...

"வாழ்க வளமுடன்"

17 ஆகஸ்ட், 2010

ஒட்ஸ் பிஸ்கட்

வெண்ணை :1 கப்
வெள்ளம்: 1 கப்(பொடி பண்ணிக்கொள்ளவும்)
சர்க்கரை : 1/2 கப்
முட்டை : 2
வெணிலாஎசன்ஸ் : 1 டீ ஸ்பூன்
மைதா : 1 1/2 கப்
பேக்கிங் சோடா : 1 டீ ஸ்பூன்
பட்டைபவுடர்(cinnamon) : 1 டீ ஸ்பூன்
ஒட்ஸ் : 2 கப்
காய்ந்த திராட்சை :1/2கப் (திராட்சைக் பதிலாக சாக்லேட் சிப்ஸ் சேர்த்துகொள்ளலாம் )


***

செய்முறை:

*


வெண்ணை,சர்க்கரை ,இரண்டையும் நன்றாக அடித்து கொள்ளவும் .

*

பிறகு அத்துடன் முட்டை ,வெணிலாஎசன்ஸ் இரண்டையும் சேர்க்கவும் .சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும் .

*

மைதாவுடன், பேக்கிங் சோடா (Baking Soda)சேர்த்து சலித்துக் கொள்ளவும்.பிறகு வெள்ளம் ,மைதா எல்லாவற்றையும் வெண்ணை முட்டை கலவையுடன் சேர்க்கவும் .


*

நன்றாக கலந்து கொள்ளவும்.அடிக்கவேண்டாம்.அத்துடன் காய்ந்த திராட்சை , ஒட்ஸ் போட்டு கலக்கவும்.பிறகு சிறிய சிறிய உருண்டைகாளாக உருட்டி வைக்கவும்.


*

கேக் செய்யும் பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, 350 டிகிரி F-ல் 10 முதல் 12 நிமிடம் பேக் பண்ணவும்.


*

ஓவன் இல்லாதவர்கள் ஒரு கடாயில் மணலைக் கொட்டி சூடுபடுத்தி, அதில் கேக் கலவை பாத்திரத்தை வைத்து மூடி (இட்லிக்கு வேக விடுவதுபோல்) 12 நிமிடம் (அ) பொன்னிறமாக வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.


***

'அதிகாலை' அகல்யா‏


***
"வாழ்க வளமுடன்"குழந்தைகளின் பற்களை பாதுகாக்க... சில வழிமுறைகள்!
பொதுவாக குழந்தை பிறந்து 6 மாதங்களில் கீழ் வரிசையின் மத்தியில் முதல் பல் முளைக்கும். சில குழந்தைகளுக்கு ஓர் ஆண்டு வரையிலும் கூட பல் எதுவும் முளைக்காமலே கூட இருக்கும்.

இரண்டறை வயதில் 20 பால் பற்கள் முளைத்துவிடும். பால் பற்கள் தற்காலிகமானவை; நிரந்தரப் பல் 6 வயதில் முளைக்கத் தொடங்கும்.

* குழந்தைகளுக்கு பல் முளைக்கும் முன்பே ஈறுகளை மென்மையான ஈரத்துணியால் உணவு கொடுத்த பிறகு சுத்தம் செய்வது முதல் படி.

* பல் முளைத்தவுடன் மென்மையான டூத் பிரஷ்ஷால் நாளைக்கு 2 முறை பல் விளக்கலாம். டூத் பேஸ்ட் வர்த்தக விளம்பரங்களில் காண்பிப்பது போல் நீளமாக பிரஷ் பகுதி முழுவதும் பற்பசையை போட வேண்டிய அவசியமில்லை; சிறு கீற்று போல் போட்டாலே போதுமானது. சிறு குழந்தைகள் புளோரைட் சுவைக்கு மயங்கி பற்பசையை உட்கொள்வது சகஜம்தான். ஆனால் அதிக புளோரைட் உட்கொண்டால் பற்களில் நிரந்தரக்கறை படிந்துவிடும். புளோரைட் என்பது இயற்கையாகவே சம்பவிக்கும் ஒரு கனிப்பொருள், பற் சிதைவிலிருந்து புளோரைட் பற்களை பாதுகாக்கிறது. நம் எச்சிலில் உள்ள கனிப்பொருள்கள் கூட பற்களை உறுதிப்படுத்தும், ஆனால் இதற்கும் கூட புளோரைட் தேவை. தண்ணீரிலிருந்து தேவையான புளோரைட் கிடைப்பதில்லை. இதனாலேயே பற்பசையுடன் புளோரைட் சேர்ப்பது வழக்கம்.

ஆனால், பற்பசையில் புளோரைடின் அளவு குறித்து நாம் கவனம் கொள்வது நல்லது, பற்பசையில் புளோரைடின் அளவு 500 PPM முதல் 1000-1500 PPM வரை இருக்கும்.

ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 PPM புளோரைட் அடங்கிய பற்பசையே சரியானது. ஏனெனில், நிரந்தரப் பற்கள் முளைக்கும்போது அதிகமான புளோரைட் பற்பசை பற்களில் நிரந்தரக் கறையை உருவாக்கிவிடும்.

* குழந்தைகளின் உணவுப்பழக்க வழக்கம் பல் பாதுகாப்பில் குறிப்பிட்ட பங்கு வகிக்கிறது. எச்சில், பற்களை சுத்தப்படுத்தும். ஆனால், எச்சில் ஊற நேரம் தேவை. பகலில் குழந்தைகளுக்கு தீனி அடிக்கடி கொடுக்கப்பட்டால், எச்சில் பற்களை சுத்தம் செய்ய வாய்ப்பே இருக்காது. இரண்டு உணவுகளுக்கிடையே இனிப்புகள் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

* பாலையோ, தண்ணீரையோ பாட்டில்களில் கொடுத்தால் குழந்தைகளின் பற்களுடன் அது நீண்ட நேரம் தொடர்பு கொண்டிருக்கும். இது தவிர்க்கப்பட வேண்டும். ஒரு வயது முடியும் தருவாயில் கோப்பையில் அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்தி விடுவது சிறந்தது. அதே போல் படுக்கையில் குழந்தைகளை பாட்டிலுடன் கிடத்த வேண்டாம், பகலிலும் கூட குழந்தையை பாட்டிலும் கையுமாக அலைய விடுவதை தவிர்ப்பது நல்லது.

* ஈறுகளில் பற்கள் முளைக்கும் போது குழந்தைகளுக்கு லேசாக வலி ஏற்படலாம் அல்லது சிறு சிறு அமளயிலும் குழந்தைகள் ஈடுபடும். பல் முளைக்கும் போது, காய்ச்சல், வயிற்றுப் போக்கு மற்றும் பிற நோய்கள் ஏற்படாது. இது போன்ற அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.

* ஒரு வயது முடிந்தவுடன் பல் மருத்துவரிடம் குழந்தையை காண்பிப்பது நல்லது. இதன் மூலம் மருத்துவருக்கும் பிரச்சினைகள் முதலிலேயே தெரிந்துவிடும் என்பதோடு ரெகுலர் செக் அப்பிற்கு குழந்தையும் தயாராகிவிடும்.

* குழந்தைகளுக்கு விவரம் தெரியும்போது பற்களை சுத்தமாக வைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் கற்றுக் கொடுப்பது அவசியம்.

***

நிகழ்வுகள்.காம்.

***

"வாழ்க வளமுடன்"

பெற்றோர்கள் கவனத்துக்கு..!

சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களைப் பற்றிய செய்திகள் நாம் தினமும் பார்க்கின்ற ஒன்றாகிவிட்டது. அதைப் படிக்கும்போது 'யாருக்கோ நடந்த சம்பவம் தானே' என்று பெற்றோர்களாகிய நாம் கவலைப்படுவதில்லை.

னால், யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நடக்க கூடிய விதத்தில் இப்போது இச்சம்பவங்கள் அதிகமாக நம் சமூகத்தில் நடந்து கொண்டிருகின்றது. அவற்றைத் தடுப்பதற்காக நாமே சில முன்னெச்சரிகை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்வது அவசியமே.

நம் சமூகத்தில் சிறுமிகள்தான் பாலியல் கொடுமைக்கு மிகுதியாக ஆளாகின்றனர். அதேபோல், சிறுவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாமால் இல்லை.

பாலியல் பற்றிய அடிப்படைக் கல்வியை தங்களது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டியது ஒவ்வொரு தாய்மார்களின் கடமை. ஏனென்றால், வெளியாட்கள் குழந்தைகளுடைய அறியாமையை பயன்படுத்தி கொள்கிறார்கள். உதாரணமாக, வீட்டிலுள்ள டிரைவர், வீட்டு வேலைக்காரர்கள், வெளியிலுள்ள தெரிந்தவர்கள், வீட்டுக்கு வருகின்ற சொந்தக்காரர்கள் போன்றவர்களிடமிருந்து தான் குழந்தைகளுக்கு செக்ஸ் தொல்லைகள் ஏற்படுகின்றது.

அதனால் குழந்தைகளைக் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். தவறான காரியம் செய்பவர்களிடம் இருந்து எவ்வாறு சிக்காமல் இருப்பது என்று குழந்தைகளுக்குப் புரிய வைக்க வேண்டியது பெற்றோர்கள்தான்.

குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகாமல் இருக்க, குழந்தைகளுடைய சந்தேகங்களை பெற்றோர்களே அவர்களுக்கு முன்கூட்டியே புரிய வைப்பதே நல்லது.

அதைப் பற்றிய தேவையான விவரங்களை குழந்தைகளுக்கு தெரியபடுத்திக் கொள்வதில் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுடைய சந்தேகங்களை அலட்சியப்படுத்தி ஒதுங்குவது நல்லதல்ல. அவர்களுடைய வயதுக்கேற்ற சந்தேகங்களுக்கு பதில் அளிக்கலாம்.

அம்மாவை அப்பா தொடுவது சகஜம். ஆனால், வேரு யாருக்கும் அதற்கான உரிமை கொடுக்கப்படவில்லை என்று சொல்லும்போது, குழந்தைகளுடைய மனதில் பாலியல் ரீதியான முதல் கேள்வி பதிகின்றது.

யாரையும் உடம்பில் தொடக்கூடாத இடங்களில் ஸ்பரிசிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு முன்கூட்டியே புரிய வைக்க வேண்டும்.

வேகமாக வசீகரிக்க முடிகின்ற இறைதான் குழந்தைகள். போலியான அன்பை யார் காட்டினாலும், அதை ஒதிக்கிகொள்வதற்கு குழந்தைகளை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தங்களது விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நமக்குப் பிடித்த உணவு, மொபைல் போன் போன்ற பொருட்களை பழக்கமில்லாதவர்கள் பரிசாக தருவார்கள் என்று குழந்தைகள் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

குழந்தையின் கையில் வீட்டுக்கு தெரியாத எந்த ஒரு பொருளைப் பார்த்தாலும், அது எங்கிருந்து கிடைத்தது என்று பெற்றோர்கள் கேட்க வேண்டும்.

தங்களது குழந்தையின் நண்பர்கள் யாரெல்லாம் என்று பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும்.

பள்ளிக்கூடத்தில் போகமாட்டேன் என்று குழந்தை சொல்லும் போது, அதன் காரணம் என்னவென்று பெற்றோர்கள் கண்டிப்பாக கேட்டு தெரிந்திருக்க வேண்டும். படிப்பதற்கு விருப்பமில்லாமல், அல்லது பள்ளியும் ஆசிரியரும் பிடிக்காமல் இருக்கலாம் என்று நாமே யோசித்து முடிவெடுப்பது பல நேரங்களில் சரியாக இருக்க வாய்ப்பில்லை.

ஒருவர் தன்னிடம் மோசமாக நடந்துகொண்டால், அதைக் நேராக நம்மிடம் சொல்ல குழந்தைகள் தயங்குவார்கள். இதனால், குழந்தைகளுக்கு பல மாற்றங்கள் மனதளவிலும் உடலளவிலும் உண்டாகின்றன. அதை அவர்கள் தங்களது வழக்கத்துக்கு மாறான செய்கைகளால்தான் வெளிப்படுத்துகிறார்கள்.

அந்த நேரங்களில் குழந்தைகள் பேசுவதை குறைத்துக் கொள்வார்கள்; சுறுசுறுப்பில்லாமல் இருப்பார்கள்; காரணமில்லாமல் அதிர்ச்சி அடைவது, சாப்பிடுவதில் வெறுப்பு... இப்படி குழந்தைகளுடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தால், அதற்கான காரணம் என்னவென்று தெளிவாக அறிந்திருக்க வேண்டும்.

வீட்டில் பெற்றோர்களுடனோ, பெரியவர்களுடனோ தங்களுடைய எல்லா விஷயங்களும் பகிர்ந்து கொள்வதற்கான சுதந்திரம் குழந்தைகளுக்கு கொடுத்திருக்க வேண்டும்.

பாலியல் கொடுமைக்கு ஆளான விவரத்தை வெளியில் சொல்லக்கூடாது என்று எவரேனும் பயப்படுத்தி வைத்திருந்தாலும், அதை பெற்றோர்களிடம் தைரியமாக சொல்வதற்கான சுதந்திரம் குழந்தைக்கு இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நல்ல முறையில் ஆடை அணிவிப்பதில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும். குழந்தைகளுக்கு ஸ்லீவ்லெஸ் அழகாக இருக்கலாம், ஆனால், குழந்தைகளுடைய மார்பு முழுவதும் தெரிகின்ற விதத்தில் ஆடைகள் அணிவிப்பதை தவிர்க்க வேண்டும். உடல் மறைத்துகொள்கின்ற மாதிரியான ஆடைகளை குழந்தைகளுக்கு அணிவிக்கவும்.

சொந்தக்காரராக இருந்தாலும், பக்கத்து வீட்டுக்காரராக இருந்தாலும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு போவதற்கு நீங்கள் அனுமதிக்கக் கூடாது. சொந்தக்காரராக இருந்தாலும் குழந்தைகளை அவர்களுடன் படுக்க அனுமதிக்க கூடாது.

குழந்தைகளோடு திறந்த மனதோடு பழகுவதே, அவர்களுக்கு ஏற்ப்படுகின்ற பிரச்சனைக்கு மிகவும் பயனான சிகிச்சை என்று உளவியல் மருத்துவர்கள் கருதுகிறார்கள்.

செக்ஸ் முதல் எவ்விதமான விஷயங்களைப் பற்றி குழந்தைகள் கேட்டாலும், அதற்கு மனம் திறந்து இலகுவான விளக்கங்கள் அளித்தாலே பிரச்சனைகள் தீர்க்க முடியும். சிறார்களுக்கு அவர்களது வீடுதான் கவுன்சிலிங் சென்டர். அப்படியில்லாமல், சந்தேகம் கேட்கும் குழந்தைகளைத் திட்டுவது பாதக நிலைக்குத் தள்ளிவிடும்.

குடும்ப பொறுப்புகளை சுமந்து ஓடி உழைக்கின்ற பெற்றோர்களுக்கிடையே சொந்த வீட்டிலேயே குழந்தைகள் அனாதையாகின்றனர். இது, அவர்களது மனதை மிகவும் பாதிக்கிறது.
குழந்தைகளுக்குள்ளும் பிரச்சனைகள் புதைந்து கிடக்கின்றது என்ற யதார்த்தத்தை புரிந்து குழந்தைகளோடு நண்பர்களைப்போல் பழகுவதற்கும், அதோடு அவர்களுடைய நம்பிக்கைக்கு ஆளாகவும் பெற்றோர்களை முடியாமல் போகின்றது. இதன் விளைவாக குழந்தைகள் தவறான வழிகள் தேடி போகின்றார்கள்.

குழந்தைகள் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொள்வதென்றும், எப்படி பேசுவதென்றும் பெற்றோர்கள் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒருவர் தேவையில்லாமல் தவறான எண்ணத்துடன் உடம்பில் தொட்டால், அதை குழந்தையால் புரிந்து கொள்ள முடிய வேண்டும். அவர்களிடம் பார்வையாலும், தேவைப்பட்டால் எச்சரிகையாவும் பேச குழந்தைக்கு துணிச்சல் தர வேண்டும்.

குழந்தைகளை கொஞ்சுவதற்கும், அவர்களுடன் பேசுவதற்கும் பெற்றோர்கள் நேரம் காணவேண்டும். குழந்தைகளை கட்டித் தழுவ வேண்டும், அவர்களுக்கு முத்தம் கொடுக்க வேண்டும்.

பெற்றோர்களிலிடமிருந்து பராமரிப்பு கிடைக்கின்ற குழந்தைகளுக்கு இப்படிப்பட்ட பாலியல் கொடுமைகள் நேர வாய்ப்புகள் இல்லை. தங்களை தேவையில்லாமல் தொட யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை!

***

நிகழ்வுகள்.காம்.

***


"வாழ்க வளமுடன்"

ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த சில வழிமுறைகள்


ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முக்கிய வழிமுறைகள் சிலவற்றைக் காண்போம் வாருங்கள்...

***

* தூய்மையான காற்று வீசும் பகுதிகளில் மட்டுமே வசிப்பது அவசியம்.

* தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது நன்மை தரும்.

* கொழுப்புச் சத்து ௦அதிகம் உள்ள பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவு வகைகள், மீன் வகைகளில் அதிக கொழுப்பு உள்ள சுரா, கெளுத்தி, மடவை, கானாங்கத்தை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

* குளிர்ச்சி நிறைந்த உணவு வகைகள் குறிப்பாக வெண்பூசணி, சௌசௌ, புடலங்காய், பீர்க்கங்காய் ஃப்ரிட்ஜில் வைக்கப்பட்ட பதார்த்தங்கள், தயிர் அசிட்டிக் அமிலம் அதிகம் உள்ள எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, புளிப்பு உள்ள திராட்சை போன்ற பழ வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

* அதிக காரமும் அதிக புளிப்பும் தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.

* எளிதில் ஜீரணமடையும் உணவு வகைகளையே உட்கொள்ள வேண்டும்.

* மூச்சு விடுதல் சிரமம் என்பதால், வயிறு முட்ட உண்ணுதல் கூடாது.

* இரவு உணவு சாப்பிடுவதை 7 மணியளவில் வைத்துக்கொள்வது சிறந்தது.

* கீரை வகைகளில் தூதுவளை, முருங்கக் கீரை, கரிசலாங்கண்ணிக் கீரை, சுண்டக்காய், சுண்ட வத்தல் ஆகியவற்றை பயன்படுத்துவது ஆரோக்கியம் தரும். இவை குறிப்பாக ஆஸதுமா நோய்க்கு மூல காரணமான சளியை அகற்றுகிறது.'

* உடற்பயிற்சி அவசியமாகும். குறிப்பாக, யோகாசனம் செய்வது இந்நோயால் ஏற்படும் மன உளைச்சலுக்கு சிறந்த மருத்துவமாக செயல்படுகிறது. மேலும் யோகாசனம் உள்ளுறுப்புகளை முறையாக வேலை செய்ய வைக்கிறது.

* யோகாசனத்தின் மிகப்பெரிய கொடையான மூச்சு பயிற்சி செய்வதன் மூலம் நுரையீரலில் நச்சுத்தன்மை வெளியேற்றப்படுகிறது. சுத்தமான காற்றை உள்ளிழுக்கச் செய்வதன் மூலம் ரத்த சுத்திகரிப்பு செய்வதோடு மூச்சுக் குழலில் ஏற்படும் அடைப்புகளையும் நீக்குகிறது.

* சிறந்த ஆசிரியரிடம் கற்றுக்கொண்டு தியானப்பயிற்சி செய்துவந்தால் ஆஸ்துமாவை நாம் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல அதிலிருந்து பூரண குணமடைவதும் சாத்தியமே.

* நாடிசுத்திப் பிராணாயாமம், உஜ்ஜாயி பிராணாயாமம் மற்றும் ஆசனப் பயிற்சியையும் மூச்சுப் பயிற்சியையும் தகுந்த ஆசிரியரின் வழிகாட்டுதலோடு செய்யவேண்டும். மூச்சோடு இணைந்த உடற்பயிற்சி மட்டுமே ஆஸதுமா நோயிலிருந்து பூரண குணமளிக்கவல்லது என்பது நம் முன்னோர்களின் கருத்து.

* கருவுற்ற தாய்மார்கள் குழந்தைக்கு ஆஸதுமா நோய் வராமல் தடுப்பதற்கு, அவர்கள் உண்ணும் உணவு வகைகள் பெரும்பங்கு வகிக்கின்றன. மேற்குறிப்பிட உணவு முறைகளைப் பின்பற்றுவது நன்மை பயக்கும்.


***


நிகழ்வுகள்.காம்.


***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "