...

"வாழ்க வளமுடன்"

23 செப்டம்பர், 2010

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்நாம் அனைவரும் ருசித்து உண்ணும், அன்னாசிப் பழத்தின் சிறப்பையும், மருத்துவப் பயனையும் அறிந்துகொள்வோம்.

*

அன்னாசி பழவகைகளில் வாழைப் பழத்திற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது. அனானஸ், பினா எனவும் அழைக்கப்படும் இதன் தாவரவியல் பெயர் Ananus Comosus.


*

மருத்துவத் துறையில் இன்று ஏற்பட்டுள்ள விஞ்ஞான முன்னேற்றம், தொழில் நுட்பத் திறன் மற்றும் மருந்து வகைகள், கண்டுபிடிப்புகள் போன்றவை பல நோய்களை அறவே ஒழித்திடும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை நினைத்து பெருமைப்பட்டாலும் இயற்கையிலேயே, உடல் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் ‘உணவே மருந்து’ என்ற கருத்தில் பழ வகைகளும் முக்கியம் என்பதால் அவற்றை என்றுமே ஒதுக்கக்கூடாது.

*

எல்லா பழங்களிலுமே இயற்கையாகவே அதிக சக்தியளிக்கும் அனைத்து மூலப் பொருட்களும் அமைந்திருப்பதோடு, நறுமணமும் இனிய சுவையும் கொண்ட அன்னாசிப்பழத்தின் சிறப்பு சற்று வித்தியாசமானதாகவும் பல வித நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுகிறது.


*

அன்னாசியின் பூர்வீகம் தென் அமெரிக்க நாடான பிரேஸில் ஆகும். 15ம் நூற்றாண்டில் கொலம்பஸ் மூலம் கொண்டுவரப்பட்ட இப்பழம் முதலில் அரச குடும்பத்தினர், பிரபுக்கள், செல்வந்தர்களின் பழமாக இருந்தது. இப்போது அனைத்து நாட்டிலும் அனைவரும் பெறுமளவில் தாராளமாகக் கிடைக்கின்றது.

***

அன்னாசியில் உள்ள சத்துக்கள்:

100 கிராம் அன்னாசி பழத்தில் 88 சதவீதம் ஈரப்பதம் 0.6 சதவீதம் புரதம், 10.8 சதவீதம் மாவுச்சத்து, 17 சதவீதம் கொழுப்புச்சத்து, 63 மில்லிகிராம் வைட்டமின் மற்றும் கால்சியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தயாமின் ஆகிய தாது உப்புகளும் அடங்கியுள்ளது.

*

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

*

அன்னாசிப் பழத்தில் உள்ள புரோமெலினிக்கு செரிமான சக்தி உண்டு. எனவே உணவில் சத்துப் பொருட்களை உடனடி ஜீரணமாகச் செய்வதில் அன்னாசிக்கு நிகர் வேறு பழம் கிடையாது.

*

இதன் காரணமாகவே மேல்நாடுகளில் இறைச்சி உணவு சாப்பிடும் அனைவரும், தாங்கள் சாப்பிடும்போது அன்னாசிப் பழத்துண்டுகளையும் சேர்த்து சாப்பிடுவது பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

*

சிலர் கோழிக்கறியுடன் சேர்த்து சமைப்பதும் உண்டு.


***

அன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்:

1. அன்னாசிப் பழச்சாறும் ஜீரணச்சக்தியை விரைவுபடுத்தும் என்பதுடன் சத்துணவு ஆகும். இச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நோயால் அவதிப்பட்டு உடல் பலவீனமானவர்கள் நன்கு உடல் தேற விரைவில் ஆரோக்கியமடைவார்கள்.

*

2. மேலும் இப்பழச்சாறு சிறுநீர் கழிவை தூண்டி, விஷம் மற்றும் கழிவுப் பொருட்களை வெளியேற்றி, சிறுநீரகங்கள் சிறப்பாகச் செயல்பட உதவும்.

*

3. குடல் புண்களை அழிக்கும் சக்தியும், நீண்ட நாள் மலச்சிக்கலையும் குணப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு.

*

4. உடலில் தோன்றும் மருக்கள் கால்ஆணி ஆகியவற்றுக்கும் அன்னாசிப் பழம் அருமருந்தாகும்.

*

5. பாடகர்கள் நல்ல குரல் வளம் பெறவும், தொண்டைப்புண், தொண்டைக்குள் வளரும் சதை குணமடையவும், அன்னாசிப் பழச்சாறு மிகவும் பயனுடையதாகும்.

*

6. இச்சாற்றால் நன்கு வாயை கொப்பளித்தால் தொண்டை அழற்சி நோயில் இருந்து விடுபடலாம். ரத்தசோகை, மஞ்சள்காமாலை, வயிற்றுவலி, இதய வலி ஆகிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மையும் இப்பழத்திற்கு இருக்கின்றது.

*

7. நாம் கூட அன்னாசிப்பழ ரசம், பாயசம், ஜாம் வைத்து விருந்துகளில் பரிமாறுவது என்பது வழக்கம் தானே. முக்கியமாக குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள் என்பதால் அவர்களது உணவாக இதை அடிக்கடி பயன்படுத்துவது நல்ல ஆரோக்கியத்தையும் உற்சாகத்தையும் அவர்களுக்கு அளிப்பதோடு பசியையும் தூண்டும்.


*

8. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.

*

9. இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

*


10. இவ்வாறாக
அன்னாசிப் பழத்தின் பயன் அறிந்து குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவரும் அடிக்கடி உபயோகித்து, வாழ்க்கை வாழ்வதற்கே என்று நலம் பெற பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

***

அன்னாசி பழத்தில் சமையல் குறிப்பு:அன்னாசிப்பழ கடலைமாவு அல்வா

நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும் இந்த அன்னாசிப் பழ கடலைமாவு அல்வா செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள் . இதோ உங்களுக்கான செய்முறை.

தேவையான பொருள்கள்:

அன்னாசிப்பழச்சாறு - 1 கப்
கடலைமாவு - 1/2 கப்
அஸ்கா சர்க்கரை - 1/2 கப்
உருக்கிய நெய் - 1/2 கப்
முந்திரி - 7 பருப்புகள்,
திராட்சை - 6
ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

1. அன்னாசிப்பழச் சாறுடன் கடலை மாவைக் கரைத்துக் கொள்ளவும்.

*


2. ஒரு பாத்திரத்தில் அஸ்காவுடன் தண்ணீரைச் சேர்த்து அடுப்பில் வைத்துக் கரைந்ததும், மிதமான தீயில் அன்னாசிக் கலவையை அதில் சேர்த்துக் கிளறுங்கள்.

*

3. அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கி விடுங்கள்.

*

4. இதில் ஏலப்பொடி, முந்திரி, திராட்சை சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.


***அன்னாசிப் பழ பாயாசம்

தேவையான பொருட்கள்

நன்கு பழுத்த அன்னாசிப் பழம் 1
சக்கரை 200 கிராம்
பாதாம் பருப்பு 50 கிராம்
பால் 250 கிராம்
பேரிச்சம் பழம் 100 கிராம்
முந்திரிப் பருப்பு 25 கிராம்
கிஸ்மிஸ் பழம் 25 கிராம்
குங்குமப் பூ சிறிதளவு

செய்முறை:

1. அன்னாசிப் பழத்தை, தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக்கவும்
*


2. பாதாம் பருப்பை சிறிது தண்ணீரில் ஊற வைக்கவும்.

*

3. அன்னாசிப் பழத்தை மிக்ஸியில் போட்டு, சாறை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

*


4. சக்கரையை, சாற்றில் கலந்து, அடுப்பில் வைத்து அடியில் பிடித்துக் கொள்ளாமல் கிளறி விடவும்.

*


5. பழச்சாறு கொதித்து கெட்டியானதும் இறக்கி விடவும்.

*


6. பாதாம் பருப்பை, தோலை நீக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

*

7, பாலை நன்கு காய்ச்சியபின், அரைத்த பாதாம் பருப்பை அதில் சேர்க்கவும்.

*


8. கொதித்த பழச்சாற்றையும், பாதாம் பருப்பு கலந்த பாலையும் ஒன்றாக கலக்கவும்

*


9. வறுத்த முந்திரி, திராட்சை, கிஸ்மிஸ் பழங்கள் அனைத்தையும் சேர்த்து பரிமாறவும்

*

10. :)

*


நன்றி யாழ் தளம்


***


நன்றி யாழ் தளம்.
நன்றி ஈகரை.

***

"வாழ்க வளமுடன்"

ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல்.....

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது

மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது.

*

கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே, கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம்.

***

புரதச்சத்து:

கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும்.

*

எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

***


கார்போஹைடிரேட்:

கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது.

*

எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.

***

கொழுப்பு சத்து:

உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது.

*

எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

*

உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.

***


வைட்டமின்கள்:

1. மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.

*

2. நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.


*

3. ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.


*

4. ”பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.


*

5. இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம். கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

*

6. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும்.

*


7. முறையான உடற்பயிற்சி, உடலின் அனைத்து செல்களுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே, வாரத்திற்கு மூன்று நாட்கள், 30 நிமிடங்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலே போதுமானது.

*

8. மேலும், டீ, காபி மற்றும் மது ஆகியவை அருந்துவது, உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறது. அவை, உணவில் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. டீ மற்றும் காபி குடிப்பவர்கள், தினமும் ஒரு கப் என குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கலாம்.

***

நன்றி நெருடல் இணையதளம்.
http://www.nerudal.com/nerudal.18881.html

***

"வாழ்க வளமுடன்"

சீன உணவு வகை ( தேயிலை முட்டை )

தேயிலை முட்டை
1. முட்டை சத்துள்ள ஒரு உணவு வகையாகும். நாள்தோறும் ஒரு முட்டையைச் சாப்பிட்டால், அது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.

*

2. சீனத் தனிச்சிறப்பு மிக்க முட்டை தயாரிப்பு முறை இதுவாகும். இந்தியாவை போல, சீனாவும் உலகில் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகும்.


*


3. சீன உணவு வகைகளைத் தயாரிப்பதில் சில வேளைகளில் தேயிலை பயன்படுத்தப்படுகின்றது.

***

தேவையான பொருட்கள்:


முட்டை 6
தேயிலை சிறிதளவு
சமையல் எண்ணெய் 5 மில்லி லிட்டர்
காய்ந்த சிவப்பு மிளகாய் 2
சமையல் மது 10 மில்லி லிட்டர்
சோயா சாஸ் 20 மில்லி லிட்டர்
உப்பு 2 தேக்கரண்டி
சர்க்கரை 5 கிராம்
நல்லெண்ணெய் 3 கிராம்
மிளகுத் தூள் சிறிதளவு
சீன இலவங்கப்பட்டை 1
இஞ்சி 2 துண்டுகள்
பூண்டுப்பல் 3

*


செய்முறை:

1. முதலில் முட்டைகளை கழுவி சுத்தம் செய்யுங்கள். பிறகு, ஒரு வாணலியில் அவற்றை போடுங்கள். வாணலியில் போதுதியளவு தண்ணீரை ஊற்றவும்.

*

2. வாணலியில் முறையே, மிளகுத் தூள், காய்ந்த மிளகாய், இஞ்சி, தேயிலை, பூண்டு சீன இலவங்கப்பட்டை ஆகியவற்றை போடுங்கள்.

*

3. முட்டைகளை வேகவிடுங்கள். இந்தப் போக்கில், சோயா சாஸ், சமையல் மது, உப்பு ஆகியவற்றை வாணலியில் சேர்க்கலாம்.4. வாணலியிலுள்ள நீர் கொதித்த பின், சர்க்கரையை போடலாம். சமையல் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகிய இரண்டையும் இதில் ஊற்றலாம்.

*

5. மேலும் 10 நிமிடங்கள் வேகவிடுங்கள். இப்போது, முட்டைகள் வேகவைக்கப்பட்டுள்ளன. அவற்றை நீரிலிருந்து வெளியே எடுக்க வேண்டும்.

*

6. ஒரு பெரிய தேக்கரண்டி மூலம் எடுத்து அவற்றின் தோலை லைசாக விரிசல் விடுவது போல் தட்டிக்கொள்ளுங்கள். ஆனால் தோலைத் தனியே நீக்கக் கூடாது.

*

7. பிறகு, அவற்றை மீண்டும் வாணலியின் சூப்பில் மீண்டும் போடுங்கள். தொடர்ந்து கொதிக்க வையுங்கள். மேலும் அரை மணி நேரம் தேவைப்படும்.

*

8. உடனடியாகச் சாப்பிடலாம். ஆனால், அவற்றை சூப்பில் அப்படியே வைத்தால், மறு நாள் இந்த முட்டைகள் மேலும் சுவையாக இருக்கும்.

*

9. கோடைகாலத்தில் தயாரிக்கப்பட்ட முட்டைகள் குளர் பெட்டியில் வைத்தப் பின் அதன் சுவை மேலும் அருமை.
10. ஒரு சிறிய குறிப்பு:

முட்டைகளை வேகவைக்கும் போது, குளிர் தண்ணீர் தேவைப்படும். இப்படி செய்தால், வேகவைக்கும் போது, முட்டையின் தோல் எளிதாக உடைந்து போகாது.


***

நன்றி சீன வானொலி.

***

"வாழ்க வளமுடன்"

முட்டை ஆரோகியமான உணவா இல்லையா?

ஆரோக்கிய உணவு முட்டை:1. இயற்ர்கையில் கிடைக்கும் மிகச் சிறந்த உணவுகளில் ஒன்று முட்டை. இதில் எளிதில் ஜீரணிக்கும் புரோட்டீன்களும், சத்துப் பொருட்களும், ஏராளமான மதிப்புக் மிக்க தாதுப் பொருட்களும் காணப்படுகின்றன.
*
2. அதே சமயம் சிறிதளவுக்கு வேண்டாத விஷயங்களும் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக முட்டையை முழுமையாக வெறுத்து ஒதுக்குவது சரியாக இருக்க முடியாது.
*

3. முட்டை என்றதும் அதில் அடங்கி இருக்கும் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் தான் உடனடியாக நினைவுக்கு வரும்.
*
4. இந்த இரண்டுமே இருதய ரத்த நாளங்களுக்கு கெடுதல் செய்பவை என்பதால் பலர் முட்டையை தொடுவதற்கு பயப்படுகிறார்கள். இந்த பயம் தெளிய வேண்டுமானால் முதலில் இந்த இரண்டையும் பற்றி தெளிவாக அறிய வேண்டும்.
*

5. கொலஸ்ட்ரால் என்பது ஏதோ நாம் சாப்பிடுகிற பொருட்கள் மூலம் தான் உடம்பில் சேருவதாக கருதுகிறார்கள். அதுபோல அது ஆகாத பொருள் என்ற எண்ணமும் மேலோங்கி உள்ளது.
*
இந்த இரண்டுமே தவறு.
*
6. ஏனெனில் நமது உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் கொலஸ்ட்ராலுக்காக ஏங்கி தவிக்கும். கொலஸ்ட்ரால் இல்லாவிட்டால் உடம்பு வளர்ச்சி என்பதே இருக்காது.
*
7. உடம்பில் காணப்படும் 80 சதவீத கொலஸ்ட்ராலை உடம்பே உற்பத்தி செய்து கொள்கிறது. நீங்கள் கொஞ்சமாக சாப்பிட்டாலும் சரி, அதிகமாக சாப்பிட்டாலும் சரி, இது ஆட்டோமேடிக்காக நடந்து கொண்டே இருக்கும்.
*
8. செல்களில் காணப்படும் கொலஸ்ட்ரால்களால் பெரும்பாலும் நன்மை நடக்கிறது. ரத்தத்தில் சேமிக்கப்படும் வெறும் 7 சதவீத கொலஸ்ட்ரால் தான் பிரச்சினையை உண்டு பண்ணும்.
*
9. அதுவும் ஆக்ஸிஜனேற்றம் அடைந்தால் ஒழிய (அப்படி நடந்தால் ரத்த நாளங்களின் சுவர்கள் கடினமாகி இதயத்துக்கு ஆபத்து ஏற்படும்) பிரச்சினை எதுவும் இல்லை. இது தெரிந்து தானோ என்னவோ, இயற்கையே முட்டையில் ஒரு இயற்கையான நோய் எதிர்ப்பு பொருளை வைத்துள்ளது.
*
10. அதன் பெயர் lecithin என்பதாகும். இது முட்டையில் உள்ள கொலஸ்ட்ரால் மேற்படி சிக்கலை உண்டு பண்ணி விடாமல் தடுக்கிறது. பொதுவாக முட்டையில் எதைச் சாப்பிட்டால் ஆகாது என்று கருதப்படுகிறதோ, அதே மஞ்சள் கருவில் தான் இந்தப் பொருள் உள்ளது என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.
*

11. ரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும், உணவில் காணப்படும் கொலஸ்ட்ராலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டும் இதற்கு விதி விலக்காக இருக்கலாம்.
*
12. அவர்கலை கொலஸ்ட்ரால் தேவையாளிகள் (cholesterlo responders) என்று சொல்லலாம். வழக்கமாக உணவு மூலம் கொலஸ்ட்ரால் அதிக அளவில் கிடைக்கிறது என்றால் தான் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை உடம்பு தானாகவே குறைத்துக் கொள்ளும்.
*
13. ஆனால் இத்தகைய நபர்களுக்கு உணவு மூலமாக கிடைக்கும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, உள்ளுக்குள் உற்பத்தி செய்யும் கொலஸ்ட்ராலை குறைக்கும் வித்தையை உடம்பு செய்யாது.
*
14. கொலஸ்ட்ரால் விஷயத்தில் இவர்கள் பிரச்சினைக்குரிய நபர்கள் என்பதால் சற்று உன்னிப்பாக கண்காணிக்க வேண்டியுள்ளது.
*

15. முட்டையின் மஞ்சள் கருவில் arachadonic acid என்ற அதி முக்கியமான அமிலம் காணப்படுகிறது. இது மனித உடம்புக்கு மிகவும் தேவையான ஒரு கொழுப்பு அமிலம் ஆகும். உடம்பின் வளர்சிதை மாற்றத்துக்கு தேவையான இந்த அமிலம் மனிதர்களில் 20 சதவீதம் பேருக்கு பற்றாக்குறையாக இருப்பதாக புள்ளி விவரம் சொல்கிறது.
*
16. ஒருபுறம் நன்மை செய்யும் இந்த அமிலம் இன்னொரு புறம் ஆபத்தையும் உண்டு பண்ணுகிறது. அதாவது பல்வேறு நோய்-நொடிகளை உண்டு பண்ணும் பொருட்களில் இது மூலக்கூறாக அமைந்து உள்ளது. இத்தகைய பிரச்சினை உள்ள நபர்களை மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளவர்களாக கருதலாம்.
*
17. இந்த சிக்கலை சமாளிக்க arachadonic மற்றும் ஒமேகா-3 அமிலங்கள் இடையே சம விகித நிலையை கடைப்பிடித்தால் போதும். (ஒமேகா-3 அமிலம் மீன் மற்றும் மீன் எண்ணெயில் அதிகமாக காணப்படுகிறது.) இந்த இரண்டையும் ஒழுங்காக பார்த்துக் கொண்டால், நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முட்டை என்ன, 10 முட்டை சாப்பிட்டாலும் ஒரு பிரச்சினையும் வராது.
*
18. தற்போது நிறைய சூப்பர் மார்க்கெட்டுகளில் ஆர்கானிக் முட்டைகள் வந்து விட்டன. இந்த முட்டைகளில் ஒமேகா-3 அமிலமும் வேண்டிய அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, முட்டை என்பது நிச்சயம் ஆரோக்கியமான உணவு தான்.

- கூடல் தளம்.

***

தினமும் முட்டை சாப்பிட்டால் ஆபத்தா?1. முட்டை சாப்பிட்டால் உடலுக்கு நல்லது தான். ஆனால் அதையும் அளவுக்கு அதிமாகச் சாப்பிட்டால் ஆபத்து என்கிறார்கள் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்.
*

2. தினசரி முட்டை சாப்பிட்டால் சர்க்கரை நோயாளிகளின் உடல்நலத்திற்கு நல்லது என்று அமெரிக்காவில் நடந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இந்த முடிவைப் பின்பற்றி ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர்.
*

3. அதன் இறுதியில், அமெரிக்க ஆய்வுக்கு நேர்மாறான முடிவு தான் ஆஸ்திரேலிய ஆய்வாளர்களுக்கு கிடைத்தது. ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வின்படி தினமும் முட்டை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புகள் 60 சதவீதம் அதிகம் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

4. சர்க்கரை நோயாளிகள் வாரத்திற்கு 2 முட்டை சாப்பிட்டால் கூட, அது அவர்களின் நோய் பாதிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்றும் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
*

5. பெண்கள் தினமும் ஒரு முட்டையோ, அல்லது வாரத்திற்கு 7-க்கும் அதிகமான முட்டைகளைச் சாப்பிட்டாலோ, சர்க்கரை நோய் ஏற்படும் வாய்ப்புகள் 77 சதவீதம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
*

6. அதே நேரத்தில் வாரத்திற்கு ஒரு முட்டை சாப்பிடலாம் என்றும், இதனால் உடல்நலத்திற்கு பெரிய தீங்கு ஏற்படாது என்றும் ஆய்வை மேற்கொண்ட டாக்டர் மைக்கேல் தெரிவித்துள்ளார்.

*

-இன் தமிழ் யாகுதளம்.

* *

லண்டன் ஆய்வில் தெரிய வந்துள்ளது:
1. வாரத்துக்கு 7 அல்லது அதற்கு அதிகமாக முட்டை சாப்பிட்ட நடுத்தர வயதினருக்கு இதய நோய் அபாயம் 23 சதவீதம் அதிகரித்ததாக ஒரு மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.
*

2. நம் நாட்டில் 'பூரண ஆரோக்கியத்துக்கு தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கள்' என்று அரசு மற்றும் தனியார் கோழிப்பண்ணை விளம்பரங்களை அடிக்கடி பார்த்திருக்கின்றோம்.
*

3. முட்டை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் ஏற்படும். சரி. ஆனால் எல்லாருக்குமே இது பொருந்துமா என்பதுதான் கேள்வி.
*

4. முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் சுமார் 220 மி.கி. கொலஸ்டிரால் இருக்கிறதாம். அப்படியென்றால் இதயநோய் பாதிப்பு உள்ளவர்கள் முட்டை சாப்பிடக் கூடாதல்லவா? என்று கேட்பது புரிகிறது.
*

5. அப்படிப்பட்டவர்கள் முட்டை சாப்பிட்டால் ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாகி மாரடைப்புகூட ஏற்படலாமாம். தினசரி ஒரு முட்டை அல்லது வாரத்துக்கு 7 முட்டைக்கு மேல் சாப்பிட்ட நடுத்தர வயதினருக்கு இதய நோய் ஏற்படுவதற்கான அபாயம் 23 சதவீதம் கூடுதலாக இருந்ததாக ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
*

6. ஆனால் இதெல்லாம் கட்டுக்கதை. முட்டை பற்றி தவறான செய்திகளை பரப்புகிறார்கள் என்று சில மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
*
7. உணவு மூலம் உடலில் சேரும் கொலஸ்டிரால் எளிதில் ஜீரணிக்கப்பட்டுவிடும் என்பதால் கவலைப்படவேண்டியதில்லை என்று ஆறுதலாக கூறுகின்றனர்.
*

8. அதே சமயத்தில், அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருத்துவ இதழ் ஊட்டச்சத்து பற்றி வெளியிட்டுள்ள ஓர் ஆய்வு நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது.
*
9. கொலஸ்டிரால் அதிகமுள்ள, குறிப்பாக நீரிழிவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் முட்டை சாப்பிட்டால், அவர்களது பாதிப்பு அதிகரித்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*

10. முட்டையை விரும்பி சாப்பிடும் வயதான, குண்டான ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு மது மற்றும் சிகரெட் மீது மோகம் அதிகரிக்குமாம். சிகரெட்டும், மதுவும் இதய நலத்துக்கு ஏழாம் பொருத்தம் என்பதை சொல்லவே தேவையில்லை.
*

அப்படின்னா... முட்டை சாப்பிடலாமா? வேண்டாமா?
*

11. அது பற்றிய உலகளாவிய சர்ச்சை நீடிக்கிறது. இதற்கு குழந்தைகள் விதிவிலக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
*

12. வளரும் குழந்தைகளுக்கு தினசரி உணவில் முட்டை சேர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கண்டிப்பாக வலியுறுத்துகின்றனர் என்பதை மறந்துவிடக் கூடாது.


*

-தட்ஸ்தமிழ்.

***

அழுகிய முட்டை:

"அழுகிய முட்டை நாற்றம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்'


நியூயார்க், அக். 24:
1. அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் துர்நாற்ற வாயு, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் என்று கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
*

2. முட்டை என்றாலே சிலருக்கு அலர்ஜியாக இருக்கும். அதுவும் அழுகிய முட்டை என்றால், கேட்கவே வேண்டாம், யாராக இருந்தாலும் பல மைல் தூரத்துக்கு அப்பால் ஓடி விடுவார்கள்.
*

3. ஆனால் அந்த "கூமுட்டையில்' ஏராளமான மருத்துவக் குணம் இருப்பதாக கனடாவைச் சேர்ந்த லேக்ஹெட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
*

4. அழுகிய முட்டையிலிருந்து வெளியாகும் ஹைட்ரஜன் சல்பைட் வாயு, மனித ரத்த நாளங்களைத் தளர்வாக்கி ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது என்று அந்த பல்கலைக்கழகத்தின் மூத்த விஞ்ஞானிகள் ரூய் வாங், சாலமோன் ஆகியோர் தங்களது ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
*

5. எலிகளிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்டநாள் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த உண்மையை கண்டறிந்திருப்பதாக அவர்கள் ஆணித்தரமாக கூறுகின்றனர்.
*

6. எனவே ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள மருத்துவ முறைகளை மாற்றிவிட்டு தங்களது அழுகிய முட்டை மருத்துவத்தை கடைபிடிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.
*

7. அவர்களது கண்டுபிடிப்பின்படி, அழுகிய முட்டையை வைத்து ரத்த அழுத்தத்துக்கு மருத்துவம் மேற்கொள்ளும் காலமும் வரலாம்.
*
8. அப்போது, வாந்தி, குமட்டல், தலைசுற்றல், மயக்கத்துக்கும் மருந்து, மாத்திரைகளை நாம் தயாராக வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம்.
*

http://www.dinamani.com/


***


சீன உணவு வகைகள் (முட்டை ) :
1. முட்டை சத்துள்ள ஒரு உணவு வகையாகும். நாள்தோறும் ஒரு முட்டையைச் சாப்பிட்டால், அது உடல் நலத்துக்கு நன்மை பயக்கும்.

*

2. சீனத் தனிச்சிறப்பு மிக்க முட்டை தயாரிப்பு முறை இதுவாகும். இந்தியாவை போல, சீனாவும் உலகில் பெரிய தேயிலை உற்பத்தி நாடாகும்.
*
3. சீன உணவு வகைகளைத் தயாரிப்பதில் சில வேளைகளில் தேயிலை பயன்படுத்தப்படுகின்றது.

*


இந்த சீன முட்டை சமையல் குறிப்பு அடுத்த பதிவில்.

***

மொத்ததில் "அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு" என்ற பழமொழி முட்டை 100% தகும்.

*

முட்டை அளவேடு உண்டு உங்கள் உடலையும் மனமதை காத்துக்கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.

***

நன்றி கூடல் தளம்.
நன்றி தட்ஸ்தமிழ்.
நன்றி இன் தமிழ் யாகுதளம்.
நன்றி தினமணி.
நன்றி சீன வானொலி.

***

"வாழ்க வளமுடன்"

கீழாநெல்லியின் மருத்துவ குணங்கள்.


இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மைஉடையது.

*

இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

*

தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

*

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கீழாநெல்லியானது ஒவ்வொரு மொழியிலும் கீழ்கண்டவாறு அழைக்கப்படுகிறது.


தாவரவியல் பெயர்: பைலாந்தஸ் அமாரஸ்

குடும்பம்: யூஃபோர்பியேசியே

வேறுபெயர்கள் -:
கீழ்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி.காட்டு நெல்லிக்காய், பூமியாமலக், பூளியாபாலி.

இந்தி: ஜராமலா, நிரூர், ஜங்லி யாம்பலி

வங்காளம்: புய்யாம்லா, சதாஹஸிர்மனி

குஜராத்தி: போன்யா அன்மலி

கன்னடம்: கிலநெல்லிக்கிடா, நெலநெல்லி

தமிழ்: கீழாநெல்லி, கீழ்க்காய்நெல்லி

மலையாளர்: கீழாநெல்லி, கீர்க்காநெல்லி

தெலுங்கு: நெல உசிரிகா

பீகார்: முய்யாரா, முலிகோஆ, காந்தாரா

ஓரியா: புய் ஆவோலா, பேடியான்லா.

சமஸ்கிருதம்: பூமியாம்லகி, தாமலகீ

இதன் முழுப்பகுதியும் நேரடியாகவே மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.


***


செடியின் அனைத்தும் பாகங்களும்:

இது ஒரு குறுஞ் செடி, இரண்டு அடிவரை வளரும் . மாற்றடுக்கில் இரு சீராய் அமைந்தசிறு இலைகளை உடையது.

*

இலைக் கொத்தின் அடிப்புறத்தில் கீழ் நோக்கிய காய்கள் இருக்கும். கீழா நெல்லி என அதானால் தன பெயர் வந்தது.

*

கீழா நெல்லி தான் என்பதறுகு, காய்கள் கீழ்நோக்கி அடிப்புரத்தில் இருக்கினவா என ஊர்ஜிதப்படுத்திய பின்னர் தான் இதனைப் பயன் படுத்த வேண்டும்.

*

செடி முழுதும், தண்டு, வேர், மற்றும் இலைகள்.அனைத்தும் பயன் தரும்.

***

இதன் பயன்கள்:


1. மஞ்சக்காமாலை, மேகம், கண்நோய், பித்தநோய் சிறுநீர் பெருக்கியாகவும், தீராத தலைவலி, கல்லீரல் பழுது, இரத்த சோகை இவைகளுக்கு மருந்தாகும்.

*

2. மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, விர்ர்றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற பல நோய்களுக்கும் கீழாநெல்லியானது சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

*

3. கீழ்காய்நெல்லியில் பைல் நிரூலின், நார் செக்குரினின், 4-methoxy secyrinine, நிர் பைலின், தேலிக் ஆஸிட், எல்லாஜிக் ஆசிட், ஹேலிக் ஆஸிட் போன்ற 50-க்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள் இருப்பதனை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளனர்.

*

4. நவீன மருந்தியல் ஆய்வுகளின் மூலம், கீழாநெல்லியானது காளான் நோய்கள், புற்றுநோய்கள், இறுக்க நோய்கள் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுவதை கண்டுபிடித்துள்ளனர்.


*

5. மேலும் இம்மூலிகைக்கு, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மையுடையதெனவும் கல்லீரலை பாதுகாக்கும் தன்மையுடையதெனவும் பல்வேறு ஆய்வுகள் மூலம் தெளிவுபடுத்தி உள்ளனர்.

*

6. கீழாநெல்லியில் காணப்படும் ஹைப்போ பைலாந்தின், பைலாந்தின் போன்ற வேதிப் பொருட்கள் மீனுக்கும் தவளைக்கும் மட்டும் நச்சுதன்மையை யூட்டுவதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

*

7. ஆனால், இவ்வேதிப் பொருளானது, மனிதர்களுக்கும மற்ற விலங்குகளுக்கும எந்தவித நச்சுத்தன்மையையும், பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை எனவும் வெளிப்படுத்தி உள்ளனர்.

*

8. உண்ணும் அளவு: சாறு 10-20 மி.லி. ஒரு நேரத்துக்கு பயன்படுத்தலாம்.

*

9. தூள் : 3-6 கிராம்.


*

10. வயதிற்கேற்ப மருந்தின் அளவை குறைத்து சிறுபிள்ளைகளுக்கும் கொடுக்கலாம்.மருந்து சாப்பிடும் காலங்களில் புளி, புகை, புகையிலை, காரம், கொழுப்பு நீக்கிய மோர்சாதம், பால் சாதம், சாப்பிடுவது நல்லது. உப்பு வறுத்து சேர்க்கவும்.


***

பயன்படுத்தும் முறைகள்:

1. கீழாநெல்லி சமூலம் - கரிசலாங்கண்ணி, தும்பை - சீரகம் - பொன்னாங்கண்ணி இவைகளை சம அளவு எடுத்து காய்ச்சிய பசும்பால் அல்லது தேங்காய்ப்பால் விட்டு நன்றாக அரைத்து புன்னைக்காய் அளவு காலை மாலை மேற்கண்ட பாலில் ஏதாவது ஒன்றில் 7 நாட்கள் கொடுக்க மஞ்சள் காமாலை நோய் தீரும்.

*


2. கீழ்காய் நெல்லி சமூலம் - சீரகம், மஞ்சள் காரைவேர்பட்டை மூன்றும் சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து பசும்பால் அல்லது தேங்காய் பால் 300 மி.லி. கலக்கி தினம் காலை மாலை குடிக்க மஞ்சள்காமாலை நோய் குணமாகும்.

*

3. கீழா நெல்லி சமூலம், பேரம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, கரிசலாங்கண்ணி, வல்லாரை, பொன்னாங்கண்ணி இவைகளை சமஅளவு எடுத்து நன்றாக அரைத்து 3 நாள் 6 நேரம் எருமைத் தயிரில் கலந்து கொடுக்க இரத்தக்காமாலை உடனே குணமாகும்.

*

4. கீழா நெல்லியும் - கரிசலாங்கண்ணியும் சமஅளவு சேர்த்து நெல்லிக்காயளவு பாலில் சாப்பிட்டுவர பாண்டு, சோகை, இரத்தக் குறைவு மாறும்.

*

5. மாதவிடாய் அளவுக்கு மீறி போய்க்கொண்டிருந்தால் கீழ்க்காய் நெல்லி, அத்திப் பட்டை, அசோகப்பட்டை, அரசம் பட்டை, நாவல் பட்டை இவைகளை சமஅளவாக எடுத்து நன்றாக தூள்செய்து வைத்துக் கொண்டு தினம் ஒரு கரண்டி வீதம் தேன், வெந்நீர், பால் ஏதாவது ஒன்றில் மாறிமாறி சாப்பிட்டு வர கர்ப்பசாய நோய்கள் அனைத்தும் மாறி வெள்ளைப்பாடும் தீரும்.

*

6. கீழ்காய் நெல்லியை நன்றாக அரைத்து சொறி சிரங்கு படைகளில் போட உடனே மாறும்.

*

7. கீழாநெல்லியும் மஞ்சளும் சேர்த்து உடலில் தேய்த்து சில நிமிடம் ஊறவிட்டு குளித்து வர தோல் நோய்கள் வராமல் தடுப்பதோடு வந்தநோய்கள் அனைத்தும் தீரும்.

*

8. கீழ்க்காய் நெல்லியை நன்றாக மென்று பல்துலக்கி வர பல்வலி என்பது பக்கத்திலும் அண்டாது.

*

9. கீழாநெல்லிப்பொடி, நெல்லிக்காய்பொடி, கரிசாலைப் பொடி மூன்றையும் சமஅளவு எடுத்து தேனில் உண்டுவர அடிக்கடி வரும் சளித் தொல்லை, இரத்தக்குறைவு, இரத்தசோகை மாறி எதிர்ப் பாற்றல் பெருகும்.

*

10. கீழ்க்காய்நெல்லிச்சாறு, இளநீர், நெல்லிக்காய் சாறு, கரிசலாங் கண்ணி சாறு, பொன்னாங்கண்ணி சாறு இவைகள் ஒருலிட்டர் வீதமும், எலுமிச்சம்பழச்சாறு அரை லிட்டரும், பசும்பால் 5லிட்டரும், தூய நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் 5 லிட்டரும், மதுரம், கொட்டம், நற்சீரகம், மாயக்காய், கிராம்பு, ஏலம், நற்சந்தனம், வலம்புரி, சடமாஞ்சில் ஆகியவை வகைக்கு 40 கிராம் வீதம் வாங்கி, நன்றாக இடித்து பசும்பால் விட்டு அரைத்து சாறுகள், எண்ணெய், பால் எல்லாவற்றையும் எண்ணெய்ச் சட்டியில் விட்டு அரைத்த மருந்தையும் சேர்த்து, சிறுதீயாக எரித்து மருந்து முதிர் மெழுகு பருவம் வந்ததும் எண்ணெயை வடித்து கொள்ளவும்.

*

11. தினமும் இதை தலையில் தேய்த்து தண்ணீரில் குளித்து வந்தால் கண்நோய்கள், பித்த நோய்கள், மேக நோய்கள், மேக உஷ்ணம், வறட்சை, கணை, பெரும்பாடு, காமாலை நோய்கள் தீரும். மஞ்சள் காமாலை நோயாளிக்கு இது சிறந்த மருந்தாகும்.

*

12. இலையில் உப்பு சேர்த்து அரைத்துத் தடவிக்குளிக்கச் சொறி சிரங்கு, நமச்சல் தீரும்.

*

13. கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

*

14. இதன் இலைச் சாறு பொன்னாங்கண்ணி சாறு சமன் கலந்து நல்லெண்ணையுடன் கலந்து காச்சி தலை முழுக பார்வை கோளாறு தீரும்.

*

15. கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

*

16. கீழாநெல்லி இலை, கரிசிலாங்கண்ணி இலை தும்பையிலை சமன் அரைத்து பெரியோருக்கு புன்னைக் காயளவு, இளைஞ்யர்களுக்குக் கழற்சிக்காயளவு, சிறுவர்களுக்குச் சுண்டைக்காயளவு பாலில் பத்து நாள் கொடுத்துக் காரம் புளி நீக்கி, பால் மோர் சோறும் அரை உப்புமாகச் சாப்பிட காமாலை தீரும்.

*

17. கீழாநெல்லிசாறு, உந்தாமணிச் சாறு, குப்பைமேனி சாறு சமன் கலந்து நல்லெண்ணெயில் எரித்து நசியமிடப் பீனிசம், ஓயாத்தலைவலி நீர் வடிதல் ஆகியவை தீரும்.

*

18. ஓரிதழ் தாமரையுடன் சமன் கீழாநெல்லி சேர்த்தரைத்து நெல்லிக் காயளவு அதிகாலை 45 நாள்கள் சாப்பிட வாலிப வயோதிகம் நீங்கும்.கீழா நெல்லியுடன் சமன் கரிசிலாகண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாள்கள் சாப்பிடக் கல்லீரல் பழுது, பாண்டு, சோகை, இரத்தமின்மை தீரும். -


***

அனுபவ வைத்தியம்:

1. கீழாநெல்லி செடி 4 ஏலக்காய் அரிசி, கறிமஞ்சள் தூள் இவை வகைக்கு ஒரு காசு எடை சேர்த்து ஈரவெங்காயம் ஒன்று சேர்த்து பசுவின் பால் விட்டரைத்து அரைத்த அதை பால் மோர் ஏதேனும் ஒரு அனுபானத்தில் கலக்கி காலை மாலை கொடுக்க காமாலை நிச்சயம் குணமாகும்.இத்க்து ஒரு அனுபவ வைத்தியம்.

*

2. கீழாநெல்லி தைலமாகவும் செய்து பயன்ப்படுத்தப் படுகிறது.


*

3. நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்து கலக்கிக் கொதிக்கவைத்து வடித்து தலை முழுகி வரலாம்


***

நன்றி கீற்று.
நன்றி மூலிகை வளம்.

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "