...

"வாழ்க வளமுடன்"

27 மார்ச், 2012

கூந்தல் உதிர்வதை தடுக்க…..



சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.


இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்.


இதோ சில டிப்ஸ்



வெந்தயம்:

கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.



எள்ளுச்செடி:


எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும்

பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.


 ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது.


என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள்.....


 இதோ சில டிப்ஸ்…



* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.



* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.



* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.


* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.


* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.


* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.


* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.


* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.


* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.


* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.



***
thanks Mohamed
***




"வாழ்க வளமுடன்"
      

பட்டுச் சேலை பராமரிப்பு!



1. விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.


2. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.


3. எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.


4. ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டு.


5. பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.



6. அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.



7. பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.



***
thanks Mohamed
***



"வாழ்க வளமுடன்"
      

எக்ஸாம் டிப்ஸ் !


வருடம் முழுதும் நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. கடைசி நேரத்தில் பதறிவிட்டால் மொத்த உழைப்பும் வீண். வில்லிலிருந்து கிளம்பும் அம்பாக மனமும் உடலும் இருப்பது தேர்வுக்கு அவசியம்.




அதற்க நிபுணர்கள் சொல்லும் ஆலேசானைகள் என்ன?


“மாணவர்களுக்கு அவங்களோட பெற்றோர்தான் பதற்றத்தை ஏற்படுத்தறாங்க. சில பசங்க எவ்வளவு திட்டினாலும் அலட்டிக்க மாட்டாங்க.

சில பசங்க லேசா கோபப்பட்டாலே இடிஞ்சு போய் உட்கார்ந்திடுவாங்க. பசங்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு பெற்றோர் செயல்படணும்.

முதலில் தங்கள் குழந்தைகள் படிப்பில் கெட்டியா, சுமாரா, வெகு சுமாராங்கிறது பெற்றோருக்குத் தெரிஞ்சிருக்கணும். அதற்கேற்பத்தான் தேர்வில் ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும். அதிக மார்க்க எடுக்கலைனா அம்மா அப்பா திட்டுவாங்கங்கிற பயம் நல்லா படிக்குற பசங்களைக் கூட திணற வச்சுடும்.


 பெற்றோர் இவ்வளவு நாள் பசங்களை பயமுறுத்தியிருந்தாலும் தேர்வு நேரத்திலாவது அவங்ககிட்ட இணக்கமா பேசணும். உன்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணு. தேர்வில் சுலபமான வினாக்கள்தான் வரும்.


நீ நல்லா எழுதுவேங்கிற பெற்றோரின் உற்சாக வார்த்தைகளே பசங்களுக்கு தெம்பைக் கொடுக்கும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதேங்கிற கீதை உபதேசம் தேர்வுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். படிப்பில் தாங்கள் எங்கே நிற்கிறோம்ங்கிறதை மாணவர்கள் தெளிவா புரிஞ்சுக்கணும். ஒரு வருஷமா படிக்க முடியாததை ஒரு வாரத்தில் படிச்சுட முடியாது.


ஏற்கெனவே படிச்சதை ரிவைஸ் செஞ்சுட்டு, மீதி நேரத்துலதான் புதுப் பகுதிகளைப் படிக்கணும். தேர்வையொட்டி பசங்ககிட்ட எதிர்பார்க்குற வாழ்க்கை முறையைப் பெற்றோரும் பின்பற்றத் தயாரா இருந்தா ரொம்ப நல்லது. அதுவே பசங்களுக்குத் தொந்தரவா ஆகிடக்கூடாது’ என்கிறார் மனநல ஆலோசகர் டாக்டர் அகஸ்டின்.



படித்த மாணவர்கள் கூட தேர்வு நேரத்தில் முடங்கிவிட இன்னொரு காரணம், உணவுப் பழக்கவழக்கங்களில் நேரும் குளறுபடி. இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் நளினியிடம் கேட்டோம். “புள்ள ராப்பகலா படிச்சு கஷ்டப்படுது.



 நாக்குக்கு ருசியா சமைச்சுக்கொடுப்போம்’னு அம்மாக்கள் களத்துல குதிச்சு டிராக்கை மாத்திடக்கூடாது.


எண்ணெய், காரம், மசாலா அதிகமான உணவுகள் தேர்வு நேரத்துல பசங்களைக் கஷ்டப்படுத்திடும்.


முட்டை, சிக்கன், மட்டன் உணவுகள் அதிகமாக சாப்பிடக்கூடாது.


மீன் உணவுகள் இதயத்துக்கு ஆற்றலைக் கொடுக்கும்.


சுண்டல், முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட உணவுகள் சாப்பிடலாம். பழவகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடணும்.


மாதுளம்பழம், திராட்சை போன்ற பழங்கள் மூளைக்கு நல்லது.

வயிற்றுப்பிரச்னை உள்ள பசங்க கமலா, ஆரஞ்சு போன்ற பழங்களைத் தவிர்க்கணும்.


புத்திக்கூர்மைக்கு வைட்டிமின் ஏவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸும் அவசியம்.


கீரைகள், பப்பாளி, முள்ளங்கி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் இந்த விட்டமின்கள் இருக்கு என்கிறார் நளினி.


களம் காத்திருக்கிறது கலக்குங்க கண்மணிகளா!

***
thanks vayal
***




"வாழ்க வளமுடன்"

மலரும் மருத்துவமும் குங்குமப்பூ…

பூக்கள் வாசனைக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே உகந்தது என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணம். இந்தப் பூக்களில் மருத்துவமும் நிறைந்துள்ளது.


இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பூக்களை நுகரும்போது உடலுக்கு நன்மையளிக்கிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் நறுமணம் மிக்க மலர்களை பூஜைக்கு பயன்படுத்தினர்.


மலர்களைப் பயன்படுத்தி நோய்களை நீக்கும் முறைதான் மலர் மருத்துவம். இந்த மலர் மருத்துவம் தற்போது பிரசித்திப் பெற்றாலும், ஆதி காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் குங்குமப் பூவும் ஒன்று.


குங்குமப்பூவைப் பற்றி அறியாத பெண்கள் இருக்க மாட்டார்கள். கருவுற்ற தாய்க்கு குங்குமப் பூ கொடுத்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுப்பார்கள். குழந்தை சிகப்பாகப் பிறக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆரோக்கியமான சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.


குங்குமப் பூ இணூணிதண் இனத்தைச் சேர்ந்தது. இதன் பூக்களில் உள்ள இதழ்களும் மகரந்தமுமே மருத்துவத் தன்மை கொண்டவை. இதனை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறும். இது மேற்காசிய நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பயிராகிறது.
இதற்கு ஞாழல் பூ, காஸ்மீரகம் என்ற பெயர்களும் உண்டு.
Tamil – Kungumapoo
English – Saffron
Sanskrit – Kumkuma
Malayalam – Kugamapoo
Telugu – Kumkumapoova
Hindi – Kesar


குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம்-பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது
- அகத்தியர் குணவாகடம்


பொருள் – நீர் வேட்கை, மேகநீர், தலைவலி, கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், கருப்பை அழுக்கு போன்றவற்றைப் போக்கும்.




மருத்துவப் பயன்கள்


காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.


கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.


ஆண், பெண் இருபாலரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தலாம்.


ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்கி கருப்பையை வலுவாக்கும். மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும்.


கண் பார்வையை தெளிவாக்கும். 40 வயதைத் தாண்டியவர்களுக்கு உண்டாகும் வெள்ளெழுத்தைப் போக்கும். கண்களில் பூ, புரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.


தலையில் நீரேற்றம், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கும். நுரையீரல் சளியை நீக்கும்.


அஜீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும்.

***
நன்றி- ஹெல்த் சாய்ஸ்
***
 
 
"வாழ்க வளமுடன்"

நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறது



உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா? அப்படியானால் கவனமாகப் பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாதம் ஆகும் குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களுக்கான வார்த்தைகளைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே குழந்தைகளுக்கு இந்தப் புரிதல் வந்துவிடுகிறது.


குழந்தைக்கு இந்த வார்த்தை புரியுமா என்று யோசிக்காமல் அவர்கள் முன் இயல்பாகப் பேசிவந்தால், பின்னாளில் அவர்களின் மொழித்திறன் சிறப்பாக அமையும் என்பது ஆய்வாளர்கள் கூறும் தகவல்.


பொதுவாக, குழந்தைகள் ஒரு வயதாகும்போதுதான் வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று கருதப்பட்டு வருகிறது. அப்போதும்கூட, குழந்தைகள் தங்கள் தாய்மொழியின் ஒலி மூலங்களைத்தான் புரிந்துகொள்கின்றனவே தவிர, அர்த்தங்களை அல்ல என்றும் எண்ணப்பட்டு வருகிறது.

ஆனால் புதிய ஆய்வுக்குத் தலைமை வகித்த மனோவியல் நிபுணர்கள் எலிகா பெர்கெல்சன் மற்றும் டேனியல் ஸ்விங்லி கூறுகையில், `குழந்தையைக் கவனித்துக்கொள் பவர், `ஆப்பிள் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது அதை நோக்கிக் குழந்தையின் பார்வை திரும்புகிறது’ என்கிறார்கள்.


இதுதொடர்பான ஆய்வுக்கு, 6 முதல் 9 மாத வயதுள்ள 33 குழந்தைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முன்பு கணினித் திரையில் பல்வேறு பொருட்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கூறியதும் அதை நோக்கிக் குழந்தைகள் பார்வையைத் திருப்பின.


ஆறு முதல் ஒன்பது மாத வயதுக் குழந்தைகள், மற்ற படங்களை விட, சத்தமாகக் கூறப்பட்ட பொருட்களின் படங்களின் மீதே தங்கள் பார்வையை நிலைத்திருந்தன. இது, குறிப்பிட்ட வார்த்தைகள், குறிப்பிட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று குழந்தைகள் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


“இந்த வயதுக் குழந்தைகளும் இதைப் போல வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. `மம்மி’, `டாடி’ போன்ற வார்த்தைகளைக் குழந்தைகள் சீக்கிரமாகவே புரிந்துகொள்கின்றன என்று ஏற்கனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பல்வேறு வகையான வார்த்தைகளையும் குழந்தைகள் புரிந்துகொள்கின்றன என்று எங்கள் ஆய்வின் மூலம்தான் முதன்முதலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் ஆய்வாளர் ஸ்விங்லி.


***
thanks vayal
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "