அருமையான பேரு. அவசரமாய் செல்ல வேண்டி இருப்பதால் அவசர ஊர்தி. நல்ல பேருதான் வைத்துள்ளனர்.
எல்லாவற்றிக்கும் ஆதி அந்தம் அர்த்தம் தெரிந்துள்ள நமது மக்க்ளுக்கு இதன் அர்த்தம் இன்னும் விளங்க வில்லை என்பதுதான் கொடுமை.
அல்லது எப்பவும் போல எவன் செத்தா எனக்கு என்ன அப்படிங்கிற மனப்பான்மையா கூட இருக்கலாம்.
நானும் சென்னையில் பல இடங்களில் உய் உய் உய்ன்னு கத்திக்கிட்டு போற ஆம்புலன்சுன்னு எழுதி இருக்கிற அவசர ஊர்திகளை பார்த்துள்ளேன். ஆனா பாவம், எழுத்தில் மட்டுமே அது அவசரம். மத்தபடி தேமேன்னு மெதுவா ஊர்ந்து போகும்.
அவசரத்த எடுத்துட்டு ஊர்திய மட்டும் வச்சு இது ஊர்ந்து போக கூடியதுதான்னு சென்னை மக்கள் நினைச்சுட்டாங்க போல.
ஆம்புலன்ஸ் மட்டுமே எந்த விதமான சாலை போக்குவரத்து விதிகளுக்கு கட்டுபடாமல் செல்ல கூடியது.
ஆம்புலன்ஸ் ஓட்டுனர் அதை ஓட்டும் தினத்தில் யாரிடமாவது திட்டு வாங்குவார் அல்லது திட்டுவார். நமது மக்கள் புரிந்து கொண்டதுபோல் இதுவரை அவசரத்திற்கான அளவுகோலை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பது எனது எண்ணம்.
என்ன காட்டு கத்தலாய் கத்தினாலும் இதற்கு வழிவிடுபவர்கள் குறைவானவர்களே... ஆம்புலன்ஸ் சப்தம் காதுக்குள் ஒலித்தாலும் சரி அதனின் ஓளி கண்ணை கூசசெய்தாலும் சரி எனக்கு என்ன, நான் போறதுதான் எனக்கு முக்கியம் என்று போவோறே மிக அதிகமானோர்.
யாருக்கு என்ன அவசரமோ, என்ன சீரியஸ் மேட்டரோ? என்றாவது சிந்தித்து செயல்பட்டிருப்பார்களா? ஒவ்வொரு தடவை ஆம்புலன்ஸ் பார்க்கும் போதெல்லாம் எனது மனதில் வலி உண்டாகும். கடவுளே இதில் இருக்கும் மனிதரை காப்பாற்று என்று வேண்டிக்கொள்வேன், வழியும் விட்டு ஒதுங்க ஆரம்பித்துவிடுவேன். ஆம்புலன்ஸ் போக வேண்டிய இடத்தை சரியான நேரத்தில் சென்றாலே அம்மனிதர் குணமாகிவிடுவார். நான் துபாயில் 2 வருடம் வேலை செய்ததால் அங்கு இருக்கும் சாலை போக்குவரத்து விதிகள் இந்தியாவுக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று ஆசைப்பட்டுள்ளேன். அங்கு ஆம்புலன்சின் உய் உய் உய்ன்னு சப்தம் கேட்டாள், சாலையில் செல்லும் அனைத்து வாகனங்கள் ஏதாவது சந்து பொந்து இடுக்குகளில் டக்கு டக்குன்னு போய் ஒளிந்து கொண்டு ஆம்புலன்சிற்கு வழி விடும், அந்த அளவிற்கு மக்கள் அதன் அர்த்தம் புரிந்து வைத்துள்ளனர், ஆதலால் மிக உடனடியாக அது செல்வதற்கு ஏற்ப வழி ஏற்படுகிறது. துபாயில் வசிப்பவர்கள் 70% பேர் நமது மக்கள்தான், அங்கு பின்பற்றும் விதிகளை இங்கு வந்தவுடன் மறந்து விடுகின்றனர்.
சமிபத்தில் சென்னையின் ஒரு மேம்பாலத்தில் ஆம்புலன்ஸ் சப்தம் போட்டு கொண்டிருக்கிறது, நான் எதிர் பக்கமாக சென்று கொண்டுருந்தேன், எப்பவும் போல் அந்த மேம்பாலம் அந்த நேரத்தில் மிகவும் அதிப்படியான வாகனங்களாள் ஊர்ந்து கொண்டிருக்க, அந்த ஆம்புலன்சிற்கு வழி விடுவோர் எவருமில்லை... அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் அதன் முன்பு நிற்கும் வாகன ஓட்டிகளிடம் வழி விடும்படி கத்தி கொண்டிருந்தார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவரின் கூட இருந்தவர் கண்ணீருடன் கதறி அனைவரிடம் கெஞ்சி கொண்டிருந்தார், வழி விட்டவர் கொஞ்சம்தான்... கொடுமையான விசயம் கேட்டு கொண்டு ஒன்றும் செய்யாமல் இருந்தவர்கள்தான் அதிகம், அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது ஏன் என்றால் முன்பு நிற்கும் வாகனங்கள் வழி கொடுத்தால்தான் அவர்களும் வழி கொடுக்க முடியும்.
இப்படி ஒருத்தர் மாற்றி ஒருத்தர் குற்றம் சொல்லும் வழக்கத்தைதான் அதிப்படுத்தி வைத்திருக்கிறோம்.
இங்குதான் ஆம்புலன்ஸ் மான்புமிகு மந்திரிகளுக்ககவும் பெரிய பதவியில் இருக்கும் அரசாங்க ஊழியர்களுக்காவும் வழி விட்டு கொண்டிருக்கிறது.
அதையிம் விட கொடுமை சிக்னல் சிவப்பு விளக்கில் ஆம்புலன்ஸ் இங்கு நிறுத்தபடுகிறது.
நமது மக்கள் இரக்க குணம் மிக்கவர்கள்தான், ஒரு விசயம் தமது குடும்பத்தினற்கும் சுற்றாருக்கும் ஏற்படாதை வரை அவ்விசயத்தில் இரக்கமற்றவர்களாகவே இருப்பார்கள்.
இவ்விசயத்தில் முன்அனுபவம் தேவையா? யாரும் ஆம்புலன்சில் போகவேண்டும் என்று ஆசை படமாட்டார்கள்.
தயவுசெய்து ஆம்புலன்சின் உய் உய் உய்ன்னு சப்தம் கேட்கும்போதும் சரி, அதன் ஒளி நம்மை சென்றடையிம் போதும் சரி, மனதில் இருத்தி கொள்ளுங்கள் நீங்கள் வழிவிடும் போது ஒரு உயிர் காப்பாற்ற படுகிறது. நமக்கு ஏதாவது தேவையின் போது மற்றவர்கள் அதாவது அறியாது தெரியாதவர்கள் உதவும் போது எவ்வளவு சந்தோசம் கிடைக்குமோ அதை விட பல மடங்கு சந்தோசம் மற்றவர்களுக்கு உதவும் போது ஏற்படுகிறது.
இதை படிக்கும் நீங்கள், நீங்களும் மாறி மற்றவர்களும் மாற உதவலாமே? ஒரு உயிர் உங்களாலும் காப்பற்ற படுகிறது என்பது எவ்வளவு சந்தோசமா விசயம்.
வாழும் வாழ்கை கொஞ்சம்தான், மற்றவர்களுக்கு உதவி வாழ்கையை அழகாக ஆக்கிக்கொள்ளலாமே.
***
THANKS Mãstän
***