...

"வாழ்க வளமுடன்"

11 ஏப்ரல், 2011

கணைய அழற்சியைக் குணமாக்கும் மருந்துகள்

மருத்துவம் : பொது :- கொழுப்பு இல்லாத உணவாகக் கொடுக்க வேண்டும். அதிகம் நீருள்ள, குழைந்த அல்லது கடைந்த உணவாகக் கொடுக்க வேண்டும். ஆடை, நீக்கிய பால், புலால், ரசம் மீன், ரொட்டி, பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைக் கொடுக்கலாம். ** மருந்து : 1. ஐரிஸ்வெர்சிகோலர் :- கணையப் பகுதியில் கடுமையான வலியும், இனிப்பான வாந்தியும் உண்டானால் இம்மருந்து ஏற்றது. சீரணமாகாத உணவு, நோயினால் ஏற்படும் தலைவலி, வாய் நீரூறல், நாவில் எண்ணெய்ப் பசை ஆகியவை தோன்றும் குறிகளுடன் கூடிய நாட்பட்ட கணைய அழற்சிக்கு ஏற்ற மருந்து இது. ** 2. அயோடின் :- நாவில் கசப்பு சுவையுடன் எச்சில் ஊறும். வயிற்றின் இடது மேற்புறத்தில் கொடுமையான வலி இருக்கும். முதுகிலும் வலி இருக்கும். கொழுப்பு கலந்த, நுழைத்த மலம் பெருமளவு பேதியாகும். ** 3. பாஸ்பரஸ் :- மலம் சவ்வரிசி போல, கொழ கொழப்பாகவும், எண்ணெய் கலந்தும் போகும். செரியாத உணவு பேதியாகும். இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரக கொழுப்புச் சிதைவு நோயிலும் மலத்தில் கொழுப்புத் திசுக்கள் வெளியேறும். மலம் வெளுத்து இருக்கும். நோயாளர் குருதி சோகையுற்றிருப்பார். இந்த நிலைக்கு இம்மருந்து ஏற்றது. ** 4. பெல்லடோனா :- குருதி கசியும் கணைய அழற்சியில் இம்மருந்து வலியைக் குறைக்கிறது. கசிவுறும் குருதியை உறைய வைக்கிறது. இம்மருந்தைத் தொடர்ந்து மெர்க்கூரியஸ் என்ற மருந்தையும் கொடுக்க வேண்டும். திடீர் நோய், திடீர் வலி, திடீர் குருதிப் பெருக்கம் என்ற நோய் நிலைகளுக்கும், பூந்தசையழற்சிக்கும் பெல்லடோனா மிகவும் ஏற்றது. ** 5. அட்ரோபைன் சல்பேட் :- இதுவும் கணைய நாளத்தைச் சுருங்கச் செய்து கணையக் குருதிப் பெருக்கத்தைத் தடுக்கிறது. இதைத் தவிர "பான் கிரியாட்டினம்" என்ற மருந்தும், "கல்கேரிணயா பாஸ்" என்ற மருந்தும் நல்ல குணத்தையளிக்கின்றன *** thanks google *** "வாழ்க வளமுடன்"

அழகு வேண்டுமா? ஆரோக்கியம் முக்கியம் :)

யாராவது உங்கள் முகத்தைப் பார்த்து ஆஹா,.. என்ன மினுமினுப்பு உங்கள் முகத்தில்? என்று ஆச்சரியப்பட்டால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். * முதல் காரணம் உங்கள் முகம் நிஜமான ஆரோக்கிய மினுமினுப்பில் இருப்பது. இரண்டாவது காரணம் எண்ணெய் வழிவது. பிரச்சினை என்னவென்றால் நம் ஊரில் பெரும்பாலான முகத்தின் மினுமினுப்புக்கு எண்ணெய் வழிவதே காரணமாக இருக்கிறது. இது அழகுக்கும் கேடு. முகத்தின் ஆரோக்கியத்திற்கும் கேடு. ** முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று எப்படி உறுதி செய்வது? ரொம்பவும் எளிமையான வழி ஒன்று இருக்கிறது. காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடையுங்கள். அதில் பசை இருந்தால் உங்கள் முகம் ஆயில் ஃபேஸ்! அவ்வளவுதான். ** ஏன் என் முகத்தில் மட்டும் ஆயில் வழிகிறது? நீங்கள் இதற்கு உங்கள் பாட்டி, முப்பாட்டி என்றுதான் குறை சொல்ல வேண்டும். ஆம் இது மரபு வழியாகத்தான் வருகிறது என்கிறார்கள். இதனை மருத்துவர்கள் `செபோரியா' என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். நாம் ஆயில்முகம் என்கிறோம். இந்த நிலை பருவம் அடையும் வயதில் அதிகபட்சமாக இருக்கும். பின் 30 வயதுவரை படுத்தும். ** இதற்கு வேறு என்ன காரணம்? இருக்கிறது. ஹார்மோன்கள். அதிகப்படியான ஆன்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் உற்பத்தி ஆகும்போது முகத்தில் இருக்கிற தோலின் செம்பஷியஸ் சுரப்பிகள் அதிகப்படியான ஆயிலை உற்பத்தி செய்துவிடுகின்றன. இதுதவிர, மோசமாக முகத்தைப் பராமரிப்பதும் ஒரு காரணம். இந்திய முகங்களை இது அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள். நம் குறைபட்ட உணவுப்பழக்கம் கூட ஒரு காரணம். கூடவே நம்மின் தப்புத்தப்பான முகப்பராமரிப்புப் பொருட்கள். தோலை அடைத்து மூச்சை முட்டும் அழகு சாதனங்கள். ** என்ன செய்வது? எப்படி ஆயில் முகத்தைத் தடுப்பது? 1. நிறைய தண்ணீர் குடியுங்கள். * நிறைய தண்ணீர் நம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி ப்ளஸ் நான்கு மிளகு ப்ளஸ் ஒரு டீஸ்பூன் தேன் அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும். ** 2. சரியான உணவு சாப்பிடுங்கள் * நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், காரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்திற்கு பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள். ** 3. ஆயில் அதிகரிப்பதை தடை செய்யும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துங்கள் * முகத்திற்கான அழகு சாதனப் பொருட்களை வாங்கும்பொழுது அதில் கிளைகாலிக் அமிலம், ரெட்டினாயிக் அமிலம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இவை ஆயில் அதிகமாக உருவாவதை தடுக்கக் கூடியவை. உங்கள் கிளன்ஸர்களை வாங்கும்பொழுது அதனுள் ஹைட்ராக்ஸி அமிலம், சாலிசிலிக் அமிலம், பென்ஸைல் பெராக்ஸைட் போன்றவை இருக்கிறதா என்று கவனியுங்கள். இவை புடைத்து எழுகிற முகக் கட்டிகளை வேகமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை. டோனர்கள் வாங்கும்போது அதில் ஆல்கஹால் இருப்பதைத் தவிருங்கள். இவை முகத்தில் இருக்கிற மொத்த ஆயிலையும் நீக்கி சருமத்தை வறளவிட்டு சுருக்கம் ஏற்பட வழி ஏற்படுத்தும். ** 4. சிகிச்சைகள் * அ. மூன்று முறை முகம் கழுவுங்கள்


*

வெதுவெதுப்பான தண்ணீரால் தினமும் மூன்று முறையாவது முகம் கழுவுங்கள். இதனால் அதிகப்படியான ஆயில் நீக்கப்படும். அதே நேரத்தில் சருமப் பாதுகாப்பிற்கான லைப்பிடுகள் வெளியேறாது. முகம் கழுவும்போது தேய்க்காதீர்கள். ** ஆ. சோப் இல்லாத சோப் வாஷ் பயன்படுத்துங்கள் * இந்த வகையில் நிறைய மென்மையான முகம் கழுவிகள் கிடைக்கின்றன. ஜான்சன் அண்ட் ஜான்சன் க்ளீன் அண்ட் க்ளியர் டீப் ஆக்ஷன் கிளன்ஸர், லோ ஓரல் போன்றவை பயன் தரும். ** இ. ஆன்டிபாக்டீரியல் க்ளன்சர்களைப் பயன்படுத்துங்கள். * ஆயில் அதிகம் இருப்பதால் பாக்டீரிய தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்கவே இந்த வழி. செட்டாபில் அல்லது விச்சி கிளன்ஸர்களை பயன்படுத்திப் பாருங்கள். ** ஈ. ஃபேஸ்மாஸ்க் போடுங்கள் * களிமண் அடிப்படையில் செயல்படும் மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். இவை தோல் துவாரங்களை இறுக்கி ஆழமாக சுத்தம் செய்யும். ஹிமாலயா பியூரிபையிங் மட் பேக் குறைந்த விலையில் கிடைக்கிறது. ** உ. மாச்சுரைசரை கவனியுங்கள் * ஆயில் அதிகம் சுரப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆயில் அற்ற தோல் கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது. லா ஓரல் பாரிஸ் பியூர் ஸோன் அன்டி ரிக்ரஸிங் மாச்சுரைசரைப் பயன்படுத்திப் பாருங்கள். பகல் நேரங்களில் ஜெல் போன்ற சன் ஸ்கிரீன்கள் உதவும். ஆலுவேரா கூட உதவும்.**
5. சரியான மேக்-அப் போடுங்கள் * இதற்கு ஒருமுறை நீங்கள் நல்ல அழகு சிகிச்சை நிபுணரை அணுகி, உங்கள் முகத்தை பரிசோதித்து, பின் அவர் தரும் ஆலோசனைப்படி முகத்திற்கான மேக்கப் முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். ** 6. தோல் நோய் மருத்துவ நிபுணரைச் சந்தியுங்கள் * தீர்க்கமுடியாத, அதிகப்படியான ஆயில் முகம் முழுக்க தொந்தரவுகளை ஏற்படுத்தும்போதும் உங்கள் சந்திப்பு ஒரு நல்ல தோல் நோய் மருத்துவரை நோக்கி இருக்கவேண்டும். ஓடிசி வகை மருந்துகள், க்ளைகாலிக் பீலிங் போன்ற சில சிகிச்சைகளை அவர் உங்கள் தேவைக்கு ஏற்ப பரிந்துரைக்கலாம். *** நன்றி: kumudam.com *** "வாழ்க வளமுடன்"

"இருப்பும் விருப்பும்" ( படித்ததில் பிடித்தது )

வாஷிங்டனுக்கு, டோக்கியோவிற்கு, மெல்போனுக்கு மற்றும் இன்ன பிற பெருநகரங்களுக்கு எந்தெந்த விமான நிறுவனங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை விமானங்களை இயக்குகின்றன என்பது அத்துப் படியான அளவிற்கு நம்மில் பலருக்கு நமது கிராமத்திற்கு ஒரு நாளைக்கு எத்தனை முறை நகரப் பேருந்துகள் வந்து போகின்றன என்பது தெரியாது. * பல மைல்களுக்கு அப்பால் கிடக்கிற பிரமிடுகளின் மேன்மை குறித்து, தொன்மம் குறித்து, மணிக் கணக்காய் சிலாகிப்பதில், பாரம் பாரமாய் எழுதிக் குவிப்பதில் கொஞ்சமும் கஞ்சத் தனமே இருப்பதில்லை தமிழனுக்கு. அதில் நமக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படிக்கு வருத்தமும் இல்லை. சாவதற்குள் ஒரு முறையேனும் பிரமிடுகளைப் பார்த்துவிட்டு வந்துதான் சாக வேண்டும் எனப் பிடிவாதாமாய் ஆசைப்படும் நண்பர்கள் எனக்கும் உண்டு. எரிச்சலே கொள்ளாமல், ஒரு புன்னகையோடு இவர்களைக் கடந்து போகும் பக்குவம்கூட நமக்கு வந்துவிட்டது. * ஆதிச்ச நல்லூர், மணல்மேடு மற்றும் காரைமேடு போன்ற நமது தமிழ்க் கிராமங்களில் நடக்கும் போதே கால்களில் மிதிபட்டு உடைந்து அழிந்து வரும், நமது தொன்மையும் மேன்மையும் மிக்க நாகரீகத்தின் சின்னங்களான முதுமக்கள் தாழிகள் குறித்து எந்த அக்கறையும் இவர்களுக்கு இருப்பதில்லை என்பதுதான் நமது கவலையே. * பெருந்தன்மையினால் தாராளமாய் பிசைந்து செய்யப்பட்ட மனிதனால்கூட மேற்சொன்ன எந்த ஒரு ஊரிலும் இன்றைய தேதியில்கூட ஐயாயிரம் பேருக்கு மேல் வாழ்வதாய்ச் சொல்லிவிட முடியாது. அப்படிப்பட்ட குக்கிராமங்கள் ஒவ்வொன்றிலும் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றி ஐம்பது ஏக்கரை ஒட்டிய நிலப் பரப்பில் அமைந்துள்ள சுடுகாடுகளின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச ஆய்வாளர்கள் அக்கறை கொள்ளாததில் நியாயம் இருக்கலாம். தமிழாய்ந்த தமிழர்களின் கவனம்கூட இவற்றின் பக்கம் திரும்பாததுதான் உலகம் ருசித்த சோகங்களிலேயே தலையாய சோகம். * குருஷேத்திரப் போர் நடந்ததாகக் கூறப்படும் இடமருகில்கூட இவ்வளவு பரந்த நிலப் பரப்பில் சுடுகாடு இருக்கிறதா? அல்லது இருந்து அழிந்து போனதற்கான சுவடுகலாவது அல்லது புராணவழி சான்றுகளாவது இருப்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்றால் அதுவுமில்லை. * எத்தனையோ லட்சாதி லட்சம் குதிரைகளும் யானைகளும் வீரர்களும் பங்கு பெற்றதாகக் கூறப்படும் போர்க்களமான குருச்கேத்திரத்திற்கு அருகே காணக் கிடைக்காத ஒரு நிலப் பரப்பு நிலத்தில், தமிழ் மண்ணில் சுடுகாடுகள் பரந்து விரிந்து கிடக்கின்றன என்றால் என்ன பொருள்? * இத்தனை பெரிய பரப்பளவில் சுடுகாடுகள் ஏதோ ஒரு புள்ளியில் தேவைப் பட்டிருக்கின்றன. எனில் பெரியதும் உக்கிரமமானடுமான போர்கள் அங்கே நடந்திருக்கக் கூடும் என்று கொள்வதற்கும் வாய்ப்புண்டு. * இது உண்மையெனில் பொறாமை கொள்ளுமளவிற்கு மேன்மையும் அளப்பரிய வளங்களைக் கொண்டதுமான சாம்ராஜ்யங்கள் அங்கே இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. எனில் இது குறித்த ஆய்வுகள் போதுமான வகையில் என்றுகூட அல்ல, இன்னும் தொடங்கப் படவே இல்லையே ஏன்?. * உலக கவனம், இந்திய கவனம் என்பவற்றை எல்லாம் கூட ஆடித் தள்ளுபடி , பொங்கல் தள்ளுபடி அல்லது இது போன்ற ஏதாவது ஒரு தள்ளுபடி என்கிற வகையில் தள்ளுபடி செய்துவிடலாம். ஏனெனில் தமிழ்ச் சுடுகாடுகளின் தொன்மையேகூட அவர்களைக் கலக்கிப் புரட்டி வெட்டிச் சாய்த்திருக்கலாம்.அதையும் இதையுமென்றுஅலைந்தலைந்து ஆய்வு செய்யும் எங்கள் சான்றார்ந்த பெரியவர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இது குறித்து கவனம் சாயாததன் காரணம்தான் என்ன முயன்றும் பிடிபட மறுக்கிறது. * மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா பற்றித் தமிழகத்தில் உள்ள பள்ளிப் பிள்ளைகள் அனைவருக்கும் சரியாகவோ தவறாகவோ கூடுதலாகவோ சற்றுக் குறைச்சலாகவோ இருக்கலாம், ஆனால் நிச்சயமாகத் தெரியும். * மொஹஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவற்றின் தொன்மைச் சிறப்புகள் குறித்து கற்றுத் தெளியாமல் நமது பிள்ளைகள் பள்ளிகளைக் கடந்துவிடக் கூடாது என்கிற கவனத்தோடு நமது கல்வித் திட்டம் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதில் நமக்கெதுவும் பிரச்சினை இல்லை. இன்னுஞ்சொல்லப் போனால் இந்தியாவின் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகம் அதிலும் குறிப்பாக பண்டைய நகர நாகரீகம் ஆகியவற்றின் தொன்மச் சிறப்புகள் குறித்து நம் பிள்ளைகள் தெளிவுறக் கற்றுத் தேரவேண்டும் என்பதில் முரட்டுத் தனமான பிடிவாதமே நமக்குண்டு. * இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் உலகின் எந்த ஒரு நாகரீகத்தின் பழமை மற்றும் தொன்மச் சின்னங்கள் குறித்தும் நம் குழந்தைகளுக்குத் தெளிவுறச் சொல்லித் தரவேண்டும் நம் எல்லை தாண்டிய ஆசையை யாரும் சந்தேகப் பட முடியாது. * நமது ஆதங்கமெல்லாம், நமது தமிழ்மண்ணின் மையப் பகுதியான அரியலூர் மாவட்டத்தில் கங்கைகொண்ட சோழபுரம் அருகே உள்ள உட்கோட்டையில் நடந்த அகழ்வாராய்ச்சியில் அந்தப் பூமிக்குக் கீழே புதையுண்ட நிலையில் கட்டடங்களும் சிலைகளும் காணப்பட்டு, போதிய பராமரிப்பும் ஆய்வுமின்றி அழிந்து வருவதைப் பற்றிய கவலை யாருக்கும் இல்லாதது குறித்துதான். * ஆய்வாளர்களோ, கல்வியாளர்களோ, அரசுகளோ அது குறித்துப் போதிய அக்கறை காட்டாது மௌனிப்பதன் மர்மம் என்ன?. கங்கைகொண்ட சோழபுரம் ஆலயம் வரை செல்லும் கல்விச் சுற்றுலாக்கள்கூட அங்கிருந்து கிராம மக்களுக்கான நடை தூரத்திலிருக்கும் உட்கோட்டைவரை நீளாமல் போவதில் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. * கிரஹாம் ஆன் கூக் என்ற அறிஞர் பூம்புகாருக்கும், நாகைக்கும் இடையே நடத்திய ஆழ்கடல் ஆராய்ச்சியில் பதினோராயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட மிகுந்த நுணுக்கமான நகர கட்டமைப்புகளைக் கொண்ட ஒரு நிலப் பகுதி இப்பகுதியில் கடலுக்குள் மூழ்கியிருக்கிறது என்பதைத்தெளிவு படுத்தினார். அது குறித்து, அது சரியல்ல என்கிற அளவில்கூட வாய் திறக்காமல் உலகச் சமூகம் மௌனித்துக் மர்மம் புரிகிறது. * அதை உண்மையென ஒத்துக் கொண்டால் மெசபடோமியாவைவிடப் பழமையும் தொன்மையும் வாய்ந்த நாகரீகத்திற்கு சொந்தப் பூமி தமிழ்ப் பூமி என்ற உண்மையை ஒத்துக் கொள்வதாய் ஆகும். அதை அவர்களால் ஜீரணிக்க இயலாது. ஆயிரம்தான் தமிழ்ப் பூமியின் நாகரீகம் என்றாலும் அது இந்திய நாகரீகம்தானே?. பிறகேன் இந்தியச் சமூகமும் மௌனிக்கிறது?. * இதையெல்லாம் விடுங்கள், உலகின் எந்தப் பகுதியில் எது கிடைத்தாலும் ஓடியோடி ஆய்ந்து அவற்றின் சிறப்புகளை பெருந்தன்மையோடு ஏற்று பறை சாற்றும் தமிழ் மண்ணின் அறிவு ஜீவிகளே, இதை ஏற்கக் கூட வேண்டாம், சரிதானா என்கிற அளவிலேனும் இதை ஆய்ந்து பார்க்கவும் அஞ்சுவதன் பொருள்தான் என்ன? * கேட்கலாம், "தமிழ்ப் பூமியின் தொன்மத்தை, மேன்மையை ஒப்புக் கொள்வதால் மட்டும் உங்களுக்கென்ன லாபம் வந்துவிடப் போகிறது?." திருப்பிக் கேட்கிறேன்," அது உண்மையெனில் அதை ஒத்துக் கொள்வதால் உங்களுக்கென்ன நட்டம் வந்துவிடப் போகிறது?" * தன் மொழியின், கலாச்சாரத்தின் தொன்மம் அறிந்த சமூகம் அவற்றை மதித்துப் புழங்கும். அதன் மூலம் அந்த மொழியும் கலாச்சாரமும் வளர்ந்து செழிக்கும். தனது மொழி மற்றும் கலாச்சாரத்தின் மேன்மை புரியாத சமூகம் எதுவாயினும் அவற்றைப் புழங்கத் தயங்கி அவற்றின் அழிவுக்குக் காரணமாகும். எனவேதான் கவலைப் படுகிறோம். * கி.பி.அரவிந்தன் "இருப்பும் விருப்பும்" என்ற தனது நூலில் தாங்கள் தோற்றதற்கான காரணங்களை அலசுகிறார். அவர் சொல்கிறார், " தவறுகளில் இருந்து படிப்பினைப் பெற்று முன்னேறுவதுதான் போராட்டம்." * ஆமாம், தனது தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்யும் இனமோ, சமூகமோ, சொந்த மண்ணின் விடுதலைக்காகப் போராடும் குழுவோ, அல்லது எதுவோ ஆயினும் அது அழிந்து போகும். * காமன் வெல்த் போட்டியில் தங்கம் வென்ற நமது சின்னக் குழந்தை சாய்னா சொல்கிறார், " I won the gold because I did not repeat my mistakes." *** நன்றி : "கல்கி" மற்றும் " சுகன் " *** "வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "