...

"வாழ்க வளமுடன்"

24 ஆகஸ்ட், 2015

இறாலில் உள்ள சத்துக்கள் என்னென்ன?

Mohandass Samuel's photo.
கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் ...எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும்.

இறாலில் உள்ள சத்துக்கள்

கால்சியம், அயோடின், புரதச்சத்துக்கள் உள்ளன, இறால்களில் அதிகப்படியான கொழுப்பு உள்ளது.

இந்த கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பு வகையை சேர்ந்ததால் இதனை உணவில் சேர்த்துக்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

செலினியம்(Selenium), புரம் மற்றும் விட்டமின் பி12, D, இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், ஒமேகா 3 போன்ற சத்துக்கள்
அடங்கியுள்ளன.


கொலஸ்ட்ரால் – 43 Mg
சோடியம் – 49 Mg
புரதம் – 4.6 Mg
கால்சியம் – 8.6 Mg
பொட்டாசியம் – 40 Mg


நன்மைகள்


செலினியம் அதிகமாக உள்ளதால் புற்றுநோய் வருவதை தடுக்கிறது.
விட்டமின் பி12 மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் அதிக ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்து இரத்தசோகை வருவதை தடுக்கிறது.
வாரம் இருமுறை இதனை உணவில் சேர்த்துக்கொண்டால், இதில் உள்ள இதில் உள்ள பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சேர்ந்து எலும்புகளை வலுப்படுத்துகின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இதில் உள்ள மக்னீசியம் சத்து இரண்டாவது நீரிழிவு நோய் வருவதை தடுக்கின்றன என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கார்போஹைட்ரேட், புரதச்சத்து மற்றும் கொழுப்புச்சத்துக்கள் போன்றவை உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றன.

இதில் அயோடின் உள்ளதால் கர்ப்பிணி பெண்களுக்கு உகந்தது.


***
fb
***

"வாழ்க வளமுடன்"

மிகவும் சோர்வாகத் தெரிகின்றதா?



மிகவும் சோர்வாகத் தெரிகின்றதா? மாடி ஏறினால் சீக்கிரம் மூச்சு வாங்குகின்றதா?


உங்களுக்கு இரும்பு சத்து குறைவாக இருக்கின்றதா என்று பரிசோதித்துக் கொள்ளுங்கள். நீங்க...ள் பெண்களாய் இருந்தால் இது மிகவும் அவசியம். இரும்பு சத்தே ஆக்ஸிஜனை உடல் முழுவதும் எடுத்துச் செல்கின்றது.
ரத்த சிவப்பணுவில் உள்ள முக்கியமான பொருள் இதுவே. ரத்த சிவப்பணு எண்ணிக்கை குறையும் பொழுது இரும்பு சத்து குறைவது ரத்த சோகை எனப்படும். தேவையான அளவு சிவப்பணுக்கள் இல்லாவிட்டால் தேவையான ஆக்ஸிஜன் உடலுக்குக் கிடைக்காது. தேவையான ஆக்ஸிஜன் இல்லாத போது உடல் சோர்வாகும்.



 

 மூளை சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு ஏற்படும். கர்ப்ப காலத்தில் ரத்த சோகை அதிகமாகும். இதனால் குழந்தை சிறிய அளவிலோ அல்லது உரிய காலத்திற்கு முன்பாகவோ பிறக்கலாம். இரும்பு சத்து திசுக்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கும், சருமம், முடி, நகம் இவை நன்கு பராமரிக்கப்படுவதற்கும் அவசியமானது.


 வயது மற்றும் ஆண், பெண், ஒருவரது உடல்நிலையை பொறுத்து இரும்பு சத்து தேவைப்படுகின்றது. குழந்தைகளுக்கு பெரியவர்களை விட அதிக இரும்பு சத்து தேவைப்படுகின்றது. ஏனெனில் அவர்கள் வேகமாக வளரும் பருவத்தில் இருக்கின்றனர். 4, 8 வயது வரை 10 மி.கி. இரும்பு சத்து அன்றாடம் அவசியம்.


 9 முதல் 13 வயது வரை 8 மி.கி. அளவாவது தேவை. பெண்களுக்கு 19-50 வயது வரை தினம் 18 மி.கி. இரும்பு சத்து தேவை. ஏனெனில் மாத விடாய் காலத்தில் அவர்களுக்கு ரத்த இழப்பு ஏற்படுகின்றது. ஆனால் ஆண்களுக்கு இந்த வயதில் தினம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. பெண்களுக்கு மாத விடாய் நின்ற பிறகு அன்றாடம் 8 மி.கி. இரும்பு சத்தே போதுமானது. உணவிலிருந்தோ அல்லது ஊட்டசத்திலிருந்தோ ஒருவர் இரும்பு சத்தை பெற முடியும்.



 கூடுதல் இரும்புச்சத்து தேவைப்படுவது எப்போது?
* கர்ப்பகாலம்.

* தாய் பால் கொடுக்கும் காலம்.

* வயிற்றில் புண் (ரத்த இழப்பு ஏற்படுத்தினால்).


* வயிறு, உணவுப் பாதையில் பிரச்சினை. அதனால் தேவையான அளவு இரும்பு சத்தினை உறிஞ்ச முடியாமல் போகுதல்.


 * அதிக நெஞ்செரிச்சல் மாத்திரைகளை சாப்பிடுவது குடல் இரும்பு சத்து எடுத்துக் கொள்வதை தடுக்கும்.

* ஏதோ காரணத்தினால் (உ.ம். ஆபரேஷன்) எடை குறைந்த பிறகு.

 * மிக அதிக உடற்பயிற்சி சிவப்பணுக்களை அழிக்கும்.

* சுத்த சைவமாக இருப்பவர்களுக்கு தாவர வகை இரும்பு சத்தினை உடலால் நன்கு எடுத்துக் கொள்ள முடிவதில்லை.


இரும்பு சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள்:

* மூச்சுவாங்கும்.

* படபடப்பு இருக்கும்.

* கை, கால்கள் ‘ஜில்’லென இருக்கும்.

* குழந்தைகள் பல்பம், மண் சாப்பிடுவர்.

* வளைந்த உடையும் நகம், முடி கொட்டுதல்.

* வாய் ஓரங்களில் வறட்சி புண் காணப்படும்.


இரும்பு சத்தை மாத்திரையாக எடுத்துக் கொள்ளும் பொழுது...

 * வயிறு பாதிப்பு

* கறுத்த வெளிப்போக்கு

* வாந்தி, பிரட்டல்

 * மலச்சிக்கல்

* வயிற்றுப் போக்கு

போன்றவை ஏற்படலாம். நார்சத்தை கூட்டிக் கொண்டால் இப்பிரச்சினைகள் தீரும். உடலுக்கு ஆக்ஸிஜன் எந்த அளவு முக்கியமோ அந்த அளவு தாது உப்புக்களும் முக்கியம். உடலின் 5 சதவீத எடை இந்த தாது உப்புக்களே. இவை உடல் செயல்பாட்டுக்கும், மூளை செயல்பாட்டுக்கும் அவசியமானது.


பல், எலும்பு, திசுக்கள், ரத்தம், தசை, நரம்பு இவை அனைத்திற்கும் தாது உப்புக்கள் அவசியமாகின்றது. உடலில் பல செயல்களில் தாது உப்புக்கள் கிரியா ஊக்கி போல் வேலை செய்கின்றது.

நரம்பின் மூலம் செய்திகள் பரவ, செரிமானம் நடைபெற வைட்டமின்கள் சீராக வேலை செய்ய தாது உப்புக்களே அவசியம். வைட்டமின் ‘சி’ சத்து உடலுக்கு நன்கு கிடைக்க கால்ஷியம் தேவை. வைட்டமின் ‘ஏ’ சத்து நன்கு உடலில் உறிஞ்சப்பட ‘ஸிங்க்’ தேவை.


பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்துக்கள் கிடைக்க ‘மக்னீஷியம்‘ தேவை. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம். ‘ஹீம்’ எனப்படும் இரும்பு சத்து அசைவ உணவிலிருந்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. என்றாலும், தாவர வகை இரும்பு சத்தே சிறந்தது என ஆய்வுகள் கூறுகின்றன. இரும்பு சத்து உடைய சைவ உணவுகள்:


* உலர் திராட்சை - இதை நாள் ஒன்றுக்கு 4 டேபிள் ஸ்பூன் வரை எடுத்துக் கொள்ளலாம். பழங்களுடன் கலந்து உண்ணும் பொழுது இதில் உள்ள இரும்பு சத்து எளிதாக உடலில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.


* பயிறு வகைகள்

* பரங்கி, பூசணி விதைகள்

* சோயா பீன்ஸ்

* கீரை வகைகள்

* எள்

* கை குத்தல் அரிசி

* ஓட்ஸ்

* உருளைக்கிழங்கு

* சோயா பன்னீர்

* முழு கோதுமை

* பச்சை காலிப்ளவர்

* சூரிய காந்தி விதை

* பச்சை பட்டாணி

 * அடர்ந்த சாக்லெட்.

ஒரு தாது உப்பு செயல்பட மற்ற தாது உப்புகளும் உடலில் தேவையான அளவு இருக்க வேண்டும். இவைகளை ‘எலக்ட்ரலைட்ஸ்’ என்பர். இவை நம் உடலில் மின்சாரத்தை தாங்கிச் செல்பவை. பச்சை கீரை, பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் இவைகளில் தாது உப்புக்கள் கிடைக்கின்றன.


 தாது உப்புகள் விவரம்:

 கால்ஷியம் க்ரோபியம் காப்பர் புளோரைட் அயோடின் இரும்பு மக்னீசியம் மங்கனீஸ் பாஸ்பரஸ் செலினியம் ஸிங்க் மேஸிமிடனம் என பிரிவுபடும்.

***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

சளிக்கு ஐந்து மருந்து பொடி!!!


Baskar Jayaraman's photo.

இயற்க்கை முறையில் வைத்தியம் செய்து கொள்வது ஆரோக்கியமான உடலுக்கும் நாம் நோய் இன்றி வாழவும் வழிவகுக்கும்.
இப்பொழுது நோய் வந்தால் டாக்டரிடம் ஓடுவதும், கண்ட மருந்துக்களை மருந்து கடைகளில் வாங்கி சாப்பிடுவதும் பெரும்பான்மை மக்களின் வழக்கமாகி போனது. அதை முதலில் ஒழிக்க வேண்டும்.
...
நமது ஒவ்வொரு வீட்டிலும் பொடி செய்து வைத்திருக்க வேண்டிய அறிய மருந்துதான் ஐந்து மருந்து பொடி. இதை தயாரிக்கும் முறையும், உட்கொள்ளும் முறையும் பற்றி பார்ப்போம். இதை குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.


சளிக்கு ஐந்து மருந்து பொடி: சுக்கு, மிளகு, அக்கரா, திப்பிலி, கடுக்காய் இவற்றை சம எடை வாங்கி உரலில் (மிக்ஸியில் போட்டு அல்ல) போட்டு இடித்து பொடியாக்கி வெள்ளை துணியில் போட்டு பவுடராக அரித்து எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து கொள்ளுங்கள்.


உட்கொள்ளும் முறை: சளி ஏற்ப்பட்டால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காலை, மாலை, இரவு என்று மூன்று வேலைக்கும் இதை கால் மேஜை தேக்கரண்டி எடுத்து தேனில் கலந்து சாப்பிடுங்கள். சிறிய குழந்தைகளாக இருந்தால் கையில் அரை, அல்லது ஒரு சிட்டிகை அளவுக்கு ( சிட்டிகை என்பது நமது பெருவிரல் மற்றும் ஆள்காட்டி விரலை கொண்டு அந்த பொடியை எடுக்கும் அளவு) எடுத்து தேனில் கலந்து கொடுங்கள்

***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!!


Baskar Jayaraman's photo.


அனைவருக்கும் இருமல், தும்மல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைக்கெல்லாம் நல்லெண்ணெய் எப்படி உதவுகிறது? என்பதை பார்க்கலாம்.


 * இதற்கு உபயோகப்படுத்தும் நல்லெண்ணெய் சுத்தமாகவும், தூய்மையாகவும் மற்றும் கலப்படமின்றியும் இருக்க வேண்டும்....


* இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் ஆரம்பமானவுடனே 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் சளி கரையும். மேலும் தும்மல் நின்று, மூக்கில் தண்ணீர் வடிவதும் நின்று விடும். இப்படி செய்வதால் இருமலைக் கட்டுப்படுத்த முடியும்.


* கடுமையான இருமலாக இருந்தால் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் குடித்தால் போதும் இருமல் நிற்கும். எளிய முறையில் இருமலை விரட்டிவிடலாம்.



* பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு மூக்கில் சளி வந்து கொண்டிருக்கும். அப்போது ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு, அதை தொட்டு எடுத்து மூக்கின் துவாரத்தில் அடிக்கடி தடவ வேண்டும். மூக்கை துடைத்து துடைத்து புண்ணாக்காமல் சுலபமான இந்த முறையின் மூலம் மூக்கிலிருந்து சளியை எளிதாக வரச்செய்து விடலாம்.
வீட்டில் இருக்கும் நல்லெண்ணெய் கொண்டு மிகவும் சுலபமான முறையில் அனைவரையும் அவதிப்படுத்தும் இருமலில் இருந்து விடுபடலாம்.
***
tu  fb
***



"வாழ்க வளமுடன்"
      

A + B + C பக்க விளைவுகள் ஏற்படுத்தாத அதிசய பானம் !!!

Baskar Jayaraman's photo.


A + B + C …….ஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்மூன்றையும் எடுத்து நன்கு கழுவி துடைத்து தோலுடன் நறுக்கி ஸ்மூதி போல அரைத்து அருந்தவும்...
.விரும்பினால் சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கலாம் .


இந்த பானம் அருந்துவதால் பயன்கள் ::

புற்று நோய் வராமல் தடுக்க மற்றும் ஆரம்ப நிலையில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க வல்லதாம் இந்த ஜூஸ்

ஈரல் மற்றும் சிறுநீரக சம்பந்தமான நோய்களை தடுக்கிறது

மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் காக்கின்றது

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகின்றது .

 உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகின்றது
இரத்தத்தை சுத்தபடுதுகின்றது


 பார்வை குறைபாடுகளை நீக்குகின்றது மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு தீர்வு


 உடல் இளைக்க விரும்புவோர் இதை அருந்தி வந்தால் நல்ல பலன் உண்டு

***
tu   velichaveedu
***


"வாழ்க வளமுடன்"
      

21 ஆகஸ்ட், 2015

உங்கள் உணவில் காளானும் இடம்பெறட்டும்!

Health Benefits of Mushrooms - Food Habits and Nutrition Guide in Tamil
காளான் மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும்.

இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும், சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் இருக்கும்.

காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.

காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப்பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.

காளான் வகைகள்:

இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான், சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

காளான் மருத்துவ பயன்கள்:

காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.

காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.

இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.

இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.

பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.

இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.

மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.

காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.

மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.

தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.

100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.

எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.

மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது.

கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.

காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.

காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.

***


"வாழ்க வளமுடன்"
      

வாழைக்காயை அளவோடு சாப்பிடுவது நல்லது!

Uses and Side Effects of Plantain - Food Habits and Nutrition Guide in Tamil













நம்முடைய வாழ்க்கையில் வாழை என்பது கலாச்சாரம், பண்பாடு மட்டுமின்றி உணவிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால்தான் வாழைப்பழம் முக்கனியில் இடம் பிடித்துள்ளது. நமது திருமணம் போன்ற விழாக்கள், சடங்குகளில் வாழை மரம், வாழைப்பழம் முக்கியப் பங்கு பெற்றுள்ளது. வாழையை நம்முடைய முன்னோர்கள் தம் குடும்பத்தின் சொத்தாக நினைத்தனர்.

இன்றைக்கு மருத்துவத்திலும் வாழை பெரும்பாலான ஆராய்ச்சிகளில் பயன்படுகிறது வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.

வாழைக்காயில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் நாம் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மற்ற வாழைக்காய்களையும் சாப்பிடலாம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது.

மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது. நீரிழிவு, ரத்த வாந்தி எடுப்பவர்கள் இதை பத்திய உணவாக சாப்பிடலாம்.

நாம் வாழைக்காயை சமைக்கும்போது அதை, முழுவதுமாக உரித்து விடுகிறோம். அப்படி செய்யாமல் வாழைக்காயின் மேல் தோலை மட்டும் அழுத்தி சீவாமல், மேலாக மெல்லியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.

வாழைக்காயை இப்படி துவையலாக சாப்பிடுவதால் ரத்த விருத்தியும், உடலுக்கு பலமும் அதிகரிக்கும். மேலும் வயிறு எரிச்சல், கழிச்சல், இருமல் போன்றவையும் நீங்கும். ஆனால் வாழைக்காயை அதிகம் சாப்பிட்டால் வாய்வு மிகும் என்பதால் அளவோடு சாப்பிடுவது நல்லது.

வாழைப்பிஞ்சுகளை பத்தியத்திற்கு சாப்பிடலாம் என்றாலும் மலத்தை இறுக்கி விடும். மேலும் பச்சை வாழைக்காயை சின்னசின்ன ஸ்லைஸ்களாக நறுக்கி வெயிலில் காயவைத்து மாவாக்கி உப்புடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம், புளிச்ச ஏப்பம் ஆகியவை நீங்கும்.


***


"வாழ்க வளமுடன்"
      

காலிபிளவர், சுரைக்காயில் உள்ள நன்மை-தீமைகள்!


Benefits of Cauliflower and Bottle Gourd - Food Habits and Nutrition Guide in Tamil














காலிபிளவரில் கால்சியம் சத்து அதிகம் கொண்டது. நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. அதிக எடை போடாமல் இருக்க உதவுவது. பாஸ்பரஸ் அதிகம் உள்ளதால், வாயுத் தொந்தரவு தரும்.

காலி பிளவரின் குணங்கள்:

வாரத்திற்கு ஒரு நாள் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. சாலட் செய்து சாப்பிடுவது, கோபி மஞ்சூரி செய்து சாப்பிடுவது, நன்கு வேக வைத்து வெறும் உப்பு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்துச் சாப்பிடுவது போன்றவை காலி பிளவரில் செய்யக் கூடிய உணவு வகைகள்.

காலி பிளவரில் பூவை விட, பூவை மூடியிருக்கும் பச்சை இலைகளில் அதிக அளவு கால்சியம்சத்து உள்ளது. பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் சாப்பிடலாம். காலி பிளவர் உணவு வகைகளில் பூண்டைச் சேர்த்துக் கொண்டால் வாயுத் தொந்தரவு அதிகம் ஏற்படாமல் தடுக்கலாம்.


சீதளத்தை போக்கும் சுரைக்காய்.....

சுரைக்காய் குளிர்ச்சியான சுபாவம் கொண்டது. இதனால் இது சூட்டைத் தணிக்கும். சிறுநீரைப் பெருக்குவதுடன், உடலை உரமாக்கும். இதுவொரு சிறந்த மலச்சுத்தி காய் ஆகும். தாகத்தை அடக்க வல்லது.

கருஞ்சுரைக்காய் என்று ஒரு வகை இருக்கிறது. அது குளுமை செய்வதுடன் தாகத்தை அடக்கும். அத்துடன் சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கி விடும்.

சுரைக்காய் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை உண்டாக்கும். இதனுடைய விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண்மையை இழந்தவர்கள் அதை மீண்டும் பெறுவார்கள்.

ஆனால் சுரைக்காய் பித்த வாயுவை உண்டு பண்ணும் சக்தி உடையது. ஆகையால் அடிக்கடி சாப்பிட வேண்டாம்.


***


"வாழ்க வளமுடன்"
      

உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!



எல்லா உணவு வகைகளில் உள்ளதைவிட இதில் காரப்பொருள் அதிக அளவுடனும், உறுதியான பொருளாகவும் இருக்கிறது. இதுதான் நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

யூரிக் அமிலத்தையும் புளித்த நீரையும் கரைத்து வெளியேற்றிவிடுகிறது. அத்துடன் சாப்பிட்ட உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.

ஊட்டச்சத்துக்குறைவால் ஏற்படும் சொறி, கரப்பான் போன்ற ஸ்கர்வி நோயைக் குணப்படுத்த உருளைக்கிழங்கு மசியலைக் சாப்பிட்டால் போதும். அவித்த உருளைக்கிழங்குகளை தோலுடன் மசித்துத் தினமும் ஒருவேளை வீதம் ஒரு வாரம் முதல் பத்து நாள்கள் வரை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பச்சையான உருளைக்கிழங்கு ரசம் தரும் நன்மைகள்!

வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள், ஆகியன உள்ளவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ள உருளைக்கிழங்குகளாகப் பார்த்து எடுத்து, அவற்றை பச்சையாக மிக்ஸி மூலம் சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக இந்தச் சாற்றில் அரை கப் அருந்த வேண்டும்.

இதுபோல், மூன்று வேளையும் உணவு நேரத்துக்கு முன்பு அருந்த வேண்டும். உருளைக் கிழங்கில் உள்ள மாவுச்சத்து, அடிவயிறு மற்றும் இரைப்பைகளில் உள்ள குழாய்கள் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் முன் கூட்டியே தடுத்து உடலுக்கு நன்மை செய்கிறது. இதே உருளைக்கிழங்குச்சாற்றை உடலில் எலும்பு இணைப்புகள் மற்றும் தசைப்பகுதிகளில் வீக்கம் முதலிய கோளாறுகளுக்கும், வாத நோய்களுக்கும் வெளிப்பூச்சாகத் தேய்க்க உடல் நலமுறும்.

இந்தச்சாற்றை அடுப்பில் வைத்து மூன்றில் ஒரு பங்காக வற்றச் செய்து அதில் கிளிசரின் சேர்த்து, பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளவேண்டும். வீக்கம், வலி ஆகியன உள்ள இடங்களில் இரண்டு அல்லது மூன்ற மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தைலத்தை அழுத்தித் தேய்த்தால் ஒரே நாளில் வீக்கம் குறையும் வலியும் நீங்கும்.

வாத நோய் குணமாகும்!

இரு பச்சையான உருளைக்கிழங்குகளைத் தோலுடன் மிக்ஸியில் அரைத்துச் சிறிது தண்ணீர்விட்டு, இரு தேக்கரண்டி வீதம், உணவு சாப்பிடுவதற்கு முன்பு, அருந்த வேண்டும். இப்படி அருந்திய சாறு உடலில் வாதநோயைத் தோற்றுவிக்கும் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. தொடர்ந்து உட்கொண்டால் வாதநோய் முற்றிலும் குணமாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

அவித்த உருளைக்கிழங்குகளின் தோல்களைச் சேகரித்து, சுத்தம் செய்து, ஒரு டம்ளர் தண்ணீரில் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்து இறக்கவும். பிறகு, இந்தக் கஷாயத்தை அருந்தினாலும் கீல் வாதம் குணமாகும். இந்த முறையில் தினமும் மும்முறை தயாரித்து அருந்த வேண்டும்.

நீண்ட நாள் மலச்சிக்கல் தீர...

கெட்டுப்போன இரத்தம், குடல்பாதையின் நச்சுத்தன்மை உள்ள அமிலம், சிறுநீரில் உள்ள புளிப்பு அமிலம் தொடர்பாக ஏற்படும் நோய்கள் உள்ளோர், நீண்ட நாள் மலச்சிக்ககால் அவதிப்படுவோர் ஆகியோர் உருளைக்கிழங்கு வைத்தியத்தை குறைந்தது ஆறுமாதங்கள் பின்பற்றினால் மேற்கண்ட நோய்களிலிருந்து பூரண நலம் பெறலாம்.

தினசரி உணவில் உருளைக்கிழங்கை அவித்தோ, வேகவைத்தோ, பொரித்தோ, சூப்வைத்தோ சேர்த்துக்கொள்வதுதான் உருளைக் கிழங்கு வைத்தியம். சோறு, சப்பாத்தி போன்றவற்றைக் குறைத்துக்கொண்டு உருளைக்கிழங்குடன் கீரைவகைகளை, குறிப்பாக லெட்டூஸ், பசலைக்கீரை, தக்காளி, செலரி, வெள்ளரிக்காய், பிட்ரூட் கிழங்கு, டர்னிப் கிழங்கு போன்றவற்றையும் சேர்த்துச் சாப்பிடவேண்டும்.

இதன்மூலம் தோலில் உள்ள அழுக்குகளும், சுருக்கங்களும் நீங்கிவிடும். மலச்சிக்கலும் அகன்று இரத்தம் சுத்தம் செய்யப்பட்டுப் புத்தம் புது மனிதனாக ஒவ்வொரு நாளையும் சந்திக்கலாம்.

முகத்திற்கு பீளிச்சிங் வேண்டாம்!

வயதால் முகத்திலும், உடலிலும் சுருக்கம் உள்ளவர்கள் பச்சையாக உருளைக்கிழங்கை நசுக்கி முகத்திலும் மற்ற பகுதிகளிலும் தேய்த்துக்கொண்டு இரவில் தூங்கச் செல்ல வேண்டும். சுருக்கங்களை போக்கிச் சலவை செய்த துணிபோல இளமைத் துடிப்புள்ள முகத்தையும், சுருக்கமில்லாத தோலையும் உடலுக்குத் தந்துவிடுகிறது. இந்த வைத்தியம், அமெரிக்காவில் இந்த முறையில் இயற்கையாக முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களை நீக்கிக்கொள்கின்றனர்.

உருளைக்கிழங்கைத் தவறவிடாதீர்கள்!

ஆட்டுக்கறியுடன் உருளைக்கிழங்கு சேர்த்து சமைக்கக் காரணம் என்ன? உருளைக்கிழங்கு எளிதில் ஜீரணமாகி உணவுப்பாதையில் எந்தவிதமான சிரமும் இன்றி ஆட்டுக்கறி செல்ல பயன்படுகிறது. எனவே ஆட்டுக்கறி செரிமானம் ஆக உருளைக்கிழங்கு பயன்படுகிறது. உருளைக்கிழங்கை யார் சாப்பிடக் கூடாது? வி.டி. நோயினால் துன்பப்படுபவர்களும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் உருளைக் கிழங்கைச் சாப்பிடாமல் இருந்தால் நலம்.

சிற்றின்ப உணர்ச்சியைத் தூண்டுவது உருளைக்கிழங்கு!

எனவே, இது வி.டி. நோய்க்காரர்களுக்கு எரிச்சலைக்கொடுக்கும். உருளைக்கிழங்கு மெலிந்தவர்களை சதைப்பிடிப்புடன் உருவாக்கும்.

குண்டானவர்களை மேலும் குண்டாக்கிவிடும்!

எனவே, உடல் கொழுத்த மனிதர்கள் எண்ணெயில் பொரித்த உருளைக்கிழங்கு வறுவலை முற்றிலும் தவிர்த்து, மாதம் ஒரு முறை அவித்த உருளைக்கிழங்கை அளவுடன் சாப்பிட வேண்டும்.

(ஆசைக்காக) வி.டி. நோய்க்காரர்கள, வியாதி குணமான பிறகு உருளைக் கிழங்கை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மற்றவர்கள் ஆரோக்கிய உணவாகத் திகழும் உருளைக் கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு உடல் நலத்தைப் புதுப்பிக்க இன்றே முடிவு செய்யுங்கள்.

***
fb
***

"வாழ்க வளமுடன்"

குழந்தைகளின் எடையில் உங்களுக்கு அக்கறை உண்டா?


Ideal weights of Children - Child Care Tips and Informations in Tamil

உடற்பருமன் மற்றும் அளவுக்கதிகமான உடல் எடை ஆகியவை ஒரே அர்த்தம் தரக் கூடியவை. உடல் பருமன் உலக அளவில் குழந்தைகள் மற்றும் இளவயதினரிடம் பரவலாக அதிகரித்துள்ளது.


அமெரிக்காவில் உள்ள குழந்தைகளில் 16% பேர் அளவுக் கதிகமான உடல் எடையும், 31% பேர் உடல் எடை அதிகரிக்கும் அபயாத்திலும் உள்ளனர். இந்தியாவில் நகரம் மற்றும் கிராமத்தில் உள்ள கலாச்சார வேறுபாட்டின் காரணமாக குழந்தைகளிடையே உள்ள உடற்பருமனை குறிப்பிட இயலவில்லை. ஆனால் சகல வசதிகளும் நிறைந்த நகரங்களான டெல்லி, சென்னை ஆகிய நகரங்களில் முக்கியமாக பணக்கார வர்க்கத்தினரிடையே நடத்திய கணக்கெடுப்பின்படி உடற்பருமன் குழந்தைகளிடையே அதிகரித்துக் கொண்டே வருவது கண்டறியப்பட்டுள்ளது. எடை அதிகரிப்பின் முதல் அறிகுறி பிறப்பு எடை, பெற்றோரின் உடற்பருமன் முக்கிய காரணமாக கருதப்படுகிறது.


ஒழுங்கான உணவு உண்ணும் பழக்கம் இல்லாததாலும், ஒழங்கற்று சக்தியை செலவு செய்வதாலும் அளவுக்கதிகமான உடல் எடை உருவாகிறது. நமது முன்னோர்களின் 'பொருளாதாரப் பெருக்கம்' (Thrifty Genotype) என்பதின்படி உணவு நமது அடிபோஸ் திசுக்களில் சேமிக்கப்பட்டு தேவைப்படும் போது ஆற்றல் அளிக்கிறது. எவ்வாறு உணவு சேமிக்கப் பட்டு பஞ்சத்தின் போது மக்களுக்கு வழங்கப்படுமோ அவ்வாறு. விஞ்ஞான துறையில் வளர்ந்துள்ள நாடுகளில் தொழில்நுட்பங்கள் சுத்தமான உணவு வழங்குவது மட்டுமல்லாது, ஒரு நிலையில் பேரழிவையும் ஏற்படுத்தும்.


ஆரோக்கியமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள்:

ஆடம்பரமான விளம்பரங்கள் மக்களை கவர்ந்து, விலை அதிகமான, ஆற்றல் அதிகம் தரும் உணவு, கொழுப்பு அதிகம் நிறைந்த உணவு, சாதாரண மாவுச்சத்து மற்றும் குறைந்த அளவு நார்ச்சத்து மற்றும் இதர கனிமச்சத்துகள் குறைந்த அளவு மட்டுமே தரும் உணவுப் பொருட்களை உண்ண வைக்கின்றனர். இது தவிர இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள உணவை உண்ணும் பழக்கம் அதிகரித்துள்ளது.


அதிக உடல் உழைப்பில்லாத வேலை உடற்பயிற்சியின்மை

அதிகமான நேரம் திரையின் முன், தொலைக்காட்சி மற்றும் கணிப்பொறியின் முன் அமர்வது, குறைந்த அளவு வெளி வேலைகளைச் செய்வது.
அளவுக்கதிகமான உடல் எடை என்பது உடல் பொருள் அட்டவணையை பொறுத்து கணக்கிடப்படுகிறது. 85-94% என்பது வயதிற்கு பாதகமான சதவீதமாக கருதப்படுகிறது. 95% மேல் அளவுக்கதிகமான உடல் எடையாக கருதப்படுகிறது.


முதன்முதலில் குழந்தையின் அளவுக்கதிகமான உடல் எடை கணக்கெடுப்பின்போது உணவுப் பழக்கவழக்கங்கள், குடும்ப பழக்கவழக்கங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படுகிறது. ஏனெனில் வெற்றிகரமான மருத்துவ முறைகளுக்கு இந்தப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களும் காரணங்கள். குழந்தையின் வளர்ச்சி பதிவேடு, உடல் பரிசோதனை மற்றும் பிறபரிசோதனை கணக்கில் கொள்ளப்படுகிறது. இது தவிர ஹார்மோன்கள் மற்றும் மரபணு சோதனைகளும்

மேற்கொள்ளப்படுகிறது. அளவுக்கதிகமான உடல் எடையுள்ளவர்களில் 50% கீழ் வயதிற்கேற்ற உயரமில்லாதவர்கள் ஹார்மோன் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.


உலக அளவில் வேறுபட்ட ஆய்வுகள் நடத்தியதில் உடற்பருமனால் குழந்தைப்பருவத்திலும், வளர்ந்த நிலையிலும் இருதய நோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.



குழந்தைப் பருவங்களில் ஏற்படும் உடற்பருமனை சீர்செய்யும் வழிமுறைகள்:


எடையை குறைப்பதை விட எடையை பராமரித்தல் முதல் லட்சியம். எடை குறைவு மிக மெதுவான செயலாக இருக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 0.5 கிலோ வீதமாக 10% எடையை குறைத்தல் என்பது முதல் லட்சியமாக விவரிக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த எடை குறைப்பு குறைந்தது 6 மாத காலம் பராமரிக்கப்பட வேண்டும்.

வெற்றிகரமான எடைகுறைப்பு மற்றும் எடை பராமரிப்புக்கு முக்கியமான வாழ்வு முறை மாற்றம், அதிகப் படியான உடல் உழைப்பு மற்றும் உணவு, உடற் பயிற்சி, செய்முறை மாற்றங்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது.


உடல் பொருள் அட்டவணை(BMI) மற்றும் ஒரு வருடத்திற்கான உடல் பொருள் அட்டவணையை பயன்படுத்தி உடனடியான எடை அதிகரிப்பையும், அடிபோஸ் சேமிப்பும் கணக்கிடப்படுகிறது.


செய்முறை மாற்றங்கள் எடுத்துக்காட்டாக உடல் உழைப்பில்லாத வேலையை குறைத்தல், உடல் உழைப்பை அதிகரித்தல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தை கைவிடுதல், குடும்பத்தினரிடையே கலந்துரையாடலை அதிகரித்தல்.



உணவுப் பழக்க வழக்கங்கள் ஆலோசனை:


1-3 வயது வரை உள்ள குழந்தைகள் இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும். 1-6 வயது உள்ள குழந்தைகளுக்கு 4-6 Oz மற்றும் 7-18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 8-12 Oz பழரசம் ஒரு நாளைக்கு கொடுக்கலாம். 2 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு கொழுப்பு நீக்கிய பால், குறைந்த ஆற்றல் தரும் உணவு, குறைந்த அளவு இடைவேளை உணவு தர வேண்டும்.

இளவயதினருக்கு குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்த உணவை விட குறைந்த மாவுச்சத்து எடை குறைப்பதற்கு மிகவும் உடற்பருமன் அதிகமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு உண்ணும் உணவு 800 கிலோ கலோரி மட்டுமே இருந்தால் எடை இழப்பு வேகமாக இருக்கும்.


ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்கள்:


உணவின் போது, குழந்தைகளை தண்டிக்கக் கூடாது. உணவு உண்ணும் போது மகிழ்ச்சியாக பேச வேண்டும்.

பரிசுப் பொருளாக உணவுப் பொருளை உபயோகப்படுத்தக் கூடாது.


உணவு விஷயத்தில் பெற்றோர்கள், சகோதர்கள் நல்ல வழிகாட்டிகளாக இருக்க வேண்டும். புதிய உணவுப் பொருளையும், சரிவிகித உணவையும் உண்ண வேண்டும்.

உணவு பலநேரங்களில் வழங்கப்பட வேண்டும். முதலில் விருப்பமில்லாத உணவுப் பொருட்களை பலமுறை தருவதன் மூலம் அதன் மேல் உள்ள வெறுப்புகளை உடைத்து விட வேண்டும்.

குறைந்த அடர்த்தியுள்ள உணவுப் பொருள் குழந்தைகளின் ஆற்றலைச் சமப்படுத்தியுள்ளன.
குழந்தைகளின் விருப்பத்தை தடுப்பது ஆசையை குறைப்பதற்கு பதிலாக தூண்டி விடும்.
குழந்தைகளின் புது உணவுப் பழக்க வழக்கங்களை பற்றிய விழிப்புணர்ச்சியை வரவேற்க வேண்டும்

குழந்தைகளை 'தட்டைக் கழுவு' என்று கட்டாயப்படுத்தக்கூடாது.



உடல் உழைப்பு:


2 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் தொலைக் காட்சி மற்றும் கணிப் பொறி பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். 2-18 வயதிற்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே தொலைகாட்சி காண வேண்டும். படுக்கை அறையில் தொலைக்காட்சிப் பெட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் கணிப்பொறியில் வீட்டுப் பாடம் செய்தவதற்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும். உணவு மற்றும் உடல் உழைப்புடன் மருந்துகளும் உடல் எடையைக் குறைக்க பயன்படுத்தப்படுகின்றன.


உடற்பருமன் வராமல் தடுக்கும் முறைகள்:


கர்ப்ப காலத்தில்


கர்ப்பமாவதற்கு முன் உடல் பொருள் அட்டவணையை சமப்படுத்துதல்.
புகைப்பிடித்தலை தவிர்த்தல்.

அளவான உடற்பயிற்சி.

கர்ப்பகால சர்க்கரை நோயில், சர்க்கரை அளவை சமப்படுத்துதல்.
பிறந்த பின்பும், 3 மாதம் வரை தாய்ப்பால். ஒரு வயது வரை உணவுப் பொருட்கள் மற்றும் இனிப்பு பொருட்கள் தருவதை தள்ளிப் போடுதல்.



குடும்பங்களில்


குறிப்பிட்ட இடம், நேரத்தில் சாப்பிடுதல்.

நேரம் தவறாமல் சாப்பிடுதல்.

சாப்பிடும் போது தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.

சின்னத் தட்டு மற்றும் கிண்ணம் உபயோகித்தல்..

தேவையில்லாத இனிப்பு, கொழுப்பு மற்றும் பானங்களை தவிர்த்தல்.



பள்ளிக்கூடங்களில்


இனிப்பு வகைகள், சாக்லேட் வகைகள் விற்பதை தடை செய்தல்.
உடற்கல்வி, உணவியல், அறிவியல் மற்றும் உடல் உழைப்பு பற்றி ஆசிரியர்களுக்கு கற்பித்தல்.


குழந்தைகளுக்கு ஆரம்பப்பள்ளியில் இருந்து உயர் பள்ளி வரை உணவு மற்றும் வாழ்வு முறைபற்றி கற்பித்தல்.


வாரத்தில் 2-3 முறை 30-45 நிமிடம் உடற்கல்வி கற்பித்தல்.



சமுதாயத்தில்


குடும்பத்தினரின் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு வசதிகளை எல்லா வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் அதிகப்படுத்துதல். எவ்வாறு சுகாதாரமான உணவுப் பொருட்களை வாங்க வேண்டுமென கற்பித்தல்.



மரபியல் மற்றும் செயலியல் காரணங்களை விவரித்தல்

குழந்தைகளின் வயதிற்கேற்ற உடல் எடையை அதிகரிக்க முயற்சித்தல்.
உடற்பருமனை நோக்கி உழைத்து, அதன் அங்கீகாரத்தை அதிகரித்து, செலவு செய்த பணத்தை திருப்பி அதற்கான மருத்துவ செலவுக்கு உபயோகப்படுத்துதல்.



உற்பத்தியாளர்கள்


வயதிற்கேற்ற உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கேற்றவாறு கொண்டு வருதல்.


சுகாதாரமான உணவுப் பொருட்கள் பற்றிய விளம்பரம் மூலம் காலை மற்றும் நேரம் தவறாமல் குழந்தைகளை சாப்பிடுவதற்கு ஊக்கப்படுத்துதல்.



அரசாங்கம் மற்றும் நல சங்கங்கள்


உடற்பருமனை நியாயமான நோயாக வகைப்படுத்துதல். சிறந்த வாழ்க்கையை மேற்கொள்ள நல்வழியில் நிதி ஒதுக்க வேண்டும்.
அரசு சத்துணவு அளிக்க நிதி வழங்குகிறது. இது மட்டுமல்லாமல் பள்ளிகளுக்கு உடற்கல்வி அளிக்க கூடுதல் உதவி நிதி அளிக்க வேண்டும்.
நகர வரையாளருக்கு இரு சக்கர வாகனங்கள், வழிபாதை ஆகியவை அமைப்பதற்கு நிதி உதவி அளித்தல்.


துரித உணவு பற்றி விளம்பரங்கள் ஆரம்பப்பள்ளி மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சென்றடையாமல் தடுக்க வேண்டும்.
பச்சை நிற உணவு உங்கள் வாழ்வை வளமாக்கும்.

***
tu koodl
***

"வாழ்க வளமுடன்"
      

01 ஆகஸ்ட், 2015

ஒரு நாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

 
 
காலை 6 மணி :
 
 டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.
 
 
 
9 மணி :


 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
 
...
11 மணி :

மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.


மதியம் 1 மணி :


எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.



மாலை 4 மணி :

காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.


மாலை 5.30 மணி :


ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.


இரவு 8 மணி :


காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்.
 
 


***
fb
***



"வாழ்க வளமுடன்"
      

பலருக்கு தயிர், மோர் போன்றவை பிடிக்காதா!?


 
 
நான் இவைகளை எடுத்துக் கொள்ள மாட்டேன் என்று
பெருமையாகச் சொல்வார்கள். சிலருக்கோ தயிர் இல்லாமல் ஏதுமில்லை.
தயிர் நம் உடலுக்கு ஓர் அரு மருந்து. குளிர்ச்சியைத் தரும். நல்ல ஜீரண சக்தியைத் தருவது தயிர்தான்.


பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து, 32% பால்தான் ஜீரணமாகி இருக்கும். ஆனால், தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனே ஜீரணிக்கப்பட்டிருக்கும்.


பாலில் ளாக்டோ இருக்கிறது. தயிரில் இருப்பது ளாக்டொபஸில். இது ஜீரண சக்தியைத் தூண்டி வயிற்றின் உபாதைகளை சரி செய்கிறது.


வயிறு சரியில்லாத பொழுது வெறும் தயிர் சோறு
மட்டுமாவது உணவாக உட்கொள்ளச் சொல்லி
மருத்துவர்கள் சொல்வார்கள்.


பால் கூட வயிற்றை மந்தமாக்கி ஜீரண சக்தியைக்
குறைக்கும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் தயிர் அப்படி அல்ல.


அதிகமாக வயிற்றுப்போக்கு ஏற்படும் பொழுது

 வெந்தயம் + தயிர் 1 கப் சாப்பிட்டால் வயிற்றுப் பொருமல் அடங்கும்.
பாலைத் திரித்து உருவாக்கபடுவதுதான் பனீர். (பனீரைத் தனியாக எடுத்த பிறகு இருப்பத் புரதச் சத்துமிக்கதாகவும், வாந்தியை நிறுத்த உதவுவதாகவும் இருக்கிறது).


பிரியாணி போன்று உடலுக்கு சூடு தரும் உணவு வகைகளைச் சாப்பிடும்பொழுது வயிற்றுக்கு அதிகம் கேடு விளைவிக்காமல் இருக்கத்தான் தயிர் ரயித்தா சாப்பிடுகிறோம்.


மெனோபாஸ் பருவத்தை எட்டப்போகும் பெண்களுக்கு
தயிர் மிகவும் உபயோகமாகிறது. உடலுக்குத் தேவையான அதிக கால்சியத்தை தயிர் வழங்குகிறது.


தயிரில் முக்கியமான வைட்டமின் சத்துகளும், புரதச் சத்துகளும் அடங்கியுள்ளது. கால்சியமும், ரிபோ ப்ளேவின் என்ற வைட்டமின் `பி' யும் தயிரிலிருந்தே பெறப்படுகிறது.


தயிரில் உள்ள புரோட்டீன், பாலில் உள்ள புரோட்டீனை விட சீக்கிரமாகவே ஜீரணமாகிவிடும். பாலை உட்கொண்ட ஒரு மணிநேரத்தில் 32 சதவீத பால் மட்டுமே ஜீரணப் பாதையில் செல்கிறது. ஆனால் தயிரோ 91 சதவீதம் ஜீரணமாகி விடும்.


இதனால் ஏற்படும் நன்மைகள் சில

1. பாலைத் தயிராக மாற்றும் பாக்டீரியா குடலில் உருவாகும் நோய் கிருமி பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கிறது. தயிரில் இருக்கும் பாக்டீரியா ஜீரண சக்தியை அதிகரிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாவை உருவாக்குகிறது.


2. ஒரு கை நிறைய தயிரை எடுத்து தலையில் நன்றாக தேய்த்தால் தூக்கம் நன்றாக வரும்.


3. சூரிய ஒளியில் பாதிக்கப்படும் நரம்புகளையும், தோல் பகுதிகளையும், தயிர் தனது ஆரோக்கியமான கலவைகளால் பாதுகாக்கிறது. பழச்சாறு உடலுக்குத் தேவையான வைட்டமின் `சி'யை அளிக்கிறது. தயிரும் பழச்சாறுக்கு இணையான சத்துக்களைக் கொண்டுள்ளது.


4. மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் தயிர் தான் சிறந்த மருந்து.


5. அப்ரண்டீஸ் மற்றும் வயிற்றுப் போக்குக்கு காரணமாகும் கிருமிகள் தயிர், மோரில் உள்ள லேக்டிக் அமிலத்தால் விரட்டியக்கப்படும். மஞ்சள்காமாலையின் போது தயிரிலோ, மோரிலோ சிறிதளவு தேனைக் கலந்து உட்கொள்வது சிறந்த உணவு முறையாகும்.


6. மலம் கழித்த பிறகு சிலருக்கு மலக்குடலில் எரிச்சல் ஏற்படும். தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு இதை குணப்படுத்தலாம்.


7. சில தோல் வியாதிகளுக்கு மோரில் நனைந்த துணியைப் பாதித்த இடத்தில் கட்டி வருவது சிறந்த மருந்தாகும். தோல் வீக்க நோய்க்கு மோர் கட்டு அருமையான மருந்தாகச் செயல்படுகிறது.


தயிர் சோறு உண்ண பிடிக்காதவர்களும் தயிரை
உணவில் வெவ்வேறு விதமாக சேர்த்துக்கொள்ளலாம்.



1. தயிருடன் + சர்க்கரை சேர்த்து கலக்கி லஸ்ஸியாக
உண்ணலாம்.


2. பனீர்கட்டிகள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

 (அதிகம் வேண்டாம், கொழுப்புச் சத்து அதிகமாகிவிடும்)


3. மோராக கடைந்து உப்பு,கொத்தமல்லி, கறிவேப்பிலை,
பெருங்காயம் சேர்த்து நீர் மோராக்கி குடிக்கலாம்.
 
 
8** 
ts  ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம். 
***
 
                                                                                                                                                         "வாழ்க வளமுடன்"
      

நீரிழிவு பாதிப்பை வீட்டிலேயே குணப்படுத்த 10 எளிய உணவுகள்..!

இந்தக் காய்கனிகள் நீரிழிவு-ன் தீவிரத்தை குறைக்கும்.


 
 
1. முருங்கைக்காய் கீரை..!
...
முருங்கைக்காய் கீரையில் உள்ள நார்ச் சத்து தெவிட்டான நிலையை அதிகரித்து உணவு உடைபடுவதை குறைக்கச் செய்யும்.
இதனால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.


2. துளசி இலை

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை உதவுகிறது.
துளசி இலையில் விஷத் தன்மையுள்ள அழுத்தத்தை போக்கும் ஆற்றல் மிக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இவை சர்க்கரை நோயில் பல சிக்கல்களை நீக்குகிறது.


3. ஆளி விதைகள்


ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும்.
ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவுக்கு விற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு சுமார் 28% குறையும்.


4. இலவங்கப்பட்டை

உணவில் ஒரு கிராம் அளவில் இலவங்கப் பட்டையை 30 நாள்களுக்கு அதை உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.


5. கிரீன் டீ


கிரீன் டீ –ல் திடமான ஆன்டி - ஆக்சிடன்ட்கள் மற்றும் ஹைபோக்ளைசெமிக் தாக்கங்கள் இருக்கும்.
ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடான அளவில் வெளியேற பாலிஃபீனால் உதவும்.


6. நாவல் பழ கொட்டை

நாவல் பழ கொட்டைகளின் பருப்பு நீரிழிவு பாதிப்பையை கட்டுப்படுத்தி ரத்தத்தில் சர்க்கரை அளவௌ குறைக்கும்.
நாவல் மர இலைகளை மென்று சாப்பிட்டாலும் ரத்ததில் சர்க்கரை அளவு குறையும்.

நாவல் பழ விதை நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும்.

மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் இருதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது.



7. பாகற்காய்

ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் பாகற்காய் -ல் உள்ளது.
பாகற்காயை குழம்பு, கூட்டு மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம். நீரிழிவு பாதிப்புக்கு சித்த மருந்து சாப்பிடுபவர்கள், பாகற்காய் தவிர்ப்பது நல்லது. அல்லது பாகற்காய் சாப்பிடும் அன்று சித்த மருந்தை தவிர்க்கலாம்.



8. வேப்பம் இலை

நீரிழிவு நோய்க்கான சிகிச்சைக்கு வேப்பம் இலை கொழுந்துகளை பயன்படுத்தலாம்.

அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய் பாதிப்பு குறையும்.


9. கருப்பு சீரகம்

கருப்பு சீரகம் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.


10. உடற்பயிற்சி


அடுத்து செலவு இல்லாத மருந்து உடற்பயிற்சி. இது உடல் எடையை குறைக்க உதவும். இதனால் உடல் பருமன் பிரச்னையும் நீங்கும்.
உடற்பயிற்சி என்பது இன்சுலின் உற்பத்தி திறனை அதிகரிக்கும். மேலும் சீரான முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு குறையும்.


ரத்த அழுத்தம் கூட குறையும். சின்ன சின்ன உடற்பயிற்சி செய்தால் கூட நல்ல பயன் கிடைக்கும்.


மேலும் தியானம் மற்றும் யோகாசனம் செய்வதால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு குறையும். கார்டிசோல், அட்ரினாலின் மற்றும் நோராட்ரினலின் போன்ற சில மன அழுத்த ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தும்.


ட்ரான்ஸ்சென்டென்ட்டல் தியான முறை மூலமாக நரம்பியல் ஹார்மோன்களை குறைத்தால், ரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் குளுகோஸின் அளவு சம நிலையுடன் விளங்கும். மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் சர்க்கரை நோயை நடுநிலையாக்க இது உதவம்.

***
thanks fb
***
 
 
"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "