...

"வாழ்க வளமுடன்"

24 பிப்ரவரி, 2010

குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லிக் கொடுங்க:

குழந்தைகள் 1 1/2 வயதுக்கு மேல் கொஞ்சம் புரிந்துக்கொள்ளும் திறன் வந்துவிடுகிறது. அந்த நேரங்களில் பெற்றோற்கள் குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களை எடுத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பிக்கனும்.*****சாப்பிடும் பொழுது:1. நீங்கள் சாப்பிடும் பொழுது குழந்தையும் ஒன்றாக உட்கார வைத்து அவங்களுக்கு ஒரு தட்டு வைத்து கையால் சாப்பிட சொல்லிக்கொடுங்க.***2. சாப்பிடும் முன்பு கைகளை கழுவனும் என்று கைகளை கழுவி விடுங்க.***

3. இந்த உணவுகளை தந்த இறைவனை நினைக்க சொல்லுங்க. பின்பு சாப்பிட சொல்லுங்க.

***4. அப்பா இந்த உணவுக்காக தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாங்க நீ கீழே சிந்தாமல் சாப்பிடுமா என்று சொல்லுங்க.*(முதலில் சிந்தி தான் சாப்பிடும் போக போக பழகிவிடுவாங்க)காய்கறிகள், கூட்டு சேர்த்து சாப்பிடுமா என்று சொல்லுங்கள்.

***5. சாப்பிட்டு முடிந்த பின்பு கைகளை அலசி விட்டு கை துடைக்கும் துண்டில் துடைக்க பழகி கொடுங்க. (சில குழந்தைகள் அவங்க டிரெஸில் துடைத்துக்கொள்கிறார்கள்)***6. அவங்களையே பல் துலக்க சொல்லிக்கொடுங்க. 3 வயதுக்கு மேல் தனியாக குளிக்க சொல்லிக்கொடுங்க.

********டி.வீ பார்க்கும் பொழுது:சின்ன குழந்தைகள் டீ.வீயில் கார்ட்டூன் சேனல்கள் மட்டுமே தான் பார்ப்பாங்க. நாம் ரிமோட் கேட்டால் தரமாட்டாங்க. அப்படியே விடாமல் அவர்களிடம் செல்லமே இவ்வளவு நேரம் நீ டீ.வீ பார்த்த இப்ப அம்மாவுக்கு பிடித்த ப்ரோகிரம் வருது கொஞ்ச நேரம் பார்க்கிறேன் என்று அன்பாய் சொல்லி வாங்குங்கள்.*

வீண்ணாக லைட் ,ஃபேன், டீ.வீ ஓடுவைதை ஆஃப் பண்ணச்சொல்லுங்க.***
வீட்டுக்கு வரும் விருந்தாளிகளிடம், நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் உறவு முறைகளை சொல்லிக் கொடுங்க.விருந்தினர் வரும் பொழுது வாங்க, எப்படியிருக்கிங்க என்று கேட்க்க சொல்லிக் கொடுங்க.சில குழந்தைகள் கூச்ச சுகபாவமாக இருப்பாங்க அவங்களை சகஜமாக மற்றவர்கள் முன்பு பேச பழக வைக்கவும்.உறவுமுறைகள் சொல்லி அழைக்க சொல்லுங்க.
***
உங்கள் செல்ல குழந்தைகளிடம் நிறைய பேசுங்கள், ரைமிஸ் ராகத்துடன் சொல்லிக்கொடுங்க.. நல்ல விசயங்களை வீட்டில் இருக்கும் நாம் தான் ஆசிரியராக இருந்துச் சொல்லிக் கொடுக்கனும். அப்பறம் தான் பள்ளி படிப்பு.****************


இவைகளை ஒவ்வெரு குழந்தைகளுக்கும் நாம் கற்றுக் கொடுத்தால் அவர்களின் வாழ்வு மிகவும் மகிழ்ச்சியாகவும், செழுமையாகவும் இருக்கும்.

*
வெற்றியும் நிச்சயம்.


*
by Mrs.Faizakader
நன்றி Mrs.Faizakader

வெறும் காலுடன் ஓடுவதே நல்ல பலன்தரும்!


ஓட்டப் பயிற்சி செய்பவர்களுக்கு "ஷூ"(காலணி) முக்கியமான விஷயமாகத் தெரியும். பலர் "ஷூ"இல்லாமல் ஓடுவது தவறு என்று நினைத்து வருகிறார்கள். ஆனால் "வெறும் காலுடன் ஓடுவதே நல்லது.
***
"ஷூ"அணிந்து ஓட்டப் பயிற்சி செய்வது உடலைப் பாதிக்கும்'' என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஹார்வர்டு பல்கலைக்கழகம், தடகள வீரர்கள் ஓட்டப் பயிற்சியால் பெறும் சாதக, பாதகங்கள் பற்றி ஆராய்ந்தது. இதில் மேற்கண்ட முடிவு கிடைத்துள்ளது.
***
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தடகள வீரர்கள் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். உயர்ந்த குதிகால் (ஹீல்ஸ்) உடைய `ஷு', மற்றும் `ஹீல்ஸ்' இல்லாத "ஷூ"அணிந்து இரு பிரிவினரும். "ஷூ"இல்லாமல் வெற்றுக் காலுடன் ஒரு பிரிவினரும் கலந்து கொண்டனர்.
***
அவர்கள் சராசரியாக ஒரு மைல் தூரம் ஓட விடப்பட்டனர். இதில் அனைவரது கால்களும் சுமார் ஆயிரம் முறைக்கு மேல் மேலும் கீழுமாகப் போய் வந்தன. இதனால் ஹீல்ஸ் கொண்ட ஷுக்களை அணிந்தவர்களுக்கு தரையுடன் ஏற்பட்ட உராய்வால் அதிர்வலைகள் முட்டு மற்றும் உடல்பகுதிக்கு அதிகமாக கடத்தப்பட்டது. இதனால் உடல் வலி ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஹீல்ஸ் இல்லாத "ஷூ"அணிந்தவர்களுக்கும் அடிப்பாதத்தின் நடுப்பகுதி வழியாக குறைவான அதிர்வுகள் கடத்தப்பட்டன. "ஷூ"இல்லாமல் கலந்து கொண்டவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.
***
"நமது கால், லட்சக்கணக்கான ஆண்டுகளாக சூழலுக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற்று இன்றைய நிலையை அடைந்துள்ளது. எனவே அதுவே இயற்கையான `ஷு'. உண்மையில் வெறும் காலுடன் பயிற்சியில் ஈடுபடுவதே சிறந்தது. மலைப்பாதை போன்ற கரடு முரடான பகுதிகளைத் தவிர எல்லா இடங்களிலும் வெற்றுக் காலில் பயிற்சி செய்யலாம்'' என்று விஞ்ஞானிகள் உறுதியாகக் கூறுகிறார்கள்.
***
நன்றி மாலைமலர்.

புஜங்காசனம் & அர்த்த மத்ச்யேந்திராசனம்

புஜங்காசனம்

குப்புறப் படுத்துக் கொண்டு கைகளைப் பக்கங்களில் காதுக்கு நேராக தரையில் பொத்தியவாறு வைத்து தலையை மட்டும் பாம்பு போல் மெதுவாக முடிந்தவரை தூக்கி கழுத்துக்குப்பின் வளைக்கவும்.


***


சாதாரண மூச்சு. பின் மெதுவாகத் தலையைக் கீழே இறக்கவும்.ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம்.புஜங்கம் என்றால் பாம்பு எனப் பொருள். பாம்பு படம் எடுப்பதைப் போல் வளைவதால் இவ்வாசனம் புஜங்காசனம் எனப் பெயர் பெற்றது.***பலன்கள்:

*

வயிற்றறையில் தசைகள் இழுக்கப்படுவதால் அங்கு ரத்த ஓட்டம் ஏற்படும். முதுகெலும்பு பலம் பெறும். மார்பு விரிந்து விலாவில் பலமடையும். ஆஸ்துமா நோய்க்கு முக்கிய ஆசனம்.*************


அர்த்த மத்ச்யேந்திராசனம்

உட்கார்ந்து இடது காலை மடக்கி இடது குதியை தொடைகள் சந்திற்குக் கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி நிறுத்தி, இடது முழங்காலருகே வலது பாகத்தைக் கொண்டு வந்து தூக்கி இடது தொடையைத் தாண்டி பக்கத்தில் சித்திரத்தில் காட்டியவாறு நிறுத்தவும். உடலை வலது பக்கம் திருப்பவும். இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி, பின்புறமாய் முழங்காலை அமர்த்திட இடது கையால் இடது முழங்காலையும் பிடித்துக் கொள்ளவும். முதுகை வலது பக்கம் திருப்பி, வலது கையைப் பின்னால் வீசி மூச்சை வெளியேவிட்டு வலது விரல்களால் வலது காலில் மாட்டிக் கொக்கி போல் உடலை நன்றாகத் திருப்பி இழுக்கவும். ஆசனத்தைக் கலைத்து இடது பக்கம் மறுபடியும் அம்மாதிரி மாற்றிச் செய்யவும்.
****
பலன்கள்:
*
முதுகெலும்பு திருகப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படும். நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும்.இளமை மேலிடும், முகக்கவர்ச்சி உண்டாகும். விலா எலும்பு பலப்படும். தொந்தி கரையும்.
***
நன்றி தினகரன் ஹெல்த்.

ஹலாசனம் & மகாமுத்ரா

ஹலாசனம்
சர்வாங்க ஆசன நிலையில் இருந்து விபரீத கரணி நிலைக்கு வந்து, இரு கால்களையும் தலைக்குப் பின்பக்கம் மெதுவாகக் கொண்டுவந்து தரையைத் தொட முயற்சிக்கவும். ஆரம்ப காலத்தில் தரையைத் தொட இயலாது. ஓரிரு வாரங்களில் தரையைத் தொடும்.அல்லது விரிப்பில் மல்லாந்து படுத்து, கால்களை ஒட்டியவாறு நீட்டி கைகளை உடல் பக்கத்தில் தரையில் வைத்துக்கொண்டு உள்ளங்கையைக் குப்புற வைக்க வேண்டும் கால்களை நேராக ஒட்டியவாறு இருக்க வேண்டும்.


***


மூச்சைச் சிறிது உள்ளிழுத்து கால்களை இடுப்பிலிருந்தும் மேல் கிளப்பி உயர்த்தி சரீரத்தின் மேல் வளைத்து சுவாசத்தை வெளியே விட்டு கட்டை விரல்களை தலைக்குப் பின் கொண்டு வந்து தரையைத் தொட முயற்சிக்கவும். நாடி நெஞ்சைத் தொட வேண்டும்.ஒரு முறைக்கு ஒரு நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம். ஆசன நிலையில் சாதாரண மூச்சு.***பலன்கள்:


*


முதுகுத் தண்டுவடம் பலம் பெறும். நாடி மண்டலங்கள் அனைத்தும் நன்கு வேலை செய்யும். முதுமை ஒழிந்து இளமை மேலிடும். சோம்பல் ஒழியும். இடுப்பு, முதுகு, கழுத்து பலம் பெறும். உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மையின்றி வாலிபத்தில் ஆண்குறியைத் தவறாகப் பயன்படுத்தி வீரியம் பெற்று இளமை பெற இவ்வாசனம் மிகவும் பயன்படும். பெண்கள் கருவுற்ற இரண்டு மாதம் வரை செய்யலாம். பின் செய்யக்கூடாது. நீரிழிவு நோய் வெகு விரைவில் குணமாகும்.

***********

மகாமுத்ரா


உசர்ட்டாசனத்திற்கு மாற்று ஆசனம், வஜிராசன நிலையில் கைகளை முதுகின் பின்புறம் படத்தில் காட்டியபடி கட்டிக் கொண்டு, தலையைத் தரையில் தொடும்படி முன்னால் குனியவும். உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால் உடல் விறைப்புத்தன்மை குறையும். சாதாரண மூச்சு 20 எண்ணும் வரை இருந்தால் போதுமானது. 3 முறை செய்யவும்.

***


பலன்கள்:

*

வாத நோய்க்கு சிறந்த ஆசனம். யோக முத்ரா ஆசனத்திற்கு உள்ள பலன்கள் இதற்குக் கிடைக்கும்.

உசர்ட்டாசனம் & சுப்தவஜிராசனம் & விபரீத கரணி & மத்ச்யாசனம் (மச்சாசனம்)

உசர்ட்டாசனம்


உசர்ட் ஆசனம் என்றால் ஒட்டக ஆசனம் எனப் பெயர். மண்டியிட்டு உட்கார்ந்து கொண்டு கைகளால் பின்னால் இரு கணுக்கால்களையும் பிடித்துக் கொண்டு பிருஷ்ட பாகத்தை காலில் உட்கார்ந்து இருப்பதிலிருந்து கிளப்பி தலையைப் பின்னால் படத்தில் காட்டியபடி தொங்கப் போட வேண்டும். மூச்சை முடிந்த மட்டும் 4, 5 முறை வேகமாக இழுத்து விட வேண்டும். பின் காலில் உட்கார்ந்து கைகளை எடுக்க வேண்டும். ஒரு முறைக்கு 5 வினாடியாக 2 முதல் 4 முறை செய்ய வேண்டும்.***பலன்கள்:

*

முதுகெலும்பு பலப்படும். மார்பு விரியும். சுவாசக் கருவிகள் நன்கு வேலை செய்யும். மூக்கடைப்பு, ஆஸ்துமா நீங்கும். மூச்சுத் திணறல், பலகீனம் ஒழியும்.

***


போலீஸ், மலிட்டரிக்கு வேலைக்குப் போகிறவர்கள் மார்பு அகலம் வேண்டும் என்றால் 15 நாள் இப்பயிற்சியைச் செய்தால் 2 முதல் 3 அங்குலம் மார்பு விரியும். ஆஸ்துமாவுக்கு மிக முக்கியமான ஆசனம். தரையில் கையை வைத்தே முதலில் பழக வேண்டும். பின் 15 நாள், ஒரு மாதம் சென்றபின் கால்களில் கைகளை வைத்து செய்யலாம்.*********

சுப்தவஜிராசனம்

முழங்கால்களை மடக்கி, பாதங்களின் மேல் பிருஷ்டபாகம் நன்கு படும்படி அமர வேண்டும். பின்னர் இரு முழங்கைகளின் உதவியால் முதுகைத் தாங்கி மெதுவாக முதுகை வளைத்து விரிப்பில் படும்படி படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு முழங்கால்களையும் நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும். தலையை மடக்கி தரையில் இருக்கும்படி தலையைப் பின்புறமாக வளைத்து அமரவும்.
***
பின்னர் கைகளைக் கோர்த்து மார்பில் வைக்க வேண்டும். சித்திரத்தைப் பார்த்துக் கவனித்துச் செய்ய வேண்டும். சுவாசத்தை உள்ளிழுத்தவாறு முதுகை வளைத்து படுக்க வைக்க வேண்டும். அடுத்து ஆசன நிலையில் இருக்கும் போது ஒரே நிலையில் மெதுவாகச் சுவாசம் செய்ய வேண்டும். சுவாசத்தை மெதுவாக வெளியிட்டவாறு ஆசனத்தைக் கலைக்க வேண்டும்.
***
பலன்கள்:
*
ஜனனேந்திரிய பாகங்களுக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அளக்கிறது. தசை நாளங்கள், நரம்புக் கோளங்கள் முதலியவற்றை நன்கு இயங்கச் செய்கிறது. கர்ப்பாசய உறுப்பு நன்கு அழுத்தப்படுவதால் வலுப்பெறும். கர்ப்பிணிகளுக்கு மிகவும் சிறந்த பலனைக் கொடுக்கும். கருத்தரித்த மாதத்திற்குப் பின்னும் மாதவிடாய் ஆன காலத்திலும் இந்த ஆசனம் செய்தல் கூடாது. மச்சாசனம் செய்ய முடியாதவர்கள் இவ்வாசனம் செய்யலாம்.
************
விபரீத கரணி


விரிப்பில் மல்லாந்து படுத்து உடலை இளக்கவும். கால்களை வயிற்றின்மேல் மடித்து உயரத்தூக்கி கைகளின் உதவியால் பிருஷ்டத்தையும் முதுகையும் உயரக் கிளப்பி, முழங்கைகளைத் தரையில் நன்றாக ஊன்றி, விரிந்த இரு கைகளாலும் பிருஷ்டத்தைத் தாங்கி கால்களை நேராக நிமிர்த்தி நிற்கவும். கண்பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும்.ஆரம்பக் காலத்தில் பிறர் உதவியுடன் பிருஷ்ட பாகத்தில் தலையணைகளைத் தாங்கலாகக் கொடுத்து நிற்கலாம். அல்லது சுவரின் ஓரமாகப் படுத்து கால்களால் சுவரை மிதித்து பிருஷ்ட பாகத்தைத் தூக்கி நிறுத்திச் செய்யலாம்.
***
காலை விறைப்பாக வைக்காமல் சாதாரணமாக வைக்கவும்.ஒரு முறைக்கு 2 நிமிடமாக 2 முதல் 3 முறை செய்யலாம். சாதாரண மூச்சு.கீழே இறங்கும் போது காலை மடக்கிக் கைகளால் பிருஷ்ட பாகத்தை வழுக்கி இறக்க வேண்டும்.
***
பலன்கள்:
*
சர்வாங்காசனத்தின் 80 சதவீதப் பலன்கள் இந்த ஆசனத்திற்குக் கிடைக்கும்.
***
குறிப்பு:
*
நேரம் கிடைக்காதபோது 2 நிமிடம் இவ்வாசனத்தை மட்டும் செய்தால் நல்ல உடல் நலம் சுறுசுறுப்புக் கிடைக்கும்.

********
மத்ச்யாசனம் (மச்சாசனம்)

பத்மாசனம் போட்டு மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கைகளைப் பின்னால் ஊன்றி முதுகைத் தூக்கி வில் போல் கைகளை எடுத்து, கால் கட்டை விரல்களைப் பிடிக்கவும். தீர்க்கமாய் சுவாசிக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 4 முறை செய்யலாம்.
***
பலன்கள்:
*
சர்வாங்காசனம், விபரீத கரணி, ஹலாசனம் இவற்றிற்கு மாற்று ஆசனம், சுரப்பிகள் அனைத்தும் புத்துணர்ச்சியோடு வேலை செய்யும். முதுகெலும்பு பலப்படும். மார்பு விரிந்து நுரையீரல் நன்றாக வேலை செய்யும். மலச்சிக்கல் நீங்கும். மார்புக்கூடு, ஷயம், காசம், இருமல், கக்குவான், மார்புச்சளி நீங்கும்.

பஸ்சிமோத்தாசனம் & நாவாசனம் & சலபாசனம்

பஸ்சிமோத்தாசனம்


விரிப்பில் மல்லாந்து படுத்த நிலையில் & இரு கால்களை ஒன்றாகச் சேர்த்துப் படுத்த நிலையில் வைத்துக் கொள்ளவும். பின் இரு கைகளை தலைப் பக்கம் நீட்டி காதுகளுடன் ஒட்டியவாறு சுவாசத்தை உள்ளிழுத்து ஒரே முயற்சியில் இடுப்பு நிலைக்கு வரவும். பின் இரு கைகளில் உள்ள ஆள்காட்டி விரலினால் கால்களின் பெருவிரலை இறுக்கிப்பிடிக்க முயற்சிக்கவும். விரல்கள் எட்டவில்லையாயின், கால்களை உள்ளே இழுத்துப் பெருவிரலைப் பிடித்திடவும். பின் முகத்தால் கால்களின் மூட்டுகளைத் தொட முயற்சிப்பதோடு, வயிற்றை மூச்சை வெளியேவிட்ட நிலையில் எக்கவும். கைகளின் இரு மூட்டுக்களும் படத்தில் காட்டியவாறு தரையைத் தொட முயற்சிக்கவும். ஒரு முறைக்கு 10 வினாடிகள் செய்யவும். 2 முதல் 4 முறை முயற்சிக்கவும். தலை கொஞ்சம் கொஞ்சமாய் குனியச் செய்யவும். ஒவ்வொறு முறைக்கும் சற்று இளைப்பாறி மீண்டும் செய்யவும்.

***


பலன்கள்:

*

வயிற்றுப் பகுதித் தசைகள் பலம் பெறும். கல்லீரல், மண்ணீரல், இரைப்பை, கணையம், மூத்திரக்காய் இவைகள் புத்துணர்ச்சி பெற்று தமது கடமைகளைச் சரிவரச் செய்வதோடு, இவ்வுறுப்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவாயினும் முற்றிலும் நீங்கும். பசியின்மை நீங்கும். நீரழிவு நோய் முற்றிலும் நீங்கும். இளமை மேலிடும். பெண்கள் இவ்வாசனத்தையும், சர்வாங்காசனத்தையும் செய்து வந்தால் மாதாவிடாயின்போது உண்டாகும் இடுப்பு வலி, வயிற்று வலி, மலட்டுத்தனம் முதலியன நீங்கும்.************

நாவாசனம்


நேராகத் தரையில் படுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டிய படி, தலையையும் காலையும் ஒரே சமயத்தில் தூக்க வேண்டும். முதுகு தரையில் படக்கூடாது. தோணி போன்று உடலை அமைக்க வேண்டும். பார்வை கால் பெருவிரலை நோக்கி இருக்க வேண்டும். சாதாரண மூச்சு.
***
பலன்கள்:
*
இவ்வாசனம் வயிற்றின் மத்திய பாகத்தை நன்றாக அமுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். கணையம் நன்கு இயங்கும். ஜீரணக் கருவிகள் நன்கு வேலை செய்யும். அஜீரணம், ஏப்பம், வாயுத் தொல்லை நீங்கும். மலச்சிக்கல் ஒழியும். பெண்கள் குழந்தை பெற்ற பின் இவ்வாசனத்தைச் செய்தால் வயிறு பெரிதாகாது.
**********
சலபாசனம்

குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும். மூச்சை உள்ளே இழுத்து அடக்கியவாறு, கைகளைத் தரையில் அழுத்தியவாறு கால்களை விறைப்பாக வைத்து படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு முறைக்கு 5 முதல் 10 வினாடியாக மிக மெதுவாக உயரே தூக்கி கீழே இறக்க வேண்டும். ஆரம்பத்தில் சில நாள் ஒவ்வொரு காலாக மாற்றி மெதுவாகப் பழகவும்.
***
பலன்கள்:
*
வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் தீரும். கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை செய்யும். அஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு, இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு இழுக்கப்பெற்று தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.

உத்தித பத்மாசனம் & உத்தானபாத ஆசனம் & ஜானு சீராசனம்

உத்தித பத்மாசனம்பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் கைகள் இரண்டையும் பக்க வாட்டில் அமர்த்தி உடலை மேலே தூக்க வேண்டும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சாதாரண நிலையில் உட்கார்ந்து உடலை மேலே தூக்கலாம். ஆரம்பத்தில் மூச்சு பிடிக்கத் தோன்றும். சாதாரண மூச்சுடன் செய்வது நல்லது. ஒரு முறைக்கு 15 வினாடியாக 3 முறை செய்தால் போதுமானது. பார்வை நேராக இருக்க வேண்டும். கைகளைத் தங்கள் சௌகரியம் போல் வைத்துக் கொள்ளலாம். கால் மூட்டுகள் மேல் நோக்கிச் செல்ல முயற்சிக்கவும்.
***


பலன்கள்

*

தொந்தி கரையும். ஜுரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். புஜம், தோள் பட்டை பலம் பெறும். அஜுரணம், மலச்சிக்கல் தீரும். "பாங்கரியாஸ்" உறுப்பு நன்கு வேலை செய்யும்.


***


நீரழிவு நோய்க்குச் சிறந்த ஆசனம்.ஆஸ்துமாக்காரர்களுக்கு நெஞ்சு விரிவடைந்து நுரையீரலில் அதிக சுவாசம் இழுக்கும் தன்மை ஏற்படும்.நெஞ்சக்கூடு உள்ளவர்கள் இவ்வாசனம் செய்தால் மார்பு விரியும். புஜபலம் உண்டாகும். பெண்களுக்கு மாதவிடாயின் போது வரும் வலிகள் நீங்கும்.**********


உத்தானபாத ஆசனம்
நேராக நிமிர்ந்து படுத்த நிலையில் கைகளைக் குப்புற மூடியவாறு படத்தில் காட்டியபடி பக்கவாட்டில் உடம்பை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளவும். இரண்டு கால்களையும் சாதாரண நிலையில் (விறைப்பாக இல்லாமல்) தரையிலிருந்து அரை அடி மட்டும் மிக மெதுவாக உயர்த்தி சிறிது நேரம் நிறுத்தி மெதுவாக இறக்கவும். சாதாரண மூச்சு, ஆரம்ப காலத்தில் மூச்சுப்பிடிக்க நேரிடும். ஒரு முறைக்கு 20 வினாடியாக 2 முதல் 4 முறை செய்யவும்.
***பலன்கள்:

*

அடி வயிறு இறுக்கம் கொடுக்கும். தொந்தி கரையும். ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும். உச்சி முதல் பாதம் வரையுள்ள அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப் பெறும். வாயு உபத்திரவம் நீங்கும். பெண்கள் மகப்பேறுக்குப் பின் இவ்வாசனம் செய்தால் தொந்தி விழுவது நீங்கி வயிறு சுருங்கும்.

***குறிப்பு:

*

உத்தானபாத ஆசனம் முதல் நிலை 3, 4 நாட்கள் செய்த பின் 2&ம் நிலைக்கு வரவும். முதல் நிலை & கால் தரையிலிருந்து 1 அடி முதல் 2 அடி உயரலாம். 2 &ம் நிலை & 4 முதல் 6 அங்குலம்தான் கால் தரையிலிருந்து உயரலாம்.


***********


ஜானு சீராசனம்

நேராக உட்கார்ந்து கொண்டு கால்களை அகலமாக முடிந்த அளவு விரித்து, பின் வலது காலை மடக்கி குதிகால் ஆசனவாயில் படும்படி வைக்க வேண்டும். இரு கைகளையும் குவித்த நிலையில் மெதுவாகக் குனிந்து இடது கால் பாதத்தைப் பிடிக்க வேண்டும். முகம் இடது கால் மூட்டைத் தொட வேண்டும். பின் வலதுகாலை நீட்டி இடதுகாலை மடக்கி முன்போல் செய்ய வேண்டும். ஆசன நிலையில் 5 முதல் 15 வினாடி இருந்தால் போதுமானது. ஒவ்வொரு காலையும் 3 முறை மடக்கிச் செய்தால் போதுமானது.***


பலன்கள்


*


விலாப்புறம் பலப்படும், விந்து கட்டிப்படும். அஜீரணம், வாயுத் தொந்தரவு நீங்கும். உடல் நல்ல இளக்கம் கொடுக்கும். வயிற்றுப் பகுதியில் அதிகமான ரத்த ஓட்டம் ஏற்படும். நடு உடல் பகுதி பலப்படும்.பெருங்குடல், சிறுகுடல் இளக்கப்பட்டு நன்கு வேலை செய்யும். வயிற்றுவலி தீரும். முதுகு, இடுப்புவலி நீங்கும்,அடிவயிறு இழுக்கப் பெற்று தொந்தி கரையும்.

சர்வாங்காசனம் & மயூராசனம் & தனுராசனம்

சர்வாங்காசனம்


செய்முறை:


*


விபரீத கரணியை கொஞ்ச நாள் செய்த பின்புதான் சர்வாங்காசனம் செய்ய முடியும். விபரீத கரணி நிலையில் நாடியில் கொண்டு இரு கைகளையும் மேலும் அழுத்தி நெஞ்சு தாங்கி நிற்கும்படி எல் உருவத்தில் நிற்க வேண்டும். சாதாரண மூச்சு அரைகுறையாக மூடிய நிலையில் பார்க்கவும். கால்களை விறைப்பாக வைக்காமல் இளக்கமாக இருக்கும்படி நிற்கவேண்டும்.2 நிமிடத்திற்கு ஒரு முறையாக, 3 முதல் 4 முறை செய்யலாம்.

***


பலன்கள்:


*

உடலில் உள்ள அத்தனை அங்கங்களுக்கும் பலன் கிடைப்பதால் சர்வாங்காசனம் எனப் பெயரிடப்பட்டது. முதுமையைப் போக்கும். தைராய்டு கிளாண்டு நன்கு வேலை செய்யும். கண் பார்வை மங்கல், நாடி மண்டல பலக்குறைவு நீங்கும். பெண்கள் கர்ப்பப்பை சோய் வராமல் தடுக்கும் . சுக்கிலம் பலப்படும்.


***


கெட்ட கனவுகள் நீக்கப்பட்டு நன்றாகத் தூக்கம் வரும். தைராய்டு, பாராதைராய்டு முதலிய இடங்களில் தேங்கி நிற்கும் இரத்தத்தை நாடி நரம்புகள் மூலம் மேலே ஏற்றி மறுபடியும் கீழே இறக்கும் சக்தி இவ்வாசனத்திற்கு உண்டு. இதனால் இரத்த நாளங்களுக்கு சுத்த இரத்தம் கிடைத்து சுகவாழ்வு பெறும்.*************

மயூராசனம்செய்முறை:


*


மயூர் ஆசனம் என்றால் மயில் ஆசனம் எனப் பெயர், முழங்கால் மண்டியிட்டு குதிகால் மேல் உட்காரவும். முன் கைகளைச் சேர்ததுத் தரையில் உள்ளங்கைகளை ஊன்றவும். வயிற்றை இறுக்கி மூச்சை உள் வைத்துத் தொப்புகளை முழங்கை மேல் வைத்து கால்களை மெதுவாகப் பின் நீட்டி முன்சாய்த்து சித்திர நிலைக்கு வரவும். ஆரம்பத்தில் முகத்திற்குக் கீழ் தலையணை கண்டிப்பாக வைக்க வேண்டும். ஒரு மறைக்கு 10 முதல் 15 வினாடி வரை 3 முறை செய்யலாம்.***


பலன்கள்:


*

வாத பித்த கபங்களை சமமாய்க் காக்கும். விதானம் இரைப்பை, ஈரல், கணையம், சிநுகுடல் இவைகள் கசக்கப்பட்டு நல்ல ரத்த ஓட்டம் ஏற்படும். ஜீரண உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். நீரிழிவு நோய்க்கு முக்கிய ஆசனம்.

********


தனுராசனம்


செய்முறை:
*
வரிப்பில் குப்புறப் படுத்துக் கைகளால் காலை(கரண்டைக்கால்) ஒறுகப் பிடிக்கவும். சுவாசத்தை வெளியே விட்ட நிலையில் கைகளால் காலை இழுத்து தலையையும் கழுத்தையும் மேல் தூக்கி வளைத்து கால்களையும் மேல் நோக்கி இழுத்து உடலை வில்போல் வளைத்து நிற்கவும். தனுர் என்றால் வில் எனப் கொருள். ஒரு முறைக்கு 5 முதல் 15 வினாடியாக 3 முதல் 5 தடவை செய்யவும். ஆரம்ப காலத்தில் காலை விரித்துச் செய்யவும். பின் மிக மெதுவாகச் சுருக்கவும்.
***
பலன்கள்:
*
முதுகெலும்பின் வழியாக ஓடும் அத்தனை நாடி நரம்புகளுக்கும் புது ரத்தம் செலுத்தப்பட்டு உறுதி அடைகிறது. இரைப்பை, குடல்களிலுள்ள அழுக்குகள் வெளியேறும். ஜீரண சக்தி அதிகப்படும். சோம்பல் ஒழியம். கபம் வெளிப்படும். தொந்தி கரையும். மார்பகம் விரியும். இளமைத் துடிப்பு உண்டாகும்.
***
அஜீரணம், வயிற்று வலி, வாய் துர்நாற்றம், தொந்தி, வயிற்றுக் கொழுப்பு, ஊளைச் சதை நீங்கும். மூலபவுந்திரம், நீர்ரோகம், நீரிழிவு நோய் நீங்கும், பாங்கிரியாஸ் சிறுநீர்க் கருவிகள், ஆண்களின் டெஸ்டீஸ், பெண்களின் ஓவரி. கர்ப்பப்பை நல்ல இரத்த ஓட்டம் ஏற்பட்டு பலம் பெறும். இளமைப் பொலிவு உண்டாகும், பெண்களின் மாதவிடாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

வச்சிராசனம் & யோக முத்ரா & சக்கராசனம்

வச்சிராசனம்செய்முறை:

*

கால்களைப் படத்தில் காட்டியபடி மண்டியிட்டு உட்கார்ந்து கைகளைத் தொடையின் மீது வைத்து முதுகை நேராக நிமர்த்தி கம்பீரமாக உட்காரவும் நன்றாக மூச்சை 4 முதல் 10 முறை இழுத்து விடவும் 2 முதல் 4 நிமிடம் ஆசன் நிலையில் இருக்கலாம்.


***

பலன்கள்:

*

வச்சிரம் போன்று திட மனது ஏற்படும். அலையும் மனது கட்டுப்படும். தியானத்துக்குரிய ஆசனம்.


************

யோக முத்ரா
செய்முறை:
*
பத்மாசன நிலையில் உட்கார்ந்து கொண்டு கைகளை மிக இளக்கமாக முதுகுக்குப் பின்புறம் கட்டிக் கொள்ளவும். நாடி மெதுவாக வெளியே விட்டவாறே முன் நெற்றி தரையில் தொடும்படி மெதுவாகக் குனியாவும். சில வினாடி இந்நிலையில் இருந்தபின் தலையை நேராக முன்போல் நிமிர்த்தவும். நிமிரும் போது மூச்சை உள்ளுக்கு இழுக்கவும். பத்மாசனம் செய்ய முடியாதவர்கள் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாசனத்தை பயிலலாம். ஒரு முறைக்கு 20 வினாடியாக 5 முறை செய்யலாம். தரையை நெற்றியால் தொட முடியாதவர்கள் முடிந்த அளவு முயிற்சித்துவிட்டு, விட்டுவிடவும், கொஞ்ச நாளில் முழு நிலை அடையலாம்.
***
பலன்கள்:
*
முதுகின் தசை எலும்புகள், வயிற்று உறுப்புகள் புத்துணர்வு பெறும். கல்லீரல், மண்ணீரல் அழுத்தமடைந்து நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் நீங்கும். தாது இழுப்பு, பலக்குறைவு நீங்கும், நீரழிவு நோய் நீங்கும், தொந்தி கறையும். முதுகெலும்பு நேராகும். அஜீரணம், மலச்சிக்கல் ஒழியம். நுரையீரல் நோய்க் கிருமிகள் நாசமடையும்.
***
பெண்களின் மாதவிடாய் நோய்கள் நீங்கும். வயற்றில் ஆபரேஷன் செய்திருந்தால் 6 மாதம் இவ்வாசனம் செய்யக் கூடாது.
**********
சக்கராசனம்செய்முறை:
*
முதல் முறை:
***
பிரையாசனம் கொஞ்ச நாள் செய்த பிறகு இவ்வாசனத்தைச் செய்ய முயிற்சிக்க வேண்டும். நின்ற நிலையில் கைகளைத் தொட வேண்டும். பின் மூச்சை உள்ளே இழுத்து கைகளைத் தரையில் அழுத்தி எழுந்திருக்க வேண்டும்.
***
இரண்டாவது முறை:
*
தரையில் படுத்துக்கொண்டு கால்களை இழுத்து கைகளைப் பின்னால் ஊன்றி முதுகையும் உடலையும் உயர்த்தி படத்தில் பாட்டியபடி நிற்க வேண்டும். ஒரு முறைக்கு 15 வினாடியாக 2 முதல் 3 முறை செய்யலாம். ஆரம்பத்தில் 2வது முறையே பழகலாம்.
***
பலன்கள்:
*
ஆசனங்களில் மிக முக்கியமானது. முதுகுத்தண்டின் வழியாகச் செல்லும் அத்தனை நாடி நரம்புகளும் தூண்டப்படும், புத்துணர்வு பலம் பெறும். சோம்பல் ஒழிந்து சுறுசுறுப்பு உண்டாகும். நுரையீரல், சுவாச உறுப்புகள் பலம்பெறும், வயது முதிர்ந்தாலும் இளமை மேலிடும்.

பத்மாசனம் & உட்கட்டாசனம்


செய்முறை:


*

இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மீதும் மாற்றிப் போடவும். கால்மூட்டுகள் இரண்டும் தரைடைத் தொடவேண்டும். குதிகால்கள் இரண்டும் வயிற்றின் அடிப்பாகத்தை தொடும்படியாக அமைக்கவும்.
***

முதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் படத்தில் காட்டியபடி வைத்துக் கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும். சில பேர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது.

***

ஒவ்வொரு காலாக தொடையில் போட்டுப் பழகவும். நாளடைவில் வந்துவிடும். ஆரம்பக் கட்டத்தில் சில வினாடிகள் இருந்தால் போதுமானது. வலி இருந்தால் உடன் ஆசனத்தைக் கலைத்துவிட வேண்டும். நாள் செல்ல வலி வராது. வெகு நேரம் இருக்கலாம்.
***1 முதல் 3 நிமிடம் இருக்கலாம். மேஜை சாப்பாடு உள்ளவர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது. ஒரு வேளையாவது தரையில் சாதாரணமாக உட்கார்ந்து சாப்பிட்டால் இவ்வாசனம் இலகுவில் வந்துவிடும்.

***


பலன்கள்:

*அடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். நன்றாக பசி எடுக்கும். வாதநோய் தீரும். வழிபாடு, ஜபம், தவம், மன ஒருமைப்பாடு இவற்றிக்குச் சிறந்தது. நாடி சுத்தி, பிராணாயாமம் இந்நிலையில் இருந்து கொண்டு செய்தல் நலம்.****************************************உட்கட்டாசனம்*செய்முறை:

*


நேராக நின்று கொண்டு காலை ஒரு அடி அகலமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி கைகளை நேராக நீட்ட வேண்டும். உடல் பூராவும் இளக்கமாக வைத்துக் கொண்டு படத்தில் காட்டியபடி பாதி உட்கார்ந்த நிலையில் முடிந்த நேரம் நிற்க வேண்டும். கால் மூட்டில் இலேசாக வலி வரும். அப்போது உட்கார்ந்து விட வேண்டும்.***பலன்கள்:

*

ஆசனம் செய்வதற்கு முன்னால் உட்கட்டாசனத்தை முதலில் செய்வதால் உடலில் உள்ள நாடி நரம்புகள் இளக்கம் கொடுக்கும். அடிவயிறு, தொடைப்பகுதி, பிருஷ்ட பாகம் இளக்கம் கொடுக்கும். பிற ஆசனங்கள் செய்ய உடல் இலகுவாக அமையும். கால் மூட்டு வீக்கம், மூட்டில் நீர் தேங்கல், வலி, உளைச்சல், வாதம் நீங்கும். 5 மைல் வாக்கிங் செய்வதால் ஏற்படும் பலன் கிடைக்கும். ஒரு முறை செய்தால் போதுமானது.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "