...

"வாழ்க வளமுடன்"

22 மார்ச், 2010

உயிரினங்களின் பற்றி பொது அறிவு

உயிரினங்களின் விச்சித்திரமன உண்மைகள்:

*


*


1. இறால் மீனுக்கு இதயம் அதன் தலையில் உள்ளது.

*

2. கடலில் வாழும் நட்சத்திர மீன்களின் உடலில் மூளை என்ற பகுதி கிடையாது.


*

3. நம்மால் இரண்டு கண்களிலும் ஒரே காட்சியைத்தான் காண முடியும். ஆனால் ஓணான்களால் இரண்டு கண்ணில் இரண்டு வெவ்வேறு காட்சிகளைக் காண முடியும்.

*

4. வெட்டுக் கிளிக்கு காதுகள் காலில் உள்ளன. நண்டுகளுக்குப் பற்கள் வயிற்றில் உள்ளன.

*


5. உலகில் எல்லா பிராணிகளும் முன் பகக்கமாகவே நடக்கும். ஆனால் நண்டு மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.

*


6. உல‌கி‌ல் ‌கி‌ட்ட‌த்த‌ட்ட இருபதா‌யிர‌ம் வகை ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் உ‌ள்ளன.பெ‌ண் ப‌ட்டா‌ம்பூ‌ச்‌சிக‌ள் மு‌ட்டை‌யி‌ட்ட உடனே இற‌ந்து‌விடு‌ம்.

*


7. உல‌கி‌ல் இரு‌க்கு‌ம் உ‌‌யி‌ரின‌ங்க‌ளி‌ல் அ‌திக வகைகளை‌க் கொ‌ண்டது ‌மீ‌ன்க‌ள்தா‌ன்.ந‌ண்டுக‌ள் கு‌ட்டிகளை ஈ‌ன்றதுமே இற‌ந்து ‌விடு‌ம். இதனா‌ல் தா‌ய் ந‌ண்டு எ‌ன்ற ஒ‌ன்று இரு‌க்காது.

*


8. உல‌கி‌ல் வாழு‌ம் ‌வில‌ங்குக‌‌ளிலேயே ‌மிக‌ப்பெ‌ரியது ‌நீல‌த்‌தி‌மி‌ங்கல‌ம். இத‌ன் உட‌ம்‌பி‌லிரு‌ந்து 120 பேர‌ல்க‌ள் வரை எ‌ண்ணெ‌ய் எடு‌க்‌கிறா‌ர்க‌ள்.

*


9. சீனா‌வி‌ல்தா‌ன் முத‌ன் முத‌லி‌ல் த‌ங்க ‌மீ‌ன் காண‌ப்ப‌ட்டது.

*


10. அ‌ழி‌வி‌ன் ‌வி‌ளி‌ம்‌பி‌ல் ‌நி‌ற்கு‌ம் உ‌யி‌ரினமாக‌க் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டிரு‌ப்பது இ‌ந்‌திய கா‌ண்டா‌மிருக‌ம்.

***

நன்றி ஈகரை.

www.eegarai.net

***

***

படித்ததில் பிடித்தது ( பொது அறிவு )

நான் படித்து, ரசித்து, சிந்தித்து தெரிந்துக் கொண்டது சில‌. ஆம்! " கற்றது கை அளவு கால்லாதது உலகளவு"

*


1. கணித மேதை ராமானுஜம் 33 ஆண்டு காலமே உயிர் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலம் 1887 முதல் 1920-ம் ஆண்டு வரை.

*

2. உலகப் புகழ்பெற்ற கிரேக்க வீரர் அலெக்சாண்டர் 33 ஆண்டுகளே உயிர் வாழ்ந்தார். அவரது காலம் கி.மு. 323 முதல் கி.மு. 356 முடியவாகும்.


*

3. சிலுவையில் அறையபட்டு உயிர் நீத்த போது இயேசு கிறிஸ்துவின் வயதும் முப்பத்து மூன்றுதான்.

*

4. மூன்று மூல நிறங்கள் என்பன சிவப்பு, மஞ்சள், நீலம்.

*

5. மனிதனுக்கு 12 ஜோடி விலா எலும்புகள் உள்ளன.

*

6. "வீட்டோ" என்னும் பொருள் நான் தடுக்கிறேன் என்பதாகும்.

*

7. கோரம் என்பது ஒரு லத்தின் மொழிச் சொல். "கோரம்' என்றால் சட்டப்படி ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு போதுமான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருக்க வேண்டும் என்பதாகும்.

*

8. கடல் குதிரையும், ஓணானும் ஒரு கண்ணை அசைக்காமல் மற்ற கண்ணை வேறுபக்கமாக அசைக்கக் கூடியவை.

*

9. "குட் பை' என்னும் சொல் " God be with you' என்ற சொற்களின் சுருக்கம் ஆகும்.

*

10. இந்தியாவின் இரு பாரம்பரிய இசை முறைகள் கர்நாடகம் மற்றும் இந்துஸ்தானி.


*

11. பாம்பாட்டிகள் இசைக்கும் ராகம் "புன்னாக வராளி'.

*

12. இந்திய தேசிய கீதம் சங்கராபரணம் ராகத்தில் இசைக்கப்படுகிறது.

*

13. அமெரிக்க விமானப்படையில் பெண்கள் அதிகளவில் வேலை செய்கின்றனர். ஏறக்குறைய 67 ஆயிரம் பெண்கள் வேலை செய்கின்றனர்.

*

14. மரகதத் தீவு என்று அழைக்கப்படுவது அயர்லாந்து.

*

15. மணமாகாதவர்கள் மீது வழக்குப் போடும் நாடு கிரீஸ்.

*

16. மணமாகாதவர்கள் மீது அதிக வரி போடும் நாடு இத்தாலி.

*

17. மணமாகாதவர்களை சபையில் பேச அனுமதிக்காத நாடு ஆப்பிரிக்கா.

*

பெரிய பெரிய மேதைகளின் அப்பாக்கள்:

*

18. வில்லியம் ஷேக்ஸ்பியர் எனும் உலக இலக்கிய மேதையின் அப்பா குதிரை லாயத்தினை பராமரித்து வருபவராக இருந்துள்ளார்.

*


19. தாமஸ் ஆல்வா எடிசனின் தந்தையோ படகு செய்து வாழ்க்கை நடத்திய ஏழையாக இருந்துள்ளார்.

*


20. பெஞ்சமின் பிராங்ளின் தந்தை மெழுகுவர்த்திகளை வாங்கி விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்துள்ளார்.

*


21. பெரும் ஆட்சியாளராக இருந்த ஹிட்லரின் தந்தை சாதாரண கட்டிட கூலித் தொழிலாளி.

*


22. ஆபிரகாம் லிங்கத்தின் அப்பாவோ சாதாரண கூலித் தொழிலாளியாக இருந்துள்ளார்.

*


23. அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பில் கிளிண்டனின் அப்பா சாதாரண வியாபாரிதான்.

*


24. ஆங்கில அகராசியின் ஆசிரியரான சாமுவேல் ஜான்சனின் தந்தை மிகுந்த வறுமையில் வாழ்ந்து வந்த புத்தக வியாபா‌ரியாவார்.

*


25. மொழிகளைத் தாண்டி உலக மக்களையே சிரிப்பில் ஆழ்த்திய சார்லி சாப்ளின் தந்தை வீட்டு வேலைக்காரராக இருந்துள்ளார்.

***நான் படித்து ரசித்தது போல் உங்கலுக்கும் ரசிக்க முடிந்தால் நான் மகிழ்வேன்!

***

கைத்தொலை பேசி ( மொபைல் ) பற்றி பொது அறிவு

கைப்பேசி இல்லதா வீடும் கையும் இல்லை. ஒரு சிலர் வீட்டில் அது முக்கிய தனித்துவம் ஆகிவிட்டது. ஆனால் அதனை பற்றி நமக்கு என்ன தெரியும்.

***

இதோ தெரிந்து கொள்வோம் வாருங்கள்:

*

a. 1920: இரு வழி ரேடியோ தொடர்பினை அமெரிக்க போலீஸ் தொடங்கி மொபைல் போனுக்கான விதையை ஊன்றியது.

*

b. 1947: ஏ.டி. அண்ட் டி பெல் லேப்ஸ் சிறிய செல்களுடனான நெட்வொர்க்கினை குறைந்த தூரத்தில் இயங்கும் ட்ரான்ஸ்மீட்டர்களுடன் இணைக்கையில் அதிக தூரத்தில் அதனை இயக்க முடியும் என கண்டறிந்தது.

*

c. 1954: காரிலிருந்து முதல் முதலாக வெளியே உள்ள போனை வயர்லெஸ் முறையில் தொடர்பு கொள்ள முடிந்தது.

*

d. 1970: பெரும் செல்வந்தர்களும் பெரிய மனிதர்களும் காரிலிருந்து போன் செய்திட முடிந்தது.

*

e. 1973: மோட்டாரோலா நிறுவனத்தின் டாக்டர் மார்டின் கூப்பர் தெருவில் நடந்து செல்கையிலும் வயர்லெஸ் இணைப்பு இன்றி தொலைபேசியுடன் தொடர்பு கொள்ள முடியும் என்பதனை நிரூபித்தார். அவர் பயன்படுத்தியது மோட்டாரோலா டைனா ஏ.டி.சி.

*


f. 1979: ஜப்பான் டோக்கியோவில் முதல் வர்த்தக ரீதியான செல் போன் பயன்பாடு தொடங்கியது.

*

g. 1983: டாக்டர் மார்டின் கூப்பர் 2,500 பவுண்ட் விலையில் முதல் மோட்டாராலோ டைனா ஏ.டி.சி. 8000 எக்ஸ் என்னும் மொபைல் போனை வர்த்தக ரீதியாகக் கொண்டு வந்தார்.

*

h. 1984: விலை அதிகம் இருந்த போதிலும் ஏறத்தாழ 3 லட்சம் பேர் உலகம் முழுவதும் மொபைல் போனைப் பயன்படுத்தினார்கள்.

*

i. 1989: மோட்டாரோலா மைக்ரோ டாக் போன் என்னும் முழுமையான மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.

*

j. 1990: 2ஜி தொழில் நுட்பமும் அதில் இயங்கும் ஜி.எஸ்.எம். டிஜிட்டல் மொபைல் போனும் புழக்கத்திற்கு வந்தது. அமெரிக்காவில் ட்ரெயினில் ஏறிய ஒருவர் வெகு தொலைவில் இருந்த இன்னொருவருக்கு தான் ட்ரெயினில் ஏறி பிரயாணம் தொடங்கியதைக் கூறியதுதான் முதல் டிஜிட்டல் மொபைல் செய்தி என அறிவிக்கப்பட்டது.

*

k. 1991: அமெரிக்க சகோதரர்களைப் பின்பற்றி ஐரோப்பிய மக்களும் தங்களுடைய ஜி.எஸ்.எம். நெட்வொர்க்கைத் தொடங்கினர். தட்டையான, எடை குறைந்த சிறிய பேட்டரிகளில் இயங்கும் மொபைல் போன்கள் வரத் தொடங்கின.

*

l. 1992: மிகப் பிரபலமான கேண்டி பார் அமைப்பிலான நோக்கியா போன் அறிமுகம். இதனை கைகளில் எடுத்துச் செல்வது பேஷனாகியது.

*

m. 1996: மோட்டாரோலா ஸ்டார் டேக் என்னும் முதல் சிறிய கிளாம் ஷெல் மொபைல் அறிமுகம். பின்னால் இந்த போன் 20 ஆம் நூற்றாண்டின் 50 சிறந்த பயனுள்ள சாதனங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

*

n. 1997: எரிக்சன் ஆர்380 அறிமுகமானது.

*

o. 2000: இந்தியாவில் இன்னும் இழுபறியில் இருக்கும் 3ஜி தொழில் நுட்பம் மற்றும் சார்ந்த நெட்வொர்க் மேல் நாடுகளில் அறிமுகமானது. இதனால் பெரிய அளவில் டேட்டா, மொபைல் போன் மூலம் பரிமாறிக் கொள்ளப்பட்டது. ஒருவருக்கொருவர் ஸ்கிரீனில் பார்த்துக் கொண்டே பேசும் முறை தொடங்கியது.

*

p. 2001: வண்ணத் திரை கொண்ட முதல் மொபைல் போன் சோனி எரிக்சன் டி 68 அறிமுகமானது. 256 வண்ணங்களில் அசத்தியது. ஆனால் விரைவில் டி.சி.சி. க்யூ 285 ட்ரைபேண்ட் போன் 4,096 வண்ணங்களுடன் அதனைத் தூக்கி அடித்தது.

*


q. 2002: டை அனதர் டே என்னும் திரைப்படத்தில் பாண்ட் என்னும் கதாபாத்திரம் சோனி எரிக்சன் பி 800 என்னும் மொபைல் போனைப் பயன்படுத்தி போட்டோ எடுத்தது.


*

r. 2004: மொபைல் போனில் பயன்படுத்தும் ரிங் டோன் விற்பனை 250 கோடி டாலரை எட்டி இப்படியும் ஒரு வியாபாரமா என வியக்க வைத்தது.

*

s. 2006: மீண்டும் பாண்ட் படத்தில் சோனி எரிக்சன் கே 800ஐ அறிமுகமாகி மக்களைக் கவர்ந்தது.

*

t. 2007: ஏறத்தாழ 130 கோடி பேர் உலகெங்கும் மொபைல் போனைப் பயன்படுத்துகின்றனர். இது உலக ஜனத்தொகையில் ஐந்தின் ஒரு பங்கு.


***
நன்றி ஈகரை.
***

இது உங்கலுக்கு பயன் உள்ளதாக இருந்தால், இது பற்றி உங்கள் கருத்து!***

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள்

தண்ணீர் பஞ்சத்தின் நிலை இனி வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து கவலை படும்நாம், ஏன் அதை தடுக்க, ஒரு வழியும் ( ஒரு சிலர் ) சொய்ய வில்லை.
நமக்கு இயற்கை கொடுத்திருக்கி நிறைய வளங்களை நாம் சரியான முறையில் தான் பயன் படுத்துகிறோமா! நாம் இயற்க்கையின் மடியில் விளையாடிய‌ ( குழந்தையாக ), அனுஅனுவாக மகிழ்ந்து அனுபவித்த இயற்க்கையை நாம் காத்தோமா!
*
நம் தேவைக்கு மட்டும் நாம் அனுபவித்த அந்த அனுபவம் நம் குழந்தைகலுக்கு வாய் வழியாக மட்டுமே சொல்லும் நிலையில் நாம் இருக்கும் இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது.
*
தற்ப்போது அதிகமாக அடிப்படும் செய்தி தண்ணீர் பஞ்சம். அதுவும் நம் இந்திய திரு நாட்டில் இந்த வளம் ஒரு இடத்தில் வாரி இறைத்து, ஒரு இடத்தில் பஞ்சம் என்று வைத்த இயற்க்கையை என்னவேன்று சொல்ல!
*
முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்கிறோமா? நன்றி சொல்ல விட்டாலும் பரவாயில்லை. ( ஏனெனில் அதற்க்கு கூட நமக்கு அவகாசம் இல்லை என்று காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதனுடன் நாமும் நூல் பிடித்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறோம்.) ஆனால் அந்த வளத்தை நம் குழந்தைக்கலுக்கு விட்டு சொல்கிறோமா? நாம் உபயோகித்த அளவு தண்ணீர் கூட நம் குழந்தைகள் உபயோகிப்பார்களா என்று சிந்தித்தால் எனக்கு தொன்றுவது ஒரு பெரிய‌ கேள்வி குறிதான் எதிர்படுகிறது?
*
இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது. சூற்றுச்சூழல் தான் இதற்க்கு முக்கிய காரணம். இந்த உலகத்தின் மிகப்பெரிய மலை என பெறுமை பட்ட மலை இமயமலை ( எவரஸ்ட்டு ). கம்பீரமாக இருக்கும் இம்மலை தற்ப்போது என்ன ஆகிறது? இனி என்ன ஆகும். நாம் மட்டும் எல்ல வளமும் பெற்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் எண்ணம் நமக்கு ஏன் வந்தது.
*
நாம் வசதியாக இருந்தால் போதும். நம் வீட்டில் எல்லா வசதியும் இருந்தால் போதும் என்று என்னும் எண்ணம் நமக்கு தற்ப்போது மனதில் ஆழமாக பதிந்த வேர். அது வளந்து தான் இந்த நிலையில் நாம் இருக்கிறோம்!
*
இதுப் போல் நம் முன்னோர்கள் எண்ணி இருந்தால் நம் நிலை? யோசியிங்கள் மக்களே!
*
தண்ணீர் வாழ்க்கையில் இன்றி அமையாத நிலை என்று ஆகிவிட்ட‌து. இனி அதை காக்கா நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் அந்த இயற்கை வளத்தை காத்து நம் குழந்தைகள், நம் சந்ததிகள் என்று விட்டு சொல்ல நாம் சில மிக சில விஷயத்தை கையாளலாம்.
*
நாம் தண்ணீரை அதிகம் பயன் படுத்தியே பழகி விட்டதால் அதை திடீர் என்று குறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தும் அதை குறைக்க சில வழிகள்!
***
தண்ணீரை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்:
*
1. எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம்.
*
2. தண்ணீரை சேமிக்க நாம் நம் குழந்தைகளுக்கு கத்துக்குடுக்கனும்.
*
3. குழந்தைகளுக்கு நம் இயற்க்கையின் அருமையை சொல்லி குடுங்கள்.
*
4. நாம் செய்யும் செயல் தான் குழந்தைகள் பின் பற்றுவார்கள். அதனால் சிறு குழந்தை தான என்று நாம் பிள்ளைகள் தண்ணீரில் விளையாட விட்டு ரசிப்பது, அவர்களையும் நாம் ஊக்குவிகுவது போல் ஆகும். அதை செய்ய விடக்கூடாது.
*
5. நாம் குழாயை சிறிதாக திற‌ந்து உபயோகிக்களாம்.
*

6. என்னதான் நாம் தண்ணீருக்கு காசு குடுத்தாலும் நம் தேவைக்கு மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும்.
*

7. செடிக்கு சொட்டு நீர் பாசணம் முறையில் நாம் நீர் விட்டால் செடியும் வாடாது. நமக்கு நீர் மீச்சம்.
*

8. வீட்டில் த‌ண்ணீர் தொட்டி நிற‌ம்பி தண்ணீர் கீழே போனால் அதை உட‌னே த‌டுக்க‌ வ‌ழி பாருங்க‌ள். ( எது எதுக்கே யோசிப்போம் இத‌ற்க்கும் யோசித்து முடிவு எடுப்போம் )
*

9. தண்ணீர் கீழே விழும் இட‌த்தில் ஒரு சின்ன‌ தொட்டி க‌ட்டி அதை செடிக‌ளுக்கும், தொட்ட‌துக்கும் அனுப்பும் ப‌டி செய்யுங்க‌ள்.
*

10. வாஷின் மிஷினில் போட்டு துணி துவைக்கும் நாம் அந்த அழுக்கு தண்ணீரை ( இரண்டாவதாக அல்லது முதலாவதகா துணி அலசும் தண்ணீர் ) பிடித்து டாயிலோட்டில் விலாஷ் ப‌ண்ணும் தொட்டியில் ஊற்ற‌லாம்.
*

11. அதே த‌ண்ணீரை வாச‌லில் க‌ழுவ‌ ஊற்ற‌லாம். பிற‌கு ந‌ல்ல‌ த‌ண்ணீர் ஊற்றி க‌ழுவ‌லாம்.
*
12. ஏசியை குறைவாக உபயோகிப்பதால் நாம் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம். ( இது பற்றி எனக்கு சரியாக தெரியலை. இருந்தும் இது சுற்றூ சூழலுக்கு நல்லது )
*

13. குடி நீரையும் நாம் பிடிக்கும் போது அடுத்த குடம் அல்லது வாலி வைக்கும் போது குழாய்யை முடி அல்லது சிறிது நீர் கீழே விட்டு பிடிக்கலாம். ( ஏனெனில் குழாய் மூடிவிட்டால் ஒரு சில இடத்தில் நீர் நின்று விடும் )
*

14. குடிநீர் தொட்டி போல் தான் கட்டாயம் இருக்கும். கீழே விழும் நிறை வீனாக்கமல் செடிக்கு ஊற்றலாம்.

*
15. குளிக்கும் போது கூட நாம் சவரை அல்லது குழாயை முடி பின்பு தேவை எனில் ஓப்பன் பன்னிக்கலாம். நம் வீட்டில் இருக்கும் குழாய்கள் ஒழுகிறதா என்று எப்போதும் பார்த்து சரி செய்யவும்.

***

இன்னும் சில துளிகள்:
*

1. வீட்டில் அனைவரும் கட்டாயம் செடி மற்றும் மரம் வளர்க்கவும்.
*

2. உங்கள் வீட்டில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி இருந்தால் அன்று கட்டாயம் ஒரு செடி நட்டால், கட்டாயம் அதனுடைய பலனை நம் குழந்தைகள் அனுபவிப்பார்கள்.
*

3. வண்டியில் சொல்லும் போது அதில் வரும் புகையை குறைக்க அப்ப அப்ப ( அடிக்கடி ) அதனை சரி செய்து சுற்று சூழலை பாதுகாக்கவும்.
***

இன்னும் நிறைய இருக்கு... சொன்னால் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் இதனை நாம் நம் குழந்தைகலுக்கு சொல்லி குடுத்தால் காட்டாயம் பிள்ளைகள் ஏற்ப்பார்கள்.கட்டாயம் நம் பிள்ளைகள் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் குழந்தை நமக்கு சொல்லிக் குடுக்கும்.
***
இவை நானே எழுதியது.
***
இதை படித்து உங்கள் கருத்து பிலீஸ்.***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "