...

"வாழ்க வளமுடன்"

03 நவம்பர், 2010

உயிர் காக்கும் முதலுதவி :)

உயிர் காக்கும் முதலுதவி - எப்படி செய்ய வேண்டும்
(நாம் ஒவ்வொருவரும் தெரிந்துவைத்து கொள்ள வேண்டிய விஷயம்)CPR-Cardio Pulmonary Resusicitation எனப்படும் உயிர் காக்கும் முதலுதவி குறித்து அனைவரும் அறிந்திருத்தல் அவசியம். நினைவிழந்து காணப்படுபவர் ஓரிரு நிமிடங்களில் சுய நினைவிற்கு திரும்பாவிட்டால் Mouth to Mouth Respiration மற்றும் Chest compressions அடங்கிய CPR-Cardio Pulmonary Resuscitation எனப்படும் உதவி மிக அவசியம்.

***

ஒருவர் தனது சுய நினைவினை கீழ்கண்ட நிலைகளில் இழக்கலாம்1. இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவு/கூடும் போது


2. இரத்த அழுத்தம் குறைவு/ கூடும் போது


3. உடலின் வெப்பநிலை குறைவு/கூடும் போது


4. விபத்துகளினால் ஏற்படும் அதிக இரத்த இழப்பின் போது


5. தலைக்காயத்தினால் ஏற்படும் இரத்தக் கசிவின் போது


6. அதிர்ச்சியின் போது ( in a state of shock)


7. வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியினால் அதிக நீர் சத்து வெளியேறும் போது


8. மின்சாரம் உடலில் பாயும் போது (Electric Shock)


9. இருதய நோய்களினால் (உதாரணத்திற்கு CAD-Coronary Artery Disease போன்ற மாரடைப்பு ஏற்படுத்தும் வியாதிகளால் )


10. CPR செயல்படுத்துதல் தேவைதானா என்பதற்கு சிலவற்றை ஆரம்பத்தில் நாம் உறுதிப்படுத்திக் கொள்வதும், சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம்.1. 1ஆபத்திலிருப்பவரை சற்றே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்உதாரணத்திற்கு மின்சார கசிவு மற்றும் தீ விபத்துகளின் போது மின்சார கம்பிகள், பெட்ரோல் போன்ற பின்விளைவுகளை ஏற்படுத்தும் இடங்களிலிருந்து அவரை அப்புறப்படுத்துவது (அவை உதவியளிக்கும் நமக்கும் எமனாக அமையலாம்)12. இரத்தக்கசிவை நிறுத்துதல்(இருக்குமானால்)13. நினைவிருக்கிறதா என உறுதி செய்தல்14. சுவாசிக்கிறாரா என்பதை நெஞ்சின் விரிவை வைத்தும் (Chest expansion), மூக்கு துவாரத்தினருகில் செவி மற்றும் உள்ளங்கையின் பின்புறத்தை வைத்தும் உறுதி செய்தல்15. உடலில் அசைவு ஏதுமிருக்கிறதா என உறுதி செய்வது.


***


சுவாசிக்கவில்லை, உடலில் அசைவே இல்லை என்றால் CPRஐ செயல்படுத்துவது மிக முக்கியமானது. இவற்றை உறுதி செய்தவுடன் செய்ய வேண்டியவை
அருகில் யாரேனும் இருப்பார்களெனில் உதவிக்கு அழைப்பது; ( தனிமையாகவும் CPR ஐ செயல்படுத்தலாம்)


ஆம்புலன்சுக்கு உடனடியாக தகவல் கொடுப்பது.


இதன் பின்னரே CPR ஐ செயல்படுத்த வேண்டும்.


CPR ABC என்ற வரிசைக் கிரம அடிப்படையில் அமைந்த ஒரு கோட்பாடு.அதாவது A=Airway B=Breathing C=Circulation


*


முதலில்-Airway
சுவாசப்பாதை தடையில்லாமல் சீராக இருக்கிறதா என பார்த்தல் அவசியம்.


நினைவிழந்த நபரை சரிசமமான தரையில் அல்லது தட்டியில் நேராக கிடத்தி அவரது முன்னந்தலையையும் தாடையையும் பிடித்து தலையை நிமிர்த்த வேண்டும். இதனால் சுவாசப் பாதையை அடைத்துக்கொண்டிருக்கும் அவரது நாவு முன்பக்கமாக விழுந்து சுவாசப்பாதையை சீராக்கும்.


*

பின்னர் மூக்கின் துவாரம் மற்றும் வாய் சுவாசத்திற்கு தடையில்லாமல் சீராக இருக்கிறதா என உறுதிப்படுத்த வேண்டும். (ஏதேனும் பொருள்களினால் மூக்கு அடைபட்டிருந்தால், வாந்தி அல்லது பிற பொருள்களினால் வாய் நிறைந்திருந்தால் அவை அகற்றப்பட வேண்டும்.)


**


இரண்டாவதாக-Breathing
சுவாசப்பாதையை சரிசெய்த பின்னும் சுவாசம் சரியாகவில்லையெனில் பாதிக்கப்பட்ட நபரின் மூக்கினைப் பிடித்துக்கொண்டு வாயினை அவரது வாயின் மீது வைத்து( Mouth to Mouth Respiration) ஐந்து நொடி இடைவெளிகளில் இருமுறை வேகமாக காற்றை ஊத/உள்செலுத்த வேண்டும்.


**


மூன்றாவதாக-Circulation


ஒருவர் நினைவிழந்திருக்கும் சமயத்தில் இருதயம் சில நேரம் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ செயலிழந்து அதினிமித்தம் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது. மணிக்கட்டில் நாடித்துடிப்பு இல்லையென்றால் குரல் வளையின் இருபுறமும் நாடி துடிப்பினை(Carotid Pulse) நோக்குவதன் மூலம் இரத்த ஓட்டம் சீராக இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ளலாம்.


நாடித்துடிப்பு இல்லையெனில் நெஞ்சின் மீது அழுத்தி (Chest Compressions) இருதயத்திற்கு அதிர்ச்சி கொடுப்பதன் மூலம் அதனை மீண்டும் செயல்பட வைத்து இரத்த ஓட்டத்தை சீர்செய்யலாம்.

**

Chest Compressions எப்படி அளிப்பது

விலா எலும்புகள் வந்து குவிகின்ற நெஞ்சின் மைய எலும்பின் (Sternum) இறுதிப் பகுதியில் ஒரு உள்ளங்கையை வைத்து அதன் மேல் அடுத்த கையையும் வைத்து 30 முறை தொடர்ச்சியாக அழுத்த வேண்டும்.

**

1-8 வயது வரையுள்ள சிறுவர்களுக்கு ஒரு கையினாலும் (30 முறை) , ஒரு வயதிற்கும் குறைவுள்ள குழந்தைகளுக்கு இரு விரல்களாலும் (5 முறை) அழுத்தினால் போதுமானது.இவற்றின் பின்னரும் நினைவோ, சுவாசமோ, நாடித்துடிப்போ திரும்பவில்லை என்றால் மீண்டும் இருமுறை வாயோடு வாய் வைத்து சுவாசமளித்து நெஞ்சின் மீதான அழுத்துதலையும் மேற்கூறியபடி தொடர வேண்டும். இப்படியாக மருத்துவக்குழு வரும் வரை அல்லது மருத்துவமனையில் சேர்க்கும் வரை அல்லது மரித்து விட்டார் என முடிவு செய்யும் வரை செய்தல் அவசியம்.


***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"

பிரிட்ஜ் பராமரிப்பு!1. . பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும்.

*

2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும்.

*

3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும்.

*

4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும்.

*

5. வெளியூர் செல்லும்போது ஃபிரிட்ஜைக் காயவைத்துச் செல்ல வேண்டும். மாதமிருமுறை ஃபிரிட்ஜுக்கு விடுமுறை கொடுக்கவும்.

*

6. பிரீசரில் உள்ள ஐஸ் தட்டுகள் எடுக்க வரவில்லை எனில் கத்தியைக் கொண்டு குத்தக் கூடாது. அதற்குப் பதில் ஒரு பழைய காஸ்கட்டைப் போட்டு அதன்மேல் வைத்தாலோ அல்லது சிறிது கல் உப்பைத் தூவி வைத்து அதன் மேல் ஐஸ் தட்டுக்களை வைத்தாலோ சுலபமாக எடுக்க வரும்.

*

7. பிரிட்ஜ்ஜிலிருந்து வித்தியாசமாக ஓசை வந்தால் உடனடியாக ஒரு மெக்கானிக்கை அழைத்து சரி பார்க்க வேண்டும்.

*

8. அதிகப்படியான பொருட்களை அடைத்து வைக்கக் கூடாது. ஒவ்வொரு பொருளுக்கும் காற்று செல்வதற்கு ஏற்ப சிறிது இடைவேளி விட்டு வைக்க வேண்டும்.

*

9. பிரிட்ஜுக்குக் கண்டிப்பாக நில இணைப்புகள் (Earth) கொடுக்க வேண்டும்.

*

10. பிரிட்ஜை காற்றோட்டம் உள்ள அறையில் மட்டுமே வைக்க வேண்டும். பிரிட்ஜின் உள்ளே குறைந்தப் பொருள்களை வைத்தால் மின்சாரம் குறைவு என்பது தவறான கருத்தாகும்.
11. பிரிட்ஜின் உட்பகுதியை சுத்தம் செய்யும் போது கண்டிப்பாக சோப்புகளை உபயோகப்படுத்தக் கூடாது. இது உட்சுவர்களை உடைக்கும். மாறாக சோடா உப்பு கலந்த வெந்நீரை உபயோகிக்கலாம்.

*

12. உணவுப் பொருட்களைச் சூட்டோடு வைக்காமல் குளிர வைத்த பின்தான் வைக்க வேண்டும். வாழைப்பழத்தை எக்காரணத்தை கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது.

*

13. பச்சைக் காய்கறிகளை பாலிதீன் கவர்களில் போட்டு வைக்கவும். பிரிட்ஜில் வைக்கும் பாட்டில்களை அடிக்கடி சுத்தம் செய்து வெய்யிலில் காய வைத்து உபயோகிக்க வேண்டும்.

*

14. பச்சை மிளகாய் வைக்கும்போது அதன் காம்பை எடுத்து விட்டுத் தான் வைக்க வேண்டும். பிரிட்ஜில் வைக்கும் உணவுப் பொருட்களை மூடி வைக்க வேண்டும்.

*

15. பிரிட்ஜிலிருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்க அதனுள் எப்போதும் சிறிது புதினா இலையையோ, அடுப்புக்கரி ஒன்றையோ அல்லது சாறு பிழிந்த எலுமிச்சம் பழ மூடிகளையோ வைக்கலாம்.

*

16. கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை இவைகளை ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்தால் ஒரு வாரத்திற்கு பசுமை மாறாமல் இருக்கும்.

*

17. பிரிட்ஜின் காய்கறி ட்ரேயின் மீது ஒரு கெட்டித் துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் வெகு நாள் அழுகிப் போகாமல் இருக்கும்.

*

18. சப்பாத்தி மாவின் மேல் சிறிது எண்ணெயைத் தடவி பின் ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்தால் நான்கு நாட்கள் ஃபிரஷாக இருக்கும்.

*

19. பொரித்த பப்படம், சிப்ஸ், பிஸ்கட் போன்றவை அதிக நாட்கள் முறுமுறுப்பாக இருக்க வேண்டுமானால் அவற்றை ஒரு பாலிதீன் கவரில் போட்டு ஃபிரிஜ்ஜில் வைக்க வேண்டும்.

*

20. அதிக ஸ்டார்கள் உள்ள பிரிட்ஜை வாங்கினால், மின்சாரத்தை அதிக அளவு மிச்சப்படுத்தும்.


***
thanks keetru
***"வாழ்க வளமுடன்"

நம் உடலில் உள்ள முக்கிய தகவல்கள்!1. இதய நோய் அறிய ஒரு துளி இரத்தம் போதும்.

*

2. இதயம் துடிக்கும் போது ஏற்படும் அழுத்தத்தைக் கொண்டு 30 அடி தூரத்திற்கு இரத்தத்தைப் பீய்ச்சி அடிக்கலாம்.

*

3. இரத்தத்தில் உப்பு குறைந்தால் வயிற்றுச் சதை பிடித்து வலி ஏற்படும். இரத்த அழுத்தம் குறையும். இரத்தத்தில் கழிவு பொருள்களின் அளவு அதிகரிக்கும், இதனால் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு செயலிழந்து விடுகின்றன.

*

4. விக்கலை நிறுத்த ஒரு டம்ளர் வெந்நீர் குடித்தால் போகும். விக்கலுக்கு மருந்து, மாத்திரை சாப்பிடத் தேவையில்லை.

*

5. நமது உடலிலேயே மிகவும் வலிமை மிகுந்த தசையை நாக்கு தான் பெற்றிருக்கிறது.

*

6. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட அதிகமான பாக்டரியாக்கள் நம் வாயில் உள்ளன.

*

7. நம் உடலிலேயே மிகவும் உறுதி வாய்ந்த உறுப்பு நமது பற்களின் மேற்புறம் உள்ள எனாமல் (Enamel) என்ற பற்கூடு ஆகும்.

*

8. நமது உடலிலே மிகுந்த பரப்பளவை உடைய, பெரிய உறுப்பு தோல்.

*

9. காப்பி அருந்துவது பல் சொத்தையைத் தவிர்க்கும். காப்பியில் க·ப்பீயின் (Caffeine) என்ற உற்சாகப் பொருள் இருப்பது அனைவருக்கும் தொ¢ந்த ஒன்று. காப்பியில் உள்ள பொருள்களில் டிரைகொனெல்லன் Triconelline என்ற ஒரு கசப்பான பொருளும் உள்ளது.
காப்பியின் கசப்புக்கு இது தான் காரணம்.

*

10. இப் பொருளைக் கண்டால் வாய் மற்றும் பற்களில் வளரும் சொத்தை உண்டாக்கும் பாக்டரியாவுக்கு சிம்ம சொப்பனம். எனவே காப்பியை பால் கலக்காமல் (Black Coffee) மிதமான அளவில் அருந்துவது பல் சொத்தையை உண்டாக்கும் பாக்டரியாவின் Strepto coccus mutans வளர்ச்சியைத் தடுக்கிறது என்று கார்லா ப்ருஸ்ஸோ என்னும் அறிஞர் கூறுகிறார். (Carla Pruzzo University of Anncone, Italy)

*

11. ஒரு மனிதனின் மூக்கு 10,000 வகையான வாசனைகளின் வேறுபாட்டை உணரும் ஆற்றல் கொண்டது.***
thanks Dr. S. முரளி, M.D.S.,
***


"வாழ்க வளமுடன்"

செவிப் ( காது ) பாதுகாப்பு! (மருத்துவ ஆலோசானை)

காது கொடுத்து கேளுங்கள்! உங்கள் காது கேட்கிறதா?கேட்பதின் மூலம் அறிவு தெளிவு பெறுகிறது. நிலைத்த அறிவுச் செல்வமே எல்லாவற்றிலும் சிறந்தது. தீங்கு பயக்காத இன்பத்தைக் கொடுப்பது. செவிக்கு உணவாக விளங்குவது கற்றலின் ஆயினும் கேட்க வாய்ப்பளிப்பது.

*

நூலறிவோடு உலக அனுபவத்தைப் பெற ஊன்று கோலாயிருப்பது. நல்லனவற்றைக் கேட்டு பெருமைபடச் செய்வது. தீயவழியில் தூண்டல்களையும் உணர்கிறது. எனவே, செவிகள் கேட்பதற்கும், சமநிலைக்குமான உறுப்புகளாகத் திகழ்கின்றன.

*

செவியில் புறச்செவி (வெளிச்செவி), இடைச்செவி(நடுச்செவி), உட்செவி என்ற மூன்று பகுதிகள் உள்ளன. வெளியில் தெரிவது புறச்செவி, இது புனல் மாதரி ஒலி அலைகளைச் சேர்த்து இடைச்செவி மற்றும் உட்செவிக்கு அனுப்புகிறது.

*

புறச்செவியில் மடலும், வெளிக் கால்வாயும் அடங்கும், செவி வெளிக்கால்வாய் காற்றலைகள் அதிர்ச்சிகளை உண்டாக்கும் புனல் போன்ற செவிப்பறையுடன் முடிகிறது. செவிப்பறை காதினை நன்றாக அடைத்து கொண்டிருக்கிறது.

*

செவிப்பறைச் சவ்வில் உண்டாகும் காற்றலைகள் அதிர்ச்சிகளை மூளை, ஒலி என்று இனம் அறிந்து கொள்கிகறது. செவிப்பறையை அடுத்து நடுச்செவி தொடங்குகிறது. நடுச்செவி ஒரு கன சென்டிமீட்டர் பரிமாணம் கொண்ட குழியால் ஆனது.

*

நடுச்செவிக் குழியில் ஆறு சுவர்கள் உள்ளன. செவிப்பறைக்குழி, மூக்கு முன்தொண்டையுடன் நடுச்செவி குழல் மூலம் தொடர்பு கொண்டுள்ளது. நடுச்செவி குழல் மூன்று முதல் நான்கு சென்டிமீட்டர் நீளமாகவும் இரண்டு மில்லி மீட்டர் துவராமும் கொண்டுள்ளது.

*

நடுச்செவியில் சங்கிலி போன்ற அமைந்துள்ள மூன்று எலும்புகள் உள்ளன. இவை காற்றலை அதிர்ச்சிகளை உட்செவிக்கு எடுத்துச் செல்கின்றன.

*

உட்செவி ஒரு சிக்கலான அமைப்பைக் கொண்டுள்ளது. அதில் எலும்பு மற்றும் படலத்தாலான இரண்டு வளைந்து செல்லும் அமைப்புகள் (லேபரின்த்) உள்ளன. உட்செவி பாய்மத்தால்(அக நிணநீர் மற்றும் புற நிணநீர்) நிரப்பப்பட்டுள்ளது.

*

பாய்மத்தின் குறுக்கே கேள்விப்புல நரம்பு உள்ளது. கேள்விப்புல நரம்பிற்கு எலும்பின் மூலம்காற்றலைகள் அதிர்ச்சிகள் (ஒலி) கடத்தப்பெறுகின்றது. மூளைக்குச் செல்லும் நரம்பின் வழி மிகவும் குறுகலானது, ஒலித்தூண்டல்கள் பெருமூளைப் புரணியில் உணரப்பட்டு செவியுணர்வுகள் தோன்றுகின்றன.


***

செவிப்பற்றி சில செய்திகள்:


1. செவி உடலில் மிகச்சிறிய இடத்தில் அடைபட்டிருந்தாலும் அதனுடைய பணிகள் ஏராளம்.

*

2. ஒரு ஒலி உண்டானால், அமைதியான நீரில் கல்லை வெட்டெறியும்போது எப்படி அலைகள் உண்டாகின்றனவோ அப்படியே காற்றிலும் ஒலி அலைகள் உண்டாகிப் பரவுகின்றன.

*

3. புறச்செவி கேட்பதற்கு மிகவும் முக்கியமானது. அது இல்லாமலேயே கேட்க முடியும்.

*

4. செவி வெளிக்கால்வாய் தோலிலிருந்து எண்ணெய் போன்ற திரவம் சுரக்கிறது. அத்திரவம் உறையும்போது மெழுகுபோன்ற கெட்டிப்பொருளாகி, குறும்பியாகி விடுகின்றது. குறும்பி மிக அதிகமாகத் திரண்டால் கேட்பதற்குத் தடையாகவும் இருக்கும்.

*

5. செவிப்பறை சவ்வு தடித்தப்போனாலும் அல்லது நலிவடைந்து போனாலும் கேள்வி அதாவது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

*

6. நடுச்செவியில் உள்ள எலும்புகளை இணைக்கும் சிலேட்டுமப் படலம் (பந்தங்கள்) இறுகிப்போனால் காற்றலைகள் அதிர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதனால்அரை செவிட்டுதன்மை ஏற்படுகிறது.

*

7. இடைச்செவியில் ஒரு பகுதியில் உள்ள வெஸ்டிபுலர் அமைப்பும், மூன்று அரைவட்ட கால்வாய்களும் உள்ளன. இந்த உறுப்புக்கள் கண், தசை, மூடடுப்பகுதி மற்றும் மூளையுடன் சேர்ந்து உடல் நிலை மற்றும்அசைவுகளை உணர்வதில் பெரும் பங்காற்றுகிறது. வெஸ்டிவுலர் அமைப்புச் சேதமடைந்தால் உடல் சமச்சீர் நிலை இயக்கத்தில் கோளாறுகள், மயக்கம் போன்ற சிக்கல்கள் தோன்றும் வெஸ்டிபுலர் அமைப்பின் மிகையான கிளர்த்தலால் கார், படகுஇ விமானம் ஆகியவற்றில் பயணம் செய்யும்போது மயக்கம், வாந்தி முதலான பிரயாண நோயால் அவதியுற நேரிடுகிறது.

*

8. இடைச்செவியில் உள்ள காற்று சதா உறிஞ்சப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இடைச் செவிக்கும், முன்தொண்டைக்கும் இணைப்பு உள்ளது. இந்த இணைப்பை ஏற்படுத்துவது இடைச் செவி குழலாகும். இருமும்பொழுது அல்லது கொட்டாவி விடும்பொழுது அல்லது விழுங்கும்பொழுது இந்தக் குழலுக்குள் காற்று பலமாகச் செலுத்தப்படுகிறது. இதனால் காற்று நிறைவிக்கப்படுகிறது. நிறைவிக்கப்பட்ட காற்றுச் செவிப்பறையின் இருபுறங்களிலும் அழுத்தம் பெற்று சமப்படுகிறது. கேள்வியும் இதனால் பாதிக்கப்படுகிறது.

*

9. தொண்டையில் ஏற்படும் தொற்றினையட்டி இடைச்செவியிலும் தொற்று ஏற்படக்கூடும். இதன் விளைவாக இடைச்செவியில் காற்றுக்குப் பதிலாகச் சீழ் நிரம்பிவிடும். செவிப்பறையில் உள்ள சந்து வழியாகச் சீழ் வெளியேறி செவிப்பறையை நலமடையச் செய்யும். ஆனால், அடிக்கடி நேரிடும் தொற்றினால் செவிப்பறையில் அதிர்ச்சியும், எலும்புகளில் அதிர்ச்சியும் குறைந்த போகும்.

*

10. ஜலதோஷம் பிடித்து மூக்கிலும் தொண்டையிலும் சளிக்கட்டிக் கொண்டிருக்கும்போது நடுச்செவியையும், தொண்டையையும் இணைக்கும் சிறிய குழாயும் வீங்கிப் போகிறது. இந்த வீக்கத்தினால் நடுச்செவிக்கும் அடைபடுகிறது. இதன் தொடர் விளைவாக தற்காலிகமாக காது கேட்காமல் போகக்கூடும்.

*

11. காது கோளாதவர்களுக்குப் பயன்படும் மொழி சைகை மொழியாகும். அச்சைகை மொழிக்கென பிரத்தியேக சொற்களஞ்சியம், இலக்கணம், சொற்றொடரியம், விரல் அசைவுக் கூட்டல் ஆகியவை உண்டு. அந்த மொழி, கைகளினால் உருவமைத்தல், அவற்றின் அசைவு உள்ளங்கை தொடர்பிணைவு, உடலில் கையை இருக்கச் செய்யும் நிலை ஆகியவை ஒருங்கிணைந்ததாகும். ஒருங்கிணைவில் மாற்றம் இருந்தால் பொருள்மாறும். முகபாவம், சைகை மொழியினைத் தெளிவுபடுத்தும், புருவத்தை உயர்த்துதல் என்பதைக் குறிக்கும். சைகை மொழியை பிரத்தியேக பள்ளிகள், கல்லரிகளில் கற்கலாம். ஒளி, ஒலி நாடாக்கள் மற்றும் நூல்கள் வாயிலாகவும் கற்கலாம்.

*

12. காது கேட்கும் திறன் மற்றும் காது நலிவுகளின் தீவிரத்தைக் கண்டறிய உதவுவது ஆடியோகிராம், இம்பீனிஸ் ஆடியோகிராம், எலக்ட்ரோ நிஷ் டாக்மோகிராபி, மாஸ்பாய்டு எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஸ்கேன் ஆகிய சோதனைகள் உள்ளன.

*

13. இச்சோதனைகளால் காதின் கேட்கும் திறன், காது, நரம்புகள், செவிப்பறை, நடுக்காது, உட்காது, தலைச்சுற்றல், காதில் உள்ள கட்டிகள் முதலியவற்றைக் கண்டறியலாம்.

*

14. காது கேட்பதால் வார்த்தைகள் அறியப்படகின்றன. மூளையில் பதியும் வார்த்தைகளை வாய் உச்சரிக்கிறது. வாய் உச்சரிப்பதினால் பேச்சு வளர்ச்சி அடைகிறது.

*

15. காது குத்தி கொள்ளுவதால் கீலாய்டு என்ற கட்டிகள் சிலருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டு. இத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடியவர்கள் காதுகுத்திக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.***

காது பாதுகாப்பு:

1. காதின் வெளிப்பக்கத்தை சோப்பு மற்றும் தண்ணீர் விட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

*

2. காதில் இருக்கும் மெழுகு போன்ற பொருளை (குரும்பியை) எடுக்கக்கூடாது. அது செவிக்பாதுகாப்பிற்கு மிக முக்கியமானது. கசப்பாக இருக்கும் அதில் எந்த பூச்சியும் நுழையாது.

*

3. ஒரு வேளை பூச்சி ஏதாவது காதிற்குள் நுழைந்து விட்டால் சில சொட்டுகள் தேங்காய் எண்ணெய் அல்லது கடலை அல்லது நல்லெண்ணெய் அல்லது ஏதாவது ஒரு சுத்தமான எண்ணெய் காதில் விட்டால் அந்தப் பூச்சியைக் கொன்றுவிடும். பிறகு பீச்சான குழலைப் பயன்படுத்தி எடுத்துவிடலாம். பூச்சி கண்ணுக்கு தெரிந்தால் சாமணத்தால் அதை எடுத்து விடலாம். எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதே சிறந்ததாகும்.

*

4. காதில் குச்சிபோட்டுக் குடையக்கூடாது. குச்சியைப் பயன்படுத்தினால் செவிப்பறை கிழிந்துபோக வாய்பப்புண்டு. நலிவுக்கும் உள்ளாக்கும், காதில் சீழ் வழியக்கூடிய அபாயமும் ஏற்படக்கூடும்.

*

5. காதிலுள்ள உரோமங்கள் மிகவும் முக்கியமானவை, தூசியும், பூச்சியும் காதுக்குள் நுழையாமல் அவை தடுக்கின்றன. எனவே, இவற்றை வெட்டி எடுக்கக்கூடாது.

*

6. சொத்தைப்பல், கடைவாய்ப்பல் சரியான வெளிவராதிருந்தால், நாக்கு மற்றும் வாய்ப்புண்கள், டான்சில் சதை வளர்ச்சி , கழுத்து எலும்பு தேய்வு, புற்றுநோய் போன்ற நலிவுகள் மற்ற உறுப்புக்களை பாதிப்பதினால் காதில் வலி ஏற்படக்கூடும்.

*

7. காதில் வலி ஏற்பட்டால் கெட்டியான குறும்பியோ அல்லது புறச்செவியில் நலிவோ ஏற்பட்டிருக்கலாம். இதற்காக மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் காதில் சொட்டு மருந்தைப் போட்டுக் கொள்ளக்கூடாது. தவறான சொட்டு மருந்து காதை அதிகமாக, எதிர்பாராத வகையில் பாதிக்கக்கூடும்.

*

8. காது வலி தொண்டையில் அழற்சி காரணமாக இருக்கலாம். நோய்க்கிருமிகள் தாக்கத்தின் விளைவாகவும் இருக்கலாம். காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணரை அணுகி சிகிச்சைப் பெறுவது நல்லது.

*

9. காது திடீரெனக் கேட்கவில்லையென்றால் உடன் 48 மணி நேரத்திற்குள் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். காலம் தாழ்த்துவது அல்லது உதாசீனமாக விட்டுவிடுவது விபரித விளைவுகளை ஏற்படுத்துக்கூடும்.

*

10. குடும்பத்தில் பிறவிச் செவிடர்கள் இருந்தால் இரத்த உறவில் திருமணம் செய்து கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் காது கேளாமலிக்க வாய்ப்புண்டு.

*

11. சிறு குழந்தைப் பருவத்தில் காது கேட்கவில்லை என்றால் அந்தக் குழந்தையின் பேச்சும் பாதிக்கக்கூடும். காலங் கடத்தாது மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதே சிறந்ததாகும்.

*

12. சில மருந்துகள் செவிட்டுத் தன்மையை ஏற்படுத்தும். ஆகையால் மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ள்க்கூடாது.

*

13. அதிக இரைச்சலான இடங்களில் வேலை செய்வோர் செவிப்பாதுகாப்பு அடைப்பான்களைப் போட்டுக் கொள்ள வேண்டும்.

*

14. சுவாசிப்பதில் தவறான முறையில் மூச்சு வெளியேற்றுவதும் காது வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம். மூச்சு உறுப்புகளில் தொற்றுநோய் ஏற்பட்டிருந்தாலும் காதுவலி ஏற்படலாம்.

*

15. காது கேட்கவில்லையெனில் நீங்களாகவே கடைகளில் உள்ள பல ரகங்களிலான கேட்க உதவும் பொறியமைவுகளில் ஏதேனும் ஒன்றை வாங்கிப் பயன்படுத்துவது கூடாது. செவித்திறன் குறைவின் அளவைப் பொறுத்து அதற்கேற்ற அமைவினையே பயன்படுத்த வேண்டும்.

*

16. உணர்வு நரம்பின் செவிட்டுத் தன்மைக்கேற்ற பொறியை மருத்துவரின் பரிந்துரைப்படி பொருத்திக் கொள்ள வேண்டும்.

*

17. கேட்கும் தன்மைக்கேற்ப பேச்சுத்தன்மையும் அமைகிறது. எனவே செவிட்டுத்தன்மையை புறக்கணிக்கக்கூடாது.

*

18. அடிக்கடி சளி பிடித்தாலும் தொண்டை வலி ஏற்பட்டாலும் காதின் கேட்புத்திறன் பாதிக்கக்கூடும்.

*

19. மூக்கை, வேகமாகச் சிந்தக்கூடாது. சிந்தினால் முக்கிலும் தொண்டையிலும் உள்ள கிருமிகள் நடுச் செவிக்குள் புகுந்து காதைச் செவிடாக்கிவிடக்கூடும்.

*

20. குழந்தைகளின் காதில் ஒருபோதும் அறையக்கூடாது. அறைந்தால் காதுக்கு ஊறு ஏற்பட்டு கேளாமல் போனாலும் போய்விடும்.

*

21. தண்ணீரில் குதித்துக் குளிப்பதாலும், கடல் நீரல் குளிப்பதாலும் நோய்தொற்று நடுச்செவிக்குழல் மூலம் காதுக்குள் சென்று கடுமையான காது வலியை ஏற்படுத்தக்கூடும்.***
by- Dr.k.k.ராமலிங்கம், Dr.ரவி ராமலிங்கம், சென்னை
thanks Drs...
***"வாழ்க வளமுடன்"

மஞ்சள் காமலை ஒரு நோயல்ல!சிறுநீர் மஞ்சலாக போக பல காரணங்கள் இருக்கு. அதிலே ஒண்ணுதான் மஞ்சள் காமாலை. சில வகையான மருந்துகளை சாப்பிட்டாலே சிறுநீர் மஞ்சளாகப் போகும்.

*

குறிப்பாக வயிற்றோட்டத்திற்குத் தருகின்ற ·ப்ளுரோ ஸோஸிடோன் மருந்து, அதிக உஷ்ணத்தாலும் சிறுநீர் மஞ்சளாகப் போகும். எனவே, ஒருவருக்கு சிறுநீர் மஞ்சளாகப் போனால் அவரை பரிசோதனை செய்ய வேண்டும்.

*

அத்துடன் அவரது சிறுநீரிலும், இரத்தத்திலும் சில அடிப்படை பரிசோதனைகள் செய்திடல் வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளதா? இல்லையா? என்பதைக் கண்டறியலாம். அதனை உறுதிபடுத்தலாம். பிறகு, எதனால் ஏற்பட்டது என்பதனையும் கண்டறிந்து. அதன் அடிப்படையில் சிகிச்சையினைத் தொடங்க முடியும்.

*

நமது நாட்டு மக்கள் மஞ்சள் காமாலையைப் பொறுத்த அளவில், இரண்டு பெரிய தவறுகளைச் செய்து விடுகிறார்கள், முதலாவது, மஞ்சள் காமாலை வந்து விட்டதா? இல்லையா? என்பதை அறிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். இதற்கு பரிசோதனை செய்யாமல் சோற்றைத் தேடிப் போய் விடுகிறார்கள்.

*

இரண்டாவது, மஞ்சள் காமாலைக்குச் சிகிச்சை செய்யும் முன், அது எந்த வகை மஞ்சள் காமாலை எதனால் அது வந்தது? என்று பார்ப்பது இல்லை.

நேரடியாகவே, சிகிச்சைக்குப் போய் விடுகிறார்கள்.

*

கீழாநெல்லி மருந்து, பச்சை இலை வைத்தியம் என்று போகும் இவர்கள், மஞ்சள் காமாலை என்றாலே அது ஒரு நோய் என்று கருதிவிடுகிறார்கள்.

*

அது ஒரு நோயல்ல, ஏதோ ஒரு நோயின் அறிகுறிதான்!

*

ஏனென்றால், எண்ணற்ற நோய்களின் காரணமாக ஒருவருக்கு மஞ்சள் காமாலைக் வரலாம்.


***
thanks Dr.முத்துச்செல்வகுமார் - சென்னை
***"வாழ்க வளமுடன்"


வாழ்க்கையில் மேலே உயர பதற்றம் அவசியம், அது அளவுக்கு மிஞ்சினால்......

வாழ்க்கையில் கொஞ்சமாவது பதற்றம் இருந்தால்தான் சரியான வகையில் செயல்படுவோம். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டுமே என்கிற கவலை இருந்தால்தான் மாணவன் நன்கு படிப்பான்.அதே மாணவனுக்குப் பதற்றம் மிகவும் அதிகமாக இருந்தால், தேர்வுக் கூடத்தில் வினாத்தாளைக் கையில் வாங்கியவுடன் கைகள் நடுங்க நெஞ்சு படபடக்க படித்ததையெல்லாம் மறந்து விடுவான். அதுபோல வாழ்க்கையில் மேலே உயர பதற்றம் அவசியம். ஆனால் அது அளவுக்கு மிஞ்சினால் வளர்ச்சியைத் தடை செய்துவிடும்.

*

ஒரு சிலருக்குச் சிறு வயதிலிருந்தே பதற்றப்படும், கவலைப்படும் குணம் இருக்கும். வாழக்கையில் அடிபட்டு மனம் சோர்ந்து போகும்போது, இந்தப் பதற்றம் அதிகரிக்கும். தினசரி வாழக்கையில் ஒருவரைச் செயலிழக்கச் செய்யும் அளவுக்குப் பதற்றம் அதிகரித்தால் அதை Anxiety Disorder என்பார்கள்.

*

ஏதோ கெடுதல் நடந்துவிடும் என்று மனம் எப்போதும் தவிக்கும். வெளியே சென்ற உங்கள் குடும்பத்தினர் வீடு திரும்பக் கொஞ்சம் தாமதமானால் கூட ஏதோ கெடுதல் நடந்துவிட்டதோ? என்று உங்கள் மனம் பதைத்துப் போய், ஒரே அமர்க்களம் செய்ய வைத்துவிடுகிறது.

*

வெளியே சென்றவர்கள் திரும்பி வரத்தாமதமானால் கவலை வருவது இயற்கைதான். கெடுதலாக எதுவும் நடந்திருக்காது என்று உறுதியாகச் சொல்ல முடியாதுதான். ஆனால் விபத்து நடந்திருக்கலாம் என்பதை விட நடந்திருக்காது என்பதில்தான் சாத்தியக்கூறு அதிகம்.

*

ஏனெனில் சாலையில் செல்பவர்களில் பெரும்பலானோருக்கு விபத்து நடப்பதில்லை ஆனால் உங்கள் மனம் பதற்றப்படும் சுபாவத்தின் காரணமாக குறைவான சாத்தியக் கூறு உள்ள ஒரு விஷயத்தை நடந்து விட்டதாகவே நம்பி பதறுகிறது.

*

இதுதான் Anxiety Disorder. இந்தப் பதற்றம் உங்களைச் செயலிழக்கச் செய்வதோடல்லாமல், சுற்றி உள்ளவர்களையும் பதற்றமடையச் செய்யும். இந்த மாதிரி பிரச்சினை உள்ள ஒரு தாயின் மகள், தன் தாய் கவலைப்பட்டு அவஸ்தைப்படுவார் என்பதற்காக, தான் வெளிநாட்டுக்குப் படிக்கச் செல்வதையே நிறுத்திவிட்டாள்.

*

ஆண்மகன் ஒருவர் தொலைபேசி மூலம் இருமுறை கெட்ட செய்திகள் வந்ததால், தொலைபேசி ஒலிக்கவே கூடாது என்று எடுத்து வைத்துவிடுவார். இவர்கள் பிரச்சினைகளில் அமிழ்ந்து விட்டவர்கள்.

*

சிறு பொறியாக வரும் எதிர்மறை எண்ணங்களை ஊதி, ஊதிப் பெரிதாக்கி விடாமல் முளையிலேயே கிள்ள வேண்டும். ஏனெனில் எண்ணங்கள்தான் வார்த்தைகளாகி, செயலாகி, நடத்தையாக மாறுகின்றன. எண்ணங்கள் பாஸிட்டிவ்வாக மாறினால், செயல்கள் மாறி நடத்தையில் பதற்றம் குறையும்.


*

இதைச் செயல்படுத்த எப்போதும் நல்ல எண்ணங்களை மனதில் விதையுங்கள். அவை முளைக்கும்போது புதிதாகப் பிறக்கும் எதிர்மறை எண்ணங்கள் ஓடிவிடும். நல்ல கருத்துக்களைப் படிப்பது, கேட்பது நல்ல விஷயங்களைச் செய்பவர்களோடு இருப்பது இவை மனத்தை நல்வழிப்படுத்தும்.

*

எப்போதும் நிகழ்காலத்தில் மனம் இருக்க வேண்டும். கடந்த காலம் முடிந்துவிட்டது. அதை மாற்ற முடியாது. அதையே அசை போட்டால் வருத்தங்கள்தான் மிஞ்சும். எதிர் காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கு தெரியாது. அது ஒரு கேள்விக்குறி.

*

அதை நினைத்துக் கவலைப்படுவது நமது நிம்மதியை குலைக்கும், நிகழ்காலம் கடவுள் கொடுத்த பரிசு என்று எண்ணி, அதைச் சரியாகக் கழியுங்கள். உங்களுக்குப் பிடித்த விஷயங்களையும் செய்யுங்கள்.

*

யோகாசனம், பிராணாயாமம், தியானம், சங்கீதம் போன்றவை மனத்தைச் சமநிலைப்படுத்தும் வலிமை கொண்டவை. உணர்வுகளின் எழுச்சியைக் குறைப்பவை. நம் நிம்மதிக்காக ஒரு நாளில் 30 நிமிடங்கள் செலவிட முடியாதா? செய்தால் பலன் நமது, பயம் நமது இல்லை.

*

சுய பச்சாதாபம், கோபம், வெறுப்பு, பொறாமை, பயம் போன்ற உணர்வுகளால் நன்மை எதுமில்லை, மாறாக, மனத்தைத் தேங்கிய குட்டையாக அவை மாற்றிவிடும். மனம் தெளிந்த நீரோடை போல கசடைக் கீழே தங்கவிட்டு, முன்னேறிக் கொண்டே இருக்க வேண்டும்.


***

by- பிருந்தா ஜெயராமன்
மனநல ஆலோசகர், சென்னை

***
thanks மனநல ஆலோசகர்
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "