...

"வாழ்க வளமுடன்"

04 மார்ச், 2010

இலையின் மருத்துவ குணங்கள்

இலைகளில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. ஆதலால்தான் பழங்காலத்தில் இலைகள் பெரும்பாலும் மருந்தில் மூலக் கூறுகளாக பயன்படுத்தப்பட்டன. நமக்கு எளிதாக கிடைக்கும் சில இலைகளின் அபூர்வ பயன்பாடுகளை இங்கே காண்போம்.

***

செம்பருத்தி இலைகள்:

*


செம்பருத்தி இலைகள், பூக்கள் மிகுந்த மருத்துவப் பயன்கள் கொண்டவை. இலைகள் தசைவலியைப் போக்குவதோடு தசையை மிருதுவாக்கும் தன்மையும் உடையவை. வழுவழுப்பான தன்மை கொண்ட இலையின் சாறு தலைவழுக்கை மற்றும் கூந்தலைக் கறுப்பாக்க உதவுகிறது. பூக்கள் குளிர்ச்சி பொருந்தியதால் சருமம் அழகாகும். சிவப்பு பூக்கள்தான் மருத்துவ சிறப்பு வாய்ந்தவை. செம்பருத்திப் பூவில் தங்கச்சத்து உண்டு என்று மருத்துவ சாஸ்திரங்கள் கூறுகின்றன. இப்பூக்கள் இதயக் கோளாறையும், கர்ப்பக் கோளாறையும் நீக்கிவிடும்.


*****

ரோஜா:

*




ரோஜா, அழகான மலர் மட்டுமல்ல... அசத்த லான மருத்துவ குணங்களும் கொண்டது. ரோஜாவின் வாசனையை முகர்தல் இருதயத் திற்கு பலனைக் கொடுக்கும். சளி குறையும். வெறும் வயிற்றில் பத்து ரோஜா இதழ்களை சாப்பிட்டு வந்தால் மேனி மின்னும். மேலும் ரத்தம் சுத்தமாகும். ரோஜா இதழ்களுடன் வெற்றிலை, பாக்கு ஆகியவை சேர்த்து மென்று தின்றால் வாய் நாற்றம் நீங்கும்.


*****

துளசி இலை:

*

துளசி இலையில் புரதம், கார்போஹைட்ரேட், அமிலச் சத்துகள் மற்றும் உலோகச் சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. துளசி வேர்ப் பட்டைத் தூள் அரை டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு வந்தால், உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். நாக்கில் தோன்றும் எல்லாவித குறைபாட்டையும் நீக்கும் குணம் உடையது. சருமத்தை சுத்தம் செய்து மென்மை தரக் கூடியது.


***



வேப்பிலை:

*


வேப்பிலையை அரைத்து சாற்றை முகப்பருக் களுக்கு தடவி, உள்ளுக்கும் சாப்பிட்டு வந்தால் முகப்பருக்கள் மறையும். ஒரு பிடியளவு வேப்பிலையில் கசகசா, கஸ்தூரி மஞ்சள் சிறிது சேர்த்து மைப்போல அரைத்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து கழுவி வர, அம்மை வடு மறையும். வேப்பம்பூவை காய்ச்சி, அதனுடன் நெல்லிக்காய் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் சரும நோய்கள் நீங்கும்.


*****

கறிவேப்பிலை:

*

கறிவேப்பிலையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணை, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. இது சோப்புகளில் வாசனையை நிலைக்கச் செய்யும். தலை முடி நரைப்பதைத் தடுத்து கேசத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும். கறிவேப்பிலை, மருதாணி இலை, கரிசலாங்கண்ணி இலையின் தண்டு, வேப்பிலையின் கொழுந்து சிறிது சேர்த்து அரைத்து தலையில் பூசி வந்தால் நரை மறையும்.


*****


புதினா:

*

புதினா இலைகளின் சாறு குளிர்ச்சி தரக் கூடியது. பருக்கள் மற்றும் வடுக்களுக்கு மருந்தாகவும், தோலின் வனப்பை ஊக்கப்படுத்தும் டானிக்காகவும் பயன்படுகிறது. இதன் எண்ணை சருமத்திற்கு புத்துணர்ச்சியை வழங்குகிறது. குளியல் தைலங்களிலும், இதன் பயன்பாடு அதிகம். பொடுகை அகற்றி கேசத்தின் வேர்க்கால்களில் ஊடுருவி கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.



*****


கொத்தமல்லி:

*


கொத்தமல்லி இலையின் சாறை சருமத்தின் சொரசொரப்பான பகுதிகளில் காலையில் தேய்த்து, மாலையில் குளித்து வந்தால் தோல் தடிப்பு மாறி வழவழப்பாகும். கொத்தமல்லி இலையை வாயில் போட்டு மென்று வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும். கொத்தமல்லி தைலத்திலிருந்து தயாரிக்கப்பட்ட சோடிய உப்பு நறுமணம் கொண்டது. வாசனைப் பொருட் களில் அதிகஅளவில் கொத்தமல்லி பயன்படுகிறது.


*****

தேயிலை:

*

தேயிலையில் இருக்கும் `காபின்' என்ற பொருள் நரம்பு மண்டலத்தின் செயலை ஊக்குவிக்கிறது. கிரீன் டீ என குறிக்கப்படும் தேயிலை தற்போது அழகு சாதனப் பொருட்களில் பங்கு வகிக்கின்றது. தேயிலையில் வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நோயை தடுக்கக் கூடிய `ஆன்டி ஆக்ஸிடென்டுகள்' உள்ளன. மூளையை ஊக்கப்படுத்து தல், ஞாபக சக்தி, இளமையைத் தக்க வைத்தல், ஆரோக்கியம் ஆகியவை தேயிலைக்கு உரிய குணங்கள். பற்சிதைவு போன்ற பல் தொடர்பான நோய்களைத் தடுக்கும் வைட்டமின் சி, டி, கே மற்றும் ப்ளோரைடுகள் ஆகியவை இதில் அதிகம் உள்ளன.

*****
அப்ப! அப்பா!!! இயற்க்கை நமக்கு குடுத்திருக்கும் வரங்கள் அதிகம் தான். ஆனால் அதை நாம் சரியான முறையில் பயன் படுத்துகிறோமா!
*
இனியோனும் சிந்திப்போமா!
*
இயற்க்கையை அழிக்காமல் காப்போம்!!
*
இயற்க்கையிக்கு நன்றி சொல்லுவோம்!!!
***


நன்றி மாலைமலர்.

பச்சை தேநீரின் (Green Tea ) / ( பசும் தேநீர்)

இந்த கீரின் டீ ஒவ்வெரு நாட்டில் வேவ்வேறு முறையில் தயாறிக்கின்றனர்.







பசும் தேநீர் சீனாவில் தோன்றியது, பின்னர் ஜப்பானிலிருந்து மத்திய கிழக்கு வரையிலான ஆசியாவின் பல கலாச்சாரங்களுடனும் தொடர்புடையதானது. சமீபத்தில், இது கருப்புத் தேநீர் பாரம்பரியமாக அதிக அளவிற்கு அருந்தப்படுகின்ற மேற்கில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. பசும் தேநீரின் பல வகைகள் அது வளர்க்கப்படும் நாடுகளில் உருவாக்கப்படுகின்றன. இந்த வகைகள் பல்வேறு வளர்ப்பு நிலைகள், நிகழ்முறையாக்கங்கள் மற்றும் சாகுபடி காலம் ஆகியவற்றின் காரணமாக குறிப்பிடத்தகுந்த அளவிற்கு மாறுபடலாம்.



*


கடந்த பல பத்தாண்டுகளில் நீண்டகாலமாக சொல்லப்பட்டுவரும் அதனுடைய ஆரோக்கிய பலன்களை தீர்மானிப்பதற்கு பல அறிவியல் மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளுக்கு பசும் தேநீர் உள்ளாகி வந்திருக்கிறது, தொடர்ந்து பசும் தேநீர் அருந்துபவர்களுக்கு இதய நோய் ஏற்படும் வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும், அவர்களிடத்தில் ஒரு குறிப்பிட்ட வகையிலான புற்றுநோய் ஏற்படுவதாகவும் சில ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன.




*


"எடை குறைப்பு நிகழ்முறைக்கு" பசுந் தேநீர் பயன்மிக்கதாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது - பப்மெட் போன்ற மருத்துவ தரவுத்தளத்தின் கூற்றுப்படி இது எந்தவிதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லாததாகும்.


***


தேயிலையாக தயாறிக்கும் முறை:




பொதுவாக 100 மில்லி தண்ணீருக்கு 2 கிராம் தேயிலை, அல்லது 5 அவுன்ஸ் கோப்பைக்கு (150 மில்லி)கிட்டத்தட்ட ஒரு தேக்கரண்டி பசும் தேயிலை பயன்படுத்தப்பட வேண்டும். ஜியோகுரு போன்ற உயர் தரமான தேநீர்களுக்கு இந்த அளவைக் காட்டிலும் அதிகப்படியான தேயிலை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதோடு குறுகிய காலத்தில் இந்த இலைகள் பல முறைகளுக்கு ஊறவைக்கப்பட வேண்டும்.



*


பசும் தேயிலை காய்ச்சப்படும் நேரம் மற்றும் வெப்பநிலை ஆகியவை தனிப்பட்ட தேநீர்களால் மாற்றமடைகின்றன. மிகவும் வெப்பமான தண்ணீர் காய்ச்சப்படும் வெப்பநிலைகள் 180 °F முதல் 190 °F (81 °C to 87 °C) வரை இருக்கிறது, நீண்டநேரம் ஊறவைக்கப்படும் நேரம் 2 முதல் 3 நிமிடங்கள் வரையிலுமாக இருக்கிறது. மிகவும் குளிர்ச்சியான காய்ச்சும் வெப்பநிலைகள் 140 °F முதல் 160 °F (61 °C to 69 °C) வரை இருக்கிறது, குறுகிய கால அளவு 30 நொடிகள். பொதுவாக, குறைந்த தரமுள்ள பசும் தேயிலைகள் வெப்பமாகவும் நீண்டநேரமும் ஊறவைக்கப்படுகின்றன, உயர் தரமுள்ள தேயிலைகள் குளிர்ச்சியாகவும் குறுகிய காலத்திற்கும் ஊறவைக்கப்படுகின்றன.



*



பசும் தேயிலையை அதிக வெப்பமாகவோ அல்லது நீண்ட நேரத்திற்கோ ஊறவைப்பது தரம் குறைவான இலைகளுக்கு கசப்பான, கடுகடுப்பு சுவைக்கு காரணமாகிறது. உயர் தரமுள்ள பசும் தேநீர்கள் பல்வேறு தடவைகளுக்கு ஊறவைக்கப்படுகின்றன; 2 அல்லது 3 முறைகளுக்கு ஊறவைத்தல் வகைமாதிரியானது. இந்த காய்ச்சும் உத்தியானது மிகையாக சமைக்கப்பட்ட சுவையை உருவாக்குவதை தவிர்ப்பதில் மிக முக்கியமான பங்காற்றுகிறது. முன்னுரிமையளிக்கும்விதமாக, தேநீர் ஊறவைக்கப்படும் கொள்கலன் அல்லது தேநீர்ப்பாத்திரம் முன்னதாகவே வெப்பமேற்றப்பட வேண்டும், இதனால் தேநீரானது உடனடியாக குளிர்ச்சியடைந்துவிடாது.



****



இத்தேனீரின் பயன்கள்:



1. பசும் தேநீர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகக் கருதப்படும் பாலிஃபினாலைக் கொண்டிருக்கின்றன, குறிப்பாக எபிகேலோகேட்டசின் கேலட்டை ஏராளமாகக் கொண்டிருக்கும் கேட்டசின்கள்.


*



2. பசும் தேநீர் கார்டியோவாஸ்குலர் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது என்பதோடு எலும்பு அடர்த்தி, அறிவுச் செயல்பாடு, பற்சிதைவுகள் மற்றும் சிறுநீரகக் கல் போன்றவற்றிலும் பயன்மிக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகின்றன.



*



3. பசும் தேநீர் காரோடெனாய்ட்ஸ், டோகோபெரோல்ஸ், அஸ்கார்பிக் அமிலம் (விட்டமின் சி), மற்றும் குரோமியம், மாங்கனிஸ், செலெனியம் அல்லது துத்தநாகம் போன்ற தாதுக்களையும் குறிப்பிட்ட பைத்தோகெமிக்கல் கலவைகளையும் கொண்டிருக்கின்றன. இது கருப்பு தேநீரைக் காட்டிலும் மிக அதிகமான ஆண்டியாக்ஸிடண்ட்கள் உள்ளது, இருப்பினும் கருப்புத் தேநீர்,[6] கொண்டிருக்கும் தியாஃபிளவின் போன்ற உட்பொருட்களை பசும் தேநீர் கொண்டிருப்பதில்லை.




*



4. கொள்ளைநோய்ப் பரவல் ஆய்வுகளில் குறைக்கப்பட்ட இதய நோயோடு பசும் தேநீர் அருந்துதல் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.மிதமான தீவிர உடற்பயிற்சியின்போது பசும் தேநீர் உள்ளெடுப்பு கொழுப்பு ஆக்ஸிஜனேற்றத்தை மட்டும் அதிகரிக்கச் செய்வதில்லை, இது இளைஞர்களிடத்தில் இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் ஏற்பு ஆகியவற்றையும் மேம்படுத்துகிறது.



*



5. பசும் தேநீர் அருந்துவது இதய சுருங்கியக்க மற்றும் இதய விரிவியக்க இரத்த அழுத்தங்களைக் குறைப்பதாகவும், மொத்த கொழுப்பு அளவு, உடல் கொழுப்பு மற்றும் எடையை அதிகரிக்கச் செய்வதாகவும் இதன் முடிவுகள் காட்டுகின்றன. இந்த முடிவுகள் உருவாகிவிட்ட கார்டியோவாஸ்குலர் சாத்தியமுள்ள அபாயக் காரணிகளைக் குறைப்பதில் இதற்கு பங்கிருப்பதாக தெரிவிக்கின்றன.




*




6. மக்கள்தொகையினர் உடல் பருமனாகவும் அதிக அளவிற்கான கார்டியோவாஸ்குலர் அபாயமும் உள்ள அதிக எடையிள்ள மக்கள்தொகையினரிடத்தில் குறைப்புகள் மிகவும் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றன என்றும் இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.



*



7. பெண்களின் உணவுப் பழக்கங்களிள் காளான்கள் மற்றும் பசும் தேநீரின் உண்பது மார்பகப் புற்றுநோய் 90 சதவிகிதம் வரை குறைவதோடு, மற்ற சத்துக்களும் தருகிறது.



*



8. கிரீன் டீ (Green Tea) ஒரு அற்புதமான தேநீர். இதை தினமும் இரண்டு வேளை குடித்து வந்தால் உடம்பில் எந்த ஒரு நோயும் அண்டாது. முக்கியமாக கேன்செர் (Cancer), கொலஸ்டரால் (Cholesterol) இருதைய நோய் (Cardiac Deceases), நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் (Diabetics) . கிரீன் டீயில் இருக்கும் பாலிஃபீனால்ஸ் (Polyphenols) ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிறது. கிரீன் டீயில் பலவகை உள்ளது. அதில் ஜபநீஸ் கிரீன் டீ, சைனீஸ் கிரீன் டீ தான் மிகவும் பிரபலமானது. இன்று எல்லாக் கடைகளிலும் கிரீன் டீ கிடைக்கிறது.




*



9. முக்கால் வாசி போலியானவைகளே. கிரீன் டீ வாங்கும் பொழுது நல்ல தரமானதாக வாங்கவேண்டும் . வாங்கும் பொழுது ஆர்கானிக் கிரீன் டீ (Organic) வாங்குங்கள். டீயை ரொம்ப நாள் வைத்து இருந்தால் அதன் சுவை மாறி விடும். கொஞ்சம் கொஞ்சமாக வாங்க பழகி கொள்ளுகள். முன்பெல்லாம், இந்தியா (india), சீனா (china), ஜப்பான் (Japan), மற்றும் தைவான் (Taiwan) ஆகிய நாடுகள்தான் கிரீன் டீயை உற்பத்தி செய்தார்கள். தற்போது ஐரோப்பிய நாடுகளும் (European Countries) கிரீன் டீ உற்பத்தி செய்து வருகிறது.




*




10. கேமெலியா சினென்சிஸ் (Camellia sinensis) என்ற செடிகளில் இருந்துதான் கிரீன் டீ தயாரிக்கப்படுகிறது. கிரீன் டீ மிதமான சூட்டில் மாத்திரமே தயார் செய்யவேண்டும். அதிக சூட்டில் கிரீன் டீ தயாரித்தால் அதன் அசல் சுவை மாறிவிடும். அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் போதுமானது. பொதுவாக கிரீன் டீ பருகுவதற்கு சுவையாக இருக்காதென ஒரு கருத்து நிலவுகிறது. உண்மைதான் ஆனால் சில நாட்கள் பழகிவிட்டால் அந்தச் சுவைகூடப் பிடித்துவிடும். பியர் (Beer), விஸ்கி (Whiskey) மற்றும் பிராந்தி (Brandy) போன்ற மதுபானங்கள் கூட குடிப்பதற்கு சுவையாகவா இருக்கிறது.




*



11. இந்த கிரீன் டீயில் வேண்டுமானால் கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பாலை கொஞ்சம் கலந்தோ அல்லது சிறிது சர்க்கரை கலந்தோ ஆரம்பத்தில் பருகலாம். பிறகு முழுக்க முழுக்க ஏதும் கலக்காத கிரீன் டீயை பருகுவதே நல்லது. இன்றைய எந்திர யுகத்தில் நமது முகம், தோல் போன்றவை விரைவில் சுருக்கம் விழுந்து 5-6 ஆறு வயது அதிகமாகத் தெரிகிறதல்லவா?



*



12. அவற்றைப் போக்கி, அதாவது முன்கூட்டிய முதிர்ச்சியைப் போக்கி (Ante-Aging) இளமையாக இருப்பதற்கு இன்றைய வியாபார உலகத்தில் வந்திருக்கும் அழகு சாதனப்பொருட்களில் 90 சதம் கிரீன் டீ சேர்த்தே தயாரிக்கப்படுகிறது. அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் (Anti-Oxidant) தோல் சுருக்கத்தைப் போக்குகிறது. வயிற்றுப் புண் (Ulcer) மற்றும் அமிலத்தன்மை பிரச்சினைகள் (Acidity) இருப்பவர்கள் கிரீன் டீயைத் தவிர்ப்பது நல்லது.



*



13. மற்றபடி இந்த கிரீன் டீயில் கஃபைன் (Caffeine) என்ற கெட்ட தாதுப்பொருள் குறைந்த சதவிகிதத்தில் உள்ளது. ஆனால் சாதாரணமாக நாம் அருந்தும் காஃபியில் (Coffee) இருக்கும் அளவைவிடக் குறைவாகவே உள்ளதாக ஆராய்ச்சிக் குறிப்பொன்று தெரிவிக்கிறது. எனவே இந்த கிரீன் டீயை (Green Tea) தைரியமாக நாம் அருந்தலாம்.



***



கீரின் டீயில் இவ்வளவு விஷயங்கலும், சத்துக்கலும் இருக்கிறது.



*


இனி கட்டாயம் தேடி பிடித்து குடிப்பீர்கள் தான!


***

அதிக உடற்பயிற்சி செய்யாதீங்க!

ஆரோக்கிய வாழ்க்கை முறை, தினசரி தவறாத உடற்பயிற்சி என்றுள்ள ஒருவருக்கு `இதயநோய் பிரச்சினை ஏற்படுமா?' என்று கேட்டால் நீங்கள் `இல்லை' என்றுதான் சொல்வீர்கள். ஆனால் அதையும் தாண்டி இதயப் பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள் நிபுணர்கள்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைக்கு மாற்றாக மிக அதிகமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும், போதுமான தூக்கமின்மையும் கூட இதயப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
*
இதயத்துக்குச் சிக்கலை ஏற்படுத்தும் விஷயங்கள் என்னென்ன?
*
அவற்றிலிருந்து நாம் நம்மைத் தற்காத்துக்கொள்வது எப்படி?
*
``இன்றைக்கு மாநகர வாழ்க்கைமுறை மனஅழுத்தத்துக்கு வழிவகுப்பதாக உள்ளது. பலரிடம் மனஅழுத்தப் பிரச்சினை கண்டுபிடிக்கப்படாமலே போகிறது'' என்கிறார், மும்பை நானாவதி மருத்துவமனையைச் சேர்ந்த இதய மருத்துவ நிபுணர் ராஜிவ் பகவத். ``நீண்ட தூரப் பயணம், ஒழுங்கற்ற நேர முறைகளுடன், சுற்றுச் சூழல் மாசுபாடும் ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்துகின்றன'' என்கிறார் அவர்.
*
இதயநோய் பிரச்சினை ஏற்படும் வயதும் குறைந்து கொண்டே வருகிறது' என்று மருத்துவர்கள் `பகீரிட'ச் செய்கின்றனர். பாரம்பரியமாக இதயநோய்ப் பிரச்சினை இல்லாத ஒரு 28 வயது இளைஞர் தொடர் புகைப்பழக்கத்தின் காரணமாகவே இறந்து விட்டார் என்கிறார், மற்றொரு மருத்துவரான சந்தர் வஞ்சானி. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத மற்றொரு நபரும் மனஅழுத்தம் காரணமாக மாரடைப்புக்கு உள்ளாக நேரிட் டது என்று அவர் கூறுகிறார். ``கடந்த இரண்டு வார காலத்தில் மட்டும், ஒழுங்கில் லாத கொலஸ்ட்ரால் அளவு, சர்க்கரை நோய்- உயர் ரத்தஅழுத்தப் பிரச்சினை தொடர்பாக, 25 முதல் 39 வயதுக்கு உட் பட்ட 10 பேர் என்னை வந்து பார்த்திருக் கின்றனர்'' என்கிறார் சந்தர். மனஅழுத்தத் துக்கு உள்ளாகாமல் நம்மை நாமே காத்துக் கொள்வதன் மூலம் இதயத்தையும் காக்க லாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
*
மிகவும் `பிசி'யாக இருப்பதற்கு, அதாவது `ஜெட்' வேக வாழ்க்கைமுறைக்குப் பலியாவது தூக்கம்தான். `நான் சில மணி நேரம் தூங்கினால் போதும், தொடர்ந்து வேலையில் ஈடுபட ஆரம்பித்துவிடுவேன்' என்று பெருமையடித்துக் கொள்ளாதீர்கள் என்கிறார்கள் மருத்துவர் கள். சீரான இதயத் துடிப்பு மற்றும் இயல்பான ரத்த அழுத்தத்துக்கு நல்ல தூக்கம் அவசியம். ``இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றைச் சீராகப் பராமரிப்பதற்கு உடம்பு அதன் சொந்த ஒழுங்குமுறை அமைப்பைக் கொண்டிருக்கிறது. போதுமான தூக்கமின்மை, `உயிர்க் கடிகாரத்தை'ப் பாதிக்கிறது. எவ்வளவு உடற்பயிற்சி செய்தாலும் அதை ஈடுகட்ட முடியாது'' என்று இதய மருத்துவர் பகவத் கூறுகிறார்.
*
உடம்பைக் கச்சிதமாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால் அதிகமான உடற்பயிற்சி, நன்மையை விட அதிகம் தீமையே பயக்கும் என்று இதய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ``நம்மை நாமே தண்டித்துக்கொள்ளும் ஒரு முறையாக உடற்பயிற்சியை வைத்துக் கொள்ளக் கூடாது'' என்கிறார் யோகா நிபுணரும், உணவியல் வல்லுநருமான ருஜ×தா. ``அமைதியான மனநிலையில் நீங்கள் தியானம் செய்யும்போது அது அற்புதமாகப் பலன் தரும். அதைப் போல ஓய்வான உடம்புக்குத்தான் உடற்பயிற்சி நல்லது'' என்கிறார் ருஜூதா.

நீங்கள் உங்கள் உடம்புக்கு ஏற்படுத்திக்கொள்ளக்கூடிய மிகப் பெரிய தீங்கு, ஏற்கனவே தளர்வாக உள்ள நிலையில் மேலும் கடுமையாக உடற்பயிற்சி செய்வது. ``போதுமான தூக்கம் இல்லாதவர்களுக்கு உள்உடலியல் செயல்பாட்டு வேகம் குறைகிறது. எனவே அவர்களால் எடையையும் குறைக்க முடியாது. மாறாக அவர்கள் `பொதுபொது' என்று ஆகிவிடுவார்கள்'' என்று ருஜ×தா எச்சரிக்கிறார்.
*
முக்கியமான விஷயம், வாழ்க்கை, வேலை, உடற்பயிற்சி எல்லாவற்றுக்கு இடையிலும் ஒரு சமநிலையை ஏற்படுத்திக் கொள்வதுதான். எல்லாவற்றுக்கும் மேலாக முக்கியமானது உறக்கம். நவீன வாழ்க்கை முறை உங்கள் உடல்நிலையைப் பாதிக்க அனுமதிக்காதீர்கள்.
***
ஒரு சிலருக்கு உடற்ப்பயிற்ச்சி ஒற்று கொள்ளாது. அதிகமாக மூச்சு வாங்கும். ஆஸ்த்துமா நோய் இருப்பவர்கள் காட்டாயம் டாக்டர் கருத்துரையின் படி செய்வது நல்லது.

***

நன்றி மாலைமலர்.

இதயநோய்

இதயம் தான் ஒவ்வெரு மனிதனின் முக்கிய உறுப்பு என்று அனைவரும் அறிந்தது தான். மற்ற உறுப்பு தான். ஆனால் இதயம் நின்றால் நாம் சவம் தான்.

*
இதயம் பற்றி இப்போது பார்ப்போம்!

***
இதயத்தின் வடிவமைப்பு ஆண், பெண் இரு பாலருக்கும் ஒன்று என்றாலும், ஆண்களைவிட பெண்களின் இதயம் சிறியது.

*


பெண்ணின் இதயத்தின் எடை 224 கிராம், ஆணின் இதயத்தின் எடை 280 கிராம் ஆகும். மேலும் இதயத் துடிப்புத் திறன் பெண்களுக்கு 10 சதவீதம் அதிகமாகவும், உடற்பயிற்சியின்போது ஆக்ஸிஜன் பயன்படுத்தும் திறன் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு 15 முதல் 20 சதவீதம் குறைவாகவும் உள்ளது.





உலகம் முழுவதும் மாபெரும் நோயாக இதயநோய் முதலிடத்தை வகிக்கிறது. இந்தியாவில் சுமார் 10 சதவீத மக்களுக்கு இதய நோய் இருப்பதாக அண்மையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


***

வரும் 2016 ஆம் ஆண்டில் ஆறு கோடியே 80 லட்சம் பேர் இதய் நோயகளால் பாதிக்கப்படுவார்கள் என்றும் இந்த கருத்தரங்கில் எச்சரிக்கப்பட்டுள்ளது.


*


நீரிழிவு நோய்,உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், புகைப் பழக்கம் ஆகியவற்றாலும் இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். இதய நோய் இன்றி சுகமாக வாழ்ந்திட நம் அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களை உதாசீனப்படுத்தாமல் பின்பற்றினாலே போதும்.


*

உடற்பயிற்சி செய்யாததால் இதயம் முதுமையடைகிறது. எடை அதிகரிக்கிறது. ஒவ்வொரு முறை இதயம் துடிக்கிற போதும், ரத்தம் சரியாக ‘பம்ப்Õ செய்யப்பட, இதயத்துக்கு உடற்பயிற்சி அவசியம். முறையான உடற்பயிற்சி, ரத்தத்திலுள்ள நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. தவிர, ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சரியாக வைத்து, நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது. உயர் ரத்த அழுத்த அபாயங்கள் தவிர்க்கப்படுகின்றன. உடம்பு மட்டுமில்லை, இதயம் ஆரோகியமாக இருக்கவும் உடற்பயிற்சி அவசியம்.



*

சிகரெட், புகையிலைப் பழக்கங்களுக்கு தடா போடுங்கள். இதனால் ரத்தக் கொழுப்பின் அளவு குறையும். ரத்தம் உறைவது தடுக்கப்படும். ரத்தக் குழாயில் திடீர் அடைப்பு ஏற்படுவது தவிர்க்கப்படும். முறையாக உடற்பயிற்சி செய்கிறவர்கள், சிகரெட் பழக்கத்தை நிறுத்தும் முயற்சியில் மற்றவர்களைவிட சீக்கிரம் வெற்றி பெறுகிறார்கள்.



*

முழு தானிய உணவு, பழங்கள், காய்கறிகள், பருப்பு வகை, மீன், சூரியகாந்தி எண்ணெய், ஆலிவ் எண்ணெய், கார்ன் எண்ணெய் போன்றவை இதயத்தை இளமையாக வைத்துக் கொள்ள உதவுபவை.


***

ஆண்களை விட பெண்களுக்கே அதிக பாதிப்பு ஏற்ப்படுகிறதாம்.

*

பெண்களுக்கு இதயப் பிரச்னை எப்போது?

*


மாதவிடாய் நின்றவுடன்...: பொதுவாக பெண்களைவிட ஆண்கள் 10 ஆண்டு முன்னதாகவே இதய நோயால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் நிலை வரும்போது இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
மாதவிடாய் நிற்கும்போது பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மேன் சுரப்பது குறைந்து விடுவதால் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
*
கருத்தடை மாத்திரை: 1960-ல் தரப்பட்ட கருத்தடை மாத்திரைகளில் புரொஜஸ்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருந்தால், அந்தக் காலத்தில் வயது முதிர்ந்த புகை பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருந்தது.
ஆனால் இப்போது மருத்துவ முன்னேற்றத்தின் காரணாக கருத்தடை மாத்திரைகளில் ஹார்மோன்களின் அளவுகள் மிகவும் குறைவாக உள்ளதால் இதய நோய் வரும் வயாப்பு குறைந்து காணப்படுகிறது.
*
உயர் ரத்த அழுத்தம், புகை பிடிக்கும் பழக்கமுள்ள பெண்களுக்கு இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது. மேலும் ரத்தத்தில் உள்ள டிரைகிளிசரைடு எனும் ஒரு வகை கொழுப்புச் சத்தின் அளவு அதிகமானாலும் இதய நோய் வரும் வாய்ப்பு அதிகமாகிறது.
*

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது "எச்டிஎல்' என்ற நல்ல கொழுப்புச் சத்தின் அளவு குறையும். "எல்டிஎல்' என்ற கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாகும். இந்த நிலையில் இதயநோய் வரும் வாய்ப்பு பெண்களுக்கு அதிகமாகிறது.

*
மருத்துவரை ஆலோசிக்காமல் மருந்துகளை நிறுத்தி விடுவதும் தொடர்வதும் சில பிரச்னைகளை உருவாக்கும். தலைவலி, மயக்கம், மூட்டுவலி அல்லது வீக்கம், மூக்கில் ரத்தம் வடிதல், இருமும்போது ரத்தம் வருதல், மாதவிடாய் சமயத்தில் அதிக ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, அஜீரணம், வயிறு எரிச்சல், குறைவான ரத்த அழுத்தம், தூக்கம் அதிகரித்தல் அல்லது குறைதல், வறண்ட இருமல் போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் செல்லுங்கள்.
*
டாக்டர் பி. அயாஸ் அக்பர்,
இதய மருத்துவ நிபுணர்,
ஆக்ஸிமெட் மருத்துவமனை,
786, 3 மற்றும் 4-வது மாடி,
அண்ணாசாலை,
நந்தனம், சென்னை.
தொ.பே. எண்கள்: 42131010, 42131014, 4213 1016.
www.oxymedhospital.in
email: oxymedhospitals@yahoo.com


***
நன்றி தினமணி.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "