...

"வாழ்க வளமுடன்"

23 அக்டோபர், 2010

உடம்பு ஸ்லிம்மா இருக்க :)

தேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்:




இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை (என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன்). இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம்.

*

மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல். உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-

***

தவிர்க்க வேண்டியவைகள்:

1. முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது இப்படி ஏதாவது பதிவு போடணும் என்றோ கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க.

*

2. அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க.

*

3. உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.

*

4. வீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல் ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும்.

*

5. மதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம்.

***


அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்


இடுப்பில்:

1. பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.

*

2. நல்ல நடைபயிற்சி மிக முக்கியம்.

*

3. நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.)

*

4. நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும் 10 முறை செய்யவும்.

*

5. இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும்.

*

6. எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும்.

*

7. தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும்.


***


இடுப்பு மற்றும் தொடைக்கு:

1. சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும்.

*

2. நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி செய்யவும்.

*

3. நன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.


***


கைகளுக்கு:

1. இதுக்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை சரியாக செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும். இதுவே நல்ல பயிற்சி. முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.


***


கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:

1. சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை.
இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 10 முறை செய்யவும்.

*

2. முகத்தை இட-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும்.

*

3. முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள் செய்வது ரொம்ப நல்லது...

*


தொடர்ந்து செய்யுங்கள் பலன் நிச்சயம்.....


***
thanks tamilstylez
***

"வாழ்க வளமுடன்"

தட்டில் & இலையில் சாப்பிடுவதின் பயன்கள்!



தங்க தட்டில் சாப்பிடுவதின் குணம்

தங்கத் தட்டில் சாப்பிடுவது தோஷங்களைப் போக்கும்.உடம்பைத் தேற்றும்.இதமானது.

***

வெள்ளித் தட்டில் சாப்பிட்டால்

கண்களுக்கு நலம்.பித்ததைப் போக்கும்.கபம் வாயுவை இவைகளை உண்டாக்கும்.

***

வெங்கலத்தட்டில் சாப்பிட்டால்

புத்தியை வளர்க்கும்.உணவின் சுவையைக் கூட்டும்.பித்ததைத் தெளிவுபடுத்தும்

***

இரும்பு கண்ணாடிப் பாத்திரங்களில் சப்பிடுவதால்

சித்தியைக் கொடுகிறது.வீக்கம்,சோகை,இவைகளைப் போக்குகிறது. காமாலையைப் போக்குவதில் சிறந்தது. வலிமையைக் கொடுகிறது.

***

வாழை இலையில் சாப்பிடுவதால்

உடம்புக்கு வலிமையைக் கொடுக்கும் விஷதோஷத்தைப் போக்கும். ஆண்மையை வளர்க்கும்.உணவின் சுவையை மிகுவிக்கும். பசியைத் தூண்டும். குளிர்ச்சியை உண்டாக்கும்.உடம்புக்கு நல்ல ஒளியை உண்டாக்கும்.

***

பூவரச இலையில் சாப்பிடுவதால்

வாயு ,கபத்தைப் போக்கும்,பசியைத் தூண்டும்.வயிற்றில் உண்டாகும் கட்டி போன்ற நோய்களைப் போக்கும். உணவின் சுவையைக் கூட்டும்.

***

பலா இலையில் சாப்பிடுவதால்

பலா இலையில் சாப்பிடுவது சிறந்தது.சுவையை உண்டுபண்ணுகிறது.வாயு கபம் இவைகளைக் குறைக்கின்றது.உடம்பைத் தேற்றுகின்றது.பசித்தீயைத் தூண்டுகிறது.

***

ஆல்,அத்தி,இத்தி,அரசு இலைகளில் சாப்பிடுவதால்

இவ் இலைகளில் சாப்பிடுவது சிரமமானது. ஆனால் குளிர்ச்சியை உண்டு பண்ணுகிறது.தண்ணீர் தாகம்,எரிச்சல்,பித்தம் இவைகளைப் போக்குகிறது.புத்தியை வளர்க்கிறது.வாயு ,கபம் இவைகளை உண்டாக்குகிறது.

***

சாப்பிட கூடாத இலைகள்

தாமரை இலையில் சாப்பிடுவது,விரும்பதக்கதல்ல.அதில் சாப்பிடுவதால் வாயு தொல்லை ஏற்படும்.பசித்தீயை அணைத்துவிடும்.வறட்சியை உண்டாக்கும்.அழகைக் குறைக்கும்.


***


பிளாஸ்டிக் பாத்திரத்தில் சாப்பிட்டால்......


***

thanks- by முனைவர் கல்பனாசேக்கிழார்.
http://www.sekalpana.com/2009/05/blog-post.html

***


"வாழ்க வளமுடன்"

பார்லி ( வாற்கோதுமை )‏

பார்லி வயல்



பார்லி (Hordeum vulgare) புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். ரஷ்யா, கனடா போன்றவை பார்லி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும்.

***


வரலாறு:


பயிரிடப்படும் பார்லி தற்போதும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் காட்டின பார்லியிலிருந்து வழி வந்தது. இவ்விரு வகைகளுமே இருபடை மரபுத்தாங்கிகள் (2n=14 chromosomes; diploid) கொண்டவை. கலப்பினம் செய்யின் எல்லா வகை பார்லி தாவரங்களுமே வளரும் விதை கொடுக்கும் தன்மை உள்ளனவாய் இருப்பதால், இவ்வெல்லா வகைகளும் ஒரே சிற்றினத்தை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன.


*

பயிரடப்படும் பார்லிக்கும் காட்டின பார்லிக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் பூங்கொத்துக்காம்பு தான். காட்டின பார்லியின் பூங்கொத்துக்காம்பு எளிதில் உடையக்கூடியது அதன் சுய விருத்திக்கு உதவும் வகையில் அமைகிறது.

*

பார்லி பற்றிய முதல் ஆதாரங்கள் பழங்கற்கால லெவான்ட் பகுதியின் நட்டுஃபியன் கலாச்சர எச்சங்களில் கானப்படுகின்றன. பயிரடப்பட்ட பார்லியின் எச்சப்படிமங்கள் சிரியாவிலுள்ள பழங்கற்காலத்தின் டெல் அபு குரெஇராவில் காணப்பட்டன. பார்லியும் கோதுமையும் சம காலகட்டத்தில் பயிர் செய்யத் துவங்கப்பட்டதாகத் தெரிகிறது.

*

பூமியின் பண்டைய மற்றும் முக்கிய அரும்பரிசாகக் கருதப்பட்டதால் பார்லிக்கு, எலூசீனிய மர்மங்களின் ஆரம்ப நிலைகளிலிருந்து மதக்கலாசார முக்கியத்துவம் காணப்பட்டிருந்தது. இம்மர்மங்களின் கடவுளான டெமெட்டரின் வழிபாட்டு பாடல்களில் காணப்படும் கைகியான் எனப்படும் பானகம், பார்லி மற்றும் மூலிகைகள் கலந்து செய்யப் பட்டதாகும். குறிப்பாக டெமெட்டெர் "பார்லித்தாய்" என்றும் அழைக்கப்பட்டார்.

*

பார்லி மணிகளை வறுத்து கூழ் காய்ச்சுவது கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டதாக கையஸ் ப்லினியுஸ் செகுன்டஸின் "இயற்கை வரலாறு" தெரிவிக்கிறது. இம்முளைக்கூழ் (malt) நுண்ணுயிர் பகுப்பு (fermentation) மூலமாக சற்றே சாராயமுள்ள பானமாகிறது.


***


பார்லி இரகங்கள்:


பயிரிடப்படும் பார்லி இரகங்களை முன்பனிக்கால வகைகள், வசந்தகால வகைகள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றுடன் கரடி என்றழைக்கப்படும் ஒரு மூலமறியப்படாத இரகத்தையும் சேர்க்கலாம். இந்த இரகம் மற்ற இரு இரகங்கள் அளவே மகசூல் கொடுப்பினும் குறைவான குண நலங்களே பெற்றுள்ளது.

*

முன்பனிக்கால இரகம் கோதுமை போலவும், வசந்த கால இரகம் ஓட் போலவும் பயிரிடப்படுகின்றன. பிரிட்டனில் முன் கால்த்தில் பார்லி கோடைத்தரிசு நிலங்களில் பல்வேறு பெயர்களுடன் பயிரடப் பட்டு வந்தது.

*

வசந்தகால பார்லி பயிரிட சிறந்த பருவம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களாகும் (பின் மாசி முதல் முன் சித்திரை வரை). இருப்பினும், மிகத்தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களும் நல்ல மகசூல் தந்துள்ளன.

*

பார்லி சிற்றினங்கள் பூங்கொத்தின் மணி வரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் பிரிக்கப் பட்டுள்ளன. இரு வரிசை பார்லி (Hordeum distichum), நால் வரிசை பார்லி (Hordeum tetrastichum) மற்றும் அறு வரிசை பார்லி (Hordeum vulgare) என இவை தொன்றுதொட்டு அறியப்பட்டுள்ளன.

*

இவ்வெல்லா சிற்றினஙளிலும் பாதி எண்ணிக்கை மல்ர்களே விருத்தி செய்யும் தகுதி படைத்தவையாய் உள்ளன. தற்கால பார்லி பெரும்பாலும் Hordeum vulgare சிற்றினமாகும்.

*

இவற்றுள் இரு வரிசை பார்லி மிகப் பழமையானது; காட்டின பார்லி வகைகள் இருவரிசை பார்லியாகவே காணப்படுகின்றன. இரு வரிசை பார்லி அறுவரிசை பார்லியை விடக் குறைவான புரதமும், அதிக உருமாற்றப்புரதக்காரணியும் (enzyme) கொண்டுள்ளது.

*

அறுவரிசை பார்லி தீவனமாகவும், பிற பொருள் கலந்த முளைக்கூழ் உருவாக்கவும் உகந்ததாகும். இரு வரிசை பார்லி தூய முளைக்கூழ் உருவாக்க உகந்ததாகும். நால் வரிசை பார்லி நுண்ணுயிர் பகுப்புக்கு உகந்ததல்ல.

*

மேலும், தீட்டப்பட வேண்டிய (கூடுள்ள) மற்றும் கூடற்ற பார்லி எனவும் பார்லியை வகைப்படுத்தலாம். இவற்றுள் கூடுள்ள வகைகள் தொன்மையானவை.

***


பயன்கள்:

1. பார்லி மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான உணவு தானியமாகும்.

*

2. பார்லி உவர்மண்ணில் கோதுமையைக் காட்டிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது.

*

3. இதனாலேயே கி.மு இரண்டாயிரத்தில் மெசபடோமியாவில் பார்லி பயிரிடுதல் அதிகரித்திருக்கலாம்.

*

4. அதே போல ரை பயிரைக்கட்டிலும் அதிக குளிர் தாங்கும் சக்தியும் பார்லிக்கு உண்டு.

*

5. பார்லி முளைக்கூழ் பியர் மற்றும் விஸ்கி தயாரிப்பில் ஒரு முக்கிய இடுபொருளாகும்.

**


இதன் மருத்துவ குணங்கள் பிறகு பதிவு இடுகிறேன்!

***
thanks விக்கிபீடியா

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "