...

"வாழ்க வளமுடன்"

29 ஜூலை, 2010

தேனின் மருத்துவ குணங்கள்:

தேன் இயற்கை அளித்த, இல்லந்தோறும் இருக்க வேண்டிய உணவு. எழுபது வகையான உடலுக்கு ஏற்ற சத்துகளும், வைட்டமின்களும் தேனில் உண்டு. தேனில் உள்ள சத்துக்கள் சீரான பாதையில் சுலபமாக கிரகிக்கப்பட்டு விடுகிறது.


கண் பார்வைக்கு:

*

தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.

***

இருமலுக்கு:

*

சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பு போன்ற உபாதைகளில் இருந்து நிவாரணம்
கிடைக்கும்.

***


ஆஸ்துமா:


*

அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்




இரத்த கொதிப்பு:
*
ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு டீ கரண்டி தேன் சேர்த்து தினமும் இரு வேளை (காலை & மாலை) சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
***

இரத்த சுத்திகரிப்பு/கொழுப்பு குறைப்பு:
*
ஒரு குவளை மிதமான சூடுள்ள நீரில் ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேனும், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறும் கலந்து தினமும் காலைக்கடன்களுக்கு முன் பருகவும். இது இரத்த சுத்திகரிப்பிற்கும், உடல் கொழுப்பை குறைப்பதற்கும், மற்றும் வயிற்றை சுத்தமாக்கவும் உதவும்.
***

இதயத்திற்கு டானிக்:
*
அனைஸ் பொடியுடன் (Anise Powder/Yansoun Powder) ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி தேன் கலந்து அருந்தினால் இதயம் பலப்பட்டு இயங்குசக்தி அதிகரிக்கும்.

***
by seidhigal under .
***

"வாழ்க வளமுடன்"

பயனுள்ள மருத்துவ துளிகள் :)

அல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்:





***

உள்ள குடல்களில் சுரக்கும் அமிலங்களும் நச்சுப் பொருட் களும் அரிப்பதன் காரணமாக குடல் புண் என்கிற அல்சர் ஏற்படுகிறது.

*


பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பாதிப்பில் இருந்து விடுபடலாம்.

*

குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத் தோல்களைச் விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றிவிடும் சக்தி பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு.

***


சிறுநீர் எறிச்சலை போக்க:

*

வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி முன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

***

ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்க:

*

உணவு சாப்பிடுவதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவதை தடுக்கலாம்.

***

வாய்ப்புண் ஆற:

*
வாய்ப் புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. முடிந்தவரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் வாய்ப்புண் ஆறும்.


***

சீதபேதி குணமாக:

*

ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.

*

இதற்கு சிகிச்சை மேற்கொள்ளும்போது தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்வது நல்லது.

***

பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்க:

*

இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத் தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக்கள் செத்துப் போகும். பற்களின் எனாமல் சிதையாமல் பாதுகாக்கப்படும்.

***

இத்தளத்துக்கு நன்றி.

http://www.z9tech.com/view.php?2b3e0FF22eeZZBB20ecU4OXJ2cddQQAAccd3AmM0g4b44nlmmaa43ddnB2d0e2D96600

***


"வாழ்க வளமுடன்"

27 ஜூலை, 2010

கருப்பை திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும்

விஞ்ஞானிகள் தகவல்.!!



***

எய்ட்ஸ் நோய் உலகின் பேரழிவு நோயாக கருதப்படுகிறது. இந்த நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக பல்வேறு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

***

இந்த நிலையில் பெண்களின் கருப்பை குழாயில் இருந்து வெளிவரும் திரவம் எய்ட்ஸ் நோயை தடுக்கும் சக்தி உள்ளது என தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

***

இது எய்ட்ஸ் பேரழிவின் சோகத்தில் இருந்து மக்களை காக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் ஐ.நா.எய்ட்ஸ் திட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

***

அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் அந்தோணி கூறும்போது, எய்ட்ஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி வாய்ந்த இது போன்ற மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

***

எனவே, இது எய்ட்ஸ் நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

***

http://www.z9tech.com/view.php?2b3ddnBnddc2cQQAA424aa0e0FF0d0e2JXO4Occd3dmmlJl22ee9D966ece02AmM0q44b4bZZBLB00


***

"வாழ்க வளமுடன்"

26 ஜூலை, 2010

பொது அறிவு !

தினமணி நாளிதழில் நான் படித்தது பொது அறிவு தகவல்.

***

***

1. ஏ, பி, சி, ஆகிய மூன்று வைட்டமின்களும் உள்ள ஒரே பழம் வாழைப்பழம்.

***

2. புல்லாங்குழலில் 7 துவாரங்கள் உள்ளன.

***

3. வெளிநாட்டில் இறந்த இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி.

***

4. பென்சில் தயாரிக்க காரியம், களிமண், மரக்கூழ் ஆகிய பொருட்கள் தேவைப்படுகின்றன.

***

5. கோல்ஃப் பணக்காரர்களின் விளையாட்டு என அழைக்கப்படுகிறது.

***


6. குரங்கில் 600 வகைகள் உள்ளன.

***

7. பெண் குயில் பாடாது.

***

8. குளவியின் ஆயுட்காலம் 365 நாட்கள்.

***

9. தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உண்டு.

***

10. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் தாதாபாய் நௌரோஜி.

***

11. "ஜெய் ஜவான் ஜெய் கிஸôன்' என்ற முழக்கத்தைத் தந்தவர் லால் பகதூர் சாஸ்திரி.

***

12. இங்கிலீஷ் கால்வாய் என்பது கால்வாய் அல்ல கடல்.

***

13. உலகிலுள்ள 17 பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன்.

***

14. * ரபீந்தரநாத் தாகூரின் சுயசரிதை நூலின் பெயர் "எனது நினைவுக் குறிப்புகள்'.

***

15. டாக்டர் அப்துல்கலாமின் சுயசரிதை நூலின் பெயர் "அக்கினிச் சிறகுகள்'.

***

16. திரு.வி.க.வின் சுயசரிதை நூலின் பெயர் "என் வாழ்க்கைக் குறிப்புகள்'.

***

17. தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் சுயசரிதை நூலின் பெயர் "என் சரிதம்'.

***

18. நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையின் சுயசரிதை நூலின் பெயர் "என் கதை'.

***

19. கவிஞர் கண்ணதாசனின் சுயசரிதை நூலின் பெயர் "வனவாசம்'.




***

20. நீருக்கடியில் பறக்கும் ஆற்றல் படைத்தது கிவி.

***

21. வயிற்றில் பற்கள் உள்ள பறவை கிவி.

***

22. கிவிப் பறவை பூனைப் போல் கத்தும்; நாயைப் போல் உறுமும்.

***

23. கிவி பூமியைக் குடைந்து முட்டையிடும்.

***


24. ஆண் கிவிப் பறவைதான் முட்டைகளை அடைகாக்கும்.

***

25. கிவிப் பறவைக்கு பகலில் கண் தெரியாது. எனவே இரவில் மட்டுமே நடமாடும்.

***

26. அமெரிக்க செவ்விந்திய பூர்வ குடிமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது பாப்கார்ன்.

***

27. பாப்கார்னால் ஆன தலைப்பாகை, தொப்பி போன்றவற்றை சிவப்பிந்தியர்கள் அணிந்தனர்.

***

28. ஆயிரம் ஆண்டுகளாக பாப்கார்ன் உலகில் இருந்து வருகிறது.

***

29. பாப்கார்ன் இயந்திரத்தை சார்லஸ் கிரீட்டஸ் என்பவர் 19-ம் நூற்றாண்டில் கண்டுபிடித்தார்.

***

30. வடஅமெரிக்காவில் பாப்கார்னைக் கொண்டு கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுகிறது.

***

31. பிரேசில் நாட்டின் காடுகளிலிருந்து பெறப்படும் தேன் கசக்கும் தன்மையுடையது.

***

32. இந்திய வானொலியின் பழைய பெயர் "இந்தியன் பிராட்காஸ்டிங் சர்வீஸ்'. இது 1930-ல் தேசிய மயமாக்கப்பட்டது.


***

33. லண்டன் மிருகக்காட்சி சாலையில் ஒரு பாம்புக்கு கண்ணாடிக் கண் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

***

34. ஆஸ்திரேலியாவில் உள்ள மண்புழுவில் ஒரு வகை 10 அடி நீளம் வரை வளர்கிறது.

***

35. கடற்படையை முதன்முதலில் கி.மு.2,300-ல் எகிப்து நாடுதான் உருவாக்கியது.

***


நன்றி தினமணி.
http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&artid=154213&SectionID=145&MainSectionID=145&SectionName=Siruvarmani&SEO=


***

"வாழ்க வளமுடன்"


23 ஜூலை, 2010

இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள்

சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள்:

***


சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.



1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.


***

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

***

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

***

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

***

5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.

***

6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

***

7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.

***

8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது .

***

9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

***

10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.

***

11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

***

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

***

13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

***

14. நேரத்திற்கு தூங்குங்கள்.

***

15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

***

16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

***

17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

***

18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

***

19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

***

20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.

***

21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

***

22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

***

23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

***

24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.


***

25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள்.



***

நன்றி அன்புடன்.
http://groups.google.co.uk/group/anbudan/browse_thread/thread/adfa6f0f1d505434/c22550ffa2cf43bc?show_docid=c22550ffa2cf43bc

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "