...

"வாழ்க வளமுடன்"

வேதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 செப்டம்பர், 2015

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...

Engr Sulthan's photo.


apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன்.
அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு
மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
 

எவ்வாறு அறிவது:

 1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி
உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )
 

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என
ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
 

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என
ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
 

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
* அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!
 

***
fb
***



"வாழ்க வளமுடன்"
      

09 ஜூலை, 2015

மேகியில் மட்டும்தான் விஷமா….மற்றதெல்லாம் அமுதமா?

இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மேகி நூடுல்ஸ் தடை செய்யப்பட்டு, விற்பனையிலிருந்து திரும்பப் பெறப்பட்டு விட்டது. அதை கிழக்கு ஆஃப்ரிக்க நாடுகளில் விற்பனை செய்துவந்த ஒருசில பெரு நிறுவன அங்காடிகள் தாமாகவே முன்வந்து, அவற்றைத் திரும்பப் பெற்றுக் கொண்டன என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கு அரசுகள் அளவிலான உத்தரவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை எனினும், ‘வாய்மொழி உத்தரவுகள்’ பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

மேகியில் கன உலோகங்களும் மற்ற நச்சுப் பொருட்களும் அனுமதிக் கப்பட்ட அளவினை விட அதிகம் இருந்ததா இல்லையா என்ற விவாதத் திற்குள் நான் போக விரும்பவில்லை. இந்த விவகாரத்தால் விளைந்த நன்மை என்று பார்க்கையில், மக்கள் ‘பாதுகாப்பான உணவுகளை’ப் பற்றி ‘பேச’ ஆரம்பித்துள் ளனர். படிக்காதவர்கள் கூட, பைகளில் அடைக்கப் பட்டு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தைப் பற்றிப் பேசுகின்றனர்.
ஆனால், எனது வினாக்கள், “இப்போது அனைத்தும் சரியாகிவிட்டதா?

இனி நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் அத்தனையும் சத்துக்கள் மட்டுமே நிறைந்த, நச்சுக் கலக்காத பண்டங்களாகி விட்டனவா?” என்பவையே! ஏனென்றால், நாம் விஷங்கள் தோய்ந்த உணவை உண்ண ஆரம்பித்து ஆண்டுகள் பலவாய் நீண்டு விட்டன! இன்றைக்கு ஒரு நூடுல்ஸ் வகையைத் தடை செய்ய முனைப்பு காட்டிய ஆட்சியாளர் களும், அதிகாரிகள் வர்க்கமும் இந்த பிரச்சினையை அறிந்தும் அறியாமல் இருக்கின்றனர் என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால், அரசுகளின் திட்டங்கள் சிலவும் இந்த உணவுகள் நஞ்சாவதை ஊக்குவிக்கின்றன என்றே சொல்லலாம். அது எப்படி?


கீரை வகைகள் பல்வேறு சத்துக்களைக் கொண்டவை என்று எல்லா தரப்பினராலும் விரும்பி உண்ணப் படும் ஒரு காய்கறி. ஆனால், இந்தக் கீரைகளின் உற்பத்தி எப்படி, எங்கு நடக்கின்றது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? பெரும்பாலும் கீரைகள் நகர்ப்புறங்களுக்கு மிக அருகாமையில் உள்ள நிலங்களி லேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. ஏனெனில் கீரைகள் அறுவடை செய்த சில மணி நேரங்களிலேயே வதங்கிவிடும் என்பதால், உடனடி விற்பனை என்பது மிக அத்தியாவசியமானது.

நகர்ப்புறங்களில் மங்காத தேவையும், குன்றாத விற்பனையும் இருக்கின்ற காரணத்தால் கீரைகள் நகரங் களுக்கு அருகில் மிக அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. ஆனால், நகர்ப்புறங்களுக்கு அருகினில் விளைவிக்கப்படும் கீரைகள் உள்ளிட்ட காய்கறிகளில் கன உலோகங்கள் அதிகம் இருப்பதாகப் பல்வேறு பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


உதாரணத்திற்கு, சற்றொப்ப ஒரு மாமாங்கத்திற்கு முன்னர், தில்லிக்கு மிக அருகில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளைப் பார்ப்போம். இந்த ஆய்வு சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு, தில்லிக்கு வெளியில் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படும் ஐந்து முக்கிய இடங்களில், வெண்டை, காலிஃப்ளவர் மற்றும் பசலைக் கீரை ஆகிய மூன்று முக்கியமான காய்கறிகளின் மாதிரிகளைக் குறிப்பிட்ட இடைவெளிகளில் சேகரித்து, அவற்றில் காரீயம், தாமிரம், துத்தநாகம், மற்றும் நீலீயம் (காட்மியம்) ஆகிய கன உலோகங்களின் அளவினை கணக்கிட்டது. அவற்றுள் 72 விழுக்காடு பசலைக்கீரை மாதிரிகளில் காரீயத்தின் அளவு, இந்திய உணவுக் கலப்படத் தடுப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவான ஒரு கிலோவிற்கு இரண்டரை மில்லிகிராம் என்ற அளவினை மிகுந்திருந்தது.


இந்த இடத்தில் இன்னொன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ள காரீயத் தின் அளவானது, சர்வதேச அளவில் அனுமதிக்கப்பட்ட அளவான கிலோவிற்கு 0.3 மி.கி. உடன் ஒப்பிட் டால், சற்றொப்ப ஏழு மடங்கு அதிகமாகும். அப்படிப் பார்த்தால் அனைத்து பசலைக்கீரை மாதிரிகளிலுமே அனுமதிக்கப்பட்ட அளவினைவிட காரீயம் மிகுந்திருப்பது தெளிவாகின்றது.





நீலீயத்தின் அளவு, இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே (1.5 மி.கி/கிகி) இருப்பினும், ஐரோப் பிய ஒன்றியத்தில் அனுமதிக்கப்பட்ட அளவுடன் (0.2 மி.கி/கிகி) ஒப்பிடுகையில், சற்றொப்ப எழுபது விழுக் காடு பசலைக்கீரை மாதிரிகளில் நீலீயத்தின் அளவும் அதிகமே! இந்த ஆய்வின் முடிவு, ஒருபானை சோற் றுக்குப் பதம் பார்க்க எடுக்கப்பட்ட ஒரு பருக்கை மட்டுமே! அதற்குப் பின்னர் கடந்த பத்தாண்டுகளில் எத்தனையோ இது போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வெளிவந்துள்ளன.



இந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்; இந்த கன உலோகங்கள் பிரச்சினை ஏதோ இந்தியாவில் மட்டுமே இருப்பதன்று. பல வளரும் நாடுகளிலும் (உ-ம்: இந்தோனேசியா, எத்தியோப்பியா, தான்சானியா) உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில் கன உலோகங்களின் கலப்பு உள்ளது.
விவசாய பொருட்களின் உற்பத்தியில் இன்னோர் அரக்கன் – பூச்சிக்கொல்லிகள்! காய்கறிப் பயிர்கள் பலவற்றின் உற்பத்தியிலும் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு மிக அதிகம்! உதாரணத்திற்கு, தொண்ணூறு களின் இறுதியில் கர்நாடகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகளைப் பார்க்கலாம். கர்நாடகம் தக்காளி அதிகம் பயிரிடும் மாநிலங்களில் ஒன்று. தக்காளியில் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் தவிர்க்க ஒருசில விவசாயிகள் ஐம்பது முறைகூட பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பதாக அந்த ஆய்வு கூறுகின்றது.





நாங்கள் 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் கர்நாடகம், குஜராத் மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங் களில் முட்டைக்கோஸ் மற்றும் காலிஃப்ளவர் பயிரிடும் விவசாயிகளிடம் நடத்திய ஓர் ஆய்வில், அவர்கள் எக்டருக்குப் பதினொன்று முதல் இருபத்து மூன்று கிலோ பூச்சிக்கொல்லிகளைத் தெளிப்பது தெரியவந்தது. அப்படியானால் இந்தப் பூச்சிக்கொல்லிகளின் எஞ்சிய நஞ்சு எந்தளவிற்கு, விற்பனைக்கு வரும் காய்கறி களில் நிலைத்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். இது ஏதோ இந்தியாவில் மட்டுமே நிலவும் பிரச்சினை அல்ல… வங்கதேசத்தில் ஒரு எக்டர் கத்தரிக்காய்க்கு 180 முறை, அதாவது தினந்தோறும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கும் கொடுமை நடந்திருக்கின்றது.
பிலிப்பைன்ஸில் ஒரு எக்டர் கத்தரிக்காய்க்கு, சுமார் 41 லிட்டர் பூச்சிக்கொல்லிகளைக் கூட தெளித்துள் ளனர். ஆக பெரும்பாலான நாடுகளில் மக்கள் விஷம் தோய்ந்த உணவுப் பண்டங்களைத்தான் உட்கொள் கின்றனர்.
இப்படிப்பட்ட கண்ணுக்குத் தெரியாத நச்சுக்களை யார் கண்டுபிடிப்பது?


 எந்த அரசு அமைப்பாவது தொடர்ந்த இடைவெளிகளில் காய்கறி மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்கின்றதா? ஏதோ அங்கொன்றும் இங் கொன்றுமாக நடக்கும் ஆய்வுகளே அவற்றை வெளியுலகத்திற்குக் காட்டுகின்றன. ஆனால் பெரும்பாலான அரசுகள் அவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. அதைவிட கொடுமை, வேளாண் இடுபொருட்களான வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் அரசுகளே கூட வழங்குகின்றன.


நச்சுத்தன்மையற்ற காய்கறிகளை உற்பத்தி செய்ய சம்மந்தப்பட்ட துறைகள் எந்த முன்னெடுப்பையாவது மேற்கொண்டுள்ளனவா? “வேதி உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் குறிப்பிட்ட அளவிற்குத்தான் பயன்படுத்த வேண்டும்; இந்தளவிற்கு மேல் பயன்படுத்தினால் பலன் ஏதும் கிட்டப் போவதில்லை; மாறாக பணவிரயத்துடன், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், நாம் உண்ணும் உணவும் நஞ்சாகும்” என்பதனை என் றைக்காவது, முறையாக விவசாயிகளுக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்களா?





இன்றைய சூழலில் பெருகிவரும் மக்கள்தொகைக்கேற்ப உணவுப் பண்டங்களை விளைவிக்கும் சூழலில் விவசாயிகள் உள்ளனர். அதனால், அதிக விளைச்சலே அவர்களது நோக்கம். கொஞ்சம் கூட, தங்களது விளைபொருட்களை, பூச்சி மற்றும் நோய்த் தாக்குதால் இழக்க அவர்கள் விரும்புவதில்லை. எனவேதான் அதிகளவில் வேதி இடுபொருட்களை அவர்கள் பயன்படுத்துகின்றனர். ஆனால், தம் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசும், வேளாண் பல்கலைக்கழகங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் என்ன செய்திருக்க வேண்டும்? வேதி இடுபொருட்களுக்கு மாற்றான இயற்கை உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும், பூச்சி விரட்டிகளையும் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளை ஊக்குவித்திருக்க வேண்டாமா?


சுமார் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே இதுபோன்ற சில ஆராய்ச்சிகள் மட்டுமே முன்னெடுக்கப் பட்டன. ஒருசில நல்ல உயிரியல் பூச்சிக்கொல்லிகளும், இனக்கவர்ச்சிப் பொறிகளும் உருவாக்கப்பட்டன. ஆனால், அவை முறையாக வணிகப்படுத்தப்படவில்லை. ஆராய்ச்சிகளில் விளையும் பொருட்கள், ஆய்வுக்கூடங்களை விட்டு வெளியேறி, சந்தைக்கு வந்தால் ஒழிய அந்த கண்டுபிடிப்புகளின் நோக்கம் முற்றுப் பெறுவதில்லை. மற்ற துறைகளுடன் ஒப்பிடுகையில், வேளாண்துறை, கண்டுபிடிப்புகளைச் சந்தைப்படுத்துவதில் பின்தங்கியே உள்ளது. இதற்கு அரசுகளும் ஒரு காரணம்.


இதுபோன்ற சுற்றுச் சூழலுக்கேற்ற, விடமற்ற உணவுப்பொருட்களை விளைவிக்க ஏதுவான கண்டுபிடிப்பு களைச் சந்தைக்குக் கொண்டுவர இசைவான கொள்கைமுடிவுகளை எடுக்க வேண்டும். அந்த தொழிலில் ஈடுபட நாட்டமுள்ள நிறுவனங்களுக்கு உரிய உதவிகளையும், சலுகைகளையும் வழங்க வேண்டும். இயற்கைக்கு ஒத்திசைவான இடுபொருட்களை மானியவிலைகளில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். அவ்வாறு நடக்குமானால், படிப்படியாக சில ஆண்டுகளிலேயே இதுபோன்ற இடுபொருட்கள் சந்தையில் சகஜமாக புழக்கத்திற்கு வந்துவிடும்.





விவசாயிகளும் அவற்றை அதிகளவில் பயன்படுத்துவர். அதைவிடுத்து,
அதுபோன்ற ஆராய்ச்சிகளும் அதிகம் நடக்காமல், அதுபோன்ற இடுபொருட்களும் சந்தையில் அதிகளவில் இல்லாதபோது, விவசாயி களிடம் சென்று, வேதி இடுபொருட்களைப் பயன்படுத்தாதீர்கள் என்று சொன்னால், அவர்கள் எப்படி காதுகொடுத்து கேட்பர்? ஏற்கனவே நட்டத்தில் இருக்கும் வேளாண் தொழிலில் அவர்களும் கொஞ்சமேனும் இலாபம் ஈட்டத்தானே முயலுவார்கள்? இருப்பினும், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக விவசாயிகள் இயற்கைக்கு இசைவான இடுபொருட்களைக் கொண்டு விவசாயம் செய்ய முனைகின்றனர்.


ஆனால் இந்த முன்னெடுப்புகள் பல்கிப் பெருக வேண்டுமானால், அரசும், வேளாண் பல்கலையும், வேளாண் துறையும் அதிக முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அது மட்டுமன்றி, கன உலோகங்கள் கலந்த எத்தனையோ பொருட்கள் இன்று மனித வாழ்வில் பயன்பாட்டில் உள்ளன.
அவற்றின் கழிவுகள் மண்ணி லும், நீரிலும்தான் நிறைகின்றன. அதுபோன்ற நிலத்தில் விளையும் பொருட்களிலும், அது போன்ற நீரி னைப் பயன்படுத்தி உருவாகும் பொருட்களிலும், கன உலோகங்களின் கலப்பு அதிகமாகத்தான் இருக்கும். எனவே மேலை நாடுகளில் இருப்பதைப் போன்று, கழிவுகள் மேலாண்மை முறையாகச் செய்யப்படாதவரை, இந்த பிரச்சினைகள் எழுவது தவிர்க்க இயலாததே!


இறுதியாக, நுகர்வோர்களும் விழிப்புடன் இருத்தல் அவசியம். ஏதோ சமைத்தோம், எதையோ சாப்பிட் டோம் என்றில்லாமல், உணவுப்பண்டங் களைத் தெரிவு செய்து வாங்குவதில் தொடங்கி சமைத்து உண்பது வரை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஏனெனில் நுகர்வோர் கொடுக்கும் அழுத்தம், விவசாய உற்பத்தியாளர்களைச் சரியான உற்பத்தி முறை களைப் பின்பற்றச் செய்யும். இந்த உற்பத்தி மற்றும் நுகர்வுச் சங்கிலியில், தனியார்துறை என்னும் கண்ணியின் பங்கெடுப்பும் இருக்குமானால், நலம் மிகு உணவுப்பண்டங்களின் உற்பத்தியும், நுகர்வும் எளிதில் சாத்தியமாகும்.
ஆக, ஒருங்கிணைந்த முன்னெடுப்புகளைச் செய்யாவிட்டால், நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் பல வற்றிலும் தேவையற்ற நச்சுப் பொருட்களின் கலப்பு இருப்பதைத் தவிர்க்க இயலாது. ஏதோ ஒரு நூடுல் ஸை மட்டும் தடை செய்துவிட்டு, இனியெல்லாம் நமக்கு நலம்தான் என்றிருந்தால், பூனை தன் கண்ணை மூடிக் கொண்டு பூலோகம் இருண்டுவிட்டது என்று நினைப்பதைப் போலத்தான்!


***
By vayal
***



"வாழ்க வளமுடன்"
      

16 செப்டம்பர், 2011

கோலா பானங்களால் ஏற்படும் உடல்நலக் கேடு


கோலா குளிர்பானங்களை பருகுவோர் எண்ணிக்கை உலகளவில் அதிகம். கோடிக் கணக்கான லிட்டர் கோலா பானங்கள் ஆண்டுதோறும் பருகப்படுகின்றன. இது போன்ற பானங்கள் இன்றி, உயிர் வாழ முடியாது என்றே கூட பலர் நினைக்கின்றனர். கோககோலா, பெப்சி, லிம்கா போன்றவை, பட்டி தொட்டிகளில் கூட கிடைக்கின்றன.


சூப்பர் மார்க்கெட்டுகளில், கோலா பானங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றை பருக, சினிமா நட்சத்திரங்களும் ஊக்குவிக் கின்றனர். கோலா பானங்களில் உள்ள ஆபத்தை உணராமல், கர்ப்பிணிகள், குழந்தைகள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளோர் கூட, இவற்றை பருகுகின்றனர்.

இந்த பானங்களில் அப்படி என்ன உள்ளது? என்ன ஆபத்து?

பாஸ்பாரிக் அமிலம், சர்க்கரை, காபீன், நிறமி மற்றும் வாசனை ஊட்டி ஆகியவை இதில் உள்ளன. துருவை கரைத்தல், ஆணியை கரைத்தல், சுண்ணாம்பை கரைத்தல் ஆகிய பணிகளைத் திறம்பட செய்யும், பாஸ்பாரிக் அமிலம், இதில், 55 சதவீதம் உள்ளது. இதனால், கோலாவில் அமிலத்தன்மை, 2.6 பி.எச்., அளவு எகிறுகிறது. உணவை பதப்படுத்த பயன்படும் வினிகரும், இதே அளவு அமிலத்தன்மை கொண்டது. கோலாவில் சர்க்கரையும், வாசனை ஊட்டியும் சேர்க்கப் படுவதால், வினிகரை விட சுவையாக உள்ளது.

வினிகரை குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?

கோலாவை குடித்தால் பற்கள் பாதிப்படையும்; பல்லில் குழி விழும். நம் பல்லை, இது போன்ற பானங்களில் இரண்டு நாட்கள் போட்டு வைத்தால், பல் மிருதுவாகி விடும்.

250 மி.லி., பானத்தில், 150 கலோரிச் சத்து உள்ளது.

உடலுக்குத் தேவை யான சத்துக் களோ, வைட்டமினோ, தாதுப் பொருட்களோ இதில் இல்லை. இதில் உள்ள சர்க்கரை, உடனடியாக ரத்தத்தில் கலந்து, கொழுப்பாக மாறுகிறது. தொடர்ந்து பருகினால், உடல் எடை அதிகரிப்பு ஏற்படுகிறது.


குழந்தைகள் இந்த பானத்திற்கு வெகு சீக்கிரம் அடிமையாகி விடுகின்றனர். சர்க்கரையும், காபீனும் இதில் இருப்பதால், இந்த நிலை ஏற்படுகிறது.

ஒரு கப் காபியில் 70 – 125, டீயில் 15 – 75, கோகோவில் 10 – 17 மற்றும் ஒரு சாக்லேட் கட்டியில், 60 – 70 மி.கி., அளவுள்ள காபீன், 360 மி.லி., கோலா பானத்தில், 50 – 65 அளவு உள்ளது.

இதில் உள்ள அமிலமும், காபீனும், வயிற்றில் அல்சரை அதிகரிக்கின்றன. உடலி லிருந்து சுண்ணாம்புச் சத்து வெளியேற, காபீன் காரணமாக அமைகிறது. காபீனுடன், குளிர் பானங்களில் உள்ள பாஸ்பரசும் சேர்ந்து, எலும்பு தேய் மானத்தை உருவாக்கி விடுகின்றன.

இதனால், எலும்பு முறிவு ஏற்பட்டு விடுகிறது. காபீன், இதய செயல்பாட்டையும், மத்திய நரம்பு மண்டலத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால், அதிக இதயத் துடிப்பு மற்றும் தூக்கமின்மை ஆகியவை ஏற்படுகின்றன.


குழந்தைகள் அதிகத் துடிப்புடன், தூக்கம் வராமல் அவதிப்படுவர். தூங்கினாலும், அடிக்கடி விழித்துக் கொள்வர். இதனால், பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்படும்.


காபீன், ரத்த அழுத்தத் தையும் அதிகரிக்கச் செய்யும்.
எனவே, எப்போதும் படபடப்பாய் இருப்பவர்கள், காபீன் அடங்கிய பானங்களை தவிர்க்க வேண்டும்.


கர்ப்பிணிகள், நாள் ஒன்றுக்கு, 300 மி.கி., அளவு காபீன் பருகலாம்; அதற்கு மேல் பருகக் கூடாது. இந்த பானங்களை குடிப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு எந்த பலனும் ஏற்படாது; பணம் செலவழிவது மட்டுமே மிஞ்சும்.



***
நன்றி-தினமலர்
***



"வாழ்க வளமுடன்"

22 ஆகஸ்ட், 2011

மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்?



மருத்துவர்களுக்கு நம்மிடையே எப்போதும் தனி மதிப்பு உண்டு.உயிர் காக்கும் கடவுள் அவர்கள்.பேராசையும் சுயநலமும் பெருகி விட்ட இன்றைய சூழலில் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பணம் சம்பாதிக்க என்னென்ன வித்தைகளை கையாளுகிறார்கள்? பத்ம பூஷண் விருது பெற்ற பேராசிரிய புகழ்பெற்றர் பி.எம்.ஹெக்டேவின் பகிர்வை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.

மருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன் சாட் செய்து தான் அறிந்து கொண்ட்தை தருகிறார்.


1. பரிசோதனைகளில் 40-60 சதவீத கமிஷன்.

உடல்நிலை சரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும் மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்கு சென்றுவிடும்.இதில் அவசியமானதும் உண்டு,சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாத டெஸ்டுகளும் இருக்கும்.


2. பரிந்துரை செய்வதில் 30-40 சதவீதம்.

சில நேரங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.உதாரணமாக தைராய்டு தொடர்பான நோயென்றால் அதற்கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்து சேர்ந்துவிடும்.


3. மருத்துவமனை கட்டணத்தில் 30-40 சதவீதம்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும் கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.


4. நெஞ்சுவலி என்று போனால்,

சாதாரண வலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது.நான்கு நாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.

மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத ,விஷயம் தெரியாத பத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.குறைந்த சம்பள்த்திற்கு பணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது, சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,விளம்பரம் கொடுத்து காஸ்மெடிக் சர்ஜரி செய்வது,பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்றவை மற்ற வழிகள்.


மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது. சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இப்போது படித்து முடித்து வந்தவுடன் நிறைய கடன்வாங்கி நர்சிங்ஹோம் கட்டி விடுகிறார்கள்.கடனை அடைக்க அப்பாவிகள் கிடைத்து விடுகிறார்கள்.ஊழலில் எத்தனையோ வகை இருக்கிறது .அதில் இது ஒரு வகை.

இருபது ரூபாய்க்கு,முப்பது ரூபாய்க்கு கிராமங்களில் சென்று மருத்துவம் செய்யும் எளிய மருத்துவர்களும் இருக்கிறார்கள்.நல்ல டாக்டர்கள் கிடைத்துவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி!


***
thanks cfa
***




"வாழ்க வளமுடன்"

19 ஆகஸ்ட், 2011

இந்த சில வீடியோ கவணியுங்கள் பீலிஸ் :(



*

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை கவனியுங்கள்

http://www.youtube.com/watch?v=aprO6h9sFDM&feature=player_embedded


பெற்றோர்கள் & வேதனை


***

computer இல் வேலை பார்பவர்களுக்கு .mp4


http://www.youtube.com/watch?v=g9M8pc-RzD4&feature=related


உடல்நலம்

***


:)


உண்மையான கூந்தல்.mp4

http://www.youtube.com/watch?v=9cCMW0ixJpA&feature=related



***
thanks youtube
***








"வாழ்க வளமுடன்"


18 ஜூலை, 2011

கவலை தரும் காய்கறி எண்ணெய்



காய்கறிகளின் விதைகள் மற்றும் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஆரோக்கியமானது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஏனெனில் அவை இயற்கையான காய்கறி பொருட்களில் இருந்து கிடைப்பதாக நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கை ஆரோக்கியத்திற்கு அபாயமானது.



காய்கறி எண்ணெய்கள் துரித உணவுகள் போலவே ஆபத்தானது. ஏனெனில் `ஜங்புட்' உணவுகள் எப்படி தயாரிக்கப்படுகிறதோ அதுபோன்ற முறையிலேயே காய்கறி எண்ணெய்களும் தயாரிக்கப்படுகிறது. காய்கறிகளிலுள்ள சத்துக்கள் எல்லாம் எண்ணெய் தயாரிக்கும் முறையில் நீக்கப்பட்டுவிடுகிறது. இறுதியாக எண்ணெயாக மிஞ்சி இருப்பது வெறும் கொழுப்புகள் மட்டுமே.



இந்தக் கொழுப்புகள் கல்லீரலை தூண்டி உடலில் அதிகப்படியான கொலஸ்டிரால் உற்பத்தியாக காரணமாக அமைந்துவிடுகிறது. தொடர்ந்து அதிகப்படியாக காய்கறி எண்ணெய்களை பயன்படுத்தி வந்தால் சீக்கிரமாகவே கல்லீர லானது உடலின் தேவைக்கு அதிகமான கொலஸ்டிராலை உற்பத்தி செய்துவிடுகிறது. இது இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.



பெரும்பாலும் காய்கறி எண்ணெய்கள் மரபு வழி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உடலுக்கு ஏற்றதல்ல. சோயா எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், முந்திரி எண்ணெய் போன்றவை அதிகமாக மரபு வழியில் தயாராகிறது. வேறு சில எண்ணெய்கள் அதிகமாக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டு தயாராகிறது.



இப்படி தயாராகும் எண்ணெய்கள் அதிகமாக கொலஸ்டிரால் உருவாக காரணமாக இருப்பதுடன் ரத்தக் குழாய்களை பாதிக்கும். இந்த எண்ணெய்களால் உடலில் அதிகப்படியாக உருவாகும் பலபூரிதமாகாத கொழுப்புகள் இதய வியாதிகள், நீரிழிவு மற்றும் வேறுசில அபாயமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.



அதேபோல சுவை தருவதற்காக மேற்கொள்ளப்படும் ரீபைன்ட் முறையானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷத் தன்மையுள்ள ரசாயனங்கள் சுரப்பதை தூண்டுகிறது. இது ரத்த சுழற்சியை குறைக்கும். மூளை நரம்புகள் இயக்கத்தை பாதிக்கும். ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளை குறைத்து ஜீரணத்தையும் தாமதப்படுத்தும். எனவே காய்கறி எண்ணெயையும் அளவுடன் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.



***
thanks தினதந்தி
***




"வாழ்க வளமுடன்"

14 ஜூலை, 2011

பூமியின் புலம்பல்……( படித்ததில் பிடித்தது )



நான்
பல உயிர்களையும்
பல பொருட்களையும்
என் மடியில்
சுமக்கிறேன்
சுகமாக…..


ஆனால் மனிதனால்
படைக்கப்பட்ட
பாலிதீன் பொருட்கள்


மட்டும் என்றும்
மக்குவது இல்லை
மறைவதும் இல்லை


எரித்தாலும் சுற்றுசூழல்
மாசுபடுகிறது






ஓசோன் மண்டலத்தில்
ஓட்டை ஏற்படுகிறது


மனிதர்களுக்கு சுவாசகோளாறு
கேன்சர், குழந்தை பேரின்மை
இன்னும் என்னன்னவோ
கொடுமைகள் !


என்னையும்,
உங்களையும்(மனிதர்கள்)
காப்பாற்றும் சிறிய முயற்சியாக



நமது நகராட்சி
பாலிதீன் பைகளை
தடை விதித்துள்ளது


இதற்க்கு நிங்களும்
எனக்கு உதவுவிர்களா?




***
thanks manalagan
***




"வாழ்க வளமுடன்"

06 ஜூலை, 2011

Fast Food கடைகளின் அந்தரங்கங்கள்



நாங்கள் எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?),அல்லது ரசனைக்காகவும் செல்வோம்.எப்போதாவது செல்வதில் தப்பில்லை.


ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு.


1 .வரலாறு


•1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது.

•1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது.

•1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது.

•1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது




2 .சந்தை நிலவரம்


•McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion

•YUM! Brands இன் வருமானம் ( Tacao Bell, KFC, Pizza Hut ) $11.3 Billion

•Wendy 's & Arby 's இன் வருமானம் 6 700 locations களில்இருந்து $3.6 Billion

•Burger King இன் வருமானம் 11 200 locations களில்இருந்து $2.5 Billion



3.McDonald 's இன் சந்தை நிலவரம்


•126 நாடுகளில் இயங்குகிறது

•400 000 ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்

•அமெரிக்காவில் மட்டும் 13 000 ஸ்டோர்ஸ் உள்ளன

•US இல் மாடு,பன்றி இறைச்சி, அதிகம் வாங்கும் நிறுவனம்



4 .Super Heavy users


•இவர்கள் மாதம் 10 முறையாவது McDonald 's செல்வர்

•75 % McDonald 's இன் sales இவர்களால் நடக்கிறது

•60 % sales Drive Through மூலம் நடக்கிறது



5 .மொத்த சன தொகையில் கிழமைக்கு ஒரு தடவையாவது Fast Food உண்ணுவோர் வீதம்


•61 % - கொங் Kong
•59% - மலேசியா
•54% - பிலிப்பைன்ஸ்
•50% - சிங்கபூர்
•44% - தாய்லாந்து
•41% - சீனா
•37% - இந்தியா
•35% - அமெரிக்கா
•14% - இங்கிலாந்த்து
•03% - சுவீடன்



6 .சுகாதார சீர்கேடு வீதம் (நூறு சோதனைகளில்) , முக்கிய தவறு

45 - Jack In The Box
62 - Taco Bell
84 - Wendy 's - உணவை முறையாக சமைக்கவில்லை
98 - Subway
98 -Dairy Queen - இறைச்சியை தொட்ட கையால் ஐஸ்கிரீம் ஐ கையாளல்
102 - KFC - காலாவதியான இறைச்சி
111 - Burger King
115 - Arby 's
118 - Hardee 's
126 - McDonald 's - கைகளை முறையாக கழுவுவதில்லை



7 .பயங்கரம்

•ஒரு Humberger நூறு மாடுகளில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சி கலவையாக இருக்கலாம்

•McDonald 's அநோமதய விலங்கு பொருட்களில் இருந்து சுவை ஊட்டப்படுகிறது

•Milk Shake 's Strawberry flavors 50 இற்கும் மேற்பட்ட இரசாயனங்களை கொண்டது.

•Bacteraia ஆல் பாதிக்கபட்ட விலங்கு பால் பயன்படுத்தப்படுகிறது

•ஒரு உணவு ஒரு நாளைக்கு தேவையான கலோரியிலும் அதிகம் கொண்டது



8 .Fast Food கொண்டுள்ள ஆபத்தான இரசாயங்கள்


•Sodium Phosphate - Fast Food Coffee
•Titanium Diaoxcide - fat free ranch dressing
•Dimethylpolysiloxane - McNuggets
•Azodicarbonamide - Sub way bread
•Diacetyl - Milk Shake


***
thanks nishole
***




"வாழ்க வளமுடன்"

28 ஜூன், 2011

நீங்கள் வாங்கும் உணவு பொருட்களின்"E" கோடு இருக்கா ?



அன்பர்களே!!!

நீங்கள் வாங்கும் உணவு பொருட்களின் "Ingredients" (சேர்க்கப்பட்ட பொருட்களின்) கலவைகளில் கீழ்கண்ட ஏதேனும் "E" கோடு இருந்தால்,நிச்சயமாக அவ்வுணவு பொருளில் "பன்றி கொழுப்பு" சேர்க்கப்பட்டுள்ளது.


E 100, E 110, E 120, E 140, E 141, E 153,

E 210, E 213, E 214, E 216, E 234, E 252, E 270, E 280,

E 325, E 326, E 327, E 334, E 335, E 336, E 337,

E 422, E 430, E 431, E 432, E 433, E 434, E 435, E436, E 440, E 470, E 471, E 472, E 473, E 474, E 475, E 476, E 477, E 478, E 481, E 482, E 483, E 491, E 492, E 493, E 494, E 495,

E 542, E 570, E 572,

E 631, E 635,

E 904.

E-INGREDIENTS என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சுவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes) , டோஃபி (Toffees) , டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.


பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் வெட்கம் அகன்றுவிடுதல்,

தீய எண்ணங்களை உருவாகிவிடுதல்,

வன்முறை எண்ணங்களை வளர்ந்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி.

***
thanks abuwasmeeonline.blogspot.com
***




"வாழ்க வளமுடன்"

ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை !


வெளியூர், வெளிநாடு பயணங்களுக்கு ஜிப் சூட்கேஸ் பயன்படுத்துபவரா நீங்கள் .அப்படியானால் இந்த எச்சரிக்கை உங்களுக்குத்தான் .



ஜிப் சூட்கேசிலுள்ள பூட்டை திறக்காமலே ஜிப்பை திறந்து அதிலுள்ள விலை மதிப்பு மிக்க பொருட்களை களவாடவோ அல்லது தேவையற்ற பொருட்களை உள்ளே வைத்து விட்டு திறந்த சுவடே தெரியாமல் மூடிவிட முடியும் .


அதன் மூலம் மதிப்பு மிக்க பொருட்களையோ ,பணத்தையோ நீங்கள் இழக்கவோ அல்லது செய்யாத குற்றத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படவோ வாய்ப்புள்ளது .கீழ் காணும் வீடியோவை பாருங்கள் விளக்கமாகப்புரியும்






எனவே எக்காரணம் கொண்டும் விலையுயர்ந்த
பொருட்களையோ அல்லது பணத்தையோ ஜிப் சூட்கேசினுள் வைக்காதீர்கள் .சாதாரணமான துணிகள் போன்றவற்றை வைக்க பயன்படுத்தினாலும் ஜிப்பை நகர்த்தமுடியாத படிக்கு ஏதாவது ஒரு சாதனத்தால் லாக் செய்யுங்கள் .


சொந்த அனுபவம் :

இத்தகவலை இரண்டு மாதங்களுக்கு முன்பாக துபாயில் வசித்து வரும் என் நண்பனிடம் கூறியிருந்தேன் .ஊருக்கு வரும்போது ஒரு விலையுர்ந்த செல்போன் வாங்கி வரவும் கேட்டிருந்தேன் .கடந்த வாரம் அவன் ஊருக்கு வந்தான் .

மக்கா செல் வாங்கிட்டு வரச்சொன்னேனே வாங்கிட்டு வந்தியான்னு கேட்டேன் .அவன் சொன்னான் மக்கா உனக்கு விஷயமே தெரியாதா ஜிப் சூட்கேசுல உனக்கு வாங்கி வச்சிருந்த செல் இருந்துது ,எவனோ ஆட்டயப்போட்டுட்டான் .


பயபுள்ள செல் வாங்கிட்டுவராம எவ்வளவு நேக்கா அல்வா குடுக்குது .


***
thanks koodal bala
***



"வாழ்க வளமுடன்"

16 ஜூன், 2011

நெப்போலியன் பொன பார்ட் இறந்தது எப்படி?

17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்த தன்னுடைய இருபதாவது வயதிலேயே போர்வீரனாக வாழ்க்கையை
தொடங்கியவன். தன் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை யுத்த களங்களிலேயே கழித்தவன்.


நெப்போலியனின் போர் தந்திரங்களும், போரிடும் முறையும்,படைவீரர்களிடையே ஆற்றும் வீரம் மிக்க சொற்பொழிவுகளும், ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக தன் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்த திறனும் உலகின் வரலாறு
அறிஞர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டவை ஆகும்.


1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து
மீள்வதற்கு அதற்கு முடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணி, லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன.


1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலேநாத் தீவில் கழிந்தது.

நெப்போலியன் போனபார்ட் மரணம் தொடர்பில் பல்வேறுவிதமான ஊகங்கள் இதுவரை வெளியாகியுள்ளன.


நெப்போலியன் ஆர்சனிக் விஷம் காரணமாக மரணமடைந்தான் என்று ஒரு கருத்தும், நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறை பற்றிய ஆய்வுகளிலிருந்து, அந்த அறையின் சுவரை
அலங்கரித்த ஓவியத்தில் விஷம் பூசப்பட்டு இருந்தது. அந்த ஓவியத்தில் பாம்பின் விஷத்தை ஒரு வர்ணமாகப் பயன்படுத்தி இருந்தார்கள். அந்த ஓவியத்தின் அருகிலேயே நெப்போலியன் இருந்ததால், விஷத்தைச் சுவாசித்து சுவாசித்து
இறந்துவிட்டார் என்று ஒரு தரப்பு ஆய்வாளர்களும், சுவரில் ஓவியத்தினை ஒட்ட பயன்படுத்தப்பட்ட பசையில் விஷத்தைக் கலந்திருந்தார்கள். பசி தாங்கமுடியாமல் நெப்போலியன் ஓவியத்தினைக் கிழித்துத் தின்றதால் இறந்தார் என்று இன்னொரு தரப்பினர் அறிவித்தனர்.

ஆனால், நெப்போலியன் மரணம் தொடர்பிலான புதிதாகவெளியாகியுள்ளஆய்வுத்தகவலின் பிரகாரம் மாவீரன்நெப்போலியன் இயற்கை மரணம்அடைந்ததாகதெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வினை இத்தாலியின் அணு பெளதிகவியல் தொடர்பான தேசிய நிறுவகம்(NINP) மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொன்மை கோட்பாட்டினை மையமாகக் கொண்டு இந்த ஆய்வுத்தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆய்வில், குழந்தைப் பருவ மற்றும் இறப்புக்கு
முந்திய காலப்பகுதிற்கும் இடைப்பட்ட பேரசனுடைய முடிகளின் பல்வேறு மாதிரிகளை ஆய்வாளர்கள் ஆய்வுக்குட்படுத்தினார்கள்.

ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளினை சிறியதொரு அணுக்கருவியின் மையத்திலிட்டு அவற்றின்மீது நியூத்திரன்களுடன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது
ஆர்சனிக் ஸ்திரமற்றதாகவும், ஒன்று சேராமலும், காமா மற்றும் வீற்றா கதிர்களும் வெளியாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

கதிர்வீசலினை அளவீடுசெய்தபோது, ஆய்வுக்காக எடுக்கப்பட்ட முடிகளில் ஆர்சனிக் மட்டமானது 100 தடவைகள் சாதாரணமாகவே இருந்தது. நெப்போலியனின் மகன், மனைவி மற்றும் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்தவர்களின் முடிகளினை ஆய்வுசெய்தபோதும் ஒரே முடிவே கிடைத்ததாம்.

ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சென் ஹெலெனா தீவில் சிறை வைக்கப்பட்ட நெப்போலியன் பாரியளவில் ஆர்சனிக் விஷத்தினை உள்ளெடுத்ததன் காரணத்தினாலேயே மரணமாகியதாக பலரும் நம்புகின்றனர்.

பிரான்சின் பேரரசன் இத்தாலியின் மன்னன் சுவிஸ் கூட்டமைப்பின் (http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81) இணைப்பாளன்

ரைன் கூட்டாட்சியின் ( http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF&action=edit&redlink=1)

காப்பாளன்ஆட்சிக்காலம் முடிசூட்டு விழா முழுப்பெயர் பிறப்பு பிறப்பிடம் இறப்பு இறந்த இடம் புதைக்கப்பட்டது முன்னிருந்தவர் பின்வந்தவர் துணைவி வாரிசுகள் அரச குடும்பம் தந்தை தாய்......




முதலாம் நெப்போலியன்
Napoléon I


நெப்போலியன் தனது படிப்பகத்தில், ஜாக்-லூயி டேவிட் 1812 இல் வரைந்தது
மார்ச் 20, 1804–ஏப்ரல் 6,1814
மார்ச் 1, 1815–ஜூன் 22,1815
டிசம்பர் 2, 1804
நெப்போலியன் பொனபார்ட்
ஆகத்து 15 1769
கோர்சிக்கா
மே 5 1821 (அகவை 51)
சென் ஹெலெனா
பாரிஸ்
பிரெஞ்சு கொன்சுலேட்
முன்னைய அரசன்:பதினாறாம் லூயி(இ. 1793)
நடப்பின் படிபதினெட்டாம் லூயி
De Jure நெப்போலியன் II
ஜோசெஃபின் டெ பியூஹார்னை
மரீ லூயி
நெப்போலியன் II
பொனபார்ட்
கார்லோ பொனபார்ட்
லெற்றீசியா ரமோலினோ


***
thanks eegarai
***





"வாழ்க வளமுடன்"

23 மே, 2011

எடை கூடாமல் இருக்க சில யோசனைகள்



இன்றைய பெண்கள் முன்பு போல் அம்மி அரைப்பதில்லை, உரல் வைத்து மாவு ஆட்டுவதில்லை இது எல்லாம் செய்வதில்லை. உடம்பு மட்டும் ஸ்லிம்மா இருக்கணும் என்று ஆசைப்படுகிறோம்.


மெலிந்த உடம்பை பெருக்க வைப்பது மிகவும் சுலபம். ஆனால் அதிகப்படியான சதைகளைக் குறைப்பது தான் மிகவும் சிக்கல்.

உடலின் தேவையில்லாத எக்ஸ்ட்ரா சதைகளை குறைக்க சின்ன சின்ன உடல்பயிற்சிகள்:-


தவிர்க்க வேண்டியவைகள்:

*முதலில் அதிக நேரம் தொலைக்காட்சி பெட்டியின் முன்போ அல்லது இப்படி ஏதாவது பதிவு போடணும் என்றோ கம்ப்யூட்டர் முன்பு உட்காராதீங்க.

*அதிகமாக நொருக்கு தீனி சாப்பிடாதீங்க.

*உங்களுக்கு மிகவும் பிடித்த ஆயில் உணவுகளையும், பொழுப்பு நிறைந்த .. பிட்ஸா, பர்கரையும் மறந்துவிடவும்.

*வீட்டுக்கு வேலைக்கு ஆள் வந்தால், உங்கள் உடல்ஆரோக்கியத்தை எண்ணிக்கொண்டு யோசிக்கவும்.

*மதியம் தூக்கம் கட்டாயம் வேண்டாம்.

*

அதிகப்படியான சதைகளை குறைக்க சில பயிற்சிகள்:

இடுப்பில்:

*பெண்களுக்கு அதிக சதை போடுவதே இடுப்பில் தான். அவங்க கட்டாயம் இடுப்புக்கு பயிற்சி கொடுக்கணும்.

*நல்ல நடைபயிற்சி மிக முக்கியம்.

*நல்லா டான்ஸ் ஆடுங்க. (ஆட தெரியவில்லை என்றாலும் இடுப்பை வளைத்து கால் கைகளை மடக்கி டான்ஸ் என்ற பெயரில் ஆடவும்.)

*நேராக நின்றுக்கொண்டு 2 கைகளையும் மேலே தூக்கி அப்படியே ஒரு கைகளை மட்டும் கீழே கொண்டு வரும்பொழுது இடுப்புடன் உடலையும் வளைக்கவும். இதை போல் 2 பக்கமும் 10 முறை செய்யவும்.

*இதன் மூலம் இடுப்பின் மடிப்பு மற்றும் சதை குறையும்.

*எந்த வேலை செய்யும் பொழுதும் வயிற்றை நல்லா உள் இழுத்து விடவும். இப்படி அடிக்கடி செய்தால் வயிற்று பகுதியின் சதை குறையும்.

*தரையில் படுத்துக்கொண்டு கால்களை முட்டியினை மடக்காமல் தூக்கி இறக்கவும். 2 கால்களையும் 10 முறை செய்யவும்.

இடுப்பு மற்றும் தொடைக்கு:

*சிலருக்கு பின் பகுதி மட்டும் அழகில்லாமல் இருக்கும். தினமும் குறைந்தது 10முறையாவது மாடிப்படி ஏறி இறங்கவும்.

*நின்றுக் கொண்டு கால்களின் முட்டியினை மட்டும் தூக்கி இறக்கவும். அடிக்கடி செய்யவும்.

*நன்றாக நடக்கவும். அப்ப தான் இடுப்புத்தொடை உறுதியாக்கும்.

கைகளுக்கு:

*இதுக்கு நல்ல உடல்பயிற்சி வீட்டு வேலைகளை சரியாக செய்வது தான். அம்மி அரைக்கவும், கிணற்றில் தண்ணீர் எடுக்கவும், பம்பில் தண்ணீர் அடிக்கவும். இதுவே நல்ல பயிற்சி. முடியாதவங்க செய்வது போல் பாவனை செய்யுங்கள். அது தான் பயிற்சி.

கழுத்துக்கு கீழ் தொங்கும் சதை:

*சிலரின் அழகை கெடுப்பது கழுத்தின் மடிப்பு சதை.

*இதுக்கு கழுத்தை மேலும் கீழுமாக தலையினை மாற்றி மாற்றி 10 முறை செய்யவும்.

*முகத்தை இட-வலமாக மாற்றி மாற்றி திருப்பவும்.

*முறையான நடைபயிற்சி, நீச்சல் பயிற்சி, ஜாக்கிங், சைக்கள் ஓட்டுவது போன்ற உடல்பயிற்சிகள்
செய்வது ரொம்ப நல்லது... தொடர்ந்து செய்யுங்கள்...

***

மேலும் சில குறிப்புகள்


* தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

* கொழுப்புச் சத்து, மாவுச் சத்து அதிகம் உள்ள உணவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* காபி, டீ அதிகம் குடிக்கக் கூடாது.

* பச்சைக் காய்கறிகள், கீரை, பழ வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* இரவு உணவை 8 மணிக்குச் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்படி சாப்பிட முடியாதவர்கள் இரவு உணவை பச்சைக் காய்கறிகள், பழங்கள் என மாற்றிக் கொள்ள வேண்டும்.

* படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும்.

* இனிப்பு, புளிப்பு உள்ள உணவு வகைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

* தினமும் 30 முதல் 45 நிமிஷங்கள் வரை நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

* முடிந்த அளவு பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

* ஃபாஸ்ட்ஃபுட், ஐஸ்கிரீம், சாக்லேட் உள்ளிட்ட நொறுக்குத் தீனி அதிகம் கூடாது.


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

14 மே, 2011

உஷார்!! ரசாயன அழகிகள் அல்லது இயற்கை அழகிகள் !!!



திருமண வரன் விளம்பரங்களில் மணமகன் குறித்தத் தகவல்களுடன் எதிர்பார்க்கும் சாதி, மதம் ஆகிய விபரங்களுடன் சிவந்த நிறமுள்ள பெண் தேவை! என்றும் பார்த்திருப்பீர்கள். அதேபோல் மணப்பெண் வீட்டாரின் விளம்பரத்தில் ஜாதகம், சாதி, மதம், படிப்பு போன்றவற்றோடு மாநிறம், சிவப்பு நிறம் என்று மணப்பெண்ணின் சரும நிறமும் குறிப்பிடப்பட்டிருக்கும்.


சஞ்சிகைகள் மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் நடிக்கும்?! பெண்களில் கருத்த சருமம் உடைய மாடல் அழகியைக் காண்பது அரிது. பாட்டியைக் காட்டினால்கூட சிவந்தசருமத்தையுடைய பாட்டியைக் காட்டுமளவுக்கு மக்கள் மனதில் சிவந்த அல்லது வெளீர் நிறம் அழகின் நிறமாக விதைக்கப்பட்டுள்ளது. அனேகமாக இந்தியா போன்ற வெள்ளையரல்லாத பெருமக்கள் தேசத்தில்தான் இப்படியான விளம்பரங்களால் வெள்ளையும் சிவந்த நிறமும் அழகின் அடையாளங்களாக விதைக்கப்பட்டுள்ளது.


அமெரிக்கா அல்லது ஐரோப்பிய தேசங்களில் வெள்ளையருக்கு இணையாக கருப்பினத்தவரையும் மாடல்களாக, நடிகைகளாக ஏற்றுக் கொள்ளும் மனநிலை உள்ளது. ஆனால் நம்நாட்டில் வெளியிடப்படும் அரசன் சோப்பு விளம்பரத்திற்குக்கூட வெளீர்நிறச் சரும மாடல் மங்கையர் அவசியமாகிறது. லைஃப்பாய் சோப்பு தவிர அனேகமாக எல்லா சோப்புகளுக்கும் பெண்கள்தான் மாடல்கள். அவர்களும் வெளீர்நிறச் சரும அழகிகளாக இருந்தால்தான் அவர்களைப்போல் அழகைப் பெறும் ஆசையில் அல்லது நம்பிக்கையில் குறிப்பிட்ட சோப்புகளை விற்க முடியும் என்ற நிலை.

பழைய படங்களில் பெண்ணழகை வர்ணிக்கும் பாடல்களில் மஞ்சள் முகமே வருக என்றும் உலகப் பிரசித்திப் பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்ஸன் துரைக்கு வரிசெலுத்த மறுக்கும் கட்டபொம்மன் "மாவரைத்தாயா...எம்வீட்டுப் பெண்களுக்கு மஞ்சளரைத்தாயா.." என்று பெண்களின் அன்றாட அழகுசாதனபொருளாக மஞ்சள் இருந்துள்ளது. இயற்கையிலேயே கிருமி நாசினியாகவும் விளங்கும் மஞ்சளின் மகிமையை அறிந்துதான் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா மஞ்சளுக்குக் காப்புரிமை பெற்றதையும் இந்திய மஞ்சளின் பாரம்பர்யத்தைச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் மறந்திருக்க முடியாது.


பெண்களின் அழகுசாதனமாக இருந்த மஞ்சள் மலையேறி அவ்விடத்தை ஃபேர்னஸ் கிரீம்கள் பிடித்துக் கொண்டன. மஞ்சளை அடிப்படையாகக் கொண்ட ஃபேர்னஸ் கிரீம்கள் உலக அழகிகளின் சாய்ஸாகக் காட்டப்படும் கிரீம்களுடன் போட்டிபோட முடியாமல் ஏறத்தாழ சந்தையிலிருந்து விலகுமளவுக்கு அழகு சாதனப்பொருட்களின் படையெடுப்பு இந்தியப் பெண்களை மட்டுமல்லாது ஆண்களையும் அடிமையாக்கி விட்டது. சமீபத்தில் பெண்களின் சிவப்பழகு கிரீமைப் பயன்படுத்தும் ஆணழகனை நண்பர்கள் கிண்டலடிப்பதுபோல் ஒரு விளம்பரம் காட்டப்பட்டது.


அழகுக்கு நிறத்தை அடிப்படையாகக் கருதும் இந்தியர்களின் மனப்பான்மையைச் சரியாகப் புரிந்து கொண்ட மேற்கத்திய முதலாளிகள் உலக அழகிப்போட்டி போன்ற சர்வதேசப் போட்டிகளை நடத்தி சிவப்பாக இருந்தால்தான் அழகு என்ற எண்ணத்தை நிரந்தரமாக விதைத்து விட்டது ஒருபக்கமென்றால் எதைப் போட்டாவது முகச்சருமத்தைச் சிவப்பாக்க வேண்டுமென்ற 'நிறவெறி' தலைக்கேறி அழகு சாதன கிரீம்களுடன் சரும நோய்களுக்கான மருந்துக்களையும் பயன்படுத்தி சிவப்பாக்கும் கொடுமை பெரும்பாலான பெண்களிடம் இருக்கிறது. பெட்னோவேட் (Betnovate) போன்ற கீரிம்கள் பல்வேறு வகையான சரும நோய்களுக்கான கலிம்பாக சருமநோய் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இத்துடன் சருமம் சுருங்காமல், கருக்காமல் இருக்கச் செய்யும் ரசாயனப் பொருட்களும் கலந்துள்ளன. தேமல், முகப்பரு போன்ற சருமநோய்களுக்காப் பரிந்துரைக்கப்படும் இத்தகைய மருந்துகளையும் அழகு சாதனப்பொருளாகப் பயன்படுத்தி வருவதாக பெரும்பாலான மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.

ஹரியானா கிராம பள்ளியாசிரியை தேவிகுமார் பெட்னோவேட் கிரீமை கடந்த எட்டுவருடங்களாக உபயோகித்து வருவதாகச் சொல்கிறார். வலது தாடையில் கட்டியால் அவதிப்பட்ட பிறகே அதற்கான காரணத்தைக் கண்டுள்ளார். சருமத்தில் நெடுநாட்களாக இத்தகையக் கிரீம்களைப் பயன்படுத்தி வருவதால் தோல் கேன்சர் பாதிப்பு ஏற்படும் அபாயமிருப்பதாக சருமநோய் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

இந்திய மருத்துவக் கழகத்தின் கெளரவ பொதுச்செயலாளார் டாக்டர் ராஜிவ் சர்மா கூற்றுப்படி, "அதிகம் துர்ப்பிரயோகம் செய்யப்படும் மருந்தாக பெட்னோவேட் உள்ளது"என்கிறார். பாமர மக்களே இத்தகைய கிரீம்களை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விளம்பரப் படுத்துகிறார்கள் என்கிறார். கடந்த பதினைந்து வருடங்களாக பெட்னோவேட்டை அழகுசாதனக் கிரீமாகப் பயன்படுத்தி வந்த பெண்மணிக்கு முகத்தில் ரோமம் மற்றும் நிரந்தர தழும்பு ஏற்பட்டதோடு தோலின் மேற்பரப்பிலுள்ள மெல்லிய நரம்புகளும் பாதிக்கப்பட்டதாகச் சொல்கிறார்.

சருமப்பாதுகாப்பு மருந்துகளின் சந்தையில் ஏறத்தாழ 318 மில்லியன் டாலர் சந்தையை அழகு சாதன கிரீம்கள் பிடித்துள்ளன. பத்து இருபது ரூயாயில் உலகத்தரமுள்ள அழகுகிரீம் வாங்குமளவுக்கு அழகு சாதனங்கள் மக்களை ஆக்கிரமித்துள்ளது. அகம் அழகாக இருந்தால் புறமும் அழகாகும் என்ற நம்பிக்கை நம்முன்னோர்களிடம் இருந்தது. அதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்றார்கள்.ஆனால் நம் மக்களோ பிற்பாதியை மட்டும் பிடித்துக் கொண்டு அழகுசாதனக் கிரீம்களுக்கு அடிமையாகி விட்டார்கள்.



*

சாரதா முருகேஷ் -அருப்புக்கோட்டை


***
thanks inneram
***



"வாழ்க வளமுடன்"

அவசர உணவு – ஆபத்தின் அழைப்பு!


உண்டு, உடுத்தி, அனுபவித்து இன்பமயமாக இவ்வுலகில் வாழ ஆசைப்படும் மனிதன் அதன் பொருட்டு மேற்கொள்ளும் முயற்சிகள் பிரமிக்கத்தக்கவை. ஒழுங்காக அமர்ந்து உண்பதற்கும் நேரமின்றி ஓடுகிறான், ஓடுகிறான், ஓடிக்கொண்டேயிருக்கின்றான்.

ஒருவரையொருவர் விஞ்சும் விதத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த அவசர உலகில் Fast Foods எனப்படும் அவசர உணவுகளின் தேவைகள் தற்காலம் அதிகரித்து விட்டன. அதற்கேற்றாற் போல் வீதிக்கு வீதி, முக்குக்கு முக்கு அவசர உணவு விடுதிகள் முளைத்துக் கொண்டிருக்கின்றன.

பாரம்பரியமான உணவுகளை ஆற அமர ரசித்து ருசித்துச் சாப்பிடும் காலம் மெல்ல மெல்ல மலையேறி வருகிறது. இன்று அவசர உணவுகளை அள்ளி விழுங்கிவிட்டு ஓடும் அவல நிலையே எங்கும் நிலவுகிறது. குறிப்பாக குழந்தைகளை இந்த வகை உணவுகள் அதிகம் கவர்கின்றன. விளைவு - சிறு வயது முதல் அவர்களுக்குப் பலவித நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக உடல் பருமன் (Obesity), நீரிழிவு(சர்க்கரை நோய்) ஆகியவற்றுக்கு குழந்தைகள் எளிய இலக்காகிறார்கள்.

இதனாலேயே பிரிட்டிஷ் அரசு தொலைக்காட்சிகளில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளில் அவசர உணவுகளின் விளம்பரங்களை 2006-ம் ஆண்டு முதல் தடை செய்தது.

நகர வாழ்க்கையும், அவசர உணவுகளும் பிரிக்க முடியா ஜோடிகளாக மாறிவிட்டன.

2006-ம் ஆண்டு மட்டும் உலக அவசர உணவுச் சந்தையின் வளர்ச்சி 4.8 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. உலகிலேயே மிகப் பெரிய சந்தையான இந்தியாவில் வருடத்திற்கு 4.1 சதவீதம் இது வளர்ச்சியடைந்து வருகின்றது.

அவசர உணவின் ஜாம்பவானான மெக்டோனால்ட் 6 கண்டங்களில், 126 நாடுகளில் தனது கிளைகளைப் பரப்பியுள்ளது. மொத்தம் 31,000 கடைகள் அதற்கு உள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எந்த அளவுக்கு அவசர உணவுகளின் சந்தைகள் அதிகரித்து வருகின்றன என்பது இதன் மூலம் விளங்கும்.

மெக்டோனால்டுக்கு அடுத்து அதிரடி உணவு ஜாம்பவானாக விளங்கும் பிஸ்ஸா ஹட் 97 நாடுகளில் கால் பதித்துள்ளது. அவசர உணவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் முதன்மையானதாக வருவதும் அமெரிக்காதான்.

கடந்த 2003ல் எடுத்த கணக்கெடுப்பின்படி, உடல் பருமன்தான் அமெரிக்கர்களின் உடல்நலப் பாதிப்புகளுக்கு தலையாய காரணம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இதனால் ஒவ்வொரு வருடமும் சுமார் நான்கு லட்சம் அமெரிக்கர்கள் மரணிக்கிறார்களாம். சுமார் 6 கோடி பேர் உடல் பருமனுள்ளவர்களாக அமெரிக்காவில் உள்ளனர். சுமார் 12.7 கோடி பேர் அதிக எடையுள்ளவர்களாக இருக்கின்றனர்.


அவசர உணவுகள் ஏற்படுத்தும் விளைவுகளைப் பார்த்தீர்களா?


நமது இந்தியத் திருநாட்டிலும் இந்த அவசர உணவுகளால் பாதிப்பு அதிகரித்து வருவதாக செய்திகளின் மூலம் அறிய முடிகிறது


மும்பையில் வசிக்கும் அந்த இல்லத்தரசியின் பெயர் சுஜாதா. இரு பிள்ளைகளுக்குத் தாயான அவருக்கு மருத்துவர்கள் ஓர் அதிர்ச்சி செய்தியினைச் சொன்னார்கள். அவருடைய இரு பிள்ளைகளுக்கும் (Type 2) இரண்டாம் ரக நீரிழிவு முற்றி வருகிறது என்பது தான் அந்த அதிர்ச்சிச் செய்தி. “நமக்கெல்லாம் இந்த வெளிநாட்டுக்கார நோய்கள் வராது என்றல்லவா நினைத்திருந்தேன்” என்கிறார் இந்தத் தாய்.

சத்தான உணவுகள் பற்றாக்குறை, உணவுத்தட்டுப்பாடு என்று ஒருபக்கம் துயருறும் இந்தியாவில்தான் அதிஉணவு, உடல்பருமன் போன்ற பிரச்னைகளும் வளர்ந்து வருகின்றன என்பது கசப்பான முரண்பாடு.

“உடற்பயிற்சி, பாரம்பரியமான கள விளையாட்டுகள் யாவும் குறைந்துபோய், மாறிவரும் நாகரீகத்துக்கேற்ப, தொலைக்காட்சி, கணினியில் விளையாடி, கடைத்தெருவில் சுற்றி ஓடி, கடைசியில் ஜங்க்ஃபுட் எனப்படும் அவசர உணவுகளை அள்ளிக் கொறித்துவிட்டு உறங்கச் செல்கிறார்கள் இன்றைய சிறுவர்கள்” என்று வருத்தப்படுகிறார் டாக்டர் பவுலா கோயல். மும்பையின் ஃபெய்த் கிளினிக் மருத்துவர் இவர்.

இந்த அவசர உணவுகளால் நீரிழிவு நோயும் எளிதாகத் தாக்குகிறதாம். உலகளவில் மக்கள்தொகையில் 1.2 பில்லியன் என்றிருந்து சைனாவை முந்தாவிட்டாலும் கூட, அவர்களுள் 51 மில்லியன் பேர் நீரிழிவு நோயாளிகள் என்ற புள்ளிவிவரத்தின் மூலம் இந்தியாவே முதலிடம் பெற்றுள்ளது.

இப்படியே போனால், இன்னும் இருபதே வருடங்களில் இந்த நோயால் தாக்கப்படுபவர்களின் தொகை 150 சத வளர்ச்சியைப் பெறும் என்பதில் தான் இன்னும் திகைப்பு.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், நாலாயிரம் குழந்தைகளிடம் 15 இந்திய நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம், ஐந்திலிருந்து பதினான்கு வயதுக்குட்பட்ட நகரக் குழந்தைகளில் 23 சதமானம் பேருக்கு அதிக உடல் எடை உள்ளதாம். அதனால் உடல் பரும வியாதிக்கு எளிதில் ஆளாகும் சாத்தியதை உண்டாம்.

ஆக, ஆபத்தைத் தவிர்க்க, அவசர உணவை அறவே தவிர்ப்போம் என்பதே அறிய வேண்டிய செய்தி.


***
thanks inneram
***





"வாழ்க வளமுடன்"

11 ஏப்ரல், 2011

"இருப்பும் விருப்பும்" ( படித்ததில் பிடித்தது )

வாஷிங்டனுக்கு, டோக்கியோவிற்கு, மெல்போனுக்கு மற்றும் இன்ன பிற பெருநகரங்களுக்கு எந்தெந்த விமான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை விமானங்களை இயக்குகின்றன என்பது அத்துப் படியான அளவிற்கு நம்மில் பலருக்கு நமது கிராமத்திற்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை நகரப் பேருந்துகள் வந்து போகின்றன என்பது தெரியாது. * பல மைல்களுக்கு அப்பால் கிடக்கிற பிரமிடுகளின் மேன்மை குறித்து, தொன்மம் குறித்து, மணிக் கணக்காய் சிலாகிப்பதில், பாரம் பாரமாய் எழுதிக் குவிப்பதில் கொஞ்சமும் கஞ்சத் தனமே இருப்பதில்லை தமிழனுக்கு. அதில் நமக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படிக்கு வருத்தமும் இல்லை. சாவதற்குள் ஒரு முறையேனும் பிரமிடுகளைப் பார்த்துவிட்டு வந்துதான் சாக வேண்டும் எனப் பிடிவாதாமாய் ஆசைப்படும் நண்பர்கள் எனக்கும் உண்டு. எரிச்சலே கொள்ளாமல், ஒரு புன்னகையோடு இவர்களைக் கடந்து போகும் பக்குவம்கூட நமக்கு வந்துவிட்டது. * ஆதிச்ச நல்லூர், மணல்மேடு மற்றும் காரைமேடு போன்ற நமது தமிழ்க் கிராமங்களில் நடக்கும் போதே கால்களில் மிதிபட்டு உடைந்து அழிந்து வரும், நமது தொன்மையும் மேன்மையும் மிக்க நாகரீகத்தின் சின்னங்களான முதுமக்கள் தாழிகள் குறித்து எந்த அக்கறையும் இவர்களுக்கு இருப்பதில்லை என்பதுதான் நமது கவலையே. * பெருந்தன்மையினால் தாராளமாய் பிசைந்து செய்யப்பட்ட மனிதனால்கூட மேற்சொன்ன எந்த ஒரு ஊரிலும் இன்றைய தேதியில்கூட ஐயாயிரம் பேருக்கு மேல் வாழ்வதாய்ச் சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட குக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றி ஐம்பது ஏக்கரை ஒட்டிய நிலப் பரப்பில் அமைந்துள்ள சுடுகாடுகளின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச ஆய்வாளர்கள் அக்கறை கொள்ளாததில் நியாயம் இருக்கலாம். தமிழாய்ந்த தமிழர்களின் கவனம்கூட இவற்றின் பக்கம் திரும்பாததுதான் உலகம் ருசித்த சோகங்களிலேயே தலையாய சோகம். * குருஷேத்திரப் போர் நடந்ததாகக் கூறப்படும் இடமருகில்கூட இவ்வளவு பரந்த நிலப் பரப்பில் சுடுகாடு இருக்கிறதா? அல்லது இருந்து அழிந்து போனதற்கான சுவடுகலாவது அல்லது புராணவழி சான்றுகளாவது இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்றால் அதுவுமில்லை. * எத்தனையோ லட்சாதி லட்சம் குதிரைகளும் யானைகளும் வீரர்களும் பங்கு பெற்றதாகக் கூறப்படும் போர்க்களமான குருச்கேத்திரத்திற்கு அருகே காணக் கிடைக்காத ஒரு நிலப் பரப்பு நிலத்தில், தமிழ் மண்ணில் சுடுகாடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன என்றால் என்ன பொருள்? * இத்தனை பெரிய பரப்பளவில் சுடுகாடுகள் ஏதோ ஒரு புள்ளியில் தேவைப் பட்டிருக்கின்றன. எனில் பெரியதும் உக்கிரமமானடுமான போர்கள் அங்கே நடந்திருக்கக் கூடும் என்று கொள்வதற்கும் வாய்ப்புண்டு. * இது உண்மையெனில் பொறாமை கொள்ளுமளவிற்கு மேன்மையும் அளப்பரிய வளங்களைக் கொண்டதுமான சாம்ராஜ்யங்கள் அங்கே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனில் இது குறித்த ஆய்வுகள் போதுமான வகையில் என்றுகூட அல்ல, இன்னும் தொடங்கப் படவே இல்லையே ஏன்?. * உலக கவனம், இந்திய கவனம் என்பவற்றை எல்லாம் கூட ஆடித் தள்ளுபடி , பொங்கல் தள்ளுபடி அல்லது இது போன்ற ஏதாவது ஒரு தள்ளுபடி என்கிற வகையில் தள்ளுபடி செய்துவிடலாம். ஏனெனில் தமிழ்ச் சுடுகாடுகளின் தொன்மையேகூட அவர்களைக் கலக்கிப் புரட்டி வெட்டிச் சாய்த்திருக்கலாம்.அதையும் இதையுமென்றுஅலைந்தலைந்து ஆய்வு செய்யும் எங்கள் சான்றார்ந்த பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது குறித்து கவனம் சாயாததன் காரணம்தான் என்ன முயன்றும் பிடிபட மறுக்கிறது. * மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா பற்றித் தமிழகத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் சரியாகவோ தவறாகவோ கூடுதலாகவோ சற்றுக் குறைச்சலாகவோ இருக்கலாம், ஆனால் நிச்சயமாகத் தெரியும். * மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவற்றின் தொன்மைச் சிறப்புகள் குறித்து கற்றுத் தெளியாமல் நமது பிள்ளைகள் பள்ளிகளைக் கடந்துவிடக் கூடாது என்கிற கவனத்தோடு நமது கல்வித் திட்டம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதில் நமக்கெதுவும் பிரச்சினை இல்லை. இன்னுஞ்சொல்லப் போனால் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் அதிலும் குறிப்பாக பண்டைய நகர நாகரீகம் ஆகியவற்றின் தொன்மச் சிறப்புகள் குறித்து நம் பிள்ளைகள் தெளிவுறக் கற்றுத் தேரவேண்டும் என்பதில் முரட்டுத் தனமான பிடிவாதமே நமக்குண்டு. * இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் உலகின் எந்த ஒரு நாகரீகத்தின் பழமை மற்றும் தொன்மச் சின்னங்கள் குறித்தும் நம் குழந்தைகளுக்குத் தெளிவுறச் சொல்லித் தரவேண்டும் நம் எல்லை தாண்டிய ஆசையை யாரும் சந்தேகப் பட முடியாது. * நமது ஆதங்கமெல்லாம், நமது தமிழ்மண்ணின் மையப் பகுதியான அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள உட்கோட்டையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் அந்தப் பூமிக்குக் கீழே புதையுண்ட நிலையில் கட்டடங்களும் சிலைகளும் காணப்பட்டு, போதிய பராமரிப்பும் ஆய்வுமின்றி அழிந்து வருவதைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லாதது குறித்துதான். * ஆய்வாளர்களோ, கல்வியாளர்களோ, அரசுகளோ அது குறித்துப் போதிய அக்கறை காட்டாது மௌனிப்பதன் மர்மம் என்ன?. கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம் வரை செல்லும் கல்விச் சுற்றுலாக்கள்கூட அங்கிருந்து கிராம மக்களுக்கான நடை தூரத்திலிருக்கும் உட்கோட்டைவரை நீளாமல் போவதில் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. * கிரஹாம் ஆன் கூக் என்ற அறிஞர் பூம்புகாருக்கும், நாகைக்கும் இடையே நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் பதினோராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகுந்த நுணுக்கமான நகர கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு நிலப் பகுதி இப்பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருக்கிறது என்பதைத்தெளிவு படுத்தினார். அது குறித்து, அது சரியல்ல என்கிற அளவில்கூட வாய் திறக்காமல் உலகச் சமூகம் மௌனித்துக் மர்மம் புரிகிறது. * அதை உண்மையென ஒத்துக் கொண்டால் மெசபடோமியாவைவிடப் பழமையும் தொன்மையும் வாய்ந்த நாகரீகத்திற்கு சொந்தப் பூமி தமிழ்ப் பூமி என்ற உண்மையை ஒத்துக் கொள்வதாய் ஆகும். அதை அவர்களால் ஜீரணிக்க இயலாது. ஆயிரம்தான் தமிழ்ப் பூமியின் நாகரீகம் என்றாலும் அது இந்திய நாகரீகம்தானே?. பிறகேன் இந்தியச் சமூகமும் மௌனிக்கிறது?. * இதையெல்லாம் விடுங்கள், உலகின் எந்தப் பகுதியில் எது கிடைத்தாலும் ஓடியோடி ஆய்ந்து அவற்றின் சிறப்புகளை பெருந்தன்மையோடு ஏற்று பறை சாற்றும் தமிழ் மண்ணின் அறிவு ஜீவிகளே, இதை ஏற்கக் கூட வேண்டாம், சரிதானா என்கிற அளவிலேனும் இதை ஆய்ந்து பார்க்கவும் அஞ்சுவதன் பொருள்தான் என்ன? * கேட்கலாம், "தமிழ்ப் பூமியின் தொன்மத்தை, மேன்மையை ஒப்புக் கொள்வதால் மட்டும் உங்களுக்கென்ன லாபம் வந்துவிடப் போகிறது?." திருப்பிக் கேட்கிறேன்," அது உண்மையெனில் அதை ஒத்துக் கொள்வதால் உங்களுக்கென்ன நட்டம் வந்துவிடப் போகிறது?" * தன் மொழியின், கலாச்சாரத்தின் தொன்மம் அறிந்த சமூகம் அவற்றை மதித்துப் புழங்கும். அதன் மூலம் அந்த மொழியும் கலாச்சாரமும் வளர்ந்து செழிக்கும். தனது மொழி மற்றும் கலாச்சாரத்தின் மேன்மை புரியாத சமூகம் எதுவாயினும் அவற்றைப் புழங்கத் தயங்கி அவற்றின் அழிவுக்குக் காரணமாகும். எனவேதான் கவலைப் படுகிறோம். * கி.பி.அரவிந்தன் "இருப்பும் விருப்பும்" என்ற தனது நூலில் தாங்கள் தோற்றதற்கான காரணங்களை அலசுகிறார். அவர் சொல்கிறார், " தவறுகளில் இருந்து படிப்பினைப் பெற்று முன்னேறுவதுதான் போராட்டம்." * ஆமாம், தனது தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்யும் இனமோ, சமூகமோ, சொந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடும் குழுவோ, அல்லது எதுவோ ஆயினும் அது அழிந்து போகும். * காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நமது சின்னக் குழந்தை சாய்னா சொல்கிறார், " I won the gold because I did not repeat my mistakes." *** நன்றி : "கல்கி" மற்றும் " சுகன் " *** "வாழ்க வளமுடன்"

08 ஏப்ரல், 2011

கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து...வயதுப்பெண்களுக்கான எச்சரிக்கை...

நீங்கள் சென்னையில் வசிப்பவரா? உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்...என் வீட்டு பெண் ஒரு போதும் நான் சொன்ன சொல்லை தட்டியது இல்லை...பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றியதில்லை.... அப்ப பையனுக்கு இல்லையா? அவர்களுக்கும்தான்... ஆனால் மிக முக்கியமாக பெண்களுக்கு.... * எங்க வீட்டு பசங்க..நான் கிழித்த கோட்டை தாண்டுவதே இல்லை... அவளுக்கு நான் என்றால் உசிர் என்று நீங்கள் உங்கள் பெண்ணை விட்டுகொடுக்காமல் இருந்தால்... சந்தோஷம்....ஆனால் நாடடில் நடப்பதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது அல்லவா? ஒருவேளை உங்கள் பெண் அப்பாவியாக இருந்தால் இந்த செய்தியை கதை போல் சொல்லி அவளுக்கு விஷயத்தின் தீவிரத்தை புரிய வைப்பது நலம்.... * நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள லாட்ஜிகளில் நடந்த ரெய்டில்...25 காதலர்கள் பிடிபட்டு இருக்கின்றார்கள்...இதில் கள்ளகாதல்களும் அடக்கம்... போலிசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து இருக்கின்றார்கள்...எனக்கு தெரிந்து என்னதான் எச்சரித்து அனுப்பி வைத்தாலும் நேற்று நல்ல கலெக்ஷன் பார்த்து இருக்ககூடும் என்பது என் கணிப்பு..... * உங்க மேல விபச்சார வழக்கு போட போறேன்... நீங்க இரண்டு பேரும் விபச்சாரம் செஞ்சிங்கனன்னு உங்க மேல கேஸ்போட போறேன் என்று ஒரு வார்த்தை சொன்னாலே.. போதும் நிச்சயம் அடித்து பிடித்து பணத்தை ரெடி செய்து சொன்ன தொகையை கட்டி விட்டுதான் அந்த ஜோடிகள் வந்து இருக்க முடியும்.... அல்லது நேர்மையாக எச்சரித்து அனுப்பி இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது...ஆது போல் நடக்க 2 சதவீதம் மட்டுமே வாய்ப்பு... * 5 வருடத்துக்கு முன் காதலர்கள் அதிகம் நாடுவது சென்னை பீச்...மற்றும் பெசன்ட் நகர் பீச், கிண்டி சிறுவர் பூங்கா போன்றவைதான்.. சென்னையில் வாகன பெருக்கம் அதிகமானதால் காதலர்களும் இட்ம் மாற தொடங்கினர்.... இங்கு இருந்து 60 கீலோமீட்டர்... தெரிந்தவர்கள் யாரும் வர வாய்ப்பில்லை.. அதனால் மகாபலிபுரம் காதலர்களின் வேடந்தாங்கல் ஆகி வெகு நாட்கள் ஆகின்றது.... * இதில் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்கும் போது தனிமையான சவுக்கு தோப்புகளில் இவர்கள் வாகனத்தை நிறுத்தி ரிப்பிரஷ் செய்து கொள்ள தொப்பின் உள்ளே போகும் போது.. அதை பல ஜோடிகண்கள் நோட்டம இடுகின்றன....பல கடற்கரையோர கிராமத்து வெட்டி இளைஞர்களின் காம பசிக்கு காதலன் கண் முன்னே பல காதலிகள் இரையாவது தொடந்து நடந்து கொண்டு இருக்கும் ஆப் த ரெக்கார்ட் கொடுமை... * ஒரு காதலன் இரண்டு மாதங்கள் மந்திரித்து விட்டது போல் இருக்க... அவனுக்கு புல்லாக தண்ணி ஏற்றி விட்டு விஷயத்தை கேட்க அழுதுக்கொண்டே தன் காதலி தன் கண்முன் கடற்கரை ஓர சவுக்கு தோப்பில் நான்கு பேரால் வன்கொடுமைக்கு அவனது காதலி உள்ளாக்கபட்டு இருக்கின்றார்...யோசித்து பாருங்கள் அது எவ்வளவு கொடுமை என்று....இதில் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால்... அந்த பெண்ணை சின்னா பின்ன படுத்தி விட்டு கடற்கரை மணலை அள்ளி அந்த பெண்ணின் பெண்உறுப்பில் கொட்டி விட்டு போயிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு வக்கரம் நிறைந்தவர்கள் என்று யோசித்து பாருங்கள்.... அதுமட்டும் அல்ல அந்த பெண் அணிந்து இருந்த நகைகளை பிடிங்கிகொண்டு அனுப்பி இருக்கின்றார்கள்... * ந்த சம்பவங்கள் காவல் துறை கவனத்துக்கு வரவேயில்லை.... காதலி வீட்டில் வழிப்பறியில் நகைகள் விட்டதாக சொன்னாலும்... இன்னும் இவன் முகத்தில் அவள் விழிக்க மறுக்கின்றாளாம்... இது போல் கவுரவம் கருதி வெளி வராத விஷயங்கள் நிறைய... அதுதான் அவர்கள் திரும்ப திரும்ப அந்த தப்பை பண்ண வைக்கின்றது... தெரியத்துக்கு வழி கோலுகின்றது.. * தனியாக ஒருவனிடம் ஒரு பெண் மாட்டினால் கூட சேதம் குறைவாக இருக்கும்... அதுவே நான்கு பேர் எனும் போது... அது உச்சகட்டத்தை அடைந்து விடும்..அவனை விட நான் ஏதாவது புதுமை செய்கின்றேன் பார். என்று கும்பலில்.... தன்னை முன்னிலை படுத்த எதையும் செய்வார்கள்.. அவர்கள் குடி போதையில் இருந்து விட்டால்..... கேட்கவே வேண்டாம்...வக்ரம் எல்லை மீறும்.... * நானும் என் மனைவியும் பாண்டிசேரிக்கு மாலை 5 மணிக்கு கிளம்பினோம்.. மயாஜாலை எங்கள் வாகனம் கடக்கும் போது மணி 5,45... அதிலிருந்து ஒரு 20 கிலோமீட்டரில் இது பக்கம் ஒரு சின்ன ஓய்வு இடத்தை சின்ன பார்க் போல செய்து வைத்து இருப்பார்கள்... அங்கிருந்து பார்க்கும் போது மிக ஆழகாக கடல் இருக்கும்..... * மகாபலிபுரம் அல்லது பாண்டிக்கு போகும் வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்தி விட்டு இளைப்பாறி விட்டு, ஒரு டீ குடித்து விட்டு இயற்கை உபாதைகளை முடித்துக்கொண்டு செல்ல ஒரு அற்புதமான இடம்.... அதன் எதிரில் சுனாமி அலை தாக்காம்ல் இருக்க சவுக்கு நட்டு இருந்தார்கள்... அது ஆளுயரத்துக்கு வளர்ந்து இருந்தது...6 மணி ஆகி இருட்டும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அங்கொன்றும் ,இங்கொன்றும் ஆக மனித தலைகள் தெரிய... சொன்னால் நம்ம மாட்டிர்கள்... ஒரு 50 ஜோடிகள் மேட்டை நோக்கி டிராய் படத்தில் வரும் கப்பல்கள் போல் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.... * காதலர்களாக பைக்கில் பறந்து... போக்குவரத்து போலிசாரிடம் மாட்டிக்கொண்டு... அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேக்க.... அழுதுக்கொண்டும், கதறிகொண்டும் இருக்கும் பலரை அந்த பக்கம் கல்லூரிக்கு போகும் போது பார்த்து இருக்கின்றேன்... * இவர்கள் எல்லாம் காதலர்களே அல்ல என்று நாம் ஒதுக்கி விட முடியாது...நாம் ஒன்று பத்து அடி தூரத்தில் இருந்து கொண்டு பிரான நாதா என்று வசனம் பேசும் காலத்தில் இல்லை.... பத்தாம் வகுப்பு கிராமத்து பெண் கழிவரையில் பிள்ளை பெற்றுகொள்ளும் காலம் இது என்பதை மறவாதீர்கள்.... * உங்கள் வீடோ அல்லது எதிர் வீடோ யார் வீட்டு பெண்ணாக இருந்தாலும்... ஒரு செய்தியை சொல்வது போல் சொல்லி கிழக்கு கடற்கரை சாலையை பற்றி ஒரு எச்சரிக்கை மணியை அடித்து வைப்பது நல்லது.... *** thanks thendral25 *** "வாழ்க வளமுடன்"

30 மார்ச், 2011

ஹரிக்கேன் விளக்கு உங்கள் அனைவருக்கும் நினைவு இருக்கா?

* ஹரிக்கேன் விளக்கு...கால ஓட்டத்தில் காணாமல் போனவை ..!

தமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.



பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர். பொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.



இதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது. ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...



இதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.


இந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...


மின்சாரம் எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம் எடுதது முந்தின நாள் இரவில் அந்த விளக்கு உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும். அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.



கண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி ( மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....



அப்போது என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது?. கவனம் சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.



நம்ம எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால் ஒரு தடிப்பு நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும் அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது போல் அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.



இப்போதெல்லாம் லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.



ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா அட்டை புத்தகத்தில் அனா ஆவன்னா படித்தேன், தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருந்தது, இன்றும் என் நினைவின் ஈர அடுக்குகளில்.....



மழைகாலங்களில் அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில் மாட்டி இருக்கும். அது காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின் நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.



அதுதெரியும் போது நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.



ஹரிக்கேன் விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை வாசமும் அது சில நேரங்களில் பக் என்று பற்றிகொண்டதும் அலறி அடித்து அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.



ஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.



என் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன் விளக்குகளாய் வீழ்ந்தும், இன்னும் வாழ்ந்தும் வருகிறார்கள்.



தன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி.... *** thanks ஜாக்கிசேகர். *** "வாழ்க வளமுடன்"


29 மார்ச், 2011

வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது அந்தரங்க விஷயங்களையும் பேசாதீர்கள் :(

நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். என்னுடைய ஆசிரியர் சொன்னதை இங்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன். அதாவது அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும் நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம். பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. முதல் வகை நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை. இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு. மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம் என்றார் விரிவாக. சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல் இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும் அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம் வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. காதலர்கள் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், கள்ளக் காதலியிடமோ, கள்ளக் காதலனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல். ஆக, ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை செக் பண்ணணும். நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம் ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ, நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே டெலிவர்டு ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும். சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து லாக் பண்ணிவிட வேண்டும். * நன்றி:என் நண்பர் மூலம் கேட்ட தகவல் இது,அவர் ஏதோ ஒரு பதிரிகயில் படிததாக கூறினார். *** நன்றி தென்றல் ***
"வாழ்க வளமுடன்"

19 மார்ச், 2011

பொண்ணு பார்க்க போறீங்களா..?! ஒரு நிமிசம் !!!



ஹலோ,ஜாக்கிரதை !

எனக்கு ஒரே மகன். அவனுக்கு பெண் தேட ஆரம்பித்தபோது... உறவுகள், தெரிந்தவர்களிடம் எல்லாம் சொல்லி வைத்தோம். கூடவே, செய்தித்தாளிலும் விளம்பரம் கொடுத்தோம். அவ்வளவுதான்... அதைப் பார்த்துவிட்டு படையெடுத்து வந்தவர்கள் பெண் வீட்டார் அல்ல... புரோக்கர்கள். ''நான் நல்ல ஜாதகமா கொண்டுட்டு வர்றேன்...'' என்று ஆசை வார்த்தைகள் கூறி, ஒவ்வொருவரும் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாய் வரை பெற்றுச் சென்றனர். ஆனால், பெண் எதுவும் அமைந்தபாடில்லை. இதில் கொடுமை என்னவென்றால், அப்படி வந்தவர்களில் ஒருவர்... புரோக்கரே இல்லை என்பதுதான். அவர், செய்தித்தாள்களில் இப்படிப்பட்ட விளம்பரத்தைப் பார்த்ததுமே, புரோக்கர் என்று ஆஜராகிப் பணத்தைக் கறக்கும் ஏமாற்றுப் பேர்வழி என்று தெரிந்தபோது, அதிர்ந்துவிட்டோம்.

திருமணத்துக்கு வரன் தேடி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுப்பவர்கள், இந்த புரோக்கர்கள், போலி புரோக்கர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க, வீட்டு முகவரியைத் தவிர்த்து, போஸ்ட் பாக்ஸ் நம்பர் அல்லது வேறு ஏதாவது உபாயத்தைக் கையாள்வதே நல்லது!

- ஏமாந்த ஒரு பெற்றோர்

***
நன்றி விகடன்...
***


"வாழ்க வளமுடன்"

31 ஜனவரி, 2011

கடலில் மூழ்கும் துபாய் தீவுகள்!


துபாயில் உள்ள அழகிய தீவுகள் கடலில் மூழ்கி வருகின்றன. எண்ணை வளம்மிக்க துபாய் நாடு பல அழகிய தீவுகளால் ஆனது. இந்த தீவுகளில் தான் பிரமாண்டமான நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகள், விண்ணை முட்டும் கட்டிடங்கள் என உள்ளன. உலக வெப்பமயமாதல் காரணமாக இங்குள்ள கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


எனவே இங்குள்ள பல அழகிய தீவுகள் படிப்படியாக மூழ்கி அழிந்து வருகின்றன. தீவுகளில் உள்ள மணல் அதாவது நிலப்பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் தன்வசம் உள் இழுத்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் துபாயின் பெரும்பாலான தீவுகள் கடலில் மூழ்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தீவுகள் கடலில் மூழ்கி வருவதால் அங்கு தொழில் தொடங்க கோடீஸ்வரர்கள் தயங்குகின்றனர். ஏற்கனவே, இங்கு நடத்தி வரும் தொலை நிறுவனங்களில் முதலீடுகளை குறைத்து வருகின்றனர்.


***
by pream
thanks pream
***



"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "