...

"வாழ்க வளமுடன்"

21 மே, 2011

ஆரோக்கியத்தின் கண்ணாடி சருமம்அழகாய் இருப்பது அத்தனை பெண்களுக்கும் அவசியம். வாழ்க்கையில் வெற்றியை நோக்கிச் செல்லும் பல பிரபலங்களைப் பாருங்கள் நேர்த்தியான அழகும் அவர்களிடம் இருக்கத்தான் செய்யும்.


அறிவையும்அழகையும்தன்னம்பிக்கையையும் ஒன்றாகக் கலந்து காட்டி, செயல்படும் பெண்களே சாதனைக்குரியவர்களாக உருவாகிறார்கள்.


அழகு என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது சருமத்தின் நிறம். சிவப்பு நிறம் எல்லா பெண்களும் விரும்பும் நிறமாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் சருமத்தைப் பற்றி விஞ்ஞானபூர்வமாக எத்தனை சதவீத பெண்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்?


மனித உடலில் இருக்கும் பெரிய உறுப்பு எது? சருமம்தான் உடலில் மிகப்பெரிய உறுப்பு. இஷ்டத்திற்கு நெகிழக்கூடியதும் அதுதான். ஒருவரது சருமம் 24 சதுர அடி சுற்றளவும், நான்கு கிலோவிற்கும் சற்று அதிகமான எடையையும் கொண்டது.
சருமம், உடலை மூடிப் பாதுகாக்கும் போர்வையா? அல்லது ஆபரணமா? இரண்டுமே இல்லை. சருமத்திற்கென்று முக்கியமான வேலைகள் நிறைய இருக்கின்றன.


நன்றாக வெயிலடிக்கும் காலத்தில் உடலில் இருக்கும் தண்ணீர்தன்மை வற்றிவிடாமல் பாதுகாக்கும் சருமம், மழைக்காலத்தில் “வாட்டர் புரூப்” போல் செயல்பட்டு உடல் குளிர்ந்து போகாமல் பார்த்துக்கொள்கிறது.


சருமத்தில் இரண்டு முக்கிய பகுதிகள். வெளியே தெரிவது “எபிடெர்மிஸ்”. உள்புறமாய் அமைந்திருப்பது, டெர்மிஸ். எபிடெர்மிசில் பல அடுக்குகள் உள்ளன. அதன் அடி அடுக்கில் இருக்கும் அடிப்படை செல்கள் நிரந்தரமாக உருவாகி பெருகிக்கொண்டே இருக்கும். புதிய செல்கள் பெருகி மேல் நோக்கி வந்துகொண்டிருக்கும்போது மேலே இருப்பவை டெட்செல்களாகி உதிர்ந்து கொண்டிருக்கும். ஒரு செல் புதிதாக புறப்பட்டு வந்து, உதிர்ந்து போக மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆகும். உள்பகுதியில் இருக்கும் டெர்மிசில் பல்வேறு வகையான சுரப்பிகள், ரத்தக்குழாய்கள், மயிர்க்காலின் அடிப்பகுதி போன்றவைகளெல்லாம் இருக்கின்றன.


நுண்ணிய சிறு பகுதி சருமத்தில் மட்டும் ஒரு கோடி செல்கள் இருக்கும். ஒரு பெண்ணின் மொத்த உடல் சருமத்தில் 30 பில்லியன் செல்கள் இருக்கும். (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி) சருமத்திலிருந்து ஒவ்வொரு நிமிடமும் 50 ஆயிரம் சரும செல்கள் உதிர்கின்றன. தொடர்ச்சியாக நடக்கும் இந்த பரிணாம மாற்றங்களால் ஒருவர் தன் ஆயுளில் 20 கிலோவரையான சருமத்தை உதிர்க்கிறார்.


சருமத்தில் புதிய செல்கள் உருவாகுவதும், பழையவை உதிர்வதும் எல்லா பருவத்திலும் ஒரே மாதிரி இருப்பதில்லை. 18 வயது பெண்ணுக்கு இந்த பரிணாம மாற்றங்கள் நிகழ இரண்டு வாரங்கள் போதும். அவர் ஐம்பது வயது பெண்மணியாகும்போது அந்த மாற்றங்கள் நிகழ ஐந்து வாரங்கள் வரை தேவைப்படும். வயது கூடும்போது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையிலும் மாற்றங்கள் ஏற்படும்.


சரும செல்கள் ஒருவகை இறப்பு நிலையை அடையும்போது, அதிலிருந்து கெரோட்டின் உருவாகிறது. இந்த கெரோட்டின்தான் நகம் மற்றும் முடியின் அடிப்படை. வயதுக்கு வந்த ஒரு பெண்ணின் தலை முடி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் இருக்கும். ஒரு மாதம் அது 1.25 செ.மீ. வளரும். தொடர்ந்து இப்படியே வளர்ந்து கொண்டிருக்காது. ஐந்து ஆறு மாதங்கள் கழித்து சிறிது காலம் ஓய்வெடுக்கும். சுழற்சி அடிப்படையில் பத்து சதவீத முடி ஓய்வெடுக்கும்போது 90 சதவீதம் வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கும்.

ஓய்வெடுக்கும் நிலையில் இருக்கும் முடிகளே குளிக்கும் போது உதிர்கின்றன. (அதனால் முடி உதிர்வதை நினைத்து ரொம்ப கவலைப்படாதீங்க) முடி, கண்களின் கருவிழி, சருமம் போன்றவைகளுக்கு நிறம் தருவது மெலானின் என்ற ரசாயன பொருள். சூரிய கதிர்கள் சருமத்தை கடுமையாகத் தாக்கும்போது அது சருமத்தை பாதிக்காமலிருக்க மெலானின் உதவுகிறது. தொடர்ச்சியாக சருமத்தின் ஒரு பகுதியின் கடுமையான சூரிய கதிர்கள் பட்டால் அந்த பகுதியில் மெலானின் அதிகமாக உற்பத்தியாகி சருமம் கறுத்துப் போய்விடும்.


சருமத்தின் மென்மையும், நிறமும், சுருக்கமற்ற மினுமினுப்பும் ஆரோக்கியம் மற்றும் அழகின் வெளிப்பாடாக இருக்கிறது. வெளிநாட்டினரைப் போல் வெள்ளை நிறமாக சருமம் இருக்கவேண்டும் என்று அத்தனை பெண்களும் விரும்புகிறார்கள் என்றே சொல்லவேண்டும். அந்த நிறம் பல்வேறு துறைகளில் வெற்றிபெற படிக்கட்டு என்று நினைக்கும் பெண்களும் ஏராளம்.

ஆனால் வெள்ளை நிற சருமம் ஒரு சில நோய்களை வரவேற்பதாக இருக்கிறது. சருமம் வெள்ளையாக இருக்கும் வெளிநாட்டினருக்கு நம் நாட்டைவிட சரும புற்று நோய் அதிகம் வருகிறது. இந்த தொந்தரவிலிருந்து விடுபட தங்கள் சருமம் கறுப்பாக இருந்தாலும் பரவாயில்லையே என்று வெளிநாட்டு பெண்கள் ஏங்குகிறார்கள். அதற்காகத்தான் கடற்கரை பகுதியில் படுத்து “சன் பாத்” எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அதிகம் கறுக்காமலும், அதிகம் சிவக்காமலும் இருக்கும் சருமமே ஆரோக்கியத்திற்கும், அழகிற்கும் ஏற்றதாக இருக்கிறது.
முகத்தை மனதின் கண்ணாடி என்று சொல்வார்கள். அதுபோல் சருமத்தை ஆரோக்கியத்தின் கண்ணாடி என்று சொல்லலாம். உடலில் நோய்கள் இருந்தால் அது சருமத்தில் பிரதிபலிக்கிறது. சருமத்தின் நிறத்தை சிவப்பாக மாற்ற முடியுமா? என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.


மெலானின் மற்றும் சில வர்ண கட்டமைப்புகளும் சேர்ந்து சருமத்திற்கு நிறம் கொடுக்கிறது. வாழ்க்கை சூழலும், சுற்றுச்சூழலும் இதற்கு ஒருவகை காரணம். குளிர்ச்சி அதிகமுள்ள நாடுகளில் நம் நாட்டு பெண்கள் சில வருடங்கள் வசித்தால் அவர்கள் சரும நிறமும் ஓரளவு கலராக மாறும். அதிக வெயிலடிக்கும் கால நிலையிலும், மாசு நிறைந்த சுற்றுப்புறத்திலும் வசித்தால் நிறம் கறுக்கவும் செய்யும்.


சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், தினமும் இருமுறை குளித்தல், உடற்பயிற்சி செய்தல், உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிகம் சேர்த்தல், மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் சருமம் மினுமினுப்பாக இருக்கும். பெண்களின் சரும நிறத்தில் பாரம்பரிய பங்களிப்பு அதிகமாக இருக்கிறது.


சருமத்தின் நிறத்தில் பெருமளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. என்றாலும் நவீன அழகுக்கலை பராமரிப்பு சிகிச்சைகள் மற்றும் வீட்டிலே செய்யும் குறிப்பிட்ட பராமரிப்பு முறைகள் மூலம் நிறத்தை குறிப்பிட்ட அளவுவரை மேம்படுத்தலாம்.
தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவைகளை உட்கொண்டால் சருமத்தின் நிறம் மாறும் என்பது சரியா?


குறிப்பிட்டுச் சொன்னால் இதனால் பெரிய பலன் எதுவும் கிடைத்துவிடாது. இயற்கையான நிறத்தை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. நன்றாக பராமரித்து, வெயிலில் செல்லாமல் இருந்தாலே சருமத்தின் நிறம் ஓரளவு மேம்படத் தொடங்கிவிடும். தங்கபஸ்பம், குங்குமப்பூ போன்றவை ஆயுர்வேத மருத்துவத்தில் மருந்தாக செயல்படுகிறது. ஓரளவு நிறத்தை தரும் சக்தி இதற்கு இருக்கிறது.


சிவப்பு நிறமான சருமத்தைக் கொண்டவர்களின் வாழ்க்கைமுறை முரண்பாடாக இருந்தால் அவர்கள் சருமத்தின் நிறமும் மாறிக்கொண்டிருக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்தாதவரை சரும நெருக்கடிகளை தவிர்க்க முடியாது. அழகான சருமத்தைப் பெற இன்னும் ஆலோசனைகள் உண்டு.


***
thanks vayal
***

"வாழ்க வளமுடன்"

மும்தாஜின் உடல் முதலில் அடக்கம் செய்யப்பட்டது எங்கே..? சுவாரஸ்ய தகவல்!மும்தாஜின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம்தான் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்பு வரை மும்தாஜின் உடல் புர்ஹாம்புரில் உள்ள புலாரா மஹாலில் தான் இருந்தது என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்.


மேலும், இந்த புலாரா மஹாலில் தான் மும்தாஜின் ஆவி உலவுவதாகவும் அங்குள்ள மக்கள் கூறுகின்றனர். சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் புலாராவில் முகாலயப் பேரரசியான பேகம் மும்தாஜ் மரணமடைந்த போது, மும்தாஜின் நினைவாக ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று ஷாஜஹான் ஆசைப்பட்டார். அப்போதுதான் தாஜ்மஹால் கட்டுவது என்ற எண்ணம் ஷாஜகானின் எண்ணத்தில் உதித்தது.
மேலும், தாஜ்மஹாலை புர்ஹாம்புரில் கட்டுவது என்றே திட்டமிட்டார். ஆனால் பல்வேறு காரணங்களால் தாஜ்மஹால் ஆக்ராவில் கட்டப்பட்டது. அதுவரை மும்தாஜின் உடல் புலாரா மஹாலில்தான் வைக்கப்பட்டிருந்தது.


தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டதும், மும்தாஜின் உடல் அங்கு கொண்டுவரப்பட்டது. மும்தாஜின் உடல் மட்டுமே புலாரா மஹாலில் இருந்து தாஜ்மஹாலுக்கு கொண்டுவரப்பட்டது.


ஆனால் மும்தாஜின் ஆவி இன்னமும் புலாரா மஹாலில் தான் உலாவிக் கொண்டிருக்கிறது என்று அங்கு வாழும் மக்கள் கருதுகின்றனர்.

புலாரா மாளிகையில் இருந்து அவ்வப்போது சத்தங்களும், கத்துவது போன்றும், அலறுவது போன்றும் சத்தங்கள் வருவதாகவும், ஆனால் அந்த ஆவி இதுவரை யாரையும் துன்புறுத்தியது இல்லை என்றும் அங்கு வாழும் மக்கள் கூறுகின்றனர்.


அதாவது, கடந்த 1631ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டு மும்தாஜ் மரணமடைந்துவிட்டார். அதனால்தான் அந்த இடத்திலேயே அவரது ஆவி இன்னமும் அலைந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

*

இந்த தகவல் உண்மையா என தெரியவில்லை .....

***
thanks puthuulakam
***

"வாழ்க வளமுடன்"


தோப்புக்கரணம் போடுவது ஏன்?ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு.


ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார்.


அவர் தன்னிடம் வரும் நோயாளிகளுக்கு அந்த உடற்பயிற்சியை சிபாரிசு செய்வதாகக் கூறுகிறார். பரிட்சைகளில் மிகக் குறைந்த மதிப்பெண்கள் எடுக்கும் ஒரு பள்ளி மாணவன் தோப்புக்கரண உடற்பயிற்சியைச் சில நாட்கள் தொடர்ந்து செய்த பின் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க ஆரம்பித்ததாகக் கூறுகிறார்.யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் நிபுணரான டாக்டர் யூஜினியஸ் அங் (Dr. Eugenius Ang) என்பவர் காதுகளைப் பிடித்துக் கொள்வது மிக முக்கிய அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டி விடுகின்றன என்று சொல்கிறார். அதனால் மூளையின் நரம்பு மண்டல வழிகளிலும் சக்தி வாய்ந்த மாற்றங்கள் ஏற்படுவதாக அவர் தெரிவிக்கிறார். இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்துக் கொண்டு உட்கார்ந்து எழுகையில் மூளையின் இரு பகுதிகளும் பலனடைகின்றன என்று சொல்கிறார்.தோப்புக்கரணம் போடுவதால் ஏற்படும் மாற்றங்களை EEG கருவியால் டாக்டர் யூஜினியஸ் அங் அளந்து காண்பித்தார். மூளையில் நியூரான்கள் செயல்பாடுகள் அதிகரிப்பதை பரிசோதனையில் காண்பித்த அவர் மூளையின் வலது, இடது பாகங்கள் சமமான சக்திகளை அடைவதாகவும் சொன்னார். மிக நுண்ணிய தகவல் அனுப்பும் காரணிகள் வலுப்பெறுவதும் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டாக்டர் யூஜினியஸ் அங் தானும் தினமும் தோப்புக்கரணம் போடுவதாகக் குறிப்பிடுகிறார்.Autism, Alzheimer போன்ற இக்காலத்தில் அதிகரித்து வரும் நோய்களுக்குக் கூட இந்த தோப்புக்கரண உடற்பயிற்சியை ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கிறார்கள். தோப்புக்கரணம் தினமும் செய்வதன் மூலம் மேற்கண்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக நல்ல பலன்களைப் பெறுவதாக அவர்களது பரிசோதனைகள் சொல்கின்றன.ப்ராணிக் சிகிச்சை நிபுணர் கோ சோக் சூயி (Master Koa Chok Sui) தன்னுடைய Super Brain Yoga என்ற புத்தகத்தில் தோப்புக்கரணத்தைப் பற்றியும் அதன் பலன்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய சொற்பொழிவுகளிலும் இதை அதிகம் குறிப்பிடுகிறார்.


இதனால் தான் தோப்புக்கரணம் பள்ளிகளில் நம் முன்னோர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. படிக்காத மாணவர்கள் தோப்புக்கரண முறையால் தண்டிக்கப்படுவதன் மூலம் அவர்களது அறிவுத் திறன் அதிகரிக்க வழியும் காண்பிக்கப்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது.இந்த தோப்புக்கரணப்பயிற்சியை தினந்தோறும் மூன்று நிமிடங்கள் செய்தால் போதும் வியக்கத் தக்க அறிவு சார்ந்த மாற்றங்களைக் காணலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். அவர்கள் பரிந்துரைக்கும் தோப்புக்கரண பயிற்சியை அவர்கள் சொல்கின்ற முறையிலேயே காண்போமா?


உங்கள் கால்களை உங்கள் தோள்களின் அகலத்திற்கு அகட்டி வைத்து நின்று கொள்ளுங்கள். உங்கள் பாதங்கள் நேராக இருக்கட்டும். வலது காதை இடது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். அதே போல் இடது காதை வலது கையின் பெருவிரலாலும் ஆட்காட்டி விரலாலும் பிடித்துக் கொள்ளுங்கள். பிடித்துக் கொள்ளும் போது இடது கை உட்புறமாகவும், வலது கை வெளிப்புறமாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.


மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்தபடி எழுந்து நில்லுங்கள். மூச்சும், உட்கார்ந்து எழுவதும் ஒரு தாளலயத்துடன் இருக்கட்டும்.
செய்து பழக்கமில்லாதவர்களுக்கு ஆரம்பத்திலேயே மூன்று நிமிடங்கள் தொடர்ந்து தோப்புக்கரணம் செய்வது கடினமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்கள் ஒரு நிமிடம் செய்வதில் இருந்து ஆரம்பித்து நாட்கள் செல்லச் செல்ல இரண்டு நிமிடங்கள், பிறகு மூன்று நிமிடங்கள் என்று அதிகரியுங்கள்.ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் மிக நல்ல பலன்களைப் பார்க்கும் போது உங்கள் அறிவுத் திறனின் வளர்ச்சிக்காக மூன்று நிமிடங்கள் தினமும் செலவழிப்பது மிகப்பெரிய விஷயமல்ல அல்லவா?


***
thanks படித்ததில் பிடித்தது
***
"வாழ்க வளமுடன்"

அறியா விஷயம் அறிந்துக் கொள்வோம் !!!!நிலாவில் துப்பாக்கியால் சுட்டால் சத்தம் கேட்காது: ஏன் தெரியுமா??


நிலாவில் துப்பாக்கியால் சுட்டால் காதில் வெடியொலி கேட்காது. ஏனென்றால் நிலாவில் வளி மண்டலம் கிடையாது.


ஒலி அலைகளைத் தாங்கிச் செல்ல ஊடகம் தேவை. அதேபோல விண்வெளியும் வெற்றிடம்தான். எனவே விண்வெளி வீரர்களால் நம்மைப் போல் அங்கு உரையாட முடியாது.

ஊடகத்தின் அடர்த்தியும், வெப்பமும் ஒலி அலைகளின் வேகத்தை நிர்ணயம் செய்யும். ஒலி, காற்றில் செல்லும் வேகத்தைவிட திரவங்களில் செல்லும் வேகம் அதிகம்.

அதையும்விட அதிக வேகத்தில் திடப்பொருளில் செல்லும். மின் பல்பின் உள்பகுதியில் காற்று இல்லை. வெற்றிடமாக உள்ளது. பல்பு உடையும்போது அப்பகுதியின் வழியாக வெற்றிடத்தை நிரப்ப எல்லாப் பகுதிகளில் இருந்தும் காற்று வேகமாகச் செல்கிறது.

அவ்வாறு வேகமாகச் செல்லும் காற்றின் ஒலியே நமக்குச் சத்தமாகக் கேட்கிறது.


***முதலையின் பற்களை சுத்தம் செய்யும் பறவை: சுவாரஸ்ய தகவல்!


`புளோவர்’ என்று ஒரு சிறுபறவை. இது முதலைகளின் பற்களைச் சுத்தம் செய்யும் வைத்தியராகப் பணியாற்றுகிறது. முதலை, உயிரினங்கள் எல்லாவற்றையும் தின்னக்கூடியது.


இரையின் எச்சங்கள் அதன் கோர மான பற்களிடையே சிக்கிக் கொண்டிருக்கும். முதலை அசைந்து வாயை மூடினால் போதும். பறவையின் உயிர் போய் விடும். ஆனாலும் முதலை அப்படிச் செய்வதில்லை.


தன் பற்களை பறவை சுத்தம் செய்வதற்காக பொறுமை யாகக் காத்திருக்கிறது. அதே நேரத்தில் பறவைக்கும் தாராளமாக உணவு கிடைத்து விடுகிறது. இதேபோல் கடல் மீன்களைச் சுத்தப்படுத்தும் ஒருவகை மீன் உள்ளது.

அவை ஒரு கோஷ்டியாக இருக்கும். மீன்கள் தம் உடலைச் சுத்தப்படுத்த இவற்றிடம் வருகின்றன. அவற்றின் உடம்பில் உள்ள ஒட்டுண்ணிகள், காளான், பாக்டீரியா போன்றவற்றை சுத்தப்படுத்தும் மீன்கள் சாப்பிட்டு சுத்தப்படுத்துகின்றன.


இவற்றின் வேலை முடியும் வரை பெரிய மீன்கள் பொறுமையாக ஒத்துழைக்கின்றன. சுறாமீன்கள் கூட இவ்வாறு தமது உடலைச் சுத்தம் செய்துகொள்கின்றன.


***


மலர்கள் மணம் பரப்புவது எப்படி?

எவ்வளவோ செடிகளைப் பார்க்கிறோம். எத்தனையோ மலர்கள். ஒவ்வொன்றும் ஒரு விதம். அந்த மலர்களின் அமைப்பு, மென்மை, அழகு ஆகியவை நம்மை வியக்க வைக்கின்றன.


சில செடிகளின் மலர்கள் என்று நினைப்பது உண்மையில் மலர்களாக இருக்காது. சில செடிகளில் வெண்ணிற உறைகளில் இருந்து எட்டிப் பார்ப்பவை மலர்களே அல்ல. மலர் போலத் தோற்றமளிக்கும் போலிகள்! சில செடிகளின் வண்ண இலைகளே மலர்கள் போல் காட்சியளிக்கும்.


மலர்கள் இல்லாதவற்றை மலர்கள் என்று எண்ணுகிறோம். சில செடிகளில் மலர்களை நம்மால் அடையாளம் தெரிந்துகொள்ள முடிவதில்லை.

புற்களின் நுனியில் உள்ள சிறுதுணுக்குகள் புற்களின் மலர்கள்தான்! சில தானியங்களின் இளங்கதிர்களே அவற்றின் மலர்கள்.


பூந்தாதையோ, விதைகளையோ அல்லது இரண்டையுமே உருவாக்கும் தொகுதியே மலர்களாகும். விதைகளை உடைய தாவரத்துக்கே மலர்கள் உள்ளன. விதைகள் உருவாக்குவதற்குக் காரணமாக உள்ள தாவரத்தின் பாகங்களே மலர்கள் என்று சொல்லலாம்.


மகரந்தச் சேர்க்கை புரிய உதவும் பூச்சியினங்களைக் கவர்ந்திழுக்க, பூக்கள் நறுமண வலையை வீசுகின்றன.

பூவிதழ்களிலேயே வாசனை தரும் மிகச் சிறிய துகள்கள் உள்ளன. அவையே நறுமணத்தை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளை மகரந்தம் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டியே நறுமணம் என்கிறார்கள், தாவரவியல் நிபுணர்கள்.


சில மலர்களின் இதழ்களில் உள்ள ஒருவித எண்ணை, நறுமணத்தை உண்டு பண்ணுகிறது. அந்த எண்ணைகளைத் தாவரங்கள் தங்கள் வளர்ச்சியின்போது உற்பத்தி செய்திருக்க வேண்டும்.


மிகச் சிக்கலான அப்பொருள், நடைமுறையில் உருக்குலைந்தோ, சிதைந்தோ எண்ணையாக மாறி காற்றிலோ, வெயிலிலோ ஆவியாகி நறுமணத்தை வெளியிடுகிறது.


எல்லா மலர்களின் நறுமணமும் ஒரேவிதமாக இருப்பதில்லை. சிலவற்றை நாம் விரும்புவோம். சில நமக்குப் பிடிக்காது. ஆனால் பூச்சியினங்களுக்கு ஒவ்வொரு நறுமணமும் நன்றாக நினைவில் இருக்கும். தங்களுக்கு விருப்பமான நறுமணத்தை அவை அறிந்திருக்கும்.***நரம்புகளை ஒளிர வைக்கும் திரவம்:வைத்தியத்துறையின் வளர்ச்சி!

மிகவும் சிக்கலான அறுவைச்சிகிச்சைகளின்போது நுண்ணிய நரம்புகளைக் கண்டுபிடிப்பது மருத்துவர்களுக்குக் கஷ்டமான விஷயம். மருத்துவர்களின் இந்தக் கஷ்டத்தைப் போக்கும்வகையில் ஓர் ஒளிரும் திரவத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


அமெரிக்காவின் கலிபோர்னியா சான்டீகோ மருத்துவக் கல்லூரி ஆய்வாளர் குழு இதைத் தயாரித்திருக்கிறது. இதில் முக்கியமாக, அமினோ அமிலங்கள் அடங்கிய நுண் புரதத் துணுக் குகள் இருக்கின்றன. இனிமேல், மிக நுண்ணிய நரம்புகளைக் கண்டுபிடிப்பதற்கு மருத்துவர்கள் தங்களின் அனுபவத்தையோ, எலக்ட்ரானிக் வழி கண்காணிப்பையோ சார்ந்திருக்க வேண்டியதில் லை.

அறுவைச் சிகிச்சைக்கு முன் செலுத்தப் படும் இந்தத் திரவம், நரம்புகளை ஒளிரவைத்து, அவற்றை `பளிச்’ சென்று வெளிப்படுத்தும்.

அறுவைச் சிகிச்சையின்போது தவறான நரம்பைத் தேர்ந்தெடுத்துவிடாமல் இருப்பது மிகவும் முக்கியம். காரணம் அது கடுமையான வலியை ஏற்படுத்தக்கூடும் அல்லது உடம்பின் ஒரு பகுதியைச் செயலிழக்க வைக்கக்கூடும் என்கிறார்கள்.

ஆரம்பகட்டமாக, எலிகளுக்கு இந்தத் திரவத்தைச் செலுத்தி ஆய்வாளர்கள் பரிசோதித்திருக்கிறார்கள். அப்போது, அதன் நரம்புகளுக்கும் மற்ற செல்களுக்கும் இடையே அது ஒரு தெளிவான வேறு பாட்டைக் காண்பிப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.


***


பூனைகளால் இனிப்புச்சுவையை உணரமுடியாது ஏன்??


முலையூட்டிகளின் நாக்கில் சுவை கலங்கள் உள்ளன. நாக்கிலுள்ள சுவை கலங்கள் கொத்தாக சுவை அரும்புகளாக ஒன்றிணைந்துள்ளன. இரண்டு வெவ்வேறான நிறமூர்த்தங்களால் (Tas1r2 & Tas1r3) தோற்றுவிக்கப்பட்ட இரண்டு ஒன்றிணைந்த புரதங்களினாலேயே சுவை கலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


இந்த சுவை கலங்கள், உணவிலுள்ள குறிப்பிட்ட சுவையை அறிந்து அந்த தகவலினை மூளைக்கு அனுப்பும்.
புலி, சிறுத்தை உள்ளடங்களாக 6 பூனைகளின் உமிழ் நீர் மற்றும் இரத்த மாதிரிகளினை ஆய்வுசெய்த ஆய்வாளர்கள், இந்த விலங்கினங்கள் உபயோகமற்ற நிறமூர்த்தத்தினை கொண்டிருப்பதனை தமது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஏனைய முலையூட்டிகள் இந்த நிறமூர்த்தத்தினையே தமது நாக்குகளில் சுவை கலங்களினை உருவாக்க பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


பூனையினை செல்லப்பிராணியாக வளர்ப்பவர்களில் சிலர், “எனது பூனை ஐஸ் கிறீம் சாப்பிடுகின்றது” , “எனது பூனை கேக் சாப்பிடுகின்றது” என்கின்றார்களே… இதற்கு ஆய்வாளர்கள் கூறும் பதில் என்னவெனில்,


அவை இனிப்பு சுவையினை ருசிபார்க்கின்றது என்பது மிக, மிக, மிக சந்தேகத்துக்குரியதாகும். ஏனெனில், அவை கொழுப்புக்காகவே அவற்றினை உண்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.


***
thanks புதியுலகம்
***

"வாழ்க வளமுடன்"

உறுப்பு இல்லாத உயிரினங்கள் எவை?இவ்வுலகத்தில் வாழும் உயிரினங்கள் அனைத்தும் உறுப்புக்களுடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறது என பலர் நினைத்துக்கொண்டிப்பீர்கள்.


ஆனால் எமது அன்றாட வாழ்வில் நாம் சாதாரணமாக காணக்கூடிய சில உயிரினங்கள் சிலவற்றுக்கு உறுப்புக்கள் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?? அப்படி தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

*வயிறு இல்லாத உயிரினம் ஈசல்

*தலை இல்லாத உயிரினம் நண்டு

*வாய் இல்லாத உயிரினம் வண்ணத்துப்புச்சி

*காது இல்லாத உயிரினம் பாம்பு


***
thanks p.u
***

"வாழ்க வளமுடன்"

கிரேன் உருவானது எப்படி???:கிரேன்களை’ நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். இதை பாரம் தூக்கும் எந்திரம் என்றும் சொல்லலாம். நாரை என்ற பறவையின் தோற்றம் போல் இருப்பதால் இதை `கிரேன்’ என்று அழைத்தனர்.


பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இம்மாதிரிக் கருவியை போர்களில் பயன்படுத்தினர். எதிரியின் கோட்டை மதில் மேல் உள்ள பொறிகளைத் தாக்கி அழிக்க இதுபோன்ற அமைப்பு ஒன்றைப் பயன்படுத்தினர்.


இன்றைய கிரேன்கள், பெரும் எடையுள்ள பொருள்களை ஏற்ற, இறக்க, ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் செல்லப் பயன்படுத்தப்படுகின்றன. பெரிய பெரிய தொழிற்சாலைகளில், துறைமுகங் களில் இதை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.


கிரேனில் பலவகை உண்டு. பொதுவாக, கோபுரம் போல் உயர்ந்து நிற்கும் கிரேன்தான் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் அமைப்பு, நீண்டு, உயர்ந்த கோபுரம் போலிருக்கும். அதன் மேல், படுக்கைவாட்டில் இயங்கும் கை போன்ற அமைப்பு.


அந்தக் `கை’யின் ஒரு முனையில் பல்வேறு பொருட்களைத் தூக்குவதற்கு வசதியான உபகரணங்கள். அந்த உபகரணங்கள் ஏறவோ, இறங்கவோ ஏற்றபடி, கம்பிக் கயிறுகளால் `விஞ்ச்’ என்ற உருளையுடன் இணைக்கப்பட்டிருக்கும்.


இந்த உருளை, ஓர் எந்திரம் மூலம் இயக்கப்படுகிறது. கிரேனின் `கை’யின் மறுமுனையில் தூக்கப்படும் எடையைச் சமநிலைப்படுத்தவே இந்த அமைப்பு.


மிதக்கும் கிரேன்களும் உண்டு. தரை தட்டிப் போன, மூழ்கிப் போன கப்பலை நீருக்கடியில் இருந்து வெளியே கொண்டு வர இவைதான் உதவுகின்றன.


இரும்புத் தொழிற்சாலைகளில், பாலம் போன்ற அமைப்புடைய கிரேன்கள் பயன்படுத்தப்படுகின்றன.


***
thanks puthiyaulakam
***
"வாழ்க வளமுடன்"

போலீஸ் உருவானது எப்படி??ஒரு நாட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்க ராணுவம் உள்ளது. இதைப்போலவே உள்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படாமல் இருக்க போலீசர் உள்ளனர்.


ரோமாபுரியை ஆட்சி செய்த அகஸ்டஸ் சீசர் தான் போலீஸ் துறையின் முன்னோடி என்று கூறலாம். இவர் தனது நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதற்காக தனியாக ஒரு படையை முதன் முதலாக ஏற்படுத்தினார்.


இந்த முறை ஏழாம் நூற்றாண்டிற்கு பிறகு இங்கலாந்து மற்றும் அமெரிக்காவிலும் பரவியது. இந்தியாவில் 1792 - ம் ஆண்டு டிசம்பர் 7 - ந்தேதி கிழக்கிந்திய கம்பனியரால் காவல்துறை ஆரம்பிக்கப்பட்டது. அப்போது முக்கியமான ஊர்களில் காவல் நிலையம் அமைக்கப்பட்டது.

அந்த காவல் நிலையத்தில் சப் – இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு உதவி இன்ஸ்பெக்டரும் 10 போலீசரும் ஒரு எழுத்தரும் இருந்தனர். இவர்கள் அனைவரும் இணைந்து குழுவிற்கு காவல்குழு என்று பெயர் வைத்தனர்.


1861 - ல் முதலாவது காவல் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி கவலர்களின் சீருடை, சம்பளம், மற்றும் பணி தொடர்பான விதி முறைகள் வகுக்கப்பட்டன. அப்போது காவல்துறைக்கு சிவப்பு மற்றும் நீலநிற உடையும் சீருடையாக தரப்பட்டன.

இன்று இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் காவல்துறை தனித்தனியாக இயங்கிவருகிறது.


***
thanks puthiyaulakam
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "