...

"வாழ்க வளமுடன்"

09 ஜூலை, 2015

உடல் எடையை குறைக்க சூப்

ஒவ்வொரு மனிதருக்கும் தங்கள் உடலை கட்டுடலாக, ஒல்லியாக மற்றும் கவர்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதே விருப்பமாக இருக்கும். இந்த கட்டுடலைப் பெறுவதற்காக பட்டினியும் கிடப்போம், விதவிதமான உணவுகளையும் சாப்பிட முயற்சி செய்வோம். நாம் எதை சாப்பிட்டாலும், அது நமது உடலில் கொழுப்பாக இருந்து வேலை செய்யும் என்பதே உண்மை.
 
 
 
 
 
 
 

 
 

 
 

 
 
 
 
 
 
 
 

 
 
 

 
பட்டாணி சூப்
 
நீங்கள் தினந்தோறும் பட்டாணியுடன், உங்களுக்குப் பிடித்த காய்கறிகளை சேர்த்து சூப்பாக குடித்து வந்தால் உடலின் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக இருக்க முடியும். புரதங்கள் நிரம்பியதாகவும், குறைவான கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் கொண்டதாகவும் இருக்கும் பட்டாணி சூப் ஆரோக்கியமான தேர்வாகவே இருக்கும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
தக்காளி சூப்
 
எளிமையாக தயாரிக்கவும் மற்றும் சுவையாக இருக்கவும் கூடிய தக்காளி சூப்பினால் எடையைக் குறைக்க முடியும் என்பது ஆச்சரியமான விஷயமாக தோன்றுகிறதா? இந்த சூப் உங்களுக்குத் தேவையான பொட்டாசியம், புரதங்கள் மற்றும் நார்ச்சத்துக்களை வழங்குகிறது. குறைவான கொழுப்பு மற்றும் சர்க்கரையைக் கொண்டிருக்கும் இந்த சூப்பில் வைட்டமின் சி உள்ளது.


***

***"வாழ்க வளமுடன்"

சம்பா ரவை லட்டு

நீரிழிவு நோய் இருப்ப‌வ‌ர்க‌ள் இனிப்பு சாப்பிட‌க்கூடாது என்று சொல்லும் போது நிறைய‌ வீட்டில் பொண்க‌ளுக்கு இது கொஞ்ச‌ம் ச‌ங்க‌ட‌ம்.


ஆம்! எல்ல‌ரும் இனிப்பு சாப்பிடும் போது அவ‌ர்க‌ள் சாப்பிட‌வில்லை என்று வ‌ருத்த‌ம் இருக்கும்.


அவ‌ர்க‌லுக்கா...


நாம் ர‌வா ல‌ட்டு சாப்பிட்டு இருப்போம். அதோ போல் ச‌ம்பா ர‌வையில் சேய்தால் நீரிழிவு நோயாளிக்கு இது நல்லது.


தேவையான‌ பொருட‌கள்:


ச‌ம்பா ர‌வை ( கோதுமை ர‌வை ) - 1 க‌ப்

ஈக்குவ‌ல் - 1/2 டீஸ்ப்பூன் ( உங்கலுக்கு தேவை எனில் சேர்த்துக் கொள்ளவும். )

முந்திரி - 6

நெய் - 1/2 டீஸ்ப்பூன்

பால் - தே. அள‌வு


செய்முறை:


1. க‌டாயில் 1 டீஸ்ப்பூன் நெய் சேர்த்து முந்திரியை வ‌றுக்க‌வும்.


2. முந்திரியை சிவ‌க்க‌ வறுத்த‌தும், அதில் ர‌வையையும் சேர்த்து வ‌றுக்க‌வும்.


3. சிறிது நேர‌த்தில் ர‌வை வ‌றுப‌ட்ட‌தும், அதில் ஈக்குவ‌ல் போட்டு உட‌னே இற‌க்க‌வும்.


4. த‌ட்டில் கொட்டி சூடும் ஆரும் முன்பு பால் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.


5. தட்டில் நெய் தடவி அதில் இந்த உருண்டையை வைத்து ஆரவிடவும்.அதற்க்கு மேல் ஒவ்வேரு முந்திரி வைத்து அழகு படுத்தவும்.


சம்பா ரவை லட்டு ரொடி.குறிப்பு:


1. இந்த ரவா லட்டை அதிக நாள் வைத்துக் கொள்ள முடியாது.


2. இந்த உணவு சக்கரை நோயாளிகலுக்கு உகந்தது.


3. சம்பா
ரவை என்பது கோதுமை ரவை.

4. கடாயில் ரவையை இறக்கும் போது போடும் ஈக்குவல் பவுடர் போட்டதும் கீழே இறக்கமால் விட்டு விட்டால் ரவை நீர்த்து விடும்.


5. இந்த ரவா லட்டை 2 நாள் மேல் வைத்து இருந்தால் பூர்ணம் பூற்று விடும்.


***
படித்ததில் பிடித்தது,
***

உள்ளம் அமைதிபெற 10 கொள்கைகள் :)

1.உதவி கேட்கப்படாமல் மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்:.

நம்மில் பெரும்பாலோர் மற்றவர்களின் விருப்பங்களில் அடிக்கடி தலையிடுவதன் மூலமே தமக்குத் தாமே பிரச்சனைகளை உருவாக்கிக் கொள்கின்றனர்.


நம் வழி மிகச் சிறந்தவழி, நமது லாஜிக்கே பரிபூரணமான லாஜிக் என தமக்குத் தாமே நம்பிக்கொண்டு யாரெல்லாம் நமது சிந்தனைகளுக்கு ஒத்துப் போகவில்லையோ அவர்களெல்லாம் கண்டிப்பாக விமர்சிக்கப்பட்டு சரியான வழியான நம் வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என நினைப்பதாலேயே இவ்வாறு நாம் மற்றவர்களின் பிரச்சனைகளில் அதிகப்படியாக மூக்கை நுழைக்கிறோம்.


 இத்தகைய சிந்தனை தனித்துவத்தின் இருப்பை நிராகரிக்கின்றது. இதன் பயன், கடவுளின் இருப்பை மறைமுகமாக நிராகரிக்கிறது. ஏனெனில், கடவுள் ஒவ்வொருவரையும் அவரவருக்கான தனித்துவம்-தனித்தன்மையுடனே படைத்துள்ளார்.


மிகச் சரியாக ஒன்று போல் சிந்தித்து ஒன்று போல் செயல்படும் எந்த இரு மனிதர்களையும் காண இயலாது. அவ்வாறு ஆக்கவும் முடியாது. எல்லா ஆணும் பெண்ணும் அவரவர்களுக்கான வழிகளிலேயே செயல்படுகின்றனர்; ஏனெனில், ஒவ்வொருவரினுள்ளும் கடவுள் அவரவரின் வழியிலேயே செல்ல தூண்டுகிறார். உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள்; அதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக வையுங்கள்!


*2. மன்னியுங்கள்; மறந்து விடுங்கள்!


மன அமைதிக்கு இது மிக சக்தி வாய்ந்த மருந்தாகும். சாதாரணமாக யாராவது நம்மை நோகடித்தாலோ அவமானப்படுத்தினாலோ நமக்குத் தீங்கு விளைவித்தாலோ அவர்கள் மீது தவறான எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொள்கிறோம். நாம் மனக்குறைப்பாட்டுக்கு நம் மனதை நம்மை அறியாமலே பயிற்றுவிக்கிறோம்.


இது தூக்கமின்மை, வயிற்று அல்சர் மற்றும் இரத்த அழுத்தம் போன்றவை உருவாக காரணமாகிறது. இத்தகைய அவமானப்படுத்துதல் அல்லது ரணப்படுத்துதல் ஒரு முறை நிகழ்ந்தால், அவற்றைத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்திக் கொள்வதால் மற்றவர் மீதான மனக்குறைபாடு நிரந்தரமாகிறது.இந்தத் தவறான பழக்கத்துக்கு முடிவு கட்டுவோம். மிகக் குறுகிய இவ்வாழ்வில் எதற்காக இத்தகைய சிறிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? மறப்போம்; மன்னிப்போம்; முன் செல்வோம். மன்னிப்பதன் மூலமும் கொடுப்பதன் மூலமும் அன்பை வளப்படுத்திக் கொள்வோம்.


*


3. அங்கீகாரத்திற்காக அலையாதீர்!


இவ்வுலகம் முழுக்க சுயநலவாதிகளே நிறைந்துள்ளனர். அவர்கள் தங்களின் சொந்தத் தேவைக்காகவே எப்போதாவது மற்றவர்களைப் பாராட்டுகின்றனர்-புகழ்கின்றனர். அவர்கள் ஒருவேளை இன்று உங்களைப் புகழலாம் – அவர்களுக்குத் தேவையானதைக் கொடுக்கும் சக்தி உங்களுக்கு இருப்பதால். ஆனால், ஒருவேளை வெகு சீக்கிரத்திலேயே நீங்கள் ஒன்றுமில்லாதவராக ஆகலாம்; அப்போது, உங்களின் சாதனைகளை அவர்கள் மறப்பதோடு, உங்களிடம் தவறுகளைக் கண்டுபிடிக்க ஆரம்பிப்பார்கள். இத்தகையவர்களின் அங்கீகாரத்திற்காக கடுமையாக முயற்சி செய்து, உங்களை நீங்களே ஏன் சாகடிக்க வேண்டும்? அவர்களின் அங்கீகாரம் கேடு விளைவிப்பதை விட பெறுமதியானதல்ல! நேர்மையாகவும் நன்னோக்கத்தோடும் உங்கள் வேலையைச் செய்து கொண்டிருங்கள்; அதற்கான அங்கீகாரத்திற்காக ஏங்காதீர்கள்.


4. பொறாமை கொள்ளாதீர்!

வயிற்றெரிச்சல்(பொறாமை) கொள்வது நம் அமைதியான மனதை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதில் நாம் அனைவருமே அனுபவம் உள்ளவர் தான்! உங்கள் அலுவலகத்தில் உடன் பணி செய்பவரை விட நீங்கள் கடின உழைப்பாளி என்பது உங்களுக்குத் தெரியும்; ஆனால், சிலவேளைகளில் அவர்களுக்குப் பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கலாம்; உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம். பல ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கிய உங்கள் தொழிலில் உங்களுக்குக் கிடைத்த வெற்றியை விட பல மடங்கு, தொழில் துவங்கி ஒரு ஆண்டே ஆன உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்குக் கிடைக்கலாம். இது போன்று நம் தினசரி வாழ்வில் பல உதாரணங்களைக் காணமுடியும். இவற்றுக்காக நீங்கள் பொறாமை-வயிற்றெரிச்சல் கொள்ளலாமா? கூடாது!


நினைவில் கொள்ளுங்கள்: ஒருவரின் தினசரி வாழ்வு அவரின் விதியால் பரிணாமம் பெறுவதோடு, அதுவே அவரின் இப்போதைய நிஜமாகவும் ஆகிறது. நீங்கள் பணக்காரராக ஆகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால், இந்த உலகில் எதுவுமே அதனைத் தடுக்க முடியாது. நீங்கள் பணக்காரராக ஆவது விதிக்கப்பட்டிருக்கவில்லையேல், அவ்வாறு ஆவதற்கு எதுவுமே உதவவும் செய்யாது. உங்களின் பேறின்மைக்கு மற்றவர்களைப் பழிப்பதால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. பொறாமை-வயிற்றெரிச்சல் உங்களை எங்குமே கொண்டு சேர்க்காது; அது உங்களின் மன அமைதியைக் கெடுப்பது அல்லாமல்!


5. சூழலுக்குத் தகுந்து உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்!

உங்கள் சுற்றுப்புறத்தை நீங்கள் தனியாக மாற்ற முயற்சி செய்தால் நீங்கள் தான் தோற்றுப்போவீர்கள். அதற்கு மாற்றாக, உங்கள் சுற்றுப்புறத்துக்குத் தகுந்தாற் போல் வாழ உங்களை மாற்றிக்கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் செய்தால், உங்களுக்குத் தோழமையாக இல்லாத அந்தச் சுற்றுப்புறத்தில் கூட அதிசயகரமான மாற்றத்தையும் இனிமையான உங்களுக்கு ஒத்துப்போகும் நிலையையும் காண்பீர்கள்.


6. உங்களால் குணமாக்க முடியாததைச் பொறுத்துக் கொள்ளுங்கள்!

இது தீமையை நன்மையாக்குவதற்கான அருமையான வழியாகும். தினசரி நம் கட்டுப்பாட்டில் இல்லாத எண்ணற்ற தொல்லைகள், நோய்கள், எரிச்சல்கள் மற்றும் விபத்துகளை நாம் சந்திக்கின்றோம். நம்மால் அவற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் போனாலோ அல்லது அவற்றை மாற்ற இயலாமல் போனாலோ அவற்றை எதிர்கொள்வது எவ்வாறு என்று நாம் கண்டிப்பாக பயில வேண்டும். அவற்றை நாம் மலர்ச்சியாக சகித்துக் கொள்வதைப் பயில வேண்டும். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வையுங்கள்; அது பொறுமை, உள்சக்தி மற்றும் மன உறுதியை உங்களுக்கு வழங்கும்.


7. சக்திக்கு மீறிய செயலைச் செய்யாதீர்!

இந்த முக்கியமான தேவையை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்தல் நன்று. நாம் அடிக்கடி நம்மால் செய்ய இயலும் அளவுக்கு மீறிய அதிகப்படியான பொறுப்புகளை எடுத்துக் கொள்கிறோம். இது நமது தன்முனைப்பு-செருக்கைத் திருப்தி படுத்துகிறது. உங்களின் வரம்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகப்படியான கவலைகளை அளிக்கவல்ல அதிகச் சுமைகளை நாம் ஏன் எடுத்துக் கொள்ள வேண்டும்? உங்களின் புறச்செயல்பாடுகளை அதிகப்படுத்திக் கொள்வதால் மன அமைதியை அடையமாட்டீர்கள். உலகத்துடனான (பொருள்முதல்வாதத்துடனான) தொடர்பைக் குறைத்துக் கொண்டு, வணக்கங்கள், தியானம், தன்னிலை ஆய்வு போன்றவற்றில் அதிக நேரம் செலவழியுங்கள். இது ஓய்வற்ற உங்கள் மன எண்ணங்களைக் குறைக்கும். சுமைகள் குறைந்த மனம், அதிக மன அமைதியை உருவாக்கும்.


8. ஒழுங்காக தியானம் செய்வதைப் பழக்கமாக்குங்கள்

தியானம் – உள்மன ஆய்வு – மனதுக்கு அமைதி தருவதோடு, தொந்தரவு தரும் எண்ணங்களிலிருந்து விடுவிக்கவும் செய்கிறது. இது அமைதியான மனதின் அதிஉயர் நிலையாகும். தியானம் செய்வதற்குத் தன்னைத் தானே முயன்று பழகிக்கொள்ளுங்கள். தினசரி குறைந்தது அரைமணி நேரமாவது உள்ளார்ந்தமாக தியானம் செய்ய முடிந்தால், உங்கள் மனம் அடுத்த இருப்பத்து மூன்றரை மணி நேரத்துக்கு அமைதியடைவதற்கு உத்தரவாதமே வழங்கலாம். அத்தகைய ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், முன்பு உள்ளதைப் போன்று உங்கள் மனம் அவ்வளவு இலகுவாக தொந்தரவு அடையாது.

சிறிது சிறிதாக தியானம் செய்வதன் அளவைத் தினசரி அதிகரித்துக் கொண்டால், அதன் பயனை அடைந்துக் கொள்ளலாம். ஒருவேளை இது உங்களின் தினசரி வேலைகளில் தலையிடுவதாக எண்ணலாம். அதற்கு மாறாக, இது உங்களின் திறமையை அதிகரிக்க வைப்பதோடு, மிகக் குறுகிய காலத்தில் நல்ல விளைவுகளை உருவாக்க உங்களால் முடியும்.


9. உள்ளத்தை வெற்றிடமாக ஒருபோதும் விடாதீர்கள்!

வெற்றிடமான மனம் சாத்தானின் பயிற்சிகளம்! எல்லா தீய பழக்கங்களும் வெற்றிடமான மனங்களிலிருந்தே உருவாகின்றன. உங்கள் உள்ளத்தைச் சில நேர்மறை எண்ணங்களாலும் பயனுள்ள விஷயங்களாலும் நிறைத்து வையுங்கள். சுறுசுறுப்பாக உங்கள் பொழுதுபோக்கில் ஈடுபடுங்கள். உங்கள் விருப்பம் சார்ந்த விஷயத்தில் ஏதாவது செய்யுங்கள். பணமா? அல்லது அமைதியான உள்ளமா? இதில் எது உங்களிடம் அதிக பெறுமதியானது என்பதைக் கண்டிப்பாக நீங்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். சமூகப்பணி அல்லது மதப்பணி போன்ற உங்களின் பொழுதுபோக்குகளில் பெரும்பாலும் நீங்கள் அதிகப் பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. ஆனால், நீங்கள் மனநிறைவையும் சாதித்த திருப்தியையும் அடைய முடியும். உடல் ஓய்வு எடுக்கும் நேரங்களில் கூட, ஆரோக்கியமான வாசிப்பிலும் கடவுளின் பெயரை உளப்பூர்வமாக கண்ணை மூடி உச்சரிப்பதிலும் உங்கள் உள்ளத்தை நிறைத்துக் கொள்ளலாம்.


10. தள்ளிப்போடாதே; எதற்கும் வருந்தாதே!

“இது என்னால் முடியுமா? முடியாதா?” என்று பெரிதாக எண்ணி காலம் கடத்தி நேரத்தை வீணாக்காதீர்கள். இத்தகைய பயனற்ற மனப்போராட்டங்களால் நாட்கள், வாரங்கள், மாதங்கள் சிலவேளை வருடங்கள் கூட வீணாகலாம். உங்களால் போதுமான முழு அளவுக்குத் திட்டமிட்டுக் கொள்ள முடியாது. ஏனெனில், எதிர்காலத்தில் நடப்பதை உங்களால் ஒருபோதும் முன்பே பூரணமாக உணர்ந்து கொள்ள முடியாது. உங்கள் நேரத்தின் மதிப்பை உணர்ந்து, முடிக்க வேண்டியவைகளை யோசித்துக் கொண்டிராமல் உடனடியாக செய்யத் துவங்குங்கள்.

முதல் முறை நீங்கள் தோல்வியடைவது விஷயமேயில்லை. நீங்கள் செய்த தவறுகளிலிருந்து பாடம் பயின்று அடுத்த முறை நீங்கள் பரிபூரணமான வெற்றியடையலாம். சாய்ந்து உட்கார்ந்து கவலை கொண்டிருப்பது எதற்கும் பயன் தராது – மன அமைதியைக் கெடுப்பதைத் தவிர. உங்களின் தவறுகளிலிருந்து பாடம் பயிலுங்கள்; ஆனால் ஒருபோதும் கடந்து போனதை நினைத்து வருந்தி ஏங்காதீர்கள். எதற்கும் வருத்தமடையாதீர்கள். எது நடந்ததோ அது நடப்பதற்குரிய விதியின் வழியில் நடந்து முடிந்தது. கிடைக்காத பாலுக்கு ஏன் அழ வேண்டும்?


***
thanks Mohamed
***"வாழ்க வளமுடன்"

பித்தம் தீர்க்கும் வில்வம்


பித்தம் தீர்க்கும் வில்வம்
சித்த மருத்துவத்தில் பித்தத்தைத் தணிக்கும் மிக முக்கிய மூலிகை வில்வம். பல்லாயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மண்ணில் இருந்துவரும் அரிய மரங்களில் ஒன்று. வில்வம் பித்தத்துக்கு அருமருந்து. பண்டைய நாட்களில் பழங்களின் ராஜா எனப் போற்றப்பட்டதும் வில்வம் பழம்தான். வில்வ மரத்தின் இலை, பட்டை, பழம், வேர் அனைத்துமே மருத்துவக் குணமுடையது.
வில்வம், மஹாவில்வம் என இரண்டு வகை உண்டு. பெரும்பாலும், மருத்துவத்துக்கு வில்வமே பயன்படுகிறது. சர்க்கரை நோய், பேதி, பித்தக் கிறுகிறுப்பு, தலைசுற்றல், ஒவ்வாமை (அலர்ஜி), அஜீரணம், வயிற்று உப்புசம் எனப் பல நோய்களுக்கும் வில்வம் மிகச் சிறந்த மருந்து. நாள்பட்ட ஒவ்வாமை நோய் (Atopy) மற்றும் மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம் உள்ளிட்ட நோய்களுக்கு வில்வ இலை, வேம்பு இலை, துளசி இலை மூன்றையும் சமபங்கு எடுத்து, நிழலில் உலர்த்திப் பொடித்துக்கொள்ள வேண்டும். இதில், அரை ஸ்பூன் அளவுக்கு காலை, மாலை சாப்பிட்டுவந்தால், படிப்படியாய் நீரேற்றம் குறையும். ஒவ்வாமையினால் வரும் சைனசிடிஸ் மற்றும் உடல் அரிப்பும் குறையத் துவங்கும்.
ஒவ்வாமையால் வரும் இரைப்பு (ஆஸ்துமா) நோய்க்கு, இரவில் ஒன்பது வில்வ இலைகளை ஒரு மண் பாத்திரத்தில் ஒன்றரைக் குவளைத் தண்ணீர் விட்டுவைத்திருந்து, காலையில் இலைகளை அகற்றிவிட்டு, தண்ணீரை மட்டும் குடிக்கலாம். படிப்படியாக ஒவ்வாமையைக் குறைத்து, அதனால் ஏற்படும் இரைப்பு நீங்கும். 50 கிராம் வில்வ இலைத்தூளுடன், 10 கிராம் மிளகு சேர்த்து, நன்கு பொடி செய்து கலந்துகொள்ள வேண்டும். காலை, மாலை இரண்டு வேளையும் அரை டீஸ்பூன் அளவுக்குப் பொடியை எடுத்து, தேனில் குழைத்துச் சாப்பிடலாம். இது, ஈஸ்னோபீலியா என்ற ஒவ்வாமையினால் வரும் நீரேற்றம் மற்றும் மூச்சிரைப்புக்கு நல்ல பயன் அளிக்கும் என நவீன அறிவியலால் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் இன்றும் தஞ்சை மாவட்டங்களில் ஒரு பாரம்பரிய முறையாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வயிற்றுப் புண்களுக்கு (கேஸ்ட்ரிக் அல்சர்) வில்வம் பழம் சிறந்த மருந்து. துவர்ப்புத்தன்மையும் மலமிளக்கித்தன்மையும் பசியை உண்டாக்கும். சித்த மருத்துவத்தில் வில்வம் பழத்தில் மணப்பாகு செய்து, பித்தத்தினால் வரும் குன்ம நோய்க்குக் கொடுக்கலாம் (பெப்டிக் அல்சர்). இதனை நாமே வீட்டில் செய்து கொள்ளலாம். வில்வம் பழச் சதையை 100 கிராமுக்கு 200 மி.லி தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டி, ஒரு பங்கு நாட்டுச் சர்க்கரை சேர்த்து, சிரப் பதத்தில் காய்ச்சி, சிறிது தேன் கலந்துகொள்ளவும். காலையில் ஒரு ஸ்பூன், இரவு ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். அஜீரணம், வயிற்று உப்புசம் இரண்டுக்கும் வில்வப் பட்டையைக்கொண்டு செய்யும், வில்வாதி லேகியம் நல்மருந்து.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க, வில்வம் ஓர் அற்புத மூலிகை. வில்வ இலை வில்வம் பழம் இரண்டும், குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்து. வில்வப் பட்டை, விளாப் பட்டை, நன்னாரி, சிறுபயறு, நெற்பொறி, வெல்லம் சேர்த்து, ஒன்றரை லிட்டர் தண்ணீர் விட்டு 200 மி.லியாகக் கொதிக்கவைத்து அந்தக் கசாயத்தைக் கொடுத்தால் வாந்தியோடு வரும் காய்ச்சல் நீங்கும். வில்வ இலையை நல்லெண்ணையில் காய்ச்சி காது நோய்களுக்கு, காதில் விடும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது.
இன்று பெருகிவரும் தொற்றாத வாழ்வியல் நோய்கள், உளவியல் நோய்கள், பத்தில் மூன்று நபருக்கு வருவதாக மருத்துவப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உளவியல் நோய்களில் முதலாவதாக மனஅழுத்தம் நீங்க வில்வம் ஒரு தலைசிறந்த மருந்து. வில்வ இலையைக் கொதிக்கவைத்து முன்பு கூறியதுபோல் ஊறவைத்தோ கஷாயமாக்கியோ சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும். வில்வம் பழத்தில் தற்போது ‘சிரப்’ மணப்பாகு சந்தைகளில் கிடைக்கிறது. அதை வாங்கி, தினமும் ஓரிரு ஸ்பூன் தண்ணீரில் கலந்து அருந்திவரலாம்.***
thanks dr
***"வாழ்க வளமுடன்"
      

உங்கள் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருக்கிறதா?

டி.வி, ஏ.சி, மொபைல் போன், லேப்டாப் என வீட்டுக்குத் தேவையானவற்றை அதிக விலை கொடுத்து வாங்கும் வீடுகளில்கூட, சில நூறு ரூபாயில் கிடைக்கும் முதலுதவிப் பெட்டிகள் இருப்பது இல்லை. நமக்கு ஏதும் ஆகாது எனும் அலட்சியம் அல்லது என்றைக்கோ நடக்கும் விஷயத்துக்கு எதுக்கு எனும் மெத்தனம்தான் இதற்குக் காரணம். ஆபத்து, எந்த நொடியிலும் ஏற்படலாம். முதலில், அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியப் பொருளே முதலுதவிப் பெட்டிதான்.
கிருமிநாசினி
டெட்டால் போன்ற கிருமிநாசினிகள் அவசியம் இருக்க வேண்டும். உடலில் எந்த இடத்தில் அடிபட்டாலும், அடிபட்ட இடத்தின் வழியாக கிருமிகள் உடலுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க, சிறிதளவு கிருமிநாசினியால் அடிபட்ட இடத்தைத் துடைக்க வேண்டும். வீடுகளில் ரத்தம் சிந்தியிருந்தாலோ, அசுத்தங்கள் நிறைந்திருந்தாலோ, தண்ணீரில் கிருமிநாசினி கலந்து, அந்த இடத்தில் தெளித்து, நன்றாகத் துடைத்தால் வீட்டுக்குள் கிருமிகள் அண்டாது.
பஞ்சு
காயங்கள் ஏற்பட்டாலோ, தோல் அரிப்பு, சிரங்கு, சீழ் வடிதல் போன்ற பிரச்னை ஏற்பட்டாலோ, பழைய துணிகளால் கட்டுப்போடுவது, அடிபட்ட இடத்தைத் பழைய துணியால் துடைப்பது கூடாது. பஞ்சை வைத்துதான் துடைக்க வேண்டும். பஞ்சைப் பயன்படுத்தியவுடன் உடனடியாகத் குப்பைத் தொட்டியில் எரிந்துவிட வேண்டும். பயன்படுத்திய பஞ்சுகளை, வீட்டுக்குள் வைத்திருக்கக் கூடாது. சிறிதளவு கெட்டித்தன்மை கொண்ட தரமான பஞ்சாகப் பார்த்து வாங்கவும்.
பேண்டேஜ்
எதிர்பாராதவிதமாக ஏற்படும் சின்னச்சின்னக் காயங்களுக்கு பேண்டேஜ் போட வேண்டியிருக்கும். சின்னக் காயங்களை நன்றாகக் கிருமிநாசினி வைத்துத் துடைத்த பிறகு, பேண்டேஜ் போடவும். நன்றாகப் புண் ஆறிய பிறகு, முதலுதவி செய்வதில் தேர்ந்தவர்கள் அல்லது மருத்துவர்கள் மூலமாக, பேண்டேஜை அகற்றலாம். வட்ட வடிவிலும், நீள வடிவிலும், சதுர வடிவிலும் பேண்டேஜ்கள் கிடைக்கின்றன. பெரிய காயங்களுக்கு மருத்துவரின் அனுமதி பெற்ற பிறகுதான் பேண்டேஜ் அணிய வேண்டும்.
பாராசிட்டமால்
சாதாரண காய்ச்சல், தலைவலி போன்றவற்றுக்கு எப்போதாவது பாராசிட்டமால் பயன்படுத்தலாம். ஓரிரண்டு மாத்திரைக்குள் நிவாரணம் கிடைக்காவிடில் மறுபடியும் பாரசிட்டாமல் மாத்திரைகளை எடுத்துக்கொள்ள கூடாது. மருத்துவரை அணுக வேண்டும். அவசரத் தேவைக்கு மட்டுமே பாராசிட்டமால் பயன்படுத்த வேண்டும்.
ஐசார்டில்
மாரடைப்பு ஏற்பட்டால், இதயத் தசைக்கு ரத்தம் செல்வது தடைப்படும். மாரடைப்பு வரும் என உணரும் நொடியில் அல்லது மாரடைப்பு வந்த சில நொடிகளுக்குள் ஐசோசார்பைடு டை நைட்ரேட் (Isosorbide dinitrate)) இருக்கக்கூடிய ஐசார்டில் (Isordil) மாத்திரையைச் சாப்பிட்டுவிட்டு, மிக விரைவாக மருத்துவமனையை நாடினால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இது, ரத்தக்குழாய் அடைப்பைச் சற்று தளர்த்தும். எனவே, உடல் எடை அதிகம் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், வயதானவர்கள் வசிக்கும் வீடுகளில் கட்டாயம் ஐசார்டில் மாத்திரை இருக்க வேண்டும். இதயநோய் இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரையின்பேரில் இந்த மாத்திரையை மாரடைப்பு ஏற்படும் சமயங்களில் சாப்பிடலாம்.
தீக்காய மருந்து
தீக்காயம் ஏற்படும்போது, உடலில் நீர்ச்சத்து குறையும். எனவே, முதலில் குழாய் நீரில் தீக்காயம் ஏற்பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும். அதன் பிறகு, தண்ணீர் குடிக்க வேண்டும். சில்வர் சல்ஃபாடையாசின் நிறைந்த களிம்புகளைத் தடவ வேண்டும். பெரிய அளவிலான தீ விபத்து ஏற்படும்போது, களிம்புகள் தடவக் கூடாது. மிக விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
வலி நிவாரணிகள்
வயிற்று வலி வந்தால், தற்காலிக நிவாரணம் கிடைக்க டைசைக்லமின் (Dicyclomine), டிரோட்டோவெரின் (Drotoverine) உள்ள மாத்திரைகள் (உதாரணம்: பஸ்கோபான்) வாங்கி வைத்துக்கொள்ளவும். திடீர் காது வலி, பல் வலி, மூட்டுவலி ஏற்படும் சமயங்களில் வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படும்.
கையுறை
மருந்துகளைக் கையாளும்போதும், முதலுதவி செய்யும்போதும், தரமான கையுறை அணிந்துகொள்வது நல்லது. கையுறை அணிவதால் கையில் இருக்கும் அழுக்குகள் வழியாகக் கிருமிகள் மற்றவருக்குப் பரவாது. கையுறையைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம்.
கத்திரிக்கோல்
காயம்பட்ட இடத்தில் முதலுதவி செய்யும்போது, பேண்்டேஜைக் கத்திரிக்க, கைக்கு அடக்கமான சின்ன கத்திரிக்கோல் தேவையாக இருக்கும். அவ்வப்போது துடைத்து, துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
டிட்பிட்ஸ்:
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதலுதவிப் பெட்டியில் இருக்கும் மருந்துப் பொருட்களின் காலாவதித் தேதிகளை சோதித்து, அன்றைய தேதியில் இருந்து குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் தள்ளி இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
வலி நிவாரணி, பாராசிட்டமால் போன்ற மாத்திரைகளை வாங்கும்போது, 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையாக வாங்க வேண்டும். அப்போது
தான், காலாவதித் தேதியைச் சுலபமாக சோதனை செய்ய முடியும்.
இருமல் மருந்துகள் போன்றவற்றை, முதலுதவிப் பெட்டியில் வைக்க வேண்டாம்.
ஒன்று அல்லது இரண்டு வேளை தலா ஒரு மாத்திரை சாப்பிட்டும் பயனளிக்கவில்லை எனில், மருத்துவரை அணுக வேண்டும். தொடர்ந்து சுயமாக மாத்திரை சாப்பிடக் கூடாது.
முதலுதவிப் பெட்டிகளை, குழந்தைகள் கைக்கு எட்டாதவாறு வைக்க வேண்டும். முதலுதவிப் பெட்டியில் உள்ளவற்றை அவசர நேரத்தில் எப்படிப் பயன்படுத்துவது என, வீட்டில் உள்ள சிறுவர்களுக்கும் பெற்றோர் ் சொல்லித்தர வேண்டும்.
வலிப்பு, ஆஸ்துமா, ஸ்ட்ரோக் போன்ற பிரச்னைகளுக்கு உடனடியாக மருத்துவரை அணுகுவதே சிறந்தது.

***
thanks
***"வாழ்க வளமுடன்"
      

மேகியில் மட்டும்தான் விஷமா….மற்றதெல்லாம் அமுதமா?

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டு, விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு விட்டது. அதை கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளில் விற்பனை செய்துவந்த ஒருசில பெரு நிறுவன அங்காடிகள் தாமாகவே முன்வந்து, அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு அரசுகள் அளவிலான உத்தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை எனினும், ‘வாய்மொழி உத்தரவுகள்’ பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

மேகியில் கன உலோகங்களும் மற்ற நச்சுப் பொருட்களும் அனுமதிக் கப்பட்ட அளவினை விட அதிகம் இருந்ததா இல்லையா என்ற விவாதத் திற்குள் நான் போக விரும்பவில்லை. இந்த விவகாரத்தால் விளைந்த நன்மை என்று பார்க்கையில், மக்கள் ‘பாதுகாப்பான உணவுகளை’ப் பற்றி ‘பேச’ ஆரம்பித்துள் ளனர். படிக்காதவர்கள் கூட, பைகளில் அடைக்கப் பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தைப் பற்றிப் பேசுகின்றனர்.
ஆனால், எனது வினாக்கள், “இப்போது அனைத்தும் சரியாகிவிட்டதா?

இனி நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அத்தனையும் சத்துக்கள் மட்டுமே நிறைந்த, நச்சுக் கலக்காத பண்டங்களாகி விட்டனவா?” என்பவையே! ஏனென்றால், நாம் விஷங்கள் தோய்ந்த உணவை உண்ண ஆரம்பித்து ஆண்டுகள் பலவாய் நீண்டு விட்டன! இன்றைக்கு ஒரு நூடுல்ஸ் வகையைத் தடை செய்ய முனைப்பு காட்டிய ஆட்சியாளர் களும், அதிகாரிகள் வர்க்கமும் இந்த பிரச்சினையை அறிந்தும் அறியாமல் இருக்கின்றனர் என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால், அரசுகளின் திட்டங்கள் சிலவும் இந்த உணவுகள் நஞ்சாவதை ஊக்குவிக்கின்றன என்றே சொல்லலாம். அது எப்படி?


கீரை வகைகள் பல்வேறு சத்துக்களைக் கொண்டவை என்று எல்லா தரப்பினராலும் விரும்பி உண்ணப் படும் ஒரு காய்கறி. ஆனால், இந்தக் கீரைகளின் உற்பத்தி எப்படி, எங்கு நடக்கின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பெரும்பாலும் கீரைகள் நகர்ப்புறங்களுக்கு மிக அருகாமையில் உள்ள நிலங்களி லேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏனெனில் கீரைகள் அறுவடை செய்த சில மணி நேரங்களிலேயே வதங்கிவிடும் என்பதால், உடனடி விற்பனை என்பது மிக அத்தியாவசியமானது.

நகர்ப்புறங்களில் மங்காத தேவையும், குன்றாத விற்பனையும் இருக்கின்ற காரணத்தால் கீரைகள் நகரங் களுக்கு அருகில் மிக அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆனால், நகர்ப்புறங்களுக்கு அருகினில் விளைவிக்கப்படும் கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளில் கன உலோகங்கள் அதிகம் இருப்பதாகப் பல்வேறு பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


உதாரணத்திற்கு, சற்றொப்ப ஒரு மாமாங்கத்திற்கு முன்னர், தில்லிக்கு மிக அருகில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளைப் பார்ப்போம். இந்த ஆய்வு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு, தில்லிக்கு வெளியில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படும் ஐந்து முக்கிய இடங்களில், வெண்டை, காலிஃப்ளவர் மற்றும் பசலைக் கீரை ஆகிய மூன்று முக்கியமான காய்கறிகளின் மாதிரிகளைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் சேகரித்து, அவற்றில் காரீயம், தாமிரம், துத்தநாகம், மற்றும் நீலீயம் (காட்மியம்) ஆகிய கன உலோகங்களின் அளவினை கணக்கிட்டது. அவற்றுள் 72 விழுக்காடு பசலைக்கீரை மாதிரிகளில் காரீயத்தின் அளவு, இந்திய உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவான ஒரு கிலோவிற்கு இரண்டரை மில்லிகிராம் என்ற அளவினை மிகுந்திருந்தது.


இந்த இடத்தில் இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள காரீயத் தின் அளவானது, சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட அளவான கிலோவிற்கு 0.3 மி.கி. உடன் ஒப்பிட் டால், சற்றொப்ப ஏழு மடங்கு அதிகமாகும். அப்படிப் பார்த்தால் அனைத்து பசலைக்கீரை மாதிரிகளிலுமே அனுமதிக்கப்பட்ட அளவினைவிட காரீயம் மிகுந்திருப்பது தெளிவாகின்றது.

நீலீயத்தின் அளவு, இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே (1.5 மி.கி/கிகி) இருப்பினும், ஐரோப் பிய ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுடன் (0.2 மி.கி/கிகி) ஒப்பிடுகையில், சற்றொப்ப எழுபது விழுக் காடு பசலைக்கீரை மாதிரிகளில் நீலீயத்தின் அளவும் அதிகமே! இந்த ஆய்வின் முடிவு, ஒருபானை சோற் றுக்குப் பதம் பார்க்க எடுக்கப்பட்ட ஒரு பருக்கை மட்டுமே! அதற்குப் பின்னர் கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ இது போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன.இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்; இந்த கன உலோகங்கள் பிரச்சினை ஏதோ இந்தியாவில் மட்டுமே இருப்பதன்று. பல வளரும் நாடுகளிலும் (உ-ம்: இந்தோனேசியா, எத்தியோப்பியா, தான்சானியா) உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் கன உலோகங்களின் கலப்பு உள்ளது.
விவசாய பொருட்களின் உற்பத்தியில் இன்னோர் அரக்கன் – பூச்சிக்கொல்லிகள்! காய்கறிப் பயிர்கள் பலவற்றின் உற்பத்தியிலும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மிக அதிகம்! உதாரணத்திற்கு, தொண்ணூறு களின் இறுதியில் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளைப் பார்க்கலாம். கர்நாடகம் தக்காளி அதிகம் பயிரிடும் மாநிலங்களில் ஒன்று. தக்காளியில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்க ஒருசில விவசாயிகள் ஐம்பது முறைகூட பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதாக அந்த ஆய்வு கூறுகின்றது.

நாங்கள் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கர்நாடகம், குஜராத் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங் களில் முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் பயிரிடும் விவசாயிகளிடம் நடத்திய ஓர் ஆய்வில், அவர்கள் எக்டருக்குப் பதினொன்று முதல் இருபத்து மூன்று கிலோ பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பது தெரியவந்தது. அப்படியானால் இந்தப் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு எந்தளவிற்கு, விற்பனைக்கு வரும் காய்கறி களில் நிலைத்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இது ஏதோ இந்தியாவில் மட்டுமே நிலவும் பிரச்சினை அல்ல… வங்கதேசத்தில் ஒரு எக்டர் கத்தரிக்காய்க்கு 180 முறை, அதாவது தினந்தோறும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் கொடுமை நடந்திருக்கின்றது.
பிலிப்பைன்ஸில் ஒரு எக்டர் கத்தரிக்காய்க்கு, சுமார் 41 லிட்டர் பூச்சிக்கொல்லிகளைக் கூட தெளித்துள் ளனர். ஆக பெரும்பாலான நாடுகளில் மக்கள் விஷம் தோய்ந்த உணவுப் பண்டங்களைத்தான் உட்கொள் கின்றனர்.
இப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத நச்சுக்களை யார் கண்டுபிடிப்பது?


 எந்த அரசு அமைப்பாவது தொடர்ந்த இடைவெளிகளில் காய்கறி மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்கின்றதா? ஏதோ அங்கொன்றும் இங் கொன்றுமாக நடக்கும் ஆய்வுகளே அவற்றை வெளியுலகத்திற்குக் காட்டுகின்றன. ஆனால் பெரும்பாலான அரசுகள் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. அதைவிட கொடுமை, வேளாண் இடுபொருட்களான வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் அரசுகளே கூட வழங்குகின்றன.


நச்சுத்தன்மையற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய சம்மந்தப்பட்ட துறைகள் எந்த முன்னெடுப்பையாவது மேற்கொண்டுள்ளனவா? “வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் குறிப்பிட்ட அளவிற்குத்தான் பயன்படுத்த வேண்டும்; இந்தளவிற்கு மேல் பயன்படுத்தினால் பலன் ஏதும் கிட்டப் போவதில்லை; மாறாக பணவிரயத்துடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், நாம் உண்ணும் உணவும் நஞ்சாகும்” என்பதனை என் றைக்காவது, முறையாக விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்களா?

இன்றைய சூழலில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப உணவுப் பண்டங்களை விளைவிக்கும் சூழலில் விவசாயிகள் உள்ளனர். அதனால், அதிக விளைச்சலே அவர்களது நோக்கம். கொஞ்சம் கூட, தங்களது விளைபொருட்களை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதால் இழக்க அவர்கள் விரும்புவதில்லை. எனவேதான் அதிகளவில் வேதி இடுபொருட்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், தம் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசும், வேளாண் பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் என்ன செய்திருக்க வேண்டும்? வேதி இடுபொருட்களுக்கு மாற்றான இயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும், பூச்சி விரட்டிகளையும் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவித்திருக்க வேண்டாமா?


சுமார் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே இதுபோன்ற சில ஆராய்ச்சிகள் மட்டுமே முன்னெடுக்கப் பட்டன. ஒருசில நல்ல உயிரியல் பூச்சிக்கொல்லிகளும், இனக்கவர்ச்சிப் பொறிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை முறையாக வணிகப்படுத்தப்படவில்லை. ஆராய்ச்சிகளில் விளையும் பொருட்கள், ஆய்வுக்கூடங்களை விட்டு வெளியேறி, சந்தைக்கு வந்தால் ஒழிய அந்த கண்டுபிடிப்புகளின் நோக்கம் முற்றுப் பெறுவதில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், வேளாண்துறை, கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்துவதில் பின்தங்கியே உள்ளது. இதற்கு அரசுகளும் ஒரு காரணம்.


இதுபோன்ற சுற்றுச் சூழலுக்கேற்ற, விடமற்ற உணவுப்பொருட்களை விளைவிக்க ஏதுவான கண்டுபிடிப்பு களைச் சந்தைக்குக் கொண்டுவர இசைவான கொள்கைமுடிவுகளை எடுக்க வேண்டும். அந்த தொழிலில் ஈடுபட நாட்டமுள்ள நிறுவனங்களுக்கு உரிய உதவிகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டும். இயற்கைக்கு ஒத்திசைவான இடுபொருட்களை மானியவிலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு நடக்குமானால், படிப்படியாக சில ஆண்டுகளிலேயே இதுபோன்ற இடுபொருட்கள் சந்தையில் சகஜமாக புழக்கத்திற்கு வந்துவிடும்.

விவசாயிகளும் அவற்றை அதிகளவில் பயன்படுத்துவர். அதைவிடுத்து,
அதுபோன்ற ஆராய்ச்சிகளும் அதிகம் நடக்காமல், அதுபோன்ற இடுபொருட்களும் சந்தையில் அதிகளவில் இல்லாதபோது, விவசாயி களிடம் சென்று, வேதி இடுபொருட்களைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொன்னால், அவர்கள் எப்படி காதுகொடுத்து கேட்பர்? ஏற்கனவே நட்டத்தில் இருக்கும் வேளாண் தொழிலில் அவர்களும் கொஞ்சமேனும் இலாபம் ஈட்டத்தானே முயலுவார்கள்? இருப்பினும், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக விவசாயிகள் இயற்கைக்கு இசைவான இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்ய முனைகின்றனர்.


ஆனால் இந்த முன்னெடுப்புகள் பல்கிப் பெருக வேண்டுமானால், அரசும், வேளாண் பல்கலையும், வேளாண் துறையும் அதிக முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, கன உலோகங்கள் கலந்த எத்தனையோ பொருட்கள் இன்று மனித வாழ்வில் பயன்பாட்டில் உள்ளன.
அவற்றின் கழிவுகள் மண்ணி லும், நீரிலும்தான் நிறைகின்றன. அதுபோன்ற நிலத்தில் விளையும் பொருட்களிலும், அது போன்ற நீரி னைப் பயன்படுத்தி உருவாகும் பொருட்களிலும், கன உலோகங்களின் கலப்பு அதிகமாகத்தான் இருக்கும். எனவே மேலை நாடுகளில் இருப்பதைப் போன்று, கழிவுகள் மேலாண்மை முறையாகச் செய்யப்படாதவரை, இந்த பிரச்சினைகள் எழுவது தவிர்க்க இயலாததே!


இறுதியாக, நுகர்வோர்களும் விழிப்புடன் இருத்தல் அவசியம். ஏதோ சமைத்தோம், எதையோ சாப்பிட் டோம் என்றில்லாமல், உணவுப்பண்டங் களைத் தெரிவு செய்து வாங்குவதில் தொடங்கி சமைத்து உண்பது வரை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நுகர்வோர் கொடுக்கும் அழுத்தம், விவசாய உற்பத்தியாளர்களைச் சரியான உற்பத்தி முறை களைப் பின்பற்றச் செய்யும். இந்த உற்பத்தி மற்றும் நுகர்வுச் சங்கிலியில், தனியார்துறை என்னும் கண்ணியின் பங்கெடுப்பும் இருக்குமானால், நலம் மிகு உணவுப்பண்டங்களின் உற்பத்தியும், நுகர்வும் எளிதில் சாத்தியமாகும்.
ஆக, ஒருங்கிணைந்த முன்னெடுப்புகளைச் செய்யாவிட்டால், நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் பல வற்றிலும் தேவையற்ற நச்சுப் பொருட்களின் கலப்பு இருப்பதைத் தவிர்க்க இயலாது. ஏதோ ஒரு நூடுல் ஸை மட்டும் தடை செய்துவிட்டு, இனியெல்லாம் நமக்கு நலம்தான் என்றிருந்தால், பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போலத்தான்!


***
By vayal
***"வாழ்க வளமுடன்"
      

அதிக புரோட்டீன் வேண்டாமுங்க!

தாவர உணவு உண்ணும் ஒருவருக்கு தேவையான அளவு புரதம் ஒருபோதும் கிடைக்காது என்ற மூடநம்பிக்கை பரவலாகக் காணப்படுகின்றது. ஆனால், தாவர உணவு வகைகளே உடலுக்கு தேவையான சரியான அளவு புரதத்தை கொண்டுள்ளன என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், புரதம், அளவுக்கு சற்று மிஞ்சினாலும் கொழுப்பாக மாறி ஆரோக்கியத்திற்கு பாதகமாகிவிடும். கட்டுடல் பெறவும், உடல் எடை அதிகரிக்கவும் சிலர் மாமிச உணவே புரதத்தின் சிறந்த ஆதாரமாக கருதுகின்றனர். ஆனால், மாமிச உணவும், பால் பொருட்களும் கொண்டுள்ள புரதம், கொழுப்பின் வடிவமே என்பது பலரும் அறியாத ஒன்று.
இது, அளவுக்கு அதிகமான புரதத்தை கொண்டுள்ள உணவு முறை. இது, உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகையான பிரச்னைகளைக் கொடுக்கும். சிறுநீரக உபாதை: அளவுக்கதிகமான புரதத்தை உட்கொள்ளும் போது, நாம் அளவுக்கு அதிகமான நைட்ரோஜென் வாயுவை உட்கொள்ளுகிறோம். இது சிறுநீரகத்தில் தேவையற்ற நைட்ரோஜென் வாயுவை, சிறுநீர் மூலம் வெளியேற்றும் வகையில் ஒரு அழுத்தத்தை உருவாக்குகிறது. இதுவே நாளடைவில், சிறுநீரகத்தின் செயல்பாட்டுக்கு ஊறு விளைவிக்கிறது. எனவே, சிறுநீரக பிரச்னைகள் உள்ளவர்கள், புரதம் குறைந்த உணவு முறையை மேற்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. அத்தகைய உணவு முறை, அளவுக்கதிகமான நைட்ரோஜென் அளவை குறைப்பதோடு மட்டுமல்லாமல், சிறுநீரகப் பிரச்னைகள் வராமல் தடுக்கவும் செய்கிறது.


புற்றுநோய்:

புரதமும் புற்றுநோய் உருவாக ஒரு காரணம் என்பது பலரும் அறியாத ஒன்றாகும். நார்ச்சத்து இல்லாத உணவுகள் மற்றும் மாமிச உணவுகளில் இருக்கும் இயற்கையான புற்றுநோய் காரணிகள் புற்றுநோய் உருவாக பெரும் காரணமாக விளங்குவதாக, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மாமிச உணவை உண்ணும் மக்கள், கோலான் புற்றுநோயின் தாக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். அமெரிக்கப் புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தின், உணவு, ஊட்டச்சத்து மற்றும் புற்றுநோய் தடுப்பு பிரிவின் ஆராய்ச்சியில், மாமிச உணவு சில குறிப்பிட்டத்தக்க புற்றுநோய் வகைகளின் காரணியாக விளங்குவது தெரிய வந்துள்ளது.

மிருக புரதம் நிறைந்த உணவு, மனிதனின் செரிமானத்தில் அபாயகரமான சில விளைவுகளை உருவாக்குகின்றன. அவை, சிறுநீரகத்தை இயல்பு நிலைக்கு அதிகமான கால்சியத்தை சிறுநீர் மூலமாக வெளியேற்றச் செய்கிறது. இதன் மூலம், எலும்புகளுக்குத் தேவையான சுண்ணாம்புச்சத்து கிடைக்காமல் போவதால், எலும்புகள் எளிதில் தேய்மானத்திற்கு உள்ளாகின்றன. அபரிமிதமான கால்சியம் வெளியேற்றப்படுவதால், சிறுநீரகத்தில் கல் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது


***
By vayal
***"வாழ்க வளமுடன்"
      

அண்ணல் நபிகளாரின் 60 பொன் மொழிகள் !!!


1. செயல்கள் அனைத்தும் எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

2. இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறா...க உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்.

3.அமானிதத்தை ( அடைக்கலப் பொருளை) பேணிக் காக்காதவனிடம் ஈமான் இல்லை (நம்பிக்கை இல்லை) வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் தீன் (இறைநெறி) இல்லை.

4. உங்கள் வீடுகளில் இறைவனுக்கு மிக விருப்பமானது அனாதைகளை அரவணைக்கும் வீடேயாகும்.

5. நிதானம் என்பது இறைவனின் தன்மையாகும். அவசரம் ஷெய்த்தானின் தன்மையாகும்.

6. உங்களில் நற்குணம் உடையவரே உங்களில் சிறந்தவர் ஆவார்.

7. எளிமையாக வாழ்வது இறை நம்பிக்கையின் பாற்பட்டதாகும்.

8. எந்த மனிதனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, அவன் அதை அறியாமைக்கால வழக்கப்படி உயிரோடு புதைக்கவில்லையோ, அதனை இழிவாக கருதவில்லையோ, அதைக்காட்டிலும் ஆண் குழந்தைகளுக்கு முன் உரிமை வழங்கவில்லையோ அத்தகையவனை இறைவன் சுவனத்தில் புகுத்துவான்.

9. இலஞ்சம் வாங்குபவர் மீதும், இலஞ்சம் கொடுப்பவர் மீதும் இறைவனின் சாபம் உண்டாகட்டும்.

10. கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியை கொடுத்துவிடுங்கள்.

11. பதுக்கல் செய்பவன் பாவியாவான்.

12. தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

13. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

14. தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புகளில் மிகச் சிறந்தது அவர்களுக்குஅளித்திடும் நல்ல கல்வியும், நல்லோக்கப் பயிற்சியும் ஆகும்.

15. அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்பு பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திட தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே.

16. நான் உங்களுக்கு மிகச்சிறந்த தர்மம் ஒன்றை கூறட்டுமா? அது, தனக்கு பொருளீட்டி உணவளிக்க வேறு யாருமில்லை என்ற நிலையில் உன் பக்கம் திருப்பி அனுப்பப்பட்ட உன் மகள் தான்.

17. அநாதையின் தலையை இரக்கத்துடன் தடவுங்கள்.

18. ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

19. இறைவனின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்கள் தம் விருந்தாளிகளை உபசரிக்கட்டும்.

20. தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் வயிறார உண்பவர் ஓர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.

21. பசித்தவன் ஒருவனுக்கு வயிறு நிறைய நீ உணவளிப்பது மிகச்சிறந்த தர்மமாகும்.

22. தன் அடிமைகளின் மீதும் பணியாட்களின் மீதும் தன் அதிகாரத்தை தவறாக பிரயோகித்தவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

23. நோயாளிகளை நலம் விசாரியுங்கள்.

24. உங்களில் ஒவ்வொருவரும் தன் சகோதரனின் கண்ணாடியாவார். எனவே, ஒருவர் தன் சகோதரன் துன்பத்தில் சிக்கி இருப்பதை கண்டால் அதனை அவர் நீக்கி விடட்டும்.

25. உனது தந்தையின் அன்பை நீ பாத்துக்காத்து கொள். அதை முறித்து விடாதே அவ்வாறு அதை முறித்து கொண்டால் இறைவன் உனது ஒளியை போக்கி விடுவான்.

26. இறைவனின் உதவி என்னும் கை ஒன்றுப்பட்ட மக்களின் மீதிருக்கிறது.

27. உங்களில் இறந்தவர்களின் நற்செயல் பற்றியே கூறுங்கள்.

28. இறைவனை அஞ்சுங்கள். உங்கள் மக்களிடையே நீதமாக நடந்து கொள்ளுங்கள்.

29. பெருமை அடிப்பவன் சுவனத்தில் நுழைய மாட்டான்.

30. நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள். விரும்புவதை அணியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை, உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்கக் கூடாது.

31. இறுதி தீர்ப்பு நாள், கொடுமைக்காரனுக்கு இருள் மிக்கதாக இருக்கும்.

32. குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வீரன் அல்ல. மாறாக, கோபம் வரும் போது தன்னைத்தானே அடக்கி கொள்பவனே வீரன் ஆவான்.

33. எவரையும் பழித்து காட்டுவதை நான் விரும்பவில்லை.

34. புறம் பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும்.

35. கோள் சொல்பவன் சுவனம் நுழைய மாட்டான்.

36. நெருப்பு விறகைச் சாம்பலாக்கி விடுவதைப் போல் பொறாமை நற்செயல்களை சாம்பலாக்கி விடும்.

37. தன் நாவையும், வெட்கத்தலத்தையும் ஒருவர் பாதுகாத்து கொள்வதாக பொறுப்பேற்றால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்

 38. நாவை அடக்கு. உன்னால் தீய உணர்வுகளை அடக்க முடியும்.

39. தீமைக்கு பின் அதை அழிக்கவல்ல நன்மையை செய்யுங்கள்.

40. மௌனம் சாதிப்பது அறிவு நிறைந்த செயல்.

41. இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மம் தான்.

42. நாணம் நன்மையை மட்டுமே கொணர்கின்றது.

43. ஒரு வினாடி நேர சிந்தனை, ஓராண்டு கால இறை வணக்கத்தை விடச் சிறந்தது.

44. உம்முடைய உறவை துண்டித்து வாழ்பவனுடன் நீ சேர்ந்து வாழு. உமக்கு அநீதம் இழைத்தவனை மன்னித்து விடும்.

45. நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடையாளமாகும். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

46. உண்மையான வியாபாரி நபிமார்கள், தியாகிகள், நல்லடியார்கள் முதலியோர்களுடன் சுவனத்தில் இருப்பார்.

47. வணக்க வழிப்பாடு உள்ள ஒரு உலோபியை விட வணக்க வழிப்பாடு
குறைந்த ஒரு கொடையாளி இறைவனுக்கு மிக சிறந்தவன்.

48. தர்மத்தில் சிறந்தது இடது கைக்கு தெரியாமல் வலது கையால் கொடுப்பது தான்.

49. இரசியமாக செய்யும் தர்மம்தான் இறைவனின் கோபத்தை தடுக்கும்.

50. ஒரு மனிதன் பெற்றோரை ஏசுதல் பெரும் பாவமாகும்.

51. தன் பெற்றோரை நிந்திப்பவன் தன் மக்களால் நிந்திக்கப்படுவான்.

52. கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும்.

53. பிள்ளைகள் பேரில் உபகாரமாயிருக்கும் தாய் தந்தையருக்கு இறைவன் அருள் செய்கிறான்.


54. ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு கொப்பாகும்


55. வணக்கங்களில் மிக இலகுவானதை நான் உங்களுக்கு தெரிவிப்பதானால் அது மௌனம் காக்கும் நாவும், மங்களமான நற்குணமும்தான்.

56. மிதமிஞ்சிய உணவு அறிவை கெடுத்து, ஆரோக்கியத்தை குறைக்கும்.


57. செல்வவளம் என்பது அதிகமாக செல்வத்தை பெறுவதல்ல. போதுமென்ற மனதை பெறுவதே உண்மையான செல்வமாகும்.

58. இறைவன் யாருக்கு நலவை நாடுகிறானோ அவனுக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பான்.

59. நம் சிறுவர்களிடம் மரியாதை காட்டாதவனும், பெரியோர்களுக்கு மரியாதை செய்யாதவனும் நம்மை சார்ந்தவனல்ல.

60. உன் சகோதரனின் துன்பத்தை கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே. இறைவன் அவன் மீது கருணை புரிந்து உன்னை துன்பத்தில் ஆழ்த்திடுவான்


 http://madhanrajs.blogspot.in/

***

"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "