...

"வாழ்க வளமுடன்"

24 ஜனவரி, 2011

செதில் உதிர் நோய் - Psoriasis


மீன் செதில்கள் போல உடலில் அங்காங்கே தோன்றும். சொறிந்தால், உதிரும். தானேயும் உதிர்வது உண்டு. இதற்கு செதில் உதிர் நோய் என்று பெயர். ஆங்கிலத்தில் சொரியாஸ் (Psoriasis) என்பார்கள்.


இது தொல்லை தரும் நோய். பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கும். அரிப்பு எடுக்கும். சொறிந்தால், இரத்தம் கசிந்து புண்ணாகும். உரிய நேரத்தில் மருத்துவம் செய்துகொள்ளாவிட்டால், மூட்டுவலி ஏற்படும். எலும்புகள் பலவீனம் அடையும்.

*

செதில் உதிர் நோய் எப்படி ஏற்படுகிறது?

மனக் கவலை

மனக் கவலையால் ஏற்படும் நோய்களில் இந்த செதில் உதிர் நோயும் ஒன்று. மனதில் எந்நேரமும் கவலை. ஏதாவது சிந்தனை. நெருக்கடி. இதனால் சரியான தூக்கமின்மை. இதைத் தொடர்ந்து செதில் உதிர் நோய் வரும்.


உடலில் புரதச்சத்து குறைந்தாலும் இந்நோய் வரும். ஊக்கிகள் (ஆர்மோன்) சரியாக வேலை செய்யாத போதும் இந்த நோய் வரும்.


ஊக்கிகள் ஒழுங்காக இல்லாத பெண்களுக்கு மாதவிலக்கு ஒழுங்காக இருக்காது. இப்படிபபட்ட பெண்களையும் இந்த நோய் பற்றிக் கொள்ளும்.

*

பரவக்கூடியது

இது தொற்று நோய் அல்ல. ஒருவரிடமிருந்து ஒருவருக்குப் பரவாது. ஆனால், கட்டிலில் படுத்திருக்கும்போது செதில் உதிரும்.

நம் உடம்பிலேயே இது பரவக்கூடியது. முதலில் முழங்கையில், கை அக்குளில், கை நகத்துள், உச்சந்தலையில் ஒரு பொட்டுப் போல வரும். அந்த இடத்தைச் சுற்றிப் பரவும். பிறகு அங்கங்கே வரும். இந்நோயின் ஒரு தனித்தன்மை என்றால், வலக்காலில் வந்தால் இடக்காலிலும் அதே இடத்தில் வரும். இடக்கையில் வந்தால், வலக்கையிலும் வரும். உடலில் எந்த இடமாக இருந்தாலும் சரி, வலம் - இடம் இருபுறமும் வரும்.


ஆண், பெண் குறிகளில் வரக்கூடும். பெண்களுக்கு தொடை அக்குள், கை அக்குள்களில் வந்து வெளியே சொல்ல முடியாமல் செய்துவிடும்.

*

பால் குடியுங்கள்

உடலில் உள்ள சுண்ணாம்புச்சத்துதான் செதிலாக உதிர்கிறது. இதனால் எலும்பு, பற்கள் பலவீனம் ஆகும். மூட்டுவலியும் ஏற்படும். இதைத் தடுக்க காலை மாலை இருவேளையும் பால் குடிக்க வேண்டும்.


சாப்பாட்டில் புரதச்சத்தை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பருப்பு, கொட்டை, விதைகளில் இந்தச் சத்து இருக்கிறது. நிலக்கடலை, பொரிகடலை, முந்திரி சாப்பிடலாம். பச்சைத் தக்காளி, எலுமிச்சை சாறு, ஆரஞ்சுப் பழங்களை ஒதுக்க வேண்டும். எந்த குளிர்பானமும் குறிப்பாக கோலாக்கள் குடிக்கக்கூடாது. மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும்.


செதில்கள் மீது இரவில் தேங்காய் எண்ணெய் தடவிக் கொள்ளவும். காலையில் அரப்புத்தூள் தேய்த்துக் கழுவவும்.


தமிழ், ஆங்கில மருந்துகள் இருக்கின்றன. மருத்துவரை சந்தித்து, ஆலோசனை பெறுங்கள்.

***
thanks iநியம்
***


"வாழ்க வளமுடன்"

உறவுகள் மேம்பட :)


நானே பெரியவன் , நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்


எந்த விஷயத்தையும் , பிரச்சனையும் கையாளுங்கள்


சில நேரங்களில் சில சங்கடங்களை சந்தித்து ஆகவேண்டும் என்று உணருங்கள்


நீங்கள் சொன்னதே சரி , செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்


குறுகிய மனப்பான்மையை விட்டு ஒழியுங்கள்


மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி கர்வப்படாதீர்கள்


அளவுக்கு அதிகமாய் தேவைக்கு அதிகமாய் ஆசைபடாதீர்கள்


எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக்கொண்டு இருக்காதீர்க்ள்


கேள்வி படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள்


உங்கள் கருத்துகளில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்


மற்றக் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்


புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்பு சொற்களை சொல்லவும் கூட நேரமில்லாததுப் போல் நடந்து கொள்ளாதீர்கள்


பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் , தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதை தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்

பிரச்சனைகள் ஏற்படும் போது அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சை துவக்க முன் வாருங்கள்


***
thanks இணையம்
***"வாழ்க வளமுடன்"


குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்


ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்..


ஆரோக்கியமாக இருங்கள

முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்

*

சரியான விதத்தில் சாப்பிடுங்கள்

மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.

*

தீய பழக்கங்கள் கூடாது

புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

*

சரியான நேரம்

ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.

*

பாலியல் அறிவு அவசியம்

படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.

*

உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்

கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப்


***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"


முட்டை மஞ்சள் கரு வேண்டாம்ங்க....கருவுற்ற ஆரம்பக் கட்டங்களிலும், பிரசவம் நிகழ இருக்கும் கடைசி கட்டங்களிலும் உடலுறவைத் தவிர்க்க வேண்டும். கருவுற்ற காலங்களில் மார்பகங்கள் வளர்ச்சி பெறுவதால் மெல்லிய துணிகளால் ஆன `பிரா'வையே பயன்படுத்த வேண்டும். பருத்தி துணியாலான பிராக்கள் சிறந்தவை.


மார்புக்காம்புகளில் புண், வெடிப்பு, மார்பகக்கட்டி போன்றவை இருந்தால் மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். கருவுற்ற காலங்களில் பஸ், ஆட்டோ, ஸ்கூட்டர் போன்ற அதிர்வைத்தரும் வாகனங்களில் பயணம் செய்யக்கூடாது. மேலும் தொலைதூரப் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது.


பிரசவ காலங்களில் உதிரப்போக்கு, வயிற்றுவலி, தலைவலி, மயக்கம், தூக்கமின்மை, பார்வை குன்றுதல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். கருவுற்ற நாளிலிருந்து ஆறுமாதத்தில் மாதம் ஒரு முறையும், ஏழு-எட்டு மாதங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறையும், பிரசவத்தின் இறுதியில் வாரம் ஒரு முறையும் டாக்டரின் நேரடி மேற்பார்வையில் பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் பெற வேண்டும்.


பால், முட்டை, பருப்பு வகைகள், கீரை வகைகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் அடங்கியிருப்பதால் அவற்றைப் போதிய அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


அதிகக் கொழுப்பு நிறைந்த வெண்ணை, பாலாடை, நெய், ஐஸ்கிரீம், முந்திரி, பிஸ்தா, முட்டையின் மஞ்சள்கரு, தேங்காய் போன்றவற்றை அளவுக்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.


மலச்சிக்கல் ஏற்படாமலிருக்க கீரை வகைகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கருவுற்ற பெண்ணின் ரத்த அழுத்த நிலைகளை, அவ்வப்போது அறிந்து கொள்வதில் சற்று அதிகக் கவனம் செலுத்த வேண்டும். கருவுறும் காலத்திற்கு முன்பே ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பின், அதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.


கருவுற்ற பெண், தனக்கு ஏற்பட்டிருந்த/ஏற்பட்டிருக்கும் நோய்கள், அதன் பாதிப்புகள் குறித்து மருத்துவரிடம் தெளிவாக விளக்கிக் கூற வேண்டும். இது பிற்காலத்தில் பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும்

***
thanks இணையம்
***"வாழ்க வளமுடன்"


நண்பா... :) ( நான் ரசித்த கவிதை )மாலை நேர தேநீர்
இறங்குவதே இல்லை...
செல்ல சண்டைளின்றி
அவை என்றும்
இனிக்காதாம்


இதுவரை ஒன்றாய்
நடந்து கடந்த சாலைகள்
கண்களை பொத்தி கொள்கின்றன
தனிமையில் எனை காண
பிரியமில்லையாம்


கை ஈரம் துடைக்க
நீ தரும் கைகுட்டையை
தேடி அழுது
அடம் பிடிக்கின்றன
விரல்கள்


பேருந்து பயணங்களில்
சாய்ந்து தூங்க
உன் தோள்கள்
இல்லாமல் இமைகள்
மூடுவதேயில்லை


சண்டை போட்டு
உன்னிடம் பிடுங்கி
சாப்பிடும் சாக்லேட்டின் சுவை
ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்
உணவிலும் கிடைப்பதில்லை


கைகோர்த்து திரிந்த
நாட்களை எண்ணும்போது
துளிர்க்கும் கண்ணீரினூடே
தூக்கம் கலையாதிருக்க
அசையாதிருந்த உன் நட்பு
புன்னகையாய் விரிகிறது


***
thanks அரசி
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "