...
"வாழ்க வளமுடன்"
29 ஜூலை, 2011
இந்தியாவின் சில Toll Free நம்பர்கள் !
அமெரிக்கா & மற்ற நாடுகளில் யோகா
நாலாயிரம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய யோகா, இன்று அமெரிக்க கலாசாரத்தில் ஒர் அங்கமாக ஆகிவிட்டது. யோகா பயில்வது ஒரு ஃபேஷன் (திணீsலீவீஷீஸீ) ஆகிவிட்டது.
• டென்ஷன் நிறைந்த வேலைகளினால் அமெரிக்கர்கள் மன அமைதிக்கு யோகாவை நாடுகின்றனர்.
• 15 மில்லியன் அமெரிக்கர்கள் தங்களின் உடல் ஆரோக்கியத்திற்காக செய்யும் பயிற்சிகளில் ஏதாவது ஒரு யோகாப்யாசத்தை சேர்த்துக் கொள்கின்றனர்.
• அமெரிக்காவிலுள்ள தேகப்பயிற்சி சாலைகளில், 75%, யோகாவையும் ஒரு பயிற்சியாக கற்றுத் தருகின்றனர்.
• அமெரிக்கர்களுக்கு யோகா மீது இத்தகைய மோகம் ஏற்பட காரணம் புகழ் பெற்ற பாப்பிசை (றிஷீறி) கலைஞர்களான பீட்டில்ஸ், பிரபல ஹாலிவுட் நடிகை மியாஃபாரோவும், 1968 ல் இந்தியா வந்து, மகரிஷி மகேஷ் யோகியை அணுகி, யோகாவில் ஈடுபட்டது தான். யோகாவின் புகழை பெருக்கியவர்கள் பிரபல அமெரிக்க நடிகர், நடிகைகளும் ஆவர்.
• நியூ-யார்க்கில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியின் இதய நோய்களின் நிபுணரான டாக்டர் ஒருவர் கூறியது – உடற்பயிற்சிகள் நிணநீர் (லிஹ்னீஜீலீ) தங்கு தடையின்றி உடலெங்கும் பரவுவதை ஊக்குவிக்கிறது. ஆனால் யோகாசனங்கள் நிணநீர் சுரப்பதை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல் அவை உடலெங்கும் பரவிய பின், வெளியே வடிகால்களாகவும் உதவுகின்றது.
• மற்றொரு அமெரிக்க நிபுணர் கூறுவது – யோகா அமைதிப்படுத்துகிறது. அதனால் நோய்களை குணப்படுத்துகிறது. பிராணாயாமம் மற்றும் யோகாசனங்கள் செய்யும் போது தசைகள் விரிந்து, சுருங்கி பயிற்சி பெறுவதால் தசைகள் சீராகின்றன. இதயத்துடிப்பு குறைகிறது, சுவாசம் குறைகிறது, ரத்த அழுத்தம் குறைகிறது, இதனால் உடல் குணமடைகின்றது.
• யோகாவை இதர உடற்பயிற்சிகளைப் போல், உடல் வருந்த, மெய்வருந்த செய்ய தேவையில்லை. உடலை துன்புறுத்தாமல் நிதானமாக யோகாசனங்களை செய்யலாம்.
• பல நோய்களின் காரணம் மனஅழுத்தம், மருந்துகளும் பதில் யோகாவே சிறந்தது. உடலுக்கு வலிமையை உண்டாக்கி மனச்சாந்தியை தரும் யோகா ஒரு இயற்கை சிகிச்சை முறை. யோகாவை எளிமையாக செலவின்றி வீட்டிலேயே செய்யலாம். எனவே யோகா ஒரு வரப்பிரசாதம். இதை சொல்லியிருப்பவர் டாக்டர் டிமோதி மெக்கால் (ஞிக்ஷீ. ஜிவீனீஷீtலீஹ் விநீநீணீறீறீ). இவர் பாஸ்டனில் உள்ள ஙி.ரி.ஷி. ஐயங்காரின் யோகப் பள்ளியில் யோகாவை கற்பிக்கிறார்.
யோகாசனங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது. உயர் ரத்த
அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதால் வரும் பாதிப்புகளை குறைத்து ரத்த ஒட்டத்தை சீராக்குகிறது. யோகாசனங்கள் மாதவிடாய் நிரந்தரமாக நின்று விட்ட பெண்மணிகளுக்கு உகந்தவை. அமெரிக்காவின் பாஸ்டனில் “மனம் – உடல் மன்றம் (விவீஸீபீ ஙிஷீபீஹ் மிஸீstவீtutமீ) ஒன்று உள்ளது. இந்த நிறுவனம் முன் குனிந்து செய்யும் பல யோகாசனங்களை “மெனோ – பாஸ்” ஆன பெண்களுக்கு கற்றுத்தருகிறது. இந்த ஆசனங்கள், நாளமில்லா சுரப்பிகள் அடங்கியுள்ள உடல் பாகங்களை மிருதுவாக அழுத்தி ‘மசாஜ்’ செய்யும் – ஹார்மோன் மருந்துடன் சேர்த்து இந்த ஆசனங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
தீஷீஜ்
ஆன்மீகம் (குண்டலினி)
• அறிவும் ஆரோக்கியமும் மேம்பட ‘பிராண சக்தி’ தங்கு தடையின்றி உடலுள் பரவ வேண்டும்.
• எட்டு சக்கரங்களில் 7 சக்கரங்கள் சமநிலையில் சீராக இருக்க வேண்டும்.
• ஐந்து மேற்புர சக்கரங்கள் ஆன்மீக சிந்தனை பகுதிகள் கீழ் மூன்று சக்கரங்கள் சரீர சம்மந்த தேவைகளை கவனிக்கின்றன.
விஞ்ஞானம்
• மூச்சுப்பயிற்சிகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களின் அளவை குறைக்கின்றன.
• உடலை “நீட்டுவிக்கும்” ஆசனங்கள் நிணநீர் கழிவுகளை வெளியேற்ற உதவுகின்றன.
• யோகாசனங்கள் தசைகளை ஆரோக்கியமாக வைக்க, உடல் மூட்டுக்கள் பாதிக்கப்படாமல் வலிவுற உதவுகின்றன.
***
thanks எதிலோ படித்தது
***
சோரியாஸிஸ் ( வீட்டு வைத்தியம் )
சோரியாசிஸ் என்னும் சரும நோய்க்கு ஆட்பட்டவர்கள் அனுபவிக்கின்ற சோகமும் துக்கமும் சொல்ல முடியாதது. சமுதாயத்தில் அவர்கள் நடத்தப்படுகின்ற விதமும், அதனால் அவர்கள் அனுபவிக்கும் தாழ்வு உணர்ச்சியும் எவர் மனதையும் இளகச் செய்யும்.
சோரியாசிஸ் நோயாளிகள் ஒரு காலத்தில் தொழு நோயினர் என்றே கருதி வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டனர். 1841 – ல் ஹெப்ரா என்ற மருத்துவர் தனது நீண்ட ஆய்வின் மூலம் இது தொழு நோயிலிருந்து மாறுபட்ட ஒரு சரும நோய் என நிரூபித்துக் காட்டினார்.
ஏறக்குறைய உலக மக்கட் தொகையில் ஓரு சதவிகிதத்தினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் பல லட்சம் சோரியாசிஸ்
நோயாளிகள் உள்ளனர்.
நிரந்தரமாகக் குணமாகாத இந்நோய் மறைவதும் பின்னர் தோன்றுவதும் அடிக்கடி நிகழக் கூடிய ஒன்று. டாக்டர் மாற்றி டாக்டர், மருந்து மாற்றி மருந்து என்று இவர்கள் படும் துயரம் சொல்லில் அடங்காதது. நெடு நாட்களாக இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கூட இது எதனால் ஏற்படுகிறது என்று தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
தொடர்ந்து நடத்தப்பட்ட பல ஆய்வுகளினாலும் இது தோன்றுவதற்குக் காரணம் என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் மன இறுக்கம், மனக்குழப்பம் போன்றவை ஏற்படும் போதும், சிலவகை மருந்துகள் உட்கொள்ளும் போதும் இதன் தாக்கம் அதிகரிக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாற்று முறை மருத்துவர்கள் இதை வேரோடு அறிந்து விட முடியும் என்று கூறினாலும் அது போன்றதொரு மருந்து இது வரை வந்ததாகத் தெரியவில்லை. இதை நிரந்தரமாகக் குணமாக்க முடியாது போனாலும் சில வகை ஆங்கில மருந்துகள் இந்நோயின் தாக்கத்தையும் அது தரும் தொல்லையையும் கணிசமாகக் குறைக்க உதவுகின்றன.
சோரியாசிஸ் நோய்க்கு வீட்டு வைத்தியம்
வேப்ப இலைகளை உலர வைத்து, பொடித்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் இருவேளை இந்த பொடியில் ஒரு தேக்கரண்டி (5 கிராம்) எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து குடித்து வரவும்.
இந்த வேப்பிலை பொடியுடன் மஞ்சள் பொடியையும் (அரை தேக்கரண்டி அளவில்) வெது வெதுப்பான நீரில் கலந்து தினமும் இரு வேளை குடித்து வரவும்.
காரமான மசாலா உணவுகளை தவிர்க்கவும்.
கடலுப்புக்கு பதில் பாறை உப்பை பயன்படுத்தவும்.
வெளிப்பூச்சுக்கு புங்க தைலம் சிறந்தது.
குளிக்கும் தண்ணீரில் வேப்பிலைகள் சேர்த்து சூடு செய்யவும். குளிக்கும் முன் மஞ்சள் பொடி + வேப்பிலை சேர்த்து அரைத்த களிம்பை, பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி பின் குளிக்கவும்.
நெய்யில் பொரித்த மெல்லியதாக நறுக்கிய வெங்காய வளையங்களை உட்கொள்ளலாம்.
கீழ்க்கண்டவற்றை களிம்பாக செய்து பாதிக்கப்பட்ட மேனியில் தடவலாம் – பாதாம், மல்லிகை.
***
thanks ஆயுர்வேதம்
***
27 ஜூலை, 2011
சில நேரங்களில் பெண்கள் எரிந்து விழுவது ஏன்?
26 ஜூலை, 2011
பெண்களுக்கான அபாய அறிவிப்புகள்!
பெண்கள் பொதுவாகவே தமது வீட்டு வேலைகள் மற்றும் தொழில் வாழ்க்கையில் மிகவும் மும்முரமாக ஈடுபடுபவர்கள். அவர்களுக்குத் தமது உடலைப் பற்றிக் கவனிக்க போதிய நேரம் கிடைப்பதில்லை. குளிர்காலத்தில் கண்டிப்பாகப் பாவிக்க வேண்டிய மொய்சரைசர்களைப் பாவிப்பதற்குக் கூட அவர்களுக்கு நேரமில்லை.
உங்களுக்குத் தொடர்ச்சியாக முடி உதிர்கிறது என்றால் வழுக்கை ஏற்படுவதை நோக்கிச் செல்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் உங்கள் உடலை உடனடியாகக் கவனிக்க வேண்டிய நேரம் வருவதை சில அபாய அறிகுறிகள் கொண்டு தெரிந்துகொள்ள முடியும்.
இந்தக் கட்டுரையில் நாம் உங்களுக்கு எளிதாக கையாளப்படக்கூடிய 4 அபாய எச்சரிக்கைக் குறிகளை அடையாளப்படுத்தியுள்ளோம். வயது அதிகரிக்கும்போது இந்த எச்சரிக்கைக் குறிகளும் தென்படும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள விடயங்களை வாசித்துப் பாருங்கள்.
1. முடி உதிர்தல்
அன்றாடம் முடி உதிர்வதை எதிர்கொள்கின்றீர்களா? அப்படியானால் அவதானமாக இருங்கள். இது வழுக்கை, போசாக்கின்மை ஏதாவது ஒருவகை சர்க்கரை வியாதியின் அறிகுறியாக இருக்கலாம். இந்த சர்க்கரை வியாதிகள் அனட்ரோஜன் அல்லது ஹைப்பர்தைரோய்டிசத்துடன் தொடர்புபட்டிருக்கலாம். தைராய்டு அதிகரிப்பதன் காரணமாக ஏற்படக்கூடிய இந்த ஹைப்பர் தைரோய்டிசம் பெண்களில் 7 மடங்கு அதிகம் காணப்படுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2. தொடர்ச்சியான குளிர்
தொடர்ச்சியாக குளிரில் நடுங்குவது போன்ற உணர்வு ஆண்டு முழுவதும் தொடர்ந்தால் ஹைப்போதைராய்டிசம் காரணமாக இருக்கக்கூடும். இது பெண்களில் உடல் பருமன் அதிகரிப்பு, மலச்சிக்கல், முடி, தோல் மற்றும் நகம் வரட்சியடைதல் போன்றவற்றை ஏற்படுத்தும். இவை பொதுவாக பெண்களின் 50 வயதின் போது ஏற்படக்கூடியவை.
3. வரண்ட வாய் மற்றும் கண்கள்
குளிர்காலத்தில் பெரும்பாலான பெண்களுக்கு கண்கள், தோல் மற்றும் வாய் வரட்சியடைதல் ஏற்படுகிறது. குறைந்த ஈரப்பதம் மற்றும் அதிக வெப்பமான அறைகளில் இருப்பதன் காரணமாகவே இவை பொதுவாக ஏற்படக் கூடும். ஆனால் 40 முதல் 50 வயதுடைய பெண்கள் மத்தியில் ஏற்படக்கூடிய ளுதழசபசநn நோய்த்தாக்கத்தின் அறிகுறியாகக் கூட இது இருக்கலாம். இதனைக் கவனிக்காமல் விடுவதால் கண் பிரச்சினைகள், பற்சிதைவு, பல்லீறு நோய்கள் போன்றவை ஏற்படுவதுடன் இனப்பெருக்க மற்றும் ஜீரணத் தொகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனை முன்கூட்டியே அறிந்து சிகிச்சை பெறுவது தான் சிறந்த வழி.
4. அதிகமான வாயு
அதிகமான வாயுப் பிரச்சினை லக்டோஸ் சகிப்புத் தன்மையின்மை அல்லது உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்படக்கூடும். ஆனால், இது சிலவேளைகளில் உணவுப்பாதை வயிறு மற்றும் குடல்கள் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்பட்டதாகக் கூட இருக்கலாம். சமிபாட்டுத் தொகுதியில் புற்றுநோய் ஏற்படவதற்கான அறிகுறியாகவும் இருக்கலாம். அடிக்கடி சிறுநீர் கழித்தல், பெல்விக் மற்றும் அடிவயிற்றில் வலி ஏற்படல், சாப்பிடக் கடினமாக உணர்தல் அல்லது விரைவாக நிறைய சாப்பிட்ட உணர்வு ஏற்படல் போன்றவையும் கவனிக்கப்பட வேண்டிய அறிகுறிகள் தான்.
***
thanks vm
****
நீண்ட நாள் வாழ்க்கைக்கு – ஆரோக்கியப் பழக்கங்கள்
ஒவ்வொரு நாளும் காலை உணவு உண்கின்றீர்களா?
எப்பொழுதும் படிக்கட்டைப் பயன்படுத்துகிறீர்களா?
உங்களுடைய அன்றாட செயற்பாடுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.
நாம் அன்றாடம் செய்கின்ற செயல்கள் எம் வாழ்வில் ஒரு சிறிய விடயமாகத் தோன்றலாம், ஆனால் நல்ல ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை தொடர்வது உங்கள் வாழ்நாளைக் கூட்டும்.
அன்றாடம் உடற்பயிற்சி செய்தல்
தொழில்நுட்பங்கள் எமது வாழ்வை எளிதாக்கிவிட்டன. ஆனால், ஆரோக்கியமானதாக்கி விடவில்லை.
அன்றாட உடற்பயிற்சி நிச்சயமாக எமக்கு ஒரு வரம் போன்றது. உண்மையில், ஆய்வுகள் உடற்பயிற்சியானது உங்கள் வாழ்நாளில் 3 ஆண்டுகளைக் கூட்டுகிறது என பரிந்துரைக்கின்றன.
எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் வேலைத்தளத்திற்கு நடந்து செல்லங்கள்.
நீண்ட தூரம் இல்லாவிட்டாலும் ஒரு குறுகிய தூரமாவது நடக்கலாம்.
பெரிய கட்டிடங்களில் வேலை செய்பவர்கள் நடப்பதற்குப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். இவை மிகவும் எளிதானவை தானே?
ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ளுங்கள்
காலை உணவை அன்றாடம் உட்கொள்வது நீண்ட நாள் வாழ்வதற்கான ஆரோக்கியமான பழக்கவழக்கமாகும்.
காலை உணவைத் தவிர்ப்பவர்களுடன் ஒப்பிடுகையில் அன்றாடம் காலை உணவை நேரத்தோடு உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்படுவது குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட முக்கியமானது காலை உணவை உட்கொள்வது மனதிற்கும் உடலுக்கும் உற்சாகத்தை ஊட்டி இனியதொரு காலையைத் தொடங்க உகந்த வழியாகும்.
கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் சிறிய அளவு கொழுப்பு கலந்த உணவினை காலையில் உட்கொள்வது பரிந்துரைக்கப்பட்டுள்ளது
போதுமான அளவு உறங்குங்கள்
போதிய தூக்கமின்மை உங்கள் வாழ்நாளைக் குறைக்கும். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆய்வுகளின் இறுதி முடிவு இதுதான்.
நாம் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது தெளிவாக சொல்லப்படவில்லை என்றாலும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்காமலிருப்பது பெரிய வியாதிகளான புற்றுநோய், இதய நோய், சர்க்கரை வியாதி மற்றும் உடற்பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும்.
தூக்கமின்மை மட்டுமல்ல ஓய்வின்மையும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மன அழுத்தம், கோபம் என்பன மிகப்பெரிய கொலையாளிகள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், எனவே ஓய்வெடுத்துக்கொள்வதும் வாழ்நாளை சேமிக்கும்.
இசையை ரசிப்பது, மசாஜ் செய்துகொள்வது, தியானம் செய்வது இப்படி எதுவாக இருந்தாலும் ஓய்வாக இருப்பது வாழ்நாளை நிச்சயம் அதிகரிக்கும்.
இவை உங்களுக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.
பற்களை தூய்மையாக வைத்திருங்கள்
பற்களைத் துலக்கி கொப்பளித்து தூய்மையாக வைத்திருப்பதும் உங்கள் வாழ்நாளில் 6.4 வருடங்களை அதிகரிக்கும்.
இந்த மதிப்பீடு எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது தெரியவில்லை ஆனால் உண்மையில் வாய்த்தூய்மையின்மை அருவருப்பான பல் சார்ந்த நோய்களை ஏற்படுத்தும்.
அன்றாடம் பல் துலக்கி கொப்பளிப்பது வாயில் உள்ள பக்டீரியாக்களை நீக்கி பற்களை பாதுகாப்பதுடன் எமது இதயத்தையும் நோய்களிலிருந்து ஓரளவு பாதுகாக்கும்.
நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்
சிகிச்சைகளை விட நண்பர்கள் மலிவாகக் கிடைப்பார்கள் என்று ஒரு பழைய வாசகம் உண்டு.
இதனை ஆய்வாளர்கள் உண்மையென நிருபிக்கின்றனர்.
இது நண்பர்களைப் பற்றியது மட்டுமல்ல சமூக மட்டத்தில் கோவில், விளையாட்டு சங்கங்கள் அல்லது சமையல் வகுப்புகள் என்று உங்களுடன் தொடர்புடைய எல்லாவற்றிற்கும் பொருந்தும்.
இவை உங்கள் உடல் மற்றும் உள நலத்துடன் தொடர்புடையவை. இவை சிறிய விடயங்களாக இருந்தாலும் உங்கள் வாழ்நாளைக் கூட்ட உதவும்.
***
thanks vm
***
மிருகக் கடியினைப் போலவே மனிதக் கடியும் ஆபத்தானது
மனிதனின் வாயில் பாக்டீரியாக்கள் உயிர்வாழ்வதன் காரணமாக மிருகக் கடியினைப் போலவே மனிதக் கடியும் ஆபத்தானது. கடியினால் காயம் ஏற்பட்டால் உடனடியாக காயத்தை சுத்தமாக்கி சிகிச்சைக்கு உட்படுத்த வேண்டியது மிக முக்கியமானது. கடியின் தன்மையைப் பொறுத்து உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக்கொள்வதும் அவசியமானது.
மனிதக் கடிகள் எவ்வாறு ஏற்படுகின்றன?
மனிதக்கடி நேரடியாகவோ (உதாரணமாக ஒரு குழந்தை ஒருவரைக் கடித்தல்) அல்லது மறைமுகமாகவோ (சண்டைகளின் போது அல்லது விளையாட்டுக்களின் போது தற்செயலாக) வாயினால் ஒருவருடைய உடற்பாகங்களைக் கடிப்பதினால் ஏற்படுகிறது.
பொதுவாக மனிதக் கடி கைகளில் தான் ஏற்படுகிறது, ஆனால் நேரடியாகக் கடிப்பது உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இடம்பெறலாம். தோலில் கடித்துக் காயப்படுத்துவது கன்றிப்போதல் அல்லது திசு சேதங்கள் மற்றும் தொற்றுக்கள் ஏற்படல் போன்றவற்றிற்கு காரணமாக அமையும். டெட்டனஸ் மற்றும் ஹெபாடைட்டிஸ் பி போன்ற தொற்றுக்களை மனிதக் கடி பரப்பும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
காயத்தை ஏற்படுத்தும் கடி
காயங்கள், துளைகளை ஏற்படுத்தும் கடியினால் மேலோட்டமான அல்லது ஆழமான புண்கள் ஏற்பட்டு உதிரப் போக்கு ஏற்பட வாய்ப்புண்டு. ஆழமாகக் கடிப்பது உதிரப்போக்கை ஏற்படுத்தும், இதற்கான முதலுதவியின் முதற் படி அந்தக் காயத்தை சோப் மற்றும் நீரினால் தூய்மைப்படுத்தி அதிலுள்ள பாக்டீரியாக்களை அகற்றுவது தான்.
ஆழமான கடி
ஆழமான கடிகளின் போது தசை நாண்கள் அல்லது மூட்டுக்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக கணுக்களில் ஏற்படும் ஆழ்ந்த கடிகள் காரணமாக எலும்புகள் மற்றும் தசைநார்களில் சேதங்கள் ஏற்பட்டு அந்தக் காயம் ஒழுங்காக சிகிச்சைக்கு உட்படுத்தப்படாமல் விடப்பட்டால் நீண்டகால வலிகளுக்கு வழிகோலும். எனவே இதனை எக்ஸ்ரே மூலம் மருத்துவர் உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.
மேலோட்டமான கடி
மேலோட்டமான கடி காயங்களை ஏற்படுத்தாவிட்டாலும் திசுக்களில் சேதங்களை ஏற்படுத்தக் கூடும். இவ்வாறான பெரும்பாலான கடிகளுக்கு வீட்டிலேயே சிகிச்சைகளை செய்துகொள்ள முடியும். குளிர்ந்த ஒத்தனம் வீக்கமடைவதிலிருந்து தடுக்கும். ஆழமான கடி இல்லாவிட்டாலும் அதைக் கழுவி சுத்தப்படுத்தி பாக்டீரியாக்களை நீக்குவது நல்லது.
***
thanks vanakkam
***
கவனியுங்கள்! உங்கள் பிள்ளைகளின் பற்சுகாதாரம் மிக முக்கியம்
குழந்தைகள் சரியான வாய்ச் சுகாதாரத்தை சிறந்த முறையில் பேணுவதன் மூலம் அவர்கள் பெரியவர்களாகும் போது அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
தினமும் பல் துலக்குதல், வாய் கொப்பளித்தல், வாய் சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்வதன் ஊடாக பல் தொடர்பான பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
தமது குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கட்டாயமாக பற் சுகாதாரம் பற்றி செய்முறையாகவும், உதாரணத்துடனும் செய்து காட்ட வேண்டும். குடும்பத்துடன் பல் துளக்கி குடும்பத்துடன் புன்னகையுங்கள்.
அறிவுறுத்தல்கள்.
1. குழந்தைகளுக்கானது,
உங்கள் குழந்தையின் பற்கள் வெளிவரும் போது பற்களை மெருதுவான சுத்தம் செய்யும் துணி கொண்டு தினசரி 2 முறை சுத்தம் செய்யுங்கள். குழந்தைகளின் பற்களிலுள்ள ‘எனாமல்’ எனும் பதார்த்தம் வயது வந்தவர்களின் ‘எனாமலை’ விட மிகவும் மெல்லியது.
தொடர்ச்சியான சுத்தப்படுத்தல் பற் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும். இரண்டு வயது வரை சுத்தமான நீர் பயன்படுத்துங்கள். அல்லது சிறிய பயறளவு புளோரைட் அடங்கிய பற்பசையை பயன்படுத்துங்கள்.
இது பற்களை சுத்தப்படுத்துவது மட்டுமல்ல பற்கள் வளரும் போது மென்மையான தன்மையை கொடுக்கும். மெருதுவான பற்கள் விரைவில் ஒன்றுடன் ஒன்று சேரும் போது, இரண்டு பற்களுக்குமிடையில் பற்றீரியா தொற்றை ஏற்படுத்தும்.
குழந்தைகளை அவர்களின் முதலாவது பிறந்த நாளுக்கு அண்மித்தாக அவர்களை அவர்களின் பல் தொடர்பான ஆலோசனையை பெற பல் வைத்தியரிடம் அழைத்துச் செல்லும் படி அமெரிக்காவின் பல் வைத்தியர் சங்கம் கூறுகிறது.
இதனால் பற்கள் தொடர்பான பிரச்சனைகளை மதிப்பிட்டு அவற்றுக்கான மருத்துவ சேவையையும் வழங்க முடியும்.
2. 3-7 வயது
3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தமது பற்களை, குழந்தைகளுக்கான, மென்மையான பற் தூரிகை கொண்டு பல் துளக்க வேண்டும்.
ஒரு ஒழுங்கு முறையில் அவர்களை பல் துளக்க கற்றுக் கொடுங்கள். நீர் கொண்டு வாயை கொப்பளித்து, சுத்தம் செய்யவும் பழக்கிக் கொடுங்கள்.
6-7 வயதை அடையும் வரை அவர்கள் அவர்களின் பெற்றோர்களின் மேற்பார்வையில் பல் துளக்க வேண்டும். சிறுவர் பெரியோர்களை பார்த்து செய்வதில் ஆர்வம் காட்டுவர்.
ஆகவே பெற்றோர், பல் துளக்கும் போதும் சரியா முறையை பின்பற்றுங்கள். உங்களை பார்த்து உங்கள் பிள்ளைகளும் சரியாக செய்வர்.
6-12 வாரங்களுக்கு ஒரு முறை பற்தூரிகையை மாற்றுங்கள். பற்தூரிகையின் அளவு அவர்களின் வயது அதிகரிக்கும் போது மாறுபடும். புபற்தூரிகைகளை தெரிவு செய்யும் போது நடுத்தர தூரிகைகளை கொண்ட, சிறிய தலையை உடையதை தெரிவு செய்யுங்கள்.
3. ‘ப்ளேக்’ பரிசோதனை
‘ப்ளேக்’ பரிசோதனை மூலம் உங்கள் குழந்தையின் பற் சுகாதாரம் பற்றி சோதித்துப் பாருங்கள். வெள்ளை நிற பதார்த்தமான இந்த ‘ப்ளேக்’ பற்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவில் கலந்து வரும் பற்றீரியாவை விருத்தியடையச் செய்யும்.
பல் துளக்கிய பின் ‘ப்ளேக்’ பற்களில் எந்தளவில் காணப்படுகிறது என்பதை அறிய, உணவிற்கு பயன்படுத்தப்படும் சிவப்பு நிறமூட்டியை 4 அல்லது 3 துளிகளை 2 மேசைக் கரண்டி நீருடன் ஒரு கடதாசி கோப்பையில் கலக்குங்கள்.
10 நிமிடங்களுக்கு வாயிலிட்டு நன்றாக கொப்பளியுங்கள். தண்ணீர் தொட்டியினுள் அதனை துப்புங்கள். வாயை சிறிது நேரம் சுத்தம் செய்ய வேண்டாம். கண்ணாடியின் துணையுடன் உங்கள் பற்களில் சிவப்பு நிற புள்ளிகளாக தெரியும் ‘ப்ளேக்கை’ அடையாளம் காணுங்கள்.
அதன் பின் பல்லை நன்றாக துளக்குங்கள். பற்களை துளக்கிய பின்னும் கண்ணாடியில் உங்கள் பற்களை நன்றாக கவனியுங்கள் எங்கெங்கு அந்த ‘ப்ளேக்’ காணப்படுகின்றன என்பதை.
மீண்டும் பல் துளக்கி அவற்றை அகற்றுங்கள். நீங்கள் முதலில் பல் துளக்கிய போது நன்றாக துளக்குப்படவில்லை என்பதை உணருங்கள்.
7 வயதின் பின் பெற்றோரின் நேரடியான கண்காணிப்பில் பல் துளக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இருப்பினும் பெற்றோர் உங்கள் குழந்தைகள் சரியாக பல் துளக்குகின்றனரா என கண்காணிக்க தவற வேண்டாம்.
ஓவ்வொரு 6 மாதங்களும் குடும்பத்தினருடன் சென்று பல் வைத்தியரிடம் பற்கள் தொடர்பான ஆலோசனை பெறுவதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
***
thanks google
***
முதலுதவிப் பெட்டியொன்றை இல்லத்தில் தயாரிப்பது எப்படி?
முதலுதவி பெட்டி அனைவரது வீடுகளிலும் இருக்க வேண்டிய ஒரு அவசியமான பொருள். ஆனால் பெரும்பாலானோரின் வீட்டில் முதலுதவிப் பெட்டி இருப்பதில்லை. உண்மையைச் சொல்லுங்கள் உங்களில் எத்தனை பேரின் வீட்டில் இந்தப் பெட்டி இருக்கிறது?
இன்றிலிருந்தாவது அனைவரது வீடுகளிலும் முதலுதவிப் பெட்டியை தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். அவ்வளவு கடினமான விடயம் என்று சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
மருந்துப் பொருட்களை வீட்டில் வைக்கும் போது குழந்தைகளின் கவனம் அவ்விடத்தில் செல்லாது பார்த்துக் கொள்ளுங்கள். அல்லது அவர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்குங்கள்.
தேவையான பொருட்கள் :
• தண்ணீர் புகாத, சிறிய, உறுதியான பெட்டி அல்லது பை
• சிப் கொண்டு மூடப்படும் பைகள்
• காயங்களுக்கான மருந்துகள் :- (கிருமி நீக்கி, காயத்துக்கு போடும் கட்டு, பஞ்சு போன்ற மென்மையான துணி, மருந்து சேர்க்கப்பட்ட துணி, வலி நிவாரணி மற்றும் antibiotic )
• ஓரல் antihistamines
• மருத்துவ சாதனங்கள் (கையுறைகள், tweezers மற்றும் கத்தரிக்கோல்)
• அவசர தேவைக்கான மருந்துகள்
• மேலதிகமானவை, உங்கள் தேவைக்காக (அவசர தொலைபேசி இலக்கங்கள், பாம்புக் கடிக்கான மருந்து,ipecac, charcoal tablets )
சிறிய பெட்டி அல்லது பையை தெரிவு செய்யுங்கள். அது கொண்டு செல்ல இலகுவானதாகவும், பாரமற்றதாகவும், சகல முதலுதவி பொருட்களையும் வைக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
அந்த பை அல்லது பெட்டி நீர் உட்செல்லாத வகையில் இருக்க வேண்டும். நீங்கள் பயணிக்கும் நேரங்களில் அதை எடுத்துச் செல்வீர்களானால் முதலுதவி பொருட்களை சிப் உள்ள பைக்குள் கவனமாக வையுங்கள். அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
உங்கள் முதலுதவி பை தேவையான சகல மருந்து உபகரணங்களையும் உள்ளடக்கியுள்ளதா என சரி பாருங்கள். ஒவ்வொரு பொருட்களின் எண்ணிக்கையும் உங்கள் குடும்ப அங்கத்தவரின் எண்ணிக்கைக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும்.
காயத்துக்கு போடும் கட்டு, பஞ்சு போன்றன அதிகளவில் தேவைப்படுவன. மருந்து சேர்க்கப்பட்ட துணி, கிருமி நீக்கி, வலி நிவாரணி, 4 அங்குல பஞ்சு, வெவ்வேறு அளவுகளில் வலி நிவாரணி துணிகள், ஒட்டும் துணி, ஓரல் antihistamines கையுறைகள், tweezers மற்றும் கத்தரிக்கோல், antibiotic கிறீம் போன்றன உள்ளனவா என உறுதிப்படுத்துங்கள்.
சில வேளைகளில் உங்கள் குடும்பத்தில் யாருக்காவது ஒவ்வாமை ஏற்படுமானால் அதற்கான மருந்துகளையும் வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று எடுத்துக் கொள்ளுங்கள். அவசர தொலைபேசி இலக்கங்கள், பாம்புக் கடிக்கான மருந்து, ipecac, charcoal tablets என்பனவும் உங்களுக்கு உதவியாக இருக்கும். கட்டாயம் அவற்றையும் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் முதலுதவி பையை அல்லது பெட்டியை இரண்டாக பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு பகுதியில் அடிப்படை மருந்துப் பொருட்களும் உதாரணமாக மருந்து சேர்க்கப்பட்ட துணி, மருந்து நெய் போன்றனவும், இரண்டாவது பகுதியில் மருந்துகளையும் வையுங்கள். மீண்டும் ஒரு தடவை அனைத்துப் பொருட்களும் சிப் உள்ள பைகளில் போடப்பட்டுள்ளனவா என சரிபாருங்கள்.
***
thanks vanakkam
***
25 ஜூலை, 2011
அன்பே பிரதானம் அதுவே வாழ்க்கையின் அஸ்திவாரம்....
“அன்பிருந்தால் துன்பமில்லை” புனிதர் அகஸ்டின் சொல்லும் உபதேசம் இது. `உலகில் அத்தனை பிரச்சினைகளுக்கும் அன்பின்மையே காரணம்’ என்பார் ஓஷோ. அது நிஜம்தான். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகிறது. பலர் ஆதரவற்றோராக தவிக்கவிடப்படுகிறார்கள். பலர் கொலை செய்யப்படுகிறார்கள். அன்பிருந்தால் அத்தனையையும் சரி செய்ய முடியும்.
***
யாரிடமோ நீங்கள் சதா இணைந்திருப்பதுதான் அன்பு. இன்பம், துன்பம் இரண்டிலும் எல்லா நேரங்களிலும் நீங்கள் ஒருவருடன் இணைந்திருந்தால் நீங்கள் அவரை நேசிப்பதாகக் கொள்ளலாம். துன்பமான நேரத்தில் மட்டும் ஒருவருடன் இணைந்தால் அவருக்கு நீங்கள் உதவுவதாகக் கொள்ளலாம். உதவுவதால் துன்பத்தைப் போக்கலாம். நேசிப்பதால் இன்பத்தை உருவாக்கலாம். மற்றவருக்காக இரக்கப்படுவது மட்டும் அன்பாகி விடாது. தன்னை நேசிக்கத் தெரிந்தவர்களால் மட்டுமே மற்றவரை நேசிக்க முடியும் என்பது அறிஞர்களின் முடிவு.
***
தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க 7 பண்புகள் தேவை என்கிறார் ஜான்கிரே. அன்புகாட்டுதல், அக்கறை கொள்ளல், புரிந்து கொள்ளல், மதித்தல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளல், நம்பிக்கை வைத்தல் போன்றவை அந்த பண்புகளாகும். ஒருவரிடம் அன்பு – அக்கறை காட்டி, அவரை புரிந்து கொண்டு, குறைநிறைகளை ஏற்று மதிக்கவும் பாராட்டவும் செய்தால் உங்களுக்கிடையே இணக்கம் குறையவே வாய்ப்பில்லை. அத்துடன் நம்பிக்கையும் வைத்திருந்தால் பிரிவு உங்களை நெருங்காது.
***
அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு. அன்பிலும் பல வகை இருக்கிறது. நட்பு, காதல் சார்ந்த அன்பு இருக்கிறது. என்னுடையது விட்டுத்தரமாட்டேன் என்பது வெறித்தனமான அன்பு. ஒரே பின்னணி பார்த்து வருவது செயல்பூர்வமான அன்பு. தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும்.
***
அக்கறை செலுத்துவது என்பது அன்பின் ஒரு படிநிலை. சின்னச் சின்னத் தேவைகளிலும் ஆழமான கவனம் செலுத்தி அவற்றை நிறைவேற்ற உதவுவதே அக்கறையாகும். நீங்கள் நேசிப்பவருக்காக மட்டுமல்லாது உங்களை வெறுப்பவர் மீதும் இதே அக்கறையை செலுத்த முடிந்தால் நீங்கள் அன்பின் சிகரமாவீர்கள். மற்றவர்களின் முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி, சோகத்திலும் உடனிருப்பது அவர்களுக்கு உங்கள் ஆதரவை எப்போதும் தருவது அக்கறை மிகுந்த அன்பாகும்.
***
புரிந்து கொள்ளுதல் இல்லாததால் எத்தனையோ குடும்ப உறவுகள் சிதைந்திருக்கின்றன. மற்றவர் உங்களை புரிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவதற்குப் பதிலாக முதலில் நீங்கள் மற்றவரை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். புரிதல் இல்லாதவர்கள் சேர்ந்து வாழவே முடியாது. துணைவர் மற்றும் மற்றவர்களின் உரிமைகள், ஆசைகள், தேவைகளை அறிந்து நடப்பதும், அவற்றை மதித்து அவருக்கு உதவுவதுமே புரிந்து கொள்ளல் ஆகும். மனைவி கணவரை மதிப்பதுபோலவே கணவரும் மனைவியை மதித்தால் குடும்பத்தில் பிரச்சினையே இல்லை.
***
பாராட்டுவதால் மனித மனம் மகிழ்வுறுகிறது. ஒருவரின் முயற்சிகள் அல்லது நடத்தையை அங்கீகரித்து பாராட்டுவது அவருக்கு ஊக்கத்தைத் தருகிறது. ஒருவரை ஊக்குவிப்பது உங்களுக்கிடையே இணக்கத்தை அதிகமாக்குகிறது. பாராட்டு தொடரும்போது அன்பு இன்னும் ஆழமாகிறது. புகழ்வதெல்லாம் பாராட்டாகிவிட முடியாது. இயல்பை விளக்கி, முழுமையை அங்கீகரிப்பதே பாராட்டாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். பாராட்டுகளை ஆயுள் காப்பீடுபோல அவ்வப்போது புதுப்பித்து வாருங்கள். உறவு பலப்படும்.
***
ஒருவரை புரிந்து கொண்டு அப்படியே ஏற்றுக் கொள்வது உண்மையான அன்பாகும். ஏற்றுக் கொள்ளல் என்பது தவறுகள் உள்ளிட்ட எல்லாவற்றையும் அனுமதித்தலை குறிப்பதல்ல. குறைகளை மன்னிப்பதாகும். கணவரின் நடத்தையை நம்பி ஏற்றுக்கொள்ளும்போது சந்தேகப் பேய் ஒழிந்து குடும்பத்தில் சந்தோஷம் கூடுகிறது. நம்பிக்கை என்பது அன்பின் பரிசாகும். நம்புதல் ஏற்படும்போது அன்பு தானாக மலர்ந்துவிடும். நேர்மை, ஒழுக்கம், உண்மையாயிருத்தல் போன்றவை மற்றவர்க்கு நம்மீது நம்பிக்கை ஏற்படுத்தும் பண்புகளாகும்.
***
கணவன் மனைவி அன்புறவு நீடிக்க வரவேற்கவும், விடைபெறவும், நன்றி கூறவும் அன்புத் தழுவலை கொடுங்கள். தழுவல் உறவின் முதலீடு, பிரிவின் தடுப்புக்கோடு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் `நான் உன்னை நேசிக்கிறேன்’ என்று கூறுங்கள். கருத்து வேறுபாடு ஒருவர் மற்றவரை சாதாரணமாக எடைபோட வைக்கும். இந்த முரண்பாட்டை முரட்டு வார்த்தைகளால் வெளிப்படுத்தாதீர்கள். குறைகூறுவதை கைவிடுங்கள், கோபத்தோடு படுக்கச் செல்ல வேண்டாம். மன்னியுங்கள். மன்னிப்புக் கேளுங்கள். மகிழ்ச்சி பெருகும்.
***
நல்ல துணைவரைத் தேடுவதைப்போலவே நல்ல துணைவராக இருப்பது மிகவும் நல்லது. தம்பதிகளுக்குள் அகந்தை, மற்றவரின் உதவாத அறிவுரைகள் குழப்பத்தை உண்டு பண்ணும். தொழில் வேறுபாடுகள், தகுதி வேறுபாடுகள் பார்ப்பது, குறைகூறும் பெற்றோர் மற்றும் துணைவரால் தொல்லைகள் பெருகும். புரிந்து கொள்ளல், பணிவு, பொறுப்பு, உண்மை, விசுவாசம், மென்மையான தொடுகை, கவனிக்கும் காது, திறந்த மனம், கவலைப் பகிர்வு, வளர்ச்சியில் பங்கு, உயர்விலும், தாழ்விலும், சுகத்திலும், துக்கத்திலும் காதலில் மகிழ்ந்திருந்தால் இல்லறம் நல்லறமாகும்.
***
thanks vayal
***
பூச்சிகளற்ற சமையல் அறை- 10 வழிகளில்
மற்ற உயிரினங்களை போல , பூச்சிகளும் தாங்கள் உயிர்வாழ ஏதுவாக, உணவின் இருப்பிடத்தை நோக்கி செல்லும் பாங்குடையவை. ஆகையால், பூச்சிகள் வந்த பின்பு அவற்றை ஒழிப்பதைப் பற்றி சிந்திப்பதை விட, அவை வரும் முன்னரே அதற்குண்டான ஆயத்தங்கள் செய்வது ஒரு நல்ல உத்தி ஆகும்.
உங்கள் சமையல் அறையிலிருந்து பூச்சிகளை அகற்ற கீழ்காணும் 10 வழிமுறைகளை பின்பற்றலாம் :
1) தினசரி உணவிற்கு பிறகு, தவறாமல் பாத்திரங்கள், சமையல் மேடை, அடுப்பு இவற்றை கழுவி சுத்தப்படுத்துவது நல்லது.
2) உபயோகித்த பாத்திரங்களை இரவு முழுதும் "சிங்கில்" போட்டு வைக்க வேண்டாம். முடிந்தவரை, அவைகளை இரவிலேயே கழுவி வைத்துவிடுங்கள்.
3) உங்கள் வீட்டை அடிக்கடி சுத்தபடுத்தி வையுங்கள். பழைய செய்திதாள்கள், அட்டைபெட்டிகள் மற்றும் காகிதப்பைகளை நீண்ட நாள் வைத்திருப்பதை தவிர்க்கவும்.
4) சமையல் அறையின் அலமாரிகளில் காணப்படும் விரிசல்களை நன்கு அடைத்துவைக்கவேண்டும்.
5) உணவு பொருளையோ, குப்பைகளையோ, திறந்து வைக்காதீர்கள், உயிர் பிழைக்க உணவின்றி தவிக்கும் பூச்சிகள் தாமாகவே நம் வீட்டில் இருந்து வெளியேறிவிடும்.
6) மாவு, ஊறுகாய், மற்றும் பருப்பு வகைகளை, நன்கு மூடிய ஜாடியில் வைத்திருந்தால், அவற்றில் பூச்சிகளின் ஆக்கிரமிப்பு இராது.
7) பூச்சிகளின் இயல்பு உணவிடம் தேடி செல்வதுதான். ஆகையால் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருந்தால், வீட்டிற்குள் பூச்சிகளின் வருகை இருக்காது.
8) வாரம் ஒரு முறை உங்கள் வீட்டை சோப்பு பயன்படுத்தி கழுவி விடுங்கள். இவ்வாறு செய்வதால், தேவை இல்லாத பூச்சிகளின் தொல்லை இன்றி இருக்கலாம்.
9) ஒரு பஞ்சு உருண்டையை "பெப்பர்மின்ட் எண்ணை" யில் முக்கி எலிகள் வருமிடத்தில் வைத்தால், அவற்றின் வாசனையில், எலிகள் நெருங்காது.
10) "சில்வர்ஃபிஷ்"
"சில்வர்ஃபிஷ்" எனும் இறக்கை இல்லாத சிறிய பூச்சி வகை, அடித்தளங்கள், சமையல் அறை, புத்தக அலமாரி போன்ற இடங்களில் காணப்படும். இந்த பூச்சியின் விஞ்ஞான பெயர் "லெப்பிஸ்மா சக்காரினா" ஆகும்.
மீனை போல் வழுக்கும் தன்மையும், வெள்ளி அல்லது வெளிர்நீலம் கலந்த வண்ணத்தில் இவை காணப்படுவதால் "சில்வர்ஃபிஷ்" என்று பெயர் பெற்ற இந்த பூச்சி, சர்க்கரையில் காணப்படும் "கார்போஹைட்ரேட்டை" உணவாக அருந்தும்.
இவைகள் ஈரப்பதம் நிறைந்த இடங்களில்தான் பெரும்பாலும் பல்கிப்பெருகும். 75% முதல் 95% சதவிகிதம் ஈரப்பதம் இவை வளர சாதகமான ஒன்றாகும். 1/2 (அ) 1 இன்ச் அளவுகொண்ட "சில்வர்ஃபிஷ்" பூச்சிகள் உலர்ந்த உணவுகள், பசைத்தன்மை மிகுந்து காணப்படும் புத்தகங்கள், சுவரொட்டிகள் போன்ற இடங்களில் உயிர்வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்யும்.
"சில்வர்ஃபிஷ்ஷை" ஒழிக்க சில வழிகள்
1) இவைகள் ஈரப்பதத்தில் வாழ்வதால், வீட்டை சுத்தமாக, ஈரமின்றி வைத்திருப்பது மிகவும் நல்லது.
2) பசைத்தன்மையுள்ள உணவு வகைகளை, நன்கு மூடி வைத்திருங்கள்.
3) "சில்வர்ஃபிஷ்" புத்தகங்களை தாக்கும் அபாயம் இருந்தால், புத்தக அலமாரியில், சிறிது "டையாட்டம் மண்" தடவி வைய்யுங்கள். இவ்வாறு செய்தால், அங்கு ஈரப்பதம் இராது.
4) சிறிய மரப்பொறி செய்து, அதன் மீது "ப்லாஸ்டிக் டேப்பை" கொண்டு மூடி பாதிக்கபட்ட இடத்தில் நிறுவி விடுங்கள். எலிபாஷாணஙள் மற்றும் பூச்சிமருந்துகளுக்கு பதிலாக வைக்கப்படும் இவ்வகை மரப்பொறிகள் கரப்பான், "சில்வர்ஃபிஷ்" மற்றும் இதர பூச்சிகளிருந்து உங்கள் வீட்டை பாதுகாக்கும்.
5) இரவில் மரப்பொறியை சுற்றி சிறிது "டால்கம்" பவுடரை தூவி, காலையில் பூச்சிகளின் சுவடுகளை காணலாம். இவ்வாறு செய்வதால், பூச்சிகள் வீட்டில் நுழையும் வழித்தடம் அறிந்து, அவைகளை அடைத்து விட ஏதுவாக இருக்கும்.
6) வீட்டை அவ்வபோது நன்கு கழுவி துடைத்து, உங்கள் குளியல் அறையையும் உலர்வாக வைத்திருங்கள். முடிந்தால், பூச்சிமருந்து தூவி வைக்கவும்.
7) துணி அலமாரிகள் மற்றும் "சிங்க்கில்" பாச்சாய் உருண்டை வைத்துவிட்டால், பூச்சிகள் வராமல் தடுக்கலாம்.
8) விரிசல்கள், ஓட்டைகள் போன்ற பூச்சிகள் வரும் வாய்ப்புள்ள இடங்களை நன்கு அடைத்து வைக்கவும்.
இது போன்ற வழிகளை பின்பற்றினால் பூச்சிகள் தொல்லையிலுருந்து நிரந்தரமாக விடுபடலாம்........
உடற்பயிற்சி - நம்பிக்கைகளின் மறுபக்கம்
'வலியில்லாமல் வழியில்லை' என்று உடற்பயிற்சியை குறிக்கும் சில சான்றோர் மொழிகள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து விட்டாலும் சில தவறான நம்பிக்கைகள் இன்றளவும் உலவுகின்றன என்றால் மிகை ஆகாது. வாருங்கள், உடற்பயிற்சியை சுற்றி இருக்கும் சில அசாதாரண உண்மைகளையும் தவறான நம்பிக்கைகளையும் சற்று அலசுவோம்.
உடற்பயிற்சி - இது நம்பிக்கை என்றால் எது நிஜம் :
நம்பிக்கை #1 : எடை இழக்க விருந்தை தவிர்க்க வேண்டும்
நம்பிக்கை #2 : தண்ணீர் அதிகம் அருந்துவதால் உடல் எடை கூடி விடும்.
நிஜம் : இயற்கையான தண்ணீரில் காலோரிகள் இல்லததால் அது கொழுப்புச் சத்தாக மாறாது என்பதே உண்மை. இன்னும் சொல்லப் போனால், தண்ணீர் நம் உடற்கொழுப்பை கரைக்கக் கூடியது. மேலும், நம் உடல் சீராக இயங்க தண்ணீர் அத்தியாவசியமாக தேவை.
நம்பிக்கை #3 : உணவுக்கு இடையில் நொறுக்குத் தீனி சுவைப்பதை தவிர்க்க வேண்டும்
நிஜம் : இது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. உணவிற்கு இடையில் ஆரோக்கியமான நொறுக்குத் தீனி என்பது உடலின் சர்க்கரை அளவை செவ்வனே நிர்வகிக்க உதவுகிறது. மேலும், உங்கள் உடல் இயக்கங்களை சுறுசுறுப்போடும் வலிமையோடும் வைத்திருக்க இது உதவும்
நம்பிக்கை #4 : உடற்பயிற்சி என்பது இளமையானவர்களுக்கே !
நிஜம் : ஆரோக்கியத்திற்கு வயது வரம்பு இல்லை. வயதில் முதியவர்களும் சில பாதுகாப்பான உடற்பயிற்சி முறைகளை மேற்கொள்ளலாம். சீரான உடற்பயிற்சிகள் மற்றும் உடல் இயக்கங்கள் முதியோர்களை சுதந்திரமாக வைப்பது மட்டும் இல்லாமல் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக பேண உதவுகிறது. வயது மூத்தவர்கள் "ஏரோபிக்", யோகா, தசை தளர்வுக்கான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறான பயிற்சிகள் இதய நோயின் ஆபத்திலுருந்து முடியோர்களை காக்கவல்லது.
நம்பிக்கை #5 : உடற்பயிற்சிக்கு ஏற்ற உடைகள் அவசியம்.
நம்பிக்கை #6 : உடற்பயிற்சியால் நம் உடலின் கொழுப்பு தசைகளாக மாறுகிறது.
நிஜம் : கொழுப்புச் சத்தும் தசை நாறுகளும் முற்றிலும் வேறுபட்ட அணுக்களால் ஆனது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவற்றில் ஒன்றை இழந்து மற்றொன்றை பெறலாமேயன்றி இவை மற்றொரு வடிவத்திற்கு மாறாது.
உடற்பயிற்சியின் பலன்கள் :
முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. பதினைந்திலிருந்து இருபது நிமிடங்கள் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும் ஒன்றாகும். ஏரோபிக்ஸ், கை கால் நீட்டுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி மற்றும் யோகா போன்றவையால் நம் நல்லாரோக்கியத்திற்கு உத்திரவாதம் கிடைக்கிறது.
முறையான உடற்பயிற்சி எல்லோருக்கும் பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை உடற்பயிற்சி செய்தால், கீழ்காணும் நன்மைகள் பெறலாம் :
1. எடையை கட்டுப் படுத்தலாம்
2. திண்மையும் வலிமையும் பெறலாம்
3. மூட்டுகளிலும் தசைகளிலும் இளக்கம் பெறலாம்
4. மன அழுத்தம் குறைக்கலாம்
5. நம் மதிப்பையும் தோற்றத்தையும் மேம்படுத்தலாம்
6. எலும்புகளுக்கும் மூட்டுகளுக்கும் வலிமை ஏற்படுத்தலாம்
7. மாத விடாய் பிரச்சனைகளை மட்டுப் படுத்தலாம்.
8. மூப்படையும் போது வலிமையை பேணலாம்.
நடைமுறை வாழ்க்கையில் உடற்பயிற்சி செய்வது எவ்வாறு ?
வெளியிடம் செல்கையில் ...
1. லிஃப்டிற்கு பதிலாக படிக்கட்டுகளை உபயோகிப்பது
2. பேருந்திலிருந்து வழக்கமான இறங்கும் இடத்திற்கு முன்பாகவே இறங்கி நடந்து செல்வது
அலுவலகங்களில் ...
3. இருந்த இருக்கையிலேயே தொலைபேசியில் தொடர்ந்து பேசுவதை தவிர்த்து அவ்வப்போது நின்ற நிலையில் பேச்சை தொடரலாம்.
4. சக பணியாளர்களை, மதிய உணவிற்கு பின்பு மேற்கொள்ளும் சிறிய உடற்பயிற்சி முறைகளில் கூட்டு சேர்த்து கொள்ளலாம்.
*
வீட்டில் உள்ள படியே ...
5. தொலைக் காட்சியில் விளம்பர இடைவேளைகளின் போது கை கால்களை நீட்டியோ உட்கார்ந்து எழுந்தோ தசைகளை தளர்வடையச் செய்யலாம்.
6. பணி முடிந்த பிறகு குழந்தைகளுடன் மைதானத்தில் விளையாடலாம்
7. இரவு உணவிற்கு பிறகு தொலை காட்சி பார்ப்பதை தவிர்த்து விட்டு சற்றேனும் குடும்பத்தினருடன் நடை பழகலாம்.
***
thanks யாழினி
***
"வாழ்க வளமுடன்"
23 ஜூலை, 2011
கருவுருதலும் கருவின் வளர்ச்சியும் - Embryo and Fetus - part = 3
கர்ப்பத்தின் நலவழியும் உணவூட்டமும்
கர்ப்பத்தின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான நியதிகள்.
ஓரளவான உடற்பயிற்சியுடன், நல்ல மனப்பாங்குடனும் இருத்தல் வேண்டும். இவை கருவின் மீது சாதகமான விளைவை உண்டாக்குகின்றன. வேலை செய்வதன் மூலம் நரம்பு மற்றும் இரத்த உற்பத்தி, சுவாசத்தொகுதி ஆகியவற்றின் பணிகள் ஊக்குவிக்கப்பட்டு அவளது வளர்சிதை மாற்றமும் சீரடைகின்றது. சோர்ந்து போய் படுத்திருத்தல் அல்லது உட்கார்ந்திருத்தல் ஆகியவை உடல் பருமன் அதிகரித்தல், மலச்சிக்கல், தசைகளின் தளர்ச்சி, பிரசவத்தின் போது கருப்பையின் மந்தநிலை ஆகியவற்றை உண்டாக்குகின்றன.
கனமான பொருட்களைத் தூக்குதல், அதிகமாகக் குதித்தல், மிகையான உடற்களைப்பு ஆகியவற்றைக் கருவுற்றிருக்கும் பெண் தவிர்க்க வேண்டும். அத்துடன் அதிகமான தட்பவெப்ப நிலைகள், இரசாயனப் பொருட்களின் விளைவுகளுக்கு உட்படுதல் ஆகியவையும் தவிர்க்கப்படுதல் வேண்டும். இல்லையெனில், கருவிலிருக்கும் சிசு பாதிக்கப்பட நேரிடலாம்.
கால்களினால் இயக்கப்படுகின்ற தையல் பொறியை இயக்குதல், சைக்கிள் ஓட்டுதல், குதிரைச்சவாரி போன்ற உடலைக் குலுக்கும் பணிகளும், மிகையான பிரயாசையுடன் உள்ள விளையாட்டுக்களும் தவிர்க்கப்பட வேண்டும்.
ஓய்வான நேரங்களில் கர்ப்பிணி சிறிது நேரம் உலாவச் செல்லலாம். இது நீண்ட நேரமாகவோ, அசதியை உண்டாக்கும் படியாகவோ இருக்கக் கூடாது. நடந்து செல்லுதல் கர்ப்பிணிகளின் மனோ நிலைகளுக்கும், உடற்பணிகளுக்கும் இதமளிக்கின்றது. காற்றோட்டமுள்ள திறந்த வெளிகளில் நீண்ட நேரம் தங்கியிருப்பதானது, கருப்பை உட்சிசுவிற்கு உயிர்வளி (Oxygen) வினியோகத்தை ஊக்குவிக்கின்றது.
கருவுற்றிருக்கும் ஒரு தாய் ஒரு நாளைக்குக் குறைந்தது தினமும் 8 மணி நேரமாவது தூங்கவேண்டும். இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கக் கூடாது. ஏனெனில், கர்ப்பத்தின் ஒழுங்கான வளர்ச்சிக்கு மேற்குறிப்பிடப்பட்ட குறைந்த பட்ச உறக்கம் அவசியமாகின்றது. கர்ப்பிணி தனது வலது பக்கமாகவோ அல்லது மல்லாந்தோ படுத்திருப்பது நல்லது.
கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களிலும் உடலுறவைத் தவிர்த்தல் வேண்டும். ஏனெனில், உடலுறவின் போது ஊக்குவிக்கப்படும் குருதி வினியோகமும், கருப்பையின் கிளர்த்தலில் ஏற்படும் மாற்றங்களும் கருச்சிதைவை உண்டாக்கலாம். அதேபோல், கர்ப்பத்தின் கடைசி இரண்டு மாதங்களிலும் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தல் சிறந்ததாகும். இதன் மூலம் பாலுறுப்புக்களில் கிருமிப்பாதிப்பினால் நோய்த்தாக்கம் (Infection) ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
மதுபானங்களும், புகைப்பிடித்தலும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில் நிகட்டினும், மதுசாரமும் கர்ப்பிணிக்கும், கருப்பை உட்சிசுவிற்கும் நச்சு விளைவுகளை உண்டாக்குகின்றன.
பொதுவாக கர்ப்பகால இறுதியில், கர்ப்பிணியையும், கருப்பை உட்சிசுவையும் பாதிக்கக்கூடிய தொற்று நோய்களில் இருந்து கர்ப்பிணியைப் பாதுகாக்க வேண்டும்.
சரும (தோல்) பாதுகாப்பு.
கர்ப்பிணி, தனது தோலை நன்கு பராமரிக்க வேண்டும். முனைப்பான வியர்வைச் சுரப்பிற்கு தோலின் சுத்தம் உதவுகின்றது. வெளிப்படும் வியர்வை மூலம், தீய கழிவுப் பொருட்கள் உடலிலிருந்து அகற்றப்படுகின்றன.
தோலின் பராமரிப்பினால், அதன் கழிவகற்றும் தொழிற்பாடு ஊக்குவிக்கப் படுகின்றது. எனவே, கர்ப்பத்தின் போது மிகையாக இயங்கும் சிறுநீரகங்களின் (kidneys) பணிகளும் சீரடைகின்றன.
கர்ப்பிணிகள் துளிக்குளியல் (Shower Bath) எடுப்பது சிறந்ததாகும். ஆனால் தண்ணீர் ஓரளவு வெதுவெதுப்பாக இருத்தல் வேண்டும். கர்ப்பத்தின் இறுதி வாரங்களில், இளஞ்சூடான நீரினால் பஞ்சுக் குளியல் (Sponge Bath) எடுப்பது நல்லது. குளியலின் பின்னர் உலர்ந்த துண்டால் நன்கு உலர்த்திவிட வேண்டும்.
தினமும் இரண்டு தடவைகள் மென்மையான சோப்பும், சூடான நீரும் கொண்டு பாலுறுப்புக்களை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வெள்ளைபடுதல்போன்ற நோய் நிலைகள் இருப்பின் ஒரு வைத்தியரின் ஆலோசனையைப் பெற்று சிகிச்சை பெற வேண்டும்.
கர்ப்பிணி தனது வாயை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். காலையிலும், மாலையிலும் மெல்லிய பற்தூரிகை(Soft Toothbrush)யினால் பல் துலக்க வேண்டும். ஒவ்வொரு உணவின் பின்னரும் வாயை நன்கு கொப்பளிக்க வேண்டும்.
வருங்காலப் பாலூட்டத்திற்காக, கர்ப்பத்தின் போதே மார்பகங்களைச் சிறப்பாகப் பேண வேண்டும். மார்பகங்களை மென்மையான சோப்பும், தண்ணீரும் கொண்டு தினமும் கழுவி ஒரு துவாலையால் நன்கு உலர்த்த வேண்டும். இவ்வகை எளிய முறையினால் பாலூட்டத்தின் போது மார்பகக்காம்புகளில் பிளவுகள் தோன்றுவதையும், மார்பகங்களில் ஏற்படுகின்ற அழற்சியையும் தவிர்க்க முடிகின்றது. இதனால் மார்பகம் பிறக்கப்போகும் குழந்தைக்கு வருங்காலப் பாலூட்டத்திற்குத் தயார்நிலையில் வைத்திருக்க இயலும்.
மார்பகக்காம்புகள் தட்டையாகவோ, உள்நோக்கி வளைந்தோ இருந்தால், அவற்றை சுத்தமான விரல்களைக் கொண்டு மஸாஜ் செய்ய வேண்டும். ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் கொண்டு அவற்றைக் கவனமாக முன்னோக்கி இழுக்க வேண்டும். 3-4 நிமிடங்கள் நீடிக்கும் வகையில் தினமும் 2-3 முறைகள் மஸாஜ் செய்ய வேண்டும்.
மார்புக் கச்சைகள் (Bra’s) முரடான நூல் இழைகளால் செய்யப்பட்டு, மார்பை இறுக்கமாகப் பற்றி (அதிகமாக அழுத்தாமல்) இருக்க வேண்டும். மார்புக் கச்சைகளின் குவியப் பகுதி மார்பகத்தின் வடிவத்திற்கும். அதன் அளவிற்கும் ஏற்றதாக இருக்கக வேண்டும்.
உடைகள்
கர்ப்பிணியின் உடைகள், குறிப்பாக வயிற்றுக்கும், மார்புக்குமானவை வசதியான தாகவும், தளர்ச்சியாகவும் இருக்க வேண்டும். கர்ப்பத்தின் இரண்டாவது பகுதியில் வயிற்றுக் கட்டுகள் போடப்பட வேண்டும். கட்டுகள் வயிற்றை அமுக்காமல் அவற்றைக் கீழிருந்து தாங்கவேண்டும். வயிற்று உப்புசத்தின் மிகையான நிலையைத் தவிர்க்கவும், கீழ் முதுகுப் பகுதியில் (நாரிப் பகுதி) தோன்றும் புவிஈர்ப்பு உணர்வைத் தவிர்க்கவும் கட்டுகள் உதவுகின்றன. (கர்ப்பிணிகளில் புவிஈர்ப்பு மையம் இடம்பெயர்வதால் முதுகுத் தசைகள் பழுதடைகின்றன.)
கர்ப்பிணிகளது காலணிகள் வசதியானதாக இருக்க வேண்டும். உயர்ந்த குதிகால்கள் கொண்ட காலணிகளை அணியக் கூடாது. ஏனெனில் இவை கால்கள் மற்றும் முள்ளந்தண்டு ஆகியவற்றின் தசைகளைச் சோர்வடையச் செய்கின்றன.
கர்ப்பிணிகளின் நலவழி முறைகளின் மூலம் பின்வரும் நன்மைகள்
01. கர்ப்பிணியின் உடல் நலம் பேணப்பட்டு, பலமடைகின்றது.
02. கருப்பை உட்சிசுவின் சாதாரணமான வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகின்றது.
03. கர்ப்பமும், கர்ப்பத்திற்குப் பின்னான காலமும் சீராக அமைகின்றது.
04. பெண், பாலூட்டத்திற்கு தயார்நிலைப் படுத்தப்படுகின்றாள்.
கர்ப்பிணிகளின் உணவூட்டம்
கர்ப்பிணியின் நலமான வாழ்வுக்கும், கருப்பை உட்சிசுவின் முறையான வளர்ச்சிக்கும், கர்ப்பகாலத்தில் போஷாக்கான உணவு கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கர்ப்பிணிக்கான தவறான உணவூட்டம் தாய்க்கு பல்வேறு வகையான நோய்களை உண்டாக்கி, கருப்பை உட்சிசுவின் வளர்ச்சியையும் பாதிக்கின்றது.
கர்ப்பத்தின் போது பெண்களில் நிகழும் உடலியல் மாற்றங்களையும், கர்ப்பிணிக்கும், வளரும் சிசுவிற்கும் மிகையாகத் தேவைப்படுகின்ற ஊட்டப் பொருட்களையும் கவனத்திற்கொண்டு கர்ர்ப்பிணிகளுக்கான உணவு முறை திட்டமிடப்படவேண்டும்.
கர்ப்பத்தின் முதற்பகுதியில், உணவு வழக்கத்திற்கு மாறாக இல்லாமல், நல்ல ஊட்டப் பொருட்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இக்காலப்பகுதியில் உணவில் கட்டுப்பாடு இருக்கக் கூடாது. கர்ப்பத்தின் முதல் மாதங்களில் சுவை மாறுபாடடைகின்றது. 3-4 ஆவது மாதங்களில் சிறப்பான உணவுகளுக்கான ஆசை எதுவும் இருப்பதில்லை.
பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்பத்தின் துவக்க மாதங்களில் (குறிப்பாகக் காலை வேளைகளில்) குமட்டல் காணப்படுகின்றது. இத்தகைய பெண்கள் காலை உணவை படுக்கையில் இருந்து கொண்டே அருந்திய பின்னர், எழுந்து நடமாடலாம்.
கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் காய்கறிகளும், பால் பொருட்களும் வழங்கப்படலாம். இறைச்சி, மீன்வகைகளை குறைந்தளவில் உள்ளெடுக்கலாம். பழங்கள், உலர் விதைகள், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் தாய்க்கும், சேய்க்கும் தேவையான விட்டமின்கள் அதிகளவில் காணப் படுவதால் அவை மிகவும் பலனளிக்கின்றன. வாரத்தில் 3-4 தடவைகள் மாமிசம் கொடுக்கப்படலாம். மாமிசத்திற்கும், மீன்களுக்கும் பதிலாக பாலும், காய்கறிச் சாறுகளும் கொடுக்கப் படலாம்.
விலங்கினப் புரதத் தேவைகளை ஈடுசெய்ய முட்டை, தயிர், பாலோடு மற்றும் ஏனைய பால் பொருட்களைக் கொடுக்கலாம்.
கர்ப்ப காலத்தின் இரண்டாவது பகுதியில் உணவுடன் சேர்க்கப்படவேண்டிய உப்பின் அளவு குறைக்கப்பட வேண்டும். மதுபானங்கள், மிளகு, கடுகு, வினிகர், காரமான மசாலா நிறைந்த பொருட்கள் ஆகியவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
கர்ப்பத்தின் போது கல்லீரல், சிறு நீரகங்கள், ஏனைய உறுப்புக்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகப் பணிபுரிகின்றன. இவற்றின் பணிகள் சீர்குலையாமல் இருக்க, மேற்படி உணவுக்கட்டுப்பாடுகள் அவசியமாகும்.
கர்ப்பிணிக்கும், கருப்பை உட்சிசுவின் வளர்ச்சிக்கும் அதிகளவில் விட்டமின்கள் தேவைப்படுகின்றன. அரைகுறையான விட்டமின்கள் உடலுறுப்புக்களின் பணியாற்றும் திறனைக் குறைப்பதோடு, நோய்த் தொற்றுகளுக்கு எதிரான உடலின் எதிர்ப்பு சகதியையும் குறைக்கின்றது. விட்டமின்கள் பற்றாக் குறையாக இருந்தால் மாலைக்கண், ரிக்கட்ஸ், ஸ்கர்வி, நரம்பு மண்டல நோய்கள் உண்டாகின்றன.
கர்ப்பிணி தினமும் 4 தடவைகள் சாப்பிட வேண்டும். தினசரி உணவின் 25-30 வீதத்தினை காலை உணவிலும், 40-45 வீதத்தினை மாலை உணவிலும், 15-20 வீதத்தினை இரவு உணவிலும் எடுக்க வேண்டும்.
கர்ப்பிணி தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், புளித்த பால் ஆகிய வற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மலச்சிக்கல் ஏற்படுவதிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்.
***
நன்றி google
கருவுருதலும் கருவின் வளர்ச்சியும் - Embryo and Fetus - part = 2
ஆண் சிசு
உருவான சிசு ஆணாக அல்லது பெண்ணாக மாற்றமடைதல்:
கருவில் வளரும் குழந்தை ஆணாகயிருப்பின் androgens எனப்படும் ஒருவகை ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் 49 ஆவது நாள் வரையிலும் ஆண் மற்றும் பெண் குழந்தைக்கான கருவில் ஒரே மாதியாக இருக்கும் பிறப்புறுப்பு ஆணுக்குரியதாக வளர்கின்றது.
கருவில் வளரும் குழந்தை பெண்ணாகவிருப்பின் இந்த androgens எனப்படும் ஹார்மோன் சுரப்பதில்லை. ஆதனால் பிறப்புறுப்பு பெண்ணுக்குரியதாக வளர்கின்றது.
பிறப்புறுப்புக்கள் (reproductive organs) நான்காவது மாதத்திற்குப் பின்னரே முழுவளாச்சியடைந்து முழுமையான ஆணுறுப்பாகவோ, அல்லது பெண்ணுறுப்பாகவோ மாறுகிறது.
கருவுற்ற 70 நாட்களுக்குள் கருவினுள் மனித உறுப்புகள் அனைத்தும் தோன்ற ஆரம்பித்து இதுவரையிலும் பார்ப்பதற்கு அனைத்து உயினங்களின் கருவோடு ஒத்திருந்த கருவானது இப்போது மனிதனின் முகம், கை, கால்கள் உட்பட முழு தோற்றமும் பெற்று விடுகிறது.
கவனித்துக் கொள்க: இந்நிலையில் அனைத்து மனித உறுப்புகளும் உருவாக துவங்கியிருந்தாலும் அவைகள் முழுவளர்ச்சியைப் பெற்றுவிடவில்லை. உறுப்புகள் தொடாந்து வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. இதுவரை ‘embryo’ என்றழைக்கப்பட்ட மனிதக் கரு இப்போது ‘fetus’ என்றழைக்கப்படுகிறது.
கருவுற்ற 33 ஆம் நாள் ‘branchial arches’ என்ற பகுதிகளுக்கிடையில் உருவாக ஆரம்பித்த காதுகள் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்துக்கொண்டே இருக்கின்றன. 5 ஆவது மாதத்திற்குப் பின்னரே அவைகள் முழுவளாச்சி பெறுகின்றன. 6 ஆவது மாதம் அக்குழந்தை கேட்கும் சக்தியைப் பெற்றுவிடுகின்றன.
கருவுற்ற 31 ஆம் நாளிலிருந்தே கண்கள் வளர துவங்கியிருந்தாலும் 40 ஆம் நாள் தான் இமைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. சில நாட்களில் இந்த இமைகள் கண்களை மூடிவிடுகிறது. மூடப்பட்ட கண்ணின் இமைகள் 7 ஆவது மாதம் வரையிலும் மூடியே இருக்கும். அதாவது கண்கள் ஏழாவது மாதம் தான் முழுவளாச்சியை அடைந்து பார்க்கும் சக்தியைப் பெறுகின்றது.
5 ஆவது மாதம் குழந்தையின் நரம்பு மண்டலங்கள் முழு வளாச்சியைப் பெற்று விடுவதால், குழந்தை கருவறைக்குள் நகர ஆரம்பிக்கின்றது. இப்போது குழந்தையின் அளவு 9 அங்குல நீளமாகும்.
6 ஆவது மாதம் 13 அங்குல நீளமும், ஒரு றாத்தல் எடையும் உடையதாக இருக்கும் அக்குழந்தையின் கண் இமையின் முடிகள் வளாந்து விடுகின்றது. ஆனால் தலை முடி இதுவரை வளராமலே இருக்கின்றது.
கருவுற்ற 22 ஆம் நாள் இதயத்துடிப்பு ஆரம்பித்திருந்தாலும் 56 நாட்களுக்குப் பிறகே முழு இருதயத்திற்கான வடிவத்தை அது பெறுகிறது. எனினும் கர்பப்பைக்குள் இருக்கும் குழந்தையின் இருதயத்திற்கும், பிறந்த குழந்தையின் இருதயத்திற்கும் ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. பிறந்த குழந்தையின் இதயம் இயங்கும் போது இது இரத்தத்தை நுரையீரக்குள் நெலுத்தி அங்கிருந்து சுவாசக் காற்றை பெற்றுக் கொண்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்கு வந்து பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படும்.
ஆனால் காப்பப்பையினுள் இருக்கும் குழந்தைக்குத் தேவையான சுவாசக் காற்று தாயின் இரத்தம் வழியாக குழந்தையின் தொப்புள் கொடி மூலம் குழந்தையின் இரத்தத்தை அடைவதால், குழந்தையின் இரத்தம் நுரையீரலுக்கு செல்லவேண்டிய அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது. அதனால் இருதயத்திலிருந்து இரத்தம் நேரடியாக உடலின் மற்ற பாகங்களுக்கு அனுப்பப்படுகின்றது. எனினும் குறிப்பிட்ட அளவு இரத்தம் நுரையீரலுக்கும் சென்று வருகின்றது.
குழந்தை பிறந்ததும் அது நுரையீரல் வழியாகச் சுவாசிப்பதால் இரத்தம் நுரையீரலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் மீண்டும் இருதயத்திற்குச் சென்று அங்கிருந்து உடலின் மற்ற பாகங்களுச் செல்கின்றது. முன்னர் இருதயத்திலிருந்து நுரையீரலுக்குச் செல்லாமல் நேரடியாக மற்ற பாகங்களுக்குச் சென்ற வழி குழந்தை பிறந்ததும் அடைக்கப்படுகின்றது.
கருத்தரிக்கும் காலம்...
தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணிற்கும் வரப்பிரசாதம் ஆகும். ஒரு பெண் ஒருகுழந்தையை பெற்றெடுக்கும்போது மறு ஜென்மம் எடுக்கிறாள். இயற்கையின்கொடையான தாய்மை ஏற்படும் காலம் பற்றி சித்தர்கள் பலர் தெளிவாகக்கூறியுள்ளனர்.
புதிதாக திருமணமான பெண்கள் கருத்தரிக்கும் காலம் பற்றி அவசியம் அறிந்திருக்க வேண்டும்.
கருத்தரிக்கும் காலம் பற்றி அகத்தியர்
“ஆண்மையென்று மங்கையர்கள் பூக்குங்காலம்
அன்றுமுதல் பதினாறு நாளும் அந்தத்
தாண்மையன்றிப் பதினாறு இதழாய் நின்ற
தாமரைப் போல் மலர்ந்திருக்குஞ் சாற்றக் கேளு
காண்மையின்றித் தின மொன்று இதழ்தா னொன்று
கருவான கருக்குழிதான் இந்நாட் குள்ளே
பான்மைஎன்ற விந்தங்கே யூரும்போது
பாயுமப்பா வன்னியொடு வாயு தானே”
அதாவது, மாதவிலக்கு சுழற்சி ஆன நாள் முதற்கொண்டு 14 நாட்கள் வரை, பதினாறுஇதழ்களுடைய தாமரையைப் போல் நங்கையின் பிறப்புறுப்புக்குள் ஜனன இந்திரியம்மலர்ந்திருக்கும்.
இது பதினைந்தாம் நாள் முதல்கொண்டு ஒவ்வொரு இதழாக மூடிக்கொண்டே வரும்.
இந்நாட்களுக்குள் அதாவது 15ம் நாள் முதல் 30ம் நாள் வரை கருவை அடைக்கலமாக வைத்திருக்கும்.
கருக்குழிக்குள் விந்து சென்றால் தாமரை மலர் மூடிக்கொள்வதைப்போல் தினமும் ஒவ்வொரு இதழாய் மூடிக்கொண்டே வரும்.
திருமணமான பெண்கள் உடனே கருத்தரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டால், மாதவிலக்கான 12ம் நாள் முதல் 18ம் நாட்களுக்குள் உறவு வைத்துக்கொள்ளவேண்டும்.
நாத அணுவும், விந்து அணுவும் ஒன்று சேர்வதே கரு உருவாதலாகும்.
விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் 2-4 மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்தணு 0.5 மி.மீ நீளம் உடையது.
விந்தணு உருவாக 74 நாட்கள் ஆகும்.
விந்தணு கருப்பையில் 10 நாட்கள் வரை உயிர்வாழும். ஆனால் 24-48 மணி நேரத்தில் கருத்தரிக்கச் செய்யும் சக்தியை இழந்து விடுகிறது.
விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளது.
நாதம் (சினைமுட்டை)
சினைமுட்டையானது பெண்ணின் சினைப் பையிலிருந்து வெளியாகும். இதன் உயிர்க்காலம் ஒருநாள் அதாவது 24 மணி நேரம்.
சினை முட்டை வட்ட வடிவமுடையது. 0.2 மி.மீ அளவாகும்.
சினை முட்டை, சினைப் பாதையின் புறச் சுவர்களால் உறிஞ்சப்பட்டு சினைப்பையை அடைகிறது.
கருத்தரிக்கக்கூடிய காலம் என குறிப்பது
மாதவிலக்கு சுழற்சி நடந்த 12 முதல் 18 நாட்கள் வரை சினைமுட்டை வெளிப்படும்காலம். இந்தக் காலத்தில் உறவு கொண்டால் விந்தணு சினை முட்டையில் சேர்ந்துகரு உண்டாகும்.
சினைமுட்டை வெளிப்பட்ட நேரம் முதல், சினைப்பாதையில் நகர்ந்து வர 2 நாட்கள்ஆகும். சினைமுட்டை வெளிவந்து 24 மணி நேரத்திற்குள் விந்தணு சினைமுட்டையை அடைய வேண்டும்.
கருத்தரிக்கும் நேரத்தை அறியும் முறைகள்
1. தேதிகொண்டு அறியமுடியும்
மாதவிலக்கு சுழற்சி ஆன முதல் நாள், நாள் ஒன்று என்று கணக்கில் கொண்டு கணக்கிட வேண்டும்.
பொதுவாக மாதவிலக்கு சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும்.மாதவிலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இது மாறுபட்டு இருக்கும்.
மாத விலக்கு ஒழுங்கில்லாத மகளிருக்கு இந்த முறையில் கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடுவது கடினம். மாதவிலக்கு சுழற்சி 28-30 நாட்கள்உள்ளவர்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு 12 முதல் 16 நாட்களுக்குள் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு அதிகம்.
2. யோனிக்கசிவு அதிகரித்து காணும்
யோனிக்கசிவு (Vaginal secretions) கருமுட்டை வளர்ச்சிமுழுமையானதாக ஆனபின்பு அது விந்தணுவுடன் சேரும் காலம் யோனிக் கசிவுஅதிகம் காணப்படும். இதனை வைத்து கருத்தரிக்கும் காலத்தை கணக்கிடலாம்.
கருத்தரிக்கும் காலம் அறிந்த பின்பு உறவு கொண்டால் விந்தணு கருப்பையினுள் எளிதாக ஊர்ந்து சென்று சினை முட்டையுடன் இணைய யோனிக்கசிவு உதவி செய்கிறது.
3. காமக்கிளர்ச்சியின்போது Progesterone என்னும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் உடல் வெப்பம் 0.30 அளவு உயர்கிறது. இதை வைத்து கருவுற ஏற்ற காலத்தை அறிந்துகொள்ளலாம்.
12 முதல் 16ம் நாளுக்குள் கருப்பையின் உட்சுவர்கள், கனத்து, தடித்து கருவை ஏற்கக்கூடிய நிலையில் இருக்கும். இக்காலங்களின் நோயின் தாக்குதல்இல்லாமலும், மனச்சிக்கல் இல்லாமலும் உறவு கொண்டால் கரு உருவாகும்வாய்ப்புகள் கூடும்.
சுருக்கமாக:
விந்தணுவும் சினைமுட்டையும் ஒன்றுடன் ஒன்று சேருதலை கருக்கட்டல் என அழைக்கப்படுகிறது.
ஒரு ஆணுடைய விந்தணு ஒவ்வொருமுறை உறவு கொள்ளும்போதும் அவனிடமிருந்து 2-4மிலி விந்து நீர் வெளிப்படுகிறது. இந்த விந்து நீரில் 100-300 மில்லியன் விந்தணுக்கள் உள்ளன. ஒவ்வொரு விந்தணுவும் 0.5 மி.மீ நீளம் உடையது.
ஆணுடைய விந்து நீரிலிருந்து வெளிப்படும் விந்தணு பெண்ணுடைய சினைப் பையிலிருந்து வெளியாகும் சினை முட்டையுடன் கூடுகிறது. ஆணுடைய விந்தணு எவ்வாறு பெண்ணுடைய சினைமுட்டையை தேடிச் செல்லுகின்றது.
ஆணுடைய விந்தணுவிலிருந்து குரோமோசோம்களும் பெண்ணின் சினைமுட்டையிலிருந்து குரோமோசோம்களும் ஒன்றாக இணைந்து செல் அமைப்பாக உருவாகிறது. இந்த செல் அமைப்பு உப்பு போன்று காணப்படுகிறது. இதுதான் FERTILIZED EGG அதாவது கருக்கட்டப்பட்ட முட்டையாகும்.
கருக்கட்டப்பட்ட முட்டை கர்பப்பை குழாய் என அழைக்கப்படும் பலோப்பியன் குளாய் FALLOPIAN TUBE ஊடாக கருப்பையை சென்றடைகிறது. பின்னர் கர்ப்பப்பை படிப்படியாக வளர
ஒரு பெண் கர்ப்பம்தரித்த 21 அல்லது 24-ம் நாளிலிருந்து அந்த கருவுக்குள் இதயத்துடிப்பு நிகழ்கிறது. இதன்மூலமாக அந்த கருவுக்குள் இரத்த ஒட்ட நிகழ்ச்சி நடைபெறுகிறது
கர்பம்தரித்த 28ம் நாள் முதல் அந்த கருவுக்குள் கை, கால்கள், காதுகள் மற்றும் முதுகுத்தண்டுவடம் ஆகியன வளர ஆரம்பிக்கின்றன.
கர்ப்பம் தரித்த 30ம் நாள் கருவுக்குள் மூளை வளர ஆரம்பிக்கின்றன
கர்ப்பம் தரித்த 35ம் நாள் விரல்கள் வளர ஆரம்பிக்கின்றன
கர்ப்பம் தரித்த 40ம் நாள் மூளை செயல்பட ஆரம்பிக்கிறது
கருவுற்ற 6-வது வாரம் முதல் கருவின் மூளை கருவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருகிறது.
கருவுற்ற 7-வது வாரம் முதல் பற்களின் தாடைகள் வளர ஆரம்பிக்கின்றன. மேலும் பால்பற்கள் முளைப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
கருவுற்ற 8-வது வாரத்தில் கரு மனித உருவத்தில் தென்படும். மேலும் அனைத்து அங்கங்களும் உறுப்புக்களும் கண்டறியப்படுகிறது
கருவுற்ற 9-வது வாரத்தில் குழந்தையின் கை விரல்களில் ரேகைகள் படர ஆரம்பிக்கிறது. பின்னர் குழந்தை தன் விரல்களை அசைக்க முற்படுகிறது.
கருவுற்ற 10-வது வாரத்தில் குழந்தை கர்ப்பப் பையில் உள்ள அமிலங்களை பருக முற்படுகிறது.
கருவுற்ற 11-வது வாரத்தில் குழந்தை உறங்க கற்றுக் கொள்கிறது. பிறகு விழிக்க கற்றுக்கொள்கிறது. இறுதியாக சிறுநீர் கூட கழிகக் ஆரம்பிக்கிறது.
அதே சமயம் சுவாச உறுப்புகளை இயக்குவதற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் இந்த குழந்தை பயிற்சி எடுக்கிறது!
கருவுற்ற 13-வது வாரத்தில் குழந்தையின் மர்மஸ்தான உறுப்புகள் தெரிய ஆரம்பிக்கின்றன. மேலும் நாக்கில் ருசியை அறியக்கூடிய நரம்புகள் வேலை செய்கின்றன.
கருவுற்ற 14-வது வாரத்தில் குழந்தையின் செவிப்புலன்கள் வேலை செய்ய ஆரம்பிக்கின்றது.
கருவுற்ற 17-வது வாரத்தில் கண்களில் அசைவுகள் தென்படுகின்றன. குழந்தை கனவு காண முற்படுவதாக அறிவியல் வல்லுனர்கள் தங்கள் ஆய்வில் கூறுகிறார்கள்.
கருவுற்ற 20-வது வாரத்தில் குழந்தை வெளிச்சத்தை உணர ஆரம்பிக்கிறது. தாயின் வயிற்றினுள் ஏற்படக்கூடிய சப்தங்களை காது கொடுத்து கேட்கிறது. என அறிவியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
கருவுற்ற 5-வது மாதத்தில் குழந்தையின் அசைவுகள் நன்றாக வெளிப்படுகின்றது.
கருவுற்ற 6-வது மாதத்தில் வியர்வை சுரப்பிகள் முளைக்க ஆரம்பிக்கின்றன. மேலும் உடலில் முடிகள் முளைப் பதற்கான செயல்பாடுகள் நடைபெறுகின்றன
கருவுற்ற 7-வது மாதத்தில் விழிகள் திறந்து மூடுகிறது, குழந்தை சுற்றுமுற்றும் பார்க்கிறது, சுவையை அறிகிறது, தாயின் கர்ப்பப் பையை மெதுவாக தொட்டு உணருகிறது.
கருவுற்ற 8-வது மாதத்தில் குழந்தையின் மிருதுவான தோல் சருமங்கள் சற்று மேம்பட ஆரம்பிக்கிறது.