...

"வாழ்க வளமுடன்"

08 ஏப்ரல், 2011

உடல் பெருக்கக் காரணமும் தீர்வும் :)

உடல் பெருக்கக் காரணம்: * நமது உடலுக்கு ஆரோக்கியம் வந்தால் அழகும் தானாகவே வந்துவிடும். நொறுக்குத் தீனிகள் அடிக்கடி சாப்பிட்டால் உடம்பு பெருத்து விடும். கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது. *** அடிக்கடி நீர் குடித்தால்... * ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் பருகவேண்டும். இதனால் உடல் வறண்டு போகாமல் இருக்கும். அதேபோல் மாதத்திற்கு ஒருநாள் வெறும் திரவ உணவை உட்கொண்டால் உடல் உறுப்புகள் வலிமை பெறும். காலை உணவைக் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். *** சைவமா... அசைவமா? * சைவ உணவு சாப்பிடுவோரை விட அசைவ உணவு சாப்பிடுவோரே குண்டாகி வருகின்றனர். ஏனென்றால் அசைவ உணவில் கொழுப்புச் சத்துகள் அதிகமாக உள்ளன. ஆனால் அசைவ உணவில் உடலுக்குத் தேவையான புரதசத்தும், ஊட்டச் சத்தும் கிடைக்கிறது. *** எத்தனை கலோரி தேவை? * ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 1200 கலோரிகள் தேவைப் படுகிறது. அதற்கு மேல் நாம் சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் உடம்பிலேயே தங்கிவிடுவதால் நாளடைவில் பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. *** வைட்டமின் சி குறைந்தால்... * முட்டைக்கோஸ், ஆரஞ்சு, கேரட், கீரை, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் குறைந்தால் உடல் எலும்புகள் பலவீனமாகும். பற்களில் பிரச்சினைகள் ஏற்படும். *** உதடுகள் வெடித்தால்... * கல்லீரல், கோழி, மீன், பால், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி2 அதிகமாக உள்ளது. இது உடலில் குறைந்தால் உதடுகள் வெடிக்க ஆரம்பித்து விடும். *** ஆரோக்கியத்துக்கு அவசியம்! * வெண்ணை, பால், பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, எலுமிச்சை, இறைச்சி, வாழைப்பழம், அன்னாசிபழம் போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. *** சாப்பிடும்போது இடையே... * உணவு சாப்பிடும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு அதிகமாக நீர் அருந்தினால் உணவு ஜீரணம் ஆகாது. அதுபோல் உடலுக்குத் தேவைப்படும் தாதுக்கள், வைட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்ளாது. *** தூங்கி எழுந்தவுடன்... * தூங்கி எழுந்தவுடன் விடியற்காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் நீர் குடிப்பது உடல் ஆரோக்கியம் பெறும். இதனால் மலச்சிக்கலும் ஏற்படாது. மேலும் சிறுநீர் கற்களும் ஏற்படாது. *** நீர் குடிக்காவிட்டால்... * உடற்பயிற்சி செய்பவர்கள் வேர்வையாக வெளியிட்ட நீரை ஈடுகட்ட தாராளமாக நீர் அருந்துவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்புண்டு! அதேபோல், தக்காளி, பால், உப்பு போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். *** வேப்பிலையின் நன்மை! * வேப்பிலைக் கொழுந்து கசக்காது! இதில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. வேப்பிலைக் கொழுந்தை சுத்தம் செய்து துவையல் அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். விஷக் கிருமிகளைக் கொல்லும். *** thanks மொதமேது *** "வாழ்க வளமுடன்"

கிழக்கு கடற்கரை சாலை(ECR) ஒரு அழகிய ஆபத்து...வயதுப்பெண்களுக்கான எச்சரிக்கை...

நீங்கள் சென்னையில் வசிப்பவரா? உங்கள் வீட்டில் வயதுக்கு வந்த பெண் பிள்ளை இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்காகத்தான்...என் வீட்டு பெண் ஒரு போதும் நான் சொன்ன சொல்லை தட்டியது இல்லை...பொய் சொல்லிவிட்டு ஊர் சுற்றியதில்லை.... அப்ப பையனுக்கு இல்லையா? அவர்களுக்கும்தான்... ஆனால் மிக முக்கியமாக பெண்களுக்கு.... * எங்க வீட்டு பசங்க..நான் கிழித்த கோட்டை தாண்டுவதே இல்லை... அவளுக்கு நான் என்றால் உசிர் என்று நீங்கள் உங்கள் பெண்ணை விட்டுகொடுக்காமல் இருந்தால்... சந்தோஷம்....ஆனால் நாடடில் நடப்பதை தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது அல்லவா? ஒருவேளை உங்கள் பெண் அப்பாவியாக இருந்தால் இந்த செய்தியை கதை போல் சொல்லி அவளுக்கு விஷயத்தின் தீவிரத்தை புரிய வைப்பது நலம்.... * நேற்று சென்னை மகாபலிபுரத்தில் உள்ள லாட்ஜிகளில் நடந்த ரெய்டில்...25 காதலர்கள் பிடிபட்டு இருக்கின்றார்கள்...இதில் கள்ளகாதல்களும் அடக்கம்... போலிசார் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்து இருக்கின்றார்கள்...எனக்கு தெரிந்து என்னதான் எச்சரித்து அனுப்பி வைத்தாலும் நேற்று நல்ல கலெக்ஷன் பார்த்து இருக்ககூடும் என்பது என் கணிப்பு..... * உங்க மேல விபச்சார வழக்கு போட போறேன்... நீங்க இரண்டு பேரும் விபச்சாரம் செஞ்சிங்கனன்னு உங்க மேல கேஸ்போட போறேன் என்று ஒரு வார்த்தை சொன்னாலே.. போதும் நிச்சயம் அடித்து பிடித்து பணத்தை ரெடி செய்து சொன்ன தொகையை கட்டி விட்டுதான் அந்த ஜோடிகள் வந்து இருக்க முடியும்.... அல்லது நேர்மையாக எச்சரித்து அனுப்பி இருக்கவும் வாய்ப்பு இருக்கின்றது...ஆது போல் நடக்க 2 சதவீதம் மட்டுமே வாய்ப்பு... * 5 வருடத்துக்கு முன் காதலர்கள் அதிகம் நாடுவது சென்னை பீச்...மற்றும் பெசன்ட் நகர் பீச், கிண்டி சிறுவர் பூங்கா போன்றவைதான்.. சென்னையில் வாகன பெருக்கம் அதிகமானதால் காதலர்களும் இட்ம் மாற தொடங்கினர்.... இங்கு இருந்து 60 கீலோமீட்டர்... தெரிந்தவர்கள் யாரும் வர வாய்ப்பில்லை.. அதனால் மகாபலிபுரம் காதலர்களின் வேடந்தாங்கல் ஆகி வெகு நாட்கள் ஆகின்றது.... * இதில் கிழக்கு கடற்கரை சாலையில் பயணிக்கும் போது தனிமையான சவுக்கு தோப்புகளில் இவர்கள் வாகனத்தை நிறுத்தி ரிப்பிரஷ் செய்து கொள்ள தொப்பின் உள்ளே போகும் போது.. அதை பல ஜோடிகண்கள் நோட்டம இடுகின்றன....பல கடற்கரையோர கிராமத்து வெட்டி இளைஞர்களின் காம பசிக்கு காதலன் கண் முன்னே பல காதலிகள் இரையாவது தொடந்து நடந்து கொண்டு இருக்கும் ஆப் த ரெக்கார்ட் கொடுமை... * ஒரு காதலன் இரண்டு மாதங்கள் மந்திரித்து விட்டது போல் இருக்க... அவனுக்கு புல்லாக தண்ணி ஏற்றி விட்டு விஷயத்தை கேட்க அழுதுக்கொண்டே தன் காதலி தன் கண்முன் கடற்கரை ஓர சவுக்கு தோப்பில் நான்கு பேரால் வன்கொடுமைக்கு அவனது காதலி உள்ளாக்கபட்டு இருக்கின்றார்...யோசித்து பாருங்கள் அது எவ்வளவு கொடுமை என்று....இதில் ஹைலைட் ஆன விஷயம் என்னவென்றால்... அந்த பெண்ணை சின்னா பின்ன படுத்தி விட்டு கடற்கரை மணலை அள்ளி அந்த பெண்ணின் பெண்உறுப்பில் கொட்டி விட்டு போயிருக்கின்றார்கள் என்றால் அவர்கள் எவ்வளவு வக்கரம் நிறைந்தவர்கள் என்று யோசித்து பாருங்கள்.... அதுமட்டும் அல்ல அந்த பெண் அணிந்து இருந்த நகைகளை பிடிங்கிகொண்டு அனுப்பி இருக்கின்றார்கள்... * ந்த சம்பவங்கள் காவல் துறை கவனத்துக்கு வரவேயில்லை.... காதலி வீட்டில் வழிப்பறியில் நகைகள் விட்டதாக சொன்னாலும்... இன்னும் இவன் முகத்தில் அவள் விழிக்க மறுக்கின்றாளாம்... இது போல் கவுரவம் கருதி வெளி வராத விஷயங்கள் நிறைய... அதுதான் அவர்கள் திரும்ப திரும்ப அந்த தப்பை பண்ண வைக்கின்றது... தெரியத்துக்கு வழி கோலுகின்றது.. * தனியாக ஒருவனிடம் ஒரு பெண் மாட்டினால் கூட சேதம் குறைவாக இருக்கும்... அதுவே நான்கு பேர் எனும் போது... அது உச்சகட்டத்தை அடைந்து விடும்..அவனை விட நான் ஏதாவது புதுமை செய்கின்றேன் பார். என்று கும்பலில்.... தன்னை முன்னிலை படுத்த எதையும் செய்வார்கள்.. அவர்கள் குடி போதையில் இருந்து விட்டால்..... கேட்கவே வேண்டாம்...வக்ரம் எல்லை மீறும்.... * நானும் என் மனைவியும் பாண்டிசேரிக்கு மாலை 5 மணிக்கு கிளம்பினோம்.. மயாஜாலை எங்கள் வாகனம் கடக்கும் போது மணி 5,45... அதிலிருந்து ஒரு 20 கிலோமீட்டரில் இது பக்கம் ஒரு சின்ன ஓய்வு இடத்தை சின்ன பார்க் போல செய்து வைத்து இருப்பார்கள்... அங்கிருந்து பார்க்கும் போது மிக ஆழகாக கடல் இருக்கும்..... * மகாபலிபுரம் அல்லது பாண்டிக்கு போகும் வாகனங்கள் அந்த இடத்தில் நிறுத்தி விட்டு இளைப்பாறி விட்டு, ஒரு டீ குடித்து விட்டு இயற்கை உபாதைகளை முடித்துக்கொண்டு செல்ல ஒரு அற்புதமான இடம்.... அதன் எதிரில் சுனாமி அலை தாக்காம்ல் இருக்க சவுக்கு நட்டு இருந்தார்கள்... அது ஆளுயரத்துக்கு வளர்ந்து இருந்தது...6 மணி ஆகி இருட்டும் நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அங்கொன்றும் ,இங்கொன்றும் ஆக மனித தலைகள் தெரிய... சொன்னால் நம்ம மாட்டிர்கள்... ஒரு 50 ஜோடிகள் மேட்டை நோக்கி டிராய் படத்தில் வரும் கப்பல்கள் போல் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.... * காதலர்களாக பைக்கில் பறந்து... போக்குவரத்து போலிசாரிடம் மாட்டிக்கொண்டு... அவர்கள் கேள்வி மேல் கேள்வி கேக்க.... அழுதுக்கொண்டும், கதறிகொண்டும் இருக்கும் பலரை அந்த பக்கம் கல்லூரிக்கு போகும் போது பார்த்து இருக்கின்றேன்... * இவர்கள் எல்லாம் காதலர்களே அல்ல என்று நாம் ஒதுக்கி விட முடியாது...நாம் ஒன்று பத்து அடி தூரத்தில் இருந்து கொண்டு பிரான நாதா என்று வசனம் பேசும் காலத்தில் இல்லை.... பத்தாம் வகுப்பு கிராமத்து பெண் கழிவரையில் பிள்ளை பெற்றுகொள்ளும் காலம் இது என்பதை மறவாதீர்கள்.... * உங்கள் வீடோ அல்லது எதிர் வீடோ யார் வீட்டு பெண்ணாக இருந்தாலும்... ஒரு செய்தியை சொல்வது போல் சொல்லி கிழக்கு கடற்கரை சாலையை பற்றி ஒரு எச்சரிக்கை மணியை அடித்து வைப்பது நல்லது.... *** thanks thendral25 *** "வாழ்க வளமுடன்"

வேலைக்கு நல்ல Resume தயாரிப்பது எப்படி?

படிக்கறது எதுக்கு.. அறிவை வளர்த்துக்கன்னு சிலபேரு சொல்வாங்க. அது உண்மைதான். அதேநேரம் படிப்புக்கு செலவழிக்கிற காசையும் திரும்ப எடுக்கனுமே.. * ஒரு இண்டர்வியூவுக்கு போறதுங்கறது, நம்மளை நாமளே மார்க்கெட்டிங் பண்றதுமாதிரி. ஒருத்தர் நம்மக்கிட்ட ஒரு எலெக்ட்ரானிக் பொருளை விற்குகுறாரன்னு வைங்க. பார்த்த உடனே வாங்கிடுவோமா..? எவ்ளோ நாள் உழைக்கும், நல்லா ஓடுமா, வாரெண்டி இருக்கா, அப்படீன்னு எத்தனை கேள்வி கேப்போம் ? அது மாதிரிதான் நம்மளை வேலைக்கு எடுக்கற கம்பெனியும. நாம நல்லா வேலை செய்வோமா, கம்பெனிக்கு நம்பிக்கையா இருப்போமா அப்படின்னு பல மேட்டர்களையும் பார்த்துதான் நமக்கு வேலையும், சம்பளமும் தராங்க. * பொருளை கடைக்காரர் நம்மக்கிட்ட விற்பதற்கு முதல் படி, ஷோரூம் நல்லாருக்கனும், நல்ல ஏ.சி. இருக்கனும், கடை பார்க்க நல்ல லுக்கா இருக்கனும். அப்பதானே கடைக்குள்ள நாம போவோம். அதுமாதிரி, நம்ம ரெஸ்யூம் சும்மா 'நச்'னு இருந்தாத்தான், இந்த கேண்டிடேட்டை கூப்புடலாமான்னு யோசிப்பாங்க. மொக்கையா ஒரு ரெஸ்யூமை அனுப்பிட்டு, 'என்னடா இந்த கம்பெனிக்காரன் இன்னும் கூப்புடலையே'னுன்னு தேவுடு காக்குறதுல அர்த்தமில்லை. * மேட்டருக்கு வருவோம். எல்லா ப்ரெஷ்ஷர் ரெஸ்யூமும் ஒரே மாதிரி இருக்கனும்னு அவசியம் இல்ல. ஒரு நல்ல 'சரக்கான' ரெஸ்யூம, அது பிரெஷ்ஷர் ரெஸ்யூமா இருந்தாலும் சரி, எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்தாலும் சரி, கில்லியா இருக்கும். இண்டர்வியூவுக்கு முன்னாலயே, நம்மளோட நேர்த்தியான ரெஸ்யூமால இம்ரஸ் அள்ளிடலாம். * ஒரு நல்ல ரெஸ்யூம்ல இருக்க வேண்டிய மேட்டர்ஸ். 1. உருப்புடியான "Objective" 2. நல்ல டேபிள்ல அழகா அலைன் செய்யப்பட்ட "Qualification" டீட்டெயில்ஸ் 3. நேரடியா என்ன தெரியும், என்ன தெரியாதுன்னு சொல்ற "Skills and Experiences" 4. ஏற்கெனவே வேலை பார்த்திருந்தா அந்த "Work History" 5. ஏதாவது நல்ல "Trainings" , அப்புறம் "Education Extra" மேட்டர்ஸ் 6. படிப்ப விட வேற எதுவும் தெரிஞ்சிருந்தா "Extra Carricular Activities", "Interesting Hobbies" 7. பர்ஸனல் டீட்டெயில்ஸ் - டாடி மம்மி பேரு, மெரிட்டல் ஸ்டேட்டஸ், பர்த் டே, பாஸ்போர்ட், போன் நம்பர்ஸ், அட்ரஸ் * அப்புறம் ரெஸ்யூமை வித்யாசப்படுத்துறேன்னு ஏதாவது மொக்கையா எழுதி வைக்காம, நீட் அண்ட் க்ளீனா இருக்கமாதிரி பார்த்துக்கோங்க. * பாஸ்போட் சைஸ் கலர் போட்டோவை ஸ்கேன் பண்ணி ரெஸ்யூமுக்கு மேலே டாப்புல ஒரு கட்டம் கட்டி வச்சீங்கன்னா நல்லா இருக்கும். ரெஸ்யூம்ல எதுவும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் வராம‌ பார்த்துக்கோங்க. * ரெஸ்யூமை பார்மேட் பண்ணும்போது இடம் விடவேண்டிய இடங்களில் ஸ்பேஸ் பாரை அழுத்தி அழுத்தி இடம் விட்டீங்கன்னா, திரும்ப ரெஸ்யூமை வேற ரெஸல்யூஷன் இருக்க கம்ப்யூட்டர்ல ஓப்பன் பண்ணி பார்த்தா ரொம்ப மொக்கையா இருக்கும். அதனால டேப் (TAB) கீயை யூஸ் பண்ணுங்க. எஜுக்கேஷனல் குவாலிபிகேஷனுக்கும், ஸ்கில்ஸுக்கும் எம்.எஸ். வேர்ட்ல இருக்க டேபிள் யூஸ் பண்ணுங்க, நல்லா இருக்கும். ஒரு சில கம்பெனிகள் எல்லா செமஸ்டர் மார்க்கும் கேப்பாங்க. அதனால செமஸ்டர் வைஸ் மார்க் டிஸ்ப்ளே பண்ணுங்க. * ஏரியல், டைம்ஸ் நீயூ ரோமன், வெர்டனா மாதிரி காமன் பாண்ட்ஸ் யூஸ் பண்ணுங்க. உங்க ரெஸ்யூமுக்கு ஒரு பிளஸண்ட் லுக் கிடைக்கும். அதிகபட்சமா ரெண்டு பக்கம் இருந்தா போதும். அதிக பக்கம் இருக்க ரெஸ்யூமை ரிவ்யூ பண்றவங்களுக்கு / ஹெச்.ஆர் டீமுக்கு சலிப்பை வரவெச்சுரும். ஒவ்வொரு பக்கத்துலயும் பேஜ் நெம்பர் வர்ரமாதிரி பார்த்துக்கோங்க. * 'ரெபரன்ஸ்' அப்படீன்னு கடைசியில ஒரு Section போட்டு, அதுல காலேஜ் ஹெச்.ஓ.டி. பேரை போடுறது, அமெரிக்காவுல இருக்க மாமா பையன் பேரை போடுறது எல்லாம் அவுட் ஆப் பேஷன். அதை எல்லாம் இப்ப போட்டு ரெஸ்யூமை கலீஜ் பண்ணாதீங்க. அப்புறம் கடைசியா கவரிங் லெட்டர் அப்படீன்ற காண்ஸெப்ட் இப்ப இல்லாம போயிருச்சு. அதனால அதெல்லாம் வேலை மெனக்கட்டு டைப்பிக்கிட்டு இருக்காதீங்க. * Your Resume is a Visiting Card for your Job Search ! சும்மா 'நச்' னு ஒரு ரெஸ்யூமை போட்டு உங்களோட கேரீயரை 'கில்லியா' ஆரம்பிங்க. வாழ்த்துக்கள்! *** thanks thendral25 *** "வாழ்க வளமுடன்"

நீண்ட நேரம் கணிணி முன் அமர்ந்து வேலை செய்பவருக்கு ரிலாக்ஸ் டிப்ஸ் !!!


*****


*** நீண்ட நேரம் கணிணி முன் அமர சரியான முறை..! உங்களுக்கு நீண்ட நேரம் 'பொட்டிதட்டும்' வேலையாலோ... அல்லது 'ஒரு பரபரப்பு பதிவு' போட்டுவிட்டு அதற்கு எவரேனும் பின்னூட்டமிடுகிறாரா... என எந்நேரமும்...'கணிணித்திரையும் கண்ணுமாய்' காத்திருந்து, பின்னூட்டமிட்டவர்களிடம் 'விசைப்பலகையும் விரல்களுமாய்' கடுமையான விவாதம் புரிவதாலோ... கண் பார்வை பிரச்சினை, முதுகு வலி, தோள் புஜம் நோவு, முழங்கால் வலி, மணிக்கட்டு வீக்கம், பாதச்சோர்வு, தசைப்பிடிப்பு, தலைவலி, இடுப்புவலி ...( ..போதும்... போதும்... என்கிறீர்களா..? ) ...சரி, இதெல்லாம் வராமல் இருக்க... அல்லது தாமதமாக வர...(!?) அல்லது வந்த வலி குறைய... வேண்டுமானால், பின்வரும் ஆலோசனைகளை செயல்படுத்தி பாருங்களேன்..! 1# கணிப்பொறியின் திரையை பார்வை மட்டத்திலும் பார்வைக்கு நேர்க்கோட்டிலும் அமைக்க வேண்டும்.

*

2# திரைக்கும் உங்கள் கண்களுக்கும் இடையேயான தூரம் 16"-ஆக இருக்க வேண்டும்.

*

3# சி.பி.யு. வை கை எட்டும் தூரத்தில் வைக்கும் அதேநேரம் திரை அமைந்திருக்கும் மேசை மேல் வைக்காமல் வலப்பக்கம் மேசைக்கு கீழே வைக்கவேண்டும். ( இது வலது கை பழக்கம் உள்ளவர்களுக்கு ; இடது கை பழக்கம் உள்ளவர்கள் இடப்பக்கம் வைக்கலாம் )

*

4# உங்கள் முழங்கால்கள் மேசைக்கு கீழே வசதியாக அமையுமாறு மேசை உயரம் இருத்தல் அவசியம். அல்லது அதற்குத்தகுந்த உயரத்துக்கு உங்கள் நாற்காலியை உயர்த்தியோ தாழ்த்தியோ கொள்ள வேண்டும். கால்களை தொங்க விடாமல் ( பாதத்தின் விரல்கள் பாகம் உயர்ந்தும் குதிகால் பாகம் தாழ்ந்தும் உள்ள ) ஏதாவது ஒரு நிலையான கட்டையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

*

5# விசைப்பலகை, நாற்காலியின் கைப்பிடியால் முட்டுக்கொடுக்கப்பட்ட முழங்கைக்கு கீழ்மட்டத்திலும் அதன்மூலம் தோள்களுக்கு அழுத்தம் தராத வகையிலும் இருத்தல் வேண்டும்.

*

6# விசைப்பலைகையின் முன் புறம் சற்று தூக்கி இருக்கும் படி அமைத்துக்கொள்ள வேண்டும்.

*

7# முழங்கை கோணம் தோராயமாக 90° இருக்கும்படி அமைத்து, மணிக்கட்டுகள் முழங்கைக்கு கிடைமட்டமாக அமையுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

*

8# 'மவுசை' (இதற்கு என்ன தமிழ்ப்பெயர்?) விசைப்பலகை மட்டத்திலே அதற்கு முடிந்தவரை நெருக்கமாக வைக்கவேண்டும்.

*

9# முதுகுவலி அவஸ்தை வராமல் இருக்க, எப்போதுமே முதுகை கணிப்பொறி இயக்கத்திற்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சுழல் நாற்காலியுடன் ஒட்டி சாய்த்து அதே நேரம் முதுகு வளையாமல் செங்குத்தாக இருக்கும் படி அமர வேண்டும்.

*

10# ஒருமுறை இந்த அமர்வில் இருந்து எழுந்துவிட்டால், உடனே மீண்டும் அமர்ந்துவிடாமல், (சிறுது நேரம் நின்றுவிட்டோ, ஒரு சிறு உலா போய்விட்டோ...) அடுத்த அமர்விற்கு குறைந்தது 20 வினாடிகளிலிருந்து 2 நிமிடங்கள் வரை இடைவெளி விட்டு மீண்டும் அமர்தல் நல்லது. *** நன்றி முஹம்மத் ஆஷிக்,ugine நன்றி Mohamed ***

"வாழ்க வளமுடன்"


தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?

ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால் மூழ்கிவிடுகிறது. ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல் தண்ணீரில் மிதக்கிறதே. மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால் செய்யப்பட்டாலும், மிகப் பெரிய கப்பல்கள் இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால் அந்தக் கப்பல்கள் மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன? * கப்பல் தண்ணீரில் இருக்கும்போது, அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின் குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும். * 1000 டன் எடையுள்ள கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை, ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள். தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. * செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல் மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார். அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் "யுரேகா, யுரேகா' (நான் கண்டுபிடித்துவிட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார். * மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால், நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம். ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும். * இதற்கு எடுத்துக்காட்டு, 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது. அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது. ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது. * புவியீர்ப்பு சக்தியின் காரணமாக அதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது. அதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது. மனிதர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும். மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்க மாட்டோம். * இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள்ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது. கப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும். * தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும். அப்பொழுது பலூன் பறக்காது. *** நன்றி : தினமணி *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "