...

"வாழ்க வளமுடன்"

06 மே, 2011

40 வயதில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?


40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான்.

இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ , உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ அதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.


40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைபயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்று கூறும் இந்த நிபுணர்கள் தெரிவிக்கும் மேலும் பல யோசனைகள் இங்கே:

உடற்பயிற்சி:

ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.நடை பயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ அல்லது இன்ன பிற விளையாட்டோ அல்லது உடற் பயிற்சி கூடத்திலோ... இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும்.

பலன்கள்:

இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும்.மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும்.இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.


***

வைட்டமின் உணவு:

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் பல வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும்.

கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.

பயன்கள்:

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை.

உதாரணத்திற்கு ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள், உடல் விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது.

***


மூளைக்கு பயிற்சி:

இணைய தளங்களிலும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் மூழ்கி கிடக்கும் இன்றைய இளம் தலைமுறையினர், உடற் பயிற்சியை போன்று மூளைக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

புத்தகம் வாசித்தல், செஸ் விளையாடுதல், குறுக்கெழுத்துக்கான விடை காண்பது போன்ற மூளைக்கு பயிற்சி கொடுப்பதை கட்டாயம் செய்ய வேண்டும்.உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால் ஏதாவது ஒரு இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொள்வது கூட மூளைக்கு கொடுக்க கூடிய நல்ல பயிற்சிதான்.

பயன்கள்:

இத்தகைய பயிற்சிகள் உங்களது மூளையை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு, முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி போன்றவ்பற்றை தடுக்கிறது.


***


தூக்கம்:

நல்ல ஆழ்ந்த உறக்கத்தின் மூலம்தான் நமது உடல் தன்னை பழுது நீக்கிக்கொள்கிறது. நீங்கள் சரி வர தூங்காவிட்டால் உங்களது உடல் பழைய நிலைக்கு திரும்ப போதுமான கால அவகாசம் கிடைக்காது.எனவே தூக்கம் கட்டாயம் வேண்டும்.

***

நார்சத்து உணவு:

உங்களது அன்றாட உணவில் நார்ச்சத்து உணவு கட்டாயம் இருக்க வேண்டும்.நாளொன்றுக்கு குறைந்தது 10 கிராம் நார்ச்சத்து உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இருதய நோய்ஏற்படுவதற்கான ஆபத்து 14 விழுக்காடு குறைவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மேலும் இருதய நோயால் இறப்பதற்கான ஆபத்து 25 விழுக்காடு வரை குறைவதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிப்பதால் நார்ச்சத்து உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


***
thanks வேதுப்னியா
***


"வாழ்க வளமுடன்"

தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்உடற்பருமனான தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருக்கும் என்றும், இதனால் மூளை வளர்ச்சி பாதிக்கும் என்றும் ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது.


யுனிவர்சிட்டி ஆப் விஸ்கான்சின் மற்றும் மேடிசன் ஆராய்ச்சியாளர்கள் 281 பிரசவமான தாய்மார்கள் மற்றும் அவர்களது குழந்தைகளிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். தாய்மார்களின் உடல் எடை கணக்கில் கொள்ளப்பட்டது. அதுபோல் அவர்களுடைய குழந்தைகளின் இரும்புச் சத்து அளவு கணக்கிடப்பட்டது.


இந்த ஆய்வில் குண்டாக இருந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு இருந்தது தெரியவந்தது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


பொதுவாக உடல்பருமனாக இருக்கும் பெண்களுக்கு குடல் வழியாக இரும்புச் சத்து பரவுவது தடைபடுகிறது. இதனால் இரத்த சோகை ஏற்படுகிறது. அதேநேரம் கர்ப்பிணியாக இருந்தால் குடல் வழியாகதான் இரும்புச் சத்து குழந்தைச் செல்லும்.


இந்நிலையில் கர்ப்பிணிகள் பருமனாக இருந்தால் குழந்தைக்கு இரும்புச் சத்து செல்வது தடைபட்டு குறைபாடுடன் பிறக்கிறது. பருமனாக இருக்கும் கர்ப்பிணிகளின் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் இதுபற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆய்வுக் குழு தலைவரும், விஸ்கான்சின் யுனிவர்சிட்டியின் குழந்தைகள் பிரிவு உதவி பேராசிரியருமான பமீலா ஜெ.க்ளிங் தெரிவித்தார்.***
thanks technology
***"வாழ்க வளமுடன்"

எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:உங்கள் எடை கூடிவிட்டதா? எப்படிக் குறைப்பது? எந்த முறையைப் பின்பற்றுவது? இப்படி யோசனையிலேயே நேரம் வீணாகிக் கொண்டு இருக்கிறதா?

இதோ, உங்களுக்காக எடையை குறைக்கும் 7 எளிய வழிகள்:

1. உடற்பயிற்சி:

வாரம் 5 முறையாவது தவறாமல் செய்ய வேண்டும். உடற்பயிற்சியால் கொழுப்பு கறைகிறது. இதனால் எடை குறைவதோடு, பல நோய்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கிறது.

***

2. பசித்தால் மட்டுமே சாப்பிடவும்:

"அப்படித்தான் செய்கிறேன்" என்று கூறுவதற்கு, முன் யோசிக்கவும். எத்தனை முறை வயிறு நிறைய சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், இனிப்பு என்று சாப்பிட்டிருப்பீர்கள்? எடையை மேலும் கூட்டவே இது உதவுகிறது!

***

3. எதைச் சாப்பிடலாம் என்று தெரிந்து கொள்ளவும்:

"நான் 4 பிஸ்கெட்டும் ஒரு கிளாஸ் ஜூஸ் மட்டும் குடிச்சேன்" என்று நீங்கள் சொல்லலாம். நீங்கள் சாப்பிட்ட பிஸ்கெட்டுகளிலும் ஜூஸிலும் எத்தனைக் கலோரிகள் இருந்தன என்று தெரியுமா? எதைச் சாப்பிட்டால் நல்லது என்பதை அறிந்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

***

4. தண்ணீர் தண்ணீர்:

ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் சாப்பிடும் அளவும் குறையும். அத்தோடு உடலில் உள்ள நச்சுப் பொருட்களையும் இது சுத்தம் செய்கிறது.

***

5. உட்கொள்ளும் அளவு:

மதியம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால், இரவில் உட்கொள்ளும் அளவை குறைக்கவும். காலையில் சாப்பிட்டதைவிட, மதியம் சற்று குறைவாகவும், இரவில் அதைவிட குறைவாகவும் சாப்பிடுவது நல்லது.

***

6. ரிலாக்ஸ் ப்ளீஸ்:

தினமும் நாம் சந்திக்கும் பிரச்சனைகள், சில சமயங்களில் நம்மை அளவுக்கு அதிகமாக சாப்பிடத் தூண்டலாம். அதனால் தினமும் 15 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய எடுத்துக் கொள்ளவும்.


***

7. "நான் குண்டு" என்று யோசிப்பதை தவிர்க்கவும்:

நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றிய நினைப்பை விட்டு, மேற்கண்ட வழிகளைப் பின்பற்றினால் எப்படி மாறுவீர்கள் என்பதை யோசிக்கவும்.


இன்னும் என்ன தாமதம்? உங்கள் எடைக் குறைப்பை இப்போதே ஆரம்பியுங்கள்!


***
thanks வேதுப்னிய
***"வாழ்க வளமுடன்"

தலை முதல் கால் வரை அழகாகத் தோன்றகூந்தல்:

எண்ணெய் மசாஜ் கூந்தலின் பளபளப்பை அதிகரிக்க உதவும்.

வாரம் ஒரு முறை:

எண்ணெயை லேசாக சூடாக்கி கூந்தலின் வேர்களில் ஆரம்பித்து நுனிவரை தடவவும். விரல் நுனியால் வேர்களை நன்றாக தேய்த்து விடவும்.

மாதம் ஒரு முறை:

மேலே உள்ளது போல் எண்ணெயை தடவவும். பிறகு வெந்நீரில் ஒரு துணியை நனைத்து, அதை நன்றாக பிழிந்து விடவும். சூடான துணியை தலையில் கட்டவும். 15 நிமிடம் கழித்து கூந்தலை சீயக்காய் அல்லது ஷாம்பூவால் கழுவவும். வேர்களுக்குள் எண்ணெய் ஊடுறுவ இது உதவும்.


***

முகம்:

வாழைப்பழத்தை நன்றாக மசித்து முகத்தில் தடவவும். 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இது முகத்திற்கு பட்டுப்போன்ற மென்மையும், பளபளப்பும் தரும். இனி அளவுக்கு அதிகமாக பழுத்த வாழைப்பழங்களை எறிய வேண்டிய அவசியமும் இல்லை!

அழுக்கும், எண்ணெய் பசையும் ஒன்று சேர்ந்தால் விளைவு, பருக்கள்தான்! இதை தடுக்க ஒரே வழி முகத்தை சுத்தமாக வைப்பது. இதற்காக முகத்தை அடிக்கடி கழுவவும்.


***


கண்கள்:

கண்களைச் சுற்றி கருவளயங்கள் இருந்தால், சோர்ந்த தோற்றத்தை உங்களுக்கு தரும். இதை தவிர்க்க சரியான தூக்கம் தேவை. கருவளயங்களை போக்க உருளைக்கிழங்கு அல்லது வெள்ளரித் துண்டை கண்கள் மீது 15 முத‌ல் 20 நிமிடம் வைத்திருப்பது நல்லது.


***


உதடுகள்:

மென்மையான உதடுகளின் ரகசியம் ஈரப்பதம். நெய், வாசலீன் ஆகியவற்றை தடவுவதால் உதடுகளில் வெடிப்பு வருவதை தவிர்க்கலாம்.

உதடுகள் இளஞ்சிவப்பு நிறத்தைப் பெற தூங்குவதற்கு முன் பீட்ரூட் சாறு தடவவும்.


***


பற்கள்:

மஞ்சள் கறைபடிந்த பற்கள் அழகான புன்னகையின் எதிரிகள்! டீ, காபி, புகையிலை போன்றவை பற்களில் கறைபடிய வைக்கும். இவற்றை முழுமையாக தவிர்க்க முடியவில்லை என்றால் அதன்பிறகு பற்களை தேய்ப்பது நல்லது. அதுவும் முடியவில்லை என்றால் தண்ணீரால் வாயை சுத்தம் செய்ய வேண்டும்.


***


சருமம்:

உடலின் சருமத்தை ஆரோக்கியமாக வைப்பதற்கு உயிரிழந்த சருமத்தை அகற்றுவது மிகவும் அவசியம். 2 தேக்கரண்டி சர்க்கரையை, 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயுடன் அல்லது மோருடன் சேர்க்கவும். இந்த கலவையால் உடலை தேய்த்து கழுவவும். இது சருமத்திற்கு புது பொலிவு தரும்.


***


கைகள்:

கைகளை மிருதுவாக வைக்க கை கழுவியவுடன் க்ரீம் தடவவும். வீட்டு வேலை அல்லது தோட்ட வேலை செய்யும் போது மறக்காமல் கையுறை அணியவும்.


***


கால்கள்:

கால்களில் வெடிப்பு வருவதை தவிர்க்க, கால்களை தேய்த்து கழுவ வேண்டும். இது சொரசொரப்பான தோலை நீக்கும். அதன் பிறகு காலில் க்ரீம் தடவினால் மெண்மையான கால்களைப் பெறலாம்.***
thanks வேதுப்னியா
***

"வாழ்க வளமுடன்"

நாம் பருகும் பாலின் நன்மைகள் ( பெண்களுக்கா )இளம் பருவ பெண்கள் அயோடின் பற்றாக்குறை காரணமாக அடிக்கடி அவதிப்படுகின்றனர். இந்த குறைபாடு காரணமாக அவர்களது எதிர்கால குழந்தைகளின் மூளை வளர்ச்சி பாதிக்கும் அபாயம் உள்ளது.


இளம் பருவப் பெண்கள் அளவு குறைவாக பால் அருந்துவதால் இத்தகையப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


வளர் பருவத்தினர் ஒரு நாளில் மூன்று பகுதி பால் பொருட்களை கால்சியம் சத்துக்காக எடுத்துக் கொள்ள வேண்டும். இதர பால் பொருட்களை விட நேரடி பாலில் அதிக ஊட்டச் சத்துக்கள் உள்ளன.


பாலில் ஏ, சி, டி, இ, கே மற்றும் பி வைட்டமின்களும், மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம் தாதுக்களும் உள்ளன. நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்களுக்கு பால் அத்தியாவசியம் ஆகும்.


பால் குடிப்பதை தவிர்ப்பதால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளும் ஏற்படும். பாலில் புரதமும் உள்ளது. இந்த புரதம் உடல் திசுக்கள் சீரமைப்புக்கும், பராமரிப்புக்கும் உதவும் என பிரிட்டிஷ் உளவு முறைமை சங்க அன்னா ரேமாண்ட் தெரிவித்தார்.


200 மி லி பாலில் 134 கலோரிகள் உள்ளன. உணவுக் கட்டுப்பாடு உள்ளவர்களுக்கு பால் எதிரி அல்ல என்றும் அந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சொக்லேட் துண்டில் உள்ள சர்க்கரை அளவை விட பாலில் சர்க்கரை அளவும், கலோரி அளவும் குறைவாகவே உள்ளன.


பால் அதிக கொழுப்புள்ள உணவாக இல்லை. எனவே கலோரி பயம் இல்லாமல் அனைவரும் போதிய அளவு பால் குடிப்பது நல்லது.


***
thanks technilog
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "