...

"வாழ்க வளமுடன்"

17 ஜனவரி, 2011

கர்ப்பமடைவதற்கு முன் தடுப்பூசி போடணும்!

“சீனாவில், “நாம் இருவர், நமக்கொருவர்’ கொள்கையை பின்பற்றவில்லை எனில், அடி, உதை, தண்டனை, கட் டாய கருச்சிதைவு ஆகியவை நடத்தப்படுகின்றன’ என, பத்திரிகை செய்திகள் கூறுகின்றனர். இங்கு நாம், எவ்வளவு குழந்தைகள் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். முன்பெல்லாம் இந்த நிலை தான் நீடித்தது.

இப்போது தான், இங்கேயும், “நாம் இருவர், நமக்கொருவர்’ என்ற கொள்கையைப் பின்பற்றுமாறு அரசு வலியுறுத்துகிறது. சிலர், அந்த கொள்கையை பின்பற்றவும் துவங்கி விட்டனர். இந்தக் கொள்கையைப் பின்பற்ற, பல காரணங்கள் உருவாகி விட்டன. கூட்டுக் குடும்பச் சிதைவு, வேலைக்காக வெளியூர் செல்லும் நிர்பந்தம், குழந்தை பராமரிப்புக்கு தேவையான வசதியின்மை ஆகியவை உருவாகி விட்டன.குழந்தைகளை கவனித்து கொள்ளும் ஆயாக்கள் பற்றாக்குறை அல்லது அவர்களை பணியமர்த்த அதிக செலவு ஆகியவை, பெரும் பிரச்னைகளாக உள்ளன. பெண்களும், முதுநிலைப் பட்டப்படிப்பு முடித்த பிறகே அல்லது நிரந்தர வேலையில் அமர்ந்த பிறகே, குழந்தை பெற்றுக் கொள்வது என்ற முடிவுக்கு வந்து விட்டனர். இதனால், அதிக சம்பளம், ஒரே ஒரு குழந்தை என்ற கொள்கையைப் பின்பற்றும் போக்கு அதிகரித்துள்ளது.“எனக்கு தேவை ஒரு குழந்தை தான்’ என்ற முடிவுடன் இருக்கும் வரை, பிரச்னை இல்லை. ஆரோக்கியமான குழந்தையாகப் பிறக்கிறதா, நல்ல முறையில் வளர்கிறதா என்பது தான் முக்கியமானதாக இருக்கிறது. மகப்பேறு என்பது நோய் அல்ல என்றும், குழந்தை ஆரோக்கியமானதாக இருக்க, நாமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை, பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டால், மகப்பேறு மாதங்களை எளிதாகக் கடக்கலாம். இளவயதில் சுறுசுறுப்புடன் இருப்பவர்களுக்கு, எலும்பும், தசை வளர்ச்சியும் நல்ல முறையில் அமையும். மகப்பேறு அடையும் வரை, சுறுசுறுப்பாகவே இருப்பவர்களுக்கு அதிக வாந்தி, வயிறு உப்புசம், தூக்கமின்மை ஆகியவை ஏற்படாது. தினமும் 40 நிமிட நடைபயிற்சி போதுமானது. இது, கர்ப்ப காலத்தை எளிதாக்கும்;பிரசவத்தின் போது நீண்ட நேரம் வலி ஏற்படுவது தவிர்க்கப்பட்டு, சுகப்பிரசவம் ஏற்படும். ஒரு பெண்ணுக்கு, உடல் நிறை குறியீட்டெண் (பி.எம்.ஐ.,) 23 தான் இருக்க வேண்டும். உயரத்தை மீட்டரில் கணக்கிட்டு, அதன் இரு மடங்கால், கிலோவில் கணக்கிடப்பட்ட உடல் எடையை வகுத்தால், உடல் நிறை குறியீட்டெண் கிடைக்கும். இந்த எண் 23 என இருக்க வேண்டும். இதற்கு கூடுதலாகவோ, குறைவாகவோ இருந்தால் பிரச்னை தான்.குறைவாக இருந்தால், சத்தான உணவு சாப்பிட வேண்டும். அதிகமாக இருந்தால், சரியான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு கடைபிடித்து, உடல் எடையைக் குறைக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் போது, தொற்று நோய்களான ருபெல்லா, அம்மை, மஞ்சள் காமாலை, தசை இறுக்கி நோய் ஆகியவை ஏற்பட்டால், தாய் – சேய்க்கு ஆபத்து. இந்த நோய்களுக்கு, தடுப்பு மருந்து உண்டு. திருமணம் நிச்சயம் செய்துள்ள பெண்கள், திருமணத்திற்கு மூன்று மாதத்திற்கு முன், இத்தகைய தடுப்பூசிகளை போட வேண்டும். மூளை மற்றும் நரம்பு பாதிப்புகளை தவிர்க்க, தினமும் ஐந்து மி.லி., கிராம் போலிக் அமிலம் சத்து உட்கொள்ள வேண்டும்.கர்ப்பிணியோ, அவர் அருகாமையில் யாரா வதோ, புகைபிடிக்கக் கூடாது. இந்தியாவில் ஆண்டுதோறும் பிறக்கும் 25 லட்சம் குழந்தைகளில் ஒன்றரை சதவீத குழந்தைகள், மூளை அல்லது உடல் வளர்ச்சி குறைபாடுடன் பிறக்கின்றனர். அவர்களில் 6 சதவீதத்தினர், உடலின் வளர்சிதை மாற்றத்தில் குறைபாட்டுடன் உள்ளனர். அதற்கு பரம்பரையான, ஒரே ஒரு மரபணு கூட காரணமாக அமையலாம். பிறந்த குழந்தைகள், நோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை அல்ல. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே வளர்சிதை மாற்றக் குறைபாடு ஏற்பட்டால், அதை கண்டுபிடிக்கும் நேரத்திற்குள் குழந்தைக்கு நிரந்தர பாதிப்பு ஏற்படலாம் அல்லது இறந்து போகவும் வாய்ப்பு உண்டு.பிறந்த குழந்தையின் காலைச் சுரண்டி ஒரே ஒரு சொட்டு ரத்தம் எடுத்து, அதைப் பரிசோதித்து, குழந்தையிடம் குறைபாடு ஏதும் உள்ளதா என்று கண்டறியும் முறை, 1960ல் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது. இந்தப் பரிசோதனையை, குழந்தை பிறந்த உடனேயே மேற்கொண்டால், மூளைச் செயல்பாட்டில் மாறுபாட்டைத் தவிர்க்கக் கூடிய உணவுகளைக் கொடுத்து, குழந்தையைக் காப்பாற்றலாம். இந்தியாவில் கூட, மரபணு, ரத்தம், வளர்ச்சி, சுரப்பி ஆகியவை தொடர்பான 50 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. உடனடி பரிசோதனை, குழந்தையின் உயிரைக் காக்கும்.

***

இந்த பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டிய பெற்றோர் யார்?

* நெருங்கிய உறவினரை திருமணம் செய்து கொண்டோர். பலவகை மக்கள், கலாசார வழக்கமாக, இதுபோன்று திருமணம் செய்து கொள்கின்றனர். இதனால், செயல்திறன் குறைந்த மரபணுக்களைக் கொண்ட குழந்தைகள் பிறக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இந்த மரபணுக்களே, மேலே குறிப்பிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.* குடும்ப உறுப்பினர்களிடையே காணப்படும் அறிகுறிகளை வைத்தே, இதுபோன்ற கோளாறுகளை கண்டறிந்து விடலாம். இதற்கு பரிசோதனையே தேவையில்லை. பிறந்த உடனேயே குழந்தை இறப்பது, வளர்ச்சியில் தாமதம் போன்ற அறிகுறிகள் தென்படும். இதுபோன்ற பிறப்புகள், அவற்றின் மூதாதையரிடையே உள்ள குறைபாட்டைச் சுட்டிக் காட்டும்.* கர்ப்பம் தரிப்பதில் தாமதம் ஏற்படுதல், செயற்கை கருவூட்டல், சோதனைக் குழாய் முறையில் குழந்தை வளர்ப்பு ஆகியவற்றை மேற்கொள்வோருக்கு இதுபோன்ற முறையில் பிறக்கும் குழந்தைகள் மிக அரிது. இவ்வகை பிரசவத்திற்கு செலவும் அதிகம். வளர்ந்த நாடுகள் சிலவற்றில், இதுபோன்ற பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில், சுகாதாரத் திட்டத்தில், இவ்வகைப் பரிசோதனையை சேர்ப்பது, கூடுதல் செலவுக்கு வழி வகுக்கும். தனியார் மருத்துவமனைகளில், கர்ப்பிணிகளுக்கென தனி பராமரிப்பு, கூடுதல் மருத்துவர்கள், வசதியான அறைகள் என, மகப்பேறு செலவு அதிகரித்தாலும், குழந்தை பிறந்த உடனேயே மேற்கொள்ளக் கூடிய இந்த பரிசோதனைக்கு, குறைந்த செலவு தான் ஆகும்.பரிசோதனை முடிவும் 24 மணி நேரத்திற்குள் கிடைத்து விடும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனே சிகிச்சை மேற்கொள்ள வசதியாக இருக்கும். எனவே, பிரசவம் வரை செலவு செய்த பிறகு, குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் இப்பரிசோதனைக்கென குறைந்த செலவு செய்வதை, அதிக சுமையாகக் கருத வேண்டாம்.


***
thanks google
***


"வாழ்க வளமுடன்"

குழந்தைகளுக்கு கழிவறைப் பழக்கங்களை எந்த வயதில் கற்றுக்கொடுக்கலாம்?

குழந்தை பிறந்த நாள் முதல் சிறுநீர் கழிப்பதும், மலம் கழிப்பதும் கட்டுப்பாட்டில் இல்லாத அநிச்சை சொல்களாகும்.
நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கழிவு நீக்கம் செய்து கட்டுப்பாடு இல்லாமல் வளரும் குழந்தைகளின் அந்நடத்தையை நெறிப்படுத்தி அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சரியான கழிவறை நடத்தையை குழந்தை கற்றுக்கொள்வது பெற்றோரின் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.


சரியான சமயத்தில் கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்பது, அவர்களின் பிற்கால ஆளுமை வளர்ச்சியை நிர்ணயிக்கும் என்பது உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்து.


கழிவறைப் பழக்கங்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க ஆரம்பிக்கும் வயது வெவ்வேறு நாடுகளில் வேறுபடுகிறது. நான்கரை மாதத்திலேயே இவ்வேலையை தொடங்கிவிடும் பெற்றோர்களும் உண்டு. சிலர் எட்டு மாதத்திலும், சில பெற்றோர் ஒரு வருடம் முடிந்தவுடனேயும் குழந்தைகளின் கழிவு நீக்க நடத்தையை நெறிப்படுத்தத் துவங்குகின்றனர். ஆனால் 18 மாதங்கள் முடிந்தவுடன் இப்பயிற்சியை பெற்றோர் குழந்தைகளுக்கு அளிக்கத்துவங்குவது பொருத்தமானதாகும்.


குழந்தை தன் உடலியக்கத்தில் நடைபெறும் மாற்றங்களை புரிந்து கொள்ளும் அளவுக்கு அறிவு வளர்ச்சியும், தன் உடல் தசைகளை கட்டுப்படுத்தும் திறனைப் பெற்றிருப்பதும், உட்கார்ந்து எழுவது போன்ற உடல் திறனை பெறுவதும் கழிவறை பழக்க பயிற்சிக்கு அவசியம். இம்மூன்றும் 18 மாதங்கள் முடிந்தவுடன்தான் சாத்தியம் என்பது குழந்தை மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்து.பதினெட்டு மாதத்திற்கு முன்பாக விரைவிலேயே கழிவறை பழக்க பயிற்சியை துவங்குவது குழந்தைகளின் மனதில் அதிர்ச்சியை உண்டாக்கும். பெற்றோர் மிகுந்த கண்டிப்புடன் கழிவறைக்குத்தான் செல்ல வேண்டும் என திடீரென கட்டாயப்படுத்துவதும், குழந்தைகள் அவ்வாறு செய்யவில்லை எனில் அவர்களை தண்டிப்பதும்.


உடனடியாக குழந்தைகளிடத்தில் ஆளுமைப் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கும். படுக்கையில் சிறுநீர் கழித்தல், கழிவறையைக் கண்டு பயம் கொள்ளுதல், பிடிவாத குணம், மிக மிக சுத்தமாக இருப்பது ஆகியவை 18 மாத காலத்திற்கு முன்பே கழிவறைப் பழக்கத்தை திணிப்பதால் ஏற்படும் பிரச்சனைகளில் சில. பிற்காலத்தில் பிறர் ஏற்றுக்கொள்ளும்
நடத்தையை தெரிந்துகொண்டு அதை மட்டுமே வெளிப்படுத்துவர்களாக உருவாகும் இக்குழந்தைகள் எல்லா விஷயத்திலும் தயக்கம் கொண்டவர்களாக இருப்பர்.


கட்டாயப்படுத்தாமல் படிப்படியாக குழந்தைகளின் கழிவறை நடத்தைகளை நெறிப்படுத்துவது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு அவர்களே எளிதாக கழட்டிக் கொள்ளும் வகையில் எலாஸ்டிக் வைத்த உடைகளை அணிவிப்பது, உட்கார்ந்து மலம் கழிக்க வசதியாக உபகரணங்களை பயன்படுத்துவது ஆகியவை அவசியம்.


குழந்தைகளின் நடத்தையை மிக உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வரும் பெற்றோர் சிறுநீர் கழிக்கவோ அல்லது மலம் கழிக்கவோ குழந்தைகள் விரும்புகிறார்கள் என்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக அவர்களை கழிவறைக்கு தூக்கிச் செல்ல வேண்டும்.

குழந்தை தானே கழிவறை செல்ல வேண்டும் என்று தெரிவித்தாலோ அல்லது நாம் எதிர்பார்த்த வகையில் தன் உடையை கழற்றினாலோ, கழிவறையை நோக்கிச் சென்றாலோ அந்நடத்தையை பாராட்டி ஊக்குவிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு பழக்கப்படுத்தி வந்தால் விரைவில் குழந்தைகள் தங்கள் கழிவறை நடத்தையை மேம்படுத்திக் கொள்ளும்.


கழிவறைப் பழக்கத்தை கற்றுக் கொடுப்பதிலிருந்தே பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறையையும், அவர்களின் ஆளுமையையும் அறியலாம். குழந்தைகளின் கழிவறை நடத்தையை நெறிப்படுத்துவதில் மிகுந்த கண்டிப்புடன் நடந்துகொள்ளும் பெற்றோர். பிற எல்லா விஷயத்திலும் அவ்வாறே நட்ந்து கொள்வர்.


மிதமிஞ்சிய கண்டிப்பு சிறந்த ஆளுமையை உருவாக்காது. குழந்தையின் கழிவறைப் பழக்கத்தை நெறிப்படுத்துவதில் கரிசனத்துடன் நடந்து கொள்ளும் பெற்றோர் குழந்தைகளின் எல்லா விஷயத்திலும் பாசத்துடனும் அரவணைப்புடனும், அதே சமயத்தில், நல்ல பழக்கங்களை உருவாக்குவதில் உறுதியாகவும் இருப்பர்.


விரைவிலேயே நல்ல கழிவறை நடத்தையை கற்றுக் கொண்ட குழந்தைகள் தானே தன்னை கவனித்துக் கொள்ள முடியும் என்ற உணர்வு பெற்று தனித்தியங்கும் ஆளுமைப்பண்பினை வளர்த்துக்கொள்ளும்.

பெற்றோர்களையே எல்லாவற்றிற்கும் சார்ந்திராமல் தனிமனிதனாக உருவாக சரியான வயதில் கழிப்பறை நடத்தைகளை கற்றுக் கொடுப்பதை துவங்குங்கள்..


***
thanks இணையம்
***"வாழ்க வளமுடன்"

குழந்தைகள் பற்றிய எதிர்ப்பார்ப்புகளை நாம் வளர்த்துக் கொள்வது சரியா?

எல்லா பெற்றோர்களுக்கும் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பது பற்றிய கனவுகள் உண்டு. அதற்காகவே அல்லும் பகலும் அயராது பாடுபடுபவர்களும் உண்டு .நான் பேசிப்பார்த்த வரையில் தன் குழந்தை ஓர் டாக்டராக, சாப்ட்வேர்
என்ஜினியராக, ஐ.பி.எஸ் தேர்வு பெற்ற போலிஸ் அதிகாரியாக, ஓர் கலெக்டராக பிற்காலத்தில் உருவாக வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களே பெரும்பான்மையாக உள்ளனர்.


சிறுவயதில் நி..றை..ய சாப்பிடும் கொழுகொழு குண்டு குழந்தையாக தன் குழந்தை இருக்க வேண்டும் என நினைக்காத பெற்றோர்கள் மிக குறைவு. எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு தன் குழந்தை அனைத்திலும் முதல் பரிசே பெற வேண்டும் என எண்ணாத பெற்றோர்களே இல்லை எனலாம்.


ஒரே குழந்தை கொண்ட பெற்றோர்களின் எதிர்பார்ப்புகள் எல்லை கடந்ததாக உள்ளன. ஓர் தாய் தன் மகனை பாட்டு, நடனம், யோகா, கராட்டே, கீ போர்டு, கையெழுத்து, டென்னிஸ் என இன்னும் பல பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதை பெருமையாகவும் மகன் மீது தனக்குள்ள அக்கறையின் வெளிப்பாடாகவும் கூறிக்கொண்டிருக்கிறார்.அப்பையனுக்கு அதிகபட்சம் 9 வயதிருக்கலாம். இந்த வயதில் இவையெல்லாம் சுமையாக இருக்குமே தவிர சுகமாக இருக்க வாய்ப்பில்லை. வெகு விரைவிலேயே இவற்றின் மீதெல்லாம் வெறுப்பு ஏற்பட்டு நான் எந்த பயிற்சி வகுப்புக்கும் செல்ல மாட்டேன் என அப்பையன் கூற வாய்ப்புகள் அதிகம் உள்ளன. பெற்றோர்களின் நேரப் பற்றாக்குறை காரணமாக சகோதர சகோதரிகளைக் கொண்ட குழந்தைகள் இது போன்ற
தொந்தரவுகளிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்கிறார்கள்.


பெற்றோர்களுக்கு என்னஅனுபவங்களும் விஷய ஞானங்களும் உள்ளனவோ அதைப் பொறுத்தே அவர்கள் தங்கள் குழதைகள் ற்றி ஏற்படுத்திக் கொள்ளும் எதிர்பார்ப்புகளும் அமையும். இவ்வுலகில் தனக்குதெரியாத விஷயங்களை தன் குழந்தை மீது எந்த பெற்றோரும் திணிக்க வாய்ப்பே இல்லை.


நல்ல விஷயங்களுக்கும் இதுவே விதி. டாக்டர், என்ஜினியர், போலிஸ் அதிகாரி, கலெக்டர் போன்ற உத்தியோகங்களெல்லாம் அனைவருக்கும் தெரிந்தவை அதனாலேயே அதையே அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கான குறிக்கோளாக கொள்கிறார்கள்.

ஆனால் அதைவிட தெரியாத, அதிக சம்பாத்தியம் கொடுக்கக்கூடிய, மதிப்பும் மரியாதையும் வாய்ந்த எத்தனையோ உத்தியோகங்கள் இந்த உலகில் உள்ளன. உங்களுக்கு அவையெல்லாம் தெரியாது என்பதற்காக உங்கள் குழந்தை அவ்வுயர்ந்த உத்தியோகங்களை அடையக்கூடாதா?


ஓர் தந்தை தினமும் தன் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவது வழக்கம். வகுப்பறைக்குள் சென்று புத்தகப்பைகளை வைத்துவிட்டு என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ள வகுப்பறையை நோட்டமிடுவார் தந்தை. ஒரு நாள் வகுப்பறை சுவர்களில் நான்கு அட்டைகள் ஒட்டப்பட்டிருந்தது.அதில் பல மாணவ மாணவிகளின் பெயர்கள் எழுதப்பட்டு அதற்கு நேராக ஒவ்வொரு மாதத்திற்கும் உரிய கட்டத்தில் புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தன. சில மாணவ மாணவிகள் அதிக புள்ளிகளையும் பெற்றிருந்தனர். தந்தை தன் மகன் பெயரை நான்கு அட்டைகளிலும் தேடினார். எதிலும் அவர் மகன் பெயர் இல்லை. இவ்வட்டைகள் மாணவர்களின் எதோவொரு செயலை குறிப்பதாக இருக்கலாம்.


சிறப்பாக செய்துள்ளவர்களுக்கு புள்ளிகள் அளித்து பாராட்டுகிறார்கள் போல், நம் மகன் அதில் இடம் பெறவில்லை ஆயினும் மகனிடம் இதுபற்றி கேட்க வேண்டாம். அவன் மனம் கஷ்டப்படும் என தனக்குத்தானே பேசிக்கொண்டு தந்தை சென்று விட்டார். அதன் பின் ஒவ்வொரு நாளும் அவ்வறிவிப்பு அட்டைகளை பார்ப்பது அவருக்கு வழக்கம்.


அப்படி பார்த்துக்கொண்டிருக்கையில் சில மாதங்களுக்கு பிறகு ஒரு
நாள் திடீரென அவர் மகன் பெயர் ஓர் அட்டையில் கடைசியாக எழுதப்பட்டு இருந்தது. பெயருக்கு நேராக ஓர் புள்ளியும் வைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்து மகிழ்ந்து போன தந்தை தன் மகனிடம் இந்த அட்டைகளில் பெயர்கள் எழுதி வைத்திருக்கிறார்களே! எதற்காக? என தன் மகனை கேட்டார்.


மகன் ஆசிரியர் சொன்ன வேலைகளை சரியாக செய்யாத மாணவ,மாணவியரின் பெயர்கள் அவ்வட்டைகளில் எழுதப்படும். ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை தவறுகள் செய்கிறார்களோ அதற்கேற்றவாறு புள்ளிகளும் வைக்கப்படும். அவைகள் “கரும்புள்ளிகள்” நான் கரும்புள்ளிகள் வாங்காமல் இருந்தேன். சென்ற மாதம் ஓர் தவறு செய்ததால் என் பெயரும் எழுதப்பட்டு கரும்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என சோகமாக கூறி முடித்தான். தந்தை எதுவும் பேச முடியாமல் வாயடைத்து நின்று விட்டார்.


இப்படித்தான் பெற்றோர்களின் பல எதிர்பார்ப்புகள் குழந்தைகளுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. நம் மன எண்ணமே அவர்களை எதிர் மறையாக உருவாக்கலாம். எனவே குழந்தைகள் பொருட்டு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வது தவறு. சிறுவயது முதலே “நீ இதுவாக வேண்டும்” என ஏதோவொன்றை கூறி அவர்களை வளர்ப்பது தவறு. ஏனெனில் பெரியார்களாகும் போது ஏதோவொரு காரணத்தினால் நினைத்தது போல் நடக்கவில்லையெனில் அதை அவர்களால் ஏற்று வாழ இயலாது.

*

இவ்விஷயத்தில் பெற்றோர்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்?

பரந்த உலகத்தில் இருப்பவற்றை எல்லாம் திறந்த உள்ளத்துடன் நம் குழந்தைகளுக்கு காண்பிக்க வேண்டும். உலகத்தில் இத்தனையும், இன்னும் பலவும் உண்டு. தேவையானவற்றை தேடிப் பெறு அதற்கு தேவைப்பட்ட உதவியை நாங்கள் செய்கிறோம். என உங்கள் குழந்தைக்கு கூற வேண்டும். அதுவே பெற்றோர் கடமையும். அப்போதுதான் பெற்றோரை விட பல மடங்கு உயர்ந்தவராக குழந்தைகள் உருவெடுப்பார்கள். அதற்கு மாறாக நம் அனுபவமும், அறிவும் என்ற வட்டத்திற்குள் குழந்தைகளை அடைக்கக்கூடாது..


***
thanks ராஜா
***"வாழ்க வளமுடன்"

அழகான உதடுகளுக்கு இயற்க்கை அழகு :)

முக அழகின் ழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு. உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித் தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும்.சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன.

உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்:

வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் அவை ரோஜா போல மென்மையாக மாறும்.


உதடுகளைக் கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அது தவிர்க்கப்பட வேண்டிய பழக்கம். அதனால் உதடுகள் வறண்டு போகவும், நிறம் மாறி அசிங்கமாகக் காட்சியளிக்கவும் கூடும்.


எனவே இது தவிர்க்கப்படல் வேண்டும். மற்றவர்கள் உபயோகிக்கும் லிப்ஸ்டிக்குகளைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அதனால் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இப்போது மேட் பினின் லிப்ஸ்டிக்குகள் மிகவும் பிரபலம். அவற்றில் ஈரப்பதம் குறைவு என்பதால் உதடுகளில் உள்ள இயற்கையான எண்ணெய்களை அழித்து விடும். எனவே அவற்றை எப்போதாவது தான் உபயோகிக்க வேண்டும்.


தரமானதாக இல்லாத பட்சத்தில் தினசரி லிப்ஸ்டிக் உபயோகிப்பதால் உதடுகள் கறுத்தும், வறண்டும் போகக்கூடும். எனவே தரமான லிப்ஸ்டிக்குகளாகப் பார்த்து உபயோகிக்க வேண்டும்.


லிப்ஸ்டிக் போட உபயோகிக்கும் பிரஷ்ஷை உடனுக்குடன் சுத்தப்படுத்த வேண்டும். இல் லாவிட்டால் மறுபடி அதை உபயோகிக்கும் போது தொற்றுக் கிருமிகள் பரவ வாய்ப்புண்டு. இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக உதடுகளில் உள்ள லிப்ஸ்டிக்கை சுத்தமாக அகற்றி விட வேண்டி யது மிக முக்கியம்.


லிப்ஸ்டிக்கை நேரடியாக அப்படியே தடவக் கூடாது. அது உதடுகளின் முழுமையான அழகை வெளிப்படுத்தாது.


எனவே லிப் பிரஷ்ஷின் உதவியாலேயே லிப்ஸ்டிக் போட வேண் டும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை அழகு பெறும். தினம் நெய் அல்லது வெண்ணெயை உதடுகளில் தடவி வர, அவற்றில் உள்ள வெடிப்புகள் நீங்கி, உதடுகள் வழவழப் பாகும்.


முட்டையின் வெள்ளைக் கருவோடு அரை ஸ்பூன் பாதாம் பவுடரைக் கலந்து, அத்துடன் கொஞ்சம் பாலாடையையும் சேர்த்து உதடுகளில் தடவி வர, வறண்ட உதடுகள் குணமாகும். இரண்டு டீஸ்பூன் ஒலிவ் ஓயிலுடன் இரண்டு கிராம் தேன் மெழுகும், பன்னீரும் கலந்து உதடுகளில் தடவி வந்தால் அவை சிவப்பாகவும், மென்மையாகவும் மாறும்.


கொத்தமல்லிச் சாறை உதடுகளில் தினம் தடவி வந்தால் அவை இயற்கையிலேயே சிவப்பு நிறத்தைப் பெறும்.


உதடுகளில் தடவிய லிப்ஸ் டிக்கை நீக்க பேஸ் வோஷ் அல்லது தேங்காய் என் ணெயை உபயோகிக்கலாம்.


லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்பாக உதடு களில் ஐஸ் கட்டிகளை ஒற்றி எடுத்தால், லிப்ஸ் டிக் நீண்ட நேரத்திற்கு அப்படியே இருக்கும்.


உடல்நலக் கோளாறுகள் இருந்தாலும் உதடுகள் பொலிவிழந்து காணப்படும்.
உதாரணத்திற்கு விற்றமின் ஏ குறைபாடு உள்ளவர்களுக்கு உதடுகளின் ஓரங்களில் புண்கள் மாதிரி காணப்படும். அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டாலே உதடுகள் சரியாகிவிடும்.


***
thanks இணையம்
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "