...

"வாழ்க வளமுடன்"

22 ஜூன், 2011

தன் வேலைகளை தானே செய்யும் குழந்தைகள் படிப்பில் சுட்டி தான் :)


குழந்தைகளின் புரிந்துகொள்ளும் திறன், அறிவாற்றல், புத்திசாலித்தனம் தொடர்பாக அமெரிக்காவின்
நியூயார்க் பல்கலைக்கழகம் சார்பில் சமீபத்தில் ஆய்வு நடந்தது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த சுமார் 1,850 குழந்தைகளை வைத்து சர்வே நடத்தப்பட்டது.
இதுபற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளதாவது: குழந்தைகளின் கல்வி மேம்பட அவர்களுக்கு குடும்ப சூழல் குறித்த விழிப்புணர்வு சிறுவயது முதலே ஏற்படுத்தப்பட வேண்டும். இதற்கு முதல் அடியாக மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தன் வேலைகளை தானே செய்து கொள்ள அவர்களை பழக்க வேண்டும். வீட்டு நிர்வாகம் குறித்த விஷயங்களை அவர்கள் அறிந்துகொள்வது அவர்களின் எதிர்காலம் மற்றும் கல்வி மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும். குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களில் இது மிக முக்கியம்.
பணக்கார வீடுகளை விட நடுத்தர, ஏழை குடும்பங்களில் குழந்தைகள் அதிகம் வேலை செய்து பழக்கப்பட்டிருப்பார்கள். இது கல்வியில் அவர்களது புரிந்துகொள்ளும் திறனை அதிகரிக்கிறது. சூழ்நிலையை சமாளிக்கும் திறன், புதிதாக தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆகியவையும் அதிகமாகிறது. தாயுடன் அதிக நேரம் செலவிடுவதன் காரணமாக கதைகளை கேட்கின்றனர். சிறுசிறு விஷயங்களையும் தெரிந்துகொள்கின்றனர். படிப்பில் சாதனை படைக்க இது அவர்களுக்கு உந்துகோலாக அமைகிறது.***
thanks ஞானமுத்து
***


"வாழ்க வளமுடன்"

இணைய தளம் மூலம் பாஸ்போர்ட் பெற விண்ணப்பித்தல்1. அகமதாபாத் 11. கோவா 21. மல்லாபுரம்

2. பெங்களூர் 12. கௌஹாத்தி 22. மும்பை

3. பரேய்லி 13. ஹைதராபாத் 23. நாக்பூர்

4. போபால் 14. ஜெய்ப்பூர் 24. பாட்னா

5. புவனேஷ்வர் 15. ஜலந்தர் 25. புனே

6. சண்டீகர் 16. ஜம்மு 26. ராய்ப்பூர்

7. சென்னை 17. கொல்கத்தா 27. ராஞ்சி

8. கொச்சி 18. கோழிக்கோடு 28. ஷிம்லா

9. டெல்லி 19. லக்னோ 29. ஸ்ரீநகர்

10. காஸியாபாத் 20. மதுரை 30. சூரத்

31. தாணே 32. திருச்சி 33. திருவனந்தபுரம் 34. விசாகப்பட்டினம்


***

பெங்களூருக்கு முதல் பக்கத்தைப் (ஹோம் பேஜ்) பார்த்துக் கொள்ளவும்.

இணைய தளம் மூலம் பதிவுசெய்வதற்கு (5.எக்ஸ் அல்லது அதற்கு மேலான) இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்தவும்

1. புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கும் (ஏற்கனவே உங்களிடம் பாஸ்போர்ட் இருந்திருக்குமேயானால்), பாஸ்போர்ட்டைப் புதுப்பிப்பதற்கும் (10 வருடம் வரை செல்லக்கூடிய உங்களது பாஸ்போர்ட் காலாவதியாகி விட்டாலோ அடுத்த 12 மாதங்களுக்குள் காலாவதியாகும் நிலைமை ஏற்பட்டாலோ) மற்றும் நகல் பாஸ்போர்ட் பெறுவதற்கும் (உங்களது தற்போதைய பாஸ்போர்ட் தொலைந்துவிட்டாலோ அல்லது சேதமடைந்துவிட்டாலோ) நீங்கள் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

2. அந்தந்த பாஸ்போர்ட் அலுவலகங்களின் சட்ட வரம்புக்குள் வரும் குடிமக்கள் மட்டுமே இணைய தளம் மூலமாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் தகுதி உடையவராவர்.

3. இந்த இணைய தளத்தின் மூலமாக, நீங்கள் உங்களுடைய பாஸ்போர்ட் விண்ணப்பத்தை உங்களது பாஸ்போர்ட் அலுவலகத்திடம் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்தவுடன், உங்களது விண்ணப்பப் படிவத்தைச் சேமிக்க வேண்டுமா அல்லது திறக்க வேண்டுமா என்று உங்களிடம் கேட்கப்படும். தேவையானதைத் தேர்வு செய்தபின், தயவுசெய்து விண்ணப்பப் படிவத்தை அச்சிட்டுக்கொள்ளவும். (எந்தக் காரணத்தினாலோ விண்ணப்பப் படிவத்தை உங்களால் அச்சிட முடியாவிட்டால், அந்த விண்ணப்பப் படிவத்தின் வரிசை என்ணைக் குறித்துக்கொள்ளவும். இந்த வரிசை எண் மற்றும் பிறந்த தேதியின் உதவியுடன் விண்ணப்பப் படிவத்தை எப்போது வேண்டுமானாலும் அச்சிட்டுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தை இணைய தளத்தில் சேமித்திருந்தீர்களேயானால், அதை எப்போது வேண்டுமானாலும் அச்சிட்டுக்கொள்ளலாம்.) விண்ணப்பப் படிவத்தில் இன்னும் காலியாக உள்ள சில இடங்களை நீங்கள் கையால் எழுதித்தான் பூர்த்தி செய்ய வேண்டும். உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நாளன்று குறித்த நேரத்தில் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்துக்குப் பிறந்த நாள் சான்றுதழ், ஆகிய ஆவணங்களுடன் நீங்களே நேரில் சென்று வேண்டிய கட்டணத்தைச் செலுத்தி பூர்த்தி செய்யப்ப ட்ட பாஸ்போர்ட் விண்ணப்பப் படிவத்தை அளிக்க வேண்டும். நீங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நேரம்/தேதி ஆகியன உங்களுக்கு இணைய தளம் மூலமாகத் தெரிவிக்கப்படுவதுடன் உங்களுடைய விண்ணப்பப் படிவத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்.

4. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நாள்/நேரத்தில் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்துக்குத் தவறாமல் செல்லவும். குறித்த நேரத்திற்குப் பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் சென்று உங்கள் கோப்பைக் கவனிக்கும் கவுண்ட்டருக்குச் செல்லவும். இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும்போது டோக்கன் எண் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சிரமப்பட வேண்டிய அவசியமும் இருக்காது.

5. இணைய தளம் மூலமாக உங்களுடைய பாஸ்போர்ட் விண்ணப்பத்தைப் பதிவுசெய்யும் முன்பு, உங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணைய தள முகவரிக்குச் சென்று (பாஸ்போர்ட்.கௌவ்.இன்) அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களனைத்தையும் கவனமாகப் படிக்கவும். குறிப்பாக, கட்டண விவரங்கள், படிவம் எண்.1-ஐப் பூர்த்தி செய்ய உதவும் குறிப்புகள் மற்றும் 'எவ்வாறு விண்ணப்பிப்பது?' என்பது பற்றி நன்கு பார்த்துக் கொள்ளவும். இவற்றையெல்லாம் பார்த்தால், என்னென்ன ஆவணங்களின் நகல்கள் தேவை, விண்ணப்பங்களின் எத்தனை நகல்கள் தேவை, என்றெல்லாம் உங்களுக்குத் தெரியவரும். உங்களுக்குக் கொடுக்கப்படும் நாள்/நேரத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்து உங்களால் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க முடியும் என்று உறுதிபடத் தெரிந்தால் மட்டுமே இணைய தளம் மூலமாக விண் ணப்பியுங்கள்.
6. ஒருவேளை உங்களுக்குக் கொடுக்கப்பட்ட நாள்/நேரத்தில் சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் செல்ல முடியாமல் சற்றுத் தாமதமாகச் செல்வீர்களேயானால், வரிசையில் நிற்பவர்கள் அனைவரையும் கவனித்துவிட்டு அன்றைய தினமே உங்களுக்கு சேவை அளிக்க எங்களால் முடிந்த அளவு நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்.

ஆதாரம்: https://passport.gov.in/pms/Information.jsp***
thanks indg
***"வாழ்க வளமுடன்"

அதிகநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருந்தால் நல்லது அல்ல ..!


மணிக்கணக்காய் டிவி பார்ப்பதும், கணிணி முன்னாலேயே (வேலையாகவோ அல்லது வெட்டியாகவோ) பொழுதன்னிக்கும் அமர்ந்து கிடப்பதும், அலுவல் என்றாலும்... அது தற்சமயம் "மேசை வேலை" என்றான நிலையில்...


இந்த இருபத்தோராம் நூற்றாண்டில், உலக மனிதர்களின் உட்காரும் சராசரி நேரம் 9.3 மணிநேரமாக அதிகரித்துவிட்டது..! இவ்வுலகில் மனிதர்கள் தூங்கும் சராசரி நேரம் கூட, 7.7 மணிநேரமாக சுருங்கிவிட்டது..!

என்னதான் ஒருவர் உடற்பயிற்சி செய்பவாராக இருந்தாலும், அவர் தொடர்ந்து ஒருநாளைக்கு 6 மணி நேரங்களுக்கு மேல் தொடர்ந்து அமர்பவராகவே இருந்தால், அவருக்கு 40% வரை இறப்பதற்கு வாய்ப்பு மற்றவரைவிட அதிகம் என்கிறது அந்த அறிக்கை..!

வேறுவழியின்றி 8 மணிநேரம் அமர்ந்தே பணியாற்றும் ஒவ்வொருவரும் அதற்கு அதிகமாய்... வீட்டில் சென்றும் டிவி/கணிணி முன் அமர்வதால் வருகிறது மேலும் ஆபத்து..! இவர்களுக்கு அரைமணி நேர உடற்பயிற்சி எல்லாம் ஒரு நாளைக்கு போதவே போதாதாம்.
.
உட்கார்ந்தே இருப்பது உடல் எடையை கூட்டுகிறது. அமர்ந்திருக்கும்போது, கால் தசைகள் வேலை செய்வதில்லை. கலோரி எரிப்பும், என்சைம் சுரப்பும் குறைந்து விடுகிறது. உடலுக்கு தேவையான நல்ல கொலஸ்டிரால் குறைகிறது. இதனால், இதய நோய், ரத்த அழுத்தநோய், சர்க்கரை நோய் பாதிப்பு ஆகியன வர அதிக சாத்தியம் உண்டு.

8 மணிநேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவரை விட 8 மணிநேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பவருக்கு இதயநோய் வர இருமடங்கு சாத்தியம். அப்படி... 8 மணி நேரம் தினமும் உட்கார்ந்தவாறே "மேசைவேலை" பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தும், 3மணி நேரம் அல்லது அதைவிட அதிகம் ஓரிடத்தில் அமர்ந்து டிவி பார்ப்போருக்கு 64% மாரடைப்பு வர சாத்தியம் உண்டு என்கிறது அறிக்கை. அப்படி அமரும்போது 135' பாகையில் அமர்வது ஓரளவு நல்லது. ஆகவே இந்த, நம் மனித உடலமைப்பு நீண்ட நேரம் உட்கார்வதற்காக படைக்கப்பட வில்லையாம்.
.
நூறு வருடங்களுக்கு முன்னால், இப்போதுள்ள நவீன மின்சார இயந்திர சாதனங்கள் ஏதும் கண்டுபிடிக்காமல் இருக்கும்போது, மனிதர்கள் தம் அன்றாட தேவைகளை தாமே தம் உடலுழைப்பால் பூர்த்தி செய்து கொண்டனர். அதனால், இப்போதுள்ள உடற்பருமன் மற்றும் அதானால் வரும் நோய்கள் ஏதும் அப்போது இல்லை. இப்போதோ அனைத்துக்கும் இயந்திர உதவி மனிதனுக்கு அத்தியாவசியமாகிவிட்டது. அதானால்தான் வருகின்றன அத்தனை நோய்களும்.
.
இதற்கு இனி நாம் என்ன மாற்று வழிகளை சிந்தனை செய்யலாம்..?
.
நீண்டநேரம் அமர்ந்தவாறே நம் பணி இருக்குமானால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அல்லது அப்படியொரு வாய்ப்பை நாமே உருவாக்கியாவது தொடர்ச்சியாக அமராமல், அவ்வப்போது எழுந்து ஒரு உலா போய் வருதல் நலன் பயக்கும். நமக்கு ஏதும், கைபேசி அழைப்பு வந்தால் ஓரிடத்தில் அமர்ந்து பேசாமால் சற்று உலாசென்று கொண்டே பேசலாம். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் முடிந்தவரை சற்று நிற்கலாம். லிஃப்ட் இருந்தாலும், அவசரம் இல்லையேல்... படிக்கட்டை உபயோகிக்கலாம்.


சிறுதொளைவு என்றால் முடிந்தவரை காலாற நடந்து சென்றுவரலாம். சிறுதூரத்துக்கு இனி மிதிவண்டி பயன்படுத்தலாம். உட்கார்ந்தவாறே சுவிங்கம் மெல்வது கூட உடற்பயிசியாம்.


Sitting is Killing You
Via: Medical Billing And Coding


Thanks to :- Medical Billing And Coding (அவங்களே சுட்டுக்க சொல்லி code கொடுத்திருக்காங்க..!)


***

"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"

Health is Wealth .....

நாம்... வருமுன் காப்போம் :)***
நன்றி முஹம்மத் ஆஷிக்
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "