...

"வாழ்க வளமுடன்"

30 நவம்பர், 2010

கட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும் !

பொழுபோக்குகள் பல பல. அதில் ஒன்று தூங்குவது. நிறைய பேர் கேப் கிடைச்சா தூங்கி விடுவர். பள்ளி நேரத்தில் தூக்கம் தூக்கம், தூங்கி கொண்டே இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும் என்று பல பேர் ஆசைப்படுவர்.



தூக்கம் வரவில்லையே என புலம்புகிறவர்கள் ஒருபுறம் இருக்க, ஒரு நாளைக்கு 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். நீண்ட நேரம் தூங்குவதால் நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் வருவதுடன் நம் வாழ்நாளில் 17 சதவீதம் குறையும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பொதுவாக சராசரி மனிதன் ஒரு நாளைக்கு 6 முதல் 8 மணி நேரம் நன்றாக தூங்கினாலே போதும்.

*

குழந்தைகளுக்கு இது பொருந்தாது. பிறந்த குழந்தைகள் வளர வளர தூங்கும் நேரம் குறைந்து கொண்டே போகும். பிறந்த குழந்தைகளுக்கு அதிக நேர தூக்கம் தேவை. அவைகள் தூங்கி கொண்டே இருக்கும். ஆனால், குழந்தைகளை போல தூங்கும் பழக்கம், பள்ளி செல்லும் மாணவர்களிடமும், சில பொரியவர்களிடமும் உள்ளது.

*
மனிதர்களின் தூக்கம் குறித்து ஆய்வு செய்த வல்லுநர்கள், 8 மணி நேரத்துக்கு மேல் தூங்குவதால் மனிதனின் சராசரி வாழ்நாள் 17 சதவீதம் குறையும் என்று தெரிவித்துள்ளனர்.

*

நீண்ட நேரம் தூங்குவதால் சீரான உடல் இயக்கங்கள் தடைபடும். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஹார்மோன் கோளாறுகள் மற்றும் இதய நோய் உள்ளிட்ட தீராத கோளாறுகள் வர அதிக வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில், நரம்பு மண்டல பாதிப்பு (தைராய்டு பிரச்னை) ஏற்படலாம் என மும்பை மருத்துவர் பிரகாஷ் ஒல்லா கூறுகிறார்.

*

கட்டுப்பாடற்ற தூக்கம் உடல் பருமனாவதற்கு வழிவகுக்கும். மேலும் உடல் சோர்வு ஏற்படுவதுடன் கோபம் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரும். அதிக நேரம் தூங்குபவர்களில் 15 சதவிதம் பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர் என மனநல மருத்துவர் சுனிதா துபே தெரிவித்துள்ளார்.

*

குறைவான நேரம் தூங்கினாலும் ஆழ்ந்த தூக்கம் மிக அவசியம். தினமும் உடற்பயிற்சி, யோகா அல்லது நடைபயிற்சி மேற்கொள்வதன் மூலம் இது சாத்தியமாகும். அதிக தூக்கத்தால் உணவு முறைகள் மாறி அதனால், பல்வேறு விளைவுகள் ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

*

நன்றாக தூக்கம் வர தூங்க செல்வதற்கு 3 மணி நேரம் முன்பு, இரவு உணவு சாப்பிடுங்கள். டின்னருக்கு முன் பழம் அல்லது பால் குடிக்கலாம். தினமும் உடற்பயிற்சி அவசியம். இதனால் நன்றாக தூக்கம் வருவதுடன் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். வெளியிலிருந்து வீட்டிற்கு வந்து, சில நிமிடங்களுக்கு பின் குளிப்பதன் மூலம் நன்றாக தூக்கம் வரும்.

*

படுக்கைக்கு செல்லும் முன் மேலோட்டமாக புத்தகம் படித்தால், மெல்லிசை பாடல்கேட்பதன் மூலம் ஆழ்ந்து தூங்க முடியும். காலையில் 6 மணிக்கு நடைபயிற்சி மேற்கொண்டால் நாள் முழுவதும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.


***
நன்றி: தினமலர்.
***


"வாழ்க வளமுடன்"

காற்றின் சுகாதார சுட்டி - வீடியோ

வீட்டைவிட்டு வெளியே செல்ல முன்னர் காற்றின் சுகாதார சுட்டியை அறிஞ்சு கொள்ளுங்கள்








***
நன்றி அருவி,
***


"வாழ்க வளமுடன்"

நீங்களும் அழகி ஆகலாம் :)



முடி: முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெய்யை தலைக்குத் தடவி ஒருமணி நேரம் கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக வளரும்.

*

கண்: கண்ணைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க பெள்ளரிக்காய் யூசை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்..

*

உதடு: உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர்,பால் இம்மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரினால் கழுவி விடவும்.

*

முகம்: உருளைக்கிழங்கை துவைத்துச் சாறுபிழிந்து சமமாகத் தேன் கலந்து முகத்தில் பூசிவர முகம் அழகு பெறும்.

*

முகச் சுருக்கம் நீங்க: முட்டையின் வெண்கருவைத் தடவுங்கள் சொறிது நேரம் கழித்து முகம் கழுவ முகத்தில் உள்ள சுருக்கம் மறையும்.

*

கருமை நீங்க: கருமையடைந்த முகத்திற்கு, பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசிவர முகம் மலரும்.

*

முகத்தின் எண்ணெப் பசை நீங்க: முட்டையின் வெண்கரு 7 ஸ்பூன், மாதுளை ஜூஸ் அரை ஸ்பூண், தேன் மூன்றையும் கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் எண்ணெய் பசை நீங்கிவிடும்.

*

கரும்புள்ளி மறைய: முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளி மறைய ஜாதிக்காயை அரைத்து பூசவும்.

*

முகப்பரு நீங்க: பூண்டு அல்லது கருந் துளசியை அரைத்துப் போட நாளடைவில் முகப் பருக்கள் மறையும்.

*

முக வறட்சி நீங்க: பச்சை கொத்தமல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து அலம்ப வேண்டும்.

*

வாய் நாற்றம் நீங்க: புதினா கீரையைக் காய வைது பொடிசெய்து பல்துலக்குவதால் வாய் நாற்றம் நீங்குவதுடன் பற்களும் பளிச்சென்று இருக்கும்.

*

வெண்மையான பற்கள்: இரவு நேரத்தில் பச்சை கெரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன் வெண்மை பெறும்.

*

உதடு: உதட்டில் தேங்காய் எண்ணை தடவி வந்தால் மினுமினுப்பாக இருக்கும்.

*

கை: பாத்திரம் தேய்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேகவைத்து நசித்து கைகளில் தேய்த்து வந்தால் கை மிருதுவாக இருக்கும்.

*

நகம்: நகங்களில் சிதைவு ஏற்படாமலும், வெண்மையாகவும் இருக்க சூரியகாந்தி எண்ணையை கை, கால் நகங்களுக்கு பூசி விடவும்.

*

மார்பகங்களைப் பாதுகாக்க: வெள்ளைக் குண்டுமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்றாக் அரைத்து மார்பகங்களில் மீது பூசிவர தளர்ந்த மார்பகங்கள் சரியான வடிவம் பெறும்.

*

உடல் பருமன் குறைய: பப்பாளிக் காயை பொரியலோ, குழம்பு வைத்து வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

*

பாதம்: பாதத்தில் உள்ள (பித்த வெடிப்பு) வெடிப்பு நீங்க ஒரு ஸ்பூன் விளக்கெண்ணை, ஒரு ஸ்பூன் பன்னீர், இரண்டு ஸ்பூன் எலுமிச்சம் சாறு மூன்றையும் கலந்து வெந்நீரில் கால்களை 10 நிமிடங்கள் வைத்து ஊறிய பின் பூசிவர வெடிப்பு நீங்கும்.

*

வியர்வை நாற்ற அகல: ஆவரசம்பூவை நிழலில் உலர்த்தி சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குழித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

*

கூந்தல் அடர்த்தியாக வளர: செம்வரத்தம் இலையை அரைத்து தலையில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் தலையை சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல் அடர்த்தியாக வளரும்.

*

கூந்தல் நல்ல கருமையாக: கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.

*

முடி வளர: கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய் ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காச்சை கூந்தலில் தடவினால் முடி நன்றாக வளரும்.

*

பேன் தொல்லை நீங்க: வசம்பை தண்ணீர் விட்டு அரைத்துத் தலையில் நன்றாகத் தேய்த்து ஊற விட வேண்டும். பிறகு சாதாரண தண்ணீரில் தலையை நன்றாக அலசிவிடவும்.

*

பொடுகு நீங்க: வால் மிளகை ஊற வைத்து பால்விட்டு அரைத்து தலையில் தடவி ஊறிய பின் குளிக்கலாம்.

*

தலைமுடி பளபளப்பாக: தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் (சக்கை) தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

*

முகத்தில் சுருக்கம் விழாமல் பாதுகாக்க: கசகசாவை ஊற வைத்து அரைத்து முகத்தில் தடவவும். அதன் பின் காய்ந்ததும் கழுவவும்.

*

முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்ற: தோடம்பழச் சாற்றை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாக பொலிவுடன் தோன்றும்

*

முகத்தில் வியற்குரு, கொப்பளங்கள் மறைய: பப்பாளிப் பழச்சாற்றை முகத்தில் தடவினால், வியற்குரு, கொப்பளங்கள் மறைந்து முகம் பளபளக்கும்

*

பல்லில் இருக்கும் மஞ்சள் நிறத்தைப் போக்க: எலுமிச்சம் பழச்சாறும் உப்பும் கலந்த கலவையால் பல் துலக்குங்கள்.

*

இமைமயிர் வளரவும் செழிப்பாக தோற்றமளிக்கவும்: தினமும் படுக்கைக்கு போகுமுன் ஆமணக்கம் எண்ணையை பூசி தேய்த்து விடுங்கள்.

*

காது அல்லது மூக்கு துளைகளில் புண் மாற: தோடு, மூக்குத்தி ஆகியவற்றால் காது அல்லது மூக்கு துளைகளில் புண் ஏற்பட்டால்; பெருங்காயத்தை தண்ணீரில் கரைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு புண்களைக் கழுவினால், புண் விரைவில் குணமாகும்.

*

கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க: முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.

*

தோல் சொர சொரப்பு நீங்க: சிறிதளவு வெண்ணெயுடன் கொஞ்சம் தேன் கலந்து வாரம் ஒரு முறை உடல் முழுவதும் பூசினால் தோல் சொர சொரப்பு தானாகப் போகும்.

*

தோல் சுருக்கம் நீங்க: தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

*

நகம் வெட்டும்போது: நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.

*

எடை குறைய: பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

*

தேவையிலாத முடிகளை நீக்க: முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

*

முகம் பளபளப்பாக: தோடம்பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் கம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

*

தோல் பளபளப்பாக: தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

*

முகம் பளபளப்பாக: முகம் பளபளப்பாக முட்டை வெள்ளை கரு கொஞ்சம் எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் சென்ற பின் கழுவினால் முகம் இயற்கை பளபளப்புடன் இருக்கும்

*

சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற: கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

*

சருமம் நிறம் மாற: கேரட்ஆரஞ்சு சாறுடன் சிறிது பால் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் சருமத்தின் நிறம் மாறும்

*

தலை முடி செழித்து வளர: வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்

*

முகம் எப்போதும் இளமையுடன் இருக்க: கனிந்த பப்பாளி பழத்தை தோலுடன் அரைத்து முகத்தில் பூசிவந்தால் சுருக்கமும் தொய்வும் இன்றி முகம் எப்போதும் இளமையுடன் இருக்கும்

*

சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறைய: ஆப்பிள் பழத்தை சின்னச் சின்ன துண்டுகளாக வெட்டி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்

*

கண்கள் பிரகாசமாக இருக்க: இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்

*

கருவளையம் நீங்க: ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்

*

கருமை நிறம் மாற‌: பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.

*

முகம் மிருதுவாக‌: கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

*

வியர்வை நாற்றம் போக: வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

*

இன்னுமொரு குறிப்பு : 2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

*

உங்கள் முகம் வறண்டு பொலிவில்லாமல் இருந்தால்: தினமும் குளிக்கும் முன்பு பால் ஏடை நன்றாக முகம் முழுவதும் தடவி 10நிமிடம் வைத்திருந்து கழுவி விடவும். உங்கள் முகம் நார்மலாகிவிடும்.


செலவே இல்லாமல் உங்கள் முகமும் பளிச் என ஆகிவிடும். கல் உப்பு ஆலிவ் ஆயில் இரண்டையும் கலந்து உடம்பில் ஸ்கிரப் செய்யலாம்


***
thanks: இணையம்
***



"வாழ்க வளமுடன்"

கல்லீரல் புத்துருவாக்கம்



கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில், கல்லீரலை கொடையாக வழங்கக்கூடியவர்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இந்த சிக்கலைத் தீர்ப்பதற்கான கண்டுபிடிப்பு ஒன்று அண்மையில் நிகழ்த்தப்பட்டுள்ளது.

*

Wake Forest University Baptist Medical Center அறிவியலாளர்கள் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்கள். ஆய்வுக்கூட சூழலில் ஒரு கல்லீரல் புத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு தற்போது வெற்றிகரமாகக் கருதப்பட்டாலும் நடைமுறை செயல்பாட்டுக்கு வர இன்னும் பல படிநிலைகளை கடக்க வேண்டியுள்ளது.

*

இந்த ஆய்வில், விலங்குகளின் கல்லீரலில் உள்ள அனைத்து செல்களும் மென்மையான டிட்டர்ஜண்ட் உதவியால் அகற்றப்பட்டன. ஆனால் செல்களை தாங்கிப்பிடிக்கும் அடிப்படைக் கட்டமைப்பு மட்டும் அப்படியே இருக்குமாறு செய்யப்பட்டது.

*

இந்த நிகழ்வு decellularization என்றழைக்கப்படுகிறது. Decellularization காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்தில் முதிர்ச்சியடையாத நிலையில் உள்ள மனிதசெல்கள் (progenitors) நிரப்பப்பட்டன. இரத்தக்குழாய்களை உருவாக்கும் endothelial செல்களும் இந்த வெற்றிடங்களில் நிரப்பப்பட்டன. இந்த அமைப்பு முழுவதும் ஒரு உயிரி உலையினுள் (bioreactor) வைக்கப்பட்டது. உயிரி உலைகள் உறுப்பு முழுமைக்கும் ஆக்சிஜனையும் உயிரூட்டப் பொருட்களையும் வழங்கவல்லவை.

*

ஒரு வாரம் கழித்து உருவான மனித திசுக்கள் ஆராயப்பட்டபோது அவற்றில் மனித கல்லீரலின் செயல்பாடு காணப்பட்டது. ஆய்வுக்கூடத்தில் இதற்கு முன்பாக விலங்குகளின் கல்லீரல்கள் உருவாக்கப்பட்ட போதிலும் மனித கல்லீரலை உருவாக்கும் முயற்சியின் தொடக்கநிலை வெற்றி இது.

*

உயிரி தொழில்நுட்பத்தால் விளைந்த கல்லீரலைக்கொண்டு புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் மருந்துகளின் செயல்பாடுகளைக்கூட ஆராய முடியும். ஆய்வுக்கூடத்தில் சிறுநீரகம், பித்தப்பை போன்ற உறுப்புகளை புத்துருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளை அறிவதற்கு இந்த ஆய்வு உதவக்கூடும் என்கிறார்கள் அறிவியலாளர்கள்.


***
thanks: மு.குருமூர்த்தி
***


"வாழ்க வளமுடன்"

யோகாசனம் பற்றிய சந்தேக விளக்கமும் - கேள்வி-பதிலும்


1. யோகாசனம் எப்போது செய்ய வேண்டும்? எப்போது செய்யக்கூடாது?

யோகாசனம் அதிகாலை சூ¡¢யன் உதயம் ஆகும்போது செய்தால் நல்லது. சூ¡¢யன் அதிக உக்கிரமாக இருக்கும்போது யோகாசனம் செய்தால் பலன் கிடைக்காது. அதிகாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள்ளும் மாலை 5.30 மணிக்குமேல் 7 மணிக்குள்ளும் செய்தால் நல்லது. யோகாசனம் செய்யும்போது கண்டிப்பாக வியர்வை வரக்கூடாது.

***

2. ஷிப்டு முறையில் வேலை செய்யும் தொழிலாளர்கள் எப்போது யோகாசனம் செய்ய வேண்டும்?

ஷிப்டு முறையில் வேலை செய்பவர்கள் தாங்கள் வேலை செய்து விட்டு வீடு வந்த பின் வீட்டில் தூங்கி எழுந்த பின் மற்ற கடன்களை முடித்து, குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம்.

***

3. சாப்பிட்ட பின் எவ்வளவு நேரம் சென்றபின் யோகாசனம் செய்யலாம்?

சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக 5 மணி நேரமாவது சென்ற பிறகுதான் யோகாசனப் செய்யவேண்டும். அதிகாலை யோகாசனம் செய்வது நல்லது. புதிதாகப் பழகுபவர்கள் மாலையில் செய்யலாம். காலையில் செய்யும்போது காலைக்கடன்களை முடித்துவிட்டு அதாவது மலம் வெளியேறிய பின் செய்வது நல்லது.

***

4. மலம் வெளியேறாமல் இருந்தால் யோகாசனம் செய்யலாமா?

காலையில் எழுந்து 2 டம்ளர் பச்சைத் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்பழக்கத்தை மேற்கொண்டால் காலையில் கண்டிப்பாக மலம் வெளியேறிவிடும். அப்படியும் வெளியேறாவிடில் யோகாசனம் செய்யலாம் ஆரம்பித்த சில விநாடிகளில் மலம் வெளியேற உணர்ச்சி வரும். அப்போது மலம் வெளியேறிய பின் மீண்டும் வந்து யோகாசனம் செய்யலாம்.

***

5. யோகாசனம் வெறும் தரையில் செய்யலாமா?

வெறும் தரையில் யோகாசனம் செய்யக்கூடாது. அழுத்தாத வி¡¢ப்பின் மேல் யோகாசனம் செய்யவேண்டும். சமூக்காளம் அல்லது சற்று அழுத்தமான போர்வையை வி¡¢த்து யோகாசனம் செய்யலாம்.

***

6. வெந்நீ¡¢ல் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாமா?

யோகாசனம் செய்பவர்கள் எந்தக் கடும் குளிராக இருந்தாலும் பச்சைத் தண்ணீ¡¢ல் குளித்த பின்தான் யோகாசனம் செய்யவேண்டும். வெந்நீ¡¢ல் குளிப்பதால் வெகு விரைவில் நரம்புத் தளர்ச்சி மற்றும் சோம்பேறித்தனம் வந்துவிடும். மிகவும் பலவீனமானவர்கள் மிகக் குளிர்ப்பிரதேசத்தில் இருப்பவர்கள் இலேசான சூட்டில் குளித்துவிட்டு யோகாசனம் செய்யலாம். ஆனால் இப்பழக்கத்தை நிரந்தரமாக வைத்துக்கொள்ளாமல் காலக்கிரமத்தில் பச்சைத் தண்ணீரையே குளிப்பதற்கு உபயோகிக்க வேண்டும். ஆஸ்துமா, நீ¡¢ழிவு நோய் உள்ளவர்கள நோய் கடுமையாக இருந்தாலும் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் பச்சைத் தண்ணீரையே உபயோகிக்க வேண்டும். ஆசனம் செய்யச் செய்ய நோயின் கடுமை தணிந்து விடும்.

***

7. கடுமையாக உழைப்பவர்களுக்கு யோகாசனம் முக்கியமா?

கடுமையாக உழைத்தாலும் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். குறிப்பாக விபா£தகரணி, சர்வாங்காசனம், அர்த்தசிரசாசனம், சிரசாசனம் ஆகியவற்றோடு மாற்று ஆசனங்கள் செய்து நாடி சுத்தியும் செய்தால் நல்லது.

***

8. எப்போதும் பிரயாணத்தில் இருப்பவர்கள் எப்படி யோகாசனம் செய்வது?

இவர்கள் கண்டிப்பாக யோகாசனம் செய்யவேண்டும். இவர்கள் தங்கும் விடுதியிலாவது தூங்கி எழுந்தபின் குளித்துவிட்டு குறிப்பாக மேற்சொன்ன ஆசனங்களைச் செய்தால் போதுமானது.


***

9. குறைந்தது எவ்வளவு நேரம் ஆசனங்களைச் செய்ய வேண்டும்?

யோகாசன பிராணாயாமங்களை அதிக நேரம் செய்யவேண்டும் என்ற நியதி கிடையாது. தினமும் எந்தச் சூழ்நிலையிலும் 10 நிமிடம் செய்தால் போதுமானது. சில நாட்கள் மணிக்கணக்காக செய்து பின் சில நாட்கள் விட்டு விட்டு பின் தொடர்வது நல்லதல்ல. இதனால் பலன் அதிகம் கிடைக்காது. தினமும் விடா முயற்சியுடன் சில நிமிடங்களாவது ஆசன பிராணாயாமங்களைச் செய்வதால் அதிக பலன் கிடைக்கும்.

***


10. நோய்வாய்ப்பட்டவர்கள் எவ்வளவு நேரம் செய்யவேண்டும்?

நேரம் உள்ளவர்கள் ஆரம்பத்தில் காலை மாலை ஒரு மணிநேரம் கண்டிப்பாக செய்யவேண்டும். நோய் தணிந்த பின் 5 முதல் 10 நிமிடங்கள் செய்தால் போதுமானது.


***

11. யோகாசனம் செய்பவர்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமா?

நோய் உள்ளவர்கள் நோய் தீரும்வரை யோகாசன பிராணாயாமத்துடன் கடுமையாக உணவுக்கட்டுப்பாட்டில் இருந்தால் நல்ல பலன் விரைவில் கிடைக்கும். சாதாரணமாக ஆரோக்கியமாக வாழவேண்டும் என்று எண்ணுபவர்கள் கடுமையாக உணவுப் பத்தியம் இருக்க வேண்டியதில்லை. நடைமுறையில் உப்பு, புளிப்பு, காரம் ஆகியவற்றை மிதமாக வைத்துக் கொண்டால் நல்லது. உடல் வளையும் தன்மை ஏற்படும்.

***

12. யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு உண்டா?

யோகாசனம் செய்வதற்கு வயது வரம்பு கிடையாது. எந்த வயதிலும் யோகாசனம் செய்யலாம். வயது அதிகமானவர்கள் நேரத்தை மிகவும் குறைத்து யோகாசனம் செய்யவேண்டும்.

***

13. எப்போது யோகாசனம் செய்யக்கூடாது?

உடல் களைப்பாக இருக்கும்போது நாடிசுத்தி செய்துவிட்டு யோகாசனம் செய்யலாம். உடல் உறவு கொண்ட மறுநாள், பெண்களாக இருந்தால் மாதவிடாய் காலங்களில் மற்றும் கர்ப்பமான 3 மாதத்திற்குப் பின் யோகாசனம் செய்யக்கூடாது. சாப்பிட்டவுடன் யோகாசனம் செய்யக்கூடாது. 5 மணி நேரம் சென்ற பின் தான் யோகாசனம் செய்ய வேண்டும். காய்ச்சல், அதிக மண்டைபிடி இந்த வேளைகளில் யோகாசன ஆசி¡¢யர்களிடம் ஆலோசனை பெற்று நேரடியாகப் பழகினால் விரைவில் நோய் குணமாகிவிடும்.

***

14. மாமிச உணவு சாப்பிடுகிறவர்கள் யோகாசனம் செய்யலாமா?

செய்யலாம். ஆனால் இவர்களுக்கு உடல் வளையும் தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஆகவே ஆசனங்களை இவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி செய்யக்கூடாது. ஆசனத்தின் முழு நிலை மெதுவாகவே இவர்களுக்கு வரும். ஆகவே இவர்கள் யோகாசனங்களை மெதுவாகச்செய்யவேண்டும். ஆசனத்தில் பூரண நிலை அடைய உடல் வலி மேலும் சுளுக்கு ஆகியன ஏற்படும். மாமிசம் சாப்பிடுவர்கள் அவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைப்பது நல்லது.


***
thanks மார்டன் வேல்டு
***




"வாழ்க வளமுடன்"

நம் உடலில் வரும் வேர்வையைப் பற்றி ?

ம‌னித உட‌லி‌ல் ‌எந்த இடம் வேர்க்காது ?




சிலர் நினைக்கின்றனர் வியர்வை என்பது அழுக்கு உடல் நலத்துக்கு கேடு என்று.

*

ஆனால் உண்மையில் வியர்வை என்பது உடல் நலத்தை பேணு வதற்காகவே. வியர்வை என்ற ஒன்று இல்லையானால் மரணம் நிச்சயம். வியர்வை சுரப்பிகள் மிகமுக்கியமாக சிறுநீரகத்தின் வேலைப்பளுவை குறைக்கின்றது.

*

பொதுவாக ம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எ‌ன்று கே‌ட்டா‌ல் அனைவரு‌ம் உதடு எ‌ன்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளிட‌ம் கே‌ட்டா‌ல் அ‌தி‌ல் உ‌ண்மை‌யி‌ல்லை. உட‌லி‌ல் எ‌ங்கெ‌ல்லா‌ம் சரும‌ம் இரு‌க்‌கிறதோ அ‌ங்கெ‌ல்லா‌ம் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிகளு‌ம் இரு‌‌க்‌கி‌ன்றன எ‌ன்று உறு‌தியாக‌க் கூறு‌கி‌ன்றன‌ர்.

*

‌விய‌ர்வை சுர‌ப்‌‌பிக‌ள் அ‌திக‌ம் உ‌ள்ள இட‌ங்க‌ளி‌ல் ‌விய‌ர்‌ப்பது த‌ெ‌ரி‌கிறது. குறைவாக உ‌ள்ள இட‌ங்க‌ளி‌ல் தெ‌ரிவ‌தி‌ல்லை.

*

அதாவது உட‌லி‌ன் சில இட‌ங்க‌ளி‌ல் அ‌திகமான ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ளன. உத‌ட்டி‌ல் ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் ‌மிக ‌மிக‌க் குறைவு. அதனா‌ல்தா‌ன் உத‌ட்டி‌ல் ‌விய‌ர்‌ப்பது நம‌க்கு‌த் தெ‌ரிவ‌தி‌ல்லை.

*

அ‌தி‌லு‌ம் ஒரு ‌சிலரு‌க்கு அ‌திகமான ‌விய‌ர்வை சுர‌ப்‌பிக‌ள் உ‌ள்ள‌‌ங்களை பாத‌ங்க‌ளி‌ல் அமை‌ந்து‌விடுவது‌ம் உ‌ண்டு.

*

இ‌னி யாரு‌ம் ‌விய‌ர்‌க்காத இட‌ம் உ‌ண்டு அது எது தெ‌ரியுமா எ‌ன்று கே‌ட்டா‌ல் உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எ‌ன்று எது‌வு‌மி‌ல்லை. உத‌ட்டு மேலயு‌ம் வே‌ர்‌க்கு‌‌ம் எ‌ன்பது உன‌க்கு‌த் தெ‌ரியுமா? என ப‌தி‌ல் கே‌ள்‌வி கேளு‌ங்க‌ள்


***

ஒவ்வொருவருக்கும் தனித்தனி வாசம் உண்டு:


சே... என்ன நாற்றம் இது?' என, மற்றவர்களிடமிருந்து வெளியேறும் வியர்வை நாற்றத்தை வெறுக்கிறோம்.

உங்கள் மீது நாற்றம் எடுக்கிறதா என்பது உங்களுக்கு தெரியுமா?

தெரியவில்லை எனில், உங்கள் தாயிடம் கேளுங்கள். அவர் தான், உண்மையான பதிலை சொல்வார். உடல் துர்நாற்றம், அது வெறுக்கத்தக்கதாக இருந்தாலும், வியர்வை வெளியேற்றுபவரை விட, அருகில் இருப்பவருக்கு தான் கஷ்டத்தைத் தரும்!

*

நம் நாற்றம் நமக்குத் தெரியாத வகையில் தான், நம் மூக்கு பழக்கப்பட்டிருக்கிறது. நண்பர்கள், குடும்பத்தினர், காதலர்கள் என யாருமே, வெறுத்து ஓடச் செய்யும் சங்கடமான விஷயம் இது.

*
ஒவ்வொருவருக்கும் தனி வாசம் உண்டு. இந்த வாசம், தனித்துவம் வாய்ந்ததாக இருப்பதால், எளிதில் அடையாளம் காணலாம். வாசத்தை நுகர்வது, ஆதிமனிதன் முதலே இருக்கும் சுபாவம்.

*

கற்கால மனிதர்கள், இந்த வாசத்தை வைத்து தான், வழிப் போக்கர்கள், இரை, மூதாதையர்கள், விலங்குகளை அடையாளம் கண்டனர். நாகரிகம் வளர்ந்த பின், மனிதனின் வாசம் முக்கியத்துவத்தை இழந்தது. தற்போது, தனிப்பட்ட வாசம், அவசியமற்ற, கற்கால பழக்கம் என ஒதுக்கித் தள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது. ஒரு சில நறுமணங்கள் அல்லது மிகவும் வெறுக்கத்தக்க வாசங்களை தான் நாம் இப்போது உணர்கிறோம்.

*

ஆனால், குழந்தைகள் வாசங்களைச் சட்டென கிரகித்துக் கொள்வர். பிறக்கும்போதே, தாயின் வாசம் அவற்றுக்கு மிக நன்றாகத் தெரிவதால் தான், தாய் வருவதை இருட்டிலும் உணர்ந்து கொள்வர்.

*

சிலர் உடல் வாசனை நன்றாக இருக்கும்; சிலர் வாசனை, அருவருக்கத்தக்கதாக இருக்கும். துவைக்காத துணியை அணிவது, நோய் வாய்பட்டிருப்பது, இயற்கையாகவே நாற்றத்தன்மை கொண்டிருப்பதால், இந்த நிலை.

*

உடல், வாய் துர்நாற்றத்தால், காதல், புகழ், நட்பு ஆகியவற்றை இழப்பது போல், பவுடர் மற்றும் வாசனை திரவியங்கள் குறித்த "டிவி' விளம்பரங்களில் காட்டப்படுவது உண்மையே.
வியர்வை நாளங்களிலிருந்து தான் வாசனை கிளம்புகிறது. "எக்ரைன்' என்ற நாளம், உடல் முழுவதும் உள்ளது.

*

இது, உடல் வெப்பநிலையைச் சீராக வைக்க உதவுகிறது. "அபோக்ரைன்' வியர்வை நாளம், தொடை இடுக்கு மற்றும் அக்குளில் காணப்படுகிறது. இவை, நிறமற்ற, வாசமற்ற நீரைத் தான் வெளியேற்றுகின்றன.

*

ஆனால், காற்றோட்டம் இல்லாத இந்த பகுதிகளில் பாக்டீரியாக்கள் வளர்வதால், அவையே நாற்றத்தை உண்டாக்குகின்றன. வியர்வையை உறிஞ்சாத உடைகள் அணிவதால் இந்த நாற்றம் ஏற்படுகிறது. வியர்வையை பாக்டீரியாக்கள் சிதைப்பதால், நாற்றம் உருவாகிறது.

*

செபாக்கஸ் கிளாண்டு என்றழைக்கப்படும், சரும மெழுகுச் சுரப்பிகள், உடல் முழுதும் பரவிக் கிடக்கின்றன. இவற்றிலிருந்து வெளியாகும் மெழுகையும், பாக்டீரியா பதம் பார்ப்பதாலும், இறந்த செல்கள், பாக்டீரியாக்களுக்கு உணவாகப் பயன்படுவதாலும், உடலில் நாற்றம் ஏற்படுகிறது.

*

நோய்வாய்ப்பட்டவர்கள் மருந்து உட்கொள்வதால், அவர்களின் உடல் துர்நாற்றம் தனியாகத் தெரியும். கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றில் பாதிப்பு, மனநோய், நீரிழிவு நோய், சிறுநீரக பாதையில் தொற்று, புற்றுநோய் உள்ளவர்கள் உடலில், வித்தியாசமான நாற்றம் ஏற்படும்.

*

ரசாயன பரிசோதனை முறை அறிமுகம் ஆகும் முன், இந்த நாற்றத்தை வைத்தே, எந்த நோய் ஏற்பட்டுள்ளது என மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

*

குழந்தைகளிடம் வியர்வை நாற்றம் அதிகம் ஏற்படாது. ஆனால், தினமும் குளிக்கவில்லை. எனில், அழுக்கு சார்ந்த நாற்றம் அவர்களிடம் ஏற்படும். மூக்கொழுகுதல், அடினாய்டு, டான்சிலைட்டிஸ், வாயால் மூச்சு விடுதல், பல்லில் தொற்று, காதில் தொற்று, மூக்கில், காதில், பிறப்புறுப்பில், கூழாங்கல், பெரிய கொட்டைகளைத் தெரியாமல் திணித்துக் கொள்வதால் கூட, குழந்தைகளிடம் துர்நாற்றம் ஏற்படும்.

*

சிகரெட் புகைப்பது, மது குடிப்பது ஆகிய பழக்கங்கள் கூட, ஒருவரின் வாசத்தை மாற்றியமைக்கின்றன. மூச்சு, தோல், ஆடை ஆகியவற்றில் இந்த வாசம் தெரியும். இந்த வாசத்திலிருந்து விடுபட, சிகிச்சை உண்டு.

*

சாதாரண துர்நாற்றம் வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமை, பல், ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் ஏற்படுகிறது. தினமும் காலை, மாலை வேளைகளில், "பிரஷ்' செய்தால் இந்த துர்நாற்றம் இருக்காது.

*

தினமும் இரண்டு வேளை குளித்தால், உடல் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். குழந்தைகள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு இது மிகவும் அவசியம். சமையல் சோடாவை தண்ணீருடன் கலந்து வைத்து, நீக்கோ போன்ற "டிரைகுளோரெக்சிடைன்' அடங்கிய, பாக்டீரியாவை அழிக்கக் கூடிய சோப்பை தேய்த்து குளிக்கலாம்.

*

சோப்பை நேராக உடலில் தேய்க்காமல், பீர்க்கங்காய் நாரில் சோப்பை தேய்த்து, நாரால் உடலை சுத்தம் செய்யலாம். உடலின் வியர்வை இறந்த செல்கள், "செபம்' என்றழைக்கப்படும் மெழுகு ஆகியவற்றை நீக்கும்.

*

தொடை, அக்குள் போன்ற இடங்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கவும். இதன் மூலம், காற்றுபடாத இந்த இடங்களில் பாக்டீரியாக்கள் வளர்வதும், துர்நாற்றமும் குறையும்.

*

குளித்த பின், பாடி ஸ்பிரே பயன்படுத்தலாம். ரோல் ஆன் மற்றும் வியர்வை வெளியாவதைத் தடுக்கும் ஸ்பிரேக்கள், வியர்வை சுரப்பிகளை அடைத்து, தொற்றுக்களை ஏற்படுத்தும். பவுடர் பூசுவது சருமத்துக்கு நல்லதல்ல. இவையும் தொற்றை உருவாக்குபவை தான். சுத்தமான, துவைத்த பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.

*

காய்ந்து போன வியர்வை கொண்ட, அழுக்கு துணிகளை அணிவது நல்லதல்ல. வெயில் காலங்களில், காலிலிருந்து வியர்வை நாற்றம் கிளம்பும். காட்டன் சாக்ஸ், அதிகம் மூடப்படாத செருப்பு ஆகியவற்றை அணிவதன் மூலம் இந்த துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.


***
அதிக வேர்வையில் இருந்துதப்ப பாட்டி வைத்தியம்:

வியர்வை நாற்றம் நீங்க:


1. ஆவாரம் பூவை நிழலில் உலர்த்தி, சமமான அளவு பயத்தம் மாவு கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

*

2. வெயில் காலம் என்றாலே எல்லோருக்கும் வியர்த்து கொட்டும். மேலும் சிலருக்கு உடலெங்கும் உப்புப் பூத்தார் போல் படலமாக இருக்கும். சிலருக்கு உடலில் நாற்றத்தை உண்டாக்கும். இந்த வியர்வை நாற்றத்தால் சிலர் சில நேரங்களில் மனக்கூச்சம் அடைய நேரிடும். இவர்கள் வியர்வை நாற்றத்திலிருந்து விடுபட

செம்பருத்திப் பூ, இலை, காய்ந்தது - 5 கிராம்

ராமிச்சம் வேர்

சந்தனத்தூள் ,

கஸ்தூரி மஞ்சள்

வசம்பு

இவற்றை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது இந்த பொடியை நீரில் குழைத்து உடலெங்கும் பூசி, சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் வியர்வை நாற்றம் நீங்கும். மேலும் உடல் சூடு தணியும். தோல் சம்பந்தப்பட்ட நோய்களும் நீங்கும்.

***


ஒரு சிலருக்கு வேர்வை அதிகம் சுரக்காது அவர்களுக்கா பா . வைத்தியம் :


வியர்வை பெருக்கி

சிலருக்கு வியர்க்காமல் உடம்பு முழுவதும் படிவம் போல் காணப்படும். நமது உடலில் தோலில் பல கோடி துளைகள் உள்ளன. இவற்றின் மூலம்தான் வியர்வை சுரப்பிகள் வியர்வையை வெளியேற்றுகின்றன. இந்த வியர்வையின் மூலம் உடலில் உள்ள அசுத்த நீர் வெளியேறுகிறது.

இந்த வியர்வை நன்கு வெளியேறவும், வியர்வை சுரப்பிகள் நன்கு செயல்படவும் கற்பூரவள்ளியின் இலையை நிழலில் காயவைத்து பொடி செய்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் வியர்வை பெருகும்.

***
thanks தினமலர்
thanks இணையம்
***



"வாழ்க வளமுடன்"

29 நவம்பர், 2010

கர்ப்ப காலத்தில் ஏடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள்!

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப்பெண்ணுக்கு அதிக அளவில் நல்ல சத்தான உணவுப்பொருட்கள் தேவைப்படுகிறது.



கர்ப்பிணி பெண் மற்றும் வயிற்றில் வளரும் குழந்தையின் தேவைகள் சந்திக்கப்பட கர்ப்பிணியானவள் வழக்கததிற்கு அதிகமான சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியிருக்கிறது.

*

இந்தியாவில், ஏழை கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்பால் கொடுக்கும் பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவானது மற்ற சாதாரண கர்ப்பமில்லாத மற்றும் பால் கொடுக்காத நிலையில் உள்ள பெண்கள் உட்கொள்ளும் உணவின் அளவிலேயே உள்ளது.

•மகப்பேறு காலத்தில் சத்துணவு குறைவுபடுவதால் எடை குறைந்த குழந்தை பிறப்பு மற்றும் கர்ப்பிணி பெண் மற்றும் பிறந்த குழந்தை இருவரும் இறப்பது போன்றவை நேரிடும்.


•பிறக்கும் குழந்தையின் எடையை அதிகரிக்கவும் மற்றும் கர்ப்பிணி பெண்ணின் உடலில் கொழுப்பு சேர்வதை அதிகரிக்கவும் கூடுதலான உணவினை உட்கொள்ள வேண்டும்


•நன்கு பால் சுரப்பதற்கு பால் கொடுக்கும் தாயானவள் அதிக அளவு சத்தான உணவினை உட்கொள்ள வேண்டும்

***

கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான உணவு முறைகள்:

•கர்ப்பிணி பெண் உட்கொள்ளும் உணவினை பொருத்து பிறக்கும் குழந்தையின் எடை அமைகிறது


•மகப்பேறு காலத்தின்போது உட்கொள்ளும் உணவில் அதிகளவில் பாதுகாப்பு தரும் உணவுப் பொருட்கள் அடங்கியிருக்கவேண்டும்

•கர்ப்பிணி பெண்ணுக்கு கர்ப்ப காலத்தின் இடைப்பட்ட காலத்திலிருந்து கூடுதலாக 300 கிலோ காலரிஸ் சக்தியும், 15 கிராம் புரதமும், 10 கிராம் கொழுப்பு பொருளும் தேவைப்படுகிறது


•கர்ப்ப காலத்தில் வளரும் குழுந்தையின் எலும்புகள் உருவாகுவதற்கும் மற்றும் பால் கொடுக்கும் காலங்களில் தாய்பால் சுரப்பதற்கும் கூடுதலான அளவு சுண்ணாம்பு சத்து தேவைப்படுகிறது


•கர்ப்ப காலததின் போது இரும்புச் சத்து குறைவினால் ஏற்படும் இரத்த நோய்களினால் கர்ப்பிணி பெண்ணானவள் இறப்பதும் எடை குறைந்த குழந்தை பிறப்பதும் அதிகரிக்கிறது. எனேவ கர்ப்பிணியானவள் அதிகளவில் இரும்புச்சத்து உள்ள உணவினை உட்கொள்வது மிக அவசியம்.


***

மகப்பேறு காலத்தின் போது செய்ய வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டியவை

•மகப்பேரு காலத்தின் போதும் மற்றும் தாய்பால் கொடுக்கும் காலங்களில் அதிகளவு உணவு உட்கொள்ள வேண்டும்


•ஒரு நாளைக்கு 3 வேளைக்கு உணவு உண்பது என்பது இல்லை. கூடுதலாக ஒரு வேளை உணவு உட்கொள்ளலாம்


•முழு பருப்பு வகைகள், முளை கட்டின பருப்பு வகைகள் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும்

•பால் /இறைச்சி/முட்டை போன்ற உணவுகளை எடுத்தும் கொள்ளலாம்

•பழங்கள் மற்றும் காய்கறிகளை மிக அதிகளவில் உட்கொள்ளலாம்

•மதுவகைகள் மற்றும் புகையிலை போன்றவை உட்கொள்ளக்கூடாது

•பரிந்துரை செய்யப்பட்டபோது மாத்திரம் மருந்தினை எடுத்துக் கொள்ளலாம்

•கர்ப்ப காலத்தில் 14-16 வாரங்கள் தொடங்கி தாய்பால் கொடுப்பதை நிறுத்தும் காலம் வரை இரும்புச் சத்து, போலேட் மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்த உணவுகளை கூடுதலாக தொடர்ந்து அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்


•உணவுக்கு முன்னும் மற்றும் பின்னும் தேனீர் (டி) மற்றும் குழம்பு(காப்பி) போன்ற பானங்கள் உட்கொள்வதினால் உணவில் உள்ள இரும்புச் சத்தானது கிடைப்பது இல்லை. எனவே மேற்கூறிய பானங்களை உணவிற்கு முன்னும் பின்னும் தவிர்ப்பது மிக அவசியம்


•கர்ப்பிணி பெண்களுக்கு நடைபயிற்ச்சி மற்றும் பிற தேவையான உடல்பயிற்ச்சி தேவை. அதிக வேலைகள் செய்வதை அவசியம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக கர்ப்ப காலத்தில் கடைசி மாதத்தில் தவிர்க வேண்டும்


***
thanks indg
***





"வாழ்க வளமுடன்"

நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் - PART 5

உடற்பருமன் அடைதல் பற்றி கவனம்




1. உடல் பருமனடைதல் என்பது உடலில் உள்ள அடிபோஸ் திசுக்களில் அதிக அளவு கொழுப்புப் பொருட்கள் சேர்வதால், இருக்க வேண்டிய உடல் எடையில் 20 சதம் கூடும் நிலையாகும்.

*

2. உடற்பருமனடைவதால் உடலில் வேண்டாத உடல் நலக் கேடுகள் ஏற்படுகிறது.

*

3. அதோடு சிறுவயதிலேயே இறக்கவும் நேரிடுகிறது.

*

4. உடல் பருமனடைவதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கிறது, இரத்த அழுத்தத்தின் அளவு அதிகரிக்கிறது, இதய நோய்கள், சர்க்கரை நோய் மற்றும் சில வகை புற்று நோய்கள் ஏற்படுகின்றன.

*

5. அதிகமாக உணவுப் பொருட்களை உண்பதும் உடல் வேலைகளை குறைப்பதும் உடல் பருமனடைவதற்கு வழிவகுக்கின்றது. பரம்பரைப் பண்புகளும் உடற்பருமனை ஏற்படுத்துகிறது.


***

உடல பருமனாவதற்கான காரணங்கள்

1• உடற் பருமன் என்பது அதிகமான உணவு பொருட்களை உட்கொள்வதாலும் அதே சமயத்தில் இவற்றை குறைந்த அளவிலேயே உபேயாகப்படுத்துவதினாலும் ஏற்படுகிற நிலையாகும்

*

2• அதிக அளவில் கொழுபு நிறைந்த பொருட்களை உணவில் உட்கொள்வதும் உடற்பருமனடைவதை ஏற்படுத்தும்

*

3• குறைந்த உடற்பயிற்சி மற்றும் அதிக வேலையின்றி ஓய்ந்திருப்பது போன்ற செயல்கள் உடற்பருமனடைவதற்கான முக்கிய காரணங்களாகும்

*

4• மன நிலை காரணங்களால் அதிகளவு உணவு உட்கொள்வதினாலும் உடற்பருமன் ஏற்படுகிறது

*

5• உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றத்தின் தவறினால், பயன்படுத்தப்படும் சக்தியின் அளவு குறைந்து கொழுப்பு பொருள் சேர்வது அதிகரிப்பதாலும் உடல்பருமன் ஏற்படுகிறது

*

6• பிள்ளை மற்றும் விடலை பருவத்தில் உடல் பருமன் அடைந்தால், வாலிப பருவத்திலும் உடல் பருமன் ஏற்படும்

*

7. •பெண்களில் உடல்பருமன் கர்ப்ப காலத்திலும் மாதவிடாய் நின்ற பின்னரும் ஏற்படும்.

**


சரியான உடல் எடை:

சரியான உடல் எடை என்பது ஒரு நபரின் உயரத்திற்கு ஏற்றாற்போல் நன்கு வேலைசெய்யக்கூடிய நிலைக்கு ஏற்ற உடல் எடை ஆகும். இதனை 'பாடிமாஸ் இண்டக்ஸ்' என்னும் அளவு முறையை கொண்டு அளக்கலாம்.


பாடி மாஸ் இண்டக்ஸ் =

உடல் எடை (கிலோ கிராம்)
----------------------------
உடலின் உயரம் (மீட்டரில்)2


***

உடல் எடையினை குறைப்பது எப்படி:

1• குறைந்த அளவு எண்ணையில் பொரித்த உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.

*

2• உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்

*

3• முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் முளைகட்டின பயறு வகைகளான நார் சத்து மிக அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிடலாம்.

*

4• தினமும் உடற்பயிற்ச்சி செய்து உடல் எடையினை விரும்பத்தக்க அளவில் வைத்துக் கொள்ளலாம்

*

5• மெதுவாகவும் சீராகவும் உடல் எடையை குறைப்பது நல்லது. சாப்பிடாமல் கடுமையான பட்டினி இருப்பது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும்

*

6• உடலின் செயல்பாட்டை சமநிலையில் பேணிகாக்க தேவையான விதவிதமான உணவு வகைகளை சாப்பிடலாம்

*

7• ஒரே நேரத்தில் அதிக அளவு உணவுப் பொருட்களை உண்பதை விட அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் சிறிய அளவில் உணவு உண்ணலாம்

*

8• சர்க்கரை, கொழுப்பு பொருட்கள் மற்றும் மது வகைகளை குறைத்துக்கொள்ளலாம்

*

9• கொழுப்பு குறைக்கப்பட்டுள்ள பால் பயன்படுத்தலாம்

*

10• உடல் எடையை குறைக்க எடுத்துக் கொள்ளும் உணவில் அதிக புரதமும், குறைந்த அளவில் மாவுப்பொருள்களும் கொழுப்புப் பொருளும் இருத்தல் வேண்டும்

***
THANKD indg
***

"வாழ்க வளமுடன்"

நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் - PART 4

கொழுப்புச் சத்து மற்றும் மனித நலம்:




1. கொழுப்புச் சத்து என்பது நமது உணவில் உள்ள ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது உடலில் பல்வேறு வேலைகளை செய்ய உதவுகிறது.

*

2. கொழுப்பிலிருந்து அதிக அளவு சக்தி கிடைக்கிறது. அதாவது ஒரு கிராம் கொழுப்பிலிருந்து 9 கிலோ கலோரி சக்தி கிடைக்கிறது.

*

3. நமது உணவில் உள்ள கொழுப்பில் கரையக் கூடிய வைட்மின்களான ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவற்றை உணவிலிருந்து உடலானது எடுத்துக்கொள்ள குறைந்த அளவு கொழுப்பு அவசியம் தேவை.

*

4• உணவில் உள்ள கொழுப்பானது தாவர உணவிலிருந்தும், இறைச்சியிலிருந்தும் கிடைக்கிறது

*

5. தாவர எண்ணெய் வகைகளிருந்து, உடலுக்குத் தேவையான எஸன்ஷியல் ஃபாட்டி ஆசிட்ஸ் (ஈ.எப்.ஏ) மற்றும் அன்சாச்சுரேட்டேட் ஆசிட் (மோனோ அன்சாச்சுரேட்டேட் ஃபாட்டி ஆசிட்(எம்.யூ. எப்.ஏ) மற்றும் பாலி அன்சாச்சுரேட்டேட் ஃபாட்டி ஆசிட்(பி.யூ. எப்.ஏ)) எனப்படும் கொழுப்பு அமிலங்கள் கிடைக்கின்றன

*

6• நாம் உட்கொள்ளும் உணவில் இருந்து நமக்கு தேவையான எஸன்ஷியல் ஃபாட்டி ஆசிட்ஸ் எனப்படும் கொழுப்பு அமிலங்கள் கிடைக்கின்றது. இவை நமது உடலில் பல முக்கிய செயல்பாடுகளை செய்கின்றன

*

7• பெரியவர்கள், குறைந்த அளவில் சாச்சுரேட்டேட் ஃபாட் எனப்படும் கொழுப்பு பொருட்களை உட்கொள்ள வேண்டும். (நெய், வெண்ணெய் போன்ற உணவு பொருட்கள்)

*

8. •உடலுக்குத் தேவையான அன்சாச்சுரேட்டேட் ஃபாட்டி ஆசிட் எனும் கொழுப்பு அமிலமானது, தேங்காய் எண்ணெய்யை தவிர மற்ற எல்லா தாவரவகை எண்ணெய்யிலும் மிக அதிக அளவு உள்ளது

*

9. சாச்சுரேட்டேட் ஃபாட் அதிகமாக இருக்கும் நெய், வெண்ணெய் போன்ற உணவு பொருட்களை மிக அதிக அளவில் உட்கொண்டால், இரத்தத்தில் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பு பொருளின் அளவு அதிகப்படும். அப்படி கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பது உடல் நலத்திற்ககு நல்லதல்ல. மேலும் உடற்பருமனடைதல், இதய மற்றும் இரத்த நாளம் சம்மந்தமான கோளாறுகளை ஏற்படுத்தும்.

*

10• சமையலுக்கு பயன்படுத்தப்படும் கொழுப்பு பொருட்களான தாவர வகை எண்ணெய், வனஸ்பதி, வெண்ணெய் மற்றும் நெய் போன்றவைகள் காணக்கூடிய கொழுப்பு பொருட்கள் என்றழைக்கப்படும். உணவில் உள்ள மற்ற கொழுப்புப் பொருட்களை காணக்கூடாத கொழுப்பு என்பர்

*

11• இறைச்சியிலிருந்து சாச்சுரேட்டேட் ஃபாட் எனப்படும் கொழுப்பு பொருள் மிக அதிகளவில் கிடைக்கப்பெருகிறோம்.


***

பரிந்துரைக்கப்பட்ட உணவின் அளவு:

1• இளம்பிள்ளைகள் மற்றும் விடலைப் பருவத்தினருக்கான உணவில் கொழுப்பின் அளவு 25 கிராம்

*

2• அதிக அளவில் எந்தவித உடல் உழைப்பும் செய்யாத வாலிப வயதினருக்கு தேவைப்படும் கொழுப்பின் அளவு ஒரு நாளுக்கு 20 கிராம்

*

3• கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால்கொடுக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 30கிராம் கொழுப்பு பொருளானது தேவைப்படுகிறது.


**

சமைக்க பயன்படுத்தும் எண்ணெயில் காணப்படும் லினோலிக், லினோலினிக் அமிலங்களின் அளவு (கிராம்/100 கிராம் எண்ணெய்)

*

எண்ணெய் / லினோலிக் / லினோலினிக் / மொத்தம் ஈ.எப்.ஏ
அமிலம் அமிலம்

நெய் 1.6 / 0. 5 / 2.1


தேங்காய் 2.2 / - / 2.2


வனஸ்பதி 3.4 / - / 3.4


பாமாயில் 12.0 / 0 .3 / 12.3


கடுகு 13.0 / 9.0 / 22.0


கடலை 28.0 / 0.3 / 28.3


அரிசி தவிடு 33.0 / 1.6 / 34.6

எள் 40.0 / 0.5 / 40.5

சூரிய

காந்தி 52.0 / - / 52.0


சோயா

பீன்ஸ் 52.0 / 5.0 / 57.0



***

"வாழ்க வளமுடன்"

நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் - PART 3

நமக்கு சக்தி ஏன் தேவைப்படுகிறது:




1. மனித இனம் தங்களுடைய அன்றாட உடல்ரீதியான வேலைகளை செய்யவும், உடல் வெப்பநிலையை சரியாக சீராக பராமரிக்கவும், உடலில் அன்றாட வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுவதற்கும், உடல் வளர்ச்சிக்கும் போதுமான அளவு சக்தி தேவைப்படுகிறது.

*

2. இந்தியாவில் 50 சதவிகிதம் ஆண்கள் மற்றும் பெண்கள், நாட்பட்ட சக்தி பற்றாக்குறையினால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய கண்காணிப்பு குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது.

***

கண்காணிப்பு குழுவின் ஆய்வு:


1• ஒவ்வொரு தனி நபரின் அன்றாட சக்தி தேவையின் அளவு அந்த நபரின் அன்றைய சக்தி இழப்பு அல்லது செலவு செய்வதை பொறுத்து அமைகிறது. இதுமட்டுமின்றி வயது, உடல் எடை, செய்யும் வேலைகளின் தன்மை, உடல் வளர்ச்சி மற்றும் உடலமைப்பு பொறுத்து அமைகிறது. இந்தியாவில் உணவிலிருநது பெறப்படும் மொத்த சக்தியின் அளவில் 70-80 சதவித சக்தியானது உணவுத்தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கிழங்குகளிலிருந்து பெறப்படுகிறது

*

2• குழந்தைகள் மற்றும் விடலைப்பருவத்தினர் தங்களது அன்றாட தேவைக்கான சக்தியில் 55-60 சதம் வரை மாவுச்சத்துப்பொருட்களிலிருந்து பெறுகின்றனர்

*

3• விடலைப்பருவத்தினரின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு மிக அதிக அளவிலான சக்தி தேவைப்படுகிறது. உதாரணம் 16-18 வயது பெண்களுக்கு ஒரு நாளுக்கு 2060 கிலோ கலோரி சக்தியும் ஆண்களுக்கு 2640 கிலோ கலோரி சக்தியும் தேவைப்படுகிறது

*

4• கர்ப்ப காலத்தின்போது, கர்ப்பத்தில் வளரும் குழந்தைகள் வளர்ச்சிக்கும், கர்ப்பிணி பெண்ணின் உடல் நலத்திற்கும் கூடுதலான அளவு சக்தி தேவைபடுகிறது

*

5• குறைவான அளவு சக்தியுள்ள பொருளை உட்கொள்ளும்போது சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதே வேலையில் அதிகளவு உட்கொள்ளும்போது உடற்பருமன் ஏற்படுகிறது.


***

சக்தி அதிகம் உள்ள உணவு:


1. தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்குகள், தாவர எண்ணெய்கள், நெய், வெண்ணெய், எண்ணெய் வித்துக்கள், கொட்டைகள், சர்க்கரை மற்றும் வெல்லம் போன்றவை

*

2• நாம் அதிக அளவில் தானியவகை உணவிலிருந்து, நமக்கு தேவையான சக்தியினை பெறுவதினால் வெவ்வேறு வகையான தானியங்கள் உட்கொள்ள பழகிக்கொள்வது நல்லது

*

3• தானிய வகைகளான கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவை குறைந்த விலையில் கிடைக்கக் கூடியவை. அதே சமயம் அதிக சத்தானவை.

**


உணவுப் பொருட்கள் - 100 கிராம் சாப்பிடக் கூடிய

பகுதியிலிருந்து கிடைக்கும் சக்தியின்

அளவு (கிலோ கலோரிகள்)


அரிசி - 345


கோதுமைமாவு - 341


சோளம் - 349


கம்பு - 361


கேழ்வரகு - 328


மக்காச்சோளம் - 342


***

"வாழ்க வளமுடன்"


நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் - PART 2

நுண்ணூட்டச் சத்துக்கள் ( வைட்டமின் ஏ ) - பாதுகாப்பளிக்கும் உணவுகள்

1. நுண்ணூட்டச் சத்துக்கள் என்பவை மிக குறைந்த அளவிலேயே உடலுக்கு தேவைப்படுகிற வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் ஆகும்.

*

2. இவைகள் உடலில் ஏற்படும் உடற்சிதைமாற்ற செயல்களுக்கு உறுதுணையாய் இருந்தும், நோய்களை எதிர்க்கவும், அவற்றிலிருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகின்றது. இவை உடல் நலனையும் மற்றும் நீண்ட ஆயுளையும் பேணிக்காக்க அவசியமாகும்.

*

3. வைட்டமின் ஏ கொழுப்பில் கரையகூடிய தன்மைகொண்ட வைட்டமின் ஆகும். கண் பார்வை, நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் தோல் செயல்பாடுகளில் வைட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கின்றது.

*

4. இந்தியாவில் 3 சதம் பள்ளி செல்லும் வயதுடைய சிறுவர்கள் வைட்டமின் ஏ பற்றாக்குறையின் அறிகுறிகளான பைடாட் ஸ்பாட்ஸ் (கண்ணில் வெண்மையான பகுதியில் முக்கோண வடிவில் சாம்பல்நிற தோற்றம்) என்பவையால் அவதிப்படுகின்றன.

*

5. வைட்டமின் ஏ பற்றாக்குறையின் ஆரம்பநிலையில் ஏற்படும் அறிகுறியானது மாலைக்கண் நோய் (இரவில் பார்வை இழப்பு) ஆகும்.


***

வைட்டமின் ஏ யின் முக்கியத்துவங்கள்:


நல்ல கண் பார்வைக்கு வைட்டமின் ஏ அவசியம். வைட்டமின் ஏ குறைபாடு மாலைக்கண் நோய் மற்றும் பிற குறைபாடுகளை ஏற்படுத்தும்.


1• கர்ப்ப காலத்திலும் மற்றும் அவற்றிற்கு முன்னும் பெண்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படுவதை தடுப்பதன் மூலம் இறப்பு மற்றும் நோயுற்று ஆரோக்கியம் குறையும் தன்மையை பெருமளவில் குறைக்கலாம்.

*

2• உணவில் வைட்டமின் ஏ அதிகளவில் எடுத்துக்கொள்வதினால் அதன் பற்றாக்குறைவால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம்
வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ள உணவுகள்

*

3• பச்சை நிற கோஸ், அனைத்து வகை கீரைகள், காய்கறி வகைகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண பழங்கள் காய்கறிகளில் பீட்டா கரோடின் எனும் பொருள் மிக அதிகளவில் கிடைக்கிறது.

*

4• பீட்டா கரோடீன் வைட்டமின் ஏ வாக மாற்றப்படுகிறது.

*

5• இறைச்சி ஒன்றே வைட்டமின் ஏ யின் முக்கிய உற்பத்தி ஸ்தானம்

*

6• பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், முட்டையின் மஞ்சள் நிற கரு, சிவப்பு பாமாயில், மீன் மறறும் மீன் எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஏ மிக அதிக அளவில் கிடைக்கிறது.

***

சில உணவுப்பொருட்களில் உள்ள மொத்த பீட்டா கரோடினின் அளவு பின்வரும:


உணவுப்பொருளின் பெயர் - சாப்பிடக்கூடிய பகுதியில் உல்ல
பீடா கரோடீனின் அளவு
(மைக்ரான்/100 கிராம்)


கொத்தமல்லித் தழை - 4800


கருவேப்பிலை - 7110


முருங்கைக்கீரை - 19690


வெந்தயக்கீரை - 9100


கேரட் - 6460


மாம்பழம் - 1990


பப்பாளி பழம் - 880


பூசணி - 1160



***

வைட்டமின் சி:

1. வைட்டமின் சி ஒரு அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து. இது நோய் தொற்றுவதை தடுக்கிறது.

*

2. வைட்டமின் சி பற்றாக்குறை ஸ்கர்வி என்னும் நோயினை ஏற்படுத்துகிறது.

*

3. இந்நோயினால் பலவீனம், பற்களின் ஈறுகளில் இரத்தக்கசிவு மற்றும் எலும்பு வளர்ச்சியில் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.

*

4. காயம் ஆறுதல், அமினோ அமிலம் மற்றும் மாவுப் பொருட்களின் வேதியல் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் எனும் வேதி கூட்டுப்பொருள் உண்டாவதற்கு வைட்டமின் சி உதவி செய்கிறது.

*

5. இரும்பு சத்தை உடல் எடுத்துக் கொள்ளும் தன்மையை அதிகரிக்கின்றது.


***


இரும்புச் சத்து:

1 . இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்னும் பொருள் உருவாவதற்கு இரும்புச் சத்து முக்கிய தேவை ஆகும்.

*

2. இந்த ஹீமோகுளோபினானது பிராணவாயுவினை நுரையீரலிலிருந்து இரத்தத்தின் மூலம் உடற் திசுக்களுக்கு எடுத்தும் செல்லும் செயலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

*

3. நமது நாட்டில் இரத்த சோகை என்பது சிறுபிள்ளைகள், பருவ வயது பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களில் ஏற்படும் ஒரு முக்கிய உடல் நலக் கேடு ஆகும்.

*

4. மக்கள் தொகையில் ஏறக்குறைய 50 சதவிகிதத்தினர், முக்கிய ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்தேசாகையினால் பாதிக்கப்படுகின்றனர்.

*

5. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்தசோகையினால், இளைஞர்களின் செயல்திறன் மற்றும் சிறுபிள்ளைகளில் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.

**

இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுபொருட்கள்:

1• கீரை வகைகள், உலர்ந்த பழவகைகள், பயறு வகைகள், கம்பு மற்றும் கேழ்வரகு ஆகியவைகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளன. 3-5 சதவீதம் வரை இரும்புச்சத்து மட்டுமே உடலானது தாவரப்பொருட்களிலிருந்து உட்கிரகிக்கிறது.

*

2• இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி

*

3• நெல்லி, கொய்யா மற்றும் சிட்ரஸ் வகை பழங்களான கமலா ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களிலிலிருக்கும் வைட்டமின் சி, உடலானது இரும்புச்சத்தை உட்கிரகிக்க உதவுகிறது

*

4• உணவிற்கு பின் தேநீர் (டீ) மற்றும் காபி சாப்பிடுவதை தவிர்க்கவும்


***


அயோடின் :


1. அயோடின் தைராக்ஸின் எனப்படும் தைராய்டு ஹார்மோன் உண்டாவதற்கான மிக முக்கிய மூலக்கூறு ஆகும். இந்த தைராக்ஸின் ஹார்மோன் ஒரு நபரின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு அவசியமாகும்

*

2• ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100-150 மில்லிகிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு ஒரு நபரின் வயது மற்றும் உடல் செயல் நிலையை பொறுத்து வேறுபடும்

*

3. அயோடின் குறைபாடு ஒழுங்கின்மைகள் என்பது இந்தியாவில் ஏற்படக்கூடிய ஒரு முக்கிய நுண்ணூட்டச்சத்து குறைபாட்டு ஒழுங்கின்மையாகும்

*

4• கர்ப்பிணி பெண்களில் அயோடின் குறைபாடு ஏற்படும்போது இது கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது

*
5• நமக்கு நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து, முக்கியமாக கடல் உணவு மற்றும் தண்ணீரிலிருந்து அயோடின் கிடைக்கிறது

*

6• கோஸ், காலிபிளவர், மரவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகளில் காணப்படும் ஒரு வகை பொருளினால், உடல் அயோடின் உபேயாகப்படுத்துவதை தடுக்கிறது

*

7• அயோடின் குறைபாட்டு ஒழுங்கின்மைகள் ஏற்படாமல் தடுக்க ஒவ்வொருவரும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பினை உணவில் பயன்படுத்த வேண்டும்

***



"வாழ்க வளமுடன்"

நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் - PART 1

புரத சத்தும் - இதன் முக்கியத்துவம் :)



புரதங்கள் அமினோ அமிலங்களினால் ஆனவை. இவை உயிர்வாழ்வினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பல வேலைகளை செய்வதற்கு இன்றியமையாத பொருளாகும்.

*

பெரும்பாலும் உடலிலுள்ள புரத அளவில் பாதியளவு தசை வடிவில் அமைந்துள்ளன. புரதத்தின் தரமானது உணவில் அமைந்துள்ள அத்தியாவசியமான அமினோ அமிலங்களைப் பொறுத்து அமைகிறது.

***

புரதத்தின் செயல்பாடுகள்:

1. புரதமானது உடலில் ஏற்படக்கூடிய முக்கிய வேதியியல் மாற்றச் செயல்களுக்கு என்ஸைம் மற்றும் ஹார்மோன் வடிவிலும் தேவைப்படுகிறது.

*

2. குழந்தை மற்றும் விடலைப் பருவத்தில் உடல் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆதாரப்பொருட்களை புரதங்கள் தருகின்றது.

*

3. வளர்ந்தவர்களில் தேய்மானம் மற்றும் சேதாரத்தினால் ஏற்படும் இழப்புகளை பராமரிக்க புரதங்கள் உதவியாயிருக்கின்றன.

*

4. கர்ப்பகாலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலங்களில் தாய்சேய் இருவரின் உடற்திசு வளர்ச்சிக்கும் மற்றும் பால் சுரப்பதற்கும் கூடுதலான புரதம் தேவைப்படுகிறது

*

5. உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட புரதத்தின் அளவு இறைச்சியில் உள்ள புரதங்கள் மிகவும் உயர்ரக புரதங்களாகும். அவற்றிலிருந்து உடலுக்கு தேவையான அத்தியாவசியமான அமினோ அமிலங்கள் சரியான விகிதாசாரத்தில் கிடைக்கிறது.

*

6. சைவ உணவு பழக்கமுள்ளவர்களுக்கும் தானியங்கள் மற்றும் முந்திரிப்பருப்பு, நிலக்கடலை போன்ற பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளும்போது போதுமான புரதங்கள் கிடைக்கின்றது.

*

7. பால் மற்றும் முட்டையில் நல்ல தரமான புரதங்கள் உள்ளன. பயறு வகைகள், கடலை மற்றும் எண்ணெய் வித்துக்கள், பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி போன்றவை புரதம் அதிக அளவில் உள்ள சில பொருட்களாகும்.


*

8. தாவர உணவுகளில், சோயாபீன்ஸில் மிக அதிகளவு புரதம் கிடைக்கின்றது. இவை 40 சதம்வரை புரதங்களை கொண்டவை. 57 கிலோ உடல் எடை கொண்ட 16-18 வயதுடைய ஒரு ஆணுக்கு ஒரு நாளைக்கு தேவைப்படும் புரதத்தின் அளவு 78 கிராம் ஆகும்.


*

9. அப்படியிருக்க 50 கிலோ எடைகொண்ட அதே வயதை சேர்ந்த பெண்ணிற்கு ஒரு நாளைக்கு 63 கிராம் புரதம் தேவைப்படுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு 65 கிராம் புரதம் தேவைப்படுகிறது.

*

10. பால் கொடுக்கும் காலங்களில் (குழந்தை பிறந்த 6 மாத காலம்வரை) பெண்களுக்கு ஒரு நாளைக்கு 75 கிராம் புரதம் தேவைப்படும்.


**

உணவுப் பொருட்கள் சாப்பிடக்கூடிய பகுதியில் உள்ள புரதத்தின் அளவு (கிராம்/100 கிராம்/ )


சோயாபீன்ஸ் - 43.2

கொண்டைக்கடலை, உளுந்து, பச்சை பயறு மற்றும் துவரை - 22

நிலக்கடலை, முந்திரி மறறும் பாதாம் பருப்பு - 23

மீன் - 20

இறைச்சி - 22

பசும்பால் - 3.2

முட்டை (ஒரு முட்டையில்) - 13.3

***
நன்றி இணையம்

***



"வாழ்க வளமுடன்"

27 நவம்பர், 2010

சோற்றுக் கற்றாழை ( Aloevera ) மருத்துவ குணங்கள்

இது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை .




சோற்றுக் கற்றாழையில் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் அனைத்தும் உள்ளன. இதை ஒரு சர்வரோக நிவாரணி என்றுகூட அழைக்கலாம். உடலுக்குத் தேவையான நோய் எதிர்க்கும் ஆற்றலை கற்றாழை வழங்குகிறது


வேறு பெயர்கள்-

சோற்றுக் கற்றாழை,

கன்னி,

தாழை.

குமரி

*

தாவரப்பெயர்-

AloebarbadensisLinn,

Liliaceae,

Aloevera,

Aloeferox,

Aloeafricana,

Aloe,

spicata,

Aloe perji.



சதைப்பற்றுடன் கூடிய தடிப்பான அடுக்கு மடல் கொண்ட செடி வகை. கற்றாழை மடல்கள் இருபுறமும் முள்போல் சொரசொரப்பான ஓரங்களைக் கொண்டிருக்கும், பக்கக் கன்றால் உற்பத்தியைப் பெருக்கும்.

*

இலை மற்றும் வேர், இலையில் உள்ள சதைப்பற்றான ஜெல். ஒடித்தால் வரும் மஞ்சள் நிற திரவம் வரும்.


தோல் நீக்கிய சோற்றை ஏழு முறை கழுவி கசப்பு நீக்கி குழம்பாகச் சமைத்துண்டால் தாதுவெப்பு அகன்று தாகந்தணியும், ஏழு முறை கழுவுவது. அதை சுத்தி செய்யும் முறையாக சித்தர்களால் கூறப்படுகிறது .


சிறந்த மலச்சிக்கல் போக்கி.


ஒரு வகை இனிப்புக் கூழ் மூலநோயிக்கு மருந்தாகும்.


கடும் வயிற்றுப்புண்ணுக்கு இலையின்சாறு பயன் படுகிறது.


இதன் ஜெல் தோலின் மேல் தடவினால் வெப்பத்தின் தன்மையை போக்கும். முக அழகு சாதனமாகப்பயன் படுகிறது.


அழகு சாதன பொருள்களின் அத்தியாவசிய மூலப் பொருளாக விளங்குகிறது.

*

சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.


எப்பொழுதும் வாடாத வகையைச் சார்ந்த இத்தாவரம் வெப்பமான பகுதிகளில் வயல் வரப்புகளிலும் உயரமான பகுதிகளில் வேலிகளிலும் வளரக்வடியது. பல பருவங்கள் வாழக்கூடியது. சதைப்பற்றுள்ள நீச்சத்து மிக்க குறுச்செடி. இலைகள் அடுக்கடுக்காக ரோஜா இதழ்கள் போன்று அமைந்திருக்கும்.


கற்றாழையில் சோற்றுக் கற்றாழை சிறு கற்றாழை பெரும் கற்றாழை பேய்க் கற்றாழை கருங் கற்றாழை செங்கற்றாழை இரயில் கற்றாழை எனப் பல வகை உண்டு. இதில் சோற்றுக் கற்றாழை மருத்துவ குணங்களுக்கென்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இலைச்சாறுகளில் ஆந்த்ரோகுயினோன்கள்இ ரெசின்கள் பாலிசக்கரைடு மற்றும் ‘ஆலோக்டின்பி’ எனும் பல வேதிப்பொருட்கள் உள்ளன. கற்றாழையிலிருந்து வடிக்கப்படும் மஞ்சள் நிற திரவம் ‘மூசாம்பரம்’ எனப்படுகிறது.


தளிர்பச்சை இளம்பச்சை கரும்பச்சை எனப் பலவிதமாக உள்ள சோற்றுக்கற்றாழை முதிர்நதவற்றில்தான் மருத்துவத்தன்மை மிகுந்து காணப்படுகின்றன.


இன்றைய அனைத்து அழகுசாதனப் பொருட்களின் தயாரிப்பிலும் தவறாது இடம் பெறுவது கற்றாழைதான். இதன் சாறு சருமத்தின் ஈரப்பதத்தை சமன் செய்வதுடன்இ சர்ம நோய்களையும் குணப்படுத்துகிறது.


முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்ல குணம் கிடைக்கும்.


ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள் காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம். தீக்காயங்களுக்கும் ‘உடனடி டாக்டர்’ கற்றாழைச் சாறுதான்.


இதன் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.


கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது. தோல் இறுக்கத்திற்கு சுகமளிக்கும் மருந்தாகிறது. கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை உண்டாகும்.


நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு. சருமத்திலுள்ள கொலாஜன் எனப்படும் கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய புரோட்டீன் கற்றாழையில் அதிகம் காணப்படுவதால் முகத்திலுள்ள சுருக்கம் வயோதிக தோற்றத்தை குணப்படுத்துகிறது. மேலும் இந்த எண்ணெய் பெண்களின் மாதாந்திர ருதுவை ஒழுங்குபடுத்தும். கர்ப்பவதிகளுக்கு கருச்சிதைவை உண்டாக்கும்.


உள் மருந்தாக வயிற்றுப் புண் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்களைக் குணப்படுத்தும். சோற்றுக் கற்றாழை சோறை எடுத்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைமுழுகி வர மயிர் வளர்வதுடன் நல்ல தூக்கமும் உண்டாகும்.


வைட்டமின் சத்துகள் குறைவதால் மூட்டுகளுக்கு இடையே உள்ள கூழ் போன்ற திரவம் குறைகிறது.இதனால் மூட்டுவலி ஏற்படுகிறது. இவற்றை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் மூட்டு வலி என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோயாக மாறி விடக்கூடும்.


மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற "அலோசன் ஹெல்த் டிரிங்க்' உதவும். இதில் உள்ள ஊட்டச் சத்துகள் நிறைந்த தண்ணீர் உடலில் குறைவாக உள்ள நீர்ச் சத்தை அதிகப்படுத்தி மூட்டுகள் சரியாக இயங்குவதற்குத் தேவையான கூழ் போன்ற திரவத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது.


மனித உடலில் மடிந்து போன செல்களை மீண்டும் உயிர்ப்பித்து எல்லா வகையான மூட்டு வலிகளுக்கும் இந்த பானம் நிவாரணம் அளிக்கிறது.

சுகம் தரும் சோற்றுக் கற்றாழை வீட்டிலேயே இருக்கவேண்டிய ஒரு அழகிய மூலிகை .அழகுதரும் மூலிகை .



***
by-திரு.அ.சுகுமாரன்
thanks இணையம்
***



"வாழ்க வளமுடன்"

அல்சர் நோய் குணப்படுத்தும் வழிமுறைகள் !

அசைவம்-கார உணவால் உருவாகும் அல்சர் நோய் குணப்படுத்தும் வழிமுறைகள்




வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதாப இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் (அல்சர்) இருக்கலாம், என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள கொலேரேக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-


இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற் பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண் என்கிறோம். செரிமானப் பகுதிகள் எப்போதும் ஈரமாகவும் மூடப்படாமலும் இருக்கின்றன. இதனால் இரைப்பையில் செரிமானத்துக்கு தேவைப்படும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் பாதிப்புக்கு உள்ளாகின்றன. குடல் புண் வந்துள்ள சிலருக்கு இந்த அமிலம் அதிகமாகச் சுரப்பதும் உண்டும். இதை அமில குடல் புண் நோய் என்றும் அழைக்கிறோம்.

*

மன அழுத்தம், தவறான உணவு பழக்கம், வறுத்த உணவுகள், இரவில் தாமதமாக சாப்பிடுவது, இறைச்சி, கோழி உணவுகள், கார உணவுகள் போன்றவை அல்சருக்கு முக்கிய காரணங்கள் ஆகும்.


***

புண் எதனால் ஏற்படுகிறது?

புகைப்பிடித்தல், புகையிலையைச் சுவைத்தல், மது அருந்துதல் மற்றும் சில மருந்துகள் குடல் புண் வருவதற்கு வழி வகுக்கின்றன.

*

குடல் புண் வகைகள்:-

குடல் புண்ணை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

1. வாய்வுக் கோளாறில் ஏற்படும் குடல் புண்.
2. சிறு குடலில் ஏற்படும் குடல் புண்.

*

குடல்புண்:

காரணமின்றி பற்களைக் கடித்தல், துளைப்பது போன்ற வலி அல்லது எரிச்சலோடு கூடிய வலி, மார்பு எலும்பு கூட்டுக்கு கீழே வயிற்றுப் பகுதியில் ஒன்றுமே இல்லை என்ற மாயத் தோற்றமும் இருந்தால் குடல் புண் இருப்பதாக அர்த்தம்.


இந்தப் பகுதியில் ஏற்படும் அசவுகரியங்கள், சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள்ளாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ ஏற்படுகின்றன. இதை உணவு சாப்பிடுவதன் மூலமாகவோ அல்லது அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகளை உட்கொள்வதின் மூலமாகவோ நிவர்த்தி செய்யலாம்.


சில நேரங்களில் வாந்தியினால் வலி குறைகிறது. அபூர்வமாக வலி உள்ள வயிற்றுப் பகுதிக்கு நேர் பின்பக்க மாக வலி ஏற்படும். இவ்வலியானது காலை சிற்றுண்டிக்கு முன்பு வருவதே இல்லை. இரவு 12-2 மணி அளவில் அதிகமாக காணப்படுகிறது.

***


நெஞ்சு எரிச்சல்:

சிலநேரங்களில் அமில நீரானது, வாëந்தியாவதும் உண்டு. குடல் புண் வலி தனியாக வருவதே இல்லை. வலி இருக்கும் காலத்தில் மார்பு எலும்புக் கூட்டுக்கு பின்னால் எரிவது போன்ற உணர்ச்சியும் உடன் ஏற்படும். இதையே நெஞ்செரிச்சல் என்கிறோம்.


வலி அதிகம் ஏற்படுவதே இல்லை. ஆனால் உடல் நலக்கேடு அமைதியற்ற நிலை, பற்களைக் கடிக்கும் தன்மை முதலியன உண்டாகும்.


இந்த மாதிரியான அசவுகரியங்கள் அல்லது வலி அரை மணி முதல் இரண்டு மணி நேரம் வரை நீடிக்கலாம். ஒரு நபர் எந்த அளவுக்கு அடிக்கடி சாப்பிடுகிறார் என்பதைப் பொறுத்து இவ்வலி ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை கூட வரும்.


சில நாட்களுக்கோ அல்லது மாதங்களுக்கோ விட்டு விட்டு வருவதும் தொடர்ந்து இருப்பதும் உண்டு. பிறகு இவ்வலி மறைந்து, சில வாரங்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கோ தோன்றாமலும் இருக்கலாம்.

***

ரத்தப் போக்கு:

சிலருக்கு வயிற்று வலி குறிப்பிட்ட இடைவெளி விட்டு தோன்றி, பல வருடங்களுக்கும் நீடிக்கலாம். அப்படி இருப்பின், அவருக்கு நாள்பட்ட குடல் புண் இருப்பதாக கருதலாம். அடிக்கடி வரக் கூடிய பசி உணர்வை நாம் அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனென்றால் அது குடல் புண்ணின் விளைவாக கூட இருக்கலாம். மருத்துவம் செய்யா விட்டால் குடல் புண்ணுக்கு மருத்துவம் செய்யா விட்டால் ரத்தக் கசிவும் சமயத்தில் ரத்தப் போக்கும் ஏற்படும்.


இரைப்பையில் சுரக்கும் நீர்களும் அமிலமும் குடல் புண்ணின் மேல் அடிக்கடி படுவதால், இரைப்பையில் துவாரம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அப்போது இரைப்பையில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் குழிவான அடிவயிற்றுப் பகுதிக்குத் தள்ளப்பட்டு, வயிற்று நீர்களால் அடி வயிற்றில் இருக்கும் உறுப்புகள் அனைத்தும் நனைந்து விடுகின்றன.


ஆகவே, வயிற்று அறைகள் நோய்க் கிருமிகளால் பாதிக்கப்படு கிறது. அதனால் வயிற்றை அறை தோல்களில் வீக்கம் ஏற்படு கிறது. இதை உடனடி அறுவை சிகிச்சை மூலமே குணப் படுத்த முடியும். சாப்பிடும் உணவு வயிற்றுக்கு செல்ல முடியாதவாறு தடைகள் ஏற்படலாம். இதனால் சாப்பிட்ட உணவு வாந்தியாகி விடுகிறது.


இதுவும் அறுவைச் சிகிச்சையால் தான் குணப்படுத்த முடியும். ஆகவே குடற்புண் இருந்தால் மேலே கண்ட பல வழிகளில் துன்பம் ஏற்படும். எனவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

***


செய்ய வேண்டியவை:

குறைந்த அளவில் அடிக்கடி சாப்பிட வேண்டும். தயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட சுவைட்டிய லஸ்சி போன்ற பானங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மருத்துவர் கூறிய மருத்துவ சிகிச்சையை ஒழுங்காகப் பின்பற்ற வேண்டும்.


1. வயிற்றுக்கு ஒத்துவராத உணவை ஒதுக்கிவிட வேண்டும்.

*

2. மிகவும் சூடாக உணவுகளை சாப்பிடக் கூடாது. குளிரூட்டப்பட்ட உணவுகள் முக்கியமாக தயிர் முதலியன நல்லது.

*

3. பச்சையான, நன்கு பக்குவம் அடையாத வாழைப் பழங்கள் குடல் புண்களை ஆற்றும் குணத்தைப் பெற்றிருக்கின்றன.

*

4. பச்சைத் தண்ணீரை அதிகம் குடிக்க வேண்டும். வலியோ அல்லது அசவுகரியங்களோ ஏற்படலாம் என்ற உணர்வு ஏற்பட்ட வுடன் ஒரு டம்ளர் நீர் குடித்தால் அமிலமானது நீர்த்துப் போய் விடுகிறது.

*

5. இடுப்பில் உள்ள பெல்ட் மிகவும் தளர்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக உடை அணியக் கூடாது. மருத்துவரின் ஆலோசனைப் படி படுக்கையின் தலைப் பாகத்தை சிறிது உயர்த்தி கொள்ளலாம். யோகாசனம், தியானம் முதலியவற்றை பயில வேண்டும்.

*

6. எப்போதும் ஜாலியாக இருக்க வேண்டும். அலுவலக வேலைகளை அங்கேயே விட்டு விட வேண்டும். முறையாக, இறுக்கம் இல்லாத வாழ்வைப் பின்பற்ற வேண்டும். சுகாதாரத்தை பின்பற்றி குடல் புண் வருவதை தவிர்க்க வேண்டும்.


*

7. புகை பிடிக்கக் கூடாது, மது, காபி பானங்கள் குடிக்க கூடாது வயிற்று வலியை அதிகப்படுத்தக் கூடிய உணவு வகைகளை உண்ணக் கூடாது. அதிகமாகக சாப்பிடக் கூடாது. பின்-இரவு விருந்துகளை தவிர்க்க வேண்டும்.

***


நவீன சிகிச்சைகள்:

1. செரிச்சல், புளித்த ஏப்பம், மேல் வயிறு வலி போன்றவை அடிக்கடி வந்தால் அல்சர் இருப்பது நிச்சயம். எனவே இந்த அறிகுறி இருந்தால் உடனடியாக வயிறு தொடர்பான சிறப்பு மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.

*

2. வயிற்றில் சில அமிலங்கள் அதிகமாக சுரந்தாலும் அல்சர் ஏற்படும். இதை மாத்திரைகள் மூலம் குறைக்க முடியும். இதனால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

*

3. அல்சரை குணப்படுத்த தற்போது புதுவித மருந்து, மாத்திரைகள் உள்ளன. அவற்றை வயிறு தொடர்பான சிறப்பு மருத்து வர்கள் ஆலோசனையின் பேரில் உட்கொள்வது நல்லது. மருந்து கடைக்காரர்களிடம் சென்று ஏதாவது சில மாத்திரைகளை வாங்கி உட் கொள்வது ஆபத்தானது.

*

4. நவீன சிகிச்சை மூலம் சென்னையை சேர்ந்த பல அல்சர் நோயாளிகள் குணமடைந் துள்ளனர். அல்சர் நோயாளிகள் தீவிரமான வேலைகளில் இருந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஓய்வு எடுத்தாலே போதுமானது.

*

5. குடல் புண் உள்ளவர்களுக்கு உரிய ஆகாரம் என்னப பொரித்த அல்லது தாளிதம் செய்த உணவு வகைகள், ஏற்கனவே உள்ள குடற் புண்களை அதிகப்படுத்தும் என்பதற்கு போதிய சான்றுகள் இல்லை. இருப்பினும் சிபாரிசு செய்யப்பட்ட உணவு வகைகளை சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

*

6. குறிப்பிட்ட நேரத்தில் உண்ணும் பழக்கம், காபி, மது, கார்பண்டை ஆக்சைடு அடைக்கப்பட்ட குளிர் பானங் களை தவிர்க்க வேண்டும், டீ தடை செய்யப்பட்ட பானம் அல்ல. தினமும் சாப்பிடும் டீயின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.


*

தொடர்புக்கு :

அல்சர் நோய இருப்போர் டாக்டர் வெங்கடேஷ் முனி கிருஷ்ணனை 9677000400 என்ற நம்பரிலும் 04442612803 என்ற நம்பரிலும் thodarpu கொள்ளலாம் .


***
by-டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்
thanks மாலைமலர்
***


"வாழ்க வளமுடன்"

உயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்:

வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர்.




இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

*

`இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள சென்னை கொலரக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-

*

`பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, எண்ணையில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ், ஐஸ் கிரீம் இதெல்லாம் நொறுக்குதீனி (ஜங்க்புட்) அயிட்டம் தான். இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடே இது தான். ஒவ்வொரு உணவும் இப்படித் தான் சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவது தான் நல்லது. மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும். சர்க்கரையும் அப்படித்தான்.

*

அமோனியா கலந்த பாக்கெட் உணவுகள்:

1. `ஜங்க் புட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்று நோயை வரவழைக்கக் கூடியது. இந்த மாதிரியான உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரை வைக்கணும். ஆனால், இதை எப்பவும் மெயின்டெயின் பண்ண முடியாது. இது போன்ற நேரங்களில் ஜங்க் புட்டில் நீர்க்குமிழிகள் உண்டாகும். இது உணவுப் பொருள் மீது படிந்து கெட்டித் தன்மையை ஏற்படுத்திவிடும்.

*

2. பட்டாணி பாக்கெட் வாங்கி ஆட்டிப் பார்த்தோம் என்றால் அது தனித்தனியாக ஆடும். ஆனால் நீர்க்குமிழி உண்டான பாக்கெட் அப்படி ஆடாமல் மொத்தமாக ஆடும். இது கெட்டுப் போன நிலையில் உள்ள பாக்கெட்.

*

3. அதே போல் புரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள் இந்த வண்ணங்களை ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் ரத்தத் திற்குக் கிடையாது. சிறு நீரகமும் இதை சுத்திகரிக்காது.

*

4. ஒரு பாக்கெட்டில் எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ அவ்வளவு குறைவான (100 கிராம்) அளவு தான் கலப்பார்கள். ஆனால், இதைச் சாப்பிடும் ஒரு குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடக் கூடாது.

*

5. ஆனால் இது பற்றி ஜங்க் புட் சாப்பிடுகிற யாருக்கும் தெரிவதே இல்லை. `வட இந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் எப்போது தயாரித்தது. அவை சுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது.


அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும் நறுக்கிய வெங்காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பார்கள். இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண் கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துல ஒருத்தர் தும்மினால் கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும் எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.



2. வெப்பநிலையில் மாறுதல்:

சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய நாகரிகத்தில் இருந்து வந்தவை தான். ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளின் தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபத்தவே கூடாது.

ஒன்றரை நிமிடத்தில் 150 டிகிரியில் சூடுபடுத்தும் போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம் உடலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட் பார்மேன்சன்' என்று சொல்லி உலக விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்கிறார்கள்.

*

வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி:

1. காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

*

2. பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.

*

3. ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.

*

4. இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

***


3. அசைவம்:

அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணையில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணை தடவி வறுத்து சாப்பிடலாம்.

*

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவை குடலை பதம் பார்க்கும். அவற்றை தவிர்ப்பது நல்லது. நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படுவது சர்வ நிச்சயம். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையென்றால் இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.


***

4. இதய நோய் ஆபத்து


ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும்.


இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம் என்கிறார் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.


*

தொடர்பு கொள்ளுங்கள:

டாக்டர் வெங்கடேஷ் போன் நம்பர் 9677000400 .
குடல் தொடர்பான எந்த சந்தேகம் இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள்

பதில் சொல்கிறேன்


***
by-டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்
thanks டாக்டர்
***




"வாழ்க வளமுடன்"

கோடை காலமும், குழந்தை பாரமரிப்பும்

கோடை வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் குழந்தைகளை எவ்வகையான நோய்கள் பாதிக்கும்? அதில் இருந்து குழந்தைகளை காப்பாற்றிக் கொள்வது எப்படி? என்பது பற்றி இக்கட்டுரையில் விளக்கியுள்ளேன். படியுங்கள்! பயன்பெறுங்கள்!



கோடை வெயில் பாதிப்பில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?


குழந்தைகளின் வெப்பம் தாங்கும் தன்மை பெரியவர்களை விட குறைவு. குழந்தைகளின் வியர்வை சுரக்கும் தன்மையும் குறைவு. குழந்தைகளின் உடம்பு பரப்பளவு அதிகமாதலால் அதிகமான வெப்பத்தை ஈர்க்கும் தன்மை உண்டு. மேற் சொன்ன காரணங்களால் கடுமையான வெயிலால் பல பாதிப்புகள் ஏற்படலாம்.

*

1. வெப்பத்தினால் கெண்டைக்கால் இழுத்துப் பிடித்தல் இதற்கு உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ். திரவம்) மெதுவாக காலை நீட்டி மடக்குதல் முதலுதவி சிகிச்சை ஆகும்.

*

2. வெப்பத்தால் மயக்கம், தலை சுற்றல் - நீண்ட நேர பயிற்சியால் இது ஏற்படலாம். இதற்கு நீராகாரம் குடித்தல், குளிர்ச்சியான சுற்றுச்சூழலில் படுக்க வைத்தல் ஆகியவை முதலுதவி சிகிச்சை ஆகும்.

*

3. வெப்பத்தால் நீர் கட்டுதல் இதன் அறிகுறி - வெப்பத்தில் இருக்கும்போது கை, கால் வீக்கம் வருதல் குளிர்ச்சியான சுற்றுச்சூழல் இதற்கு சிறந்ததாகும்.

*

4. மிதமான வெப்பம் தாக்கல் (99 டிகிரி - 104 டிகிரி பாரன்ஹீட் அளவு): இதற்கு தலைவலி, வாந்தி, தலைசுற்றல், வலுவிழத்தல், மயிர்கூச்செரிதல் போன்ற அறிகுறி ஏற்படும்.

*

5. குளிர்ச்சியான சுற்றுச் சூழலில் வைத்தல், காற்றாடி அல்லது குளிர்சாதனம் செய்யப்பட்ட அறையில் வைத்தல், அதிகப்படியான உடைகளை அகற்றுதல், உலக சுகாதார உப்பு சர்க்கரை கரைசல் நீர் (ஓ.ஆர்.எஸ்) கொடுப்பது இதற்கு சிகிச்சை முறையாகும். உடனடியாக மருத்தவரை அணுகுவது நல்லது.



***


கடுமையான கோடை வெப்ப தாக்குதலை தடுக்கும் முறைகள்:


1. குழந்தைகள் விளையாடும் நேரம் அல்லது வெளியில் செல்லும் நேரத்தை காலை அல்லது மாலை நேரங்களில் வைத்துக்கொள்ளலாம்.

*

2. உடம்பில் குறைந்த நீர்சத்தை சமன் செய்ய போதிய அளவு நீர் உலக சுகாதார உப்பு சர்க்கரை நீர்:

இளநீர் பழச்சாறு போன்றவைகளை விளையாடும்போது அல்லது பயிற்சி செய்யும் முன்பும் மற்றும் பின்பும் குடித்தல், குளிர்ச்சியான நீர் அல்லது சுற்றுசூழல் பருத்தி துணிகளை அணிதல் சிறந்தது.


***

கோடை காலத்தில் குழந்தைகளை பாதிக்கும் நோய்கள் எவை?


கோடையில் வரும் நோய்:


1. வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு
2. சின்னம்மை
3. மணல்வாரி அம்மை
4. நீர்க்காமாலை
5. வியர்க்குரு

**

1. வாந்தி - வயிற்றுப்போக்கு

வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு வர முதல் காரணம் சுத்தப்படுத்தப்படாத நீரைக் குடித்தல், ஈ மொய்க்கும் பண்டங்கள் மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளுதல் காரணமாகும்.

**

2. நீர் சத்து குறைதலின் அறிகுறிகள்

படபடப்புடன் இருத்தல், அதிகப்படியான தாகம், சிறுநீர் குறைதல், சோர்வு, குழி விழுந்த கண்கள், வாய் உலர்ந்து இருத்தல், குழந்தையின் எடை குறைதல், இருதய துடிப்பு அதிகமாதல் ஆகிய அறிகுறிகள் தெரிய வரும்.

*
வயிற்றுப்போக்குடன் நீர்ச்சத்து குறையாமல் இருந்தால் தொடர்ந்து உணவு கொடுக்க வேண்டும். ஒவ்வொரு முறைவயிற்று போக்கின் போது ஈடுசெய்ய வழக்கமாக கொடுப்பவற்றைவிட அதிகப்படியான நீர் ஆகாரம் கொடுக்க வேண்டும். அதிகப்படியான நீர் ஆகாரம் என்பது உலக சுகாதார அமைப்பு சர்க்கரை கரைசல் நீர், சாதாரண தண்ணீர், அரிசி கஞ்சி, தயிர்.

*
இரண்டு வயதுக்கு குறைவாக 50-100 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப்போக்கின் போதும் ) கொடுக்க வேண்டும்.

*
இரண்டு வயதுக்கு மேல் இருந்தால் 100-200 மி.லி. (ஒவ்வொரு வயிற்றுப் போக்கின் போதும்) கொடுக்க வேண்டும். மேலும் மருத்துவரை அணுகுவது நல்லது.



**

3. நீர்சத்து குறைந்தால்

வயிற்றுப்போக்குடன் மிதமான நீர்ச்சத்து குறைந்தால் மேற்சொன்ன முறையை கடைப்பிடிக்க வேண்டும்.


வயிற்றுப் போக்குடன் அதிகமா நீர்ச்சத்து குறைந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதுவரை மேற்சொன்ன முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.


**

4. சின்னம்மை என்றால் என்ன?

வரிசெல்லா ஜோஸ்டர் வைரஸ் (விஜெட்வி) எனும் கிருமிகள் முதன் முதலாக வெளிப்படுத்தப்படுவதால் ஏற்படும் ஒரு வைரஸ் நோய் இது. உடல் முழுவதும் வரும் கொப்புளங்கள் மற்றும் காய்ச்சல் மூலம் இந்நோயை கண்டுபிடிக்கலாம்.

*

1. சின்னம்மையின் அறிகுறிகள் என்ன?

பொதுவான அறிகுறிகள் ஜூரம், குளிர் நடுக்கம், குமட்டல் மற்றும் வாந்தி ஆகும். வெளிப்படையாக இது தெரியும். நன்கு அறியப்பட்ட அறிகுறி ரணமாக மற்றும் அதிக அரிப்பு உள்ள கொப்புளங்களாக தோன்றும். பெரும்பாலான குழந்தைகளுக்கு 200-300 காயங்கள் இருக்கும். பின்னர் இது பொருக்காக மாறுகிறது.


*

2. சின்னம்மை பரவக்கூடியதா?

ஆம். பரவக்கூடியது. கொப்புளங்கள் வெளி வந்த சில தினங்களுக்கு முன்பு எல்லா காயங்கள் மீதும் பொருக்குத் தட்டும் வரை சின்னம்மை மிகவும் தொற்றிப் பரவும் நோய்.


அதாவது அவைகள் உலரும் வரை இது வழக்கமாக கொப்புளங்கள், வெளிவர ஆரம்பித்து ஒரு வாரத்திற்குள் ஏற்படும். பொதுவாக இந்த வைரஸ் கிருமிகள் காற்றினால் எடுத்து செல்லப்படும் நீர்த்துளிகளால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவுகிறது. தொற்று பாதிக்கப்பட்டவர் சுற்றி இருக்கும் காற்றில் இருமினாலோ அல்லது தும்மினாலோ மற்றும் திரவங்களை வெளியிடுவதன் மூலம் இது நேரிடுகிறது.


மேலும், சின்னம்மை அல்லது ஹர்பிஸ் உள்ளவர்களுடன் நேரடி தொடர்பினாலும் இது பரவலாம். ஏனெனில் ஈரமாக உள்ள காயங்களில் தொற்று பாதிக்கப்பட்ட கர்ப்பமாக உள்ள தாயிடமிருந்து கர்ப்பத்தில் இருக்கும் உஅல்லது பிறந்த குழந்தைக்கும் பரவக்கூடும்.


*

3. இந்த வைரஸ் கிருமி யாரை அதிகம் பாதிக்கும்?


சின்னம்மை குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் ஆண், பெண் என பாதிக்ககூடியது. பெரும்பாலானவர்க்கு சிறு பிராயத்தில் அல்லது எப்போதாவது சின்னம்மை வருகிறது. ஆனால் முன்பே பாதிக்கப்படாத சின்னம்மை உள்ளவருடன் தொடர்பு கொள்ளும்போது தொற்று பாதிக்கப்பட்டு குழந்தைகளை பாதிப்பபதால் ஆசிரியர்கள் மற்றும் குழந்தை பராமரிப்பு மையங்களை நடத்துபவர்கள் போன்று குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிப்பவர்களை சின்னம்மை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.


அத்துடன் ஆரோக்கிய பராமரிப்பு அளிப்பவர்கள் (மருத்துவர்கள், நர்ஸ், மருத்துவமனை ஊழியர்கள்) தொற்று பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. ஏனெனில் அவர்கள் தங்கள் வேலையை செய்யும்போது பாதிக்கபட்டவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். குழந்தை பிராயத்தில் சின்னம்மை வராத பெரியவர்களுக்கு இப்போது அது வந்தால் மிகவும் கடுமையாக விளங்கக்கூடும்.


*

4. குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கு வரும் சின்னம்மை வேறுபட்டதா?


குழந்தைகளுக்கு வரும் சின்னம்மையில் இருந்து பெரியவர்களுக்கும் வரும் சின்னம்மை கடுமையாக இருக்கும். ஜூரம் அதிகமாகவும், நீண்ட காலத்திற்கும் இருக்கும். கொப்புளங்கள் அதிகமாகவும், ஆழமாகவும், அதிக தழும்புடனும் இருக்கும். வாழ்க்கைமயின் பிற்காலத்தில் சின்னம்மை வந்தால் சிக்கல்கள் மற்றும் உயிருக்கு அபாயம் இருக்கும்.


***

5. சின்னம்மை வருவதை எவ்வாறு தடுப்பது?

தொற்று பாதிக்கப்பட்டவர்களை பள்ளி அல்லது வேலை இடங்களில் தனித்து வைப்பதன் மூலம் இந்த வரைஸ் நுண் கிருமி பரவுவதை குறைக்க உதவும். சின்னம்மையால் அவதிப்படுவதை தவிர்க்க தடுப்பூசி திறன் மிக்க வழியாகும்.

*

தடுப்பூசி போட்டபின் சின்னம்மை வர வாய்ப்பு உள்ளதா?


தற்போது கிடைக்கும் வரிசெல்லா தடுப்பூசிகளின் மருத்துவ ஆய்வுகள் அவை சாதாரண சின்னம்மைக்கு எதிராக கிட்டத்தட்ட 100 சதவீதம் பயனுள்ளதாகவும், நல்ல சகிப்பு தன்மை உடையதாகவும் காட்டுகிறது. ஆனால் தடுப்பூசி பெற்றவர்களின் 1-4 சதவீதத்தினருக்கு தீவிரமற்ற இந்நோய் வரும் அறிகுறிகள் வந்திருப்பதாக இந்த தடுப்பூசியின் நீண்ட கால பாலோ அப் தெரிவிக்கிறது.


சுருக்கமாக சொன்னால் அந்தந்த வயதுகளில் தடுப்பூசிகளை கண்டிப்பாக போட வேண்டும். பாதுகாக்கப்ப்ட்ட குடிநீர் மற்றும சுகாதாரமான வகையில் உணவுகளை உட்கொள்ள வேண்டும். கடுமையான வெயிலில் குழந்தைகளை விளையாட மற்றும் வெளியில் கூட்டச் செல்லக்கூடாது.


மேற்சொன்ன முறைகளை கையாண்டால் கோடை காலத்தை இனிமையாகக் கழிக்கலா



***
by-டாக்டர். க. இராஜேந்திரன்
thanks டாக்டர்
***




"வாழ்க வளமுடன்"

சர்க்கரை நோயின்றி வாழ :)

தினமும் எளிய உடற்பயிற்சிகளை செய்து சர்க்கரை வியாதியில் இருந்து தப்ப முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.



இது தொடர்பாக இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*

காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.

*

தற்போதைய நிலையில் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களுக்கு, அரை மணி நேர நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

*

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடை பயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை.

*

ஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் 2 வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும்.

*

எனவே சர்க்கரை நோயின்றி வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், தினமும் குறைந்தது 15 நிமிடமாவது நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.


***
thanks இணையம்
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "