...

"வாழ்க வளமுடன்"

31 ஆகஸ்ட், 2010

40 வயதுக்கு மேல் செய்ய கூடிய டெஸ்டுகள்:‏


ஆண்களும் சரி பெண்களும் சரி 40 வயதை தாண்டிய பின்பு உடலில் சில மாற்றங்கள் வரும். உடல் தளர ஆரம்பிக்கும். இந்த வயதில் சில டெஸ்டுகள் செய்து கொண்டால் பல நோய்களின் ஆரம்ப நிலையிலே தெரிந்து அதனை சரி செய்து பெரிய ஆபத்தில் இருந்து தப்பிக்கொள்ளலாம்.




பி.பி செக் அப்

பிஸிக்கல் எக்ஸமினேஷன் மூலமாக தைராய்டு டெஸ்ட், மார்பக புற்று நோய் கண்டறியலாம்.

பாப் ஸ்மியர் டெஸ்ட் மூலம் கர்ப்பப்பையில் தோன்றும் ஆரம்ப கால கேன்சர் அறிகுறிகளை கண்டுபிடிக்கலாம். இந்த நோய் அதிகமாக பெண்களுக்கு வருவதால் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை இந்த டெஸ்ட் செய்வது நலம்.

இரத்த டெஸ்ட் மூலம் இரும்பு சத்து குறைவு, தைராய்டு பிரச்சனை, டயாபடீஸ் இருக்கானு டெஸ்ட் செய்யலாம்.





யூரின் டெஸ்ட் டயபடீஸ், யூரினரி இன்பெக்க்ஷன்,சால்ட் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம்.

மேஷன் டெஸ்ட் இந்த டெஸ்டின் மூலமாக "ப்ரோசைட்டிக்கில்" இன்பெக்க்ஷன் இருக்கானு தெரிந்துக்கொள்ளலாம். அதோடு மலத்துடன் இரத்தம் வெளியேறுவதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர்

வயிற்றில் ஏதாவது பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஸ்கேன் செய்துக்கொள்ளலாம். மற்றவர்களுக்கு தேவையில்லை.

இசிஜி

இரத்த குழாய் அடைப்பு, ஹார்ட் அட்டாக் வரவாய்புகள் இந்த வயதில் அதிகம் அதனால் இந்த டெஸ்ட் செய்தால் இந்த நோய் வர வாய்ப்பு இருக்கானு தெரிந்து முன்னேச்சரிக்கையாக இருக்கலாம்.

கொலஸ்ட்ரால் பரிசோதனை

தவறான உணவு பழக்கங்களால் இந்த நோய் வர வாய்பிருக்கு. உடலில் தேவையில்லாத கொழுப்புகள் இருப்பது தெரிந்துவிடும். பிறகு நாம் டயட், எக்ஸர்சைஸ் மூலமாக சரி செய்துவிடலாம்.

மேலே சொன்ன டெஸ்டுகள் மூலம் நாம் ஓரளவு நம் உடலில் உள்ள நோய்களை கண்டுபிடித்து சுலபமாக குணப்படுத்திவிடலாம்.


***

நன்றி ஈகரை.

***
"வாழ்க வளமுடன்"

மருந்து வாங்கும் போது கவனிக்க வேண்டியவை!

மருந்து வாங்கும் போது கவனிக்கப்பட வேண்டியவை குறித்து மருந்து கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-




•மருந்துகளை உரிமம் பெற்ற சில்லரை மருந்து கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும். மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை மட்டுமே வாங்க வேண்டும்.

•வாங்கிய மருந்துகளுக்கு கடைக்காரர்களிடமிருந்து விற்பனையின் ரசீது கேட்டு பெறவும். இது போலி மருந்துகளிடமிருந்து உங்களுக்கு கிடைக்கும் உத்திரவாதமாகும்.


•மருந்துகளை வாங்கியவுடன் அதன் தொகுதி எண், உற்பத்தி எண், காலாவதியாகும் தேதி ஆகியவற்றை நன்கு கவனிக்க வேண்டும். அதில் ஏதாவது தவறுகள் ஏற்பட்டிருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.


•மருந்துகளின் மேல் குறிப்பிட்டுள்ள விலையையும், பில்லில் போடப்பட்டுள்ள விலையையும் ஒப்பிட்டு பார்த்து தவறுகள் இருப்பின் உரிய அதிகாரிகளிடம் புகார் செய்ய வேண்டும்.




•மருந்துகளை குளிர்ந்த, வெளிச்சம், இல்லாத உலர்ந்த இடத்தில் வைக்கவும். மருந்துகளை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.


•மருந்துகளை சமையல் அறை, குளியல்அறையில் உள்ள அலமாரிகளில் வைக்காதீர்கள்.


•மற்றவரின் நோயின் தன்மை உங்களது போன்று இருந்தாலும் நீங்கள் உபபோகப்படுத்தும் மருந்துகளை அவர்களுக்கு கொடுக்காதீர்கள்.


•மருத்துவரின் சீட்டின் அடிப்படையில் அதில் குறிப்பிட்டுள்ள மருந்துகளுக்கு மாற்றாக வேறு மருந்துகளை வாங்காதீர்கள்.

***


இது பற்றிய சந்தேகம் உள்ள சென்னைவாசிகள், சென்னை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மருந்துகள் மற்றும் மருந்தியல் விழிப்புணர்வு மையத்தை அணுகலாம்.

*

மேலும் 044-24338421 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

மருந்து கட்டுப்பாடு உதவி இயக்குநர் மண்டல அலுவலக தொலைபேசி எண்கள்
வருமாறு, மண்டலம் (1)-24328734, மண்டலம் (2)-24310687, மண்டலம்(3)-24351581.


*

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


***

நன்றி உளறுவாயன்.
http://ularuvaayan.blogspot.com/2010/03/blog-post_1306.html


***


"வாழ்க வளமுடன்"

சண்டையிடும் பெற்றோரா நீங்கள் ?


நிமிடத்துக்கு நூறு எஸ்.எம்.எஸ் கள் அனுப்பித் திரியும் காதலர்கள் கூட திருமணத்துக்குப் பின் பாம்பும் கீரியுமாகிவிடுகிறார்கள். சிரிப்பும், சில்மிஷமுமாய் நடக்கும் இவர்களின் திருமண வாழ்க்கை கனவுகளின் பல்லக்கில் சில மாதங்கள் ஓடும். அவ்வளவு தான். திடீரென ஒரு நாள் யூ டர்ன் அடித்துத் திரும்பும் வண்டி போல திசை மாறி நிற்கும். “மேட் பார் ஈச் அதர்” போல அசத்தலாய் சில மாதம் ஓடிய வாழ்க்கை எப்படி சட்டென உடைந்து வீழ்கிறது ?


எவரஸ்டின் உச்சியில் கட்டி வைக்கும் எதிர்பார்ப்புக் கூடு கலைவது தான் பெரும்பாலான சிக்கல்களின் துவக்கம். காதல் காலத்தில் அடித்துத் தள்ளும் எஸ்.எம்.எஸ் களும், வாங்கிக் குவிக்கும் பரிசுகளும், சிரிப்புகளும், சீண்டலும் திருமணத்துக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாய்க் காய்ந்து போகிறது. அது தான் பெரும்பாலான பிரச்சினைகளின் ஊற்றுக் கண். தான் வேண்டா விருந்தாளியாகி விட்டோமோ எனும் பதட்டம் தம்பதியரிடையே எழுகிறது. அந்த நினைப்பே எரிச்சல், கோபம், மன அழுத்தம் என உருமாறி உருமாறி ஆளை விடுங்க சாமி எனும் நிலைக்குத் தள்ளி விடுகிறது.


திருமணத்தின் முதல் ஏழு வருடங்களைச் சந்தோஷமாகக் கடப்பதில் இருக்கிறது குடும்ப வாழ்வின் அஸ்திவாரம். அதிலும் குறிப்பாக முதல் இரண்டு வருடங்களைக் கடப்பது பலருக்கு சிம்ம சொப்பனம் ! திருமணத்தின் முதல் ஏழு வருட காலத்தை ஆங்கிலத்தில் செவன் இயர் இட்ச் (Seven year itch) என அழைக்கிறார்கள். இல்லாத பிரச்சினைகளெல்லாம் இந்த ஏழு வருட காலத்தில் வரும். டைவர்ஸ் புள்ளி விவரங்கள் இந்த காலகட்டத்தில் தான் எகிறும். இந்த ஏழு வருடப் புயலை சாதுர்யமாகவும், அன்புடனும் கடந்தால் காத்திருக்கிறது அமைதியான வாழ்க்கை.


இதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தார் அமெரிக்காவின் பேராசிரியர் ட்டெட் ஹட்சன் ( Ted Huston ) என்பவர். இவர் மனித உறவுகள் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை நடத்தியவர்.


ஏன் மக்கள் திருமணம் முடிந்த கையோடு டைவர்ஸும் கேட்கிறார்கள் என்பது தான் அவரை அலட்டிய கேள்வி. அவர் கண்டு பிடித்த பதில்கள் சுவாரஸ்யமானவை. அவருடைய பட்டியலில் டைவர்ஸ் வாங்குபவர்கள் யார் தெரியுமா ?


திருமணம் முடிந்த துவக்கத்தில் உல்லாசமாய் சினிமா காதலர்கள் போல சுற்றுபவர்கள். “தான் தான் எல்லாம்” என நினைப்பவர்கள். விட்டுக் கொடுப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பவர்கள். இவர்கள் தான். டைவர்சின் முக்கியமான காரணம் உண்மையான ஆழமான அன்பு இல்லாதது தான். கருத்து வேற்றுமைகள், பதவி பணம், இத்யாதி சங்கதிகள் எல்லாம் கிடையாது என்கிறார் இவர்.



திருமணமாகி முதலிலேயே குழந்தையையும் பெற்றுக் கொள்பவர்களுக்கு விஷயம் இடியாப்பச் சிக்கலாகிவிடுகிறது. குழந்தைக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே கூரைக்குள் எலியும், பூனையுமாய் வாழ வேண்டும். அல்லது எண்ணையும், நெருப்புமாக பற்றிக் கொண்டே திரியவேண்டும். இந்த சண்டையில் அதிகம் காயப்படுவது அப்பாவா, அம்மாவா என பட்டிமன்றம் நடத்தினால், முடிவு குழந்தைகள் என்று தான் வரும்.


“அது பச்சைக் குழந்தை தானே” என்றோ, அல்லது அது வளர்ந்த குழந்தை புரிந்து கொள்ளும் என்றோ பெற்றோர் தப்புக் கணக்கு போடுகிறார்கள். உண்மையில் சின்னக் குழந்தையானாலும் சரி, கல்லூரிக்குச் செல்லும் குழந்தையானாலும் சரி. பாதிப்புகள் நிச்சயம் உண்டு. குழந்தைகள் பெற்றோரின் பிரதிபலிப்புகள். பெற்றோரின் சொல்லும், செயலும் தான் குழந்தைகளைக் கட்டியெழுப்புகின்றன.


வீட்டில் சதா சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பெற்றோர் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக் கொடுக்கிறார்கள் ? சண்டையிடலாம் தப்பில்லை என்பதையா ? அல்லது குடும்பம் என்றால் சண்டை போட்டுத் தான் வாழவேண்டும் என்பதையா ? எதுவானாலும் அது சரியான வழிமுறையல்ல என்பது தானே உண்மை.


பெற்றோர் சண்டையிடும் போது குழந்தைகள் முதலில் பயப்படுகின்றன. அவர்களுடைய ஆழ் மனதில் பாதுகாப்பற்ற உணர்வு எழுகிறது. இதனால் தான் பல குழந்தைகள் சண்டையின் போது அழுகின்றன. ஏதேதோ கத்துகின்றன. சத்தம் போடுகின்றன. இதனால் குழந்தைக்கு ஏற்படும் மன அழுத்தம் கொஞ்ச நஞ்சமல்ல. அதிலும் சண்டையில் பெற்றோரின் கோபம் குழந்தைகளின் மீது திரும்பி விட்டால் போச்சு. குழந்தைகள் கதிகலங்கி விடுகின்றன.


குழந்தைகள் இதனால் பல தவறான பாடங்களைக் கற்கிறது. அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க அம்மாவைத் திட்டினால் போதும் என நினைக்கிறது. இதனால் அப்பாவைப் பற்றி அம்மாவிடமும், அம்மாவைப் பற்றி அப்பாவிடமும் கதைகள் ஒப்பிக்கிறது. அவர்களுடைய நோக்கம் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சண்டை மூட்டுவதல்ல. பெற்றோரின் அரவணைப்பு மட்டுமே. அது சாதாரணமாய் கிடைக்காத போது ஏதேதோ செய்து அதை அடைய முயல்கின்றன.


பெற்றோரின் சண்டையில் குழந்தைகளை இழுக்கவே கூடாது. பல பெற்றோர் தங்கள் குடுமிப் பிடி சண்டையில் குழந்தையை நடுவராக்க முயல்வார்கள். இது குழந்தைகளின் மன அழுத்தத்தை ரொம்பவே அதிகரிக்கும். பெற்றோரிடம் பாகுபாடு காட்டாத சூழலை குழந்தைகளுக்குத் தர வேண்டும். அதை விடுத்து குழந்தைகளையே இக்கட்டான சூழலில் தள்ளி விடக் கூடாது.


பெற்றோரின் சண்டை குழந்தைகளை உளவியல் ரீதியாகவும் பாதிக்கும் என்கிறார் டாக்டர். மார்க் கம்மிங்ஸ். இவர் உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் இந்தியானாவிலுள்ள நவ்டர் டீம் (Notre Dame) பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் இதைக் கண்டறிந்திருக்கிறார். இவருடைய ஆய்வு முடிவு சிந்திக்க வைக்கிறது. பெற்றோர்களிடையே கருத்து வேறுபாடோ, விவாதங்களோ வருவது குழந்தையின் மனதை பாதிப்பதில்லை. ஆனால் அந்த விவாதங்கள் முற்றுப் பெறாமல் போவது தான் குழந்தைகளை பாதிக்கிறது. தீர்வற்ற சண்டைகள் அவர்களை மன அழுத்தத்தில் தள்ளுகின்றன என்கிறார் அவர்.


மனம் சார்ந்த சிக்கல்களைத் தொடர்ந்து, தலைவலி, வயிற்று வலி என உடல் சார்ந்த நோய்களும் குழந்தைகளை வந்தடைகின்றன. அப்போதும் சில பெற்றோர் சும்மா இருப்பதில்லை. “குழந்தையை ஒழுக்கா கவனிக்காம உனக்கென்ன பெரிய வேலை” என அப்பா கத்துவார். “குழந்தையை பெக்கறது தான் அம்மா வேலை, வளக்கிறது அப்பா வேலை” என அம்மா கத்துவார். முடிவில் அங்கும் ஒரு பெரிய சண்டையே மல்லுக் கட்டும்.


சில குடும்பங்களில் “நான் தான் செய்வேன்” எனும் சண்டை பாதி நேரம் ஓடும். “நீ செய்ய வேண்டியது தானே” எனும் சண்டை மீதி நேரம் ஓடும். நாம் செய்வோம் என ஒன்று படாததால் குழந்தையின் சிந்தனையும் இரண்டாய் உடைந்து தொங்கும். எனவே தம்பதியரின் அன்யோன்யம் குழந்தை வளர்ச்சியின் அஸ்திவாரம் என்கிறார் கனடாவின் குழந்தைகள் நல நிபுணர் கேரி டைரன்பில் ( Gary Direnfeld).


தங்கள் சண்டையில் சிதைந்து போவது தனது செல்லக் குழந்தை எனும் உண்மையை பெற்றோர் உணர வேண்டும். “தான் செய்வதெல்லாம் சரி” யென நிறுவுவதும், அடுத்தவரை தரக்குறைவாய் பேசுவதும், அவமானப்படுத்துவதும், அடிப்பதும் கடைசியில் குழந்தையைத்தான் பாதிக்கிறது.


ஒருவேளை திருமணங்கள் டைவர்ஸில் முடிந்து விட்டால் சொல்லவே வேண்டாம். குழந்தை நொறுங்கி விடுகிறது. பெற்றோர் குழந்தையை வளர்க்க பொருளாதாரம் இருக்கிறதா என்று தான் பார்ப்பார்கள். குழந்தையின் ஏக்கமும் தவிப்பும் அவர்களுக்கு பல நேரங்களில் தெரிவதே இல்லை.


கருத்து வேறுபாடுகள் இல்லாமல் குடும்ப வாழ்க்கை இருக்கப் போவதில்லை. ஆனால் அதை எப்படிக் கையாள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது வாழ்வின் வெற்றியும் தோல்வியும். சண்டையே போடாமல் இருக்க முடியாது. அதுவும் ஆபத்தானதே. அடக்கி வைக்கப்படும் கோபம் நோய்களாகத் தலை நீட்டும். ஆனால் சண்டையைத் திறமையாகக் கையாளவேண்டும்.


கருத்து வேறுபாடு வந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என குழந்தைக்குக் கற்றுக் கொடுப்பதாய் இருக்க வேண்டும் உங்கள் நடவடிக்கை ! முடிவில்லாமல் ஒரு சண்டை இருக்கவே கூடாது. விவாதித்து, பேசி, கடைசியில் உடன்பாடாகி சந்தோசமாய் ஒரு விவாதம் முடிவுக்கு வரவேண்டும். அது உண்மையில் குழந்தைக்கு வழிகாட்டும் என்கிறார் உளவியலார் பிராட் சாச் (Brad Sachs). இந்த உண்மையைத் தம்பதியர் புரிந்து கொண்டால் வாழ்வில் சிக்கலே இல்லை.


***

நன்றி : பெண்ணே நீ…

***


"வாழ்க வளமுடன்"

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி .....

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்!



இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.

15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.


ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.

நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.



உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.

மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://monitores.googlecode.com/files/ MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + F2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.

இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://greenutils.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது? என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

***

நன்றி உளறுவாயன்.

http://ularuvaayan.blogspot.com/2010/03/blog-post_9831.html



***


"வாழ்க வளமுடன்"

அறியாத தகவல்கள் தெரியாத விஷயங்கள்!




விஞ்ஞானிகள், மாவீரர்கள்,அறிஞர்கள் ஆகியோரில் சிலரினை பற்றிய சில அரிய சுவையான தகவல்கள்:



1) தாமஸ் அல்வா எடிசன் பள்ளிக்கு சென்றது மூன்றே மாதங்கள் தான்.

2) தாமஸ் அல்வா எடிசனுக்கு இருட்டு என்றால் பயமாம்.

3) அறிஞர்கள் சோக்ரடிசும்,ஹோமரும் எழுதப்,படிக்கத் தெரியாதவர்கள்.

4) மாவீரன் நெப்போலியனுக்கு பூனைகள் என்றால் பயமாம்.

5) மாவீரன் அலெக்ஸ்சாண்டர் காக்கை வலிப்பு நோய் உள்ளவராக இருந்தவராம்.

6)அல்பேர்ட் ஐன்ஸ்டீன் தனது ஒன்பது வயது வரையும் தங்குதடையின்றி பேசவல்லவராக இருக்கவில்லையாம், இதனால் அவரை பெற்றோர் மூளை வளர்ச்சி குன்றியவராக
கருதினார்கள்.

7) 1952 ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடு ஐன்ஸ்டீன்க்கு ஜனாதிபதி பதவியை வழங்க முன்வந்தது, ஆனால் அதனை ஐன்ஸ்டீன் நிராகரித்துவிட்டார்.

8) வோல்ட் டிஸ்னிக்கு(Walt Disney)எலிகளை கண்டால் பயமாம்.


***


இல்லவே " இல்லாத" நாடுகள் தொடர்பான சில சுவையான தகவல்கள் :


1) "திரையரங்குகள்" இல்லாத நாடு - பூட்டான்

2) "தினசரி பத்திரிகைகள் " இல்லாத நாடு - காம்பியா

3) "காகங்கள்" இல்லாத நாடு - நியூசிலாந்து

4) "ரயில்" இல்லாத நாடு - ஆப்கானிஸ்தான்

5) "பாம்புகள் " இல்லாத நாடு - அயர்லாந்து

6) தனக்கென " உத்தியோகபூர்வ தலைநகரம்" இல்லாத நாடு - நவ்ரு

7) தனக்கென "தாய்மொழி" இல்லாத நாடு - சுவிட்சர்லாந்து

8) "பொதுக்கழிப்பறைகள்" இல்லாத நாடு -பெரு

9) " வாடகைக்கார்கள்" இல்லாத நாடு - பெர்முடா


***


மேலும் சில தகவல்கள்:


* திமிங்கலத்தில் சுமார் 100 வகைகள் உள்ளன.

* திமிங்கலம் போடும் குட்டி சுமார் 8 டன் எடை கொண்டதாக இருக்கும்.

* சிறிய மீன்களையே இவை உணவாக உட்கொள்ளும்.

* திமிங்கலத்தில் இருந்து பெறப்படும் எண்ணை, ஐரோப்பிய நாடுகளில் விளக்கு எரிக்க பயன்படுகிறது.


* ஈரான் மன்னராக இருந்த ஷா, தங்கத்தால் ஆன கத்திரிக்கோலை கொண்டு தான் ரிப்பன் வெட்டி எந்த திறப்பு விழாவையும் தொடங்கி வைப்பார்.

* வில்லியம் மார்கோனி என்ற அமெரிக்க நீச்சல்வீரர், நீச்சலில் 19 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.

* முதலைகளால் இது நீல நிறம், அது பச்சை நிறம் என்று பிரித்துப் பார்க்க முடியாது. நிறக்குருடு தன்மை கொண்ட உயிரினம் இது.

* ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு நபருக்கும் தலா 10 செம்மறி ஆடுகள் வீதம் இருக்கின்றன. அதனால் தான், அங்கு எங்கு பார்த்தாலும் மக்களைவிட ஆடுகள் அதிகம் காணப்படுகின்றன.


* அமெரிக்காவில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோல்ப் விளையாட்டு திடல்கள் உள்ளன. இங்கே, வயதானவர்கள் கோல்ப் விளையாடி தங்கள் வாழ்நாளை நீட்டித்துக் கொள்கிறார்களாம்.


* நெப்போலியனை வென்ற கடற்படை தளபதி நெல்சன் 5 அடி, 2 அங்குலம் உயரமே இருந்தார். அதேபோல், நெப்போலியனும் குட்டையானவரே!


* சாண்டி எனும் ஒருவகை சிவப்புக் கோழி பச்சை நிறத்தில் முட்டையிடும்!


* அன்னப்பறவை என்றாலே வெள்ளை நிறம்தான் நமக்கு நினைவு வரும். ஆனால், ஆஸ்திரேலியாவில் கருப்பு நிறத்தில் அன்னங்கள் வாழ்கின்றன!


* ஒரே மரத்தில் ராபின் பறவையும், அணிலும் சேர்ந்தே வாழும்.


* மைசூரிலுள்ள ஜோக் நீர்வீழ்ச்சி இந்தியாவிலுள்ள உயரமான நீர் வீழ்ச்சியாகும்.


* உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையில் தபால் நிலையங்கள் உள்ளன.

* இந்தியாவின் முதல் செல் தொலைபேசி சேவை 1995ஆம் ஆண்டில் கொல்கத்தாவில் துவக்கப்பட்டது.


* அங்குல அளவு முறையை கிரீஸ் நாட்டவர்களே முதன்முதலில் கண்டுபிடித்தார்கள். கட்டை விரலின் அகலத்தைக் கொண்டு அளந்தார்கள். பிறகு ரோமானியர்கள் இதனை கணித முறையில் மாற்றி அங்குல அளவு முறையை முழுமைப்படுத்தினர்.


* திருமணத்தின்போது அட்சதை (அரிசி) தூவி வாழ்த்தும் முறை எகிப்திலும் இருந்தது. `உணவு கஷ்டம் இல்லாமல் நலமோடு
நீண்ட காலம் மணமக்கள் வாழ வேண்டும்' என்பதுதான் அரிசி தூவி வாழ்த்துவதன் பொருள்.


* இந்தியாவில் 30 கோடிக்கும் அதிகமான பேர், எழுத்தறிவு பெறாதவர்களாக உள்ளனர்.


* மனிதனின் கண்ணீரில் சோடியம் குளோரைடு என்னும் உப்பு உள்ளது.


* லீவென் ஹாக் என்பவர் பாக்டீரியாவை 1682-ம் ஆண்டில் கண்டறிந்தார்.


* வில்லியம் ஹோவர்த் என்பவர் கார்ட்டூன் படங்களின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.


* மெக்சிகோ நகரம் ஆண்டொன்றுக்கு குறிப்பிட்ட அளவு பூமிக்குள் இறங்குகிறது.


* அன்னத்தின் அறிவியல் பெயர்? - சிக்னஸ் அட்ராடஸ்.


* பிரமிடுகளில் மிகப்பெரியது? - குபு.


* சம்பா நடனம் புகழ்பெற்று விளங்கும் நாடு? - பிரேசில்.


* பூச்சிகளில் வேகமாகப் பறக்க கூடிய உயிரினம்? - தும்பி.


* வாசனை பொருள்களின் ராணி? - ஏலக்காய்.

* ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரை அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரது அணுகுமுறைகளும், ஆட்சிமுறையும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும், தனிப்பட்ட முறையில் நற்குணங்கள் பல நிரம்பியவர்.

ஹிட்லர், மாவீரன் நெப்போலியனின் தீவிர ரசிகர். பிரெஞ்சு மன்னான நெப்போலியனின் வெற்றி ரகசியங்களை கண்டு வியந்தார். நெப்போலியன் உபயோகித்த அலங்கார நாற்காலியில்
அமர்ந்துதான் ஹிட்லர் தனது பணிகளை கவனித்து வந்தாராம்.


* ஸ்காட்லாந்தில் உள்ள `போர்த்' என்ற ரெயில் பாலம், குளிர்காலத்தைவிட கோடை காலத்தில் சற்று அதிகம் நீண்டு காணப்படுகிறது.


* பூரண ஆயுள் 120 ஆண்டுகள் வாழ்வதைக் குறிக்கும்.


* ஒரு யுகம் என்பது பல லட்சம் ஆண்டுகளைக் கொண்டது.


* வானவர், மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என்ற 7 பிறவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது.


* மாபெரும் விஞ்ஞானியான ஐசக் நியுட்டன் தீவிரமாக சிந்திக்கும் போது சில சமயம் உறங்கி விடுவார். அப்படி உறங்கிய போது கணிதப் பிரச்சினைகள், இயற்கை அமைப்பு சம்பந்தமான சில பிரச்சினைகளுக்குரிய விடைகளை கனவுகள் மூலம் அறிந்து கொண்டாரம்.


* மிகச்சிறிய உயிரினமான எறும்புகள் ராணுவ வீரர்கள் போல் அணிவகுத்து செல்வதற்கான காரணம் என்ன? என்று கேட்டால், விடை பலருக்கு தெரிவதில்லை. எறும்புக்கு பார்வைத்திறன் குறைவு. எனவே எறும்புகளின் உடலில் சுரக்கும் அமிலங்களின் வாசனையை நுகர்ந்தபடி ஓர் எறும்பு மற்றொரு எறும்பினை பின்தொடர் கிறது.


* பாலூட்டி இனங்களில், வாலில்லா டென்ரிக் என்னும் சிறிய உயிரினம், ஒவ்வொரு முறையும் 30-க்கும் மேற்பட்ட குட்டிகளை ஈன்றெடுக்கிறது.


* நூறு வருடங்களுக்கு மேல் வாழும் உயிரினம்? - ஆமை.


* ஆயிரம் என்பதை கம்ப்யுட்டரில் குறிக்கும் ஆங்கில எழுத்து? - `கே'.


* தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் யாரால் கட்டப்பட்டது? - ராஜ ராஜசோழன்.


* விதையில்லாத பழ வகை? - அன்னாசி.


* உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கினம்? - முள்ளம் பன்றி.


* ஒரு நட்சத்திரத்தின் ஆயுள் காலம்? - 10 மில்லியன் ஆண்டுகள்.


* தமிழகத்தில் கல்வியறிவில் முதலிடம் பிடிக்கும் மாவட்டம்? - கன்னியாகுமரி.


* ஆசியா கண்டத்தில் பெண் தொழிலாளர்கள் அதிகம் உள்ள நாடு சீனா. 44.5 சதவீத பெண்கள் இங்கு வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் ஆசியாவில் படித்த பெண்கள் அதிகம் உள்ள நாடு இந்தியா.


* அமெரிக்கர்களுக்கு தொலைபேசி இல்லையென்றால் ஏதோ இழந்தது போல் ஆகி விடுகிறார்கள். அங்கு 100-ல், 90 பேர்
தொலைபேசி வைத்திருக்கிறார்கள். இந்தியாவிலோ 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.


* ஒரு கனமில்லி லிட்டர் ரத்தத்தில் 50 லட்சம் சிவப்பணுக்கள் உள்ளன. ஒரு சிவப்பணு இறந்ததும் புதிய சிவப்பணு தோன்றிவிடும்.


* திமிங்கலங்கள் விலங்கினத்தை சேர்ந்தவை.


***

நன்றி ஈகரை.

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "