...

"வாழ்க வளமுடன்"

26 ஜனவரி, 2010

ஆத்திசூடி

ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண் புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது.

அவர் இயற்றிய பிற நூல்கள் கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி, ஞானக்குறள், அசதிக்கோவை முதலியன.

கடவுள் வாழ்த்து


ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே.

நூல்

1. அறஞ் செய விரும்பு
2. ஆறுவது சினம்
3. இயல்வது கரவேல்
4. ஈவது விலக்கேல்
5. உடையது விளம்பேல்
6. ஊக்கமது கைவிடேல்
7. எண் எழுத்து இகழேல்
8. ஏற்பது இகழ்ச்சி
9. ஐயம் இட்டு உண்
10. ஒப்புரவு ஒழுகு
11. ஓதுவது ஒழியேல்
12. ஔவியம் பேசேல்
13. அஃகஞ் சுருக்கேல்
14. கண்டு ஒன்று சொல்லேல்
15. ஙப் போல் வளை
16. சனி நீராடு
17. ஞயம் பட உரை
18. இடம் பட வீடு எடேல்
19. இணக்கம் அறிந்து இணங்கு
20. தந்தை தாய்ப் பேண்
21. நன்றி மறவேல்
22. பருவத்தே பயிர் செய்
23. மண் பறித்து உண்ணேல்
24. இயல்பு அலாதன செயேல்
25. அரவம் ஆட்டேல்
26. இலவம் பஞ்சில் துயில்
27. வஞ்சகம் பேசேல்
28. அழகு அலாதன செயேல்
29. இளமையில் கல்
30. அறனை மறவேல்
31. அனந்தல் ஆடேல்
32. கடிவது மற
33. காப்பது விரதம்
34. கிழமைப் பட வாழ்
35. கீழ்மை அகற்று
36. குணமது கைவிடேல்
37. கூடிப் பிரியேல்
38. கெடுப்பது ஒழி
39. கேள்வி முயல்
40. கைவினை கரவேல்
41. கொள்ளை விரும்பேல்
42. கோதாட்டு ஒழி
43. சக்கர நெறி நில்
44. சான்றோர் இனத்திரு
45. சித்திரம் பேசேல்
46. சீர்மை மறவேல்
47. சுளிக்கச் சொல்லேல்
48. சூது விரும்பேல்
49. செய்வன திருந்தச் செய்
50. சேரிடம் அறிந்து
51. சை எனத் திரியேல்
52. சொல் சோர்வு படேல்
53. சோம்பித் திரியேல்
54. தக்கோன் எனத் திரி
55. தானமது விரும்பு
56. திருமாலுக்கு அடிமை செய்
57. தீவினை அகற்று
58. துன்பத்திற்கு இடம் கொடேல்
59. தூக்கி வினை செய்
60. தெய்வம் இகழேல்
61. தேசத்தோடு ஒத்து வாழ்
62. தையல் சொல் கேளேல்
63. தொன்மை மறவேல்
64. தோற்பன தொடரேல்
65. நன்மை கடைப்பிடி
66. நாடு ஒப்பன செய்
67. நிலையில் பிரியேல்
68. நீர் விளையாடேல்
69. நுண்மை நுகரேல்
70. நூல் பல கல்
71. நெல் பயிர் விளை
72. நேர்பட ஒழுகு
73. நைவினை நணுகேல்
74. நொய்ய உரையேல்
75. நோய்க்கு இடம் கொடேல்
76. பழிப்பன பகரேல்
77. பாம்பொடு பழகேல்
78. பிழைபடச் சொல்லேல்
79. பீடு பெற நில்
80. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்
81. பூமி திருத்தி உண்
82. பெரியாரைத் துணைக் கொள்
83. பேதைமை அகற்று
84. பையலோடு இணங்கேல்
85. பொருள்தனைப் போற்றி வாழ்
86. போர்த் தொழில் புரியேல்
87. மனம் தடுமாறேல்
88. மாற்றானுக்கு இடம் கொடேல்
89. மிகைபடச் சொல்லேல்
90. மீதூண் விரும்பேல்
91. முனைமுகத்து
92. மூர்க்கரோடு இணங்கேல்
93. மெல்லில் நல்லாள் தோள் சேர்
94. மேன்மக்கள் சொல் கேள்
95. மை விழியார் மனை அகல்
96. மொழிவது அற மொழி
97. மோகத்தை முனி
98. வல்லமை பேசேல்
99. வாது
100. வித்தை விரும்பு
101. வீடு பெற நில்
102. உத்தமனாய் இரு
103. ஊருடன் கூடி வாழ்
104. வெட்டெனப் பேசேல்
105. வேண்டி வினை செயேல்
106. வைகறைத் துயில் எழு
107. ஒன்னாரைத்
108. ஓரம் சொல்லேல்

குடியரசு தின வாழ்த்துக்கள்

நண்பர்கள் அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள

படங்கலுடன் கீரையின் பெயரை தெரிந்து கொள்ளலாமே!!!!!!

தூதுவளை (தூதுவேளை) துத்திக் கீரை

கல்யாண முருங்கைத் தோசை

கல்யாண முருங்கை

இந்த இலையை சில ஊர்களில் முள்முருங்கை என்றும் சொல்லுவார்கள். இவை கொஞ்சம் கசப்பு சுவை கொண்டது.
சளியை முறித்து வெளியேற்றி நுரையீரலைப் பாதுகாக்கும் ஆற்றல் உள்ளது.
பெரியவர், சிறுவர் இருவரும் சாப்பிடலாம். சிறுவர்களுக்கு வெல்லம் சேர்த்து செய்து கொடுக்கலாம்.

தேவையான பொருட்கள்:

ஆய்ந்த இலைகள் - 20

பச்சரிசி மாவு - 250 கிராம்

மலைப்பூண்டு - 6 பல்

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய்ப் பூ - 4 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 3

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:


1, பூண்டை மெல்லியதாக அரிந்து கொள்ளவும்.
2, பச்சை மிளகாய், முருங்கை இலையுடன் சேர்த்து மைய அரைக்கவும்.
3, ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, சீரகத்தூள், மிளகு தூள், தேங்காய்ப்பூ, உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
4, அதிலே அரைத்த விழுது, பூண்டு எல்லாம் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து,
5, அடுப்பில் தோசை கல் வைத்து தோசை ஊற்றவும்....

குறிப்பு:
எண்ணெய் வேண்டும் எனில் ஊற்றிக் கொள்ள‌வும்...

இவை "பலவகை நோய்களை விரட்டும் பச்சிலை சமையல்" என்ற நூலில் இருந்து எடுத்தது.

ஆசிரியர்; கந்தர்வகோட்டை ராஜேந்திரன்.
பதிப்பாசிரியர்; இராம.சீனிவாசன்.

சோயா பால்

தேவையான பொருட்கள்:
காய்ந்த சோயா அவரை - 30 கிராம்
தண்ணீர் - 3 கோப்பை
சர்க்கரை - தேவையான அளவு
அரவை இயந்திரம்


செய்முறை:


1. சோயா அவரையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

2. சோயாவை தண்ணீரில் 10 மணி முதல் 15 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

3. இரவு ஊறவிட்டு மறுநாள் செய்யவும்.

4. பிறகு அரவை மிசினில் ( மிக்சி ( அல்லது ) கிரைண்டர் ) 1 கோப்பை தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.

5. அரைந்ததும் அதை வடிகட்டவும்.

6. பிறகு 2 கப் தண்ணிர் ஊற்றி பிழைந்து எடுக்கவும். ( தேங்காய் பால் போல் )

7. பிறகு அடுப்பில் கிண்ணம் வைத்து அதை நன்கு கொதிக்க வைக்கவும்.

8. பச்சை சோயா பால் நச்சு தண்மை கொண்டது.. இதனால் தொண்டை புண், தொண்டை காமரல் எடுக்கும்... அதனால் காட்டாயம் நன்கு கோதிக்க வைக்கவும்.

9. அடிக்கடி கலரிக்கொள்ளவும். சில சமயம் அடி பிடிக்கும். பிறகு வடிகட்டி கொள்ளவும்.

10. உங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை அல்லது சர்க்கரை இல்லாமல் குடிக்கலாம்...

குறிப்பு:

பச்சை சோயா பாலைகுடிக்க கூடாது.

குடிப்பதற்கு முன், நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

சோயா

உடலுக்கு என்றும் நலம் தரும் இயற்க்கை பொருட்கள் அதிகம்... நமக்கு தெரிவது குறைவு.

இன்று சோயா பற்றி பார்க்கலாம்...
1. சோயா அவரை இனைத்தை சேர்ந்தது. இதன் தாயகம் கிழக்காசியா.

2. சோயா மனிதனுக்குத் தேவையான எல்லா அமினோ அமிலங்களையும், புரதச் சத்துக்கான சிறந்த மூலமாக உள்ளது.

3. சோயா ப‌ல‌த‌ர‌ப்ப‌ட்ட‌ உண‌வு பொருட்களாகவும், பால் ( சோயா பால் ) பொருட்களாகவும் செய்யப்ப‌டுகிறது.

4. பெண்களுக்கு உண்டான ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டை நீக்க சோயா நல்ல உணவாகும்.

5. இளமையாக இருக்க ( தக்க வைக்க ) உதவும் உணவு சோயா...

6. சோயா அவரையில் ஊட்டசத்து அதிகம். இதில் அதிக தாவர வெண்புரதம் உண்டு.


7. சோயா பாலில் இருக்கும் இரும்புச்சத்து நாம் குடிக்கும் மற்ற‌ பாலில் இருப்பதை விட 5 மடங்கு அதிகமாகும்.

8. சோயா பாலை அடிக்கடி குடித்தால் உடம்பில் உள்ள கொழுப்புச்சத்து குறைக்கிறது.

9. டின்னில் இருக்கும் சோயா பாலை விட, நாமே தயாரித்து குடிப்பது நல்லது...

10. இவ்வளவு சத்து இருக்கும் சோயா பாலை இனி கட்டாயம் பருகுங்கள்...


இனி வரும் தகவல் தினகரன் நாளிதழில் கிடைத்தது.

( நீரழிவு நோயாளிகளுக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து விடும் ஆபத்து எப்போதும் மிக அருகிலேயே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாள் ஆக ஆக பாதிப்புகள் கூடுமே தவிர நிச்சயம் குறையாது.

இந்நிலையில் டைப்-2 வகை நீரழிவு நோயாளிகளுக்கு சோயா சிறப்பான அளவுக்கு கைகொடுக்கும் விஷயம் தெரிய வந்துள்ளது. இல்லீனாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நீரழிவு நோய் பாதித்த சிலருக்கு சோயா புரோட்டீன் சத்தும், மற்றவர்களுக்கு மிருக புரோட்டீன் சத்தும் தரப்பட்டன.

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு இவர்களை சோதனை செய்து பார்த்தனர். அப்போது சோயா புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு சிறுநீரில் காணப்படும் புரோட்டீன் 10 சதவீதம் குறைந்து போய் இருந்தது. ஆனால் மிருக புரோட்டீன் சாப்பிட்ட நோயாளிகளுக்கு புரோட்டீன் அளவு உயர்ந்து கொண்டே போனது. இந்த இடத்தில் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அதாவது சோயாவானது, சிறுநீரில் உள்ள புரோட்டீன் அளவைக் குறைக்கும் வேலையைச் செய்யாமல் அதை நிலைநிறுத்தும் பணியில் மும்முரமாக ஈடுபடுகிறது.

சோயா மறைமுகமாக 2 வகைகளில் நன்மை செய்கிறது.

அதாவது சிறுநீரில்சிறுநீரகங்களின் செயல்பாட்டை ஊக்கப்படுத்தும் கொழுப்பான எச்டிஎல் கொழுப்பை 4 சதவீதம் கூடுதலாக உண்டாக்குகிறது. மற்றொன்று நல்ல கொழுப்பான எச்டி.எல்; அளவு அதிகரிப்பதால் இது இதயத்துக்கும் நல்லதுதான் என்பது அனைவரும் அறிந்ததே. இது விஷயத்தில் மேற்கொண்டு தொடர்ச்சியாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. )

நன்றி:
தினகரன் நாளிதழ்.

http://www.soya.be/

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "