...

"வாழ்க வளமுடன்"

29 அக்டோபர், 2010

உங்கள் விரல் நகங்களுக்கு அழகூட

உணவுமுறை :



1. நல்ல சத்தான உணவு - விட்டமின் ஏ, விட்டமின் சி , கால்ஸியம், ஃபோலிக் ஆஸிட், புரோட்டீன், விட்டமின் பி12 நிறைந்த உணவுகளை அவசியம் சாப்பிட வேண்டும்.

*

2. பழங்கள், பச்சைக் காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

*

3. கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது. அதிக அளவு தண்ணீர் குடிப்பது நகங்களைப் பாதுகாக்கும்.


***

நகங்களுக்கு அழகூட்ட :


1. நகங்களைக் கிள்ள, கீற, குழி பறிக்க கருவி போல் உபயோகிக்காதீர்கள்.

*

2. அழகு சாதனங்களை, குறிப்பாக வாசனைத் திரவியங்களை குறைந்த அளவில் உபயோகிக்கவும்.

*

3. அதிக நேரம் தண்ணீரில் கை வைத்திருக்கத் நேர்ந்தாலோ அல்லது பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தல் போன்ற வேலைகளில் ஈடுபடும்போதோ கையுறைகளை உபயோகிப்பது நல்லது.

*

4. நகங்களை வெட்டும் போது உங்கள் கைவிரலுக்கேற்றவாறு வளைவாக வெட்டவும்.

*

5. நகங்களைக் கழுவி எப்போதும் உலர்வாக வைத்திருக்கவும்.

*

6. இளஞ்சூடான நீரில் நகங்களை சிறிது நேரம் ஊற வைக்கவும்.

*

7. தரமான லோஷன்களைத் தடவி மஸாஜ் செய்யவும்.

*

8. நகப் பூச்சு போடும்முன் நகத்தில் ஏற்கெனவே இருக்கும் பூச்சுக்களை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு நெயில் பாலிஷ் ரிமூவர் உபயோகிக்கவும்.

*

9. நிதானமாக, முறைப்படி உலர வைத்து நகப் பூச்சு போடுவதால் நகங்கள் நன்கு பாதுகாக்கப்படும்.

*

10. நகங்கள் அடிக்கடி உடைந்தால் உணவில் கவனம் தேவை என அர்த்தம். கால்ஸியம் குறைந்தாலோ, அதிக நேரம் தண்ணீரில் இருந்தாலோ நகங்கள் அடிக்கடி உடைய வாய்ப்புண்டு.


***
thanks womens
***

"வாழ்க வளமுடன்"

பொலிவு தரும் இயற்கை முகப் பூச்சுகள்


1. உப்புப் பூச்சு

தேவையான பொருட்கள் :

கடல் உப்பு
இளஞ்சூட்டில் வெந்நீர்

செய்முறை :

கடல் உப்பை மணல் பதத்திற்கு இளம் சூடான தண்ணீரில் கலக்கவும். முகத்தை ஆவியில் காட்டவும். பின்னர் உப்பு பூச்சைத் தடவவும். 15-20 நிமிடங்களுக்குப் பிறகு குளிர் நீரில் கழுவவும்.

கடல் உப்பு சரும துவாரங்களை அடைத்துப் பொலிவும் புத்துணர்ச்சியும் கொடுக்க வல்லது.


***


2. முட்டைப் பூச்சு

தேவையான பொருட்கள் :
1 முட்டை வெள்ளை
1 tsp. தேன்

செய்முறை :

முட்டை வெள்ளையை நன்கு நுரை வரும் வரை அடித்துத் தேனைக் கலக்கவும். முகத்தில் கண்ணைத் தவிர மற்ற இடங்களில் தடவவும். 10 நிமிடம் கழித்து குளிர் நீரால் கழுவவும்.

மிச்சம் இருப்பதை சில நாட்களுக்குக் குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம். உபயோகிக்கும் முன் கலவையை நன்கு கலக்கவும்.


***

3. பால் பூச்சு

தேவையான பொருட்கள் :

2 tbsp. பால்
1 tbsp எலுமிச்சை சாறு
1 tbsp பிராந்தி

செய்முறை :
மேற்கூறிய மூன்றையும் நன்கு கலந்து முகத்தில் தடவவும்.10 - 15 நிமிடத்திற்குப் பிறகு குளிர் நீரால் கழுவவும்.


***


4. பால்பவுடர் பூச்சு

தேவையான பொருட்கள் :

1/2 கப் பால் பௌடர்
1 tbsp இளம் சூடான நீர்
3/4 tbsp. பால்

செய்முறை :
மூன்றையும் நன்கு குழைய கலக்கவும். முகம், கழுத்தில் தடவவும். சில நிமிடங்களுக்குப் பிறகு முகம் கழுவி மீண்டும் தடவவும். 10 நிமிடத்திற்குப் பிறகு முதலில் இளம் சூடான நீரிலும், பின் குளிர் நீரிலும் கழுவவும்.


***

5. ஓட்ஸ் பூச்சு

தேவையான பொருட்கள் :

2 tbsp ஓட்மீல்
2 tbsp பன்னீர்
1/2 கப் பால்

செய்முறை :

பாலையும் ஓட்மீலையும் கலந்து மிதமான சூட்டில் பசை போல் ஆனதும் பன்னீர் சேர்க்கவும். இளம் சூட்டிலேயே முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும்.

இந்தப் பூச்சு வயோதிகத் தன்மையைக் குறைக்கும்.


***
thanks இணையம்.
***



"வாழ்க வளமுடன்"

டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க...

காலையில் விழித்தெழும்போது, இன்றைய தினம் செய்ய வேண்டிய வேலைகள் என்னென்ன என்று சிந்தித்துக் கொண்டே எழுந்தால், "டென்ஷன்` தானாகவே தொற்றிக் கொள்ளும்.




இதைத் தவிர்க்க:


1. மூதல் நாள் இரவே, அடுத்த நாள் செய்ய வேண்டிய வேலைகள், தொடர்பு கொள்ள வேண்டிய நபர்கள், வாங்க வேண்டிய பொருட்கள் என முக்கியமான வேலைகளை ஒரு பேப்பரில் எழுதி விட்டு, நிம்மதியாகப் படுத்துத் தூங்க வேண்டும்.


*

2. அடுத்த நாள் எழும்போது, இதைப் பற்றிய சிந்தனையே இல்லாமல், இனிமையான சங்கீதம் கேட்க வேண்டும். பல் துலக்குவது, பால்/ காபி/ டீ குடிப்பது, காலைக் கடன்களை முடிப்பது உட்பட முதல் அரை மணி நேர வேலைகளை செய்து முடித்த பின், முதல் நாள் இரவு எழுதிய பட்டியலைப் பார்த்துக் கொண்டால், எந்தெந்த வேலைகளை முதலில் செய்வது என்ற தெளிவு பிறக்கும்.

*

3. சுறுசுறுப்பாய் வேலைகளைச் செய்யத் துவங்கலாம். இது அடிப்படை. இது தவிர, தினமும் உங்கள் மனதை, "ரிலாக்ஸ்` செய்து கொள்ளலாம்.


***

சில யோசனைகள்:


1. இனிமையான சங்கீதம் கேட்க அடிப்படைத் தேவையாக அமைவது, குறைந்தபட்சம் ஒரு கருவி. அது கேசட் பிளேயராகவோ, எம்.பி.,3யாகவோ, கம்ப்யூட்டராகவோ இருக்கலாம்; இனிமையான சங்கீதத்தை இதமாகக் கேட்கும் வகையில், அறைகளில் ஸ்பீக்கர் வசதி செய்து கொண்டால், மிக நல்லது.

*

2. நீங்கள் பயன்படுத்தும் அந்தக் கருவி எந்தப் பிரச்னையும் இல்லாமல், சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சரியாக இயங்கவில்லை என்றால், அதைச் சரி செய்வதில் எவ்வித தாமதமும் இருக்கக் கூடாது.


*

3. செடி வளர்க்கலாம். தினமும் ஒரே ஒரு பூவாவது தரக் கூடிய வகையில், பூச்செடி வளர்க்கலாம். எந்தச் செடியையும், அதன் அருகில் அமர்ந்து பேசி, கொஞ்சி, தண்ணீர் விட்டு வளர்த்தால், நீங்கள் எதிர்பார்ப்பது போலவே, பூக்களைக் கொடுக்கும்.


*

4. அவற்றுக்கும் மனது உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். நாமே வளர்த்து, ஒரே ஒரு பூ பூத்தால் கூட, அதில் கிடைக்கும் மன நிறைவு, நமக்கு நிம்மதியைக் கொடுக்கும்.


*

5. கவிதை எழுதப் பிடிக்குமா? அடி மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்தும் கவிதையாக அது அமைய வேண்டும். கவிதை எழுதப் பழகினால், மன வளம் பெருகும்; எழுத்து வளம் பெருகும். உங்களிடம் உள்ள வலிமையான கருத்துக்கள், பலவீனமான கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பாகுபடுத்திப் பிரித்துப் பார்க்கும் அறிவு வளரும்.

*

6. பாட்டு பாடலாம், ஓவியம் வரையலாம், துணி தைக்கலாம், நகைகள் செய்யலாம். இது போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடும்போது, உங்களிடையே உள்ள கலைத் தன்மை வெளிப்படும். இதுவே உங்களின் தனித் தன்மையை நிலைநாட்டும்.


*

7. ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, தேவையற்ற விஷயங்களை மனதில் அசை போட வேண்டாம். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் நாட்டம் செலுத் தும்போது வேலையில் கவனம் குறையும்.


*

8. அதுவே உங்களுக்கு ஆபத்தாய் அமைந்து விடும். முழுமையான பணி செய்த திருப்தி ஏற்படாது; மன நிம்மதி கெடும். மேலே சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்தையும் பின்பற்றுவது மிகவும் கடினம் தான்.

*

9. வாழ்க்கையில் சந்தோஷமும் நிலைப்பதில்லை; துன்பங்களும் நிலைப்பதில்லை.

*

10. இன்றைய தினத்தில் உள்ள கடமைகளையும், பணிகளையும் சீராகச் செய்யும்போது கிடைக்கும் நிம்மதியுடன், திருப்தியாக வாழப் பழகிக் கொள்ளுங்கள்.


***
thanks tamilulakam
***

"வாழ்க வளமுடன்"

டீன்-ஏஜ் பெண்களை கையாள்வது எப்படி?

டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகள் நீங்கள் சொல்வதை காது கொடுத்து கேட்பதில்லையா?


நீங்கள் கோபப்பட்டால், உங்களை விட அவர்கள் அதிக டென்ஷன் ஆகின்றனரா? இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று எண்ணுகிறீர்களா?

*

ஆம். நிச்சயம் செய்யத் தான் வேண்டும்.

*

இதற்கான சிகிச்சை தேவைப்படுவது உங்கள் குழந்தைகளுக்கு அல்ல; பெற்றோர்களாகிய உங்களுக்குத் தான்.


***

1. அன்பாக இருங்கள்:

உங்கள் குழந்தை பிறந்த போது, அதன் மீது எவ்வளவு அக்கறையும், பாசமும் காட்டினீர்களோ, அதே அளவு, இந்த பருவத்திலும் காட்ட வேண்டும். இது, அவர்களின் முக்கியமான பருவம்.

*

நல்லது எது, கெட்டது எது என்று தெரியாமல் அவர்கள் தங்களுக்குள்ளாக குழம்பி தவிக்கும் பருவம்.அன்பாக இருப்பது மட்டுமின்றி, தோழமையுடனும் பழகுங்கள்.

*

அப்போது தான், அவர்களது வீண் பயம், குழப்பம் போன்றவற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முன் வருவர். ஏனெனில், இது, மன உளைச்சலுடனும், சோர்வுடனும் காணப்படும் பருவம்.


***

2. கட்டாயப்படுத்தாதீர்கள்:


உங்கள் பிள்ளைகள், நீங்கள் கூறுவதுபடி தான் செய்ய வேண்டும் என்று அவர்களை கட்டாயப்படுத்தாதீர்கள்.

*

உதாரணமாக, "இந்த உணவை தான் நீ சாப்பிட வேண்டும், இன்றைக்கு இந்த டிரஸ் தான் போட்டுக் கொள்ள வேண்டும்` என்பது போன்ற, அவர்களது சிறு சிறு விஷயங் களில் நீங்கள் தலையிடாதீர்கள்.

*

அவர்கள் உணர்ச்சிகளுக்கும், விருப்பங்களுக்கும் இடம் கொடுங்கள். இதற்கு, முதலில் நீங்கள் உங்களைத் தயார் செய்து கொள்ள வேண்டும்.


***


3. சந்தேகப்படாதீர்கள்:


இந்த பருவத்தில் உள்ள அனைவருமே பொதுவாக, தங்கள் அழகு குறித்து கவலைப்படுவர். அதிலும், பெண்களை கேட்கவே வேண்டாம்.

*

எனவே, கண்ணாடி முன் நிற்கும் உங்கள் பெண்ணை, அனாவசியமாக திட்டாதீர்கள். சந்தேகக் கண் கொண்டு அவர்களைப் பார்க்காதீர்கள்.

*

இப்படி நீங்கள் நடந்து கொள்ளும் போது, அது அவர்களை எதிர்மறையாக சிந்திக்கத் தூண்டும். எனவே, உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளுங்கள்.


4. கோபப்படாதீர்கள்:

குழந்தைகளின் மன நிலையை புரிந்து கொள்ளுங்கள். முடிந்த வரை அவர்களிடம் அன்பாக இருங்கள். இந்த பருவத்தில் இருக்கும் பிள்ளைகளிடம், கோபப்பட்டு உங்களால் எதையும் சாதிக்க முடியாது.

*

அன்பால் மட்டுமே அவர்களை திருத்த முடியும். நீங்கள் கோபப் பட்டால், அவர்கள் டென்ஷன் ஆவர்.

*
உதாரணத்திற்கு, அவர்கள் குறைந்த மதிப்பெண் எடுத்தால், அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டுவதை நிறுத்துங்கள். இப்படி செய்வதால், அவர்களுக்கு, உங்கள் மீது மட்டுமின்றி, படிப்பின் மீதும் வெறுப்பு வரும்.

*

எனவே, நீங்கள் அவர்கள் படிப்பிற்காக ஆகும் செலவு பற்றியும், படிப்பின் அவசியத்தைப் பற்றியும் அன்பாக எடுத்துக் கூறுங்கள்.

***

5. உற்று நோக்குங்கள்:


உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கையை அவர்கள் அறியாதவாறு கண்காணியுங்கள். சிலர், இந்த பருவத்தின் போது, சரியாக சாப்பிட மாட்டார்கள்; தூங்க மாட்டார்கள்.

*

இது, டீன்-ஏஜ் வயதுள்ள அனைவரிடமும் காணப்படும் பொதுவான விஷயம். இதுகுறித்து, நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

*

என்றாலும், பிரச்னை அளவுக்கு அதிகமாக போகும் போது, மருத்துவரை அணுகுவது நல்லது.


***
thanks ர.ஹரிணி
***



"வாழ்க வளமுடன்"

பெர்ஃப்யூம் பிரியரா நீங்களும் உங்கள் வீட்டில் இருப்பவர்களும்?

பெர்ஃப்யூமில் எத்தனை வகைகள்.. கலர் கலராய் கவர்ந்திழிக்கும் அழகு பாட்டில்கள்.. அதன் பேக்கிங்கை பார்த்தவுடனே வாங்க தூண்டும் அழகு. இதனையெல்லாம் பார்த்து மயங்கி பெர்ஃப்யூம் வாங்குபவரா நீங்கள்.



கொஞ்சம் யோசியுங்கள் ;

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.. அழகாய் இருக்கும் பாட்டில் எல்லாம் நல்ல பெர்ஃப்யூமில்லை.

***

சரி அப்ப எப்படி தான் பெர்ஃப்யூம் வாங்குவது என்று கேட்கிறிங்களா?

1. நல்ல தரமான கம்பெனி பெர்ஃப்யூமை மட்டுமே வாங்கவும்.

*

2. பேக்கிங்கை பார்த்து செலக்ட் செய்யாதிங்க.அவங்க சொன்னாங்க இவங்க சொன்னாங்கனு கண்ட கண்ட பெர்ஃப்யூம் வாங்க வேண்டாம்.எக்ஸ்பயரி டேட் பார்த்து வாங்கவும்.

*

3. கடைகளில் வாங்கும் பொழுது ஸ்மெல் எப்படியிருக்குனு பாட்டில் முடியில் அடித்து முகர்ந்து பார்க்கவும்.

*

4. எந்த வகை பெர்ஃப்யூமாக இருந்தாலும் உங்கள் கை மணிக்கட்டு பகுதியில் அடித்து பின்பு தேர்வு செய்யுங்கள். அலர்ஜி இல்லை என்றால் வாங்கவும்.

*

5. இப்ப பெர்ஃப்யூம் வாங்கியாச்சு அதனை எப்படி பயன்படுத்தனும் என்று பார்ப்போம்.

*

6. நல்ல தரமான பெர்ஃப்யூம் என்றால் உடைகளின் மீதும் அக்குள், முதுகு பகுதியிலும் போடலாம்.

*

7. ஆனால் பாடி ஸ்ப்ரே போல் நேரதியாக உடலில் படவேண்டாம். இது உடலில் பட்டால் நிச்சயம் அலர்ஜி ஏற்படும்.

*

8. பட்டு புடவையின் ஜரிகையில் மற்றும் விலை உயர்ந்த வெர்க் சேலையில் நேரடியாக பெர்ஃப்யூம் செய்ய வேண்டாம்.

*

9. தங்க நகைகள் மீதும் படாமல் ஸ்ப்ரே பண்ணவும்.

*

10. பாட்டிலில் போட்டுயிருக்கும் பயன்படுத்தும் முறையினை படித்துவிட்டு பயன்படுத்துவது நலம்.


***
thanks tamilulakam
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "