...

"வாழ்க வளமுடன்"

30 ஜூன், 2011

கூரான பொருட்கள் எல்லாம் குத்துவது ஏன்?கூரான ஊசியானது துணி, அட்டை போன்ற பொருட்களை எளிதில் துளைத்துக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால், இதுபோன்ற பொருட்களில் மழுங்கலான ஆணியால் குத்துவதற்கு கடினமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?


கூரான ஊசியைச் செலுத்தும்போது முழுச்சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால், மழுங்கலான ஆணியில் முனையின் பரப்பு அதிகமாக இருப்பதால், அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியை விடக் கூரான ஊசியை உபயோகிக்கும்போது அதிக அழுத்தம் குறுகிய இடத்தில் பாய்கிறது.


அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று மட்டும் சொன்னால், அதில் இருந்து இது அதிகமா, குறைவா என்று கண்டுகொள்ள முடியாது. ஏனெனில், இந்த சம்பளம் மாதத்திற்கா, வருடத்திற்கா என்பது தெரியாது.


அதுபோலத்தான் சக்தி குறித்த விஷயம். அது ஒரு சதுர சென்டி மீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது.


பனிச்சறுக்கு மட்டைகள் நம்மைப் பளபளப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால், நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்? இம்மட்டைகளைப் போட்டுக் கொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது.


மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால் களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாக இருக்கிறது என்று வைத்துக் கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும் போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட இருபது மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே கூறியபடி, பனிச் சறுக்கு மட்டைகள் அணிந்து கொண்டால்தான் வெண்பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நம் கால்கள் புதைந்துவிடும்.


***
thanks vayal
***
"வாழ்க வளமுடன்"

பெற்றோர்களே! உங்களுக்கான சில ஆலோசனைகள்….பெற்றோர்கள் தான் தமது குழந்தைகளின் ஆரோக்கிய நலனில் முன் உதாரணமாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தைகளுக்குத் தேவையான, பெற்றோர்கள் தெரிந்திருக்க வேண்டிய 5 சுகாதார ஆலோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன.


1. உணவுடன் விளையாடல்

குழந்தைப் பருவ உடற்பருமன் என்பது மிக அதிர்ச்சியூட்டும் சுகாதாரப் பிரச்சினையாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்குத் தெரிவிக்கப்படும் விடயங்கள், ‘அதிகம் வேண்டாத உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டாம், அதிகம் தெலைக்காட்சி பார்க்க வேண்டாம், வேண்டாம்…வேண்டாம்…வேண்டாம்…!’ என்பவை தான்.


ஆனால், உங்கள் குழந்தைகள் தமது வாழ்நாளிற்குத் தேவையான சரியான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் என்ற செய்திதான் இங்கு தரப்படுகிறது.


உங்கள் குழந்தைகளுக்குத் தேவையான ஆரோக்கிய உணவுப் பொருட்களை அவர்களைக் கவரும் வகையில் வடிவமைத்துக் கொடுக்க வேண்டும். குழந்தைகள் சொல்லப்படாத விடயங்கள் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலுடன் இருப்பவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.2. கொழுப்பை உண்ணுதல்

மனித மூளை 60 வீதம் கொழுப்பை உள்ளடக்கியது. கொழுப்பு அமிலங்களை உட்கொள்ளுமாறு குறிப்பாக ஒமேகா-3 அமிலங்களை உட்கொள்ளுமாறு அதிகமானோர் தெரிவிப்பதற்கான காரணம் இது தான். இது குழந்தைகளின் மூளை வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.


தானிய வகைகள் மற்றும் சால்மன், மஹி-மஹி போன்ற மீன் வகைகளில் கொழுப்பு மிக அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தைகள் மீன் உட்கொள்ள விரும்பாவிட்டால் குழந்தைகளுக்கான கிரில் எண்ணெயினை அவர்கள் உட்கொள்ளக் கொடுங்கள்.3. மற்றவரைப் போல் இருத்தல்


பெற்றோரின் முரண்பாட்டு விடயங்களைக் குழந்தைகள் விரைவாக பின்பற்றத் தொடங்கி விடுவார்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிரதி நியுரான்கள் உங்களது கெட்ட விடயங்களைச் செய்ய அவர்களையும் தூண்டும்.


குழந்தைகள் அடங்கலாக பெரும்பாலான னு குறைபாடு உள்ளது. அதனை அன்றாடம் உணவாகவோ அல்லது 15 நிமிடங்கள் வெயிலில் நின்றோ பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.4. வீட்டுப்பாட வேலைகளை நிறுத்துதல்

படுக்கை நேரத்தில் தொலைக்காட்சிப் பெட்டியை மூடிவிடுங்கள். 3 முதல் 12 வயது வரை குழந்தைகளுக்கு ஒரு நாளில் 11 முதல் 12 மணித்தியாலங்கள் உறக்கம் தேவைப்படுகிறது. போதிய உறக்கத்தைப் பெற்றுக்கொள்ளாத குழந்தைகளின் நடத்தைகள் பிரச்சினைக்குரியனவாகிவிடும்.


எனவே குழந்தைகளைத் தம்முடைய வீட்டுப்பாடங்களை முன்கூட்டிய செய்ய வைத்துவிட்டு அல்லது நாளை செய்யலாம் எனக் கூறி நன்றாக உறங்கச் சொல்லுங்கள்.5. திரும்பிப் பேசுதல்

கலந்துரையாடல்களின் போது உங்கள் குழந்தைகளை மையப்படுத்துங்கள். குழந்தைகளை அன்பு செய்வது மிக முக்கியமானது. அதைத் தான் அவர்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறார்கள்.


அது அவர்களின் ஒக்சிடாக்சின் மட்டத்தை உயர்த்தவும் செய்கிறது. எனவே உங்கள் குழந்தைகள் பாதுகாப்பாக உணர்வதோடு பல நல்ல விடயங்களைக் கற்றுக்கொள்ளவும் செய்வார்கள்.***
thanks vanakkamnet
***
"வாழ்க வளமுடன்"

உடல் ஒல்லியாக இருந்தாலும் பிரச்சனை தான் !!!உடல் பருமனாக இருப்பது ஆபத்து. நீரிழிவு, இருதயக் கோளாறு உட்பட இன்னும் பல நோய்களுக்கு இது ஆபத்தானது என்பது தான் இதுவரை இருந்து வந்த நம்பிக்கை.இதனால் மெலிந்த உடல் அமைப்பு இருப்பவர்கள் இந்த விடயத்தில் அலட்சியமாக இருந்து வந்துள்ளனர். தமக்கு நோய்கள் ஏற்படாது என்று அவர்கள் கருதுகின்றனர். இது முற்றிலும் தவறானது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.உடல் மெலிந்துள்ளது என்பது முழுமையான திருப்திக்கு உரிய விடயமல்ல. உடல் மெலிந்து காணப்படுவதற்கு காரணமாக இருப்பது ஒரு மரபணு. ஆனால் அதே மரபணு அவர்களுக்கு நீரிழிவும், இருதயக் கோளாறும் ஏற்படவும் காரணமாக உள்ளது என்பது தான் புதிய ஆய்வு தருகின்ற தகவல்.இந்த ஆபத்து ஆண்களுக்கே பெருமளவு காணப்படுகின்றது. எனவே உடல் ஒல்லியாகி, வயிறும் ஒட்டிப்போய் காணப்படுகின்றவர்கள் தாங்கள் நினைக்கின்ற அளவுக்கு ஆரோக்கியமானவர்கள் அல்ல என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.இத்தகைய உடலமைப்பு கொண்டவர்களின் உடல் உள் உறுப்புக்களைச் சுற்றி கொழுப்புப் படிவத்தை ஏற்படுத்தும் மரபணுவே தற்போது இனம் காணப்பட்டுள்ளது. இதற்கென ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 75000 பேரில் அவர்களின் தசைக் கொழுப்போடு ஒப்பீட்டளவில் இந்த மரபணுவும் இனம் காணப்பட்டுள்ளது.


பொதுவாக IRS1 என்று இந்த மரபணு இனம் காணப்படுகின்றது. மெலிந்த உடல் அமைப்பின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் பற்றிய தகவல்களை இது அப்படியே புரட்டிப்போட்டு விடுகின்றது. இந்த ஜீன் உள்ளவர்கள் இரத்தத்தில் கொழுப்புப் படிவு அதிகம் உள்ளவர்களாக காணப்படுகின்றனர்.உடம்பில் உள்ள சர்க்கரையை சக்தியாக மாற்றுவதிலும் இவர்களின் உடல் செயற்பாடு சிரமத்தை எதிர்நோக்குகின்றது. இதனால் இந்த மரபணு உடையவர்களுள் 20 வீதமானவர்கள் இரண்டாம் நிலை நீரிழிவு நோயை எதிர்நோக்கும் ஆபத்தில் உள்ளனர். நடுத்தர வயதினரையே இது பெரிதும் பாதிக்கின்றது.இந்த மரபணுவானது சருமத்துக்கு கீழ் பகுதியிலும், இதயம், நுரையீரல் உட்பட பல உறுப்புக்களைச் சுற்றியும் கொழுப்பைத் தேக்கி வைக்கின்றது. உலகின் பத்து நாடுகளில் 72 நிலையங்களைச் சேர்ந்த குழுக்கள் நடத்திய வெவ்வேறு ஆராய்ச்சிகளைத் தொகுத்தே ஆய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.


எனவே மெலிந்த உடல்வாகு கொண்டவர்கள் இனிமேலும் அலட்சியமாக இருந்து விட முடியாது.***
thanks ஞானமுத்து
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "