...

"வாழ்க வளமுடன்"

25 ஆகஸ்ட், 2011

கல்யாணம் செய்யப்போறீங்களா? உஷார்!



திருமணம்செய்வதற்காக பத்து பொருத்தங்கள் பார்க்கிறோம்.ஜாதகம் பார்க்கிறோம்.குடும்பநிலை,பையன்,பெண் படிப்பு எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.உடல் தகுதிகளைப்பற்றி போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.திருமணத்திற்கு முன்பு மணமக்கள்ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.


ரத்த வகைஅறிவதில் பலருக்கும் ஆர்வம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.இதில் ஆர்.எச் வகை என்றுஉண்டு.பாசிட்டிவ்,நெகடிவ் என்பது இதுதான்.பலரும் கர்ப்பத்துக்குப்பின்பரிசோதனையில் இதை கண்டு பிடிப்பார்கள்.தாயும்,தந்தையும் வேறுவேறு வகைஆர்.எச்.அம்சங்களை கொண்டிருந்தால் இரண்டாவது குழந்தை மரணமடையும் வாய்ப்புண்டு.



பெற்றோருக்குஇப்போது ரத்தப்பரிசோதனை மூலம் கர்ப்பத்தின் போது கண்டுபிடிக்கப்படுவதால் சிகிச்சைமூலம் இதை சரி செய்கிறார்கள்.திருமணத்திற்கு முன்பே இப்பரிசோதனைகள் அவசியம் என்பதேசரியானது.நெகட்டிவ் அம்சம் இருப்பவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் என்றகருத்தும் உண்டு.


வடசென்னையில் மஞ்சள் காமாலையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள்வெளியாகி இருக்கின்றன.இது நீரினாலும்,உணவாலும் பரவும் ஒரு வகை.(ஏ,இ).பலரும்பாரம்பர்ய மருத்துவம் மூலம் இதற்கு குணம் காண்கிறார்கள்.இன்னும் சில உண்டு.அவற்றில்முக்கியமானது.ஹெபட்டிஸ் பி,சி வகை.



ஒருவருக்குரத்தம் செலுத்துவதற்கு முன்பு இவ்வகை வைரஸ் உள்ளதா எனவும் பரிசோதனையும்செய்வார்கள்.கிட்ட்த்தட்ட எய்ட்ஸ் வைரஸை போன்றே பரவும் தன்மை கொண்ட்து.பலருக்குஅறிகுறி இருக்காது.பரிசோதனை மூலம்தான் தெரியும்.மணமக்கள் யாருக்கேனும் இருந்தால்தவிர்த்து விடுவதே சரி.தவிர கொஞ்சம் அப்படி இப்படி பழக்கம் உள்ளவர்களாக இருக்கவும்வாய்ப்புண்டு.(பாலுறவு மூலம் பரவும்).


ஹெபடைடிஸ்பி வகைக்கு தடுப்பூசி இருக்கிறது.கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஊசி போட்டு வரும் முன்காக்கலாமே தவிர வந்த பின்னால் இந்த வகை நாட்டு மருந்தால் குணமாவதாக நான்கேள்விப்படவில்லை.ஆங்கில மருத்துவத்திலும் இல்லை.வைரஸ் நோய்களை முழுமையாக குணமாக்கமருத்துவம் இல்லை.



அடுத்துஎய்ட்ஸ் பரிசோதனை.செய்யச்சொன்னால் யாரும் விரும்ப மாட்டார்கள்.பல ஆண்டுகளுக்குஅறிகுறி வெளியே தெரியாது என்பதால் அவசியம் செய்து விடுவதே நல்லது.வேறு சிலகுணமாக்க முடியாத பால்வினை நோய்களும் உண்டு.உரிய மருத்துவர் மூலம் திறன் உள்ளிட்டமுழு உடல் பரிசோதனை செய்து கொள்வது பல பிரச்சினைகளைத் தவிர்க்கும்.


திருமணத்திற்குமுன்பு உடல் பரிசோதனை இன்றைய சூழலில் பொருத்தம் பார்ப்பது போன்று அவசியம்மேற்கொள்ள வேண்டிய ஒன்று.மெத்தப்படித்த ஆண்கள்தான் இதை முன்னெடுத்துச்செல்லமுடியும்.ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையையும்,குழந்தைகளையும் இதனால் நாம் பெறமுடியும்.


***
thanks counsel for any
***




"வாழ்க வளமுடன்"


லோனில் கார் வாங்குவோர் கவனத்திற்கு



கார் வாங்குவது பலருக்கு பெரிய முதலீடாகவே இருக்கிறது. எனவே, கார் வாங்கும்போது கடன் வாங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், திடீரென பெரிய முதலீட்டை கையிலிருந்து செய்வதையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது.

பல முன்னணி வஙகிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மற்றும் கார் தயாரிக்கும் நிறுவனங்களே கார் கடன்களை எளிய தவணை முறையில் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன் வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில், சில நிறுவனங்கள் நேர்முக கட்டணங்களை தவிர முடிந்தவரை மறைமுக கட்டணங்களையும் தலையில் கட்டி தாளித்து விடும்.

கார் கடனை கட்டி முடிக்கும்போது காரின் விலையை காட்டிலும் இருமடங்கு தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுவிடலாம். எனவே, கார் கடனை தேர்வு செய்யும்போது அதி்க கவனமாக இருக்கவேண்டும். கார் கடன் தேர்வு செய்யும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் ஓரளவு மறைமுக கட்டடணங்கள் மற்றும் ரேட் ஆப் இன்ட்ரஸ்ட் என்று கூறப்படும் அதிக வட்டி வீதங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

1.காரை தேர்வு செய்தவுடன் ஷோரூம் சூப்பர்வைசர் கையை நீட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநிதி சடசடவென திட்டத்தை பற்றி கூறும் விபரங்களை கேட்டு தலையாட்டிவிடாதீர்கள். கார் வாங்கும் ஆசையில் கண்ணை மூடிக்கொண்டு கடன் பள்ளத்தாக்கில் போய் விழுந்துவிட வேண்டாம். ஒவ்வொரு வினாடியும் யோசித்து நிதானமாக செயல்படுங்கள்.

2. காருக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கார் கடன் திட்டங்களை பற்றிய விபரங்களை கேட்டுக்கொள்வதோடு, அதன் விபரங்களை வீட்டிற்கு சென்று நன்கு அலசி ஆராய்ந்து பாருங்கள். எந்த வங்கி குறைந்த வட்டி வீதத்தில் கடன் கொடுக்கிறது; கார் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் எத்தனை சதவீதம் உள்ளிட்ட விபரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதில், எது சிறந்தது என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்கள்.

3.காருக்கு கடன் வாங்க தீர்மானித்துவிட்டால், குறைந்தது 30 சதவீதத்திற்கு மேலாவது முன்பணத்தை செலுத்த வேண்டும். இதனால், மாதத்தவணை தொகை மற்றும் தவணை காலம் வெகுவாக குறைவதோடு வட்டி வீதத்தை குறைத்துக்கொள்ளுமாறு பேரம் பேச முடியும்.

4.கார் கடன் வழங்கும் வங்கிகளின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். தவிர, மறைமுக கட்டணங்கள் ஏதாவது திணிக்கப்படுகிறதா என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கவேண்டிய நேரம் இது.

5.கார் கடனுக்கு காப்பீடு திட்டங்கள் இருக்கிறது. காருக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டால் கூட காப்பீடு மூலம் தவணை மற்றும் இழப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்.

6.இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது. கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அலுவலக விபரங்கள் மற்றும் போன் நம்பர்களை விற்பனை பிரதிநிதியிடம் அவசியம் கேட்டு டைரியில் குறி்த்து வையுங்கள். கடன் முடிந்த பிறகு ஆர்சி புக் அல்லது ஆர்சிபுக்கில் உள்ள ஹைப்போதிகேஷனை நீக்குவதற்கு நோ அப்ஜெக்சன் சான்றிதழை(என்ஓசி) கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறும்போது இவை உதவியாக இருக்கும்.

மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை கவனத்தில்கொண்டால், கார் கடன் நம் கழுத்தை இறுக்காது என்று உறுதியாக கூறலாம்..


***
thanks சக்தி
***




"வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "