...

"வாழ்க வளமுடன்"

18 செப்டம்பர், 2015

தலை சுற்றல் குணமாக

Baskar Jayaraman's photo.

சுக்கு, மிளகு, திப்பிலி, விலாமிச்சை வேர், சீரகம் ஆகியவைகளை 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட தலை சுற்றல் குணமாகும்.இருமல் குணமாக:
...
ஜலதோஷம், காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.வறட்டு இருமல் குணமாக:
கருவேலமரக் கொழுந்தை கசக்கி சாறு எடுத்து வெந்நீரில் கலந்து சாப்பிட வறட்டு இருமல் குறையும். வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:
முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாகும்.
சளிகட்டு நீங்க:
தூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்திரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு, சளிகட்டு நீங்கும்.தலைபாரம் குறைய:


நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.மார்புச்சளி நீங்க:
ஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.


மூக்கடைப்பு நீங்க:
ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.ஜலதோஷம் குணமாக:
முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறெடுத்து அதில் தேன் கலந்து 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிட குணமாகும்.


வாந்தி நிற்க:
துளசி சாறு, கல்கண்டு சேர்த்து காய்ச்சலின் போது கொடுக்க வாந்தி நிற்கும்

.
குமட்டல்:
கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் இருக்காது.


***
indian mad
***"வாழ்க வளமுடன்" 

16 செப்டம்பர், 2015

மருத்துவத்தில் தேனும் பட்டையும்

தேன் (Honey) + பட்டை(Cinnamon powder) = 100% ஆரோக்கியம்

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவத்தில் தேனும் பட்டையும் மிகவும் முக்கியம் வாய்ந்த பொருட்களாக இருந்து வந்துள்ளன.

வரலாற்றை பின்நோக்கி பார்த்தால் உலகில் உள்ள பல நாடுகளில் இந்த இரண்டு பொருட்களையும் மருத்துவத்தில் அதிக அளவு உபயோகித்து வந்ததை அறியலாம். பண்டைய மருத்துவ முறைகளான யுனானி மற்றும் ஆயுர்வேதத்தில் இந்த இரண்டுப் பொருட்களையும் உபயோகித்ததை பழயகால ஒலைச் சுவடிகளை பார்த்தால் தெரியவரும்….. இதன் சிறப்பு தன்மையென்றால் இதனால் எந்த ஒவொரு சைடு எஃபெக்டும் இல்லையென்பதுதான்…1. ( ARTHRITIS ) ஆர்த்தரிடிஸ் எனும் முட்டி வலிகள் :
ஒரு பகுதி தேனுக்கு இரண்டு பகுதி வார்ம் வாட்டர் எடுத்து அதில் ஒரு சிறிய டீஸ்புன் அளவு பட்டை பொடியை கலந்து பேஸ்ட்டாக்கி வலியுள்ள பகுதியில் மெதுவாக தேய்த்து வந்தால் இரண்டு நிமிடங்களில் குறையத் தொடங்கும். அல்லது ஆர்த்தரிடிஸ் நோயாளிகள் தினமும் காலையில் ஒரு கப் ஹாட் வாட்டர் எடுத்து அதில் 2 ஸ்பூன் தேன், ஒரு சிறிய டீஸ்பூன் பட்டைப் பொடியை (cinnamon powder) கலந்து தினமும் காலையில் குடித்துவர நாள்பட்ட ஆர்த்தரிடிஸும் குறையத் தொடங்கும். சமிப காலத்தில் Copenhagen University யில் நடந்த ஆராய்ச்சியில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு தினசரி காலை உணவிற்கு முன்பு ஒரு டேபிள் ஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் பட்டை பொடியை கலந்து 200 நோயளிகளுக்கு கொடுத்து வந்ததில் ஒரு வாரத்திற்குள் 73 நோயளிகளுக்கு மொத்தவலியும் குறைந்ததெனவும் ஒரு மாதத்திற்குள் அனைத்து நோயளிகளும் குணமடைந்தனர் என்றும் வலியினால் சிறிதும் நடக்க முடியாமல் இருந்தவர்களும் நடக்கத் தொடங்கினர் என்றும் அறிவித்துள்ளனர்.
2. ( HAIR LOSS ) முடி உதிர்தல் :
முடி உதிர்வர்களும், வழுக்கை தலையுள்ளவர்களும் சிறிதளவு ஹாட் ஆலிவ் ஆயில், ஒரு டேபிள் ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பட்டை பவுடர் மூன்றையும் கலந்து பேஸ்டாக கலந்து குளிப்பதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு தேய்த்து அதன் பிறகு வார்ம் வாட்டரில் தலையை கழுவி வரவும். உங்களுக்கு பலன் தெரியவரும்.
3. ( BLADDER INFECTIONS ) மூத்திரப்பை தொற்று வியாதிகள் :
இரண்டு டேபிள் ஸ்பூன் பட்டை பவுடர். ஒரு டீஸ்பூன் தேனை ஒரு க்ளாஸ் வார்ம் வாட்டரில் கலந்து குடித்தால் பையில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும்
4. ( CHOLESTEROL ) : கொலஸ்டிரால் :
இரண்டு டேபிள் ஸ்பூன் தேன், மூன்று டீஸ்பூன் பட்டை பவுடரை 16 அவுன்ஸ் டீத் தண்ணிரில் கலந்து கொலஸ்டிரால் நோயாளிகளுக்கு கொடுத்தால் இரண்டு மணி நேரத்தில் இரத்தத்திலுள்ள கொலஸ்டிரா 10 % குறைந்து விடும். தினசரி மூன்று முறை கொடுத்தால் நாள்பட்ட கொலஸ்டிராவும் குணமாகிவிடும்.
5.( CURE COLD) ஜலதோஷம்:
யாரு மிகவும் ஜலதோஷத்தால் அவதிப்படுகிறார்களோ அவர்கள் ஒரு டேபிள் ஸ்பூன் வார்ம் தேன், 1/4 டீஸ்பூன் பட்டை பவுடர் கலந்து மூன்று நாட்கள் தொடர்ந்து உட்க்கொண்டு வந்தால் ஜலதோஷம். இருமல், சைனஸ் குணமாகிவிடும்.
6 .( INFERTILITY ) குழந்தையின்மை :
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து ஆயுர்வேதம், யூனானி மருத்துவத்தில் ஆண்மையை பலப்படுத்த( விந்து) தேனை ஒரு மருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை தூங்குவதற்கு முன்பு தினசரி எடுத்து கொள்ளுமாறு அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கூறியுள்ளனர். அது போல சீனா, ஜப்பான் மற்றும் அநேக ஆசிய நாடுகளில் கருத்தரிக்காத பெண்களுக்கும், கர்ப்பபை பலவினமான பெண்களுக்கும் தேனும் பட்டை பவுடரையும் பழ மருத்துவர்கள் கொடுத்துவந்துள்ளனர். கருத்தரிக்காத பெண்கள் சிறிதளவு பட்டை பவுடரையும், அரை டீஸ்பூன் தேனையும் ஒரே அடியாக சாப்பிடாமல் வாயில் கம் களுக்கு அடியில் வைத்து சிறிது சிறிதாக உமிழ் நீரோடு கலந்து முழுங்கி வர வேண்டும். இதை ஒவ்வொரு நாளும் பல முறை அடிக்கடி செய்து வந்தால் பலன் கிடைக்கும்.
7.( STOMACH UPSET) வயிற்றுக்கோளாறு :
தேனுடன் பட்டை பவுடரை கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும். அது போல சரிசம அளவு இரண்டையும் கலந்து சாப்பிட்டு வந்தால் கேஸ் ப்ராபளமும் குணமாகும்.
8. ( IMMUNE SYSTEM ) நோய் எதிர்ப்பு தன்மை :
தினசரி தேனையும் பட்டை பவுடரையும் உண்டுவந்தால் நோய் எதிர்ப்பு தன்மை கூடி உடம்பை பாக்டீரியா மற்றும் வைரள் அட்டாக்கிலிருந்து காப்பாற்றும். இதில் அதிக் அளவு டிஃபரெண்ட் டைப் வைட்டமின் மற்றும் அயர்னும் இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டு பிடித்துள்ளனர்.
9. ( LONGEVITY) நீண்ட வாழ்வு :
நீண்ட கால வாழ்வுக்கு நம் மூதையர்கள் தேனும் பட்டை பவுடரும் கலந்த தேனீர் அருந்தி வந்தனர். 4 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் பட்டை பவுடர் மற்றும் 3 கப் சூடான நீருடன் கலந்து தேனீர் தாயரித்து குறைந்தது தினசரி மூன்று வேளை 1/4 கப்பாவது அருந்த வேண்டும். இது உங்கள் தோலை புதுப் பொலிவுடன் வைத்து கொள்வதோடு மட்டுமல்லாமல் முதுமையடைவதை தடுக்கும்.
10.( WEIGHT LOSS) உடல் எடை குறைய :
தினசரி தேனையும் பட்டை பவுடரையும் கொதித்த தண்ணிரில் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.அதிக வெயிட் போட்டவர்கள் இதை கடைப்பிடித்து வந்தால் உடல் எடை குறையும். இதை ரெகுலராக குடித்து வந்தால் உடம்பில் கொழுப்பு சேராமல் தடுக்கும்.

***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

சமையல் அறையில் இருக்கு முதலுதவி!

குழந்தைக்குச் சின்னதாகச் சளியோ, இருமலோ இருந்தால், திண்ணையில் இருக்கும் பாட்டி, ஒரு கைவைத்தியத்தைச் சிம்பிளாகச் சொல்லிவிடுவார். குழந்தையும் இரண்டொரு நாட்களில் குணமாகிவிடும். திண்ணைகளும் பாட்டிகளும் இல்லை என்று ஆன பிறகு, கைவைத்திய முறையும் காணாமல் போய்விட்டது. எதற்கெடுத்தாலும் டாக்டர்களின் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, மருத்துவமனை வராந்தாக்களில் காத்திருக்கிறோம். பெரிய பிரச்னைகளுக்கு மருத்துவர்களைத் தேடிப் போவது தவறே இல்லை. சின்னச் சின்ன தொந்தரவுகளை, பாரம்பரிய மருத்துவம் மூலம், நாமே சரிசெய்துகொள்ள முடியும்.

மூச்சுத் திணறல் அதிகம் இருந்தால், 200 மி.லி தேங்காய் எண்ணெயில், 10 கிராம் ஒமத்தைப் பொரித்து வடிகட்டி, இளம் சூட்டோடுக் கற்பூரத்தையும் கரைத்து, முதுகு, நெஞ்சுப் பகுதிகளில் தடவ, மூச்சுத்திணறல் சட்டெனக் குறையும்.

அரிசி கழுவிய இரண்டாவது தண்ணீரில், மணத்தக்காளி கீரையைச் சேர்த்துக் கொதிக்கவைத்து, சீரகம் கலந்து, மை போல் இருக்கும் பதத்தில் சாப்பிட, அல்சர் புண்கள் குணமாகும்.

பல் வலிக்கு, ஒரு கிராம் தோல் நீக்கிய சுக்கு, ஓர் ஏலக்காயில் உள்ள விதைகள் (ஏல அரிசி), மூலிகைச் சாம்பிராணி ஆகியவற்றை, சம அளவில் எடுத்து, தண்ணீர் விட்டு அரைத்த விழுதை, வலி இருக்கும் இடத்தில் வைத்துக்கொண்டால், வலி குறையும். மேலும், வலி இருக்கும் இடத்தில் ஒரு மெல்லியத் துணியில் ஐஸ் கட்டியைப் போட்டு ஒத்தடம் கொடுக்க, வலி குறையும்.
சின்ன குழந்தைகளுக்கு, வயிற்றில் சத்தம் வரும். அதைப் பொறுமல் என்பர். இந்தப் பிரச்னையால், குழந்தைகள் சாப்பிடாமல் அழுதபடியே இருக்கும். ஒரு பங்கு ஓமம், கால் பங்கு பெருங்காயம் கலந்து, இட்லி அல்லது மோர் சாதத்தில் உருட்டிக்கொடுக்க, வயிற்றுப் பொறுமல் நீங்கி, குழந்தை நன்றாகத் தூங்கும். இதே பிரச்னை பெரியவர்களுக்கு இருந்தால், ஒரு பங்கு வெள்ளைப் பூண்டுக்கு, கால் பங்கு பெருங்காயம், சுவைக்கு ஏற்ப, கருப்பட்டி கலந்து, ஒரு நெல்லி அளவு உருண்டையாக உருட்டி, சப்புக் கொட்டி சாப்பிட வேண்டும்.

தலைவலி நீங்க நொச்சி இலை அல்லது துளசி இலையை, வெந்நீரில் போட்டு ஆவி பிடிக்கலாம். மருதாணிப் பூ, நொச்சி இலைகளை, தலையணைக்குக் கீழ்வைத்துப் படுத்தாலும், அடிக்கடி வரும் தலைவலி வராது.

தோல் நீக்கிய சுக்குப் பொடியை, எலுமிச்சைச் சாறு அல்லது வெந்நீரில் கலந்து, தலையில் பற்றுப் போட, சைனஸ் தலைவலி குறையும். ஒற்றைத் தலைவலி, அலுப்பு, வெயில், டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் தலைவலிக்கு, மஞ்சளை அடுப்பில் சுட்டு, அந்த புகையைச் சுவாசிக்கலாம்.

தொண்டை சதை வளர்ந்ததால் வரும் வலி, தொண்டை கட்டிக்கொண்டதால் ஏற்படும் வலிகளுக்கு, பூண்டுச் சாறை எடுத்து, தேன் கலந்து, தொண்டையின் உள்பகுதியில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து, வெந்நீர் அருந்தலாம். இதனால், தொண்டையில் ஏற்பட்ட தொற்று குறைந்து, வலி நீங்கும். தினமும் மூன்று வேளையும் கல் உப்பு சேர்த்து, வாய் கொப்பளிக்கலாம்.
மாதவிலக்கின்போது ஏற்படும் வலிக்கு, சோம்புப் பொடி, சீரகப் பொடி, பெருங்காயம், கருப்பட்டியைச் சம அளவு எடுத்து, இரண்டு சொட்டு நல்லெண்ணெய் விட்டு, நெல்லிக்காய் அளவுக்கு உருண்டையாகப் பிடித்துச் சாப்பிடலாம். அஜீரணத்தால் ஏற்பட்ட வலியைப் போக்க, 15 மி.லி ஒமத் தண்ணீரில், ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடிக்கலாம்.

குழந்தைகள் மலம் கழிக்காமல், வயிற்று வலியுடன் அழுதுகொண்டே இருந்தால், காய்ந்த கறுப்பு திராட்சை, அத்திப்பழத்தை நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, நன்றாக மசிந்ததும் வடிகட்டி, அந்தச் சாற்றை ஐந்து முதல் 10 மி.லி குடிக்கக்கொடுத்தால், மலச்சிக்கல் சரியாகும். இரவில், ஐந்து கிராம் திரிபலா சூரணத்தை, வெந்நீரில் கலந்து சாப்பிட்டுவர, பெரியவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்னை இருக்காது. தினமும் ஒரு செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வரலாம்.

சளியை எப்போதுமே வெளியேற்ற வேண்டும். 50 கிராம் ஆடாதொடை இலையை, அரை லிட்டர் தண்ணீரில் பனங்கற்கண்டு சேர்த்து, பாகுப் பதத்துக்கு வந்ததும், வடிகட்டிச் சாப்பிடலாம். 50 கிராம் ஆடாதொடை இலையுடன், நான்கு மிளகு சேர்த்து, ஒரு லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, கால் பங்காக சுண்டியதும் அருந்தலாம்.

அல்சரால் வயிற்று வலி, எரிச்சல் ஏற்படுவதைத் தடுக்க, சங்கை உரசும்போது வரும் மாவில், இளநீர் அல்லது தேங்காய்ப் பால் அல்லது பசும்பால் சேர்த்து, 20 மி.லி அளவில் குடித்துவர, வலி குறைந்து புண்களும் ஆறும்.
மாதுளைச் சாற்றுடன் கற்கண்டைக் கலந்து, அடுப்பில்வைத்துச் சூடாக்கி வடிகட்டி, 15 மி.லி குடிக்க, வாந்தி வருவது நிற்கும்.

இரண்டு கொழுந்து வெற்றிலை, 40 துளசி இலைகள் இரண்டையும், ஒரு லிட்டர் நீரில் கொதிக்கவைத்து, 20 மி.லி அளவுக்குச் சுண்ட விட்டுக் குடித்தால், காய்ச்சல் வெகுவாகக் குறையும்.

சாப்பிட்டவுடன் மலம் கழிக்கத் தோன்றுதல், சூடான உணவைச் சாப்பிட்டதும், மலம் வருதல் போன்ற பிரச்னைகளுக்கு, காய்ந்த சுண்டைக்காய், ஓமம், நெல்லி வத்தல், மாங்கொட்டையில் உள்ள பருப்பு, மாசிக்காய், வெந்தயம் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை தேன் அல்லது மோர் கலந்து சாப்பிட, மலம் கழிப்பது ஒழுங்குபடும்.

செரிக்கக் கடினமான உணவைச் சாப்பிட்ட பின் வாந்தி வந்தால், மாதுளைச் சாறு, இஞ்சிச் சாறு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து, 15 மி.லி குடிக்க, செரிக்காமல் தொந்தரவு செய்யும் உணர்வும், வாந்தி உணர்வும் நிற்கும்.

***
tu dr
***


"வாழ்க வளமுடன்"
      

மூலிகை இல்லம்! ( இதயத்தை இதமாக்கும் டிரிங்க்)


தாயின் கருவறையில் உள்ள கருவுக்கு, முதன் முதலில் உருவாகும் உறுப்பு இதயம். பிறப்பு முதல் இறப்பு வரை ஓயாமல் துடிக்கும் இதயத்தை, ஆரோக்கியமாக வைத்திருப்பது அவசியம். நம் உடலுக்கு ஏற்ற உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடுவதாலும் உடற்பயிற்சி செய்வதாலும் இதயநோய் உள்ளிட்ட எந்த ஒரு நோயையும் தடுக்க முடியும்.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க, வந்தாலும் ஆரோக்கியமாக வாழ மூன்று ‘இ’ (Exercise, Eating, Emotional) எப்படி முக்கியமோ, அதுபோல் இதயம் தொடர்பான பிரச்னைகளுக்கும் இந்த ‘இ’-க்களை பின்பற்றுவது முக்கியம். ரத்தக்குழாயில் கொழுப்புப் படிவதன் மூலம், ஒரு கட்டத்தில் ரத்த ஓட்டம் தடைப்படும். இதனால், அந்தப் பகுதியில் ரத்தம் உறைந்து மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த அடைப்பைச் சரிசெய்ய எத்தனையோ நவீன சிகிச்சைகள் வந்தாலும், தீவிர சிகிச்சை, அறுவைசிகிச்சை, வலி, அதன் பிறகு மீண்டும் அடைப்பு ஏற்படாமல் இருக்க, தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் மருந்து என ஒருவர் சுமக்கும் துயரம் சாதாரணமானது அல்ல. வந்த பின் சரிசெய்வதைவிட, வரும் முன் பாதுகாத்துக்கொள்வதுதான் புத்திசாலித்தனம்.


நாம் உண்ணும் சில வகை உணவுகள், உடலில் கெட்ட கொழுப்புப் படிவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்து குறைந்த கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்ளுதல், உடல் உழைப்புக் குறைவு, உடற்பயிற்சி செய்யாமை, உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், சோடியம் அளவு அதிகரித்தல், பொட்டாசியம் அளவு குறைதல், தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ் போன்றவை மாரடைப்புக்கு வழிவகுக்கின்றன. உணவு, உடற்பயிற்சி என அனைத்தும் நம் கைகளில் உள்ளன. இவற்றை முறையாகப் பராமரித்தால் இதயத்தைப் பாதுகாக்க முடியும் என்பதை நினைவில் வையுங்கள். இதற்காகப் புதிது புதிதான உணவுப் பழக்கத்தை நோக்கிச் செல்ல வேண்டாம். நம்முடைய பாரம்பரிய உணவுகளே இதயத்தைக் காக்கும் திறன்கொண்டவை.இஞ்சி: உணவுகளில் இஞ்சி, சுவைக்காகவோ, மணத்துக்கோ சேர்க்கப்படுவது இல்லை. செரிமானத்தைச் சீர்படுத்தி, உடலில் கொழுப்பைச் சேரவிடாமல் தவிர்க்கும் வேலையைச் செய்கிறது. அதனால்தான் அசைவ உணவுகளில் பெரும்பாலும் இஞ்சி சேர்த்துச் சமைக்கிறோம். இஞ்சி, உடல் எடையைக் குறைக்கும். செரிமானப் பிரச்னை, ரத்த உறைதல் பிரச்னையைச் சரிசெய்யும். இதயத்துக்குப் போதுமான வலு சேர்ப்பதும் ஆற்றலை அதிகப்படுத்தும் வேலைகளையும் இஞ்சி செய்கிறது.


பூண்டு: ரத்த குழாய்களில் சேரும் கொழுப்பைக் குறைக்கிறது. ரத்தத்தைச் சுத்திகரித்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. நஞ்சாக உடலில் சேர்ந்திருக்கும் உப்புகளை அகற்றும் பணியைச் சிறப்பாகச் செய்கிறது. இதனுடன் நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டி, இதய நோய்க்கு எதிராக உடலைச் செயல்பட ஆயத்தமாக்குகிறது.


எலுமிச்சை: உடல் பருமனைக் குறைத்து, கெட்ட கொழுப்பைக் கரைக்கும் வல்லமை பெற்றது. அதிகப்படியான பொட்டாசியம் சத்து இருக்கிறது. இதயப் பிரச்னையை உண்டாக்கும் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோயைச் சரிசெய்வதால், எலுமிச்சை நம் இதயத்தைக் காக்கும் நண்பன்.


தேன்: உடலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்கி, புத்துயிர் பெறச் செய்யும் பணியைத் தேன் செய்கிறது. கீரை, பழங்களிலிருந்து கிடைக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், தேனிலும் கிடைக்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் சிறந்த ஊட்டச்சத்து பானம்.


ஆப்பிள் தோல்:இதிலிருந்து எடுக்கப்படும் ஆப்பிள் சிடர் வினிகர், நெஞ்சு எரிச்சலைச் சரிசெய்யும். ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்கும். தூக்கமின்மை, மனக்கவலையைப் போக்கும்.
இதயத்தை இதமாக்கும் டிரிங்க்
 
 
தேவையானவை: இஞ்சி, பூண்டு - தலா அரை கிலோ, எலுமிச்சம் பழம் - 20, தேன் - 300 மி.லி, ஆப்பிள் சிடர் வினிகர் - 50 மி.லி


செய்முறை: இஞ்சி, பூண்டை சுத்தம் செய்து, சிறிதளவு நீர் விட்டு அரைத்து சாறாக்க வேண்டும். அடி கனமான பாத்திரத்தில் இந்த சாறை ஊற்றி, அடுப்பை மிதமான நெருப்பில் வைத்து, அரை மணி நேரம் சூடாக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து 20 நிமிடங்கள் அடுப்பில் வைக்க வேண்டும். இஞ்சி, பூண்டுடன் எலுமிச்சை சாறு சேருவதால் திரிய வாய்ப்பு இல்லை. இந்தக் கலவை ஆறியதும், 300 மி.லி தேனும், 50 மி.லி ஆப்பிள் சிடர் வினிகரும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.
தினமும் 5 - 10 மி.லி கஷாயத்துடன் சிறிது நீர் கலந்து அருந்தலாம். மூன்று மாதங்கள் வரை இந்த கஷாயத்தைக் குடித்துவந்தால், உடலில் உள்ள கொழுப்பின் அளவு குறையும். இதயத்தின் ஆற்றல் அதிகரிக்கும். மாரடைப்புக்கான வாய்ப்பு பெருமளவு குறையும்

***
tu dr
***

"வாழ்க வளமுடன்"
      

மாதவிலக்கு கோளாறு காரணமாக குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?


மாதவிலக்கு கோளாறு காரணமாக
குழந்தை பாக்கியம் தள்ளிப் போகிறதா?
ஊளைச் சதையால் சங்கடப்படுகிறீர்களா?
கல்யாணி சுவாமி சொல்வதை கேளுங்கள்.
கவலையை துரத்துங்கள்!
ப்பல்லாம் குழந்தை இல்லைனு ஏக்கப்படற தம்பதிகளோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு. குழந்தை பாக்கியம் கிடைக்காம போறதுக்கு உடல்நிலை, வாழ்க்கைமுறை, உணவுப் பழக்க வழக்கம்னு பல விஷயங்கள் காரணமா இருக்கு! மாதவிலக்குக் கோளாறுகள் இருந்தாலும்கூட கருத்தரிக்கறதுல சிக்கல் வரும். மாதவிலக்கு கோளாறுதான் காரணம்னா, அந்தக் கோளாறு நீங்கி, கருத்தரிக்கறதுக்கு என்னால ஒரு வைத்தியம் சொல்ல முடியும்.
 
 
அரை லிட்டர் பசும்பால்ல, கால் கிலோ மலைப் பூண்டை உரிச்சுப் போட்டு வேக வையுங்க. கலவை நல்லா சுண்டி அல்வா பதத்துக்கு வந்ததும், தேவையான அளவு கற்கண்டு... இல்லேன்னா, பனங்கற்கண்டு போட்டு கிளறி இறக்குங்க. மாதவிலக்கான நாள்லருந்து ஒரு வாரத்துக்கு தினமும் காலை யில வெறும் வயித்துல இதைச் சாப்பிட்டு வந்தா, கண்டிப்பா பலன் கிடைக்கும்.


இன்னொரு வைத்தியமும் இருக்கு! இப்ப பசும் மஞ்சள் கிடைக்கிற சீசன் இல்லையா?! அந்தப் பசும் மஞ்சளை அரைச்சு எடுத்த சாறு, மலை வேம்பு சாறு, நல்லெண்ணெய்... இது எல்லாத்தையும் சம அளவு எடுத்து கலந்து வெச்சுக்குங்க. இதை சூடு பண்ணத் தேவையில்லை. மாதவிலக்கான முதல் மூணு நாட்கள்ல காலை, சாயந்திரம்னு ரெண்டு வேளையும் தலா ரெண்டு டேபிள்ஸ்பூன் சாப்பிடணும். எனக்குத் தெரிஞ்சு நிறைய பெண்களுக்கு இந்த மருத்துவத்தை சிபாரிசு பண்ணி, பலன் கிடைச்சிருக்கு.


உடம்புல ஊளைச் சதை அதிகம் இருந்தாலும் கரு உண்டாகறதுல பிரச்னை வரும். தினம் அஞ்சுலருந்து பத்து எண்ணிக்கை வரை சின்ன வெங்காயத்தை எடுத்து பச்சையா சாப்பிட்டா, கொஞ்ச நாள்லயே ஊளைச் சதை குறைஞ்சு ஆளும் ஸ்லிம்மாகிடுவாங்க. சீக்கிரமே வீட்டுல ‘குவா குவா’ சத்தமும் கேட்கும்.


***
மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி
***


"வாழ்க வளமுடன்"
      

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி

சி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து ‘சப்ஜா விதை’!

இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிர்ல ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.


 வ ந்தது நிக்கறதுக்கு மருந்து சொன்னேன். வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. எங்க காலத்துல நாள் கிழமை, பண்டிகை சமயத்துல எங்களுக்கு ‘தூரத்துக்கு நாள்’ வந்துட்டா என்ன செய்வோம் தெரியுமா?! இப்போல்லாம் தூரம் தள்ளிப் போக கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கறாங்களே... அந்த ஜோலியே கிடையாது! இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!


 சி ல சமயம் ‘சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை’னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, கொஞ்சம்போல (ஒரு இணுக்கு) கற்பூரத்தை வெத்திலையில வச்சுத் தின்னாலும், சீக்கிரம் தூரமாகிடலாம். அதுவும் இல்லைன்னா, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் பலன் கிடைக்கும்.

***
மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி 
***


"வாழ்க வளமுடன்"

கைக்குழந்தைக்கு கைகண்ட மருந்து


‘‘இது மார்கழி மாசம். பனி கொட்டுது இல்லையா?
கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும்.
அதை ஓட ஓட விரட்டுறதுக்கு சிம்பிளான வைத்தியம் இருக்கு!
கு ழந்தையைப் பெத்துக்கறதுகூட பெரிய விஷய மில்லை. அதை வளர்த்து ஆளாக்கறதுக்குள்ள நாம அவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கு. அதுவும், குழந்தைக்கு ஒரு வயசு ஆகறவரை சொல்லவே வேண்டாம்... வயித்து வலிக்கு அழறதா, எறும்பு கடிச்சு அழறதானு தெரியாம நம்ம முழி பிதுங்கிடும்.
அஞ்சு மாசக் குழந்தை வயிறு வலிச்சு அழறதுனு வச்சுக்கோங்க... கடுக்காயை சந்தனம் மாதிரி உரைச்சு குழந்தையோட வயித்துல சதும்பப் பூசி விடணும். ஒரு வெத்தலையை விளக்குல காட்டி சூடுபடுத்தி, இளஞ்சூட்டுல குழந்தையோட தொப்புள்ல போடணும். ரெண்டே நிமிஷத்துல வலி நீங்கி, குழந்தை சிரிக்கும்.
சி ல குழந்தைகளுக்கு வாயில மாவு மாதிரி வெள்ளை படிஞ்சிருக்கும். அதை நீக்க, மாசிக்காயை சந்தனக்கல்ல உரசி, அந்த விழுதை குழந்தையோட நாக்குல தடவுனா போதும்... பிரச்னை சரியாகிடும்.
சின்னக் குழந்தை வாந்தி பண்ணினா, வசம்பை சுட்டு பொடி பண்ணி ஒரு ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து, நாக்குல தடவினா, சட்டுனு குணம் கிடைக்கும். வசம்புக்கு ‘பிள்ளை வளர்ப்பான்’னு பேரே உண்டு!
சூ டு காரணமா குழந்தைக்கு மலம் தண்ணியா போச்சுனா கவலைப்பட வேண்டாம். ஜாதிக்காயை தாய்ப்பால்ல ரெண்டு உரை உரைச்சு புகட்டிப் பாருங்க, உடனே குணம் கிடைக்கும். மூணு வேளை இப்படிக் கொடுத்தா முழுவதுமா குணமாயிடும். ஆனா, ஒரு விஷயம் ஜாக்கிரதை! ஜாதிக்காயை ரெண்டு உரைக்கு மேல உரைக்கக் கூடாது. டோஸ் ஜாஸ்தியாச்சுனா குழந்தைக்கு மயக்கம் வரவும் சான்ஸ் இருக்கு.
பொ துவாவே கைக்குழந்தைக்கு மாந்தம், உப்புசம்லாம் வராம இருக்க, உரை மருந்து கொடுப்போம். அதை எப்படி பண்றதுனு சொல்றேன்...
ஜாதிக்காய், மாசிக்காய், வசம்பு, கடுக்காய், சுக்கு எல்லாம் தலா ஒண்ணு எடுத்து வேகவையுங்க. அப்புறம் அதை எடுத்து வெய்யில்ல சுக்கா காய வச்சுக்கணும். குழந்தைக்கு தலைக்கு குளிப்பாட்டுறப்பல்லாம், இந்த மருந்துப் பொருட்களை சுத்தமான சந்தனக்கல்ல ஒரு உரை (அதிகம் கூடாது) உரைச்சு, ரெண்டு டேபிள்ஸ்பூன் தாய்ப்பால்ல கலந்து புகட்டணும்.
ஆறு மாசக் குழந்தைனா, பத்து நாளுக்கு ஒருமுறை ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீர்ல கலந்து, ஒரு பாலாடை அளவு புகட்டினா, குழந்தைக்கு வயித்துல வாயு சேராம இருக்கும்.
பி றந்த குழந்தைக்கு தலையில நல்லெண்ணெய் தேய்க்கக் கூடாது! தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி தேய்க்கணும். குழந்தை தலையிலயும் உடம்புலயும் தேய்க்கத் தேவையான அளவு சுத்தமான தேங்காய் எண்ணெயைக் காய வச்சு, அதுல ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப் பால் விடுங்க. அது படபடனு கொதிச்சு அடங்கினதும் ஒரு டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் பொடியைப் போட்டு இறக்குங்க.
குழந்தைக்கு ஒரு வயசு வரை இந்த எண்ணெயைத்தான் தேய்க்கணும். ஆனா, இந்த எண்ணெய் நல்லா போற மாதிரி பாசிப்பயறு மாவு தேய்ச்சு குளிப்பாட்டணும். இப்படி செஞ்சு வந்தா குழந்தைக்கு உடம்புல சொறி, சிரங்குனு எதுவும் வராம, மேனி பட்டு போல இருக்கும்.
ப்போ மார்கழி வந்தாச்சு. பனி கொட்டுது! கைக்குழந்தைகளுக்கு தடுக்குனு ஜலதோஷம் பிடிச்சுக்கும். அப்படி சளித் தொல்லையால குழந்தை அவதிப்பட்டா, கால் டீஸ்பூன் விளக்கெண்ணெய்ல, ரெண்டு பல் பூண்டைப் போட்டுக் காய்ச்சி, கசக்கி, அந்தச் சாறை தாய்ப்பால்ல கலந்து, ரெண்டு டேபிள்ஸ்பூன் கொடுத்தா... சளி அத்தனையும் மலத்துல வெளியேறிடும்.
இப்பல்லாம் ‘குழந்தைகளுக்கு தொட்டதுக்கெல்லாம் ஆன்ட்டிபயாடிக் கொடுக்கக் கூடாது’னு பேசிக் கறாங்களே... இந்த வைத்தியங்கள்லாம் அப்படி பக்க விளைவு எதுவுமில்லாமலே உடம்பை குணப்படுத்திடும். அதுக்கு நான் கியாரண்டி!

***
மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி
***"வாழ்க வளமுடன்"

      

மெனோபாஸ் தொல்லைகளை தவிர்க்க...

மெ னோபாஸ் சமயத்தில் ஏற்படும் எல்லா பிரச்னைகளுக்கும் ஆயுர்வேத மருந்துகளும், வீட்டு முறை சிகிச்சைகளும் உண்டு.

மெனோபாஸ் ஆரம்பிக்கும்போதே ‘கல்யாண குலம்’ என்ற ஆயுர்வேத மருந்தை சாப்பிட்டால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. இது எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். தினமும் ஒருவேளை இரவு படுக்கப் போவதற்கு முன் கல்யாண குலம் ஒரு டீஸ்பூன் எடுத்து அதை வெதுவெதுப்பான நீரிலோ அல்லது இளஞ்சூட்டில் இருக்கும் பாலிலோ கலந்து சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டால் மெனோபாஸ் கஷ்டமான விஷயமாக தோன்றாது.
மெனோபாஸின்போது அதிக உதிரப்போக்கைத் தடுக்க... ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பழுப்பு இலையாகவோ, பூச்சி அரித்ததாகவோ இல்லாமல், சுத்தமான இலைகளாக அவை இருப்பது நல்லது. அவற்றை கழுவி சுத்தம் செய்து, இலைகளின் காம்பு, நரம்பு எல்லாவற்றையும் எடுத்துவிட வேண்டும்.
பிறகு, அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேகவிட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கி சாறு எடுக்க வேண்டும். அந்த சாற்றுடன் சமபங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன் அருந்த வேண்டும்.
மெனோபாஸ் நேரத்தில் உதிரப்போக்கு வரும் நாட்களில் இந்த மருந்தை உட்கொண்டால் தொல்லை தீரும்.
மெனோபாஸ் சமயத்தில் வரும் தலைவலி, எரிச்சல், தூக்கமின்மை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்க்க ஆயுர்வேதத்தில் ஒரு மருந்து இருக்கிறது. அஸ்வகந்தாரிஷ்டம் என்பது அதன் பெயர். இதை, உணவு உட்கொண்ட பிறகு காலை ஒன்பது மணிக்கு ஒரு தடவையும், இரவு ஒன்பது மணிக்கு ஒரு தடவையும் முப்பது மில்லி அருந்தவேண்டும்.
கூடவே, திராக்ஷாதி கஷாயம் என்ற இன்னொரு மருந்தும் அவசியம். இதை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இந்த கஷாயம் பதினைந்து மில்லி எடுத்துக் கொண்டு அறுபது மில்லி சுடுதண்ணீரில் கலந்து காலை ஆறு மணிக்கு ஒரு தடவையும், மாலை ஆறு மணிக்கு இன்னொரு தடவையும் சாப்பிட வேண்டும்.
இந்த அரிஷ்டமும், கஷாயமும் எல்லா ஆயுர்வேத மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
மெனோபாஸ் சமயத்தில் சிலருக்கு உடம்பு சூடாகி உதிரப் போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க ‘நன்னாரி- சீந்தில் கொடி பால் கஷாயம்’ அருந்த வேண்டும்.
இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி ஆகிய இரண்டும் எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இவற்றில் தலா பதினைந்து கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நூறு மில்லி பால், நூறு மில்லி தண்ணீர் எடுத்து, இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்ணீரும் சேர்ந்து நூறு மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்கவைத்து எடுக்க வேண்டும். வெதுவெதுப்பான சூட்டில் இந்தப் பாலை, இரவு படுக்கப் போகும் முன்பு சாப்பிட வேண்டும்.
மெனோபாஸ் சமயத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க... மூட்டுகளில் தினமும் நல்லெண்ணெய் தேய்த்து மிருதுவாக மஸாஜ் செய்து விடவேண்டும். தினமும் கொஞ்சம் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும். வேளாவேளைக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும்!

***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. கைமேல பலன் கிடைக்கும்!’’


 
‘‘வளர்த்தியில்லாம போய், அதனாலயே
பதினாறு வயசாகியும் பொண்ணு வயசுக்கு வராம இருந்தா,
வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. கைமேல பலன் கிடைக்கும்!’’                                       
 
 
  பெ ரும்பாலும், இந்த காலத்துல பெண்குழந்தைங்க பத்து வயசிலயே ‘பெரியவ’ளாகிடுதுங்க. போஷாக்கான சாப்பாடுனு ஆரம்பிச்சு இதுக்கு பல காரணங்கள் இருக்கு. அதேநேரம், பதினாறு வயசு ஆகியும் ‘பெரியவ’ளாகாம இருக்கறவங்களும் உண்டு.


பதினாறு வயசை தாண்டியும் அந்தப் பொண்ணு வயசுக்கு வரலைன்னா, ஏதோ பிரச்னைனு அர்த்தம். கைவைத்தியமா சில விஷயங்களை முயற்சி பண்ணிப் பார்த்துட்டு, அதுக்கும் பலன் கிடைக்கலேன்னா உடனே மகப்பேறு டாக்டர்கிட்டே கூட்டிக்கிட்டுப் போறதுதான் உசிதம்.


கைவைத்தியம் என்னனு சொல்றேன், கேட்டுக்குங்க!
பெண்குழந்தை வளர்த்தியில்லாம போய், அதன் காரணமா பருவம் அடையாம இருந்தா, வெந்தய லேகியம் பண்ணிக் கொடுங்க. உடனே கைமேல பலன் கிடைக்கும். வெந்தய லேகியம் எப்படி பண்றதுனு கேக்கறீங்களா?


ஒரு பிடி வெந்தயத்தை எடுத்து, ராத்திரி கொஞ்சம் தண்ணில ஊறப் போட்டுடுங்க. மறுநாள் காலைல, ஊறின அந்த வெந்தயத்தை அம்மில (அம்மி இல்லேனா மிக்ஸில அரைச்சுக்கலாம். பாதகமில்லே. ஆனா, கூடுமானவரை மிக்ஸியை தவிர்க்கறது நல்லது. மருந்து இடிக்கற சின்ன சைஸ் கல்லுரலை இப்பல்லாம் வண்டில போட்டுக்கிட்டு வந்து விக்கறாங்களே... அதுல ஒண்ணு வாங்கி வச்சிக்கோங்களேன்) அரைச்சு, விழுதா எடுத்துக்கணும். இந்த விழுது எவ்வளவு இருக்கோ... அதே எடையளவுக்கு வெண்ணெயும், தித்திப்புக்கு தகுந்த மாதிரி கல்கண்டும் சேர்த்துப் போட்டு வாணலில வச்சு கிளறுங்க. இதோட கைப்பிடியளவு காய்ந்த திராட்சையும் சேர்த்துக்கணும்.
வெண்ணெய் உருகி, நெய் வாசனை வர்ற சமயத்துல லேகியத்தை அடுப்பிலிருந்து இறக்கி ஆற வையுங்க. லேகியம் கெட்டியாகி கமகமனு மணமா இருக்கும். ஆறினதும் ஒரு பாட்டில்ல போட்டு வச்சிக்கிட்டு தினமும் காலைல ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டையைச் சாப்பிடக் கொடுத்தா, சீக்கிரமே பொண்ணு புஷ்டியாகி பருவத்துக்கு வந்துடும்.
வத்தலும் தொத்தலுமா இருக்கற பெரியவங்ககூட இந்த வெந்தய லேகியத்தை சாப்பிடலாம். உடம்பு பூரிக்கும்!

***
- ‘மூலிகை மூதாட்டி’ கல்யாணி சுவாமி
***


"வாழ்க வளமுடன்"
      

பாட்டி வைத்தியம்


- இன்னும் சொல்றேன்...


பெ ண்குழந்தைங்க வயசுக்கு வர்றப்ப, என்னவிதமான ஊட்டச்சத்து கொடுக் கிறோமோ, அதுதான் பிற்காலத்துல குழந்தை பிறப்புல ஆரம்பிச்சு மெனோபாஸ் வரை தாக்குப் பிடிப்பதற்கான பலத்தைக் கொடுக்குது. இந்த சமயத்துல முழு உளுந்துல செஞ்ச பலகாரங்களை நிறைய சாப்பிடக் கொடுக்கணும். அவ்வளவும் சக்தி! அதனாலதான் அந்தக் காலத்துல சின்னப் பெண்களுக்கு அப்பப்போ உளுத்தங்களி செஞ்சு கொடுப்பாங்க! இடுப்பெலும்புக்கு பலம் சேர்க்கற அருமையான உணவு இது. சாப்பிடவும் ருசியா இருக்கும்!
சரி, உளுத்தங்களி எப்படி செய்வோம், தெரியுமா?
ஒரு டம்ளர் முழு உளுந்துக்கு கால் டம்ளர் பச்சரிசி எடுத்துக்கணும். முழு உளுந்தை களைஞ்சு உலர வெச்சு, வெறும் வாணலில வாசனை வர வறுத்து வச்சுக்கணும். அரிசியையும் இதேபோல தனியா வறுத்துக்கணும். ரெண்டையும் சேர்த்து மிஷின்ல கொடுத்து மாவா அரைச்சுக்கணும் (மிக்ஸில அரைச்சா நல்லா சலிச்சு எடுத்துக்குங்க. அந்தக் காலத்துல நாங்க வீட்டிலயே ‘எந்திரத்துல’ பிடிப்பிடியா போட்டு அரைச்சுப்போம்).
அப்புறம், அரைச்ச இந்த உளுந்து மாவுல திட்டமா தண்ணி கலந்து, வாணலில ஊற்றி, கைவிடாம கிளறணும். இன்னொரு பாத்திரத்துல ஒரு டம்ளர் வெல்லம் போட்டு, பாகு காய்ச்சிக்கணும்.
களி வெந்து வர்ற சமயத்துல தாராளமா ஒரு கை நெய் ஊத்தி, கூடவே, பாகையும் சேர்த்துப் போட்டு கிளறணும். கமகமனு களி வாசனை ஊரைக் கூட்டும். இறக்கி வச்சு சாப்பிடறப்ப இன்னும் ரெண்டு ஸ்பூன் நெய் ஊத்திக்கிட்டா, அவ்வளவு ருசியா இருக்கும்.

நெய்யைவிட நல்லெண்ணெய் சேர்த்து செஞ்சா இந்த களிக்கு இன்னும் ஊட்டம் அதிகம். அதேபோல வெல்லத்துக்குப் பதிலா கருப்பட்டி சேர்த்துக்கலாம்.
அரைச்சு வந்த இதே உளுந்து மாவுல வெல்லம் தூளாக்கிப் போட்டு, சூடா நெய் விட்டு உருண்டை பிடிச்சும் சாப்பிடலாம். பெண்குழந்தை வயசுக்கு வந்து ஒரு வருஷம் வரையாவது வாரத்துக்கு மூணு நாள் உளுத்தங்களி சாப்பிட்டா, பின்னால பிரசவ சமயத்துல சிசேரியன் அது இதுங்கற பேச்சே இருக்காது. சுகப்பிரசவம் சுபமா ஆகும்!                                    
***
fb
***"வாழ்க வளமுடன்"
      

15 செப்டம்பர், 2015

புதிதாக பிறந்த குழந்தைகள் பற்றிபுதிதாக பிறந்த குழந்தைகள் பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ள சில ஆச்சரியமான விடயங்கள் உள்ளது.


தாயின் வாசனை
பிறந்த நொடியிலிருந்தே தன் தாயின் வாசனையைக் குழந்தைகள் அறிந்து வைத்திருக்கும்.

 அதுமட்டுமின்றி பிறந்த சில வாரங்களில், தம் தாயை அவை அடையாளமும் கண்டு கொள்ளும்....
 


கருவில் கேட்கும் திறமை தாயின் கருவில் இருக்கும் குழந்தையால் வெளியே ஒலித்துக் கொண்டிருக்கும் பல விஷயங்களைக் கேட்க முடியும்.
நல்ல விசயங்களை சத்தமாகப் படித்துக் காண்பிப்பது, மெல்லிசை கேட்பது இவையெல்லாமே குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் விடயங்களாகும். சுவை தெரியாது பிறந்த குழந்தைக்கு நான்கு மாதங்கள் ஆகும் வரை உப்பின் சுவை தெரியாது.
இதற்கு சோடியத்தை உருவாக்கும் சிறுநீரகங்கள் முழு வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம். அகச் செவி நல்லா கேட்கும் பிறந்த குழந்தையிடம் உள்ள உறுப்புக்களில், அகச் செவி என்று அழைக்கப்படும் உள்புறக் காது மட்டுமே முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும்.
 


இளம் நீச்சல் வீரர்கள் பிறந்த குழந்தைகள் இயற்கையிலேயே நீச்சல் வித்தைகளைப் பெற்றிருக்குமாம்! தண்ணீருக்கு அடியில் குழந்தைகளால் மூச்சை அடக்க முடியும்.

 சுமார் பத்து மாதங்கள் கருவில் மிதந்து கொண்டிருந்த அனுபவம் தான் அது!

***
fb
***

"வாழ்க வளமுடன்"

குழந்தைகளின் உயரம் & எடை
                             
          AGE (years) MALE (HT) FEMALE (HT) MALE(WT) FEMALE(WT)
***
ts  doctorrajmohan
***


"வாழ்க வளமுடன்"

ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவு!

Six Tastes of Food - Food Habits and Nutrition Guide in Tamil
உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும். நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.

உணவு உண்ணும் முறை:

உடலில் இயக்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும். இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.

துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.

துவர்ப்பு:

உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.

இனிப்பு:

மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.

புளிப்பு:

உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நாரத்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.

காரம்:

பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.

கசப்பு:

பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.

உவர்ப்பு:

அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.

உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக் கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு. உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.

இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும். இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள வாத பித்த ரசாயங்கள் என்னும் முக்குற்றங்கள் நீங்கிவிடும். உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.

ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது. அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். ஞாயிறு எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது. கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.

எப்போதும் உணவ உண்ணும்போது, கிழக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது ஆயுளை வளர்க்கும். தெற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது புகழை வளர்க்கும். மேற்கு நோக்கி அமர்ந்துண்டால் அது செல்வத்தை வளர்க்கும். வடக்கு நோக்கி அமர்ந்துண்டால், அது அழிவுக்கு வழி வகுக்கும்.

எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும். உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து வர வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. படுக்கையில் அமர்ந்து கொண்டு உணவுண்ட பின்பு அப்படியே படுத்துக் கொள்கின்றவர்களுக்காகப் பரிதாப் படலாமே ஒழிய வேறு ஒன்றும் செய்ய இயலாது.

உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம். உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.

நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை இன்பத்தை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது. எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போதும் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள். உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.

'உண்பது நாழி' என்று, உணவின் அளவு குறிக்கப்படுகிறது. அதுவும் ஒரு நாளைக்கு எத்தனை முறை என்பதும் கூறப்பட்டுள்ளது. வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.

சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் போது உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.

***
kootal
***


"வாழ்க வளமுடன்"

குழந்தைகளுக்கு சளி, காய்ச்சலா வெற்றிலை சாறு கொடுங்க !

 
 
 
குழந்தைகளுக்கு சளி காய்ச்சல் என்றாலே பெற்றோர்கள் பதறி அடித்துக்கொண்டு மருத்துவரிடம் ஓடுகின்றனர். ஆனால் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் எதற்கும் பதற்றப்படத் தேவையில்லை சின்ன சின்ன கை வைத்தியங்களை செய்து குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை செய்வார்கள். அப்புறம் மெதுவாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாம். சிறு குழந்தைகளின் சளியை போக்குவதில் வெற்றிலை மிக முக்கிய பங்காற்றுகிறது. மூலிகை குணம் நிறைந்த வெற்றிலை குழந்தைகளின் நோயை போக்குவது குறித்து அனுபவம் வாய்ந்த பாட்டி சொல்வதை கேளுங்களேன்.

மூச்சுதிணறல் குணமாகும்
குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும் மூச்சுத் திணறலும் ஏற்படும் அவர்களுக்கு வெற்றிலை சிறந்த நிவாரணம் அளிக்கிறது. வெற்றிலையை லேசாக மெழுகுவர்த்தி நெருப்பில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

நுரையீரல் நோய்கள்
குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல், ஜன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

நுரையீரல் சம்பந்தமான நோய்கள் இருந்தால் வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்படும். வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

மலச்சிக்கல் நோய் குணமாக

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

கட்டிகள் குணமாகும்
வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். தலையில் தண்ணீர் கோர்த்து மூக்கில் விடாது ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும். வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். இதை இரவில் செய்தால் நல்லது.சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.

குரல் வளம் கிடைக்கும்
வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும். வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலிட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.


***
fb
***


"வாழ்க வளமுடன்"
      

ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...

Engr Sulthan's photo.


apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன்.
அதிர்ச்சியாக இருந்தது.
PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு
மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.
 

எவ்வாறு அறிவது:

 1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி
உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )
 

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என
ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.
 

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என
ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.
 

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.
* அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!
 

***
fb
***"வாழ்க வளமுடன்"
      

13 செப்டம்பர், 2015

இரும்புச்சத்து அதிகமுள்ள வெந்தயக் கீரை..!


இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தயக் கீரைகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மருந்துப் பொருளாக மட்டுமில்லாமல் சமையல் பதார்த்தங்களிலும் வெந்தயக் கீரையின் பங்கு உண்டு. அதிலுள்ள சத்துக்களை பட்டியல் போடுவோமா...

* வெந்தயக் கீரைகள் ஈரபதமிக்க நிலங்களில் செழித்து வளரக் கூடியவை. இது பேப்பேசியே என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. இதன் அறிவியியல் பெயர் 'ட்ரிகோனலீலா பியோநம் கிரேசியம்'.

* வெந்தயக் கீரைகள் இரும்புச் சத்துப் பொருட்களை அதீத அளவில் கொண்டு உள்ளன. இரும்புச் சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை நோயான அனீமியா வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது.

* ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

* 'வைட்டமின்-கே' சத்துப் பொருட்கள் கணிசமான அளவில் நிறைந்துள்ளன. இவை கண்களின் பார்வைத் திறனை அதிகரிப்பதோடு,பார்வைக் கோளாறுகளை சரி செய்யவும் உதவுகின்றன.

* வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்.

* நிட்டானிக் அமிலம் இதில் உள்ளது. இது தலைமுடி உதிர்தல், தலைமுடி வலுவின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் திறன் பெற்றது.

* உடலுக்கு கேடு விளைவிக்கும் கூடுதல் கொழுப்புப் பொருட்களை செரிக்க செய்யும் ஆற்றல் வெந்தயக் கீரைக்கு உண்டு. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் கொழுப்பின் அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.

* பெண்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு நன்மைகள் கிடைக்கச் செய்கிறது வெந்தயக்கீரை. குறிப்பாக கர்ப் பிணி பெண்களுக்கு தாய்ப்பாலை பெருக்கவும், பிரசவ கால நன்மைக்கும் இவை பெரிதும் உதவுகின்றன.

* பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுகளில் இருப்பதால் மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.

* வெந்தயக் கீரைகள் உணவு செரிமானத்தில் பெரும் பங்கு வகிக்கின்றன. உட்கொள்ளும் உணவினை சீராக செரிக்க செய்யவும், குடலில் தங்கியுள்ள ஆக்சிஜன் பிரீரேடிக்கல் நச்சுகளை வெளியேற்றவும் இவை பயன்படுகின்றன.

* கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க வல்லது.

***
bookss
***"வாழ்க வளமுடன்"

30 வகை அடுப்பில்லாத சமையல்..!


''வேக வைத்தல், வறுத்தல், பொரித்தல் போன்ற சமையல் முறைகளுக்கு உட்படுத்தப்படும்போது... சமையலில் உபயோகிக்கப்படும் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றில் உள்ள சத்துக்களில் பெரும்பாலானவை அழிந்துவிடுகின்றன'' என்று உணவியலாளர்கள் நெடுங்காலமாக எச்சரிக்கை மணி ஒலித்து வருகிறார்கள்.

அதேசமயம், ''சமைக்காமலே சாப்பிடுவது என்பதெல்லாம் சரிப்பட்டு வருமா?'' என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. இந்தக் கேள்விக்கு ''சரிப்பட்டு வரும்'' என்று பதில் அளிக்கும் சமையல் கலை நிபுணர் , அடுப்பை பற்ற வைக்காமலே செய்யக்கூடிய 30 வகை உணவுகளுக்கான ரெசிபிகளை இங்கே வழங்குகிறார்.

''இந்த உணவுகளை அடிக்கடி செய்து கொடுத்தால்... உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்'' என்று அக்கறையுடன் கூறுகிறார்...


வேர்க்கடலை - பேபிகார்ன் புரட்டல்

தேவையானவை:

பேபிகார்ன் - அரை கப் (பொடியாக நறுக்கவும்), பச்சை வேர்க்கடலை - கால் கப், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - ஒரு டீஸ்பூன், பூண்டு - 3 பல் உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

காய்ந்த மிளகாய், பூண்டு, தனியா மூன்றையும் நீர் சேர்க்காமல் அரைக்கவும். வேர்க்கடலையை நீரில் ஊற வைத்து, தோல் உரித்து, நறுக்கிய பேபிகார்ன், உப்பு, சீரகத்தூள் ஆகியவற்றுடன் சேர்த்துக் கலக்கவும். அரைத்து வைத்த பொடியை மேலே தூவி, சாப்பிடக் கொடுக்கவும்.

திடீர் பஞ்சாமிர்தம்

தேவையானவை:

வாழைப்பழம் - ஒன்று (வட்டமாக நறுக்கவும்), பேரீச்சம்பழம் - 10 (கொட்டை நீக்கவும்), நறுக்கிய ஆப்பிள் - கால் கப், கமலா ஆரஞ்சு சுளை - 4 (தோல், கொட்டை நீக்கவும்), மாதுளை முத்துகள் - சிறிதளவு, டயமண்ட் கற்கண்டு - 2 டேபிள்ஸ்பூன், நாட்டுச்சர்க்கரை - கால் கப், தேன் - சிறிய பாட்டில் ஒன்று.

செய்முறை:

அனைத்து பழங்களையும் பெரிய பேஸினில் போட்டுக் கலக்கி, கற்கண்டு, நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கிளறி, தேவையான அளவு தேன் ஊற்றிப் பிசைந்து சாப்பிடக் கொடுக்கவும்.

மசாலா மோர்

தேவையானவை:

கெட்டித் தயிர் - ஒரு கப், மிகப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - அரை கப், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - தேவையான அளவு, தண்ணீர் - 5 கப், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

கெட்டித் தயிரை நன்றாகக் கடைந்து உப்பு, தண்ணீர் சேர்த்து மோராக்கவும். இதில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்க்கவும். சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மூன்றையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைத்து, மோரில் சேர்த்து நன்றாக ஆற்றி வைக்கவும்.

நெல்லிக்காய் அரிஷ்டம்

தேவையானவை:

நெல்லிக்காய் - அரை கிலோ, பனைவெல்லம் - அரை கிலோ, மண்பானை - ஒன்று (சுத்தமானது).

செய்முறை:

பனைவெல்லத்தைப் பொடி செய்யவும். ஈரம் இல்லாத மண்பானையில் ஒரு கை வெல்லம், ஒரு கை நெல்லிக்காய் என மாற்றி மாற்றிப் போட்டு, கடைசியாக மேல் பூச்சாக வெல்லம் போட்டு, சுத்தமான வெள்ளைத் துணியால் பானையை மூடி, வெயில் படாத இடத்தில் வைக்க வேண்டும். 40-45 நாட்களுக்குப் பிறகு துணியில் கொட்டி நெல்லிக்காயின் கொட்டைகளை நீக்கி உபயோகப்படுத்தலாம். கண்ணாடி பாட்டில் அல்லது காற்றுப்புகாத டப்பாவில் வைத்து தினமும் சாப்பிடலாம்.


வாழைத்தண்டு சாறு

தேவையானவை:

சிறிய வாழைத்தண்டு - ஒன்று, பூண்டு - 2 பல், ஓமவல்லி இலை, வெற்றிலை - தலா ஒன்று, துளசி - சிறிதளவு, மிளகு - 3.

செய்முறை:

வாழைத்தண்டை பட்டை, நார் நீக்கி, வட்ட வட்டமாக நறுக்கி... பூண்டு, ஓமவல்லி இலை, வெற்றிலை, துளசி, மிளகு சேர்த்து, நீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து வடிகட்டவும்.

வாரம் ஒரு முறை இந்த சாற்றை அரை டம்ளர் அளவு பருகினால்... சளி, இருமல் தொந்தரவில் இருந்து பாதுகாக்கும்.


பருப்பு - காய்கறி கோசுமல்லி

தேவையானவை:

பாசிப்பருப்பு - ஒரு கப், வெள்ளரி துருவல், கேரட் துருவல், தேங்காய் துருவல், கோஸ் துருவல், பீட்ரூட் துருவல் - தலா கால் கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லித் தழை - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவிடவும். பிறகு, நீரை வடித்து பாசிப்பருப்புடன் அனைத்துத் துருவல்களையும் சேர்த்து... உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கிளறி, எலுமிச்சைச் சாறு சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.


பிஸ்கட் பேடா

தேவையானவை:

மேரி பிஸ்கட் - 6, ரஸ்க் - 2, பால் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு, பனங்கற்கண்டு (பொடித்தது) - ஒரு டீஸ்பூன், செர்ரி பழம் - சிறிதளவு.

செய்முறை:

மேரி பிஸ்கட்டையும், ரஸ்க்கையும் உடைத்து, மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைக்கவும். இதனுடன் பால் பவுடர், பனங்கற்கண்டு சேர்த்து தேன் விட்டு பிசைந்து உருண்டையாக பிடித்து, தட்டையாக்கினால்... பிஸ்கட் பேடா தயார். நறுக்கிய செர்ரி பழத்தை, இதன் மேல் வைத்து அலங்கரிக்கவும்.


அன்னாசி அச்சு இனிப்பு

தேவையானவை:

அன்னாசிபழச் சாறு - 50 மில்லி, பால் பவுடர் - 5 டேபிள்ஸ்பூன், பைனாப்பிள் ஆயில் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - கால் டீஸ்பூன், ஐசிங் சுகர் - 4 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

பால் பவுடர், ஐசிங் சுகரை சலித்துக் கொண்டு... அவற்றுடன் பைனாப்பிள் ஆயில், அன்னாசி பழச்சாறு சேர்த்துப் பிசைந்து வைக்கவும். சாக்லேட் அச்சு அல்லது பிஸ்கட் கட்டர் உதவியுடன் விருப்பமான வடிவம் கொடுத்து, ஃப்ரிட்ஜில் முக்கால் மணி நேரம் வைத்து எடுத்தால்... அசத்தலான சுவையில் அன்னாசி அச்சு இனிப்பு ரெடி.


தேங்காய் - மாங்காய் - சோள சுண்டல்

தேவையானவை:

முற்றிய தேங்காய் - முக்கால் மூடி, அதிக புளிப்பிலாத மாங்காய் (சிறியது) - ஒன்று, அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் - முக்கால் கப், வெள்ளை மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - ஒரு சிட்டிகை, நறுக்கிய வெள்ளரிக்காய் - கால் கப், எலுமிச்சை பழம் - அரை மூடி, நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

தேங்காய், வெள்ளரி, மாங்காய் மூன்றையும் சிறுசிறு சதுரங்களாக வெட்டிக் கொள்ளவும். இவற்றுடன் அமெரிக்கன் ஸ்வீட் கார்ன் சேர்த்துக் கலந்து... உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், தனியாத்தூள் சேர்த்துக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். மேலே பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவவும்.

மாலை நேர டிபனுக்கு சரியான சாய்ஸ் இந்த சுண்டல்.


இனிப்பு அவல் பொங்கல்

தேவையானவை:

தட்டை அவல் - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், நாட்டுச்சர்க்கரை அல்லது வெல்லத் துருவல் - கால் கப், பொடியாக நறுக்கிய பேரீச்சை - கால் கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, காய்ந்த திராட்சை - 10, செர்ரி பழம் - 5 (ஒவ்வொன்றையும் 4 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்).

செய்முறை:

அவலை தண்ணீரில் நன்றாக அலசி எடுத்து, நீர் தெளித்து 5 - 10 நிமிடம் ஊற வைக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், நாட்டுச் சர்க்கரை அல்லது வெல்லத் துருவல், பொடியாக நறுக்கிய பேரீச்சை, செர்ரி பழம், காய்ந்த திராட்சை சேர்த்து... பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கினால், இனிப்பு அவல் பொங்கல் ரெடி.

இது ரத்த சோகையில் இருந்து நிவாரணம் அளிக்கும். குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் எளிதில் ஜீரணமாகும். காலை, இரவு நேர டிபனாக சாப்பிடலாம்.


மஞ்சள்பூசணி - தேங்காய்ப் பால் பாயசம்

தேவையானவை:

துருவிய மஞ்சள்பூசணி - அரை கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், பச்சைக் கற்பூரம் - மிளகளவு, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன், பால் பவுடர் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தேங்காய்ப் பாலில், பால் பவுடர் சேர்த்துக் கலக்கி, துருவிய மஞ்சள்பூசணி சேர்க்கவும். பிறகு, ஏலக்காய்த்தூள் தூவி, பொடித்த பச்சைக் கற்பூரம், துருவிய வெல்லம் சேர்த்துக் கலக்கவும். விருப்பப்பட்டால், பொடியாக நறுக்கிய முந்திரியைத் தூவலாம்.பொட்டுக்கடலை மாவு உருண்டை

தேவையானவை:

பொட்டுக் கடலை மாவு - ஒரு கப், ஏலக் காய்த்தூள் - ஒரு சிட்டிகை, பனங் கற்கண்டு - கால் கப், முந்திரி துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேங் காய்ப் பால் - தேவையான அளவு.

செய்முறை:

பொட்டுக்கடலை மாவுடன் ஏலக்காய்த்தூள், பனங் கற்கண்டு, முந்திரி துருவல் சேர்த்து... தேங்காய்ப் பால் விட்டுப் பிசைந்து, உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

இந்த மாவு உருண்டை, குழந்தை களின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் கொண்டது.


பழம் - பனீர் யோகர்ட்

தேவையானவை:

தோல் சீவி நறுக்கிய அன்னாசிப்பழம் - 3 டேபிள்ஸ்பூன், கொழுப்பு நீக்கப்பட்ட தயிர் (ஸ்கிம்ட் யோகர்ட் - ரெடிமேடாக சூப்பர் மார்க்கெட்டில் கிடைக்கும்) - ஒரு கப், துருவிய பனீர் - சிறிதளவு, மாதுளை முத்துகள் - 3 டேபிள்ஸ்பூன், அன்னாசி எசன்ஸ் - ஒரு துளி.

செய்முறை:

நறுக்கிய அன்னாசிப்பழம், மாதுளை முத்துகளை தயிருடன் சேர்த்து, பனீர் துருவல் போட்டுக் கலக்கவும். ஒரு துளி அன்னாசி எசன்ஸை கடைசியாகச் சேர்க்கவும்.கொத்தமல்லி - புதினா மசாலா பொரி

தேவையானவை:

பொரி - ஒரு கப், நறுக்கிய கொத்தமல்லி - அரை கப், நறுக்கிய புதினா - கால் கப், கறிவேப்பிலை - சிறிதளவு (நறுக்கவும்), பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), சிறிய சதுரமாக நறுக்கிய மாங்காய் - 2 டேபிள்ஸ்பூன், சாட் மசாலாத்தூள்- ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - சிறிதளவு.

செய்முறை:

நறுக்கிய புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலையைபொரியில் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், மாங்காய் சேர்த்து... உப்பு, சாட் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் தூவிக் கிளறவும். கடைசியாக, எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.

விருப்பப்பட்டால்... ஓமப்பொடி (கார வகை), தட்டை, பொரித்த கார்ன் ஃப்ளேக்ஸை ரெடிமேடாக வாங்கி கலந்தும் சாப்பிடத் தரலாம்.


முளைகட்டிய பயறு சாலட்

தேவையானவை:

முளைகட்டிய பச்சைப் பயறு, முளைகட்டிய கறுப்பு கொண்டைக்கடலை, முளைகட்டிய காராமணி (சேர்த்து) - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), மிளகாய்த்தூள் - ஒரு சிட்டிகை, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முளைகட்டிய பயறு வகைகளுடன்... உப்பு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயம், இஞ்சித் துருவல், எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலந்து வைத்தால்... சத்தான சாலட் தயார்.


சுக்கு பானகம்

தேவையானவை:

வெல்லத் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் - ஒரு கப், ஜாதிக்காய் பொடி, ஏலக்காய்ப் பொடி, சுக்குப் பொடி - தலா ஒரு சிட்டிகை, பச்சைக் கற் பூரம் - கடுகளவு.

செய்முறை:

வெல்லத்தை தண்ணீரில் கரைத்து வடி கட்டவும். கொடுக்கப்பட்டுள்ள பொடி வகைகளை வெல்லக் கரைசலில் சேர்த்து, பொடித்த பச்சைக் கற்பூரத்தை போட்டு, நன்கு ஆற்றி பருகவும்.

சுவையான, மணமான, இந்த பானகம் உடனடி எனர்ஜி தரும்.


பழப் பச்சடி

தேவையானவை:

ஆப்பிள் - பாதி, துருவிய தேங்காய் - ஒரு டேபிள்ஸ்பூன், சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன், வாழைப்பழம் - ஒன்று, கெட்டித் தயிர் - ஒரு கப், உலர்திராட்சை - ஒரு டீஸ்பூன், பாதாம் - முந்திரி துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய செர்ரி பழம் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பேரீச்சை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும். வாழைப் பழத்தை வட்டமாக நறுக்கவும். கடைந்த கெட்டித் தயிரில் சர்க்கரை சேர்த்து, கொடுக்கப்பட்டுள்ள மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த் துக் கலக்கினால்... மிகச் சுவையான பழப் பச்சடி ரெடி.

சர்க்கரைக்குப் பதில் துருவிய வெல்லம் சேர்த்தும் செய்யலாம்தினை உருண்டை

தேவையானவை:

தினை மாவு - ஒரு கப், வெல்லத் துருவல் - கால் கப், காய்ந்த திராட்சை, பாதாம் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், தேன் - தேவையான அளவு.

செய்முறை:

தினை மாவுடன் வெல்லம், திராட்சை, பாதாம், தேங்காய் அனைத்தையும் சேர்த்துக் கலந்து, தேன் ஊற்றிப் பிசையவும். மாவை சிலிண்டர் வடிவில் சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.

நார்ச்சத்து மிகுந்த உணவு இது.


காய்கறி பர்கர்

தேவையானவை:

பர்கர் பன் - 2 (பேக்கரியில் கேட்டு வாங்கிக் கொள்ள வும்), குடமிளகாய், தக்காளி - தலா ஒன்று, பெரிய வெங்காயம் - 2, கறுப்பு, வெள்ளை எள் (சேர்த்து) - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - இஞ்சி - பச்சை மிளகாய் - உப்பு சேர்த்து அரைத்த சட்னி - ஒரு டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை:

பன்னை இரண்டாக நறுக்கவும். ஒருபுறம் வெண்ணெய், மறுபுறம் அரை டேபிள்ஸ்பூன் கொத்த மல்லி சட்னி தடவவும் (உட்புறத்தில்). அதன் நடுவே பொடியாக நறுக்கிய குடமிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை 2 டேபிள்ஸ்பூன் எடுத்து வைக்கவும். பன்னை மூடவும். அதன் மேல் சிறிது வெண்ணெய் தடவி, கறுப்பு, வெள்ளை எள் தூவி பரிமாறவும். மற்றொரு பன்னையும் இதேபோல் செய்யவும்.உலர்பழம் - கோதுமை ரொட்டி அடுக்கு

தேவையானவை:

கோதுமை பிரெட் - 3 ஸ்லைஸ், மிக்ஸ்டு ஃப்ரூட் ஜாம் - தேவையான அளவு, நறுக்கிய செர்ரி பழம், காய்ந்த திராட்சை, பதப்படுத்திய அத்திப்பழம் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - தலா ஒரு டீஸ்பூன், உடைத்த பாதாம், பிஸ்தா, முந்திரிப் பருப்பு, அக்ரூட் (சேர்த்து) - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஒரு பிரெட் ஸ்லை ஸில்... செர்ரி, அத்திபழம், காய்ந்த திராட்சையை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் உடைத்த பாதாம், பிஸ்தா, அக்ரூட், முந்திரிப் பருப்பு ஆகியவற்றை வைக்கவும். மற்றொரு ஸ்லைஸில் மிக்ஸ்டு புரூட் ஜாம் தடவவும். 3 ஸ்லைஸ்களையும் ஒன்றன்கீழ் ஒன் றாக அடுக்கி, நடுவே வெட்டி பரிமாறவும்.


பப்பாளிப்பழக் கூழ்

தேவையானவை:

பப்பாளிப்பழம் - ஒன்று (நன்றாக பழுத்தது), மாதுளை முத்துகள் - கால் கப், உலர் திராட்சை - 50 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை.

செய்முறை:

பப்பாளிப்பழத்தை தோல் சீவி நறுக்கி, மிக்ஸியில் அரைக்கவும். இந்தக் கூழில் மாதுளை முத்துகள், காய்ந்த திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கவும்.

சத்தான இந்தக் கூழ், மலச்சிக்கலை குணப்படுத்தும்.ஊட்டச்சத்து பழ பானம்

தேவையானவை:

தர்பூசணி - அரை பழம், புதினா - சிறிதளவு, டைமண்ட் கற்கண்டு - ஒரு டீஸ்பூன், நெல்லிக்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.

செய்முறை:

தோல் சீவி நறுக்கிய தர்பூசணியுடன் சிறிதளவு புதினா இலை, கற்கண்டு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் நெல்லிக்காய் துருவல் கலந்து பருகவும்.

வித்தியாசமான சுவையில் இருக்கும் இந்த பானம், ரத்த விருத்திக்கு நல்லது.


சிவப்பு அவல் - காய்கறி பிரியாணி

தேவையானவை:

சிவப்பு அவல் - ஒரு கப், முள்ளங்கி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், முட்டைகோஸ் துருவல், கேரட் துருவல் - தலா கால் கப், தக்காளி - ஒன்று (பொடியாக நறுக்கவும்), நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - கால் கப், மிளகு - சீரகப் பொடி - ஒரு டீஸ்பூன், தேங்காய்ப் பால் - தேவையான அளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

தேங்காய்ப் பாலில் சிவப்பு அவலை 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, காய்கறிகளை சேர்த்து... உப்பு, மிளகு - சீரகப் பொடி சேர்த்துக் கிளறி பரிமாறவும்.


கோதுமைப் பால்

தேவையானவை:

முழு கோதுமை - 100 கிராம், தேங்காய் - அரை மூடி, அச்சு வெல்லம் - 2.

செய்முறை:

முதல்நாள் இரவே கோதுமையை ஊற வைத்துவிட வேண்டும். அடுத்த நாள் இதை மிக்ஸியில் அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். தேங் காயை துருவி மிக்ஸியில் அடித்து தேங்காய்ப் பால் எடுத் துக் கொள்ளவும். இரண்டு பாலையும் வடிகட்டி, ஒன்றாக கலந்து கொள்ளவும். அச்சு வெல்லத்தை பொடித்து நீர் விட்டு வடிகட்டி, அதை பாலுடன் சேர்த்து நன்கு ஆற்றி அருந்தவும்.


ஓட்ஸ் அவியல்

தேவையானவை:

ஓட்ஸ் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், முந்திரி - 6 பச்சை திராட்சை - 15, மாதுளை முத்துகள் - கால் கப், தயிர் - ஒரு கப், மிகவும் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

ஓட்ஸை மிக்ஸியில் ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும். இதை பாதி தயிரில் 15 நிமிடம் ஊற வைக்கவும். பச்சை மிளகாய், தேங்காய் துருவல், முந்திரியுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும். இதை ஊற வைத்த ஓட்ஸில் சேர்த்து, மீதி தயிரையும் சேர்த்துக் கலந்து வைக்கவும். நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லியை அதனுடன் சேர்க்கவும். கடைசியாக, பச்சை திராட்சை, மாதுளை முத்துகள் சேர்த்து, கிண்ணத்தில் போட்டு ஸ்பூன் போட்டு, சாப்பிடக் கொடுக்கவும்கலர்ஃபுல் அவல் உப்புமா

தேவையானவை:

அவல் - ஒன்றரை கப், கேரட் துருவல், பொடி யாக நறுக்கிய தக்காளி, நறுக்கிய கொத்தமல்லி, தேங்காய் துருவல் - தலா அரை கப், வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்), பனீர் துருவல் - கால் கப், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அவலை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து, மூன்று பாகமாக பிரித்துக் கொள்ளவும். கேரட் துருவல், பொடியாக நறுக்கிய தக்காளியை ஒன்று சேர்த்து, இதை ஒரு பாகம் அவலுடன் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் மிளகுத்தூள், சிறிதளவு உப்பு சேர்க்கவும்.

தேங்காய் துருவல், பனீர் துருவல், உப்பு, வெள்ளை மிளகுத்தூளை ஒன்றாக சேர்த்து, இதனை இரண்டா வது பாக அவலில் கலக்கவும். மூன்றா வது பாக அவலில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உப்பு, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்துக் கிளறவும்.

விருப்பமான சுவையுள்ள அவலை தனித்தனியாக சாப்பிடலாம். அல்லது, கப் அல்லது பவுலில் கீழே கொத்த மல்லி அவல், அடுத்து தேங்காய் - பனீர் அவல், அதன்மேல் கேரட், தக்காளி அவலை வைத்து அழுத்தி... கீழே கவிழ்த்தால், கலர்ஃபுல் அவல் உப்புமா ரெடி.


சௌசௌ தயிர் பச்சடி

தேவையானவை:

தோல் சீவி துருவிய சௌசௌ - 2 டேபிள்ஸ்பூன், துருவிய வெள்ளரி - 2 டேபிள்ஸ்பூன், வெங்காயம் - ஒன்று (நீளமாக நறுக்கவும்), கொத்தமல்லித் தழை - சிறிதளவு, கெட்டித் தயிர் - ஒரு கப், முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 15 நிமிடம் ஊற வைக்கவும்), தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

முந்திரி, தேங்காய் துருவலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கெட்டித் தயிரை கடைந்து, அரைத்த விழுதைச் சேர்க்கவும். சௌசௌ, வெள்ளரி, வெங்காயத்தைப் பிழிந்து இதனுடன் சேர்த்து, உப்புப் போட்டு கலக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை மேலே தூவி பரிமாறவும்.


காய்கறி ஊறுகாய்

தேவையானவை:

மாங்காய், கேரட்- தலா ஒன்று, சின்ன வெங்காயம் - 8 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை பழம் - அரை மூடி, உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

மாங்காய், கேரட்டை சிறிய சதுரங்களாக நறுக்கவும். இவற்றுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயத்தையும் சேர்க்கவும். மேலே எலுமிச்சை பழத்தை பிழிந்து கலக்கவும்.

இந்த ஊறுகாயை சப்பாத்தி, தயிர் சாதத்துக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம்.பழ லஸ்ஸி

தேவையானவை:

தயிர் - ஒரு கப், சர்க்கரை - 2 டீஸ்பூன், நன்றாகப் பழுத்த கொய்யாப்பழம் - ஒன்று (சீஸனுக்கு தகுந்த பழங் களைப் பயன்படுத்தலாம்), கறுப்பு திராட்சை - 10.

செய்முறை:

கெட்டித் தயி ருடன் சிறிதளவு தண்ணீர், சர்க்கரை சேர்த்து, நறுக்கிய கொய்யாவை சேர்த்து மிக்ஸி யில் அடிக்கவும். இதில், விதை நீக்கிய கறுப்பு திராட் சையை இரண்டாக நறுக்கிப் போட்டு பருகவும்.பச்சை வேர்க்கடலை துவையல்

தேவையானவை:

பச்சை வேர்க்கடலை - அரை கப், பொட்டுக்கடலை - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - 2 பல், பச்சை மிளகாய் - ஒன்று, முந்திரிப் பருப்பு - 4 (நீரில் 10 நிமிடம் ஊற வைக்கவும்), உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைக்கவும்.

எல்லா வகை டிபனுக்கும் சிறந்த சைட் டிஷ் இது.


***
a vikatan
***"வாழ்க வளமுடன்"
      

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "