...

"வாழ்க வளமுடன்"

25 செப்டம்பர், 2010

தினமும் இரண்டு மிளகு சாப்பிடுங்கள்..!

நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது.ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகி... பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளன என்பதே கசப்பான உண்மை. இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான்.


*ஆதலால், நாம் சரியான உணவுப்பொருட்களை, சரியான விதத்தில் சமைத்து சாப்பிட்டால் நாம் மருத்துவரை அணுக வேண்டிய அவசியமில்லை. முதலில் கீரை வகைகளை பார்க்கலாம்.


*கீரைகளை நீரில் நன்றாக கழுவிவிட்டு சமைக்கவேண்டும். பழங்காலத்தில் இரவில் கீரையை சாப்பிடக்கூடாது என்பார்கள். அதற்கு காரணம் இருந்தது. அதாவது கீரைகளில் சிறுசிறு பூச்சிகள் அதிகம். இரவு என்றால் நமக்கு தெரியாது என்பதால் அப்படி சொன்னார்கள். கீரைகள் அனைத்துமே ரத்த விருத்தியை உண்டாக்கும்.


*தூதுவளை கீரையை சாப்பிட்டால் இருமல், சளி மாறும். அகத்திக்கீரையை சாப்பிட்டால் கடுப்பு மாறும். கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டால் சுக்ல விருத்தி உண்டாகும். கரி சலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் கண்களுக்கு பலம் கிடைக்கும். சிறுகீரை சாப்பிட்டால் கண்புகைச்சல் குறையும். புதினா சாப்பிட்டால் பசியை தூண்டும். கீழா நெல்லியை சாப்பிட்டால் மஞ்சள் காமாலை நோய் மறையும்.


*இதேபோல் பால் மற்றும் பால் பொருட்களும் நமது உடலுக்கு பலவிதத்தில் பலன் தருகின்றன. பசும்பால் தாதுக்கள் மற்றும் ஆண்மையை அதிகரிக்கும். எருமைப்பால் புத்தியை மந்தம் அடையச்செய்யும். ஆட்டின் பால் சாப்பிட்டால் ரத்தப்போக்கு நோய்கள் குறையும். மோர் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். வெண்ணை ஆண்மையை பெருக்கும். நெய் சாப்பிட்டால் புத்தி, ஞாபக சக்தி, ஆயுள் ஆகியவை அதிகரிக்கும். கரும்புச்சாறு ஆண்மையை உண்டாக்கும். தேன் கண்களுக்கு நல்லது. நல்லெண்ணை குளிர்த் தன்மை உடையது.


*நீர் மனிதனுக்கு இன்றியமையாதது. கொதிக்க வைத்து ஆறிய நீர் மிகவும் நல்லது. குழந்தைகள், வாதநோயாளிகள், பத்தியமுள்ளவர்களுக்கு புழுங்கல் அரிசி நல்லது. அவல் பலத்தை அதிகரிக்கும். கோதுமை ஆண்மையை பெருக்கும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. சீதக்காய்ச் சலுக்கு சிறந்தது. சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். எள் எலும்புகளுக்கு பலம் தரும். கூந்தலுக்கு வலுவை தரும். இதை சாப்பிட்ட பின் குளிர்ந்த நீரை அருந்த வேண்டும்.


*உளுந்து உணவுப் பொருட்களில் சிறந்தது. ஆண்மையை பெருக்கும். பெண்களுக்கு இடுப்புக்கு வலிமை கொடுக்கும். மாதவிலக்கை சீராக்கும். இதை சாப்பிட்டால் உடல் பருக்கும். அதேபோல் சவ்வரிசியும் சுக்லத்தை அதிகரிக்கும்.


*பயறு வகைகள் உடலுக்கு நல்லது. தானியங்களில் பயறு சிறந்தது. பாசிப்பயறு நோயாளிகளுக்கு நல்லது. வேர்க்கடலையை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் உடல் வளரும், ஆண்மை உண்டாகும். பாதாம் பருப்பு உடலுக்கு புஷ்டியை தந்து, ஆண்மையைப் பெருக்கும். பெருஞ்சீரகம் பசியைத் தூண்டி, வயிற்று நோயை அகற்றும். பெருங்காயம் தேக வாயுவை குறைத்து, வயிற்று நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகவும் அமைகிறது. மஞ்சள் ரத்ததை சுத்திகரிக்கும். புண்களை ஆற்றும். மிளகு இருமல், சளியை குறைக்கும். தினமும் இரண்டு மிளகை சாப்பிட்டால் இருதயநோய் வராது.


*சேனைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால் ரத்தமில்லா மூலம் குணமாகும். இஞ்சி வயிற்றை சுத்தம் செய்யும். கத்திரிப் பிஞ்சு வயிற்று வலிக்கு நல்லது. கோவைக்காயை சமைத்து சாப்பிட்டால் வாய்ப்புண் மறையும். அதேபோல் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமாகும். தேங்காய் குளிர்ச்சித்தன்மை உடையது. தோல் நோய்களைக் குணமாக்கும் சக்தி உண்டு. வெள்ளரிப்பிஞ்சு உடலுக்கு மிகவும் நல்லது. வாழையின் அனைத்துப் பகுதிகளும் நமக்கு பயன்படுகின்றன. வாழைப்பூ ரத்த மூலத்திற்கு சிறந்தது. வாழைப்பிஞ்சு சர்க்கரை நோய்க்கு நல்லது. அனைத்து வகை காய்கறிகளும் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

***
நன்றி மாலைமலர்.
***

"வாழ்க வளமுடன்"

லேப் டாப், நெட்புக் அல்லது ஸ்மார்ட் போன்

பெர்சனல் கம்ப்யூட்டிங் உலகம் மாறி வருகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் விற்பனை அறிக்கைகளை வைத்துப் பார்க்கையில், டெஸ்க் டாப் விற்பனை பின்னுக்குச் செல்கிறது.லேப்டாப் அதன் இடத்தைப் பிடித்துள்ளது. கம்ப்யூட்டர் என்றால் அது லேப்டாப் தான் என்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

*

இதே வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விற்பனையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எடுத்துச் செல்ல எளிதாக இருப்பதாலும், விலை குறைந்து இருப்பதாலும், கம்ப்யூட்டர் செயல்பாட்டு எதிர்பார்ப்பில் சிலவற்றை தியாகம் செய்து, மக்கள் நெட்புக் கம்ப்யூட்டரினைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர்.

*


இவை எல்லாவற்றைக் காட்டிலும், இவற்றின் இடத்தை ஸ்மார்ட் போன்கள் பிடித்து வருகின்றன. இவற்றின் இயக்கம் முற்றிலும் ஒரு கம்ப்யூட்டர் போலவே இருப்பதால், கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

*

அதனாலேயே இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள், பல சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை, ஸ்மார்ட் போனுக்கு இணைவாக உருவாக்கி வெளியிட்டு வருகின்றன.

*

இவற்றைப் பயன்படுத்துபவருக்குப் பணம் செலவானாலும், நேரத்தின் அருமை கருதி, பலரும் ஸ்மார்ட் போன்களைக் கம்ப்யூட்டரின் இடத்தில் பயன்படுத்தத் தொடங்கி வருகின்றனர்.

*


இந்த மூன்று சாதனங்களுக்குமான விற்பனை விலையில் வேறுபாடு அப்படி ஒன்றும் அதிக அளவில் வித்தியாசமானதாக இல்லை என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

*

ஆஹா! இப்படிச் சொன்னால் எப்படி! எதனை நாங்கள் வாங்க வேண்டும் எனப் பட்டியலிட்டால் தானே, ஒரு முடிவு எடுக்க முடியும் என்று எதிர்பார்க்கிறீர்களா! இதோ நம் வேலை அடிப்படையில் இவற்றின் நிறை, குறைகளைப் பார்க்கலாம்.

*

இவை எல்லாமே மொபைல் சாதனங்கள் என்ற அடிப்படையில் வருகின்றன. கைகளில் எடுத்துச் சென்று, எந்த இடத்திலும் நம் கம்ப்யூட்டர் வேலைகளை நாம் மேற்கொள்ள முடியும்.


*


1. நிறுவன, அலுவலக வேலைகள்:

நம் வாழ்க்கைக்கு அடிப்படையாக உள்ள நிறுவன, அலுவலக வேலைகளுக்கு நீங்கள் கம்ப்யூட்டரை மட்டுமே பயன்படுத்துகிறீர்களா!

பெரிய வேர்ட் டாகுமெண்ட், எக்ஸெல் ஒர்க் ஷீட்கள், மல்ட்டிமீடியா காட்சித் தொகுப்புகள், உங்கள் நிறுவனத்திற்கென அமைத்துத் தரப்பட்ட சாப்ட்வேர் புரோகிராம்கள் ஆகியன உங்கள் பணியை நிர்ணயம் செய்கின்றனவா? இந்த சாதனங்கள் உங்களுக்கு எப்படி பயன்படும் என்று பார்க்கலாம்?

இத்தகைய வேலைகளுக்கு ஒரு முழுமையான லேப்டாப்தான் சிறந்த தேர்வாக அமையும். அதிக சக்தியுடன் கூடிய சி.பி.யு., ராம் மெமரி, எந்த சூழ்நிலையிலும் உறுதியாக இருந்து இடர்களைத் தாங்கும் சக்தி லேப்டாப் கம்ப்யூட்டர்களுக்கே உள்ளது.

ஆனால் ஒரு நல்ல பிசினஸ் லேப்டாப், மற்ற இரண்டு சாதனங்களின் விலையைக் காட்டிலும் இரு மடங்காக இருக்கும்.

இந்த வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கொஞ்சம் இடவசதி குறைவான கீ போர்ட், திரை மற்றும் திறன் குறைந்த சிபியு, ராம் மெமரி, அலுவலகப் பயன்பாட்டிற்கு இதனைத் தேர்ந்தெடுக்கத் தடையாய் உள்ளன.

இத்தகைய வேலைகளில் ஈடுபடுவோருக்கு ஸ்மார்ட் போன் ஒன்று நிச்சயம் தேவையாய் இருக்கும். ஆனால் அது லேப்டாப் கம்ப்யூட்டரில் கிடைக்கும் வேகத்தினைத் தருவதில் இன்னும் பின்தங்கியே உள்ளது.

எனவே இந்த பணியில் ஈடுபடுபவர்கள், நல்ல திறன் கொண்ட லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றையும், ஸ்மார்ட் போன் ஒன்றையும் தங்களுக்கென வாங்கிக் கொள்ளலாம்.

*


2. வீடுகளிலும் மாணவர்களிடமும்:

பெரிய அளவில் நிறுவன வேலைகள் இல்லாதவரா? மாணவரா? இந்த இருவகையினரும் வெளியே அலைந்து திரிந்து தங்கள் நாளைக் கழிப்பவர் என்றாலும், ஒரு நிறுவன ஊழியர் அளவிற்குக் கம்ப்யூட்டர் தேவை இருக்காது.

குறிப்பாக மாணவர்களுக்கு நோட்ஸ் எடுக்க, இணையம் பார்க்க, பிரசன்டேஷன் காட்சிகள் அமைக்க, கட்டுரைகளை எழுத எனப் பல கல்வி சார்ந்த வேலைகளைத் தாங்கள் செல்லும் இடங்களிலெல்லாம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இவர்களுக்கு லேப்டாப் கம்ப்யூட்டர் சற்று கனமான தாகவும், புத்தகங்கள் மற்றும் பைகளுடன் தூக்கிச் செல்லச் சற்று சிரமமானதாகவும் இருக்கும். எனவே இவர்கள் நெட்புக் கம்ப்யூட்டரைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதன் திரை, கீ போர்டு இவர்களின் வேலையை அவ்வளவாகப் பாதிக்காது. ஏனென்றால் இவர்களின் பணி சற்றுப் பொறுமையாக மேற்கொள்ளும் வகையில் அமையும். இவர்களுக்கு ஸ்மார்ட் போன் நல்ல துணைவனாக இருந்தாலும், கற்பனை மற்றும் உழைப்பின் அடிப்படையில் அமைக்கப்படும் திட்டங்களுக்கு அது உதவாது.

*


3. இணைய உலா வர:

இணையத்தில் எதனையேனும் திடீர் திடீரெனப் பார்க்க வேண்டியதிருக்கும். யாரேனும் நண்பர் போன் செய்து, உனக்கு ஒரு பைல் அனுப்பி உள்ளேன்.

பார்த்து உடன் பதில் அனுப்பு என்பார். அல்லது இந்த இணைய தளத்தில் புதிதாக ஒன்றின் விலை வந்துள்ளது. வாங்கி மாற்றிவிடலாமா? என்பார்.

அப்போது நீங்கள் வீட்டில் இருந்து வெளியே இருக்கலாம். இணையத் தொடர்பிற்கென லேப் டாப் கம்ப்யூட்டரைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியுமா? இணைய உலா மேற்கொள்ள, நெட்புக் கம்ப்யூட்டர்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் கொண்டதாக அமையும்.

ஆனால் ஸ்மார்ட் போன்கள், நெட்புக் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் கூடுதலாகப் பயன்களைத் தரும். இவை எப்போதும் இணையத் தொடர்பினை மேற்கொள்ளத் தயாராய் இருக்கும். எனவே இதற்கு ஸ்மார்ட் போன் தான் சிறந்தது.

*


4.சமுதாயத் தளங்கள் தொடர்பு:

சோஷியல் நெட்வொர்க் என்னும் இணையத் தொடர்புகளை மேற்கொள்வது, தற்போது பெரும்பாலோரால் மேற்கொள்ளப்படும் தொடர் நிகழ்வாக மாறிவிட்டது.

தங்கள் நண்பர்களுடனும், உறவினர்களுடனும் எப்போதும் தொடர்பில் இருந்து கொண்டு, நிகழ்வுகளை அவ்வப்போது மேம்படுத்த, இந்த சமுதாய தளங்கள் உதவுகின்றன.

இந்த வகையில் ட்விட்டர், பேஸ்புக், லிங்க்டு இன் மற்றும் போர் ஸ்குயர் போன்ற தளங்கள் இயங்குகின்றன. இதற்கு மிகவும் உதவுவதும் பயன்படுவதும் ஸ்மார்ட் போன்களாகும்.

லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விரைவாக விரித்து இயக்குவதில் இதில் பின்வாங்குகின்றன. ஆனால் போட்டோக்களை அனுப்ப, அவற்றை எடிட் செய்திட, ரியல் டைம் சேட் செய்திட, ஸ்மார்ட் போன்களைக் காட்டிலும் நெட்புக் கம்ப்யூட்டர்களே கை கொடுக்கின்றன.

எனவே இந்த தேவைகளுக்கும் நெட்புக் கம்ப்யூட்டர்களே நமக்குச் சிறந்த சாதனமாக உள்ளன.

மேலே கூறப்பட்ட தேவைகள் அனைத்துமே பலருக்கு இருக்கலாம்.

*

எந்த வகை தேவைகள் அடிக்கடி மேற்கொள்ளப்பட வேண்டும் எனக் கணக்கிட்டு அதற்கான சாதனத்தை வாங்குவதே சிறந்தது.

***
நன்றி உங்களுக்காக.
***

"வாழ்க வளமுடன்"

திருமண மண்டப வாயிலில் ஏன் வாழை மரங்கள்?

விழாக்களின் போது, வாயிலில் வாழை மரத்தினைக் கட்டுவது, தமிழர் வழக்கம். வீடுகளிலும் ஆலயங்களிலும் திருமண மண்டபங்களிலும் தொழிலகங்களிலும் இன்னும் விழாக்கள் நிகழ்கிற எல்லா இடங்களிலும் இது முக்கிய பங்கினை வகிக்கிறது.திருமணம் நிகழ்கிற இடங்களில், கன்றுகள் ஈன்று, குலை தள்ளிய வாழையினைக் கட்டுவது, ஒரு குறியீடாகக் கருதப் பெற்றிருக்கலாம்.

*

இந்த வாழையினைப் போன்று, மணமக்களும் பிள்ளைகள் பெற்று, வாழையடி வாழையாக வாழ்வாங்கு வாழட்டும் என்ற வாழ்த்தாகவும் அது இருக்கலாம். நாளடைவில் இந்த வழக்கம், திருமணத்தினைத் தாண்டி, அனைத்துச் சுப நிகழ்ச்சிகளுக்குமாக நீண்டிருக்கலாம்.

*


குலை தள்ளிய வாழையினை கட்ட வேண்டும் என்ற மரபினை மீறி, ஆயுத பூஜையின் போது, இரு சக்கர வாகனங்கள், மகிழுந்து, பொதியுந்து.... உள்ளிட்ட வாகனங்களின் முகப்புகளின் வாழைக் குருத்துகளைக் கட்டி வைக்கிறார்கள்.

*

இது, முன்னோரின் நோக்கத்திற்கு மாறானது. இத்தகைய செயல், வாழையை வெறும் அலங்காரப் பொருளாக மாற்றிவிடுகிறது.

*


வீடுகள், தொழிலகங்களில் எப்போதாவது ஒரு முறைதான் விழா நிகழ்கிறது. ஆனால், திருமண மண்டபங்களில் நாள்தோறும் விழாக்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கே நாள்தோறும் புதிதாக வாழை மரங்களை வெட்டிக்கொண்டு வந்து கட்டி வைக்கிறார்கள்.

*

முதல் நாள் கட்டப்பெற்ற வாழை மரமானது, அடுத்த நாள் ஒரு குப்பையாக வீசப்படுகிறது. பெரும்பாலும் தெருவில் திரியும் மாடுகள், அவற்றின் இலைகளைத் தின்னுகின்றன.

*


இந்த வாழை மரங்களை அவை வளர்ந்த இடத்திலிருந்து வெட்டி, திருமண மண்டபத்திற்குக் கொண்டு வரும் காட்சியை நீங்கள் பல சமயங்களில் பார்த்திருக்கலாம். டிரை சைக்கிள் எனப்படும் மூன்று சக்கர மிதிவண்டிகளில் படுக்கை வாட்டில் வைத்துக் கட்டப்படும்.

*

வாழையிலைகள் கொண்ட தலைப்பகுதி, வண்டியை விட்டு வெளியில் தொங்கிக்கொண்டிருக்கும். அவை தரையில் தேய்ந்தபடி, புழுதியில் புரண்டபடி, அலங்கோலமாக வந்து சேரும்.

*

பிறகு, அவற்றைத் தூக்கிக் கட்டி, தண்ணீர் தெளித்து விடுவார்கள். இப்படித்தான் அந்த மங்கலச் சின்னம், எல்லோரையும் வரவேற்க வருகிறது.

*


வாயிலில் துவார பாலகர்களைப் போல நிற்கும் இவை, எவ்வளவு ரணங்களைத் தம்முள் கொண்டிருக்கும் என எளிதில் கணிக்கலாம். கால் வெட்டப்பட்டு, உடல் கட்டப்பட்டு, இலை கிழிந்து நிற்கிற இவை, ஒரு சடங்காக அன்றோ மாறிவிட்டன?

இதற்கு மாற்று வழி என்ன எனச் சிந்தித்தபோது, இந்த யோசனை பிறந்தது.

*


திருமண மண்டபங்களின் வெளியே, முதன்மை வாயிற் கதவின் ஓரத்தி்ல், நிலையாக இரண்டு வாழை மரங்களை நட்டு வளர்த்து விடலாமே! அவை எல்லா நாட்களிலும் மங்கலச் சின்னமாகத் திகழுமே! தன் கன்றுகளோடு அவை மகிழ்ந்து சிரிக்குமே! இதன் மூலம் அவற்றுக்கு விலை தந்து, வெட்டி, தரதரவென இழுத்துவந்து, வாயிலில் கட்டும் கொடுமையும் நிகழாது; அதற்கென நேரமும் பணமும் உழைப்பும் செலவிடவும் வேண்டாமே!

*


மாடுகள் வந்து தின்னாவண்ணம், ஒரு வேலியிட்டால் போதும். வாசல் தெளித்துக் கோலம் போடும்போதே, அதற்கும் சிறிது நீர் வார்த்தால் போதும்.

*

அல்லது, மண்டபத்தின் கால்-கை கழுவும் தண்ணீரையும் அவற்றில் சேரச் செய்யலாம். இதன் மூலம், கழிவு நீரை அப்புறப்படுத்தும் செலவிலும் சிறிது குறையும்.

*

முற்றிய பிறகு அந்த மரத்தின் இலை, பழம், நார்... என அனைத்தையும் மண்டபத்தினரே பயன்படுத்திக்கொள்ளலாம்.


***

நன்றி: சென்னை லைவ் நியூஸ்

***

"வாழ்க வளமுடன்"

மஞ்சள், மிளகுப்பாலின் மகத்துவமும்

`இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ – இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.பழம்பெருசுகள் இதுபோல பேசுகிறார்களே என்று சாதாரணமாக அவர்களை எடைபோட்டு விட முடியாது. சவடால் பேச்சுக்கு ஏற்ப அவர்களிடம் விஷயமும் இருக்கும்.


இப்படித்தான் ஒரு நண்பர் வேலை நிமித்தமாக நிறைய ஊர்களுக்குச் சென்று விட்டு, கடைசியாக திருநெல்வேலி பக்கமுள்ள கடையத்திற்குச் சென்றுள்ளார்.


பல்வேறு ஊர்களில் சுற்றித் திரிந்த களைப்பு, ஆங்காங்கே குடித்த தண்ணீர் என இருமல், சளி என்று மாட்டிக்கொண்டார்.


கடையத்தில் அவர் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டு திண்ணையில் இருந்த பெரியவர் ஒருவர், நண்பரின் இருமல் சத்தம் கேட்டு அவரை அழைத்தார்.


“என்ன தம்பி, இப்படி இருமுறீக… என்ன உங்களுக்கு உடம்புக்கு…?”


“ஒண்ணுமில்ல, தாத்தா. அங்கங்க சுத்துனது ஒத்துக்கல. அதான் இருமல் அதிகமாயிடுச்சி”


“அவ்வளவுதானே, பக்கத்துல இருக்கற பால் கடையில போய், மஞ்சள், மிளகுத்தூள் போட்டு ஒரு பால குடிச்சிட்டு வாங்க. எல்லாம் சரியாப் போயிடும்” – என்றார் பெரியவர்.


அதேபோல் நண்பரும், மிளகுப் பொடி, மஞ்சள் தூள் கலந்து ஒரு 200 மி.லி. அளவு பாலை குடித்து விட்டு அன்று நிம்மதியாகத் தூங்கியுள்ளார். அடுத்த நாளே நல்ல பலன் தெரிந்ததாகக் கூறி, புளகாங்கிதம் அடைந்தார் அவர்.

*


விஷயத்துக்கு வருவோம்.

1. நாள்பட்ட சளி, இருமலுக்கு அருமருந்து மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் என்றால் மிகையாகாது.


2,. அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும்.


3. இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.


4. மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான்.


5. பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.


6. அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது.


7. மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.


***

நன்றி அஜீஸ் அஹ்மத்
****

"வாழ்க வளமுடன்"


நமக்கு உடலில் விட்டமின் ‘ஏ’ சத்து அதிகரிக்க!

என் பத்து வயது பையன் நோஞ்சானாக இருக்கிறான்.​ டாக்டர்,​​ மீன் எண்ணெய் கேப்ஸ்யூல் சாப்பிட்டால் உடல் நல்ல வனப்புடன் ஆகிவிடும் என்றார்.​ ​ ஆனால் அவனுக்கு அது செரிக்காமல் பசி மந்தம் ஏற்படுகிறது.​ இதற்கு மாற்றாக ஆயுர்வேத மருந்து ஏதும் இருக்கிறதா?​ விட்டமின் ஏ சத்து அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

உங்களுடைய மகனுக்கு வயிறு மந்தமாக இருக்கிறது.​ அதனால் கொழுப்புமிக்க மீன் எண்ணெய் செரிக்கவில்லை.​

*

இதற்கு மாற்றாக ஆட்டுப்பால்,​​ பசும்பால்,​​ பசுவின் தயிர்,​​ வெண்ணெய்,​​ வெந்தயம் இவற்றை உணவாகக் கொடுக்கலாம்.​

*

பசி மந்தம் நீங்கினால்தான் இவற்றில் உள்ள சத்து உடலில் சேரும்.​

*

அதற்குச் சிறந்த வழி கொத்தமல்லி துவையல் அல்லது கறிவேப்பிலைத் துவையல் செய்து சூடான சாதத்துடன் கலந்து,​​ ​ சிறிது நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும்.​

*

அதற்கு மேல் ​ நன்றாகக் கடைந்து வெண்ணெய் நீக்கிய மோர் குடிக்கக் கொடுக்கவும்.​ இதைக் காலை உணவாக சிறிது நாட்கள் தொடர்ந்து கொடுத்து வர,​​ பசித்தீ மளமளவென வளரும்.​

***

ஒருசில உணவில் உள்ள யூனிட் விட்டமின்:


1. மேலும் கொத்தமல்லியும்,​​ கறிவேப்பிலையும் மீன் எண்ணெய்க்குச் சற்றும் குறைந்தவை அல்ல.​

*

2, 100 கிராம் மீன் எண்ணெய்யில் சுமார் 50,000 யூனிட் விட்டமின் ஏ கணிசமாக உள்ளது எனக் கூறுகின்றனர்.​

*

3, அதேபோல பச்சைக் கொத்தமல்லி இலையில் சுமார் 12,500 யூனிட்டும்,

*​​

4. பச்சைக் கர்ரிவீப்பிலையில் 12,500 யூனிட்டும்,

*​​

5. முருங்கைக்கீரையில் 11,500 யூனிட்டும்,​​

*

6. அகத்திக்கீரையில் 10,000 யூனிட்டும்,​​

*

7. முளைக்கீரை,​​ அரைக்கீரை,​​ வெற்றிலை ஆகியவற்றில் 10,000 யூனிட்டும் விட்டமின் ஏ கணிச விகிதத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.​

*

8. 5,000 யூனிட் வேப்பிலைக் கொழுந்துவிலும்,​​ பசலைக்கீரை மற்றும் வெந்தயக் கீரையில் 4,000 யூனிட்டும் விட்டமின் ஏ இருப்பதாகத் தெரிகிறது.
*
இவை அனைத்தும் உடலுக்கு ஒரு தொந்தரவும் செய்வதில்லை.​

**

அழகாக சமைத்து ஒரு கிண்ணத்தில் ஸ்பூன் போட்டு வைத்துவிட்டால் பார்ப்பதற்குத்தான் எத்தனை அழகு!​ மனதிற்கு எத்தனை இன்பத்தைத் தருகின்றன!​

*

எத்தனை விரைவில் செரித்து பசியைத் தூண்டுகின்றன!​ எந்தப் போஷகச் சத்தையும் உடல்தானே ஏற்றுக்கொள்ளும் சக்தியை இவை மூலம் பெறுவதால் உங்கள் மகன் விரைவில் நோஞ்சான் நிலையிலிருந்து மீண்டு,​​ குண்டாக அழகாக கொழுகொழு குழந்தையாகக் காட்டலாம்.


*


உணவுச் சத்து இடைவிடாமல் சேர்வதால் உடல் புஷ்டிதானே ஏற்படும்.​ அடிக்கடி காய்ச்சல்,​​ சளி முதலிய நோய்களும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.​

*

அதற்கு எண்ணெய்க் குளியலைத் தவறாமல் அமைத்துக் கொள்ள வேண்டும்.​ உங்களுடைய மகனுக்கு ஒரு சில ஆயுர்வேத மூலிகைத் தைலங்கள் புஷ்டியைத் தரக்கூடும்.​

*

லாக்ஷதி தைலம்,​​ சந்தன பலாலாக்ஷôதி தைலம்,​​ அச்வகந்தி பலாலாக்ஷôதி தைலம் முதலியவை இந்நிலையில் ஏற்ற எண்ணெய் தேய்ப்புத் தைலங்கள் ஆகும்.


*


ஆக,​ ​ உள்ளுக்கு விட்டமின் ஏ சத்து நிறைந்த அதே சமயத்தில் ஜீர்ணகோச உறுப்புகளின் சக்தியையும் தூண்ட உதவும் கொத்தமல்லி,​​ கறிவேப்பிலைத் துவையல் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலமாகவும்,​​ மேலுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும்,​​ உடலில் சுறுசுறுப்படைந்த பசித்தீ,​​ கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.​

*

எதையும் செரிக்கும் அளவிற்கு அது வளர்ந்துவிட்டால்,​​ தினமும் காலைச் சிற்றுண்டியுடன் இரண்டு உளுந்து வடையை,​​ நடுவே ஓட்டை போடாமல்!​ பசு நெய்யில் பொரித்துச் சாப்பிடக் கொடுக்கவும்.​

*

உடல் வனப்பு நன்றாகக் கூடும்.​ அதன் பிறகு ஆயுர்வேத லேஹிய மருந்துகளாகிய கூஷ்மாண்டரஸôயனம்,​​ அமிருதப்ராசம்,​​ சியவனப்ராசம்,​​ பிராம்ஹ ரஸôயனம் போன்றவற்றில் ஒன்றை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப்படி சாப்பிடக் கொடுக்கவும்.


***

நன்றி தினமணி!

***

"வாழ்க வளமுடன்"

நூடுல்ஸ் விரும்பிகளே உஷார்!!!!

நூடுல்ஸ் விரும்பிகளே ஒரே ஒரு நிமிஷம்!!!!

நூடுல்ஸ் விரும்பிகளே கொஞ்சம் கவனமா சமையுங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்…

*


நாம பொதுவா அடுப்புல கடாயைப் போட்டு, அதில் எண்ணெயை விட்டு, எண்ணெய் சூடானவுடன் வெட்டிய காய்களைப் போட்டு நன்றாக வதங்கியவுடன் அதில் நீரையும் பாக்கெட் மசாலாவையும் சேர்த்து, கொதித்தவுடன் நுடுல்சைப் போட்டு வேக வைத்து 2 நிமிடத்திகுள் (சுத்தப் பொய்!!!) சமைத்து விடுகிறோம்.

*


இப்போது விஷயத்திற்கு வருகிறேன். இந்த நுடுல்சின் புறப்பகுதியில் ஒரு மெழுகுக் கோட்டிங் (wax ) உள்ளதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். இது எளிதில் ஜீரணமாகாத கொழுப்புப் பொருள்.

*

நம் வயிற்றுக்குள் செல்லும் இந்த மெழுகு உடலில் இருந்து வெளியேற சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் ஆகின்றன.


எந்த ஒரு பொருளும் நான்கு நாட்கள் வயிற்றில் தங்குவது வயிற்றுக்குத் தீங்கையே விளைவிக்கும். இதற்காக நூடுல்ஸ் சாப்பிடுவதை அடியோடு தவிர்க்கவா முடியும். அது அவசியமும் இல்லை.

*


தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் நூடுல்சை மட்டும் போட்டு வேகவைக்க வேண்டும். நூடுல்ஸ் நன்கு வெந்த பிறகு தண்ணீரை வடிகட்டி கொட்டி விட வேண்டும்


***

என் அருமை தோழி ஆதிரா.
நன்றிஆதிரா.
http://tamilnimidangal.blogspot.com/2010/04/blog-post_08.html .

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "