...

"வாழ்க வளமுடன்"

13 மார்ச், 2012

முதுமையை விரட்டும் ஓட்ஸ்!



உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி

ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ்

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

***
thanks tbs
***




"வாழ்க வளமுடன்"

அழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்!



இயற்கை அழகு கொட்டிக்கிடக்கையில் மேலும் அழகு படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு பெண்கள் போட்டுக்கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே வேட்டு வைக்கின்றனவாம். கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஷாம்பு, ஸ்ப்ரே

இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வரவேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட் டெட்ராசோடியம் பாரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை என்கினறனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். மேலும் இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.

கண் அழகு சாதனங்கள்

கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம். இது புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.

கன்னக் கதுப்பு

கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம். கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

முக அழகுப் பொருட்கள்

முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

லிப்ஸ்டிக்கில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட 33 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம்.

வாசனை திரவியங்கள்

கோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதில் 15 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.

உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன. இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹார்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.

நகப்பூச்சுகள்

நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை படித்த பின்னரும் அழகு சாதனங்கள் உபயோகிக்கவேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
***
thanks tbs
***


"வாழ்க வளமுடன்"                     

வேகமாக கருத்தரிக்க டிப்ஸ் !

புதிதாய் திருமணமானவர்கள் வேகமாக கருத்தரிக்க புத்தம் புது டிப்ஸ் !

*


திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினைத்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விடமாட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக்கொடுத்துவிட்டு நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுங்கள் என்று அவசரப்படுத்துவார்கள். புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தான உணவு

புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என்.ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது.

முறையான மாதவிடாய் காலம்

முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்தலை தாமதப்படுத்தும் எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாதவிடாய் பருவமாகும். மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

மது, புகை கூடாது

மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே ஒதுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது. உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயாக சிறந்த பருவம்

உலக அளவில் புள்ளி விவரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. 20க்கு குறைந்தோ அல்லது முப்பதுக்கு மேற்பட்டோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தாயின் உடல் ரீதியாகவும், குழந்தையின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வெளிவருவதற்கு சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும். முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன

டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கான பரிசோதனைகள் முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப்போது அதிகரித்துள்ளன.

நோயற்று இருங்கள்

கர்ப்பம் தரித்தபின்னர் இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம். செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது

இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெறவேண்டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.


***
thanks tbs
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "