...

"வாழ்க வளமுடன்"

04 மே, 2011

சர்க்கரை நோய்க்கான உணவுமுறைகள்



இது சர்க்கரை நோயாளியின் சத்து தேவையை சந்திக்கக்கூடிய மற்றும் பிறர் உண்ணக்கூடிய சாதாரண உணவு. அதில் மாவுச்சத்துப் பொருட்களின் அளவு கொஞ்சம் குறைந்தும் மற்ற உணவுப் பொருட்கள் போதுமான அளவு இருக்கும்.


சர்க்கரை நோய் கண்ட அனைவரும் கீழ்க்காணும் உணவுப் பொருட்களை அவசியம் தவிர்க்க வேண்டும்.

வேர்கள் மற்றும் கிழங்கு வகைகள்.
இனிப்பு வகைகள்.
எண்ணையில் வறுத்த பொருட்கள்.
காய்ந்து உலர்த்திய பழங்கள் மற்றும் கொட்டைகள்.
சர்க்கரை.
வாழை, சப்போட்டா, சீதா போன்ற பழவகைகள்.

***

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு மாதிரி
உணவுப் பொருட்கள் சைவ உணவு அசைவ உணவு
(கிராம்களில்) (கிராம்களில்)

தானியங்கள் - 200 - 250


பருப்பு வகைகள் - 60 - 20

பச்சிலை காய்கறிகள் - 200 - 200

பழங்கள் - 200 - 200

பால் (பண்ணைப்பால்) - 400 - 200

எண்ணை - 20 - 20

தோல் நீக்கிய மீன்/கோழி - 0 - 100

மற்ற காய்கறிகள் - 200 - 200



***


இந்த உணவு தரும் சத்துக்களாவன

கலோரிகள் - 1600

புரதம் - 65 கிராம்
கொழுப்பு - 40 கிராம்
மாவுப்பொருட்கள் - 245 கிராம்



***



உணவுப் பங்கீடு

- சைவம் - அசைவம்

காலை டீ /காபி - 1 கப் - 1 கப்

காலை உணவு
ரொட்டித் துண்டு - 2/3 - 2/3
காபி அல்லது டீ - 1 கப் - 1 கப்



*


மதிய உணவு
சாப்பாடு - 2 கப் - 2 கப்
சாம்பார் - 1 கப் - 1 கப்
பச்சைக் காய்கறிகள் - 1 கப் - 1 கப்
தயிர் - 1/2 கப் - 1/2 கப்
தக்காளி(அ) சிட்ரஸ் பழங்கள் - 1 - 1
ஊறுகாய் - ஒரு துண்டு - ஒரு துண்டு



*


டீ அல்லது காபி (மாலை) - 1 கப் - 1 கப்
உப்புமா - 3/4 கப் - 3/4 கப்


*


இரவு உணவு
சப்பாத்தி - 3 - 4
பருப்பு - 1 கப் - 0
தயிர் - 1/2கப் - 0
மீன் / கோழி - 0 - 2துண்டுகள்
மற்ற காய்கறிகள் - 1 கப் - 1 கப்
வறுத்த அப்பளம் - 1 - 1
தக்காளி அல்லது வெள்ளரிக்காய் - 1 - 1

*

படுக்க செல்லும் முன்
டீ/ காபி/ பால் - 1 கப் - 1 கப்




***
thanks indg
***




"வாழ்க வளமுடன்"

நஞ்சை முறிக்கும் நல் உணவுகள்



நாம் உயிருடன் இருக்கிறோம் என்றால் அதற்குக் காரணம், ஆக்ஸிஜன். இந்த உயிர் காக்கும் ஆக்ஸிஜனைத்தான் உடலுக்குள் இருக்கும் தீய ஆக்ஸிஜனின் சிறிய நுன் கூறுகள் திருடிக் கொண்டே இருக்கின்றன. இந்த நுண் கூறுகளுக்கு ஃப்ரீராடிக்கல் என்று பெயர்.

உணவின் மூலம் இந்தக் கெட்ட ஆக்ஸிஜன் கூறுகளை முறித்துவிட்டால் நோய்கள் வரா. இந்த நுண் கூறுகள் உடலில் சேரச்சேர செல்களுக்கு போதிய அளவு ஆக்ஸிஜன் கிடைக்காமல் உடல் முதுமையடைகின்றது. அல்லது உறுப்புகள் கெட்டுப்போய் விடுகின்றன.

இவற்றைத் தடுக்கும் சிறந்த ச்சு முறிவு மருந்துகளாக சில உணவு வகைகள் உள்ளன.

புற்று நோய், காட்ராக்ட், இதய நோய், இரத்தக் கொதிப்பு வராமல் முன் கூட்டியே தடுக்கும் எதிர் நச்சுமருந்தாக வைட்டமின் ‘சி’ திகழ்கிறது. முக்கியமாக நோய்களை எதிர்த்து அழிக்கும் வெள்ளை இரத்த அணுக்களை இந்த வைட்டமின் சி தான் உற்பத்தி செய்கிறது. வைட்டமின் சி, இரத்தக்குழாய் நன்கு உறுதியாக, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆஸ்துமா நோயாளிகளும், இரத்தக் கொதிப்பு நோயாளிகளும் வைட்டமின் ‘சி’யை மாத்திரையாகவும், உணவாகவும் சாப்பிடலாம். முக்கியமாக நெல்லிக்காய், முருங்கைக்கீரை, உலர்ந்த தேங்காய், முட்டைக்கோஸ், சோளம், பட்டாணி முதலியவற்றைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால் தொற்றுநோய் உட்படப் பல நோய்களும் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்படும். இவை நஞ்சை முறிக்கும் மருந்து போல முற்றிலும் முறிக்கப்பட்டு விடும்.


இத்துடன் பார்வை தொடர்பான பல குறைபாடுகளையும் தினமும் ஒரு காரட்டைப் பச்சையாகச் சாப்பிட்டு வருவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இதன் மூலம் ஒரு நாள் தேவையான பீட்டா கரோட்டின் 15,000 யூனிட்டுகள் கிடைத்துவிடுகின்றன.


பக்கவாதம் வராமல் தடுப்பதில் வைட்டமின் ஈ சிறந்த நச்சு முறிவு மருந்தாகச் செயல்படுகிறது. இது கிடைக்க சூரியகாந்தி எண்ணெயில் சமைப்பது, பாதாம் பருப்பு, வேர்க்கடலை முதலியவற்றை அளவுடன் வறுத்துச் சாப்பிடுவது, தினமும் வைட்டமின் ஈ யை 200 சர்வதேச அலகு என்ற அளவில் முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் சாப்பிட்டு வருவது ஆகியவை ‘வருமுன் காப்போம்’ என்ற விதியை உண்மையில் கடைப்பிடிப்பதாகும்.


வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பீட்டா கரோட்டின் ஆகியவற்றைப் போலவே சிறந்த ஆன்ட்டிடாக்ஸிடென்ட்டுகளாக செலினியம், மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய தாது உப்புக்களும் செயல்படுகின்றன. இதனால் திசுக்களும், அதைச் சுற்றியுள்ள சவ்வுப் பகுதிகளும் பாதுகாப்பாக ஆக்கப்பட்டு முதுமையைத் தள்ளிப்போட்டு ஆரோக்கியமாக வாழ வைக்கின்றன. இந்த மூன்று நச்சு முறிவு மருந்துகளும் கிடைக்கத் தினைமாவு, பாசிப்பருப்பு, பார்லி அரிசி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சாத்துக்குடி, வாழைப் பழம், திராட்சை, சோயா மொச்சை முதலியவற்றை அடிக்கடி உணவில் இடம் பெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். குடிகாரர்கள் இந்த உணவு வகைகளை தினமும் சாப்பிட்டு வந்தால் குடியினால் வரும் கேடுகள் தடுக்கப்படும். மக்னீசியம் அளவு உடலில் குறைவாக இருந்தால் மாரடைப்பு ஏற்படும். திராட்சைப் பழம் திடீர் மாரடைப்பை முற்றிலும் தடுக்கும்.


உடலில் நோய்களை உருவாக்கும் நச்சுக்கூறுகள் சேரும்போதெல்லாம் அவற்றை முற்றிலும் முறித்து உடல் நலனைப் பாதுகாப்பில் வைத்திருக்கும் மேற்கண்ட பதினெட்டு வகையான உணவு வகைகளை அடிக்கடி பயன்படுத்துங்கள். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்குவதுடன் ஏற்கனவே உள்ள உடல் நலக்கோளாறுகளையும் முற்றிலும் குணமாக்கிவிடும்.


இத்துடன் படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் உள்ளங்கையில் புள்ளிகள் இடம் பெற்றுள்ள பகுதிகளில் தலா ஒரு நிமிடம் விட்டுவிட்டு அழுத்தவும். படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்ததும் கட்டை விரலால் இப்படி அழுத்துவதால் தைமல் சுரப்பி எழுச்சி பெற்று வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்கி கிருமிகளை அழித்து விடும். மாலையிலும் இதுபோல் ஒரு புள்ளிக்கு ஒரு நிமிடம் வீதம் ஆறு புள்ளிகளிலும் அழுத்தவும். இதைச் செய்தால் செலவில்லாமல் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கி விடலாம்.


***
thanks கே.எஸ்.சுப்ரமணி
***





"வாழ்க வளமுடன்"

சர்க்கரை நோய் (டையாபடீஸ்) ஒரு விரிவான விளக்கம்



ஆரோக்கியமான ஒரு நபரில் உட்கொள்ளும் உணவு எப்படி சக்தியாக மாறுகிறது மற்றும் சர்க்கரை நோய் இருந்தால் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்பதனை கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

உட்கொள்ளும் உணவு குளுக்கோஸ் -ஆக மாறுகிறது. நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள். இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.






குளுகோஸ் செல்களுக்குள் செல்லுதல் - கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது.






செல்கள் குளுக்கோஸ்-ஐ சக்தியாக மாற்றுகிறது - குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.
சர்க்கரை நோய் இருக்கும் போது ஏற்படும் மாற்றங்களாவன.
குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.






உணவு குளுக்கோஸ்-ஆக மாறுகிறது - வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை ஏனெனில்

1.இன்சுலின் போதுமான அளவு இல்லாதிருக்கலாம்.
2.இன்சுலின் அதிகளவில் இருந்தும், இந்த இன்சுலின் செல் உறையில் உள்ள ரிசப்ட்டார் எனப்படுவதை திறக்க முடியாத நிலை ஏற்படுவதினால் செல்லானது குளுக்கோஸ்-ஐ உட்கொள்ள முடியாத நிலை
3.எல்லா குளுக்கோஸ் துகள்களும் செல்களுக்குள் செல்ல மிகக் குறைந்த அளவே ரிசப்ட்டார்கள் இருக்கலாம்.






செல்களினால் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாது - எல்லா குளுக்கோஸ் துகள்களும் இரத்தத்திலேயே தங்கியிருக்கும். இதனை ஹைப்பர்கிளைசீமியா (இரத்தத்தில் குளுக்கோஸ் அல்லது சர்க்கரை மிகவும் அதிகளவில் இருப்பது) என்பர். செல்களில் போதிய அளவு குளுக்கோஸ் இல்லாததினால் உடல் நன்கு செயல்பட தேவையான சக்தியினை உற்பத்தி செய்ய முடிவதில்லை.


***

சர்க்கரை நோயின் அறிகுறிகள்- நோயின் அறிகுறி உள்ளவர்கள் பலவித்தியாசமான அறிகுறிகளை உணரலாம். அவற்றில் சில

1.அடிக்கடி சிறுநீர் கழித்தல் (இரவ நேரத்திலும்)
2.தோலில் அறிப்பு ஏற்படுதல்.
3.பார்வை மங்கலடைதல்.
4.சோர்வு மற்றும் பலவீனமாக உணர்தல்.
5.பாதம் மரத்துப்போதல்
6.அதிகமான தாகம்.
7.காயங்கள் மெதுவாக ஆறும் தன்மை.
8.எப்பொழுதும் பசியோடு இருத்தல்.
9.எடைகுறைதல்.
10.தோல் வியாதிகள் ஏற்படுதல்.


***


இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை நாம் ஏன் கட்டுப்படுத்த வேண்டும்

•இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நீண்ட காலமாக அதிகரித்திறுத்தல் விஷமாகும்.

•அப்படி நீண்ட நாட்களாக இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, குறிப்பிட்ட காலத்திற்கு பின் இரத்தக்குழாய்கள், சிறுநீரகங்கள், கண்கள் மற்றும் நரம்புகளில் சிதைவு / பாதிப்பகளை ஏற்படுத்தி பல சிக்கலான நிலைமைகளை ஏற்படுத்தும். கண், நரம்புகளில் நிரந்தர கோளாறுகளை ஏற்படுத்தும்.

•நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதம் மற்றும் பிற உடல் உறுப்புகளில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். இரத்தக்குழாய்களில் நோய் ஏற்பட்டு இதயக்கோளாறு, ஸ்ட்ரோக் மற்றும் இரத்தச்சுழற்சியில் பிரச்சினைகள் போன்றவை ஏற்பட வைக்கிறது.

•கண்களில் ஏற்படும் கோளாறுகளான ரெடினோபதி (கண்களில் உள்ள இரத்தக் குழாய்கள் பாதித்தல்), க்ளுக்கோமா (கண்களுக்குள் இருக்கும் திரவத்தின் அழுத்தம் அதிகரித்தல்) மற்றும் கேட்டராக்ட் (கண்களின் கருவிழிப்படலத்தில் வெள்ளை நிற படலம் தோன்றி பார்வையை இழக்கச்செய்தல்) போன்றவை ஏற்படும்.

•சிறுநீரகங்கள் இரத்தத்திலுள்ள கழிவுகளை வெளியேற்ற முடியாதபடி சிறுநீரக நோய் ஏற்படும்.

•ஹைப்பர்டென்ஷன் எனும் உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டு இதயம் சரியாக இரத்தத்தினை இறைக்க முடியாத நிலை ஏற்படுகிறது.


***


சர்க்கரை நோயினைக் கையாளுதல் :

உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, தனிப்பட்ட நபர் சுத்தம் சுகாதாரம் மற்றும் இன்சுலினை ஊசியாகவோ அல்லது மாத்திரை வடிவிலோ (மருத்துவரின் அறிவுரைப்படி) எடுத்துக் கொள்வது சர்க்கரை நோயினால் ஏற்படக்கூடிய சிக்கல்களை தடுத்து நிறுத்தும் சில எளிய வழிமுறைகள் ஆகும்.
உடற்பயிற்சி - உடற்பயிற்சி இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை குறைக்கிறது மற்றும் உடலில் உள்ள செல்கள் குளுக்கோஸ்-யை உபயோகிப்பதனை அதிகப்படுத்துகிறது. 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யும் போது 135 கலோரிகள் சக்தியானது பயன்படுத்தப்படுகிறது. அதுவே 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது 200 கலோரிகள் சக்தியினை எரித்து பயன்படுத்தப்படுகிறது.


***


சர்க்கரை நோயின்போது தோலினை பராமரிக்கும் முறை :

சரக்கரை நோய் கண்ட நபர் தோலினை பராமரிப்பது அவசியம். இரத்தில் குளுக்கோஸ் அதிகமாக இருக்கும் போது தோலில் அதிகளவு பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சான்களின் பெருக்கம் அதிகரிக்கிறது. தோல் பகுதிக்கு செல்லும் நோய் எதிர்க்கும் செல்களின் அளவும் குறைந்து காணப்படுவதால், உடலைப்பாதிக்கும் பாக்டீரியாவை தடுத்து நிறுத்த முடிவதில்லை. அதிகளவு குளுக்கோஸ் இருக்கும் போது உடலில் உள்ள நீரின் அளவு குறைந்து, தோல் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படுகிறது.


உடலை தவறாமல் ஒழுங்காக சோதித்து, கீழ்க்காண்பவை இருப்பின் மருத்துவரிடம் அறிவிக்க வேண்டும்.

•தோலின் வண்ணம், தன்மை மற்றும் தடிமனில் ஏற்படும் மாற்றங்கள்.

•தோலில் ஏற்படும் கொப்புளங்கள், கட்டிகள் போன்றவை.

•பாக்டீரியா தொற்றுவின் ஆரம்ப நிலைகளான, தோலின் நிறம் சிவத்தல், வீங்குதல், கொப்புளக்கட்டிகள், தோலின் வெப்பம் அதிகரித்தல்

•ஆறாத காயங்கள்


***


சருமத்தைப் பராமரிக்கும் முறைகள்

தவறாமல் குளிப்பது மற்றும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது

•வெதுவெதுப்பான நீரில் குளிப்பது. அதிக சூடுள்ள நீரில் குளிப்பதை தவிர்க்கவும்

•குளித்த பின் உடல் பாகங்களை, குறிப்பாக இடுக்குகள் மற்றும் மடிப்புகளை நன்கு துடைத்தல்.

•வறண்ட சருமத்தை சொறிவதைத் தவிர்க்கவும். ஏனெனில், வறண்ட சருமத்தை சொறியும் போது ஏற்படும் காயத்தின் மூலம், பாக்டீரியாக்கள் நுழைந்து நோயினை ஏற்படுத்தும்

•சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அதிகளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்


***


காயங்களை பராமரிப்பது


சர்க்கரை நோய் கண்ட நபர்கள் உடலில் ஏற்படும் சிறு காயங்களையும் சரியாக பராமரிப்பது அவசியம்.

•சுத்தமான தண்ணீர் மற்றும் சோப் கொண்டு அடிப்பட்டவுடன் காயங்களைக் கழுவவும்


•ஆல்காஹால்/ஐயோடின் கொண்ட மருந்துகளை காயத்தின் மேல் பூச வேண்டாம். இத்தகைய மருந்துகள் எரிச்சலை உண்டாக்கும். மருத்துவரின் ஆலோசனையின் படி மருந்துகளைப் பயன்படுத்தவும்.


•சுத்தமான பான்டேஜ் கொண்டு காயத்தை மூடி வைக்கவும்


***


பாதங்களைப் பராமரிப்பது

சர்க்கரை நோய் காணப்பட்டால், நரம்புக் கோளாறு ஏற்பட்டு பாதத்தில் உணர்ச்சியற்ற நிலையை ஏற்படுத்தும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் பாதங்களைப் பராமரிக்க சில வழிமுறைகள்

•புண், வெட்டு காயங்கள், தடித்திருத்தல், கொப்புளங்கள், கீறல்கள் போன்றவை உள்ளனவா என்று பாதங்களை அவ்வப்போது பரிசோதித்து பாருங்கள்.


•கால்களை நன்கு கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

•நகங்களை அவ்வப்போது வெட்டவும்

முடிந்த வரை காலணிகளைப் பயன்படுத்தி, பாதங்களை பாதுகாக்கவும்


***

பற்களைப் பராமரித்தல்


முறையான பராமரிப்பின் மூலம் பற்களை நீண்ட நாட்கள் வலிமையோடு வைத்துக்கொள்ளலாம்.


பல் துலக்குதல் :


•மிருதுவான இழைகளைக் கொண்ட ப்ரஷ்களைப் பயன்படுத்தவும்.

•ஒரு நாளுக்கு, இரண்டு முறை பல் துலக்கவும்.

•பல் துலக்கும் போது, ப்ரஷ்-ன் இழைகளை, பல் மற்றும் ஈறுகளின் மத்தியில் வைத்து, லேசான அசைவினால் சுத்தம் செய்யவும். இவ்வாறு செய்வதின் மூலம், இவ்விடங்களில் இருக்கும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன.

•நாக்கு, கன்னத்தின் உட்புறம் மற்றும் பற்களின் உணவு அறைக்கும் பகுதிகளை லேசான அசைவினால் சுத்தம் செய்யவும்.

•பல் துலக்க பயன்படுத்தப்படும் ப்ரஷ்-ன் இழை நுனியில் பாக்டீரியாக்கள் வளர்கின்றன. சர்க்கரை நோயாளிகள், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பயன்படுத்தும் ப்ரஷ்-யை மாற்ற வேண்டும்.

•ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்னர் பற்களில் படியும் அழுக்கினை சுத்தம் செய்வது (பல் இடுக்குகளில்) பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

*

கீழ்க்காண்பவற்றை கண்டறிந்தால் பல்மருத்துவரை அணுகவும்.

•சாப்பிடும்போது அல்லது பல்துலக்கும் போது பல் ஈறுகளிலிருந்து இரத்தம் வந்தால்.

•பல் ஈறுகள் சிவப்பாக மாறினால், வீக்கம் கண்டால், அல்லது மிருதுவாக காணப்பட்டால்.

•பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே அதிக இடைவெளி ஏற்படும் போது .

•பல் ஈறுகளை தொடும்போது பல் ஈறுகளிலிருந்தும் பற்சந்துகளிலிருந்தும் சீழ் வெளிப்பட்டால்.

•பல் அமைப்பில் மாற்றம் எற்பட்டால்.

•துர்நாற்றம் தொடர்ந்து இருந்தால்.


***

கண்களைப் பராமரிப்பது


சர்க்கரை நோய் கண்ட நபருக்கு கேட்டராக்ட் மற்றும் குளுக்கோமா ஏற்படும் வாய்ப்பு மாற்றவர்களை விட இரண்டு மடங்கு அதிகம் உண்டு.

நீண்டகாலமாக அதிகளவு சர்க்கரை இரத்தத்தில் இருந்தால், கண்களில் உள்ள சிறு இரத்தக்குழாய்களில் பாதிப்பினை ஏற்படுத்தி, ரெடினோபதி என்னும் நோயினை ஏற்படுத்தலாம்.

உண்மையில், இந்த ரெடினோபதி சர்க்கரை நோயாளிகளில் பார்வை இழப்பை ஏற்படுத்துகிறது. சர்க்கரை நோய் உள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டால், அந்த நபர் ஒவ்வொரு ஆண்டும் கண்களை முழுமையாக பரிசோதிப்பது அவசியம்.


*

கீழ்க்காண்பவைகளை கண்டறிந்தால் கண் மருத்துவருடன் ஆலோசிக்கவும்.

•புள்ளிகள், அலசலான பார்வை, சிலந்தி வலை போன்று பார்வை சிதைவு, பார்வையின் போது கரும்புள்ளிகள், கண் வலித்தல் மற்றும் கண்கள் தொடர்ந்து சிவந்திருத்தல் போன்ற கண் பார்வை கோளாறுகள்.

•நன்கு அறிந்த பொருட்களை சரியாக பார்க்க முடியாத நிலை, சாலை சிக்னலை சரியாக பார்க்க முடியாத நிலை மற்றும் படிக்க முடியாமல் பிரச்சினை போன்றவை.



***




"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "