...

"வாழ்க வளமுடன்"

13 மார்ச், 2010

சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள்

குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது என்பது பல தாய்மார்களுக்கும் போராட்டமான ஒரு விஷயமே. சில குழந்தைகள் மிகக் குறைவாக சாப்பிடும். சில குழந்தைகளுக்கு காய்கறிகளைப் பார்த்தாலே அலர்ஜீ. இன்னும் சில குழந்தைகள் நொறுக்குத் தீனிகளைத் தின்பதில்தான் ஆர்வமாக இருக்கும். குழந்தைகளை சாப்பிட வைப்பதில் உங்களுக்கும் பிரச்சினை இருக்கிறதா...?

*

இதோ உங்களுக்காக சில ஆலோசனைகள்....


1. உங்கள் குழந்தை ஒல்லியாக இருந்தால் அதற்காகக் கவலைப்படாதீர்கள். உடல் பருமனுக்கும், ஆரோக்கியத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை.

*

2. உங்கள் குழந்தை சராசரிக்கும் குறைவான எடை உடையதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் முதலில் உங்களது சந்தேகம் உண்மை தானா என மருத்துவரிடம் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதற்கேற்ப சிகிச்சை கொடுங்கள்.


3. குழந்தைக்குக் கொடுக்கப்படும் உணவு பார்ப்பதற்கு அழகாகவும், அளவில் குறைவானதாகவும் இருக்க வேண்டும். பார்த்தவுடன் அருவருப்பையோ, பிரமிப்பையோ தரும் உணவுகள் குழந்தைகளுக்குப் பெரும்பாலும் ஒத்துக் கொள்வதில்லை. பெரிய தட்டில் கொஞ்சமாக உணவைக் கொடுப்பது நல்லது.
*
4. காய்கறிகளை வெறுக்கும் குழந்தைகளுக்கு அதற்கு பதில் பழங் களை, பழரசங்களைக் கொடுத்துப் பழக்குங்கள்.5. குழந்தைகளுக்கு ஆரம்பத்தி லிருந்தே பச்சை காய்கறிகள் தின்னும் பழக்கத்தைக் கற்றுக் கொடுங்கள். அப்படிப் பழக்கிவிட்டால் அவர்கள் சாப்பாட்டுடன் காய்கறிகள் சேர்த்து சாப்பிடாவிட்டாலும் பரவாயில்லை.
*
6. பிஸ்கட்டுகளையும், நொறுக்குத் தீனி களையும் மட்டுமே உங்கள் குழந்தைகள் சாப்பிட்டால் அதற்காக அவர்களைத் திட்டாதீர்கள். இடையிடையே சத்தான ஆகாரங்களையும் கட்டாயப்படுத்திக் கொடுத்து உண்ணப் பழக்குங்கள். நான் கைந்து நாட்களில் பழகிவிடும்.
*
7. சாப்பாட்டை விட நொறுக்குத் தீனிகளில் அதிக ஆர்வம் காட்டும் குழந்தைகளுக்கு பழம், தயிர், பாலாடைக்கட்டி போன்ற சத்தான ஆகாரங்களை அடிக்கடி கொடுக்கலாம்.
*
8. காய்கறிகள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு, அவற்றுக்குப் பதிலாக காய்கறி வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கலாம்.
*

9. மீந்து போகும் காய்கறிகளை தோசை, வடை மாவுடன் கலந்து செய்து கொடுத்து விடுங்கள். புதுவித சுவையுடன் இருக்கும். காய்கறி களும் வீணாகாது.
*
10. சாப்பிட மறுக்கும் குழந்தைகளை ஒரு போதும் தண்டிக் காதீர்கள். வற்புறுத்தி உங்கள் குழந்தையை சாப்பிட வைக்க நினைப்பது தவறு. அது அவர்களுக்கு சாப்பாட்டின் மீதான ஆசையையே நீக்கி விடும்.
*
11. குழந்தைகளுக்கு தினமும் ஆறு டம்ளர் தண்ணீராவது அவசியம். இது வெறும் தண்ணீராகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. பால், சூப், ஜூஸ் என எந்த திரவ வடிவிலும் இருக்கலாம்.


12. சர்க்கரை அல்லது இனிப்பு கலந்த தண்ணீரையும், பாட்டில் குளிர் பானங் களையும் உங்கள் குழந்தைகளுக்குக் கொடுப்பதைத் தவிர்த்து விடுங்கள். இயற்கையான இனிப்புடன் கூடிய பழரசங்கள், பார்லி தண்ணீர் போன்ற வற்றைக் கொடுக்கலாம்.
*
13. குழந்தைகளை தினமும் ஒரே நேரத்திற்கு சாப்பிடப் பழக்குங்கள்.
*
14. குழந்தைகளைத் தனியே சாப்பிட வைப் பதை விட மற்ற குழந்தைகளுடன் சேர்த்து சாப்பிடச் சொல்லலாம். அப்போது வழக்கமாக சாப்பிடுவதை விடக் கொஞ்சமாவது அதிகம் சாப்பிடுவதைப் பார்ப்பீர்கள்.
***
நன்றி ஈகரை.

டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்க?

டீன் ஏஜ் பெண்ணின் அம்மாவா நீங்கள்? உங்களுக்கும் உங்கள் பெண்ணுக்கும் இடையேயான உறவு எப்படி? அந்த காலத்து அம்மா போல இன்றும் இருக்கிறீர்களா? காலத்திற்கு ஏற்ப உங்களை கொஞ்சம் மாத்திக் கோங்க, தப்பில்லை. உங்களுக்கும், உங்க பெண்ணுக்கும் உள்ள உறவு மேம்பட, சில "டிப்ஸ்'.


1. மனம் விட்டு பேசுங்கள்:


*


உங்கள் பெண்ணுடன் இடைவெளி விட்டு பழகாதீர்கள். அப்படியிருந் தால், அவர்களை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள முடியாது. எந்த விஷயமாக இருந்தாலும், மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, உங்கள் மகள் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கேளுங்கள்.இதனால், உங்களுக்கு பொழுது போவது மட்டுமின்றி, அவர்கள் வெளியிடங்களில் செயல்படும் விதங்களையும் அறிந்து கொள்ளலாம்.


***


2. நல்ல நண்பராக இருங்கள்:


*


நீங்கள் தாயாக மட்டும் இல்லாமல், நண்பராகவும் இருக்க முயலுங்கள். தாயிடம் கூற முடியாத சில விஷயங்களை கூட, நண்பர்களிடம் சொல்வர். நீங்களே அந்த நண்பராகவும் இருக்கும் போது, உங்கள் பெண்ணை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியும்.


***


3. உடல் தூய்மை பற்றி சொல்லுங்கள்:


*


வயது வந்த பெண் எப்படி உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது குறித்து சொல்லிக் கொடுங்கள். குறிப்பாக, மாதவிடாய் காலங்களில் எப்படி சுத்தமாக இருக்க வேண்டும் என்பதையும், அதன் அவசியத்தையும் எடுத்து கூறுங்கள்.


***


4. பெண்ணின் விருப்பமறிந்து செயல்படுங்கள்:


*


ஷாப்பிங் போறீங்களா? நீங்கள் மட்டும் கடைக்கு போய், கையில் கிடைத்ததை வாங்கி வந்து உங்க மகளிடம் கொடுக்காதீர்கள். உடை, அணிகலன், கைப்பை என, தினசரி புதுப்புது மாடல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் வாங்கி வருவது உங்கள் பெண்ணுக்கு பிடிக்காமல் போகலாம். இதை தவிர்க்க, உங்கள் பெண்ணையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். அவளது விருப்பமறிந்து வாங்கிக் கொடுக்கலாம்.


***


5. நண்பர்களை அறிமுகப்படுத்தும் போது:


*


பள்ளி முதல் கல்லூரி வரை பெரும்பாலும், இரு பாலர் நிறுவனங்களாக தான் உள்ளன. டியூஷன் செல்லும் இடத்திலும் ஆண் பிள்ளைகள் இருக்கக் கூடும். எனவே, உங்கள் பெண், தன்னுடன் படித்த, அல்லது படிக்கும் ஆண் நண்பர்களை அறிமுகப்படுத்தும் போதும், அவர்களிடம் பேசும் போதும் கோபப்படாதீர்கள். மாறாக, இந்த காலகட்டத்தை நினைவில் கொண்டு, அவர்கள் ஆண் நண்பர்களுடன் பழகும் எல்லை எதுவரை இருக்கலாம் என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.


***


6. நண்பர்களை தெரிந்து கொள்ளுங்கள்:


*


நண்பர்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், வாழ்க் கையே சீரழிந்து விடும் என்பதை உங்கள் பெண்ணுக்கு உணர்த் துங்கள். உங்கள் பெண்ணின் நண்பர்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். உங்கள் பெண்ணின் பிறந்த நாள், தீபாவளி, போன்ற விசேஷ தினங்களில் அவர்களை வீட்டிற்கு அழையுங்கள். இதன் மூலம், உங்கள் பெண், சரியான நபர்களுடன் தான் சேர்கிறாளா என்பதும் தெரியவரும்.

***நன்றி ஈகரை தமிழ் களஞ்சியம்.***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "