...

"வாழ்க வளமுடன்"

02 ஏப்ரல், 2010

ஒரு வரியில் கீரைகளின் மருத்துவ குணங்கள்

நாம் அன்றாடம் உபயோகிக்கும் கீரைகளின் மருத்துவ குணங்கள்1. அகத்தி கீரை ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும்.

*
2. காசினிக் கீரை சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். சூடு தணிக்கும்.

*

3. சிறு பசலைக் கீரை சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குறைக்கும்.

*

4. பசலைக் கீரை தசைகளை பல மடையச் செய்யும்.

*

5. கொடி பசலைக் கீரை வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

*

6. மஞ்சள் கரிசலை கல்லீரலை பல மாக்கும். காமாலையை விலக்கும்.

*

7. குப்பை கீரை பசியைத் தூண்டும். வீக்கம் வத்தவைக்கும்.

*

8. அரைக்கீரை ஆண்மை பெருக்கும்.

*

9. புளியங்கீரை சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும்.

*

10. பிண்ணாக்கு கீரை வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும்.

*

11. பரட்டைக் கீரை பித்தம், கபம், நோய்களை விலக்கும்.

*

12. பொன்னாங்கன்னி மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும்.

*

13. சீமைப்பொன்னாங்கன்னி மேனியை மினு மினுப்பாக்கும்.

*

14. சுக்கா கீரை ரத்த அழுத்தத்தை சீர் செய்யும். சிரங்கு மூலத்தை போக்கும்.

*

15. வெள்ளை கரிசலைக்கீரை ரத்த சோகையை நீக்கும்.


*

16. முருங்கைக் கீரை நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும்.

*

17. வல்லாரை மூளைக்கு பலம் தரும்.

*

18. முடக்கத்தான் கீரை கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும்.

*

19. புண்ணக் கீரை சிரங்கும், சீதளமும் விலக்கும்.

*

20. புதினாக் கீரை ரத்தம் சுத்தி செய்யும். அஜீரணம் அகற்றும்.

*

21. நஞ்சு முண்டான் கீரை விஷம் முறிக்கும்.

*

22. தும்பை அசதி, சோம்பல் நீக்கும்.

*

23. கல்யாண முருங்கை கீரை சளி, இருமலை துளைத்தெறியும்.

*

24. முள்ளங்கிகீரை நீரடைப்பு நீக்கும்.

*

25. பருப்பு கீரை பித்தம் விலக்கும். உடல் சூட்டை தணிக்கும்.

*

26. புளிச்ச கீரை கல்லீரலை பலமாக்கும். மாலைக்கண் நோயை விலக்கும். ஆண்மை பலம் தரும்.

*

27. மணலிக்கீரை வாதத்தை விலக்கும். கபத்தை கரைக்கும்.

*

28. மணத்தக்காளி கீரை வாய், வயிற்றுப்புண் குணமாக்கும். தேமல் அகலும்.

*

29. முளைக் கீரை பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்.

*

30. சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும்.

*

31. வெந்தயக் கீரை மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.


*

32. தூதுவளை ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும்.

*

33. தவசிக் கீரை இருமலை போக்கும்.


*

34. சாணக் கீரை காயம் ஆற்றும்.

*

35. வெள்ளைக் கீரை தாய்ப்பாலை பெருக்கும்.


*

36. விழுதிக் கீரை பசியைத் தூண்டும்.

*

37. கொடி காசினி பித்தம் தணிக்கும்.

*

38. வேலைக் கீரை தலைவலியை போக்கும்.

*

39. துயிளிக் கீரை வெள்ளை வெட்டை விலக்கும்.

*

40. துத்திக் கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.

*

41. கார கொட்டிக்கீரை மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.

*

42. மூக்கு தட்டை கீரை சளியை அகற்றும்.

*

43. நருதாளி கீரை ஆண்மையை பெருக்கும். வாய்ப்புண் அகற்றும்.***மேலே குறிப்பிட்ட சில கீரை வகைகளில் அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் உடலுக்கு சிறு தீங்கு விளைவிப்பவைக்கு உதாரணம்,

*

44. அகத்தி கீரை மருந்து சக்தியை முறியடிக்கும்.

*

45. பிண்ணாக்கு கீரை வாத கரப்பான் வரும்.***

நன்றி ஈகரை.


***
***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

*

துத்திக் கீரை

கிராமங்களில் அதிகம் கிடைக்கும் துத்திக் கீரையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட கீரையாகும். இதனை கக்கடி, இக்கசி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

*

இவை இந்தியாவில் உஷ்ணப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இவற்றில் பால் துத்தி, சிறுதுத்தி, கருந்துத்தி, ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி, நிலத்துத்தி, பொட்டகத்துத்தி என பல வகைகள் உள்ளன.

*

இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

***

இக்கீரையின் பயன்கள்:

*

1. மலச்சிக்கல் தீர:

*

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது.

*

மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.


***

2. மூல வியாதி குணமாக:

*

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது. இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.


***

3. உடல் சூடு தணிய:

*

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.


***


4. வெப்பக்கட்டி குணமாக:

*

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.


***

5. பல்ஈறு நோய் குணமாக:

*

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.


***

6. குடல் புண் ஆற:

*

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.


***

7. சிறுநீர் பெருக்கி:


*

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.***


8. துத்திக் கீரை என்ற ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த துத்திக் கீரையை தினந்தோறும் சமையலில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் தலைக் காட்டாது. எத்தகைய மூலக்கட்டிகள் வந்தாலும் துத்தி இலைமீது விளக்கெண்ணெய் தடவி, அனலில் காட்டி மூலக்கட்டியின் மீது வைத்துக் கட்டிவிட, கட்டி உடைந்துவிடும். மூல முனைகள் உள்ளுக்குச் சென்றுவிடும். வேண்டுமானால் நீங்கள் கூட செய்து பார்க்கலாம்.***


மூலநோய் போக்கும்:

*

1. ஆசனவாயின் உட்பகுதியிலுள்ள சிரைகள் வீங்கிப்பருத்து வெளிவரு வதைத்தான் மூலநோய் என்கிறார்கள்.மூலதாரம் சூடு ஏறி மலபந்தமாகும்போது, மலம் வெளியேறாமல் உள்ளுக் குள்ளேயே நின்று இறுக்குகிறது. முக்கி வெளியேற்ற முற்படும்போது மலவாய்க் குடலில் இருந்து சிரைகள் பாதிக்கப்பட்டு வெளியே தள்ளிக்கொண்டு வந்து விடுகின்றன.


*

2. தவிர, காய்ந்த மலம் ஆசனவாயைக் கிழிப்பதால் ரத்தம் பீறிட்டு வெளியே வரும். ஒவ்வொரு நாளும் இதே மாதிரி மலம் கழிக்கும்போது அந்த வாய்ப் பிளந்து கொள்ளும். இதை பிஸ்ஸர் அல்லது ஆசனவாய் வெடிப்பு என்கிறார்கள்.இது புண்ணாகி நாளடைவில் சீழ் மூலம் அல்லது பவுத்திரமாக மாறும். இவ்வாறே நவ மூலங்கள் உண்டாகின்றன.


*

அதனடிப்படையில் மூலநோய்க்கு பிரத்யேகமான மூலிகை மருந்துகள் தயாரிக்கப்பட்டு அளிக்கும்போது பக்க விளைவுகள் இல்லாமல் மூலநோய் குணமாகும்.

*

ஒரு மண்டலம் சாப்பிடும் மருந்துகளும் உள்ளன, ஒரே வாரத்தில் குணமாகும் மருந்துகளும் சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ளன.


*


இதனால் உள் மூலம் குணமாகும், வெளிமூலம் சுருங்குகிறது. ஆசனவாயில் இருக்கும் சீழ்க்கட்டிகள் உடைந்து ஆற்றப்படுகின்றன. மல ஜலம் சுலபமான முறையில் வெளியேறுகிறது. மீண்டும் வருவதில்லை.


*

துத்திக் கீரை வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.***


by-சிவா.

நன்றி ஈகரை.

http://www.eegarai.net/-f13/-t4192.htm


***

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்து உபயோகமாக இருந்தால் எனக்கு மகிழ்ச்சி. நன்றி.***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.
*

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "