...

"வாழ்க வளமுடன்"

01 செப்டம்பர், 2010

மாதவிலக்கு தள்ளிப்போவதை தடுக்க!


மாதவிலக்கு என்பது பெண்களின் உடலில் உண்டாகும் கழிவு ரத்தத்தை மாதாமாதம் வெளியேற்றும் நிகழ்ச்சி ஆகும். ஒரு சில பெண்களுக்கு மாதத்தின் கடைசியில் தொடங்கி கடைசி வாரம் வரையிலும் தொடர்ந்து இருக்கும். இப்படி ஒழுங்காக நடந்துகொண்டு இருக்கும் நிலையில் ஒரு சில பெண்களுக்கு முறையாக 28 நாட்களில் வரவேண்டிய மாதவிலக்கு ஒன்றரை மாதம் அல்லது 2-3 மாதங்கள் வரை தள்ளிப்போகும்.


இந்த நிகழ்வுகள் அடிக்கடி ஏற்பட்டு கொண்டு இருந்தால் ஏதாவது கர்ப்பபை பிரச்சனை உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். இந்த நோய் வருவதற்கு முக்கிய காரணம் பெண்களின் உடலில் போதுமான ரத்தம் இல்லாததுதான் முதல் காரணம். குடும்பத்தில் உண்டாகும் பிரச்சனைகள், ஏற்படும் வெளியூர் பயணங்களால் நல்ல சத்துள்ள உணவுகளை சாப்பிடாமல் இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படும்.எந்த நேரமும் நொறுக்கு தீனியை தின்றுகொண்டும், உணவுகளில் அதிக அளவு உப்பு கலந்த பொருட்களை சேர்த்து கொள்வதாலும்- அதிக அளவில் பிராய்லர் கோழிகளை சாப்பிட்டுவருவதும், பெண்களின் மாதவிலக்கு தள்ளிப்போக செய்யும் காரணங்கள். அதிக எடை கொண்ட பெண்களுக்கு 2 அல்லது 3 மாதங்கள் வரை மாதவிலக்கு தள்ளிப்போகும் போது அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் கருப்பையில் கோளாறுகள், கட்டிகள் தோன்றுவதை தவிர்க்க முடியாது.

இதை தவிர்க்க தினசரி உணவில் அதிக உப்பு சேர்த்துகொள்வது, தீனிகளை தவிர்க்கவேண்டும். மாறாக தினமும் சத்துள்ள காய்கறிகள், மாதுளம்பழம், ஆரஞ்சு, செவ்வாழை பழம் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். இதனால் மாதவிலக்கு பிரச்சினையை தவிர்க்கலாம்.


***

மூலிகை மருத்துவம் - தமிழ் மருத்துவம்.

http://doctors-corner-health-tips.blogspot.com/2010/04/blog-post.html#comment-form


***

"வாழ்க வளமுடன்"

இரத்த வகைகள் ( பொது அறிவு ) !


இரத்த வகைகள்.....

மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இரத்தம் செலுத்துவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் காக்க முடியவில்லை.

1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. “A” வகை ரத்தம், 2. “B” வகை ரத்தம், 3. “AB” வகை ரத்தம் 4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

இரத்தப் பிரிவுகளில்... A வகையினர் 42%ம், ஆ வகையினர் 8%ம், AB வகையினர் 3%ம், O வகையினர் 47%ம் மனிதர்களில் அமைந்துள்ளனர். ‘O’ வகை ரத்தமானது பொது ரத்ததானத்திற்குத் தகுதியானது அதனை “Universal Donor” என்பார்கள். ஏனென்றால் ‘O’ வகை ரத்தமுள்ளவர்கள் A, B, AB போன்ற ரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம்.

அதுபோன்று AB ரத்த வகையினரை Universal Recipient என்று அழைப்பார்கள். இவ்வகை ரத்தமுள்ளவர்களுக்கு O, A, B வகை ரத்தங்களில் எதனையும் செலுத்தலாம் (ஆயினும் அந்தந்த வகை ரத்ததிற்கு அந்தந்த வகை ரத்தம் செலுத்தும் முறைதான் சிறந்தது)

புதிய இரத்த வகைகள் :

ரத்தப்பிரிவுகளைக் கண்டுபிடித்த பின்னர், ஒரே ரத்த வகையைத் தானம் செய்த போதிலும் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக மருத்துவ அறிஞர்கள் இரத்தம் சம்பந்தமான தொடர் ஆராய்ச்சிகளில் இறங்கினர். Rh ரத்த வகையைக் கண்டுபிடித்தனர் A, B, AB, O ரத்த வகைகள் 1900லும், Rh ரத்த வகைகள் 1940-லும் கண்டுபிடிக்கப்பட்டன.


இந்தப் புதிய ரத்த வகையானது Rhesus என்ற குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் Rh-group என்று பெயரிடப்பட்டது. இது Rh – positive group என்றும் Rh – negative group என்றும் பிரிக்கப்பட்டது.


இதன் பின்னர்... A வகை ரத்தம் உள்ள ஒருவருக்கு A வகை ரத்தம் செலுத்தும்போது Rh வகையும் ஒற்றுமையாக அமைய வேண்டும் என்ற புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது A வகையினர் Rh+ ஆக இருந்தால் அவர்களுக்கு A வகை Rh+ ரத்தம் தான் கொடுக்க வேண்டும். Rh நெகடிவ் உள்ளவருக்கு Rh நெகடிவ் ரத்தமே சேரும்.பாதுகாப்பான ரத்தம் செலுத்தும் முறைகள் :

இரத்தம் பெறுபவர், தருபவர் இருவரின் ரத்த வகையும், ஒன்றாக இருக்கவேண்டும். இரத்தம் வழங்குபவருக்கு எவ்வித தொற்றுநோய்களும் இருக்கக் கூடாது. (உம். மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எய்ட்ஸ்.


இரத்ததானம் செய்பவருக்கு ரத்தம் போதுமானளவு இருக்கவேண்டும் (HB 8% க்கு மேல் தேவை). இளைஞர்கள், நடுத்தர வயதினர் ரத்தம் வழங்கலாம். 60 வயதிற்கு குறைந்தவராக இருத்தல் அவசியம். ஒரு முறை ரத்தம் கொடுத்தவர் குறைந்தது மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ரத்தம் கொடுப்பது நல்லது. ரத்தம் செலுத்தும் முன்பு Cross matching செய்ய வேண்டும்.


இரத்த தானம் ஏன்?

இரத்த சோகை நோய்களில் மிகக் கொடுமையானது தலாசீமியா என்னும் நோய். இந்நோய் உள்ள குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கொருமுறை வீதம், ஆயுள் முழுவதுமே இரத்ததானம் தேவைப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய ரத்தசோகை நோய்.


கருவிலுள்ள குழந்தையின் ஹீமோகுளோபின் குழந்தையாகப் பிறந்தவுடனும் மாறாமல் இருப்பதால், உயிர்வாழ புது ரத்தம் தேவைப்படுகிறது. இந்நோய் தாக்கிய 3 -4 வயது குழந்தைகளுக்கு 6 வாரங்களுக்கு ஒரு தடவையாவது ரத்ததானம் கொடுக்க வேண்டும். வளர, வளர அடிக்கடி ரத்தம் தேவைப்படும்.


இதுபோன்ற ரத்தசோகை பீடித்த ஆயிரக்கணக்கானோர் மாற்று ரத்தம் பெற்றே உயிர் வாழ்கின்றனர். விபத்து ஏற்பட்டு இரத்தமிழந்தவர்கட்கு மட்டும்தான் ரத்ததானம் பயன்படுகிறது என எண்ண வேண்டாம். குறிப்பிட்ட காலங்களில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைப் போல, ரத்ததானம் செய்து பல உயிர்களை வாழச் செய்யலாம். மேலும் ரத்ததானம் செய்பவர்களுக்கு இருதய நோய் வருவது குறைவு என்று ஓர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.


ஹீமோபிலியா :

இரத்தம் தொடர்பான வியாதிகளில் ஒன்று ஹீமோபிலியா. இது பெரும்பாலும் ஆண்களையே தாக்குகிறது. இது மரபு அணு சார்ந்த பிறவிக் கோளாறு. இதனால் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் எளிதில் உறையாமல் இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும்.


இரத்தம் உறையச் செய்யும் செயல் முறைகளில் 8வது காரணி இல்லாமல் இருப்பது அல்லது குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இரத்தத்தின் உறையும் தன்மையில் ஏற்படும் குறைபாடு நோயான ஹீமோபிலியாவை மாற்றுமுறை மருத்துவமான ஹோமியோபதி மூலம் பெருமளவு கட்டுப்படுத்த இயலும்.இதற்கு பயன்படும் முக்கியமான ஹோமியோபதி மருந்து:

பாஸ்பரஸ் இரத்தம் கசியும் வியாதிகள் அனைத்தும் ஹீமோபிலியா அல்ல. இரத்தம் உறைவதில் ஏற்படும் கோளாறுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.***

நன்றி கீற்று.

***


"வாழ்க வளமுடன்"

அடிக்கடி தடவ வேண்டும்..!ஏன் ?
ஜலதோஷம்

* வெதுவெதுப்பான 'பீட்ரூட்' சாற்றை மூக்கினுள் தடவினால் ஜலதோஷம் சரியாகிவிடும்.

* தேன் ஜலதோஷத்தை குணப்படுத்தும்.


சளி

* கரைக்கவே முடியாத நெஞ்சில் கட்டிக் கொண்டிருக்கும் சளியைக் கரைக்க,கொள்ளு(காணப்பயறு)சூப் அருமையான மருந்து.


கொள்ளு சூப்

தயாரிக்கும் முறை

கொள்ளு - 2 தேக்கரண்டி
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
பூண்டு - 2 பல்
தக்காளி - 1
கொத்தமல்லித்தழை- சிறிது
கறிவேப்பிலை - சிறிது

இவை யாவற்றையும் ஒன்றாக வைத்து அம்மியில் அல்லது மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.4கப் தண்ணீரில் கரைத்து,1 தேக்கரண்டி நல்லெண்ணெய், 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி போட்டு அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கி, தேவையான அளவு உப்பு போட்டு குடிக்கவும். சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அருந்தலாம். குளிர் காலங்களில் இந்த சூப் குடித்தால் சளி பிடிக்காது.

* கற்பூரவல்லி இலைச் சாறு குடித்தால் சளி குணமாகும்.

* தூதுவளைக் கீரையை சுத்தம் செய்து, துவையல் செய்து சாப்பிட்டால் சளி குணமாகும்.

* மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

* வெங்காயம் சளியை முறிக்கும்.பொரியல் சாப்பிடும் பொழுது சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்..

* சிலருக்கு அடிக்கடி சளி பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் நாள்தோறும் தேன் உண்ணுவது மிகுந்த பயனுள்ளது. அதில் வைட்டமின் 'c' இருக்கிறது.வைட்டமின் 'c' ஜலதோஷம் பிடிக்காமல் தடுக்க உதவியாய் இருக்கிறது.

* துளசி இலையை சாப்பிட்டால் சளி குணமாகும்.

இருமல்,தும்மல்,காய்ச்சல்

* இருமல் ,தும்மல்,காய்ச்சல் ஆரம்பமானவுடன் 1தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும்.தும்மல் நின்று ,மூக்கில் தண்ணீர் வடிவது நிற்கும். இருமலைக் கட்டுப்படுத்தும்.

* கடுமையான இருமலாக இருந்தாலும் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் வேறு அலோபதி மருந்துகள் இல்லாமல் இருமல் நிற்கும்.
(அனுபவம்...)

* சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருந்தால் ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.ஒரு விரலில் தொட்டு மூக்கில்(துவாரத்தில்) அடிக்கடி தடவ வேண்டும்.மூக்கை துடைத்து துடைத்து புண்ணாகாது. சளியும் எளிதாக மூக்கிலிருந்து வேளியேறும்.

* சிறு குழந்தைகளுக்கு தலைக்குக் குளித்தபின் ,வெற்றிலை ஒன்றில் சிறிது ஓமம் வைத்து நசுக்கி, வேஷ்டித் துணியில் வைத்து வெந்நீரில் முக்கி ,1/2 சங்கு அளவு சாறு எடுக்கவும்.இதை குழந்தைகளுக்கு ஊற்றினால் சளி பிடிக்காது.வயிற்றுக்கும் நல்லது.

* ஆடாதொடை பட்டையை சுத்தம் செய்து ,தூளாக்கி கஷாயம் செய்து குடித்து வந்தால் இருமல் நீங்கும். காய்ச்சல் தணியும். அடிக்கடி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் இந்த

கஷாயத்தை தினமும் குடித்து வரவேண்டும்.

ஆடாதொடை வேர் - 100 கிராம்
கண்டகத்தரி வேர் - 100 கிராம்
திப்பிலி - 25 கிராம்

இவைகளை சுத்தம் செய்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியில் 2 தேக்கரண்டி எடுத்து 1 டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும் 1/2 டம்ளர் அளவாக வற்றிய பின் இறக்கவும். இருமல் ,சளி இருந்தால் இதைக் குடித்து, குணமடையலாம்.

* மிளகையும் வெல்லத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் இருமல் ,சளி குணமாகும்.அடக்க முடியாமல் தும்மல் வந்து கொண்டே இருந்தால் விபூதியை டண்ணீரில் குழைத்து மூக்கின் மேல் பூசினால் தும்மல் வருவதும் நிற்கும்.

* அடிக்கடி தும்மல் காரணமாக ஏற்படும் சளியும், நமைச்சலும் நீங்குவதற்கு, குளிர்ச்சி தரும் பொருட்களை விலக்கி விடவும்.முசுமுசுக்கை இலையை எடுத்து சுத்தம் செய்து அரைத்து அல்லது இலேசாக தட்டி தோசை மாவில் கலந்து தோசை செய்து காலை நேரம் சாப்பிட வேண்டும்.

* இரவு நேரத்தில் பாலில் 5 தூதுவளை இலைகளைப் போட்டு காய்ச்சி குடித்து வர வேண்டும்.இவ்விதமாக 40 நாட்கள் குடித்து வந்தால் மேற்கூறிய நோய்கள் குணமகும்.

வறட்டு இருமல்

* வறட்டு இருமல் தொண்டை, நெஞ்சு, வயிறு அனைத்தையும் ரணமாக்கி விடும்.2 டம்ளர் வெது வெதுப்பான தண்ணீரில் ,1எலுமிச்சைச் சாறு பிழிந்து, 1 மேஜைக்கரண்டி தேன் கலந்து குடித்து வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.

இரத்த இருமல்

* தூதுவளை இலை , ஆடாதொடை இலை இந்த இரண்டையும் எடுத்து பிட்டவியல்(பிட்டு மாவு அவிப்பது போல் செய்து, பிழிந்து 400 மில்லி சாறு (2 டம்ளர்) எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகுகேரிஷ்டம் 2 கிராம்,திப்பிலி 2 கிராம், சாம்பிராணி 2 கிராம் அனைத்தையும் காய வைத்து தூள் செய்து அச்சாற்றில் கலந்து கொடுத்து வந்தால் இரத்த இருமல் நீங்கும்.

கக்குவான் இருமல்

* வெற்றிலைச் சாறுடன் ,தேன் கலந்து கொடுத்தால் குழந்தைக்களுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

சளியினால் ஏற்படும் துர்நாற்றம்

* தேவையான தூதுவளை இலைகளை சுத்தம் செய்து 300 மில்லி(ஒன்றரை டம்ளர்) பாலில் போட்டுக் காய்ச்சி குடிக்க வேண்டும். இவ்விதமாக 1 வாரம் குடித்து வந்தால் சளி, துர்நாற்றம் ஆகியவை நாளடைவில் மாறிவிடும்.


***


நன்றி அந்திமழை.

***


"வாழ்க வளமுடன்"


மரங்களை வெட்டுங்கள் :)

இவை எனக்கு மெயிலில் வந்த தகவல். இது உண்மையில் நல்ல தகவல். அனைவரும் இதை தெரிந்துக்கொள்ள என் தளத்தில் இடுகிறேன்.உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே.
ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


*

மண்ணின் வில்லன்


அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம்.

தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! )

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன.

உண்மை எதுவென்று ' யாம் அறியேன் பராபரமே'
ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம்.

முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


1. இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது.

2. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது, ( அடுத்தவர்களின் உழைப்பை உறிஞ்சி வாழும் சில சுயநல மனிதர்களை போல...! ) இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது...!

3. இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!!

4. இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.


5. தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


1. இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான்.

2. இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


3. ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது.

4. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

5. காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.

*


அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

*


கேரளாவின் விழிப்புணர்வு


நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!!

அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது.ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??


ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.

*


நல்லமரம்ஆரோக்கியம்


வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம்.

இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .


சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் .

***

சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.


மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....


இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....!

நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!


இதையும் ( நச்சு மரம் & செடி ) தந்த இயற்க்கை பல நல்ல மூலிகையையும், பல நல்ல மரங்களையும் தந்த இயற்க்கை அன்னைக்கு மனதார நன்றி சொல்லுவோம்.***

நன்றி- தினத்தந்தி


***

"வாழ்க வளமுடன்"

உயர் ரத்த அழுத்தம் போயே போச்சு!


உடல் சீராக இயங்க இரத்த ஓட்டம் அவசியம். இரத்தம் என்பது ஓடிக்கொண்டே இருப்பது. அதனை இயக்கும் பம்ப்பாக இருதயம் இருக்கிறது.இருதயம் தான் இந்த இரத்தத்தை எல்லா உறுப்புக்களுக்கும் பம்ப் செய்து அவை சீராக செயல்பட உதவுகிறது. அது சீரற்று இரத்தத்தை மிகையாக அழுத்தும்போது இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.

*


இரத்த அழுத்தம் ஏன் ஏற்படுகிறது...?


பொதுவாக “உப்பில்லாப் பண்டம் குப்பையிலே” என்பார்கள். ஆனால் இந்த உப்புத்தான் உடலுக்குப் பகைவன். உயர் ரத்த அழுத்தத்தின் துணைவன். உப்பு அதிகமாகச் சேர்ப்பதே இதன் முக்கியக் காரணம் என்றாலும், மரபு வழியாகவும் உடற்பருமனாலும், மன உளைச்சலும் இதன் காரணங்களாகின்றன.

*இதில் இரண்டு வகை சொல்கிறார்களே (அதாவது ரீடிங்) அதுபற்றி விளக்கம்?


அதாவது சிஸ்டாலிக் பிரசர் இதயம் அழுத்திச் சுருங்கும் போது ஏற்படுவது டய்ஸ்டாலிக் பிரசர் என்பது இதயம் தளர்ந்து விரியும் போது ஏற்படுவது இதன் சராசரியான அளவுகள் 120/80 என்பதாகும்.

*


உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் யாவை?


இதற்கு எந்த அறிகுறியும் இல்லாமல் வருவது. அதனால் தான் இதற்கு அமைதியான ஆட்கொல்லி என்று பெயர். இதன் தாக்கம் என்பது தலைசுற்றல், தலை வலி, நடக்கும்போது மூச்சு வாங்குதல் போல் தெரிதல், மயக்கம் போன்ற தொல்லைகள் ஏற்படலாம்.

*


இதனால் ஏற்படும் ஆபத்துக்கள் யாவை...?


உயர் இரத்த அழுத்தத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் மூளை, இருதயம், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு, மாரடைப்பு, பாரிச வாயு, நினைவிழத்தல், சிறுநீரகம் செயலிழப்பு, கண்பார்வை பாதிப்பு, கைகால் வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல் போன்றவை ஏற்படும்

*

இதனைக் கட்டுப்படுத்தும் முறைகள் யாவை...?


நல்ல உணவுப் பழக்கம் முக்கியம். உப்பும் உப்புச் சார்ந்த ஊறுகாய், அப்பளம், நொறுக்குத் தீனிகள், கருவாடு போன்றவற்றைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடம் கை வீசி நடக்க வேண்டும். மன உளைச்சலுக்கு இடந்தருதல் ஆகாது. உச்சி மீது வானிடிந்து வீழ்ந்தாலும் கலங்காமல் எதையும் எளிதாகக் கொள்ளும் கொள்கையைக் கடைப்பிடித்தால் என்ன செய்யப் போகிறது உயர் ரத்த அழுத்தம்?
*

இதற்கான முதல் உதவிகள் யாவை...?


முறையான உடற்பயிற்சி, மருத்துவரின் ஆலோசனை அடிக்கடி கேட்டல், மருந்துகளை ஒழுங்காக உட்கொள்ளல், பால், பலசரக்கு, பண்டிகைக்குப் பணம் ஒதுக்கல் போல் மருந்துக்கும் மாதம் 300 ரூபாய் ஒதுக்கி வைத்தல், புகை பிடிப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்தல், எப்போதும் முக மலர்ச்சியுடன் இருத்தல் போன்றவை.

*


பி.பி யே வராதவர்கள் அதனை அப்படியே தக்க வைத்துக் கொள்ளும் உபாயங்கள் யாவை...?


பி.பி. வராதவர்கள் என்று யாருமே இருக்க வாய்ப்பில்லை. எல்லோருக்கும் வரலாம். காரணம் வயது ஏற...ஏற உடல் உறுப்புக்களில் மாற்றம் ஏற்படுகிறது. அதற்குத் தகுந்தாற்போல் நோய்கள் வருகிறது. எப்படி வயது காரணமாக கண்புரை நோய் சதைச் சுருக்கம் போன்றவை ஏற்படுகிறதோ அது போல் தான் இதுவும். ஆனால் சில பேருக்கு குறிப்பாக காட்டுவாசிகள் சிலரை பி.பி. அண்டுவதில்லை என்கிறார்கள். அப்படி ஒரு 10 சதவிகிதம் இருக்கலாம். ஆனாலும் சாத்தியம் இல்லை. காரணம் இது வயது சம்பந்தப்பட்டது. அப்படி உங்களில் யாருகேனும் வரவில்லை என்றால் நீங்கள் யோகக்காரர்கள். எல்லோருக்கும் அப்படி ஒரு யோகம் அடித்தால் நல்லதுதானே. சோம்பலை துரத்தி, முகமலர்ச்சி கூட்டி, மன உளைச்சல் நீக்கி வாழ்ந்தால் இதனைக் கட்டுப்படுத்தலாம்.


*


இதுவரை உயர் ரத்த அழுத்தம் பற்றியே கூறினீர்கள். அழுத்தக் குறைவு (லோ பிரசர்) பற்றிக் கூறுங்களேன்...?


அழுத்தம் குறைந்த (அ) குறைந்த இரத்த அழுத்தம் பற்றிக் கவலையே வேண்டாம். அதனால் தொல்லைகள் இல்லை. அவர்கள் அளவாக உப்புச் சேர்க்கலாம். உணவு விஷயங்களில் கூட உயர் ரத்த அழுத்தக் காரர்களுக்குத்தான் கெடுபிடிகள்.இவர்களுக்கில்லை. அதற்காக எப்படியும் சாப்பிடலாம் என்று இல்லை. அளவான நல்ல உணவுப் பழக்க வழக்கங்கள் போன்றவை எல்லோருக்கும் அவசியம் தானே?

***


படித்ததில் பிடித்தது / பாதித்தது.
http://srvijay79.blogspot.com/2010/06/blog-post_2562.html


***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "