்கள் நதியில் அஞ்சாமல் குளிக்கிறார்கள். பிரானா அவர்களை அபூர்வமாகவே கடிக்கிறது.பிரானாக்கள் சாதாரணமாக மற்ற மீன்களை வேட்டையாடி வாழும். ஆனால், கோடைக் காலத்தில் நீர்நிலைகள் சுருங்கி உணவுத் தட்டுப்பாடு ஏற்படும்போது, நீரில் இறங்குகிற எதையும் அவை கடிக்கத் தொடங்குகின்றன.
பிரானாக்களுக்குக் கண் பார்வையும், மோப்ப சக்தியும் கூர்மையானவை. தண்ணீரில் தோன்றும் அதிர்வுகளிலிருந்து அவை தமது இரையைக் கண்டுபிடிக்கின்றன.பிரானா மீன்கள் கொடூரமானவையாக இருந்தாலும் உண்பதற்கு ருசியானவை. சிவப்பிந்தியர்கள் ஒரு தாவர நஞ்சைத் தண்ணீரில் கலந்து பிரானாக்களை மயக்கமடையச் செய்து அவற்றைப் பிடிக்கிறார்கள். பிறகு அவற்றை நெருப்பில் சுட்டுத் தின்கிறார்கள்.


***
thanks vayal
***"வாழ்க வளமுடன்"

நாம் பார்க்க முடியாத கிரகம் எது?சூரியக்குடும்பத்தில் உள்ள புதனைத்தான் `பார்க்க முடியாத கிரகம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் `மெர்குரி’ என்று அழைக்கப்படும் புதன், சூரியனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. புதன் குறித்த சில அடிப்படைத் தகவல்களைப் பார்ப்போம்…


* பூமியின் விட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தான், புதனின் விட்டம். அதேபோல பூமியின் மொத்த எடையில் 5.5 சதவீதம் தான் புதனின் எடை.


* சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் புதன், சூரியனில் இருந்து சுமார் 5.8 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.


* நம்முடைய நாள் (24 மணி நேரம்) கணக்குப்படி 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது, புதன். அதாவது, புதனில் ஒரு வருடம் என்பது நமக்கு 88 நாட்களாகும்.


* புதன், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 55 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.


* மெர்குரி என்பது, ரோம் நாட்டிலுள்ள `சந்தனத்தால் ஆன இறக்கைகளைக் கொண்ட தேவதூதனின்’ பெயராகும்.* இந்தக் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், சூரிய ஒளியின் பிரகாசத்துக்கு நடுவே இதைக் காண்பது கடினம். பொதுவாக சூரிய உதயத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு ஒருமணி நேரத்திற்குப் பின்பும் தான் இதைப் பார்க்க முடியும். அதையும் எப்போதாவது தான் பார்க்க முடியும். எனவே, புதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.* புதனுக்கு மிக மெல்லிய வளிமண்டலம் இருக்கிறது. இந்த வளிமண்டலம், சோடியம், பொட்டாசியம், ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் ஆனது.* பகல் நேரத்தில் 427 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு நேரத்தில் 173 டிகிரி செல்சியஸ் வெப்பமும் புதனில் காணப்படும்.


***
thanks vayal
***

"வாழ்க வளமுடன்"

அடுத்தவரை நாம் நல்ல குணங்களால் மயக்கலாம் வாங்க!உங்களுக்கு மற்றவர்களை மயக்கத் தெரியுமா? மற்றவர்களை மயக்கி, ஈர்க்கும் கலையை சொல்லித்தருகிற ஒரு கலகலப்பான புதிய புத்தகம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. கை கவாஸாகி எழுதியிருக்கும் அந்தப் புத்தகத்தின் பெயர் “என்சான்ப்மென்ட்’ (Enchantment).
இந்தப் புத்தகம் நெடுகிலும் நம்முடன் பழகுபவர்களை மயங்கச் செய்வது எப்படி எனப் பல அருமையான யோசனைகளை உதாரணங்களுடன் விளக்கியிருக்கிறார் கை கவாஸாகி. அவற்றிலிருந்து ஐந்து முக்கிய பகுதிகள்.

***

1. முதலில், அடுத்தவர்களுக்குப் பிடிக்கும்விதமாக நடந்துகொள்ளுங்கள். அதற்குச் சில வழிகள்:

*நேர்த்தியான உடை

*யாராவது ஏதாவது உதவி கேட்டால் யோசிக்காமல், தயங்காமல் “யெஸ்’ என்று சொல்லிவிடுங்கள். அதன்பிறகு அதை எப்படிச் செய்வது என்று யோசித்து நாலு “ஆனால்’களை, ஏழெட்டு நிபந்தனைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். தப்பில்லை. அந்த முதல் “யெஸ்’ உங்களுக்குப் பல ரசிகர்களை அள்ளித் தரும்!

***

2. இரண்டாவதாக, அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாக மாறுங்கள். இப்படி:


*முதலில் நீங்கள் அடுத்தவர்கள்மீது நம்பிக்கை வையுங்கள்.

*நீங்கள் ஒரு விஷயத்தில் ஏன் ஈடுபடுகிறீர்கள் என்கிற உண்மையை மறைக்காமல் சொல்லிவிடுங்கள்.

*ஒவ்வொரு வேலையிலும் உங்களுக்கு என்ன லாபம் என்பதை மட்டும் பார்க்காமல், அடுத்தவர்களுக்கும் அதில் எதாவது பயன் வரக்கூடுமா என்று பார்த்து அதற்கு எற்ப செயல்படுங்கள்.


***

3. ஒவ்வொரு புதிய நபரைச் சந்திக்கும்போதும், ஒவ்வொரு புதிய வேலையைத் தொடங்கும்போதும் கச்சிதமாக திட்டமிட்டுத் தயார் செய்துகொள்ளுங்கள். இதுபோல:

*என்ன பேசப்போகிறோம் என்பதை முன்கூட்டியே மனத்தில் ஒருமுறை ஒத்திகை பார்த்துக்கொள்ளுங்கள்.

*நீங்கள் பேசும்போது அவர்கள் என்ன கேள்விகளைக் கேட்பார்கள் என்பதையும் நீங்களே ஊகியுங்கள், அதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துப் பயிற்சி எடுங்கள்.

*உங்கள் பேச்சில் யாராவது குறை சொன்னால் கோபித்து முகம் சுளிக்காதீர்கள். மனத்தைத் திறந்து வைத்திருங்கள். அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயத்தைமட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். நியாயமில்லை என்றால் சிரித்து மறந்துவிடுங்கள்.

***

4. உங்களுடைய பாதையில் தடைகள் வரும். சிலர் உங்களை நம்ப மறுத்துச் சந்தேகமாகப் பார்ப்பார்கள். அப்போது மனம் தளராமல் இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்:


*ஏதேனும் புதிய யோசனையைச் சொல்லும்போது, இதே மாதிரி விஷயம் வேறொரு கம்பெனியில், வேறொரு நகரத்தில், வேறொரு நாட்டில், வேறொரு காலகட்டத்தில், வேறொரு துறையில் எங்காவது வெற்றியடைந்திருக்கிறதா என்று உதாரணம் காட்டி நிரூபியுங்கள். “நாமும் ஜெயிப்போம்’ என்ற உறுதி சொல்லுங்கள்.


*ஒரு வேளை தோல்வி வந்தால், பிரச்னையில்லை. எப்பேர்ப்பட்ட சறுக்கலிலும் ஒரே ஒரு பாஸிட்டிவ் விஷயமாவது இருந்தே தீரும். அதைக் கண்டுபிடித்துக் கொண்டாடுங்கள். அதையே பிடித்துக்கொண்டு மேலே செல்லுங்கள்.


***

5. நீங்கள் உருவாக்கும் “மயக்கம்’ தாற்காலிகமாக இருந்து விடக்கூடாது. அவர்கள் நிரந்தரமாக உங்களது ஈர்ப்பிலேயே இருக்க வேண்டும். அதை உறுதி செய்துக்கொள்ள இந்த வழிகள் பயன்படும்:


*உங்களது துறையில் நீங்கள் கொண்டிருக்கும் அனுபவம் என்ன? திறமைகள் என்னென்ன? அதை மற்றவர்கள் உணர்ந்துள்ளார்களா? இல்லை என்றால் நீங்களே எடுத்தச் சொல்லுங்கள். “சுய தம்பட்டம் அடிக்கக்கூடாது’ என்று நினைக்கிறவர்கள் இந்தக் காலத்தில் முன்னேறமுடியாது. “நான் சிறந்தவன்’ என்பது ஓகே, “நான் மட்டும்தான் சிறந்தவன்’ என்று சொன்னால்தான் தப்பு!


* அதற்காக எல்லா அதிகாரங்களையும் நீங்களே பிடித்து வைத்துக் கொள்ளாதீர்கள். அதைச் சரியான முறையில் பகிர்ந்து கொடுங்கள். அவர்கள் தயங்கி நின்றால் வழிகாட்டி உதவுங்கள். பிரச்னை வரும்போது கை கொடுங்கள். கடைசியாக அவர்கள் வெற்றி பெறும்போது கை தட்டிப் பாராட்டுங்கள்.


*உங்களுடன் இருப்பவர்களை எப்போதும் உற்சாகமாக வைத்திருங்கள், அவர்களது குளைகளை முன்கூட்டியே உணர்ந்து சரி செய்யுங்கள்.
இந்த ஐந்து விதிகளைப் பின்பற்றினால் அனைவரும் உங்கள் பக்கம்தான்.


***
thanks al
***

"வாழ்க வளமுடன்"

செல்போன்கள்… ஜாக்கிரதை! ( மருத்துவ ஆலோசனைகள் )
எப்போதும் செல்போனும் கையுமாக இருந்த கல்லூரி மாணவியான தனது மகளை கண்டித்தார் அப்பா. மகளிடமிருந்து செல்போனை பிடுங்கிக் கொண்டார். அவ்வளவுதான், செல்போன் போனதால் சகலமும் போனதாக நினைத்த அந்தப் பெண் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த துயரச் சம்பவம் இது. செல்போனின் தாக்கம் சமூகத்தில் அதிர்ச்சியான சம்பவங்களை ஏற்படுத்தி வருகிறது.

வறுமையோ, வளமையோ நிலைமை எப்படி இருந்தாலும் இந்த காலத்தில் தவிர்க்க முடியாத உபகரணமாக மாறியிருக்கிறது செல்போன். எந்த தகவலையும் இருந்த இடத்தில் இருந்து உடனுக்குடன் பெறவும், தரவும் உள்ள வசதி அசாதாரமானது. பல தேவைகள் உடனுக்குடன் நிறைவேறுவதுடன், சில பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது.
அதனால் உலகில் 500 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 67 கோடியை தாண்டி விட்டது. ஒவ்வொரு மாதமும் சுமார் 1.8 கோடி இணைப்புகள் விற்பனையாகின்றன. நாட்டில் 100க்கு 59 பேரிடம் செல்போன் உள்ளன. செல்போன் சேவை நாட்டில் தொடங்கிய காலத்தில் ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 24 ரூபாய் கட்டணம். இப்போது 10 காசுகளுக்கு பேசிக் கொள்ளலாம்.

நாளெல்லாம் இலவசமாக பேசிக் கொள்ளும் சேவைகள் பலவும் அறிமுகமாகியுள்ளன. பலன் தரும் செல்போன்களின் பயன்பாடு, இப்போது பாதகமாகவும் மாறியுள்ளது.


செல்போனை கையில் வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல் எப்போதும் யாருடனாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும் என்று ஏங்குகின்றனர். வருகின்ற அழைப்புகளில் எதிர்முனையில் எதிர் பாலினமாக இருந்தால் மணிக் கணக்கில் பேச ஆரம்பித்து விடுகின்றனர். அது முகம் தெரியாதவர்களாக இருந்தாலும், அவர்கள் பின்னணி என்னவாக இருந்தாலும் யாரும் கவலைப்படுவதில்லை. இப்படி பேசியே காதல் கோட்டை கட்டியவர்களும் இருக்கிறார்கள். கம்பி எண்ணியவர்களும் இருக்கிறார்கள். செல் போதையில் சிக்கி பல குடும்ப உறவுகள் சீரழிந்து இருக்கின்றன. இன்னொரு பக்கம் உடலும் கெடுகிறது. செல்போனில் இருந்து வெளியேறும் மின்காந்த கதிர்களால் உடல் நலம் பாதிப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

புற்றுநோய், கண்புரை, காது கேளாமை, கருச்சிதைவு, மனநோய், மலட்டுத்தன்மை என பாதிப்புகளின் பட்டியல் நீளுகின்றன. செல்போனில் பேசியபடியே வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. விஞ்ஞானத்தின் அரிய வளர்ச்சி செல்போன். அதை உடல், உள்ளம், உறவுகளை பாதிக்காமல் பயன்படுத்தும் பக்குவம் அவசியம்.

கோபுரங்களால் கோடி தொல்லை

செல்போன் டவரால் மனிதர் மட்டுமின்றி உயிரினங்களும், தாவரங்கள் கூட பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன. செல்போன் கோபுரங்களுக்கு முதலில் பலியானது சிட்டுக்குருவிகள்தான். கோபுரங்களில் வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக கருவுற்றிருக்கும் பெண்களுக்கு குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன. பெண்களுக்கு கருப்பை புற்றுநோய் வர வாய்ப்பிருப்பதாகவும் சொல்கிறார்கள். ஓரே இடத்தில் பல்வேறு நிறுவனங்களின் செல்போன்களின் கோபுரங்கள் அமைப்பதால் ஏற்படும் பாதிப்பின் வீச்சு அதிகம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்களும் சொல்கிறார்கள். வெளிநாடுகளில் பள்ளிகள், குழந்தை காப்பகங்கள், மருத்துவமனைகள் உள்ள இடங்களில் செல்போன் கோபுரங்கள் அமைக்க தடை உள்ளது. அதேபோல் குடியிருப்பு பகுதிகளிலும் கோபுரங்கள் அமைக்க கூடாது. குறைந்தது 100 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. நம் நாட்டில் எந்த விதிமுறைகளும் கிடையாது.

செல்போனில் பேச்சு; ரகசியம் போச்சு

செல்போனில் பேசினால் யாருக்கும் தெரியாது என்று சகலத்தையும் செல்போனில் கொட்டுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். நாம் பேசும் அனைத்தும் டேப் செய்யப்படும். ஒவ்வொரு செல்போன் நிறுவனமும் ஒவ்வொரு மாதமும் இணைப்பு பெறும் வாடிக்கையாளர் விவரங்களையும், எண்ணையும் மத்திய, மாநில உளவு துறைகள் உட்பட 7 நிறுவனங்களுக்கு தனித்தனி குறுந்தகடில் தருவார்கள். அவர்கள் சந்தேகப்படும எண்களை கவனிப்பார்கள்.

கழிவறைகளில்…

யார் கேட்டாலும் சிலர் தங்கள் மொபைல் எண்களை தந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் கொஞ்சம் அசட்டையாக இருக்கின்றனர். ரயில் சினேகிதர்கள் கூட செல்போன் எண்களை பெற்று விடுகின்றனர். பேச்சு வளர்ந்து பெரும்பாலும் திசை மாறி போய் விடுகிறது. தவிர்க்க முயலும்போது கோபமடைபவர்கள், அதே ரயிலின் கழிவறைகளில் அந்த செல்போன் எண்களை எழுதி வைத்து விடுகின்றனர். இதேபோல் காதலிக்க மறுத்த பெண்களின் எண்களை, பகையுள்ள குடும்பத்தின் பெண்களின் எண்களையும் எழுதி விடுகின்றனர். ரயில் கழிவறைகள் என்றில்லை, பேருந்து நிலையம்,
மருத்துவமனை என பல இடங்களில் பொது கழிவறைகளிலும் பெண்ணின் பெயருடன் எண்ணை எழுதி வைத்து விடுகின்றனர். பாலியல் தொழில் செய்யும் பெண்களாக சித்தரித்து விடுகின்றனர். இப்படி கண்ட எண்ணில் இருந்து வரும் அழைப்புகளை பார்த்து பெண்கள் மனநோயாளிகள் ஆவதுதான் மிச்சம்.

காவல்துறை சொல்வதென்ன?

செல்போனில் வீடியோ கேமரா, இன்டெர்நெட் வசதி வந்த பிறகு புகார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. Ôமுழு சுகம் வேண்டுமா? தொடர்பு கொள்ளவும்Õ என்று பெண்களின் செல்போன் எண்ணை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பி விடுவார்கள். இதேபோல் ரியல் எஸ்டேட் தரகர் ஒருவர், உரிமையாளர் எண்ணை குறிப்பிட்டு, தொடர்பு கொள்ளவும் நிலம் விற்பனைக்கு உள்ளது என்று பலருக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டார். உரிமையாளர் Ôவிற்பதற்கில்லைÕ என்று பதில் சொல்லி சொல்லி ஓய்ந்து விட்டார். அப்புறமென்ன இந்த சம்பவங்கள் குறித்து வந்த புகார்களின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். தொடர்ந்து மிஸ்டு கால் கொடுப்பதும் குற்றம்தான் என்கிறார் மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையர் டி.தங்கராஜ்.

வெறும் 2 நிமிடங்கள்தான்

சென்னை மருத்துவக் கல்லூரியின் காது மூக்கு தொண்டை மருத்துவப் பிரிவு முன்னாள் தலைவர் கே.பாலகுமார், Ô‘செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும். காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான். யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான். செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்Õ’ என்றார்.

எச்சரிக்கை அவசியம்

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் டாக்டர் சுதாகர் கூறுகையில், ‘‘செல்போன் வாங்கும்போது உத்திரவாத அட்டை, ரசீதுடன் வாங்க வேண்டும். Ôஐஈஎம்ஐÕ எண்ணை குறித்து வைத்துக் கொள்வது நல்லது. காணாமல் போனால், எண்ணை செயலிழக்கச் செய்வது நல்லது. இல்லாவிட்டால் போனை எடுத்தவர்கள் தவறாக பயன்படுத்தினால், சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். தெரியாத நபர்களிடம் செல்போனை கொடுக்கவே கூடாது. செல்போனை பழுது பார்க்க தரும் போது சிம்கார்டு, மெமரி கார்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். செல்போன் குற்றங்களுக்கு இந்திய தண்டனைச் சட்டம் 506(1), 507 ஆகிய பிரிவுகளின் கீழ் 2 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. அபராதமும் வசூலிக்கப்படும். பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால் 509 பிரிவு கூடுதலாக சேர்க்கப்படும்Õ’ என்றார்.

செல்போனில் ‘நீலம்’

செல்போன் வந்து விட்டபிறகு ஸ்டில் கேமரா, வீடியோ கேமரா எல்லாம் கைக்குள் வந்து விட்டன. சிலர் தங்கள் உறவு காட்சிகளை கூட படம் பிடித்துக் கொள்கிறார்கள். Ôத்ரில்Õலுக்காக எடுக்கும் தம்பதிகளை விட திருட்டுத்தனமாக எடுத்துக் கொள்ளும் கள்ளக் காதலர்கள் அதிகம். தெரிந்தோ, தெரியாமலோ எடுக்கப்படும் படங்களை நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும் செய்கின்றனர். அங்கிருந்து பல நூறு பேர்களுக்கு பரவி, இன்டர்நெட் மூலம் மாநிலம், தேசம் கடந்து விடுகிறது. ஒரு சிலர் இதனை இணையதளங்களுக்கு விற்று காசாக்கி விடுகின்றனர். இந்த விஷயம் வீட்டில் தெரியும் போது பிரச்னையாகி விடுகிறது. இப்படி குடும்பங்கள் சீர்குலைவது தொடர்கதையாகி வருகிறது. அதுமட்டுமல்ல நீலப்படம் பார்க்க ஊருக்கு ஒதுக்குபுறமான திரையரங்குகளை தேடிச் செல்வார்கள். செல்போனில் பரவும் செக்ஸ் வீடியோக்களால் இந்த பிட் திரையரங்குகள் நலிந்து விட்டன.

ஆண்மைக்கும் ஆபத்தா…

பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர்.டி.காமராஜ், Ô‘செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது. செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைகிறது. செல்போன்களை பயன்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த ஆய்வு முடிவுகளும் வெளியாகவில்லை’’ என்றார்.

செல்போன் போதை

வீட்டுக்கு தெரியாமல் விவகாரங்களில் ஈடுபடுபவர்கள் ஆளுக்கு ஒரு சிம் கார்டு பயன்படுத்துகிறார்கள். வீட்டை விட்டு வெளியில் வந்ததும் வரிசையாக மிஸ்டு கால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். யார் முதலில் சிக்குகிறார்களோ அவர்களிடம் கல்லூரி, அலுவலகம், தொழிற்சாலை போய் சேரும் வரை பேசிக்கொண்டே இருப்பார்கள். மிஸ்டு கால் கிடைத்த மற்றவர்களுக்கு இணைப்பு கிடைக்காது. இப்படி 24 மணி நேரமும் செல்போன் போதையில் வீழ்ந்துக் கிடப்பவர்களுக்கு மனநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்கிறார் மனநல மருத்துவர் டாக்டர் விஜயகுமார்.***
நன்றி-தினகரன்
***

"வாழ்க வளமுடன்"

இரண்டு வயது சிறுமியின் ஆற்றலைப்பாருங்கள்

உலக வரைபடத்தில் சில நாடுகளை நாமே தேடும் நிலையில் இந்த இரண்டுவயது சிறுமியின் அறிவாற்றலைப்பாருங்கள்.

***


"வாழ்க வளமுடன்"

சீதளத்தை எதிர்க்கும் சுரைக்காய் !சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். தாகத்தை அடக்க வல்லது.கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜPரணத்தை உண்டாக்கி விடும்.


சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீhpய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள்.


ஆனால் சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும் சக்தி உடையது. ஆகையால் அடிக்கடி சாப்பிட வேண்டாம்.


***
thanks kalingm
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "