இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள்
நண்பர்களுக்கும், தோழிகளுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நாள் வாழ்த்துக்கள் :)
அனைவரின் இல்லத்திலும் இனிய மகிழ்ச்சி பொங்கட்டும்
:)
***
தேவையானவை: வாழைப்பழம் - ஒன்று, பேரீச்சம்பழம் - 2, பலாச்சுளை - 3, பயத்தம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், சர்க்கரை - 500 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை : எல்லா பருப்புகளை யும் ஒன்றாக ஊற வைக்கவும். நன்கு ஊறிய பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும். பழங்களை மிக்ஸியில் தனியே அரைக்கவும். அரைத்த பருப்புக் கலவையுடன், அரைத்த பழவிழுதைச் சேர்த்துக் கலந்த பிறகு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சிறு சிறு வடைகளாகத் தட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் பாகு செய்து, பொரித்த வடைகளை அதில் போட்டு ஊறவிட்டு எடுத்துப் பரிமாறவும்.
ஸ்வீட் பழ வடை: பழங்களை அரைப்பதற்குப் பதிலாக பொடியாக நறுக்கிப் போட்டால், வடை இன்னும் க்ரிஸ்பியாக இருக்கும். பலாப்பழம் கிடைக்காத சமயத்தில் தோல், விதை நீக்கிய சப்போட்டா அல்லது சீதாப்பழம் சேர்த்துக் கொள்ளலாம்.'கருவுற்ற காலத்தில், ஆரோக்கியமான உணவை உட்கொள்ளும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், நல்ல உடல் நலத்துடன் இருக்கும்' என்பது காலம்காலமாக நம்முடைய முன்னோர்கள் சொல்லிவரும் சங்கதி!
''ஆம், அதுதான் உண்மை... அத்தகைய குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், 'டைப் 2 நீரிழிவு, இதய நோய், மன அழுத்தம்’ உள்ளிட்ட பிரச்னைகளும் வருவதில்லை என்பதை எங்கள் ஆராய்ச்சி மூலமாகவும் கண்டறிந்திருக்கிறோம்'' என்று சொல்கிறார்... ஆரம்ப நிலையிலேயே நோய்களைத் தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருக்கும் மகாராஷ்டிர மாநிலம், புனே நகரைச் சேர்ந்த டாக்டர் சித்தரஞ்சன் யாக்நி.
அந்த ஆராய்ச்சி குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் நம்மிடம் பகிர்ந்த டாக்டர், ''தாய் வழி ஊட்டச்சத்து குறித்த ஆய்வுகளை புனே நகரில் 1993-ம் ஆண்டு தொடங்கினோம். என் தலைமையிலான குழு, எண்ணூறுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகளைக் கண்காணித்தோம். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பிருந்தே இப்பெண்கள்கண்காணிக்கப்பட்டு வந்தனர். குறைந்த அளவு வைட்டமின் பி-12 மற்றும் அதிக அளவிலான ஃபோலிக் அமிலம் ஆகிய சத்துக்களுடன் இருந்த பெண்களின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில், இன்சுலின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என்பதை ஆய்வில் கண்டறிந்தோம். இக்குழந்தைகள்... எதிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளாக, கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பதையும் அறிந்து கொண் டோம்.
கர்ப்பிணிகளின் ரத்தத்தில் வைட்டமின் பி-12 அளவை அதிகரித்தும், ஃபோலிக் அமிலத்தின் அளவைக் குறைத்தும் சரிவிகிதத்தில் இருக்கும்படி செய்து பரிசோதித்துப் பார்த்தோம். இந்த ஆராய்ச்சியின் மூலம், குழந்தைகளுக்கு நோய்த் தாக்குதலுக்கான வாய்ப்புகள் குறைந்திருப்பதை யும்... நீரிழிவு, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைந்ததையும் கண்டறிந்தோம்.
இப்படி, 12 ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளுக்குப் பின்னர், 'குழந்தை கருவாவதற்கு முன்னரும், கருவான பின்னரும் தாய் எடுத்துக் கொள்ளும் நல்ல ஊட்டச்சத்து உணவுகளே, குழந்தைக்கு எதிர் காலத்தில் நீண்ட கால நோய்கள் பலவும் வராமல் தடுக்கும்!’ என்கிற உண்மையை உறுதிபடுத்திக் கொண்டோம்'' என்று சொன்ன சித்தரஞ்சன் தொடர்ந்தார்...
''தேவைக்கும் குறைவான எடை உள்ள தாய்மார் களுக்குப் பிறக்கும் குழந்தை களின் தோலுக்கு அடியிலும், வயிற்றிலும் கொழுப்பு அதிக அளவு மறைந்திருக் கிறது. இது எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு நீரிழிவு, ரத்தக்கொதிப்பு மற்றும் இதயம் தொடர் பான பிரச்னைகள் வரக் காரணமாக இருக்கிறது என்பதும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. பொதுவாக, இந்தியக் குழந்தைகள் மெலிந்து காணப்பட்டாலும்... கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களாகவே இருக்கின்றனர். வைட்டமின் பி-12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகிய இரண்டும் சரிவிகித அளவில் இல்லாததுதான் காரணம். கர்ப்பிணிகள் எடுத்துக்கொள்ளும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தை 9 மாதம் வயிற்றில் வளர்வதற்கு மட்டுமல்லாமல், அவர்கள் வாழ்நாள் இறுதி வரை ஆரோக்கியமாக வாழவும் வழிவகுக்கிறது என்பதை உணர்ந்து சரிவிகித உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
தினமும் 3 கப் பால் அல்லது அதற்கு இணையான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்றவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது. மேலும் அடர் பச்சை அல்லது மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன. 'பால் மூன்று கப் குடித்து விட்டோமே' என்று தண்ணீர் அளவைக் குறைத் துக் கொள்ளக் கூடாது'' என்ற டாக்டர்...
''நல்ல உடற்பயிற்சி செய்ய வேண்டும். டாக்டர் மற்றும் இதற்கென உள்ள ஃபிட்னெஸ் ஆலோசகர்களிடம் கலந்து பேசி என்ன மாதிரி யான பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்த வழி!'' என்றார் அழுத்தமாக!
தவிர்க்க வேண்டிய உணவுகள்!
கர்ப்ப காலத்தில் 2 கப்களுக்கு மேல் காபி குடிக்கக் கூடாது. கார்பனேட்டட் குளிர்பானங்கள், வெளிப்புற உணவுகள், பொரித்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகள், செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட உணவுகள், பேக்கிங் சோடா கலந்த உணவுகள், பேக்கரி உணவுகள், அதிக காரம் மற்றும் சோடியம் கொண்ட ஊறுகாய் போன்ற உணவுகள், ஜாம், ஜெல்லி, பப்படம்... இதுபோன்ற உணவுகள் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
***
thanks vikatan
***
உருளைக்கிழங்கு என்று சொன்னாலே நம்மில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ். நொறுக்குத்தீனிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள், இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக்கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.
அதேநேரத்தில் உருளைக்கிழங்கு என்றாலே, `ஐயோ’ என்று அலறுபவர்களும் உண்டு. கேஸ் டிரபிள், உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சனைகளை நினைத்து உருளைக்கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால், `நீங்கள் நினைப்பது தவறு. உருளைக்கிழங்குக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திறனுண்டு’ என்று ஆய்வாளர்கள் அடித்துச்சொல்கிறார்கள்.
ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக்கிழங்குகளை உணவில் சேர்த்துகொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை, மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு ரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அமெரிக்காவைச்சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இதுதொடர்பான ஆய்வை நடத்தியது.
இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக்கிழங்கு கொடுத்து வந்தனர்.
பிறகு அவர்களின் ரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் ரத்த அழுத்தம் குறைந்திருந்தது, அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரி, ரத்தக்கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?
பைடோ கெமிக்கல் (Phytochemicals) என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில வேதிப்பொருட்கள் மற்றும் வைட்டமின்கள் உருளைக்கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.
உருளைக்கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால், ரத்த கொதிப்பை குறைக்கவல்ல வேதிப்பொருட்களும், பைடோ கெமிக்கல்ஸ்களும் அழிக்கப்பட்டுவிடுகின்றன. எனவே, சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக்கிழங்கின் மாவுச்சத்து, கொழுப்புச்சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு என்பதால், `ம்ம்ம்…. நாம் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்’ என்று நீங்கள் புலம்பவேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ்சிவப்பு நிற உருளைக்கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன்தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.
இனிமே பிரஷர் குறைய தைரியமா உருளைக்கிழங்கு சாப்பிடலாம்!
***
நன்றி-தினத்தந்தி
`பாஸ்ட் புட்’ கலாசாரத்திற்கு மாறிவிட்ட இன்றைய மனிதர்கள் அருந்தும் குடிநீரின் அளவு குறைந்துவிட்டது. அதன்விளைவு… சிறுநீரக சம்பந்தப்பட்ட பல நோய்களின் வருகை அதிகரித்து விட்டது.
பொதுவாக சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளால் சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருப்பதாலோ அது பல பிரச்சினைகளைத்
தோற்றுவிக்கிறது. அதில் ஒன்று… சிறுநீரகத்தில் கல் ஏற்படுவது.
அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தேக்கப்பட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றன.
வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. அதை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
வாழைத்தண்டு மேலும் பல நன்மைகளையும் மனிதனுக்கு தருகின்றது. அவை…
வாழைத்தண்டு நார்ச்சத்து கொண்ட உணவு என்பதால் அதிக உடல் எடையால் அவதிப்படுபவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்கள் இதை அடிக்கடி உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
உடலைக் குளிர்ச்சி அடைய வைக்கும் தன்மை வாழைத்தண்டுக்கு இருப்பதால் கோடை காலத்திலும் இதை உணவாக பயன்படுத்தலாம். வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தியும் இதற்கு இருக்கிறது.
பெண்கள், தங்களது மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்து வந்தால் அவர்களது உடல் பலம் பெறும். மேலும், மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு நோய்க்கும் இது சிறந்த.
***
thanks vayal
***
மனிதர்களின் ஆரோக்கியத்தையும், ஆயுளையும் அதிகரிப்பதில் மருத்துவ விஞ்ஞானம் மாபெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது. மனித ஆரோக்கிய மேம்பாட்டிற்காக உலகளாவிய நிலையில் நாளுக்கு நாள் மருத்துவ விஞ்ஞானத்தில் நவீன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இன்னொருபுறத்தில் மக்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம், வேலை முரண்பாடுகள், அதிகரிக்கும் மன அழுத்தம் போன்றவைகளால் நோய்களும் வந்து கொண்டே இருக்கின்றன.
அந்த நோய்களை உடனடியாக கண்டுபிடித்து, அதன் பாதிப்பின் அளவை நுட்பமாக கண்டறிந்து, சிறந்த சிகிச்சைக்கு வழிகாட்டும் விதத்தில் தற்போது நவீன எக்ஸ்ரே மற்றும் ஸ்கேனிங் கருவிகள் உள்ளன. இதனை மனித குலத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று கூறலாம்.
நோய்களை கண்டறிவதற்காக எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், மோமோகிராம், சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன், ஸ்பெக்ட் ஸ்கேன் போன்றவை பெருமளவு பயன்படுகின்றன. இவைகளில் சில எக்ஸ்ரே கதிர்களை அடிப்படையாகக் கொண்டவை. சில காந்தத் தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. ஒலி அலைகளை அடிப்படையாகக் கொண்டும் சில இயங்குகின்றன. இவைகளை தேவைக்கு தக்கபடி பயன்படுத்தி எல்லாவிதமான நோய்களையும் கண்டறிகிறோம்.
குழந்தையின்மைக்கான பாதிப்புகளை கண்டறிவது பற்றி முதலில் பார்ப்போம். திருமணமான தம்பதிகள் எந்த வித கருத்தடை முறைகளையும் பின்பற்றாமல் உறவு கொண்டு ஒரு வருடம் ஆகியும் பெண் தாய்மையடையவில்லை என்றால் அந்தப் பெண், குழந்தைப்பேறுக்கான சிகிச்சைக்குரியவர் ஆகிறார். அவர் தாய்மையடைவதற்கு என்ன தடைகள் இருக்கின்றன என்பது முதலில் சோதனை மூலம் கண்டறியப்படவேண்டும். சினைப்பையின் வளர்ச்சி நன்றாக இருக்கிறதா, அதில் இருந்து முட்டை முதிர்ந்து வெடித்து இயல்பாக வெளிவருகிறதா, கருப்பையின் அளவு- வளர்ச்சி போன்றவை முழுமையாக இருக்கிறதா, கட்டிகள் இருக்கிறதா என்பதை எல்லாம் `அல்ட்ரா சவுண்ட்’ மூலம் கண்டறியலாம்.
சினைப்பை, கருப்பையில் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் சினைமுட்டையும், உயிரணுவும் சந்தித்து கருவாகி, நகர்ந்துபோகும் கருக்குழாய்களில் (பேலோபியன் டியூப்) ஏதேனும் அடைப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறியவேண்டும். `ஹிஸ்ட்ரோ சால்பிங்கோ கிராம்’ எனப்படும் சோதனையை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் நவீனமுறையில் செலுத்தி, பரிசோதித்து கருக்குழாய் அடைப்புகளை துல்லியமாக கண்டறிந்து விடலாம்.
`அல்ட்ரா சவுண்ட்` மூலம் சினைப்பை, கருப்பை சோதனை செய்யும்போது கட்டிகளோ, புற்றுநோய் பாதிப்போ இருப்பதாக கண்டறிந்தால், அந்த பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கிறது, அந்த கட்டி எந்த வகையை சார்ந்தது என்பதை எல்லாம் துல்லியமாக எம்.ஆர்.ஐ.ஸ்கேன் மூலம் கண்டறிந்துவிடலாம். அதை அடிப்படையாக வைத்து சிகிச்சைக்கு திட்டமிட்டுவிட முடியும்.
பெண் கர்ப்பம் ஆவது சிறுநீர் மூலம் உறுதி செய்யப்படுகிறது. பின்பு ஐந்தாவது வாரத்தில் கரு, கருக்குழாயிலே தங்கிவிட்டதா அல்லது கருவாக்கம் நிகழ்ந்து, கருப்பையை அடைந்துவிட்டதா என்பதை கண்டறிவது மிக அவசியமாகும். கருக்குழாயிலே கரு தங்கி வளர்ந்தால் அது ஆபத்தானதாகும். அதை `அல்ட்ரா சவுண்ட்` மூலம் கண்டுபிடித்து விடலாம். கருப்பையில் குழந்தை வளரத் தொடங்கிய பின்பு 12, 13 வாரங்களில் கர்ப்பகாலத்துக்கு தக்கபடி குழந்தையின் வளர்ச்சி இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
கர்ப்பமான 24-28 வது வாரங்களில் தாயின் வயிற்றுக்குள் அம்னியோட்டிக் திரவம் அதிகமாக இருக்கும். அப்போது குழந்தை வயிற்றுக்குள் இருந்து சிரிப்பதையும், கை- கால்களை அசைப் பதையும், கொட்டாவி விடுவதையும், நாக்கை வெளியேதள்ளி அசைப்பதையும் 4-டி அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கில் பார்க்கலாம். அதைப் பார்க்கும்போது பெற்றோர் ஆச்சரியப்பட்டுப் போவார்கள். அவ்வளவு துல்லியமாக இருக்கும். இப்போது அதை பெற்றோர்கள் பதிவு செய்து வாங்கிச் சென்று, பாதுகாத்து தேவைப்படும் போதெல்லாம் போட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள். நாங்கள் மருத்துவரீதியாக இந்த காலகட்டத்தில் குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்பதை துல்லியமாக பார்க்கவே இந்த வகை ஸ்கேனை பயன்படுத்துவோம்.
36-38 வது வாரங்கள் கர்ப்பிணியை பொறுத்தவரையில் மிக முக்கிய காலகட்டமாகும். அந்த நேரத்தில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் வயிற்றில் இருக்கும் அம்னியோடிக் திரவத்தின் அளவு, குழந்தையின் தலை சரியான பாதையில் திரும்பி வருதல், நஞ்சுக்கொடியின் நிலை போன்றவைகளை எல்லாம் ஆராய்ந்து அதற்கு தக்கபடி கர்ப்பிணிக்கு சுக பிரசவமா? சிசேரியனா என்று முடிவு செய்துவிடலாம்.
`டிரான்ஸ் வெஜைனல் ஸ்கேன்` என்ற அல்ட்ரா சவுண்ட் வகை ஸ்கேன் கருவியை பெண்களின் பிறப்பு உறுப்புவரை கொண்டு செல்லலாம். அதன் மூலம் சினைப்பை, கருப்பை, கருக்குழாய்களில் இருக்கும் பாதிப்பை தெள்ளத்தெளிவாக கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும். கருப்பை வாய் புற்றுநோயையும் கண்டுபிடித்து சிகிச்சை அளிக்க வாய்ப்பிருக்கிறது.
மார்பக புற்றுநோய் பெண்களை அச்சப்படுத்தும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பொதுவாக 40 வயதுவாக்கில் இதன் தாக்குதல் ஏற்படுகிறது. மார்பக சுய பரிசோதனை மூலம் பெண்களே கட்டி ஏதாவது இருக்கிறதா என்று கண்டறியலாம். அதை எவ்வாறு செய்துபார்க்கவேண்டும் என்று சொல்லிக்கொடுக்கிறோம். மார்பக காம்புகளில் இருந்து பச்சை கறுப்பு நிறம் கலந்த திரவம் வந்தாலும், சிவப்பு நிற திரவம் வந்தா லும், காம்புகள் உள் இழுத்த நிலைக்கு சென்றாலும் பெண்கள் உஷாராகிவிட வேண்டும். ஒருவேளை அது மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
முழு மார்பகத்தின் வடிவத்தில் மாற்றம் ஏற்பட்டாலோ, ஒரு பகுதியிலோ- முழுமையாகவோ நிறமாற்றம் ஏற்பட்டாலோ- வலி தோன்றினாலோ, அக்குளில் நெறிகட்டியது போல் தோன்றினாலோ பெண்கள் நவீன டிஜிட்டல் மோமோகிராம் சோதனைக்கு உள்படுத்திக்கொள்ளவேண்டும். எந்தவித தயாரெடுப்பும் இன்றி இயல்பாக வந்து, பத்து நிமிடத்திலே இந்த பரிசோதனையை செய்து முடித்திடலாம்.
மோமோகிராம் மூலம் கட்டி ஏதேனும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அது சாதாரண கட்டியா, புற்றுநோய் கட்டியா என்பதை கண்டறிய `எப்.என்.ஏ.சி` என்கிற நீடில் முறையை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வலி இல்லாமல் செல் எடுக்கப்படும். பயாப்சி செய்தும் பார்க்கப்படும். இவை இரண்டையுமே இப்போது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங்கின் வழிகாட்டுதல்படி துல்லியாக செய்ய முடிகிறது.
மார்பக புற்று நோய்க்கான அறிகுறிகள் எதுவும் இல்லாவிட்டாலும் 40 வயதை கடக்கும் பெண்கள் வருடத்திற்கு ஒரு முறை டிஜிட்டல் மோமோகிராம் பரிசோதனை செய்துகொள்ள முன்வரவேண்டும். அதன் மூலம், நோய் இருந்தால் தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை கொடுத்துவிடலாம். 50 வயதுக்கு மேல் பெண்களுக்கு ஆஸ்டியோபேராசிஸ் என்ற எலும்பு பலகீன நோய் உருவாகிறது. எந்த அளவுக்கு எலும்பு பலகீனமாக இருக்கிறது என்பதை `டெக்ஸ்சா ஸ்கேன்’ மூலம் கண்டறிந்து, தேவைப்பட்டால் சிகிச்சை கொடுக்கலாம்.
நோய்களை கண்டுபிடிக்க மட்டுமே பயன்பட்டுவந்த ஸ்கேன் முறைகள் தற்போது நோயை கண்டறிவதோடு மட்டுமின்றி சிகிச்சை அளிக்கும் முறையாகவும் மேம்பட்டிருக்கிறது. பெண்ணின் கருப்பையில் கட்டி இருப்பது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் தெரியவந்தால், `ஹை இன்டன்சிட்டி போக்கஸ்டு அல்ட்ரா சவுண்ட்’ எனப்படும் நவீன ஸ்கேனிங் கருவி மூலம் சக்திவாய்ந்த ஒலி அலைகளை பாய்ச்சி கட்டியை கரைத்துவிட முடியும். எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் வழிகாட்டுதல்படி இதை செய்ய வேண்டும். அடுத்த பத்தாண்டுகளில் ரேடியாலஜி எனப்படும் கதிரியக்கத் துறை அதிசயிக்கத்தக்க வளர்ச்சியினை பெற்றுவிடும்.
பெண்கள் இப்போதும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். தங்களுக்கு வரும் குறிப்பிட்ட நோய்களைப் பற்றி வெளியே பேசவும், சிகிச்சை பெறவும் தயங்குகிறார்கள். அதுவே அவர்களது ஆரோக்கியத்திற்கும், ஆயுளுக்கும் எதிரியாக அமைந்துவிடுகிறது. பெண்கள் நோயிடம் விழிப்புடன் இருந்து, தொடக்கத்திலே அதை கண்டறிந்து சிகிச்சை பெற்றால் மகிழ்ச்சியுடன் நீண்ட நாட்கள் வாழ வாய்ப்பிருக்கிறது. நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் அதற்கு துணைபுரிகிறது.
விளக்கம்: டாக்டர் பியூலா இம்மானுவேல்
M.B.B.S.,D.M.R.D.,D.N.B.
***
thanks
***