இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நாம் முட்டை உட்கொள்வதால், எடை கூடி, ரத்தத்தில் கொலஸ்டிராலை அதிகப்படுத்தும் என்ற கருத்து, மக்களிடையே உள்ளது. இது தவறான கருத்தாகும்.
*
ஒரு நாளைக்கு மனித உடலில் 2 ஆயிரம் மில்லி கிராம் கொலஸ்டிரால் உற்பத்தியாகிறது. ஆனால் முட்டையில் இருப்பது 275 மில்லி கிராம் கொலஸ்டிரால் மட்டுமேயாகும்.
*
இந்த மொத்த கொலஸ்டிராலில் 33.5 சதவீதம் உறைந்த கொழுப்பும் 66.5 சதவீதம் உறையாத கொழுப்பும் உள்ளன.
*
இதில் 33.5 சதவீதம் உள்ள உறைந்த கொழுப்பு தான், உடலுக்குத் தீமை செய்யும் கொழுப்பாகும். இதனை உட்கொள்ளும் போது, இதன் அளவைப் பொறுத்து உடலில் உள்ள கொலஸ்டிரால் உற்பத்தியின் அளவு குறையும்.
*
உணவில் உட்கொள்ளும் கொலஸ்டிராலை விட, ரத்தத்தில் உற்பத்தியாகும் கொலஸ்டிராலே உடல் நலனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
*
இந்த உற்பத்தி மரபணுக்களைச் சார்ந்துள்ளது. எனவே இது தனி நபர்களைப் பொறுத்து அமைகிறது.
***
thanks 'தினகரன்'
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக