...
"வாழ்க வளமுடன்"
22 ஏப்ரல், 2010
வாழை மருத்துவம் ( அனைத்து பாகமும் )
வாழைப்பழ ஏற்றுமதியில் தென் இந்தியா முதலிடம் வகிக்கிறது. குமரி மாவட்டத்தில் நெல் பயிராகி வந்த இடங்கள் கூட இன்று வாழை தோட்டங்களாக மாற்றப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். இம்மரம் விவசாயிகளின் 'கற்பகத் தருவாக' விளங்குகிறது. வண்டல் மண் நிறைந்த இடத்தில் செழிப்பாக வளரும் இம்மரம் மற்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இதன் வகைகளுக்கேற்றவாறு இதன் உயரமும், ஆயுட்காலமும் அமைந்திருக்கும்.
*
வாழை மரத்தின் தாவரவியல் பெயர் - Musa Paradisiaca. இது Musaceae என்னும் குடும்பத்தை சார்ந்தது. இதன் ஆங்கில பெயர் - Plantain tree இதனை மலையாளத்தில் வாழா என்றும் சமஸ்கிருதத்தில் கதலி என்றும் அழைக்கின்றனர்.
*
வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் மருத்துவ குணங்களும் பிற பயன்களும் உள்ளன. இம்மரத்தில் பல வகைகள் காணப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் குறிப்பாக செவ்வாழை, இரசதாளி, வாழை, நேந்திர வாழை, பேயன் வாழை போன்றன பயிரிடப்படுகின்றன.
*
பிற மாவட்டங்களில் அடுக்குவாழை, கருவாழை, கொட்டை வாழை, நவரை வாழை, மலை வாழை, மொந்தன் வாழை, வெள் வாழை போன்றனவும் இன்னும் சிலவும் பயிராகின்றது. இவற்றின் கனிகளின் தன்மை மட்டும் மாறுபட்டு காணப்படும். அவற்றின் மருத்துவ குணங்களும் மாறும்.
***
வாழை கிழங்கு:
*
வாழை மரத்தின் கருவாக இருப்பது. ஒரு கிழங்கை நாம் பயிர் செய்தால் அது வாழையடி வாழையாய் நமக்கு பயன் தந்து கொண்டே இருக்கும். இதற்குள்ள மருத்துவ பயனை பற்றி பார்த்தால் நமக்கு சற்று வியப்பாக தான் இருக்கும்.இக்கிழங்கை இடித்து பிழிந்த சாற்றினை குடித்து வர சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம் கலந்து வரல், பாண்டு நோய், எலும்புருக்கி நோய் முதலியவற்றிலிருந்து நாம் நம்மை விடுவித்து கொள்ளலாம்.
***
வாழை பட்டை:
*
இது உலர்ந்தபின் இதிலிருந்து எடுக்கப்படும் நார் பைகள் செய்யவும், துணிகள் நெய்யவும், பூக்கள் தொடுக்கவும் பயன்படுகிறது. மேலும் இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவித உப்பு சிறுநீர் பெருக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
***
வாழை இலை:
*
வாழை இலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது சாப்பாடு. இதனை நாம் பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு.
*
இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். மேலும் தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மேல் படுக்க வைக்கலாம். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும்.
*
தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
*
காயங்கள்- தோல் புண்களுக்கு- தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணி யில் நனைத்து புண்கள்மேல் போட்டு இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும்.
*
சின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும்.
*
சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். ( குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும். )
*
அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம்சாப்பிட்டுவர அஜீ ரணம் சரியாகும். தொடர்ந்து 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
***
வாழைப் பூ:
*
பூ-வாழை மரம் ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது. இதன் தண்டின் நடுப்பகுதியிலிருக்கும் பூக்கள் மட்டுமே காய் ஆகும். மற்றவை ஆகாது, இப்பூவினை சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதனை வியட்னாமில் பச்சையாகவே உண்ணுகின்றார்கள்.
*
இவ்வாறு இதனை உண்பதால் சீதக்கழிச்சல், எருவாய்க்கடுப்பு, குருதிமுனை, உடல் கொதிப்பு முதலியன தீரும். இப்பூச்சாற்றினை பனங்கற்கண்டோடு சேர்த்து உட்கொள்ள வயிற்றுப்புண் முதலிய நோய்கள் நீங்கும். மேலும் இது பத்திய உணவாகவும் கொள்ளப்படுகிறது.
***
வாழைக்காய்:
*
வாழைக்காயினை சமைத்து உண்டுவர உடல் வெப்பம், வயிற்றுளைச்சல், வாய் நீரூறல், உமிழ்நீர்ச்சுரப்பு, இருமல் ஆகியன நீங்கும். இது குருதியினை பெருகச்செய்யும். உடலுக்கு வன்மையை யும் அதிக அளவில் உணவில் விருப்பத்தையும் கொள்ளசெய்யும். இதனை நெருப்பிலிட்டு சுட்டு சாப்பிடுவதும் உண்டு. இதனை கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் பல உள்ளன.
*
மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக் காய்க்கு நிகரில்லை. அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாகும்.
***
வாழைத் தண்டு:
*
சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள்,ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள், ரத்தக் குறைபாடுகள் ஆகியவற்றை வாழைத் தண்டு போக்குகிறது. பல மருத்துவப் பண்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது.
*
வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.
***
வாழைப்பழம்:
*
மலச்சிக்கல், மூலநோயால் அவதியுறுவோருக்கு பூவன் பழமும், வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்படுவோருக்கு பேயன் பழமும் தேவை. சுலபத்தில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குவது மலைவாழை. ரஸ்தாலியில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.
*
சின்ன அம்மை, டைபாய்டு, மஞ்சட் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடவேண்டும்.இருமல்- கருமிளகு கால் தேக் கரண்டி எடுத்து பொடி செய்து அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
*
சிறுநீரக நோய்கள் மற்றும் இரத்தக் குறைபாடுகள்-நெல்லிச்சாறு அரைக் கரண்டியும் பழுத்த வாழையை கலந்து 2-3 வேளை சாப்பிட்டு வர மேற் சொன்ன குறைபாடு நீங்கும்.
*
நாவிற்கும், மனதிற்கும் இன்பத்தை அள்ளிக் கொடுக்கும் வாழைப்பழத்தின் உபயோகங்கள் பல உள்ளன. ஒரு வாழை பழத்தில் இருக்கும் சத்துக்களை நாம் தெளிவாக தெரிந்து கொண்டால் நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
*
நாள்தோறும் ஒரு வாழைப்பழம் உண்டுவருவது நமது உடலுக்கு மிகவும் நல்லது. நாம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் நமது உடலுககு 220 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. வாழைப்பழத்திற்கு மலமிளக்கி செய்கை உண்டு. மேலும் இது உடலுரமாக்கி ஆகவும் செயல்படும்.
*
இப்பழத்தினை உண்பதால் வெப்ப பிணிகள், இரத்தசோகை, மலக்கட்டு, கர்ப்பிணிகளுக்கு வரும் வாந்தி, குன்மம், மன அழுத்தம், நெஞ்செரிவு, மலக்கட்டு முதலியன நீங்கும். உடலின் தோல் பளபளப்பாகும்.
*
இப்பழத்தின் தோலை கொசு கடித்த இடத்தில் வைத்து தேய்க்க, எரிச்சல் தடிப்பு ஆகியன நீங்கும்.இவ்வாறு தனது உடல் முழுவதையும் பயனுள்ளதாக்கி நமக்கு வழங்கும் இவ்வள்ளலை வளரச்செய்து பயனடைவோம்.
***
நன்றி கீற்று.
http://www.keetru.com/puthiyathendral/sep07/sudhir.php
***
வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள்
வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில். மத்திய அமெரிக்காவில் 350 வருடங்களாகத்தான் பிரபலம். அங்கிருந்து வட அமெரிக்காவிற்கு போனது. கொஞ்சம் கொஞ்சமாக வாழைப்பழத்தின் பயன்கள், மருத்துவக் குணங்கள் எல்லாம் தெரிய ஆரம்பிக்க, இப்போது காலை உணவின் முக்கிய அம்சமாகி விட்டது.
*
கி.மு 327 ல் அலெக்ஸாண்டர் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த போது வாழைப்பழத்தை விரும்பிச் சாப்பிட்டிருக்கிறார். திரும்பிப் போகும் போது கிரேக்க நாட்டிலும் மேலை நாடுகளிலும் அறிமுகப்படுத்தியதாகச் சொல்கிறார்கள். அரேபியர்கள் இதை அடிமை வியாபாரத்துடன் சேர்த்து விற்பனை செய்தனர். அடிமை வியாபாரிகள் தந்த பெயர் பனானா. அப்போது வாழைப்பழம் இப்போது போலப் பெரிதாக இருந்ததில்லை. விரல் நீளம்தான் இருக்கும். அரேபிய மொழியில் பனானா என்றால் விரல் என்று அர்த்தம். எல்லாப் பழங்களும் பழுக்கும் போது எத்திலீன் வாயுவை வெளிப்படுத்தும். வாழையில் அதிகமாக இருக்கும்.
*
வாழை ஒரு மரமில்லாத மரம். மற்ற மரங்களுக்கு இருப்பதைப் போன்று கனத்த கெட்டியான அடிமரமோ, கிளைகளோ கிடையாது. 8௰ அடி உயரத்தில் மரம்போல் வளர்ந்தாலும் அதன் அடிமரம் அடுக்கடுக்கான மெல்லிய பட்டைகளாலானது. பலமாக காற்றடித்தாலும் மளுக்கென்று ஒடிந்து விடக் கூடியது. இந்தத் தண்டு பத்து அடி வரை வளர்ந்து 100 லிருந்து 150 பழங்கள் கொண்ட வாழைத் தாரையே தாங்கும் பலம் பெற்றிருப்பது எப்படி என்பது இயற்கையின் விந்தை.
*
இலைகள் நீண்டு பெரிதாக இருப்பதால் பழங்குடியினர் இதை வீட்டுக்கு கூரையாகவும், குடையாகவும் கூட உபயோகிக்கின்றனர். ஒரு மரம் ஒரு முறைதான் பழம் தரும். ஒரு சீப்பை கை என்றும், தனியாக ஒரு பழத்தை விரல் என்றும் ஆங்கிலத்தில் சொல்கிறார்கள். பல அடுக்கு சீப்புகள் கொண்டது ஒரு குலை. வாழைச் சீப்பு எப்போதும் மேல் நோக்கியே இருக்கும். வீட்டிலும் அதை அப்படியே வைத்தால்தான் கெடாமல் இருக்கும்.
***
வகைகள்:
*
1. இனிப்பான பழவகை 2. சமையல் செய்ய காய்வகை. இதில் ஒவ்வொன்றிலும் பல வகைகள் உண்டு. காய்வகை பழுக்காது. பழுத்தாலும் சாப்பிட நன்றாக இருக்காது.மஞ்சள், பச்சை, சிவப்பு, கறுப்பு கூட உண்டு. அதேபோல் சிறியது, தட்டை, வழவழப்பு, சொரசொரப்பா, நீளம், விரல் நீளம் என்று பல வடிவங்களையும் வண்ணங்களையும் கொண்டது.
*
விரல் நீளமே உள்ள மன்ழெனொ என்னும் வகைதான் பழுத்ததும் கறுப்பாகிவிடும்.வாழை வகையில் தென்னிந்தியாவை மிஞ்ச முடியாது. மலைப்பழம், ரஸ்தாளி, சிறுமலைப்பழம், பூவன், சர்க்கரை கதளி, செவ்வாழை, பச்சைப்பழம், பேயன் இப்படி.
*
வாழைக்காயில் மாவுச்சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தில் இதுவே சர்க்கரையாகி மிருதுத்தன்மையையும் நல்ல மணத்தையும் தருகிறது.
*
வாழைப்பழம் சுவையானது. முக்கனிகளில் ஒன்று. எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். உலக மக்களினால் அதிகமாக உண்ணப்படும் பழங்களில் இது ஒன்று. மிகுந்த வெப்பமும் நீரும் உள்ள இடங்களில் வாழை செழித்து வளரும். இதிலே 300க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன.
*
‘தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்’ என்ற புதிய தாரக மந்திரம் இப்போது உருவாகியுள்ளது.வாழைப்பழம் உண்மையில் மிகச் சிறந்த தாவர இனத்தைச் சேர்ந்ததாகும். சரிநுட்பமான, முழு நிறைவான உணவுமாகும் இது. புரதத்துடன் மாவுச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புக்கள் முதலியன போதுமான அளவு இப்பழத்தில் உள்ளன.
*
ஸ்டெபி கிராப்பைத் தொடர்ந்து அவரது காதலரான ஆண்ட்ரே அகாஸியும் டென்னிஸ் மேட்ச் நடைபெறும்போது வாழைப்பழத்தைதான் இடைவேளையில் சாப்பிடுகிறார். காரணம் நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டவுடன் இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அடுத்த 15 நிமிடங்களுக்குள் ஜிவ்வென்று (35%) அதிகரிப்பதால் உடலும் மனமும் சுறுசுறுப்பாகி விடுகின்றன. மற்ற உணவு என்றால் இன்னும் அதிக நேரம் ஆகும். இந்தச் சக்தி அடுத்த 40 நிமிடங்கள் வரை உடலில் இருக்கும் என்கிறார் ஜேன் கிரிஃபின்.
*
இவர் பிரிட்டிஷ் ஒலிம்பிக் அசோஷியேஷனில் விளையாட்டு வீரர்களுக்கு சத்துணவுத் திட்டம் அளிக்கும் நிபுணர். டென்னிஸ் வீரர்களைத் தொடர்ந்து அனைத்து விளையாட்டுத் துறை வீரர்களும் இனி வாழைப்பழத்தைதான் நன்கு சாப்பிட வேண்டும் என்கிறார். காய்ச்சல் வருவதுபோல் உணர்ந்தால் ஒரு வாழைப்பழத்தை உடனே சாப்பிடுங்கள்.
***
சத்துக்கள்:
*
1. பொட்டாசியம் 400 மில்லி கிராம், Folocin 20 மைக்ரோ கிராம், விட்டமின் சி, 10 மில்லி கிராம், விட்டமின் பி 6-.6 மில்லி கிராம்.
*
2. இன்று, விஞ்ஞானிகளும், சத்துணவு நிபுணர்களும், உலகின் மிக உயர்ந்த தரமான உணவு வாழைப்பழம்தான் என்கிறார்கள்.
*
3. புரதம், நரம்புகள் தளராமல் இளமை நீடிக்க கால்சியம், இரத்த சோகையைத் தடுக்கும் இரும்புச்சத்து, இதயம் சீராய்ச் சுருங்கி விரிவடைய மக்னீஷியம், பாக்டீரியாக்களை அழிக்கும் ஹைடிரோ அமிலம், சோடியம் உப்பு, இரத்தத்தைத் திரவ நிலையில் இருக்க உதவும் பொட்டாசியம், மூளை வளர்ச்சிக்கும், பார்வைத் திறனுக்கும் பாஸ்பரஸ், A, B, C என மூன்று வைட்டமின்களும் வாழைப்பழத்தில் உள்ளன.
***
மருத்துவக் குணங்கள்:
1. விளையாட்டு வீரர்களின் கடைசி நேர மனநிலையை வெற்றியா, தோல்வியா என் நிர்ணயிப்பது, அதன்படி முழு வேகத்துடன் செயல்படுவது என அனைத்தையும் நிர்ணயிப்பது அவர்களின் உடலில் உள்ள பொட்டாசியம்தான்.
*
2. பொட்டாசியம் அறிவு குறையாமல் இருந்தால் நான்காவதாக ஓடி வரும் வீரர் அந்தக் கடைசி நொடியில் முடிவு எடுத்து முதல் ஆளாக ஓடி வந்து வெற்றி பெற்று விடுவாராம்.
*
3. விளையாட்டு வீரர்களுக்கும், தன்னம்பிக்கையுடன் வாழ வேண்டும் என்ற உறுதியானவர்களுக்கும் முழுமையான சக்தி நிரப்பப்பட்டுள்ள பழம் வாழைப்பழம்தான் என்கிறார் பிரிட்டிஷ் சத்துணவு நிபுணர் ஜேன்கிரிஃப்பின்.
*
4. நெஞ்செரிப்பு நோய் உள்ளவர்கள், வாழைப் பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்திற்கு இயற்கையாக அமில எதிர்ப்பு சக்தி இருப்பதால் வாழைப்பழத்தை தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர நெஞ்செரிப்பு நோய் விரைவில் குணமாகிவிடும்.
5. 6.கர்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது.
*
7. மனஉளைச்சலைக் குறைக்கும் அருமருந்தாக வாழைப்பழம் பயன்படுகிறது. வாழைப்பழத்திலிருக்கும் ட்ரிப்டோஃபேன் எனும் புரதம் மனஉளைச்சலைக் குறைத்து ஆறுதல் அளிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
*
8. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
*
9. இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
*
10. குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
*
11. மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள். இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது.
*
12. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
*
13. பொட்டாசியம் இருந்தாலும் உப்புச் சத்து குறைவாக இருப்பதால் இது இரத்த அழுத்தத்தைச் சீர்செய்யவும், மூளை விழிப்புடன் இருந்து சிந்தனைத் திறனை மேம்படுத்தவும், சிகரெட் கைவிட்டவர்கள் நிக்கோட்டின் ஆதிக்கத்திலிருந்து விரைவில் விடுபடவும் உதவுகிறது.
*
14. வாழைப்பூ, தண்டு இரண்டும் கணையத்திலும் சிறுநீரகத்திலும் கற்கள் வராமல் பாதுகாக்கும். வைட்டமின் B அதிகம் இருப்பதால் நரம்பு மண்டலத்தைச் சீராக வைத்திடவும் வாழைப்பழம் உதவுகிறது.
*
15. வேலையில் உண்டாகும் அழுத்தத்தினால் சிலர் அதிகமாக சாக்லேட்டுகளை உட்கொள்ள எத்தனிப்பர். இவர்கள் வாழைப்பழத்தை சிற்றுண்டி போல உட்கொண்டால் உடல் எடை அதிகரிப்பிலிருந்தும், குடற்புண் ஏற்படுவதிலிருந்தும் தப்பலாம்.
*
16.கொசு கடித்த இடத்தில் வாழைப்பழத் தோலின் உள்பகுதி கொண்டு தேய்த்தால் அரிப்பும் தடிப்பும் போகும்.
*
17. உடற்பருமனாக இருப்பவர்களும், மெலிந்த தேகம் கொண்டவர்களுக்கும் வாழைப் பழம் பயன்தரும். அதாவது உடற் பருமனாக இருப்பவர்கள் வாழைப்பழத்தை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அவர்களது இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவை ஒரு நிலையான தன்மைக்கு கொண்டு வருவதால் உடற்பருமன் குறைவதாக அந்த மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
*
18. மேலும், ஒல்லியான தேகம் கொண்டவர்கள் தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும் என்றும் அறியப்படுகிறது.
*
19. அல்சர் எனப்படும் குடற்புண் ஏற்பட்டவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் குடலின் உட்பகுதி மென்மையாகி அதிகமான அமிலத்தன்மை ஏற்படுத்தாததினால் குடற்புண்ணை அழிப்பதுடன் குடற்புண் வராமல் காக்கிறது.
*
20. உடலின் தட்பவெப்பநிலையை சீராக வைப்பதிலும் வாழைப்பழம் அதிகம் உதவுகிறது. வெப்பமான பகுதியில் வேலை செய்பவர்களும், உடல் சூடு கொண்டவர்களும் வாழைப் பழம் சாப்பிடலாம். வாழைப்பழத்திற்கு குளிர்ந்த பழம் என்ற பெயரும் உண்டு.
*
21. ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்த நோய் தாக்கியவர்களுக்கு வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்துடிப்பை கட்டுக் கோப்புக்குள் வைத்துக் கொள்வதுடன் ஆக்ஸிஜைனை மூளைக்குச் செலுத்தி உடலின் தண்ணீரின் அளவை சமப்படுத்துகிறது. இதனால் மன அழுத்த நோய் விரைவில் நீங்கும் என்பது தெளிவாகிறது.
*
22. காலையில் சிலரால் எழுந்திரிக்க முடியாமல் அவதிப்படுவார்கள். இதனை காலை தூக்க நோய் என்று குறிப்பிடுவோம். இதற்கு அவர்கள் ஒவ்வொரு உணவு இடைவேளைக்கு ஒரு முறை வாழைப் பழத்தை சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள குளுகோஸ் அளவு அதிகமாக்கப்பட்டு காலைத் தூக்க நோயிலிருந்து விடுபடலாம்.
*
23. சர்க்கரை வியாதி உள்ளவர்கள் வாழைப்பழத்தை ஒதுக்கி வைக்க வேண்டும்.
*
24. வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் சி பல் ஈறுகளையும், எலும்புகளைப் பிணைக்கும் தசை நார்களையும் உறுதியுடன் இருக்க உதவுகிறது. இரத்தத்தில் சிவப்பு அணுக்கள் உருவாக வைட்டமின் ஏ-யையும் உடல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொடுக்கிறது.
*
25. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம்.
*
26. எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
*
27. திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.
*
28. ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் ஏ(A) உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் ஏ(A) உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.
*
29. வாழை வெப்ப சீதோஷ்ண பகுதியில் தான் அதிகமாக விளையும். குளிர்பிரதேசத்தில் வராது. இதனால்தான் இந்தியாவில் அதிகமாக விளைகிறது. அதுவும் தென்னிந்தியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழை இல்லாமல் எந்த சுப, அசுப காரியங்களும் இடம்பெறுவதில்லை.எது எப்படியோ வாழைப்பழம் ஓர் இன்றியமையாத உணவுப்பொருள் என்பதை எவரும் மறுக்க இயலாது.
*
30. எனவேதான் அந்த காலத்திலேயே, வெற்றிலையுடனும், சாமிக்குப் படைக்கவும், தாம்பூலம் வைத்துக் கொடுக்கவும் இவ்வளவு சிறப்பு வாய்ந்த வாழைப் பழத்தை பயன்படுத்தியுள்ளனர். எனவே இந்த பழத்தை சாப்பிடும்போது பலருக்கும் நல்ல பயன் கிடைக்கும் என்ற சிந்தனையோடு வாழையின் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர்.
***
http://www.tamilvanan.com/content/2009/07/31/banana/
http://www.tamilvanan.com/content/2008/07/25/20080725-healthy-life/
http://www.eelamweb.com/index.php/news/Health-News/
http://tamil.webdunia.com/miscellaneous/health/articles/0911/20/1091120050_1.htm
***
அனைத்து தளத்திற்க்கும் என் மனமார்ந்த நன்றி.
***
உணவு மூலம் உங்கள் குணம் !
எல்லோரும் தான் சாப்பிடுகின்றார்கள். ஆனால் ஆரோக்கியமாக சாப்பிடுபவர்கள் குறைந்தளவானவர்களே. என்ன சாப்பிடுகிறோம் என்பது போலவே அதை எப்படிச் சாப்பிடுகின்றோம்.... சாப்பிடும் போது நம் உடலின் தன்மை என்ன போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டிய விடயங்கள்.
*
ஏனெனில் நாம் சாப்பிடும் பொருட்கள் வெறுமனே உடலுக்கு ஊட்டம் தருவதோடு நின்று விடுவதில்லை. நம் குணத்தை தீர்மானிப்பதிலும் அவை கணிசமான அளவு பங்கு வகிக்கின்றன.
*
உதாரணமாக ஒருவர் பால், நெய், காய்கள், பழங்கள், கீரைகள் , தானியங்கள், பருப்பவகைகள் என சாத்வீக உணவுகளை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் அவர் அமைதியான குணம் கொண்டவராக இருப்பார். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் பதட்டம் அடையாமல் தெளிவாக கிரகித்து முடிவுகள் எடுக்கும் பக்குவம் கொண்டவராக இருப்பார்.
காரம் உப்பு புளிப்பு என அழுத்தமான உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டு மாமிசங்கள் எண்ணையில் பொரித்த உணவுகளை விரும்பி உண்பவர்கள் எப்போதும் பதட்டம் உள்ளவர்களாக காணப்படுவார்கள். உணர்ச்சிவசப்பட்டு தப்பான முடிவுகளை எடுத்தவிட்டு பின்பு வருத்தப்பட்டு விட்டு மீண்டும் அதே தவறைச் செய்வார்கள்.
அசுத்தமான உணவு புளித்துப்போனது குளிர்சாதனப்பெட்டியில் வைத்து குளிர்ந்திருக்கும் உணவுகள் பழைய உணவு டிகட்டுப்போன உணவு போன்றவற்றை உண்பவர்கள் மந்தமாக இருப்பார்கள். நல்லது கெட்டது தெரியாமல் எதையும் நம்புவார்கள்.
***
குறிப்பு:
*
ஆயள்வேதம் தொடர்பான புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
***
ஹதம்">நன்றி ஈகரை.
http://eegarai.darkbb.com/-f14/-t11873.htmஹதம்">
***
"வாழ்க வளமுடன்"
21 ஏப்ரல், 2010
அகத்தின் அழகு நகத்தில் தெரியும்!
20 ஏப்ரல், 2010
சீத்தாப்பழத்தின் மருத்துவ குணங்கள்
சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
19 ஏப்ரல், 2010
தயிர் வேண்டாமே... மோர் குடிங்க! ( கோடை & கத்திரி பருவம் )
டிப்ஸ்கள்:
*
1. கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
*
2. நுங்கு, கிர்ணிப் பழம், தர்பூசணி போன்ற பழங்கள், இளநீர், பிரஷ்ஷான பழச்சாறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்; முடிந்த வரை குளிர்பானங்களாக குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜலதோஷம் போன்றவை ஏற்படாமல், காத்துக் கொள்ளலாம்.
*
3. தயிராக சாப்பிடாமல், அதில் நிறைய தண்ணீர் கலந்து மோராக சாப்பிட வேண்டும். கறிவேப்பிலை மற்றும் கல் உப்பை சேர்த்து பிசைந்து, அதன் சாறு மோரில் இறங்கும் படி செய்ய வேண்டும். பின், அதில், பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால், உடலுக்கு மிகவும் நல்லது.
*
4. தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். அப்போது தான், கோடை காலத்தில் அதிகளவு வியர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
*
5. இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகள் அணியலாம். இதனால், கசகசவென இருக்கும் உணர்வு தவிர்க்கப்படும்; குறிப்பாக, உள்ளாடைகளும், பருத்தியாலானவற்றை அணிவது, மிகவும் நல்லது.
*
6. உடல் சூட்டின் அளவை குறைக்க <உதவும் வைட்டமின் சி எலுமிச்சம்பழத்தில் காணப்படுகிறது. எனவே, எலுமிச்சம் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.
*
7. வெயில் காலத்தில் உடல் சூடு அதிகரிப்பதால், ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
*
8. வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால், குடை எடுத்துச் செல்லுங்கள். இதனால், அதிகளவு சூரிய வெப்பம், உடலை தாக்குவதை தவிர்க்கலாம்.
*
9. பகல் வேளைகளில், வீட்டில் அறைகளின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்து, இயற்கையான வெளிக் காற்று வரும் வகையில் வைக்க வேண்டும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றிற்கும், பருத்தியாலான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
*
10. கோடை காலத்தில் உண்டாகும் உதடு வெடிப்பை போக்க, பாலாடை தேய்க்கலாம்.
***
கோடை காலத்தில், உடலின் நீர்ச்சத்து வற்றாமல் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல்வேறு பிரச்னைகளில் இருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.
நன்றி தினமலர்.
***
ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மருத்துவ குணங்கள்
*
*
நாம் உட்கொள்ளும் பழம் ருசியாக இருந்தால் மட்டும் போதாது. அதில் நம் உடலுக்கு தேவையான பலவிதமான அத்தியாவசிய சத்துக்களும் நிறைந்திருக்க வேண்டும். உதாரணமாக பிற உணவுகளில் குறைந்தளவே காணப்படும் அல்லது அரிதாக காணப்படும் வைட்டமின்-பி6, வைட்டமின் கே, அயோடின், செலினியம், ஆர்ஜினின் போன்ற பொருட்கள் உணவுப் பாதையை சீர் செய்து, ரத்த செல்களை ஒழுங்கு செய்து, தைராய்டு போன்ற நாளமில்லா சுரப்பிகள்சீராக இயங்கவும், நுண்ணிய ரத்தக்குழாய்களில் அடைப் பின்றி ரத்த ஓட்டம் செல்லவும் பயன்படுகின்றன. இவை குறைபாடாக நமக்கு கிடைப்பதால் பலவித பற்றாக்குறை நோய்கள் உண்டாகின்றன. ஆகவே நாம் இது போன்ற சிறப்பான சத்துகள் நிறைந்த பழங்களை அடிக்கடி உட் கொண்டால் பலவிதமான நோய்கள் நம்மை அணுகாமல் காத்துக் கொள்ளலாம்.
*
ஏராளமான வைட்டமின்களையும், பலவகையான தனிக சத்துக்களையும், ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ள வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் உயர்ந்த ஸ்ட்ராபெர்ரி பழங்கள், கோடைக்காலத்தில் பெருமளவு விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் மருத்துவ குணத்திற்காக இவை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. சுகந்த மணத்தையும், கருஞ்சிவப்பு நிறத்துடன், கண்களை பறிக்கும் அழகுடன் காணப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்கள் உலகம் முழுவதும் பயிர் செய்யப்படுகின்றன. தரம் உயர்ந்த இயற்கை முறையில் பயிர் செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரி பழங்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பெரோஜிரியா அனானாசா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ரோசேசியே குடும்பத்தைச் சார்ந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்து உள்ளன.
*
5 பழங்களில் 250மிலி அளவில் தயார் செய்து குடிக்கும் பழச்சாற்றில் 40 கலோரிகள் சத்தும், பல்வேறு வகையான பிளேவனாய்டுகளும் நமக்கு கிடைக் கின்றன. இதிலிருந்து எடுக்கப்படும் நறுமணப் பொருளானது சாக்லேட், கேக், ஐஸ்கிரீம் போன்றவை தயார் செய்ய உணவு னூட்டியாகவும், நிறமூட்டியாகவும் பயன்படுகிறது.
*
ஸ்ட்ராபெர்ரி பழங்கள் 10, உரித்த ஆரஞ்சு சுளைகள் 10, பழுத்த, உரித்த நாட்டு வாழைப்பழம் 4, சீனி அல்லது நாட்டுச்சர்க்கரை 50 கிராம் ஆகியவற்றை எடுத்து தேவையெனில் நெல்லிக்காய் சாறு 100 மிலி சேர்த்து நன்கு அரைத்து பழச்சாற்றை பிழிந்து வைத்துக்கொள்ள வேண்டும். தேவையெனில் சற்று நீர் சேர்த்து இளக்கமாக அரைக்கலாம். ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த பழச்சாறு ஒரு சிறிய குடும்பத்திற்கு போதுமானதாகும். கோடைகாலத்தில் அடிக்கடி இந்த பழச்சாற்றை குடித்து வந்தால் தோல் வறட்சி நீங்குவதுடன், வேதிப்பொருட்களால் செய்யப்பட்ட குளிர்பானங்களை உட்கொண்டு பல் எனாமல் தேய்ந்து, பற்களில் கறை ஏற்படுவதையும் தவிர்க்கலாம். மேலும் ஸ்ட்ராபெர்ரியிலுள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.
*
இந்தப் பழங்கள் மிகவும் சுவையும், மணமும் கொண்டவை. சருமத்தைச் சுத்தப்படுத்தும், ஜீரண உறுப்புகளை சுத்தப்படுத்தும் தன்மையும் உண்டு. அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும்.
*
அழகுச் சாதனப் பொருள் தயாரிப்பில் இப்பழங்களின் மணமும், குணமும் உபயோகிக்கப்படுகின்றன. பருவப் பெண்கள் பரு மற்றும் வடுக்களைத் தடுக்க தங்கள் உணவில் இப்பழங்களைச் சேர்த்துக் கொள்ளுதல் நலம் பயக்கும்.
*
சருமத்தை இலேசாக வெளுக்கச் செய்யும் தன்மை இப்பழங்களுக்கு உண்டு. அதனால் முகத்திலுள்ள பருக்களின் வடுக்களை விரைவில் மறையச் செய்யும் குணம் கொண்டது. வெயிலினால் ஏற்படும் சருமப் பராமரிப்பிலிருந்தும், சூரியக்கதிர் வீச்சிலிருந்தும் சருமத்தைப் பாதுகாக்கும்.
***
by-டாக்டர்.ஜெ.ஜெயவெங்கடேஷ்,
மதுரை.
*
http://www.dinamalar.com/Supplementary/hdmalar_detail.asp?news_id=350&dt=03-07-10
*
நன்றி டாக்டர்.
நன்றி தினமலர்.
***
"வாழ்க வளமுடன்"
16 ஏப்ரல், 2010
உணவு பொருட்களை பயன்படுத்தும் முறை
உண்மையில், ஒரு நாளைக்கு ஆறு பிரிவாக பிரித்துத்தான் சாப்பிட வேண்டும் என்று தான் நிபுணர்கள் கருத்து. நம் வசதிக்காக , எப்போது பார்த்தாலும் “புல் கட்டு’ கட்டி விடுகிறோம். டிபனில் இருந்து சாப்பாடு வரை ஆறு பிரிவாக பிரித்து சாப்பிட்டால், ஜீரணமும் எளிதாகும். இந்த ஆறில், ஜங்க் புட், கூல் டிரிங்ஸ், ஐஸ் கிரீம், பிட்சா போன்ற சமாச்சாரங்களுக்கு இடமில்லை.
5. ஓவரா கழுவாதீங்க:
அரிசியை களையும் போது, அதிகமாக கழுவி சுத்தம் செய்தால், அதில் உள்ள மாவுச்சத்துக்கள் நீங்கி விடும். அதனால், அதிகமாக கழுவ வேண்டாம். காய்கறிகளில், பழங்களில் உள்ள உரம், பூச்சி மருந்து துகள்கள் நீங்க வேண்டும் என்பதால், அவற்றை சுத்தமாக கழுவித்தான் ஆக வேண்டும். கழுவாமல் சாப்பிடக்கூடாது; சமைக்கக்கூடாது.
*
6. மலச்சிக்கலா:
மலச்சிக்கல் இருக்கிறதா? இரவு நேரத்தில் சாப்பிடும்போது, பப்பாளி பழத்தை சாப்பிட்டுவிட்டு, பால் குடித்து படுக்கைக்கு போங்கள்; காலையில் மலச்சிக்கல் நீங்கி விடும். பப்பாளியும், பாலும் சேர்ந்து சாப்பிட்டால்,பேதி ஏற்படும் என்பது தவறான தகவல் என்பது டாக்டர்கள் கருத்து.
*
7. சாலட் தெரியுமா?:
*
ஓட்டலில் வெஜிடபிள் சாலட் என்று 50 ரூபாய்க்கு வாங்கிச்சாப்பிட்டால் தான் சாலட் என்றால் என்ன என்று பலருக்கு தெரிகிறது. அதையே வீட்டில் செய்து சாப் பிட் டால் எவ்வளவு உடலுக்கு நல்லது என்று பார்ப்பதில்லை. சுத்தம் செய்த கேரட், வெங்காயம், வெள்ளரி, தக்காளி, கோஸ் ஆகியவற்றை சிறிதாக நறுக்கி சாப் பிட்டால், உடலில் வைட்டமின், கனிம சத்துக்கள் சேருவது மட்டுமல்ல, பற்கள் சுத்தமாக இருக்கவும் உதவும்.
*
8. ஊறிய பாதாம்:
*
தீபாவளி, பொங்கல் தினங்களில் இனிப்பு வகைகளுடன் இப்போதெல்லாம் உலர்ந்த பழங்கள் பரிசாக கொடுப்பது வழக்கமாகிவிட்டது. இதில், பாதாம் பருப்பு பற்றி பலருக்கும் இப்போது தான் தெரிய ஆரம்பித்துள்ளது.பாதாம் பருப்பு, சாதா கடைகளில் விற்கப்படுகிறது. பத்துபாதாம் பருப்பை முதல் நாள் இரவு தண்ணீரில் ஊற வைத்து, மறுநாள் தோல் நீக்கி கடித்து சாப்பிட்டால் நல்லது. "பிபி' எட்டிப்பார்க்காது.
www.dinamalar.com
நன்றி தினமலர்.
***
ஆபத்தை வரவழைக்கும் கொசு விரட்டிகள்!
அப்படி கடி வாங்கப்போய், சில நோய்களும் இலவசமாக வந்துவிடுவதால், அதில் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச்சுருள், கிரீம் மற்றும் மேட்களை பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
*
இப்படி பயன்படுத்துவது ஆபத்தில்போய்தான் முடியும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்களும், விஞ்ஞானிகளும்!
*
கொசுவர்த்திச் சுருள்களிலும், மேட்களிலும் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட பல்வேறு ரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ரசாயனங்களின் அடர்த்தி, நாம் இக்காற்றை சுவாசிக்கும் கால அளவு, அறையினுள் வரும் புதிய காற்றின் அளவு ஆகியவற்றைப் பொறுத்து இதனால் நமக்கு ஏற்படும் தீங்குகளின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது.
*
பொதுவாக மாலைநேரங்களில்தான் கொசுக்கள் வீடுகளுக்குள் படையெடுக்கும். அந்தநேரத்தில் கதவு, ஜன்னல்களை பூட்டிவிடுவது வழக்கம். அப்படிச் செய்வதால், வீட்டிற்குள் புதிய காற்று வருவது தடை செய்யப்பட்டு விடுகிறது.
*
காற்று வர வழியில்லாமல் முற்றிலும் அடைபட்ட நிலையில் உள்ள வீட்டின் அறைகளுக்குள் விளக்குகளை எரிய விடுவது, சமைப்பது, அவைகளுக்கு மத்தியிலேயே வீட்டில் உள்ள அனைவரும் சுவாசிப்பது... போன்றவற்றால் பிராண வாயுவான ஆக்ஸிஜனின் அளவு குறைந்துபோய் விடுகிறது.
*
இந்த சூழ்நிலையிலும், வீட்டிற்குள் புகுந்துவிடும் கொசுக்களிடம் இருந்து தப்பிக்க கொசுவர்த்திச் சுருள், மேட் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படிச் செய்வதால், அவற்றில் இருந்து வெளியேறும் நச்சுப்புகையும், தீங்கு ஏற்படுத்தும் வாயுக்களும் மட்டுமே வீட்டிற்குள் அதிகம் உள்ள சூழ்நிலை ஏற்படுகிறது. ஆக்ஸிஜனின் அளவு மிகவும் குறைந்துபோய் விடுகிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும்போது, அவர்களின் உடலுக்குள்ளும் காற்றின் வழியாக நச்சுத்தன்மை புகுந்து விடுகிறது. முன்னறிவிப்பு இன்றி உடலுக்குள் புகுந்த இந்த நச்சுத்தன்மையை விரட்ட உடலானது எதிர்வினை புரிகிறது. அதன் தொடர்ச்சியாக, ஜலதோஷம், சளி பிடித்தல், காய்ச்சல் போன்றவை ஏற்படுகிறது. சிலருக்கு அலர்ஜி என்கிற ஒவ்வாமையும் இதனால் ஏற்பட்டு விடுகிறது. அத்துடன், மேலும் பல பாதிப்புகளையும் நம் உடல் ஏற்க வேண்டிய நிலை உருவாகிவிடுகிறது.
இப்படியெல்லாம் பயமுறுத்தினால், நாங்கள் கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்று கேட்கிறீர்களா?
*
அதற்கும் வழி இருக்கிறது. அந்த வழி கொசு வலைக்குள் புகுந்து கொள்வதுதான்!
***
***
சிறுநீரகத் தொற்று நோய்
1.நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு முக்கிய காரணம், நீரிழிவு வெள்ளை அணுக்களின் செயலை முடக்கிவிடுகிறது. அடுத்தது, நீரிழிவால் நரம்பு மண்டலம் பாதிப்பு அடைகிறது. இதனால் சிறுநீர்ப்பை சரிவர இயங்காது. சிறுநீர்த்தேக்கம் சிறுநீர்ப்பையில் ஏற்பட்டு கிருமிகள் உற்பத்தியாகக் காரணமாகிறது.
*
2. தொற்றுக் கிருமிகள் பெண்களைப் பெரும்பாலும் சுலபமாகப் பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பாலியல் உறுப்பின் போதிய சுத்தமின்மை. அடுத்தது, மாதவிடாய் நின்றபிறகு, ஹார்மோன்கள் மாற்றத்தால், பெண்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து தொற்றுநோய் வர வாய்ப்புள்ளது.
*
3. ஆண்களைப் பொறுத்தவரையில், இளம் வயதில் சிலபேருக்குத் தவறான உடலுறவால், வி.டி. கிருமிகள், எய்ட்ஸ் போன்றவை தொற்றிக் கொண்டு, சிறுநீரக அழற்சி, சிறுநீர்ப்பாதை அடைப்பு போன்றவை ஏற்படும்.
*
4. நடுவயதினருக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றால் தொற்றுக்கிருமிகள் தாக்கி, சிறுநீர்ப்பாதை அடைப்பு ஏற்படலாம்.
*
5. வயதானவர்களுக்கு புரோஸ்டேட் வீக்கம், இரத்தநாளத் தடிப்பு போன்றவற்றால் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேக்கப்பட்டு தொற்றுக்கிருமிகள் ஏற்படலாம். வயதானவர்களுக்கு நாள்பட்ட நீரிழிவால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிறுநீர்ப்பை சுருக்கிவிரியும் தன்மையை இழந்து சிறுநீர் தேக்கம் ஏற்பட்டு கிருமிகள் வளர ஏதுவாகிவிடுகிறது.
*
6. குழந்தைகளைப் பொறுத்தவரையில், ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் பிரியும் இடத்தில் தோல் அடைப்பு இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பாதைக்கு வந்த சிறுநீர் மீண்டும் ஏதோ காரணத்தால், சிறுநீர்ப்பைக்கே திரும்பிச் செல்லும் காரணத்தால், சிறுநீர்ப்பையில் சிறுநீர்த்தேக்கம் ஏற்பட்டு, கிருமிகள் வளர ஏதுவாகி விடுகிறது. இதற்கு வெஸ்டிகோ யூர்டெரிக் ரிப்லக்ஸ் (Vestico Urteric Reflux) என்று பெயர்.
*
7. பெண் குழந்தைகள் சரியான முறையில் தன் பாலியல் உறுப்புகளைச் சுத்தம் செய்து வைத்திருக்காவிட்டால், நிச்சயம் தொற்றுக்கிருமிகள் சிறுநீரகத்தைத் தாக்கும். பெண் குழந்தைகளின் தாய் இதில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பஸ்திரீகள் கவனமாக இருக்கவேண்டும்.
*
8. பொதுவாக, பாலியல் உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டு, சிறுநீரை தேவையில்லாமல் அடக்காமல் இருந்து, அதிகமாக நீரை அருந்திக்கொண்டு, நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, தகாத உடல்உறவு கொள்ளாமல் விழிப்புணர்வோடு இருந்தால், சிறுநீரகக் தொற்றுக்கிருமிகளிலிருந்தும் மற்றும் பல சிறுநீரகக் கோளாறுகளிலிருந்தும் தப்பிக்கலாம்.
***
சிறுநீரகத் தொற்று வியாதிகளின் அறிகுறிகள் என்னென்ன?
*
1.உடலில் தேவையில்லாமல் அரிப்பு.
*
2. சிறுநீர் சிறிது வலியுடன் (முன்பாகவோ, பிற்பாடோ) வெளியேறும்.
*
3. சிறுநீர் பிரிந்த பிறகும், சிறிது சிறிதாக சிறுநீர் வெளியேறும், (அதாவது முழுமையாக ஒரேயடியாக வெளியேறாது) அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல்.
*
4. குளிர்காய்ச்சல் (கட்டுப்படுத்த முடியாத நடுக்கம், வெகு சீக்கிரம் உடல் உஷ்ணம் 104_106 டிகிரிக்கு ஏறுதல், மூச்சுத்திணறல் இவை 30லிருந்து 45 நிமிடம் வரை இருக்கும். பிறகு அடுத்தடுத்து வரலாம்).
*
5. வாந்தி . சிறுநீர் பிரியும்பொழுது எரிச்சல், குத்தல், சிலசமயம் சிறுநீருடன் இரத்தம் கலந்து செல்லுதல், துர்நாற்றம், பாலியல் உறுப்பில் ஆறாத புண், வீக்கம் ஏற்ப்படும்.
*
6. விலா, அடிவயிறு போன்ற இடங்களில் தாங்க முடியாத வலி.
*
7. இரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உற்பத்தியில், சிறுநீரகமும் பெரும்பங்கு வகிக்கிறது.
***
ஆகவே, தொற்றுக்கிருமியால் செயல் இழந்த சிறுநீரகம் சிவப்பு அணுக்களைச் சரியாக உற்பத்தி செய்யத் துணைபுரிவதில்லை. ஆகவே, சிவப்பு அணுக்கள் குறைவாகி சோகை (Anemia) காணும். இது மேற்கொண்டு பல பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.
*
(கவனிக்கவும்: மேலே உள்ள அறிகுறிகளில் பல, நீரிழிவுக்குப் பொருந்தும். எதுவாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காட்டிவிட்டால் பிரச்னை இல்லை.)
***
by-vayal
நன்றி vayal
***
http://senthilvayal.wordpress.com/2008/04/14/
உங்களுக்காக.
நன்றி உங்களுக்காக.
***
"வாழ்க வளமுடன் "
கருவளையம் மறைய
மற்ற காரணங்களால் ஏற்படும் கருவளையத்தை போக்க இதோ சில டிப்ஸ்…
1. தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் மஞ்சளை குழைத்து, கண்களை சுற்றி பூச வேண்டும். சிறிது நேரம் கழித்து கடலை மாவால் கண்களைக் சுற்றி கழுவ கருவளையம் மறையும்.
15 ஏப்ரல், 2010
பப்பாளி இலைச் சாறுகள்
உலர்ந்த பப்பாளி இலை தூலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் அல்லது வடி நீர் பத்து வெவ்வேறு வகையான புற்று கட்டிகளின் செல்களைக் கொன்று அதன் வள்ர்ச்சியைக் குறைக்கிறது என புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாள்ர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
இதன் மூலம் பப்பாளி இலையிலிருந்து எல்லா வகையான புற்று நோய்களுக்கும் மருந்து தயாரிக்கும் வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
*
ஆய்வாள்ர்கள் பப்பாளி இலையில் உள்ள வேதியல் பொருள்கள்புற்று கட்டிகள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள் ஆய்வுக்காக பப்பாளி இலையை காய வைத்து இடித்து பொடியாக்கினர். அந்த பப்பாளி இலைத் தூளை கொதிக்கும் வென்னீரில் போட்டு இஅதில் இருந்து வடி நீர் தயாரித்தனர்.
நன்றி தினகரன்.
***
ஏலக்காயின் மருத்துவ குணங்கள்
*
இந்த மலை தான் ( Cardamom Hill ) ஏலக்காய் மலை.
மிகையான உற்பத்தியெய் இந்திய துணைகண்டம் அண்மைவரை தக்க வைந்துஇருந்தாலும் , ஏலக்காய் ஏற்படும் நோய்களால் முதலிடத்தை கட்டமலா (Guatemala) விடம் இழந்துள்ளது. இந்திய துனைகண்டத்தில் 60% உற்பத்தி கேரளாவிலும், 30% கர்நாடகாவிலும் மீதம் தமிழ் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படுகிறது.
*
மேலும்:
*
1. Guatemala- கட்டமால.
2. India- இந்தியா.
3. Tanzania- தன்சானியா.
4. Sri Lanka- இலங்கை.
5. El Salvador- எல் சல்வடோர்.
6. Vietnam- வியட்னாம்.
7. Laos- இலாசு.
8. Cambodia- கம்போடியா.
9. Papua New Guinea- பாபா புதிய கினியா.
10. Thailand- தாய்லாந்து.
11. Honduras- கோன்றாசு.
12. Nepal- நேபால்.
13. Bhutan- பூட்டான்.
***
மருத்துவ குணங்கள்:
1. ஈரப்பதம், புரதம், மாவுப்பொருள், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற முக்கிய தாது உப்புக்களும் கலந்துள்ளன.
*
2. . மருத்துவத்தில் பல் மற்றும் அதனை சார்ந்த நோய்களுக்கு மருந்தாக பயன் படுகிறது.
*
3. செரிமானத்தை தூண்டுவதாக, குரல் வளை மற்றும் தோல் தொடர்பான பிரச்சினைகளுக்கு.
*
4. மலட்டு தன்மை மற்றும் அரைகுறை விந்து வெளிபடுதலை தீர்ப்பதற்கும். ஏலக்காய், ஆண்மைக் குறைவு, பெண்மைக் குறைவும் நீக்கி குழந்தைப் பாக்கியமும் உண்டாக்க வல்லது பலர் அறியாத செய்தி. இது தாம்பத்திய வாழ்வில் இனிமை சேர்க்கவல்லது.
*
5. ஏலக்காயை பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டால் நரம்பின் பலம் கூடும், கண்பார்வை அதிகரிக்கும்.ஏலப்பொடி, சீரகப்பொடி, சோம்புப் பொடி ஆகிய மூன்றையும் 5 கிராம் வீதம் எடுத்து கலந்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் பசி கூடும், ஜீரணம் அதிகரிக்கும்.
*
6. ஏலத்தை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல், தொண்டை வலி ஆகியவைகள் தீரும்.
*
7. ஒரு சிட்டிகை ஏலக்காய்த்தூளை அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக்கட்டு முதலியவற்றைக் குணப்படுத்தி ஏலக்காயும், இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.
*
8. ஏலக்காயை வாயில் போட்டு மென்றால் வயிற்றுப் பசியை அதிகரித்து நன்கு சாப்பிட வைக்கும். நெஞ்சில் சளி உள்ளவர்கள் அடிக்கடி இருமி அவதிப்படாமல் இருக்கவும் உதவும். ஜீரணமாகாதபோது வரும் தலைவலியை ஏலக்காய் சேர்ந்த ஒரு கப் தேநீர் விடுவிக்கும்.
*
9. ஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு 5 ஆகியவைகளை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.
*
10. அடிக்கடி விக்கல் எடுத்தால் ஒரு கப் தண்ணீரில் இரண்டு மூன்று ஏலக்காயைத் தட்டி உள்ளே போடவும். பிறகு புதினாக் கீரையில் 5 6 இலைகள் மட்டும் இதில் போட்டுக் கொதிக்கவிடவும். பிறகு வடிகட்டி அருந்தினால் விக்கல் எடுப்பது குறையும்.
***
புகைப்பதை நிறுத்த உதவும் ஏலக்காய்:
*
1. ஏலக்காய் மணத்திற்கு மட்டுமல்ல மருந்துக்கும் உதவுகிறது. சிகரெட் எரியும்போது கசியும் "நிக்கோட்டின்" நஞ்சு, தொண்டை, ஈறு, நாக்குகளில் படியும்போது கறை உண்டாவதுடன், அங்கிருக்கும் பூந்தசைகளை அரித்துப் புண்களை உண்டாக்கும்.
*
2. "ஏலக்காய்" இந்தப் புண்களை ஆற்றுவிப்பதுடன், நிக்கோட்டின் கறைகளையும் படியாமல் அப்புறப்படுத்துகிறது.
*
3. இன்னொரு அரிய பயனும் உள்ளது. சிகரெட் பிடிக்கும் எண்ணம் வரும்போதெல்லாம், ஒரு ஏலக்காயினை வாயிலிட்டுச் சுவைக்க, புகைக்கும் எண்ணம் விலகும்.
***
www.hi2web.com
http://www.alaikal.com/news/?m=200803&paged=25
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D
***
நன்றி அதிகாலை.
நன்றி hi2
நன்றி விக்கிபீடியா
***
"வாழ்க வளமுடன் "