...

"வாழ்க வளமுடன்"

24 மார்ச், 2010

பொது அறிவு துணுக்குகள்

இந்த தகவல்கள் புதிதாகவும், சிலசெய்தி அறியாததாகவும் இருந்ததால் இங்கு பதிக்கிறேன்.




வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள்:
*
1. கிளைடர் விமானம் 1853-ல் உருவாக்கப்பட்டது.
*
2. வில்வித்தை கலையில் முதலிடம் வகிப்பவர்கள் கொரியர்கள்.
*
3. நினைவு தபால்தலைகளை முதன்முதலில் வெளியிட்ட நாடு அமெரிக்கா.
*
4. முதன்முதலில் மக்களுக்காக நூலகம் அமைத்தவர் ஜூலியஸ் சீஸர்.
*
5. இந்தியாவில் முதல் நர்ஸ் பயிற்சி பள்ளி 1946-ல் வேலூரில் தொடங்கப்பட்டது.
*
6. பைபிளை முதன்முதலில் தமிழில் அச்சிட்டவர் சீகன் பால்க்.

***
சுறா செய்திகள்:
*

1. கடலில் சுறா தோன்றி 40 கோடி ஆண்டுகள் ஆகின்றன.
*
2.சுறா மீனில் 350 இனங்கள் உள்ளன.
*
3.சுறா மீனுக்குப் புற்று நோய் வருவதில்லை.
*
4.எவ்வளவு பெரிய காயம் ஏற்பட்டாலும் சுறா மீனுக்கு சீழ் பிடிப்பதில்லை.
*
5. கறுப்பு ஆடை அணிந்து குளிப்பவர்களை சுறாமீன் தாக்குவதில்லை.
***
நாய்களுக்கு ரத்த வங்கி:
*

1. நாய்களுக்கு என்று ஐரோப்பாவில் ரத்தவங்கி உள்ளது.
*
2.கழுதைகள் ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் தான் தூங்குமாம்.
*
3. தவளையின் ரத்த நிறம் கருப்பாக இருக்கும்.
*
4. கிரேக்க மேதையான சாக்ரடீஸýக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
***
தென்னை செய்திகள்:
*

1. தென்னை மரம் 100 ஆண்டு காலம் ஆயுள் என்றாலும், 80 ஆண்டுகளுக்கு மேல் பலன் தராது.
*
2. தென்னை உஷ்ண மண்டல பயிர். அதனால் குளிர் பிரதேசங்களில் விளையாது.
*
3. இலங்கை, மலேசியா, சுமத்திரா (இந்தோனேஷியா), கிழக்கிந்திய தீவுகள் ஆகிய பகுதிகளில் தென்னை மரம் அதிகளவில் வளர்க்கப்படுகிறது.
*
4. கிட்னி சம்பந்தமான நோய்களையும், மஞ்சள் காமாலையையும் தடுக்க வல்லது இளநீர்.
*
5. அந்தமான் நிக்கோபார் தீவில் தென்னை முக்கியப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
***
நைல் நதியின் நீளம்:
*

1. நைல் நதியின் நீளம் 6,650 கிலோ மீட்டர்.
*
2. மெரீனா கடற்கரையின் நீளம் 13 கிலோ மீட்டர்.
*
3. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர்.
*
4. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
*
5. விண்வெளிக்கு சென்ற முதல் வீரர் யூரி ககாரின். இவர் ரஷ்யாவை சேர்ந்தவர்.
*
6. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளின் பெயர் ஆர்யபட்டா.
*
7. முன்னும் பின்னும் பறக்கும் சக்தி படைத்த பறவை
ஊங்காரக் குருவி.
***
நத்தைகள்:
*

1. உலகில் முதன்முதலாக வீட்டு விலங்காக கருதப்பட்டது நாய்.
*
2. நத்தைகள் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வரை தூங்கும் தன்மை கொண்டது.
*
3. இந்தியாவின் முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு.
*
4. மனிதனின் தும்மல் மணிக்கு 150 கி.மீட்டர் வேகம் கொண்டது.
*
5. 1987 மே 30-ம் தேதி கோவா மாநில அந்தஸ்து பெற்றது.
*
6. சீன மொழியில் மொத்தம் 1,500 எழுத்துகள் உள்ளன.

***

மூளையின் எடை:
*
1. விக்டோரியா ராணிக்கு முடிசூட்டும் போது அவருக்கு 13 வயதுதான்.
*
2. திமிங்கலத்தின் மூளை எடை 10 கிலோ.
*
3. யானையின் மூளையின் எடை 6 கிலோ.
*
4. தேவாங்கு சாப்பிடும் பொருளை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்த பின்னர்தான் சாப்பிடும்.
*
5. குழி முயல் நீர்ச்சத்து நிறைந்த புல், முட்டைக்கோஸ், காரட், முள்ளங்கிக் கீரை ஆகியவற்றை சாப்பிடுவதால் தண்ணீரே அருந்துவதில்லை.

***
முக்கிய அமிலங்கள்:
*

1. ஆப்பிளில் அடங்கியுள்ள அமிலம் மாலிக் அமிலம்.
*
2. ரப்பரை பதப்படுத்த உதவும் அமிலம் போர்மிக் அமிலம்.
*
3. எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் சிட்ரிக் அமிலம்.
*
4. வினிகரில் அடங்கியிருக்கும் அமிலம் அசிட்டிக் அமிலம்.
*
5. ஸ்ட்ராபெர்ரி, நெல்லிக்காய் போன்றவற்றில் உள்ள அமிலம் அல்கோர்பிக் அமிலம்.
*
6. திராட்சை, புளி போன்றவற்றில் அடங்கியுள்ள அமிலம் டார்டாரிக் அமிலம்.

***
நன்றி தினமணி.
நன்றி இதை எழுதிய ஆசிரியர்கள்.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Siruvarmani&artid=59716&SectionID=145&MainSectionID=145&SEO=&Title


***


***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

யோகா கலை

சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் உதயமானதாக உலகமெங்கும் போற்றப்படும் யோகா கலை, இன்று மேற்கத்தைய நாடுகளில், கீழ்த்திசை நாடுகளில், ஏன் சீனத்திலும்,ஆஸ்திரேலியாவிலும் கூட கடைகட்டி விற்கப்படுகிறது. லண்டனில் மட்டும் மொத்தம் முன்னூறு யோகா மையங்கள். சீனாவில் கிட்டத்தட்ட அறுநூறு யோகா மையங்கள். ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மட்டும் இருநூறு யோகா மையங்கள்.



ஆனால் இந்தக்கலையைக் கண்டறிந்த தாயகமான இந்தியத்திருநாட்டிலோ, உரிய மதிப்பின்றி இருந்த இந்தக்கலை, இப்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும், அதிகரித்துவரும் மனோதத்துவ ரீதியிலான பிரச்சினைகளாலும், மீண்டும் உரிய முக்கியத்துவத்தைப் பெறத் தொடங்கியுள்ளது.
*
இன்றைக்கு கொரியர்கள் நடத்தும் எங்கள் நிறுவனம் யோகா பயிற்சியைக் கொடுக்கிறது. இதன் புனிதத்தையும், நோய் தீர்க்கும் தன்மையையும் உணர்ந்த கொரியர்களும் ஆர்வத்துடன் பங்குபெறுகிறார்கள். தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்கிறார்கள். இதன் பெருமையைச் சிலாகிக்கிறார்கள். இதன் மூலம் அடைந்த பலன்களை வெளிப்படையாகச் சொல்கிறார்கள்.
***
யோகா செய்வது யாருக்கு பயன்:
*

கர்ப்பிணிப் பெண்ணொருவர் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள காட்சி.

இன்றைய நவீன யுகத்தில் ஆண்களும் பெண்களும் குறைந்தபட்சம் எட்டிலிருந்து பத்துமணிவரை பணிபுரிய வேண்டியுள்ளது. வீடு திரும்பும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் சராசரியாக பத்திலிருந்து பதினாலு மணிநேரம் செலவு செய்கிறார்கள். இந்த நேரத்தில் மூளைக்கு வேலை கொடுக்கவேண்டியுள்ளது. இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. இலக்கு முடிவதற்குள் பணியை நிறைவு செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.பணி முடிந்து வீடு வந்தால் கணவன் மனைவியையும், மனைவி கணவனையும் திருப்தி செய்ய உணவு தயாரித்தல், குடும்ப வேலைகள், மாமியார், மாமனார், அத்தை மகன், பெரியம்மா பையன், நீண்டகால நண்பர், எதிர்த்த வீட்டுத் தோழர், வீட்டு வாடகை, பஞ்சர் ஆன பைக், பக்கத்து வீட்டில் இருந்து கழிவு நீர் வாசனை, டிக்கெட் புக்கிங், தெருவிளக்கு எரியாதது, சாலை சரியில்லாதது, காப்புறுதி, கடன் அட்டை காலக்கெடு தவறியது, வங்கி என்று சுற்றிலும் அம்புகளால் துளைபடுகிறார் நமது மனது என்னும் அபாக்கியசாலி.
*
இதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் அதற்கு சிறந்த வழி, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது ஒதுக்கி யோகா போன்ற பயிற்சியில் ஈடுபடுவது.இதன் மூலம் கர்ப்பிணிப் பெண்களில் இருந்து, மன அழுத்த நோய்க்கு ஆளானவர்கள் வரை பயனடையலாம். நாட்பட்ட தலைவலி, முதுவலி நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு உள்ளவர்கள், எப்போதும் வேலையைச் சிந்தித்து அதன் மூலம் உயர் இரத்த அழுத்தம், மைகிரேன், உடல் வலி, தூக்கமின்மை ஆகிய நோய்களுள்ள அனைவரும் பயன் அடையலாம். வியாதிகள் ஏதுமின்றி உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள விரும்பும் அனைவரும் பயனடையலாம்.
***
யோகாவின் வகைகள் - கொஞ்சம் விரிவாகப் பார்க்கலாமா:

*

உட்கார்ந்து எழுந்து, கையைக் காலை ஆட்டி, கண்ணை மூடித்திறந்து, இது மட்டும் அல்ல யோகா. கீழே சற்று விரிவாக வகைப்படுத்தியுள்ளேன்..
*
யாமா (விதிகள் / வரையறைகள்)
நிர்யாமா (தனிமனித ஒழுக்கம்)
ஆசனா (யோகா செய்யும் முறைகள்)
ப்ராணாயமா (மூச்சுப்பயிற்சி)
ப்ரத்யஹாரா (விடுபடுதல்)
தாரணா (குறிப்பிட்டவைகள் மீது ஒருநிலைப்படுத்துதல்)
தியானா (தியானம்)
சாமாதி (தீர்வு)
*
இதில் குறிப்பிட்ட யோகா:
*
1. பக்தி யோகா
2. கர்ம யோகா
3. பதஞ்சலி யோகா முறை
4. ஜனன யோகா
5. ஹத்த யோகா
6. குண்டலினி யோகா
*என்று பிரிவுகள் உண்டு...

***
ஒவ்வொன்றையும் விளக்கி வாசகர்களைத் துயிலில் ஆழ்த்த நான் விரும்பவில்லை எனினும், யோகா சிறந்ததொரு முறை என்பதும், அதில் நம் முன்னோரின் ஆழ்ந்த அறிவு - மனத்துக்கு பயனளிக்கும் வகையில் செறிந்துள்ளது என்பதையும் ஆழமாகப் பதிக்க விரும்புகிறேன்.
*

ஏதாவது புத்தகத்தை வாங்கி யோகா படித்துக்கொள்ளலாம் என்று மணிமேகலைப்பிரசுரத்தின் குண்டலினி யோகம் புத்தகத்தையோ அல்லது இணையத்தில் கிடைக்கும் தகவல்களையோ வைத்துப் பழகுவது முழுமையான பலன் தராது. ஒரு சிறந்த யோகா அறிஞரிடம் பழகுவது சிறந்த பலன் அளிக்கும்.
*
சக்கரம்,வட்டம் என்று புரியாத விடயங்களைச் சொல்லி பணம் பறிக்கும் கூட்டமும் உண்டு. யோகா என்ற பெயரில் குனிந்து நிமிரவைத்து பணத்தைப் பறித்துக்கொண்டு அனுப்பி விடுவார்கள். அதனால் நல்ல தரமான ஆசிரியரைத் தேர்ந்தெடுப்பது முதற்படியாக இருக்கட்டும்.
*

வெளிநாடுவாழ் இந்திய நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவர் சொன்னார், பேசாமல் யோகா கற்றுக்கொடுக்கும் தொழிலில் இறங்கப்போவதாக. நான் அவரிடம் வினவியது, நண்பரே உமக்குத்தான் யோகா தெரியாதே, எனக்குத் தெரிந்து நீர் எந்தப் பயிற்சிக்கும் சென்றதில்லையே என்று.
*

அவரின் பதில் என்ன தெரியுமா?
*

"இணையம் எதற்கு இருக்கிறது?" என்பதே. அதனால் தாங்களிருக்கும் நகரில் யோகா கலையைக் கற்றுக்கொடுக்க விரும்புபவர்கள் முறையாகப் பயின்று பிறகு தொடங்க வேண்டும். சென்னையில் கூட யோகாவை தொழிலாக ஏற்க நண்பர்கள் முன்வரவேண்டும். எங்கள் நிறுவனத்தில் யோகாப் பயிற்சியாளரின் சம்பளம் (50 மாணவர்கள் - தலா இரண்டாயிரம் மாதம்) - ஒரு லட்சம் ரூபாய். அவர் எங்கள் நிறுவனம் போல பத்து நிறுவனங்களில் செயற்படுகிறார். ஆக யோகா கலை வெறும் கலை மட்டும் அன்று, உபயோகமாகவும் செயற்படுத்தும் முறை உள்ளது.


***
by- செந்தழல் ரவி
***

நன்றி ரவி.


***


யோகா உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்த தயாரா ஆகிட்டிங்கலா நண்பர்களே!




***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்

உயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம்:

*


ஒரு குழந்தையை ஒரு தாய் ஈன்ற போது ஏற்படும் மகிழ்ச்சியை விட இதுபோல் நாம் செய்தால் பல மடங்கு மகிச்சி நமக்கு ஏற்ப்படும். ஆம்!


*


ஒரு உயிரை காக்கும் மருந்து ( உயிரூட்டும் தொப்புள்கொடி – உயிர்காக்கும் தொப்புள்கொடி ரத்தம் ) இந்த தொப்புள்கொடி ரத்தில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம். இதை அனைவரும் கட்டாயம் முன் வந்து சொய்ய வேண்டும்.


*


இதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. பிலீஸ் நண்பர்களே நாமும் இதில் கை கோர்ப்போம் வாருங்கள்.
இறைவனுக்கும் நன்றி சொல்லுவோம்.


***


இனி இதை பற்றி பார்ப்போம்:


*


சிசுவின் ஜனனம் என்பது எவ்வளவு மகிழ்வான விசயம். ஆனால் அதே நேரம் கருவுற்ற பெண்ணை "பத்திரமாக" இருக்கச் சொல்கிறோம். கரு "நிலைக்க / தங்க" வேண்டும் என்று மருத்துவரின் ஆலோசனைப்படி நடக்கிறோம். சில குடும்பங்களில் இதற்காக தனிப்பட்ட பிராத்தனைக் கூட செய்வதுண்டு. முதல் 3 மாதங்கள் கருவை 200% கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் தான் கரு முழுமையான சிசுவாக உருவாக தேவையான cells தயாராகிறது. இதை stem cells என்று சொல்வார்கள்.


*



*




*


இதயம், மூளை, நுரையீரல், சிறுநீரகம், கை, கால், கண், நாடி, நரம்பு என்று எல்லாமே இந்த Stem cell இல் இருந்து specialise ஆகி உருவானது தான். இப்படி "நாம்" உருவாக காரணமாய் இருக்கும் stem cells இன்னமும் நம் உடம்பில் எலும்பு ஊனில் (Bone Marrow) உற்பத்தியாகிறது. அதனால் தான் சிறுகாயங்கள் தானாகவே "சரியாகிறது". சில சமயங்களில் பலத்த அடி, எலும்பு முறிவு என்றால், தக்க மருத்துவ உதவியும், சரியான கவனிப்பும் இருந்தால், நாளடைவில் எலும்புகள் "ஒட்டிக்கொள்கிறது".



*



ஆனால் சில நேரங்களில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் பொழுது ஒருவருடைய உடம்பில் இருக்கும் Stem cells இன் அளவு பாதிப்பை சரி செய்ய போதுமானதாய் இருப்பதில்லை. இது மட்டும் இல்லை, நோய்வாய்பட்டவர் மருந்து – மாத்திரை சாப்பிடுவதால் உடம்பில் உள்ள அணுக்கள் பலவீனமாய் இருக்கும் சாத்தியமும் உண்டு. இம்மாதிரி நேரங்களில் சம்பந்தபட்டவருக்கு எலும்பு ஊன் மாற்றுச் சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்ற நிலை கூட வருவதுண்டு.



*


எலும்பு ஊன் மாற்று சிகிச்சை செய்வது எளிதில்லை. இருவரின் தசைகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகவேண்டும். இல்லயென்றால் நோயாளியின் உயிருக்கே உலை வைத்துவிடும். Donor இடமிருந்து எலும்பு ஊனை அறுவை சிகிச்சை மூலம் தான் எடுக்க வேண்டும் இப்படி எடுத்த எலும்பு ஊனை நோயாளியின் உடம்பில் செலுத்தும் பொழுது நோய்த்தொற்று (infection) வரும் சாத்தியம் உண்டு. லட்சத்தில் ஒரு பங்கு கவனம் சிதறினாலும் ஆபத்தானது.



*



சரி, இதுக்கும் தொப்புள்கொடிக்கும் என்ன சம்பந்தம்?. கருவுற்ற பெண் நிறைமாதமானதும் நல்ல அழகான ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கிறாள். குழந்தை பிறந்த உடன் தொப்புள்கொடியை அறுத்து பெற்றோர்களிடம் கொடுப்பார்கள். தொப்புள்கொடியிலிருந்து வரும் ரத்தத்தை சில ஆண்டுகள் வரை Medical waste / மருத்துவக் கழிவு என்று தான் எல்லோரும் நினைத்தார்கள்.. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சிகள் என்ன சொல்கின்றன என்று பாருங்கள்.


*



1. இதில் உயிரை உருவாக்கும் திறன் கொண்ட stem cells உள்ளது. இந்த குழம்பிலிருந்து தான் ஒவ்வொரு தசைகளுக்கென தனிபட்ட specialised cells உருவெடுக்கின்றன. ( இது இல்லையென்றால் கர்ப்பம் இல்லை)


*



2. தொப்புள்கொடி ரத்தம் பிரசவத்தின் பொழுது மட்டுமே சேகரிக்க முடியும். இதை சரியான முறையில் Cryogeneic freeze in liquid nitrogen என்ற முறையில் பத்திரப்படுத்தினால் எவ்வளவு ஆண்டுகள் போனாலும் அதன் தன்மை மாறாமல் அப்படியே இருக்கும்.


*


3. இதற்கென எந்த விதமான பிரத்தியேக அறுவைசிகிச்சையும் தேவை இல்லை. பிரசவத்தின் பொழுது தாய்க்கும் சேய்க்கும் எந்த வித தீங்கும் வராமல் தொப்புள்கொடி ரத்தத்தை சேகரிக்கலாம்.



*


இம்மாதிரி சேகரித்து பாதுகாக்கப்பட்ட தொப்புள்கொடி ரத்தம், Bone Marrow Donors கிடைக்காமல் தவிக்கும் Advance level நோயாளிகளுக்கு, குறிப்பாக Thalessemia, Diabetis, OestoeArthritis போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் சஞ்சீவனியாக திகழும்.



***






சில Bone marrow donor's இன் தசை, நோயாளியின் தசைகளுடன் ஒத்துப்போனாலும் (Histological compatiblity அல்லது Tissue Compatiblity) எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு வளரும் தசை ஒத்துப்போகாமல் சிக்கல்களை தரலாம். இதை Graft Versus Host Disease – GVHD என்று சொல்வார்கள். இது எலும்பு ஊன் மாற்று சிகிச்சை நடந்த பிறகு, சிகிச்சையின் வீரியத்திலிருந்து மீண்டுவரும் பொழுது தான் தெரியவரும். இப்படி இருப்பின், இதுவரை செய்த முயற்சி எல்லாமே வீண்.


*



ரத்த வங்கி போல், தொப்புள்க்கொடி ரத்தத்தை பாதுக்காக தனிப்பட்ட வங்கிகள் உண்டு. இவைகளை Cord Blood Bank என்று சொல்லப்படுகிறது. இவை இரெண்டு வகைப்படும்.

***




Private Cord Blood Bank :-


*


கட்டண முறையில் தொப்புள்கொடி ரத்ததை இங்கு பத்திரப்படுத்துகிறார்கள். இன்று பிறக்கும் சிசுவிற்கு பிற்காலத்தில் தேவை ஏற்படலாம் என்ற தொலைநோக்குப் பார்வையில் பெற்றோர்கள் இதை செய்கிறார்கள். இம்மாதிரி தனியார் முறையில் செயல்படுவதால் வருடாந்திர கட்டணம் பல ஆயிரங்களிலிருந்து லட்சங்கள் வரை செல்லலாம். உடமையாளர் அனுமதி இல்லாமல் ஒருவரின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரால் பெற முடியாது.


***


Public Cord Blood Bank :-


*


இங்கு எந்த கட்டணமும் இல்லாமல் தொப்புள்கொடி பத்திரப்படுத்தலாம். தேவையானவர்கள் விண்ணப்பத்துடன் அவரவர் தசையின் குறிப்பையும் குடுத்து வங்கியிலிருந்து தொப்புள்கொடி ரத்தத்தை சிகிச்சைக்கு பெற்றுக்கொள்ளலாம்.


***



உலகில் எல்லா இடங்களிலும் தொப்புள்க்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகள் இல்லையென்றாலும், முக்கிய நாடுகளில் கண்டிப்பாக உண்டு. காலப்போக்கில் ஊருக்கொரு ரத்தவங்கி போல், தொப்புள்கொடி ரத்தம் பத்திரப்படுத்தும் வங்கிகளும் விரைவில் வரக்கூடும். உங்கள் சிசுவின் தொப்புள்கொடி ரத்தம் இன்னொருவரின் உயிர்காக்கும் என்றால் மனதுக்கு நிறைவு தானே.



***


by-- தீபா கோவிந்த்.
www.eelanation.com


***


நன்றி - தீபா கோவிந்த்.


***





இதை படித்ததும் கட்டாயம் உங்களாள் உதவ முடியும் என்ற நம்பிக்கையில் என் நன்றிகள்.




***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.


*


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "