...

"வாழ்க வளமுடன்"

31 மார்ச், 2011

தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் :)

தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே ! ~ 01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. ~ 02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. ~ 03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். * 04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. * 05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார். * 06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு. * 07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள். * 08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான். * 09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும். * 10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். * 11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம். * 12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை. * 13. ௨வது உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது. *** thanks படித்ததில் பிடித்தது ***
"வாழ்க வளமுடன்"

கண்களை மூடுங்க; வெயிட் குறையும்!

* குண்டை குறைப்பதில் லேட்டஸ்ட்; சென்னை வரை பரவி விட்டது கண்களை மூடுங்க; வெயிட் தானாகவே குறைந்து விடும்; கண்களை மூடினால் எப்படி உடல் எடை குறையும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், இப்படி ஒரு புது மருத்துவ தெரபி, மும்பை, டில்லி, பெங்களூரு என்று வலம் வந்து, இப்போது சென்னையிலும் கால் பதிக்க ஆரம்பித்துவிட்டது. கண்களை மூடினால் மட்டும் வெயிட் குறைந்து விடாது; அதன் பின், மனோதத்துவ ரீதியான பயிற்சியினால் உள்ளத்தில் மாற்றம் வரும்; அதுவே உடலில் வெளிக்காட்டும்; அப்புறம் என்ன, எடை தானாகவே குறைந்து விடும். இது தான் இந்த தெரபி பற்றிய சுருக்கமான விளக்கம். *** ஹிப்னோசிஸ் ஹிப்னோசிஸ் - மனதின் இயல்பான நிலை. விழித்திருக்கும் போது ஒரு மாதிரியாகவும், தூங்கும் போது வேறு மாதிரியாகவும் இருக்கும் மனது, ஆழ்நிலையில் அதன் இயல்பில் இருக்கும். நம்மை அறியாமலேயே ஆயிரக்கணக்கான முறை, ஆழ்நிலையில் ஆழ்ந்திருக்கிறோம். ஆனால், அந்த நிலையை சாதாரணமாக உணர முடியாது. மெய்மறந்த நிலைக்கும், ஹிப்னோவுக்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு. காதலிப்பவர்களுக்கும், மிகவும் அழுத்தமான கருத்துக்களை, சம்பவங்களை கொண்ட புத்தகத்தை படிப்போருக்கும், அதுபோன்ற திரைப்படங்களை பார்ப்போருக்கும் மெய் மறந்த நிலை வரும். சில வினாடிகளில் தன்னிலைக்கு வந்து விடுவர். ஹிப்போனில், அடிமனதில் உள்ள இயல்பான குணம் வெளிப்படும். அப்போது தான் ஆழ்மனதில் உள்ளவற்றை மனது கொட்டும்; கண் விழித்ததும் சம்பந்தப்பட்டவரால், மனோதத்துவ நிபுணரால் சொல்லாமல், அதை அறியவே முடியாது. *** கண்கட்டி வித்தையா மேடைகளில் மேஜிக் நிபுணரால் செய் யப்படும் கண்கட்டி வித்தையும் அல்ல இது; குழப்பிக் கொள்ள வேண்டாம். கண்கட்டி வித்தையும் ஒரு சில நொடிகள் கண்கள் மறைக்கப்படுகின்றன. அப்போது மேஜிக் நிபுணர் நிகழ்த்தும் நிகழ்வுகளை பார்த்து ஆச்சரியப்படுகிறோம். மருத்துவ ரீதியாக செய்யப்படும் இந்த ஹிப்னோ தெரபியில், மனிதனின் இயல்பான மனம் விசுவரூபம் எடுக்கிறது; அதன் விளைவுகளால், உடலில் பல கோளாறுகள் குணமாகின்றன. *** வெயிட் போயே போச்சு மனோ வியாதிகளுக்கு மட்டும் பயன்பட்டு வந்த ஹிப்னோ தெரபி முறை, இப்போது பல பரிமாணங் களை பெற்று வளர்ந்து விட்டது. உடலில் வெயிட் போடுவதை தடுக்கவும் இது பயன்படுத் தப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து தான் இதுவும் இறக்குமதி; பல சாதனங்களை வைத்து, ஒலி, ஒளி காட்சிகளை வைத்து தெரபி தரப்படுகிறது. மனதை ஒரு நிலைப்படுத்தி, ஆழ்நிலையில் போய் ஆராய்ந்து, கெட்ட குணங்களை நீக்குவதே இதன் நோக்கம்; அந்த கெட்ட குணங்கள் போய் விட்டாலே, உடலில் மாற்றம் வந்து விடுகிறது. *** வெறும் 10 சதவீதம் தான் மூளையில் உள்ள செல்களில் இருந்து கட்டளை கிடைத்தால் தான் எதுவும் செய்ய முடியும். கை, கால் நீட்டுவது, பார்ப்பது, எண்ணுவது போன்ற இயக்கங்கள் எல்லாம் மூளையின் செல்களின் கட்டளைகள் தான் காரணம். அந்த செல் களில் 10 சதவீதம் தான் நாம் எண்ணுவது, திட்டமிடுவது, நினைவாற்றல் பெறுவதற்கு பயன்படுத்துகிறோம். 90 சதவீத செல் கள், அடிமனது விஷயங் களுக்கு பயன் படுகிறது. இதனால், இவற்றை பயன் படுத்தி, உடல் கோளாறுகளை குறைக்கவோ, நீக்கவோ முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். *** எவ்வளவு நாளாகும் மனோதத்துவ முறையில் அளிக்கப்படும் இந்த ஹிப்னோ தெரபி, நான்கு முதல் ஆறு வாரம் வரை செய்வது நல்லது. நிபுணர் பரிந்துரை படி, ஒவ்வொரு பயிற்சி வகுப்பும் 10 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை நீட்டிக்க, கோளாறின் தீவிரத்தை பொறுத்து வாய்ப்புள்ளது. இந்த ஹிப்னோ தெரபியை முடித்துவிட்டால், மனம் லேசாகும்; பழைய குணங்கள் நீங்கி விடும். அதற்கு நோயாளி தான் ஒத்துழைக்க வேண்டும். அவர் முதலில் இந்த தெரபி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த தெரபி முடித்து விட்டால், புது மனிதனாகி விடுகிறார்; அப்புறம் பழைய பாதிப்புகள் எதுவும் வராது. டாக்டர் பரிந்துரை படி, அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தால், எந்த கெட்ட குணங்களும் நெருங்கவே செய்யாது. *** அரைகுறை வேண்டாம் இப்படி ஒரு புது தெரபி இருக்கிறது என்று தெரிந்தவுடன், பணத்தை கொட்டி யாரிடமாவது ஏமாந்து விடுவது வழக்கமாகி விட்டது. தேவைப்படுவோருக்கு தான் இந்த ஹிப்னோ தெரபி அளிக்கப்படும். அதை நிபுணர்கள் தான் முடிவு செய்வர்; வெயிட் குறைய வேண்டும் என்று நீங்களாக முடிவு செய்து, யாரிடமாவது சிக்கி பணத்தை தொலைக்காதீர்கள். *** எதுக்கெல்லாம் கைகொடுக்கும் பல ஆண்டாகவே மனோதத்துவ முறையை மருத்துவர்கள் கையாண்டுள்ளனர். ஆனால், மருத்துவ ரீதியாக நோயாளிகளுக்கு இந்த தெரபியை பயன்படுத்தலாம் என்று அமெரிக்க சுகாதார அமைப்பு அங்கீகரித்தது 1958ல் தான். அது முதல், பல் கோளாறு முதல் மனோதத்துவ கோளாறு வரை நோய்களுக்கு இந்த சிகிச்சை செய்யப்படுகிறது. *** போபியா, பதட்டம் கரப்பான் பூச்சியை பார்த்தால் பயம்; இரவில் நாய் குரைத்தால் பயம்; காலை 8.30 மணிக்கு சாப்பாடு தயாராகா விட்டால் டென்ஷன்; அதனால் கோபம். வீண் பிரச்னைகள். இப்படி தான் சிலர்; அடிக்கடி பயப்படுவர்; சாதா விஷயமானாலும் பதட்டப்படுவர். இவர்களை என்ன சொன்னாலும், மாறவே மாட்டார்கள்; இவர்களுக்கு, மனோதத்துவ நிபுணர்கள் ஹிப்னோ தெரபி சிகிச்சை தந்து தான் குணப்படுத்த முடியும். *** உணர்ச்சிப்பூர்வமா சிலர் எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயப்படுவர். சாதாரண தலைவலியை வர்ணித்தால்,'தலையில ஆயிரம் பூச்சி நெளிவதை போல இருக்குதப்பா' என்பர்; நமக்கே அப்படி ஒரு கற்பனை வந்து விடும். இப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு ஹிப்னோ தான் கைகொடுக்கும். இவர்களை உடனே மாற்ற வேண்டும்; இல்லாவிட்டால், இந்த மன நோய் முற்றி விடும். *** போதைக்கு அடிமை எதையாவது வாயில் போட்டு அடக்கிக்கொண்டே இருக்க வேண்டும்; பான் பராக்கில் ஆரம்பித்து போதை மருந்து வரை போய் விடுவோரும் உண்டு. இவர்களால் இந்த வஸ்துக்கள் இல்லாமல் நாள் நகராது; மண்டை காய்ந்துவிடும். இவர்கள் நிச்சயம் ஹிப்னோ தெரபி செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகி விடும். *** சிகரெட், மது சிகரெட், மதுவுக்கு அடிமையாவது என்பது பலருக்கும் நேர்வது தான். கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்களுக்கு இந்த தொல்லை இருக்காது; ஆனால், எந்த பிராண்டாக இருந்தாலும், கடைசியில் காசில்லாவிட்டால், 'கட்டிங்' வரை போகும் சிலரும் உண்டு. அதுபோல, காசிருந்தால் சூப்பர் சிகரெட் ; இல்லாவிட்டால், பீடி வரை கூட போய் விடுவோர் இருக்கின்றனர். சரியாக சாப்பிடவும் மாட்டார்கள்; இவர்கள் ஐம்பதை தாண்டும் போது பெரும் தொல்லை தான். ஹிப்னோ தெரபி இவர்களுக்கும் பலன் தரும். *** சைகோ சொமேட்டிக் சைகோ என்பது மனம் சம்பந்தப்பட்டது; சொமேட்டிக் என்பது உடல் தொடர்பானது. இரண்டும் சேரும் போது, கோளாறு என்று வந்தால் மனதை சரி செய்தால் போதும்; உடல் கோளாறு குறைந்து விடும். இந்த வகை பிரச்னைகளுக்கும் ஹிப்னோ சிகிச்சை தான். *** மூட நம்பிக்கை சிலர் மூட நம்பிக்கைகளின் உச்சிக்கே சென்று விடுவர்; அவர்களுக்கு நிலைமை மோசமாகி விட்டால், ஏமாற்றங்கள் அதிகரிக்கும். அவர் களை ஏமாற்றுவோரும் அதிகமாக இருப்பர். இவர்களுக்கு சிறந்த சிகிச்சை ஹிப்னோ தெரபி தான். *** எடை குறைய கொழுப்பு சார்ந்த, சாட் உணவுகளை கண்டபடி சாப்பிடுவது, வாழ்க் கை முறையில் மாற்றம் போன்றவை தான் சிலர் குண்டாக காரணம். இவர்கள் எடையை குறைக்க வாக் கிங், யோகா போன்றவை செய்தால் நல்லது. வாழ்க்கை முறை, உணவு முறையை மாற்றிக்கொள்ள ஹிப் னோ சிகிச்சை உதவுகிறது. எட்டு வார பயிற்சியை செய்தால், புது மனிதராகி விடுவர். அப்புறம் குணம் மாறி, எடை தானாக குறைந்து விடும். *** புலம்பல் வியாதி சிலர் முயற்சியே செய்யாமல், பழையதை பேசிப் பேசி, புலம்பியபடி இருப்பர். உலகமே இருண்டு விட்டது போல 'பீல்' பண்ணுவர். யாரை பார்த்தாலும் இவர்களின் புலம்பல் தான் பெரிதாக இருக்கும்.இப்படிப்பட்டவர்கள் கண்டிப்பாக ஹிப்னோ தெரபி மேற்கொள்ளலாம். சில மாதங்களில் மாறி விட முடியும். *** மன அழுத்தம் மன அழுத்தத்துக்கும் இந்த தெரபி பயன்படுகிறது. மனம் ஒருமைப்பட்டு, பலப்படும். அப்போது, அழுத்தத்துக்கு இடமே இருக்காது. இதுபோல, விரும்பத்தகாத பழக்க - வழக்கங்கள் இருந்தால், அதை இந்த தெரபி மூலம் தீர்த்துக்கொள்ளலாம். *** சுயபுராணம் சிலர் சுயபுராணம் 'பாடுவதில்' தான் காலத்தை கழிப்பர். இவர்களை பார்த்தால், நண்பர்கள் ஓட்டம் பிடிப்பர். இப்படி சுயபுராணம் பாடுவதும் ஒரு வகையில் வியாதி; அதுபோல, பக்தி என்ற பெயரில் அன்றாட வாழ்க்கையை மறுக்கும் பழக்கமும் மோசமானது. இவர் களுக்கு இந்த தெரபியில் பலன் உண்டு. *** thanks தினமலர் *** "வாழ்க வளமுடன்"

கணவரின் நண்பர்களிடம் பழகும்போது...

நண்பனின் மனைவி அல்லது காதலியுடன் 47 சதவீத ஆண்கள் திருட்டுக்காதலில் ஈடுபட்டிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியிட்டது, ஒரு இணையதளம். இந்த தகவலை அறிந்து ஆடிப்போய் இருப்பவர்கள் இங்கிலாந்து பெண்கள். அங்குதான் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆனாலும், தமிழகத்தைச் சேர்ந்த பெண்களுக்காக அறிஞர் பெருமக்களால் வெளியிடப்பட்ட சில அறிவுரைகளை கீழே தருகிறோம்.... கணவரின் நண்பர்களிடம், திருமணமான பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? (கண்ணியமான நண்பர்கள் தவிர்த்து). * முதல் வேலையாக உங்கள் கணவரின் நட்பு வட்டாரங்களை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிடுங்கள். உறவினர்கள் ஒன்றுகூடும் முக்கிய விழாக்களில் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வந்து செல்ல அழைத்திடுங்கள். * உங்கள் கணவரைத் தேடி அவரது நண்பர் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தால் உஷாராகிவிடுங்கள். அதுவும், உங்கள் கணவர் இல்லாத நேரத்தில், 'அவர் இருக்கிறாரா?' என்று கேட்டு வீட்டிற்கு வரும் பார்ட்டிகளிடம் பதில் கூட கூற வேண்டாம். வீட்டுக் கதவையே திறக்காதீர்கள். * உங்கள் கணவருக்கு சிறந்த நண்பராக இருக்கும் ஆண், உங்களுக்கும் சிறந்த நண்பராக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. அதையும் மீறி ஓப்பனாக பழக ஆரம்பித்தால், ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவரிடம் இருந்த சபலம் வெளிப்பட்டு விடும். இல்லாவிட்டாலும் வந்துவிடும். * உங்கள் கணவரின் நண்பருக்கு உங்கள் பெர்சனல் மொபைலின் நம்பர் எக்காரணம் கொண்டும் தெரிய வேண்டாம். எப்படியோ அதை அவர் தெரிந்துகொண்டு உங்கள் மொபைலில் தொடர்பு கொண்டால் முடிந்தவரை பேச்சை ஒரு சில நொடிகளுக்குள் முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் சமாளிப்பையும் மீறி அவர் உங்களிடம் பேசுவதிலேயே குறியாக இருந்தால் சட்டென்று இணைப்பை துண்டித்து விடுங்கள். * உங்களவர் வெளியூரில் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். அந்த நேரத்தில், உங்கள் கணவரின் நண்பர் என்ற முறையில் யார் தொடர்பு கொண்டாலும் பேசுவதையே தவிர்த்து விடுங்கள். * எக்காரணம் கொண்டும் ஆபாசமாக உடை அணியாதீர்கள் (தொப்புள், பிரா அப்பட்டமாக வெளியில் தெரியுமாறு ஆடை அணிவதும் இதில் அடங்கும்). அந்த உடையில் உங்கள் கணவரின் நண்பர் உங்களை பார்க்கும் சூழ்நிலை யதார்த்தமாக ஏற்பட்டாலும் கூட அவர் சபலப்பட்டு விடுவார். அந்த உடையில் நீங்கள் உங்கள் நண்பரிடம் சற்று சிரித்துப் பேசினால் கூட, நீங்கள் 'எதற்கோ' கிரீன் சிக்னல் கொடுக்கிறீர்கள் என்று அவர் எடுத்துக்கொள்வார். * உங்கள் கணவரின் நண்பர், உங்களுக்கு பார்வையாலோ, பேச்சாலோ, அல்லது வேறு எந்த வகையிலோ செக்ஸ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தால், அதுபற்றி உடனே கணவரிடம் கூறிவிடுங்கள். அந்த நண்பருடனான நட்பை முறித்துக்கொள்ள வற்புறுத்துங்கள். உங்கள் பாதுகாப்புக்கே உலை வைக்கும் அப்படியொரு நட்பு உங்கள் கணவருக்கு தேவையில்லை. * முக்கியமாக, கணவரின் நண்பனுடன் பேச வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்போது, வயதில் மூத்தவராக இருந்தால் அண்ணா என்றோ, இளையவராக இருந்தால் தம்பி என்றோ அழைக்க உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பழக்கம், உங்கள் மீது விழும் மற்ற ஆண்களின் பார்வையை கண்ணியமானதாக மாற்றும். *** thanks உளறுவாயன் *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "