...

"வாழ்க வளமுடன்"

03 ஏப்ரல், 2011

பொன்மொழிகள் ( படித்ததில் பிடித்தது )

1. அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை. 2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும். 3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும். 4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள். 5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும். 6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும். 7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா. 8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும். 9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை. 10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை. * ப.நிஷாந்தி, நெல்லிக்குப்பம். *** வாழ்க்கை கணக்கு தோல்வியை – கழியுங்கள் முயற்சியை – கூட்டுங்கள் வெற்றியை – பெருக்குங்கள் பலனை – வகுத்துவிடுங்கள் புரிந்ததை- விரிவுபடுத்துங்கள் புரியாததை- சுருக்குங்கள் சரித்திரங்களை- சூத்திரங்களாக்குங்கள் உங்களை நீங்களே- மதிப்பிடுங்கள் * பி.குணாளன், சிறுவாச்சூர். *** கடன், பகை, நோய் இந்த மூன்றிலும் மிச்சம் வைத்தல் கூடாது. * படைகளால் சாதிக்க முடியாததை தந்திரம் சாதித்துவிடும்! * பகைவனின் பலவீனத்தை அறிய, அவனை நண்பனாக பாவிக்க வேண்டும். * காலம் சாதகமாக இல்லாத வரை, பகைவரைத் தோளில் சுமக்கத்தான் வேண்டும்! * விதியை நம்புபவன் எதையும் சாதிக்கமாட்டான். * அழிவை நோக்கிச் செல்பவன் பிறருடைய அறிவுரைகளுக்குச் செவி சாய்க்க மாட்டான். * அளவுக்கு அதிகமானபணிவை ஒருபோதும் நம்பக் கூடாது! * தன் கையே என்றாலும், விஷம் ஏறினால் வெட்டிவிடத்தான் வேண்டும்! * எந்தச் செயலுக்கும் மனமே சாட்சி! * விதை எப்படியோ, பழமும் அப்படியே! * பகைவனே என்றாலும், அவனின் நல்ல பண்புகளும் நமக்கு ஆசான்! * பணத்தின் மிகப் பெரிய பயன், அதை இல்லாதவர் களுக்குக் கொடுத்து மகிழ முடிவதுதான்! * நம்முடைய தொழில் எதுவானாலும் அதில் நமக்குச் சில போட்டியாளர்கள் இருப்பது நல்லதுதான். * தடைகளைக் கூட, நம்மை நிரூபிப்பதற்கான வாய்ப்புகளாகப் பார்க்க வேண்டும்! * மற்றவர்கள் முடியாது என்று நினைக்கிற ஒரு விஷயத்தை முடித்துக் காட்டுவதுதான், நல்ல தலைமைப் பண்பின் அடையாளம். * உயர்பதவி என்பது நிரந்தர சிம்மாசனம் அல்ல. அது நமக்குச் சரிப்படாவிட்டால், மற்றவர்களுக்கு இடம் தந்து விலகிவிட வேண்டும். * உங்களிடம் பணி புரிகிறவர்களை, மரியாதையோடும் கண்ணியத்தோடும் நடத்துங்கள். அவர்கள்தான் உங்களுடைய மிகப் பெரிய சொத்து. * உலகம் வெகுவேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு விஷயத்தை முடியவே முடியாது என்று சொல்லி முடிப்பதற்குள், வேறொருவன் அதைச் செய்து முடித்து, உங்கள் வாக்கைப் பொய்யாக்கி விடுகிறான். * இருக்கிற செல்வத்தைப் பகிர்ந்து கொடுத்தால், நம்முடைய நாட்டின் வறுமை எப்போதும் தீராது. இந்த வறுமையை ஒழிப்பதற்கு ஒரே வழி, நியாயப்படியும் தர்மப்படியும் நிறைய செல்வம் சேர்ப்பதுதான்! * தயாராக இருக்கிறவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கின்றன! * எப்போதும், எதற்காகவும் உங்களுடைய அக சந்தோஷத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். * கோழையின் அச்சம்கூட சில சமயங்களில் அவனை வீரனாக்கிவிடுவது உண்டு. * இந்த உலகத்தில் நஞ்சால் அழிந்தவர்களைவிட, ஆசையால் அழிந்தவர்களின் எண்ணிக்கையே அதிகம். * நெஞ்சிலே குற்றமுள்ளவர்கள், ஒவ்வொரு கண்ணும்தங்களையே பார்ப்பதாக எண்ணுவர். * உள்ளத்தின் ஒழுங்குமுற்றிலும் குலைந்திருந்தால், நாம் புறத்தில் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது. * அறியாமை, ஆண்டவனின் சாபம். அறிவோ, விண்ணை நோக்கி நாம் விரிக்கும் இறக்கை. * உங்களிடம் அறிவொளி இருந்தால் அந்தத் தீபத்திலிருந்து மற்றவர்கள் மெழுகுவத்திகளை ஏற்றிக்கொள்ளட்டும். * உங்கள் குறைகளை நீங்களே அடையாளம் கண்டுகொள்வதுதான் வளர்ச்சியின் அடையாளம். * நன்மையென்றும் தீமையென்றும் எதுவும் இல்லை. அவ்விதம் ஆக்குவது அவரவர் மனமே. * உங்களைத் தவிர வேறு எந்த மனிதரையும் கண்டு நீங்கள் எச்சரிக்கையாக இருக்கத் தேவையில்லை. * பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட, தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை. * ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது. * தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாத பெண்ணை வேறு யாரும் காப்பாற்ற முடியாது. * சிப்பாய் தன் துப்பாக்கியைப் போற்றுவது போலவும் இசைக் கலைஞன் வீணையைப் போற்றுவது போலவும் ஒரு பெண் தன் காதலனைப் போற்றுகிறாள். * சிலர் அளவுக்கதிகமான செல்வத்தில் திளைக்க, மற்றவர்கள் வறுமையில் வாடும்படியாக இருக்கும் நாடு சீர்குலைந்து அழிந்துவிடும். * நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான். * நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம். நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும். * அதிகம் ஊக்கம் உடையவர்களாகவும் குறைந்தவேலை உடையவர்களாகவும் இருக்கும் மனிதர்களே பெரும்பாலும் சண்டைக்காரர்களாகவும் இருக்கிறார்கள். * வாழ்க்கை என்பது ஒரு சிறு மெழுகுவத்தி அல்ல. அது ஒரு அற்புதமான தீபம். பிரகாசமாக அதை எரிக்கச் செய்து, அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். * நல்லொழுக்கம் என்பது உனக்கு நீயே அளித்துக்கொள்ளும் நன் மதிப்பாகும். * திட்டமோ கவனமோ இல்லாமல் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குபவர்கள்தான் தடுமாறுகிறார்கள். * நான்தான் செய்து முடித்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் நம்மையறியாமல் வேறொருவர் உந்து சக்தியாகவும் மூலகாரணமாகவும் இருக்கிறார். * எளிமையாகவும், இயல்பாகவும் இருப்பதையும் பேசுவதையும் மக்கள் அபூர்வமாகப் பார்க்கிறார்கள். * நம்மையும், நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம். * வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம். * சினிமா என்பது உலகின் சக்தி வாய்ந்த ஊடகம். இப்பேர்ப்பட்ட சினிமாவில் அவரவர் நாட்டு நாகரிகம் காப்பாற்றப்பட வேண்டும். * லட்சியம் ஏதுமின்றி அன்றாடத் தேவைகளுக்காக ஒரு வேலையில் சேர்ந்துவிட்டால், அதிலேயே மூழ்கி மங்கிவிடுவோம். * காலடிச் சுவடுகள் பதிகிற ஈரமணல் போல்தான் படைப்பாளியின் மனம். * பிரபலமில்லாத மனிதனாக வாழ்வது ஒன்றும் குறைச்சலான காரியமில்லை. * எவன், எந்தெந்த அளவு பாத்திரத்தை என்னென்ன முறையில் வைத்திருக்கிறானோ… அந்தந்த அளவு அவனுக்குகடவுளின் கருணை கிடைக்கிறது. * உயர்வு, தாழ்வுக்கு இடமற்றதுதான் உலகம். அவ்விரண்டும் மனிதனாகக் கற்பித்துக் கொண்டவை. * சாவுக்குப் பயப்படாத ஒருவன், எதையும் சாதிக்கும் சக்தி பெற்றவனாகி விடுகிறான். * வைராக்கியம் எங்கே தவறுகிறதோ, அப்போது துறவறம் தவறிப் போகும். * கல்லூரிகளும் சர்வ கலாசாலைகளும் பட்டதாரிகளைத் தான் உண்டாக்கும். புத்திசாலிகளை உண்டாக்கா! * ஒதுங்கிவாழ்வதே சந்நியாசம். ஊருடன் வாழ்வதே இல்லறம். * மனிதனுடைய ஆசை மேலோங்கி விட்டால் ஆண்டவனையே ஏமாற்ற முனைந்து விடுகிறான். * தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கமின்றி நடந்து கொள்கிறவன், பொது வாழ்வில் ஒழுக்கமுடன் நடப்பான் என்பது வடிகட்டிய புரட்டு. * தனியாக இருக்கும்போது சிந்தனையிலும் கூட்டத்தில் இருக்கும்போது வார்த்தையிலும் கவனமாக இருக்க வேண்டும். * நாம் எவ்வளவு அறியாமையில் இருந்தோம் என்பதை நமக்கு அளந்து கொடுக்கிற கருவிதான் அறிவு. * எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு. ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை. * தேசபக்தனுக்கு தேசமே குறி. அரசியல்வாதிக்கு தேர்தலே குறி. * அதிகாரத்தில் இருப்பவனுக்கு அடக்க உணர்ச்சியும், அரசியல்வாதிக்கு நாவடக்கமும், தேசபக்தனுக்கு சேவா நோக்கமும் தவிர்க்க முடியாத தேவைகள். லட்சியத்தில் சுத்தம் இருக்கிறபோது எவ்வளவு பெரிய சக்தி எதிர்த்தாலும் அதை எதிர்க்க வேண்டியதுதான். * மக்கள் புரட்சி செய்தால், அது எப்போதும் நியாயமாகத்தான் இருக்கும். * உறுதி… உறுதி… இது இல்லாவிட்டால் நீங்கள் நல்லவராக இருப்பதுகூட கடினம். * உங்கள் எண்ணங்கள் எப்படியோ அப்படிதான் வாழ்க்கையும் அமையும். எனவே சிறந்ததையே எண்ணுங்கள். * அதிர்ஷ்டம் வந்தாலும் வராவிட்டாலும் துரதிர்ஷ்டத்தைத் தாங்கிக்கொள்ளக்கூடிய துணிச்சலால் எதையும் சாதித்துவிடலாம்! * குஞ்சுகளுக்கு சிறகுகள் முளைத்த பிறகும் கூண்டைவிட்டுத் தாண்டக்கூடாது என்றால், அது ஆகக்கூடிய காரியமில்லை. * தன்னால் ஏற்படுகிற தவறுகளை ஒப்புக்கொள்ள ஒருவர் என்றுமே பின்வாங்கக் கூடாது! * நாளை என்பது மிகமிகத் தாமதமாகும். இன்று முதலே வாழ்க்கையைச் சிறப்பாக நடத்திக்காட்டுங்கள். * எந்த வேலையைச் செய்யத் தனக்குத் தகுதி உள்ளது என்பதை ஒவ்வொரும் முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். * காலத்தின் மதிப்பு தெரிந்திருப்பவர்களுக்குத்தான் வாழ்க்கையின் மதிப்பும் தெரிந்திருக்கும். * தகுதி இல்லாதவர்களே பிறரை அவதூறு செய்து பொழுது போக்குகின்றனர். * தொகுப்பு கண்ணா *** எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை. * தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு. * பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ஏழைதான். * இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். * வாதாட பலருக்கு தெரியும்; உரையாட சிலருக்குத்தான் தெரியும். * அமைதி மட்டுமல்ல புயலும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. * எம்.லூர்து ராஜ், சவேரியார்பாளையம்- *** அறிஞர்களின் அமுதமொழிகள் * பொய் சொல்வது கேவலம் அல்ல. அது மனித இயல்புதான். ஆனால், அந்தப் பொய்யை நம்புவதுதான் கேவலம் – தோரோ. * அறிவாளி தன் தவறை உணர்ந்து மனதை மாற்றிக் கொள்வான். முட்டாள் அதனை எப்போதுமே செய்ய மாட்டான் – நிக்கோபானி. * ஒரு மனிதன் நிமிர்ந்து நிற்க வேண்டும். மற்றவர்கள் அவனை நிமிர்த்தும்படி இருக்கக் கூடாது – சிம்மன்ஸ். * மரியாதைக்கு விலை இல்லை. ஆனால் அது எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறது – வில்லியம்டே. * இதயம் ரோஜா மலராக இருக்கும் போது நினைவும் நறுமணமாகத்தான் இருக்கும் – மெஹர்பாபா. * இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு ஒரு சிறு மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள் – கான்பூசியஸ். * பல விஷயங்களை ஒரே சமயத்தில் தொடங்குபவன் எதையும் முடிக்க மாட்டான் – தாமஸ் கார்னல். * ஒருவனை மனிதனாக ஆக்குபவவை பதவிகளும், வசதிகளும் அல்ல. அவனுக்கு ஏற்படும் இடைïறுகளும், துன்பங்களுமே ஆகும் – மாத்ïஸ். *** காலண்டரில் கண்ட முத்துக்கள் திங்கள்- எழுதுவது அருமை. எழுதுவதை பலதடவை வாசிப்பது அதைவிட அருமை. செவ்வாய்- திருவிளக்கு இட்டாரை தெய்வம் அறியும்.நெய் ஊற்றி உண்டாரை நெஞ்சு அறியும். புதன்- கடுமையாக உழைப்பதைத் தவிர வெற்றிக்கு வேறு வழியே இல்லை. வியாழன்- எல்லோரும் பல்லக்கில் ஏறினால், பல்லக்கை யார்தான் தூக்குவது? வெள்ளி- நல்ல அறிவு எந்த மூலையில், எவ்வளவு தூரத்திலிருந்தாலும் அதனைச் தேடிச் செல். சனி- நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதென்பது எளிது. ஆனால், உயிரைக் கொடுப்பதற்குரிய நண்பன் கிடைப்பதுதான் அரிது. ஞாயிறு- காலத்தின் மதிப்பு உனக்குத் தெரியுமா?…அப்படியானால் வாழ்வின் மதிப்பு உனக்குத் தெரியும். *** "வாழ்க வளமுடன்"

பெண்களுக்கு தேவையான பாதுகாப்பு குறிப்புகள்!

பணியிடங்களில் இருந்தும், கல்வி நிலையங்களில் இருந்தும் வீடு திரும்பும்போதோ அல்லது வெளியில் செல்லும் போதோ பல்வேறு சூழ்நிலைகளில் பெண்கள் பல வகைகளில் துன்புறுத்தப்படுகின்றனர் இதற்கு பெண்களின் தைரியமும், துணிச்சலும், எச்சரிக்கை உணர்வும்தான் மாற்று மருந்தாக அமையும். அதுபோன்ற சம்பவங்கள் எல்லா பெண்களுக்கும் நேரும் என்று கூற இயலாது. ஆனால் அவ்வாறு நேரும்போது அதனை எதிர்க்கும் ஆற்றலை பெண் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக பெண்கள் மூன்று காரணங்களால் எளிதல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். குறைவான விழிப்புணர்வு: பெண்கள் எங்கே இருக்கிறோம், நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதில் கவனம் வைத்திருக்க வேண்டும். நம்மை மறந்த நிலையில் இருக்கும் சூழ்நிலையைத் தவிர்க்க வேண்டும். நாம் புதிதாக போகும் இடத்தைப் பற்றிய தகவல்களை நாம் அறிந்திருக்க வேண்டும். *** உடல் மொழி: தலையை குனிந்துகொண்டு, எதற்கும் வெட்கப்பட்டுக் கொண்டிருந்தால் ஏமாற்றமே மிஞ்சும். உடலையும், தலையையும் நேராக வைத்திருங்கள். மனித உடலில் புஜங்கள் தான் மிகவும் வலிமையானவை. எனவே, உங்களது கைகளும், புஜங்களும் தாக்குதலை தடுக்கவும், எதிர்தாக்குதலுக்கும் தயாராக இருக்கட்டும். *** தவறான இடத்தில், நேரத்தில் இருத்தல்: குறிப்பாக இரவு நேரங்களில் குறுகிய பாதையில் தனியாக செல்வதை தவிருங்கள். உங்களுக்கு நம்பிக்கை குறைந்தவர்களுடன் கட்டாயத்தின் பேரில் செல்வதையும் தவிர்த்துவிடுங்கள். எந்த இடத்திற்கும் நேரம் காலம் என்று ஒன்று உண்டு. தாங்கள் சுதந்திரப் பறவை என்ற எண்ணத்தில் கண்ட நேரத்தில், கண்ட இடத்தில் இருந்து தாங்களாகவே வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம். காரில் கடைகள் உட்பட வெளியிடங்களுக்கு செல்லும் போதும், உண்ணும்போதும் திறந்த காரில் உட்கார்ந்துகொண்டிருக்கும் வழக்கம் பெண்களிடம் அதிகமாக உள்ளது. அப்போது மர்ம மனிதர்கள் காரில் ஏறி மிரட்டி உங்களை வேறு இடத்திற்கு அழைத்து சென்றுவிடலாம். எனவே, காரின் கதவுகளை நன்கு மூடி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது தனியாக அமர்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள் *** thanks தினசரி *** "வாழ்க வளமுடன்"

வாழத் தெரிந்துக் கொள்ளுவோம் !

ஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா? தேங்கியிருந்து கொண்டு நாளை என்னும் கனவில் வாழ்வதுதான் வாழ்வா? எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பதுதான் வாழ்வா? இல்லை எப்போதும் செயல் புரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, நதி போல ஓடிக் கொண்டிருப்பதே வாழ்க்கை, பலர் வாழ்க்கையை பதுங்கிக்கொள்ளும் இடமாகவே வைத்திருக்கின்றனர். ஓடிக்கொண்டிருப்பதில் தான் உத்வேகமும், உற்சாகமும் இருக்கும், புத்துணர்ச்சியும் புது வேகமும் இருக்கும். செயல்பட தயங்குகிறவர்கள் அவைகளையெல்லாம் அலைச்சல்களாக நினைத்து அடங்கியிருக்கிறார்கள். * எதிலும் ஆர்வமில்லை, எதையும் தேடி போக மனமில்லை, அதுவாக வரட்டும் பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தால், அப்படி எதுவும் வந்து விடாது, எதற்கும் சோம்பல், எதை செய்யவும் ஆர்வமின்மை இவைகளுக்கெல்லாம் காரணம் மனத்தளர்வு அப்படி என்னதான் கிடைக்கப் போகிறது என்ற சலிப்பு, இப்படி தன்னம்பிக்கையில்லாமல் முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி நடப்பவர்கள் விழித்துக் கொள்ளுங்கள், எதுவும் தானாக வருவதில்லை எதையும் நாம்தான் கொண்டு வர வேண்டும் என்பதை நம்புங்கள். * வாழ்வு என்பது ஒரு துடிப்பு, வாழ துடிக்கிறவனே வாழ கற்றுக்கொள்கிறான், எதிலும் எதிர் நீச்சல் போடுகிறான். உங்களுக்குள்ளே ஒரு துடிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், வாழ வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும் போது தயக்கம், சோம்பலெல்லாம் காணாமல் போய் விடும். செயல்களில் எளிதானது, கடினமானது என்று எதுவும் கிடையாது, நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, எனவே சோர்வு, அலைச்சல், என்று எடுத்துக் கொள்ளாமல் ஓடிக்கொண்டிருங்கள் * வெற்றியில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அந்த வெற்றியை நோக்கி ஓடுவதில்தான் அதிக மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் ஒரு செயலை செய்ய வேண்டுமானால், அடுத்தவர்களின் தூண்டுதல்களினால் இல்லாமல் நம்க்குள்ளிருந்து ஏற்படும் உந்துதலினால் செயல்பட வேண்டும். உள்ளுணர்வுகளின் தூண்டுதல்களை போன்ற வலைமை வெளியே வேறு எங்கிருந்தும் கிடைப்பதில்லை, எந்த திடமான முடிவும் நம்மிலிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும். * வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களெல்லாம், நம்மை உருவாக்கவே ஏற்படுகிறது, அதில் சோர்ந்து போகாமல் அதிலிருந்து புதிய பாடத்தினை, புதிய வழியினை, கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஒரு வழியல்ல பல வழிகள் உள்ளன. நாம் காணும் துன்பங்கள்தான் நமக்கு புது வழியினை காட்டித்தருகின்றன அதே துன்பத்தில் துவண்டு போனோமானால் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டு விடும். அங்கேதான் பல தற்கொலைகளும் நிகழுகின்றன எனவே துவண்டு விடாமல், நம் உள்ளுணர்வுகளால் உலகை வெல்வோம். * விலகியிருந்து பார்க்கும்போது எல்லாமே, சிக்கல் நிறைந்ததாகவே தெரியும். துணிவோடு புகுந்து சென்றால் வானமும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். எனவே எதற்கும் தயக்கம் வேண்டாம் அஞ்சாமல் புறப்படுங்கள். வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆஒதுங்கி ஒதுங்கி வாழ்வதுதான் வாழ்வா? தேங்கியிருந்து கொண்டு நாளை என்னும் கனவில் வாழ்வதுதான் வாழ்வா? எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்தி வைப்பதுதான் வாழ்வா? இல்லை எப்போதும் செயல் புரிந்து கொண்டிருப்பதுதான் வாழ்க்கை, நதி போல ஓடிக் கொண்டிருப்பதே வாழ்க்கை, பலர் வாழ்க்கையை பதுங்கிக்கொள்ளும் இடமாகவே வைத்திருக்கின்றனர். ஓடிக்கொண்டிருப்பதில் தான் உத்வேகமும், உற்சாகமும் இருக்கும், புத்துணர்ச்சியும் புது வேகமும் இருக்கும். செயல்பட தயங்குகிறவர்கள் அவைகளையெல்லாம் அலைச்சல்களாக நினைத்து அடங்கியிருக்கிறார்கள். * எதிலும் ஆர்வமில்லை, எதையும் தேடி போக மனமில்லை, அதுவாக வரட்டும் பார்க்கலாம் என்று அமர்ந்திருந்தால், அப்படி எதுவும் வந்து விடாது, எதற்கும் சோம்பல், எதை செய்யவும் ஆர்வமின்மை இவைகளுக்கெல்லாம் காரணம் மனத்தளர்வு அப்படி என்னதான் கிடைக்கப் போகிறது என்ற சலிப்பு, இப்படி தன்னம்பிக்கையில்லாமல் முன்னோக்கி நடக்காமல் பின்னோக்கி நடப்பவர்கள் விழித்துக் கொள்ளுங்கள், எதுவும் தானாக வருவதில்லை எதையும் நாம்தான் கொண்டு வர வேண்டும் என்பதை நம்புங்கள். * வாழ்வு என்பது ஒரு துடிப்பு, வாழ துடிக்கிறவனே வாழ கற்றுக்கொள்கிறான், எதிலும் எதிர் நீச்சல் போடுகிறான். உங்களுக்குள்ளே ஒரு துடிப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள், வாழ வேண்டும், முன்னேற்றம் வேண்டும் என்ற துடிப்பு ஏற்படும் போது தயக்கம், சோம்பலெல்லாம் காணாமல் போய் விடும். செயல்களில் எளிதானது, கடினமானது என்று எதுவும் கிடையாது, நாம் அதை எப்படி எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, எனவே சோர்வு, அலைச்சல், என்று எடுத்துக் கொள்ளாமல் ஓடிக்கொண்டிருங்கள் * வெற்றியில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட அந்த வெற்றியை நோக்கி ஓடுவதில்தான் அதிக மகிழ்ச்சி இருக்கிறது. மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் ஒரு செயலை செய்ய வேண்டுமானால், அடுத்தவர்களின் தூண்டுதல்களினால் இல்லாமல் நம்க்குள்ளிருந்து ஏற்படும் உந்துதலினால் செயல்பட வேண்டும். உள்ளுணர்வுகளின் தூண்டுதல்களை போன்ற வலைமை வெளியே வேறு எங்கிருந்தும் கிடைப்பதில்லை, எந்த திடமான முடிவும் நம்மிலிருந்துதான் ஆரம்பிக்கப் படவேண்டும். * வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களெல்லாம், நம்மை உருவாக்கவே ஏற்படுகிறது, அதில் சோர்ந்து போகாமல் அதிலிருந்து புதிய பாடத்தினை, புதிய வழியினை, கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு செயலை செய்து முடிப்பதற்கு ஒரு வழியல்ல பல வழிகள் உள்ளன. நாம் காணும் துன்பங்கள்தான் நமக்கு புது வழியினை காட்டித்தருகின்றன அதே துன்பத்தில் துவண்டு போனோமானால் எல்லா வாசல்களும் அடைக்கப்பட்டு விடும். அங்கேதான் பல தற்கொலைகளும் நிகழுகின்றன எனவே துவண்டு விடாமல், நம் உள்ளுணர்வுகளால் உலகை வெல்வோம். * விலகியிருந்து பார்க்கும்போது எல்லாமே, சிக்கல் நிறைந்ததாகவே தெரியும். துணிவோடு புகுந்து சென்றால் வானமும் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருக்கும். எனவே எதற்கும் தயக்கம் வேண்டாம் அஞ்சாமல் புறப்படுங்கள். வாழ்க்கையை வாழ்ந்துதான் ஆக வேண்டும் எனவே வாழ்வை நேசியுங்கள், உங்களை நேசியுங்கள் வாழ்க்கை உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கி நிற்கும். *** thanks தினசரி *** "வாழ்க வளமுடன்"

இல்லற வாழ்க்கை சிறக்க :)

திருமண‌ம் எ‌ன்பது ஆ‌யிர‌ங்கால‌த்து‌ப் ப‌யி‌ர், ‌திருமண‌ம் சொ‌ர்‌க்க‌த்‌தி‌ல் ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்படுவது, மனை‌வி அமைவதெ‌ல்லா‌ம் இறைவ‌ன் கொடு‌த்த வர‌ம்.. எ‌ன்பது போ‌ன்ற பழமொ‌ழிக‌ள் ‌திருமண‌த்‌தி‌ன் மு‌க்‌கிய‌த்துவ‌த்தை உண‌ர்‌த்து‌ம் வகை‌யி‌ல் அமை‌ய‌ப்பெ‌‌ற்று‌ள்ளது. ‌திருமண‌ம் எ‌ன்பது பெ‌ற்றோரா‌ல் பா‌ர்‌த்து ‌நி‌ச்ச‌யி‌க்க‌ப்ப‌ட்டு ‌நட‌த்‌தி வை‌க்க‌ப்படு‌வது. ஆனா‌‌ல் த‌ற்போது காத‌ல் ‌திருமண‌ங்களு‌ம் அ‌திகள‌வி‌ல் நட‌க்‌கி‌ன்றன. ஆனா‌ல் எ‌ந்த வகையான ‌திருமணமாக இரு‌ந்தாலு‌ம், த‌ம்ப‌திக‌ள் ஒ‌த்து‌ப் போனா‌ல் ம‌ட்டுமே அவ‌ர்களது வா‌ழ்‌க்கை ‌நீடி‌க்கு‌ம். ‌‌சி‌‌ன்ன ‌சி‌ன்ன கரு‌த்து மோத‌ல்களு‌க்கு எ‌ல்லா‌ம் ‌விவாகர‌த்து கே‌ட்டு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் படிகளை ஏறு‌ம் த‌ம்ப‌திக‌‌ளி‌ன் எ‌ண்‌ணி‌க்கை அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ற்கே‌ச் செ‌ல்லாம‌ல், கணவ‌னி‌ன் கொடுமைகளை‌த் தா‌ங்க முடியாம‌ல் அ‌ல்லது கணவ‌னி‌ன் குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஒ‌த்து போகாம‌ல் தா‌ய் ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்று வாழு‌ம் பெ‌ண்களு‌ம் அ‌திக‌‌ம். பெரு‌ம்பாலு‌ம் ‌திருமண‌த்‌தி‌ற்கு மு‌ன்பு, கணவரது ‌வீ‌ட்டா‌ர் கூறு‌ம் பொ‌‌ய்களே, பல ‌விவாகர‌த்துகளு‌க்கு அடி‌ப்படையாக உ‌ள்ளது. கணவனோ, மனை‌வியோ எ‌ந்த ‌வித‌த்‌தி‌ல் ‌பிர‌ச்‌சினை வ‌ந்தாலு‌ம், இருவரு‌ம் ஒரு அ‌ணி‌‌யி‌‌ல் ‌நி‌ன்று ‌பிர‌ச்‌சினையை சமா‌ளி‌க்கு‌ம் போது குடு‌ம்ப‌‌ம் வலு‌ப்பெறு‌ம். ஆனா‌ல், அவ‌ர்களு‌க்கு‌ள்ளாகவே ‌பிர‌ச்‌சினையை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு இரு அ‌ணிகளாக ‌நி‌ன்று போராடு‌ம் போது குடு‌ம்ப உறவு‌க்கு‌ள் பல து‌ர்தேவதைக‌ளி‌ன் ஆ‌தி‌க்க‌ம் மேலோ‌ங்கு‌ம். அது பெ‌ண்‌ணி‌ன் தா‌யாகவு‌ம் இரு‌க்கலா‌ம், ஆ‌ணி‌ன் தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைக‌ளி‌ன் ஆ‌தி‌க்கமாகவு‌ம் இரு‌க்கலா‌ம். இதுகு‌றி‌த்து ஒரு நகை‌ச்சுவை ஒ‌ன்று உ‌ள்ளது. அதாவது காத‌லி‌க்கு‌ம் போது காதல‌ன் பேசுவா‌ன், காத‌லி கே‌ட்பா‌ள், ‌திருமண‌த்‌தி‌‌ற்கு‌ப் ‌பிறகு மனை‌வி பேசுவா‌ள், கணவ‌ன் கே‌ட்பா‌ன், குழ‌ந்தை ‌பிற‌ந்த ‌பிறகு இருவருமே பேசுவா‌ர்க‌ள் ஊரே‌க் கே‌ட்கு‌ம் எ‌ன்பது போல குடு‌ம்ப வா‌ழ்‌க்கை ஆ‌கி‌விட‌க் கூடாது. குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ளி‌ல் பெரு‌ம்பாலு‌ம் கணவனது குடி‌ப்பழ‌க்க‌ம், வேலை‌யி‌ல்லாத கணவ‌ன், குடு‌ம்ப‌த்தை நட‌த்துவத‌ற்கான வருமான‌ம் இ‌ன்‌மை, கணவரது தா‌ய் ம‌ற்று‌ம் தம‌க்கைய‌ரி‌ன் கொடுமை, அ‌ல்லது பா‌லிய‌ல் ‌பிர‌ச்‌சினை‌க‌ள் போ‌ன்றவை ஒரு பெ‌ண்‌ணி‌ற்கு எ‌திராக ‌நி‌ற்‌கி‌ன்றன. இதே‌ப்போல, குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு ஒ‌த்து வராத பெ‌ண், குடு‌ம்ப சூ‌ழ்‌நிலை‌க்கு ஏ‌ற்ப மா‌ற்‌றி அமை‌த்து‌க் கொ‌ள்ளாத பெ‌ண், ஊதா‌‌ரி‌த் தன‌ம், பல ஆ‌ண்க‌ளி‌ன் சகவாச‌ம், குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு அட‌ங்காத பெ‌ண் போ‌ன்றவை ஆ‌ணி‌ன் மு‌ன் ‌நி‌ற்கு‌ம் ‌பிர‌ச்‌சினைகளாகு‌ம். எதுவாக இரு‌ந்தாலு‌ம், நமது அ‌ன்பாலு‌ம், பொறுமையாலு‌ம் ஒருவரை அனுச‌ரி‌த்து‌ச் செ‌ன்று அவருடனான வா‌ழ்‌க்கையை இ‌னிதா‌க்‌கி‌க் கொ‌ள்வது எவராலு‌ம் முடியு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். (இ‌‌தி‌ல் முடியாத ‌வி‌தி‌வில‌க்குகளு‌ம் உ‌ள்ளன. எனவே, ‌பிர‌ச்‌சினை துவ‌ங்கு‌ம் போதே அதை‌ப் ப‌ற்‌றி இருவரு‌ம் மன‌ம் ‌வி‌ட்டு‌ப் பே‌சி ‌பிர‌ச்‌சினையை ‌தீ‌ர்‌த்து‌க் கொ‌ள்ளலா‌ம். எதையு‌ம் அ‌றிவு‌ப்‌பூ‌ர்வமாக ஆராயாம‌ல், மன‌ப்பூ‌ர்வமாக ஆரா‌ய்‌ந்தா‌ல் ந‌ல்ல வ‌ழி ‌கி‌ட்டு‌ம். அ‌ப்படியே ‌பிர‌ச்‌சினைக‌ள் துவ‌ங்‌கி அதை கவ‌னி‌க்காம‌ல் ‌வி‌ட்டு‌வி‌ட்டு பு‌ண் ‌புரையோடி‌ப் போன சூ‌ழ்‌நிலை‌யி‌ல் த‌ம்ப‌திக‌ள் ஒ‌ன்றாக நாடுவது ‌‌நீ‌திம‌ன்ற‌த்தை‌த்தா‌ன். ‌விவாகர‌த்து எ‌ன்ப‌தி‌லாவது த‌ம்ப‌திகளு‌க்கு ஒ‌த்த கரு‌த்து ஏ‌ற்ப‌ட்டது கு‌றி‌த்து ‌சில இட‌ங்க‌ளி‌ல் ஆ‌ச்ச‌ரிய‌ப்பப‌ட்டு‌த்தா‌ன் ஆக வே‌ண்டு‌ம். அ‌ந்த அள‌வி‌ற்கு எ‌லியு‌ம் பூ‌னையுமாக இரு‌க்கு‌ம் த‌ம்ப‌திகளு‌ம் உ‌ண்டு. ‌நீ‌திம‌‌ன்ற‌ங்க‌ளில், விவாகரத்து கேட்டு வரும் தம்பதிகளுக்கு உ‌டனடியாக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விவாகர‌த்து வழ‌ங்க‌ப்படுவ‌தி‌ல்லை. முதலில் உளவியல் ரீதியாக ஆலோசைன வழ‌ங்க‌ப்படு‌கிறது. தேவைப்பட்டால் பல தடவைகூட ஆலோசனை நடத்துகிறார்கள். முடிந்தவரை தம்பதிகளை சேர்த்து வைக்கவே இ‌ந்த ‌நீ‌திம‌ன்ற‌‌ங்க‌ள் முயற்சி செய்கின்றன. இறு‌தி வரை விவாகரத்து பெற்றே தீருவது என்று இருவரில் ஒருவர் பிடிவாதமாக இருந்தாலோ அல்லது இருவரும் பிடிவாதமாக இருந்தாலோ வழக்கு நடத்தி விவாகரத்து வழங்கப்படுகிறது. இந்தக் கால இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை போன்ற நற்குணங்கள் இல்லாத காரணத்தால்தான் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. விவாகரத்து கேட்டு வரும் ஜோடிகளை சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் இப்போது புதிய முயற்சியாக, இல்லற வாழ்க்கை இனித்திட… என்ற தலைப்பில் 10 அறிவுரைகளை தமிழில் அறிவிப்பாக எழுதி வைத்துள்ளன. இந்த அறிவிப்பு, முதன்மை குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும், முதலாவது மற்றும் இரண்டாவது குடும்ப நல ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலும் அனைவரது கண்ணில்படும்படி வைக்கப்பட்டு உள்ளது. . இதனை அனை‌த்து த‌ம்ப‌திகளு‌ம் ‌பி‌ன்ப‌ற்‌றி வ‌ந்தாலே பெரு‌ம்பாலான குடு‌ம்ப ‌பிர‌ச்‌சினைக‌ள் வராது. அ‌ப்படியே தலைதூ‌க்‌கினாலு‌ம் அவை பெ‌ரிய அள‌வி‌ல் உருவாகாது. *** ‌நீ‌ங்களு‌ம் ‌திருமணமானவராக இரு‌ப்‌பி‌ன் இவ‌ற்றை படியு‌ங்க‌ள். ‌பி‌ன்ப‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள். உ‌ங்க‌ள் இ‌ல்லற‌ம் ந‌ல்லறமாகு‌ம். * ஒரேசமயத்தில் இருவரும் கோபப்படாதீர்கள். * வாக்குவாதம் ஏற்படுகின்ற பிரச்சினைகளில் ஒருவர் மற்றவரை ஜெ‌யி‌க்க‌வி‌ட்டு மகிழ்ச்சி அடையுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை எப்பொழுதுமே! * விமர்சனத்தையே வாஞ்சையுடனும், அன்புடனும் செய்து பாருங்கள். * கடந்தகால தவறுகளைச் சுட்டிக் காட்டாதீர்கள். * உலகத்திற்காக போலியாக வாழ்வதைக் காட்டிலும், உங்களுக்காகவே வாழ்ந்து பாருங்களேன். * விவாதம் தவிர்க்க முடியாதது என்றால், கூடியவரைக்கும் அதை ஒத்திப் போடுங்கள். * ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஒரு அன்பான வார்த்தையோ அல்லது வாழ்த்தோ உங்கள் துணையிடம் உபயோகப்படுத்திப் பாருங்கள். * செய்த தவறை உணரும்போது அதை ஒத்துக் கொள்ளவும் அல்லது அதற்காக மன்னிப்புக் கேட்கவும் தயங்காதீர்கள். மேலு‌ம், இல்லற வாழ்க்கை இனித்திட, மூன்று தாரக மந்திரங்கள். (இவ‌ற்றை எ‌ப்போது‌ம் மன‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள்) சூழ்நிலைக்கேற்ப நடந்து கொள்ளுதல் அனுசரித்துப் போகுதல் மற்றவர்களை மதித்து நடத்தல். ந‌ம் வா‌ழ்‌க்கை ந‌ம் கை‌யி‌ல்தா‌ன் உ‌ள்ளது. *** thanks google *** "வாழ்க வளமுடன்"

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது? தெரியுமா?

சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே: *** நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை. *** எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள கால்சியத்தையும் உறிஞ்சி விடுகிறது. அதே சமயம் சைவ உணவில் இந்த பிரச்சனை இல்லை. *** கார்போஹைட்ரேட் பற்றாக்குறை: அசைவ உணவு அதிகம் எடுத்துக்கொள்பவர்களுக்கு கார்போஹைட்ரேட் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பும் அதிகம் உண்டு.இதனால் உடல் தனது இயக்கத்திற்கு தேவையான சக்தியை கார்போஹைட்ரேட்டிலிருந்து பெறுவதற்கு பதிலாக சேமித்து வைக்கப்பட்டுள்ள கொழுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளும் கீட்டோனியம் என்ற நிலை ஏற்படும். *** எளிதில் ஜீரணம்: சைவ உணவுகள் மூலமாக கிடைக்கும் ஹார்போஹைட்ரேட் படிப்படியாக ஜீரணமாக உடலுக்கு தேவையான குளூகோஸ் சத்தை சீராக அளிக்கும்.அதே சமயம் கொழுப்பும், புரதமும் அதிகம் நிறைந்த இறைச்சி உணவு ஜீரணமாகவே அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். சில சிமயங்களில் சிலருக்கு அது சிரமமாக கூட ஆகிவிடும். *** ஆரோக்கியமான மேனி: பீட்ரூட், தக்காளி, பூசணி, பாகற்காய் போன்ற சைவ உணவுகள் ரத்தத்தை நன்கு சுத்திகரிப்பதோடு, தோலுக்கு மினு மினுப்பையும் கொடுக்கிறது. அத்துடன் கொய்யா, ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களை உண்பதும் மேனிக்கு மினுமினுப்பை கூட்டும். *** thanks webdunia *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "