*
10 மற்றும் +12 முடித்தப் பிறகு என்ன படிக்கலாம் என்பதர்க்கான வழிகாட்டி வரைபடம் !!
இன்னும் தெளிவாக காண படத்தை Clik செய்யவும்!
"வாழ்க வளமுடன்"
...
"வாழ்க வளமுடன்"
30 மே, 2011
''ஆயுளைப் பாதிக்கலாமா ஆயில்?''
'என்னை இந்த அளவுக்கு குண்டாக்கியது எண்ணெய்தான்!’ - பருமனான நண்பர் ஒருவர் சமீபத்தில் சிலேடையாகச் சொன்னது இது. நவீன நாகரிக உலகில் பல பிரச்னைகளுக்கு நாம் பயன்படுத்தும் அளவுக்கு அதிகமான சமையல் எண்ணெய்தான் காரணம் என்கிறது சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி. எண்ணெய், வயிற்றை மட்டும் அல்ல, வருமானத்தையும் பதம் பார்க்கும் ஒன்றாக மாறிவிட்டது.
பர்ஸை பாதிக்காத அளவுக்கு சிக்கனமாகவும், வயிற்றைப் பாதிக்காத அளவுக்கு பக்குவமாகவும் ஆயிலைப் பயன்படுத்தும் விதம் பற்றி இங்கே விளக்குகிறார் சென்னை விஜயா மருத்துவமனையின் உணவு ஆலோசகர் பி.கிருஷ்ணமூர்த்தி.
''சமையலில் எண்ணெய் சேர்ப்பது சுவைக்காக மட்டுமே என நம்மில் பலரும் நினைக்கிறோம். அது தப்பு. பொதுவாக ஒரு மனிதன் உடல் நலனுடன் இருக்க வேண்டும் என்றால் மாவுச் சத்து, புரதம், கொழுப்பு, விட்டமின் மற்றும் தாது உப்புகள் தேவை.
இந்த ஐந்தும் அளவோடு இருந்தால் வளமோடு வாழலாம். இதில் கொழுப்பு சத்துதான் ஆயில். தோலின் பளபளப்பு, நோய் எதிர்ப்பு சக்திக்கு எண்ணெய் தேவைப்படுகிறது. ஒரு நாளைக்கு, ஒரு மனிதனுக்குத் தேவையான மொத்த கலோரியில், சுமார் 25-35 சதவிகிதம் ஆயில் மூலம் கிடைத்தால் போதும்.
இதுவே சர்க்கரை நோயாளிகள் என்றால் 25-30 சதவிகிதமும், இதய நோயாளிகள் என்றால் 25 சதவிகிதமும் இருந்தால் போதும்.
சுமார் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு நம்மவர்களிடையே உடல் உழைப்பு அதிகமாக இருந்தது. குடும்பப் பெண்கள் சமையல் தொடங்கி துணி துவைப்பது வரை பெரும்பாலான பணிகளை உடலை வளைத்து நெளித்து செய்தார்கள். இன்றைக்கு எல்லாம் இயந்திரமயமாகி விட்டது.
உடல் உழைப்பு என்பது மருந்துக்குக் கூட இல்லை. உடல் உழைப்பு அதிகமாக இருந்த காலத்தில்கூட மக்கள் எண்ணெய் பதார்த்தங்களை அளவோடுதான் சாப்பிட்டார்கள். அந்த காலத்தில் விருந்து என்றால் மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறையோ இருக்கும்.
ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது அரிதாக இருக்கும். இப்போதோ மாதத்துக்கு குறைந்தது 5-6 விழாக்களில் பங்கேற்று வயிறு முட்ட சாப்பிடுகிறார்கள். அத்தனையும் ஆயில் பதார்த்தமாகவே இருக்கிறது.
நம்மவர்களின் தினசரி உணவுப் பட்டியலில் அதிக ஆயில் இருக்கும் பதார்த்தங்களான பஜ்ஜி, போண்டா, ஃபிரைட் ரைஸ், சில்லி சிக்கன், பர்க்கர் போன்றவற்றில் ஏதாவது ஒன்று நிச்சயம் இடம் பிடித்துவிடுகிறது.
பலரும் காலை 11 மணி வாக்கில் அல்லது மாலை 4 மணி வாக்கில் டீ, காபி உடன் பஜ்ஜி அல்லது போண்டாவை சாப்பிடுவதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவர்கள் வயிற்றை கெடுத்துக் கொள்வதோடு உடலில் தீமை செய்யும் கொலஸ்ட்ராலையும் ஏற்றிக் கொள்கிறார்கள்.
அந்த காலத்தில் உடலுக்கு தீமை செய்யாத நல்லெண்ணெய் மற்றும் கடலை எண்ணெய்யை நம்மவர்கள் அளவோடு உணவில் சேர்த்துக் கொண்டார்கள். ஏதாவது விருந்து விஷேசம் என்றால் மட்டுமே நெய்யை உணவில் சேர்த்துக் கொண்டார்கள்.
இன்றைக்கு விலைவாசி உச்சத்தில் இருப்பதால் வீட்டு பட்ஜெட்டை குறைக்க பாமாயில் போன்ற உடலுக்கு அதிக தீங்கு விளைவிக்கும் எண்ணெய்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கி இருக்கிறோம். ஒரு பக்கம் எண்ணெய் செலவை மிச்சப்படுத்துகிறோம் என்று செயல்பட்டு, மறுபுறம் அதற்கும் சேர்த்து மருத்துவத்துக்கு செலவழித்து வருகிறோம்.
இந்த விஷயத்தில் நம் மக்களிடம் இன்னும் அதிக விழிப்புணர்வு வர வேண்டும்!'' என்றவர் சற்று நிறுத்தி, அதிக ஆயில் எப்படி பிரச்னையாக மாறுகிறது என்பதையும் விளக்கினார்.
''நாம் சாப்பிடும் ஆயில் அளவு தேவைக்கு அதிகமாகும்போது கொலஸ்ட்ரால் என்கிற கெட்ட கொழுப்பாக மாறி ரத்தத்தில் சேர்கிறது. இது, ரத்தக் குழாயில் உறையும் அபாயம் இருக்கிறது. இதனால், ரத்த ஓட்டம் தடைபடும். அப்படி நடக்கும்போதுதான் மாரடைப்பு போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன.
தற்போது கணவன், மனைவி, இரு குழந்தைகள் உள்ள நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் மாதத்துக்கு மூன்று லிட்டர் ஆயிலை பயன்படுத்துகிறார்கள். இதை பாதிக்குப் பாதியாக ஒன்றரை லிட்டராக குறைப்பது உடல் நலனுக்கும் அவர்கள் பட்ஜெட்டுக்கும் நல்லது.
பொதுவாக வயது வந்த பெரியவர்களுக்கு ஒரு மாதத்துக்கு வீட்டில் 400-500 மில்லியும். 14 வயதான சிறுவர்களுக்கு சுமார் 300 மில்லி சமையல் எண்ணெய்யும் செலவழித்தால் போதும். மேலும் உடல் பருமன் உள்ளவர்கள், முகப் பரு உள்ளவர்கள் ஆயிலைக் குறைப்பது அவசியம்.
சாலையோர கடைகளில் விற்கப்படும் வடை, சமோசா, பஜ்ஜி போன்றவை ஆரோக்கியம் குறைந்த கசடு எண்ணெய்யில் பொறிக்கப்படுவதால், அவற்றை தினசரி மற்றும் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறைவான விலையில் கிடைக்கிறதே என்று, இவற்றை உண்பதால்தான் பெரிய அளவில் மருத்துவ செலவுக்கு ஆளாக வேண்டிய இக்கட்டு உருவாகிறது!'' -அக்கறையோடு சொல்கிறார் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி.
- சி.சரவண
***
thanks நாணய விகடன்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
மருத்துவ ஆலோசனைகள்
அலர்ஜியைக் (ஆஸ்துமா ) கட்டுப்படுத்த புதிய வழிகள்!!!
இன்று குழந்தைகளைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்னையாகக் கருதப்படுவது, ஆஸ்துமா. சுமார் 10 சதவிகிதக் குழந்தைகள் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். போதிய விழிப்பு உணர்வு இல்லாதது மட்டுமே, குழந்தைகள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம்.
சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையின் குழந்தைகள் நலப் பிரிவுத் துறைத் தலைவர் டாக்டர் பத்மாசனி வெங்கட்ரமணனிடம் பேசினோம்.
'ஆஸ்துமாவை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டால்... மற்ற குழந்தைகள்போல வெளியே சென்று விளையாட முடியாது. அடிக்கடி பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்ப தால், பாதிக்கப்பட்ட பிஞ்சுகளின் வாழ்க்கைத் துள்ளலே குறைந்துவிடும்.
பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, முன்பு சிரப் அல்லது மாத்திரை கொடுப்போம். தொடர்ந்து மருந்துகள் எடுப்பது, குழந்தைக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். தவிர, பெரியவர்கள் பயன்படுத்துவதுபோன்று, இன்ஹேலர் மூலம் மருந்துகளை உறிஞ்சுவது குழந்தைகளால் முடியாது. இப்போது, இந்த குறையைத் தீர்க்கும் வண்ணம், 'ஸ்பேஸருடன் பேபி மாஸ்க் இன்ஹேலர்’ என்ற கருவி உள்ளது. இந்தக் கருவியைக் குழந்தையின் முகத்தில் பொருத்தி, மருந்தை அழுத்தி னால் போதும்... மருந்து நேராகக் குழந்தைகளின் நுரையீர லுக்குச் சென்று விடும். மருந்து நேரடியாக நுரையீரலுக்கே செல்வதால், குறைந்த டோஸ் மருந்துகளே குணப்படுத்தப் போதுமானதாக இருக்கி றது. இதனால், பக்க விளைவுகளும் குறைந்துவிட்டன.
உறிஞ்சும் மருந்திலும் புதிய மாற்றங்கள் வந்துவிட்டன. முதலாவது குரூப், ரிலீவர். ஆஸ்துமா அறிகுறி தோன்றியதும் குழந்தைக்கு இந்த மருந்தைச் செலுத்தினால், உடனடி ஆறுதல் கிடைக்கும். பிரச்னை சரியானதும், இதை நிறுத்திவிடலாம். மீண்டும் பாதிப்பு அடிக்கடி ஏற்படாமல் இருக்க, பிரிவென்டர் எனப்படும் தடுப்பு மருந்தும் உள்ளது. இதைத் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இதுபற்றிய போதிய விழிப்பு உணர்வு பெற்றோர்களிடமே இருப்பது இல்லை. அதனால், நோய் அறிகுறி இருக்கும்போது மட்டுமே பயன்படுத்தி, குணமானதும் நிறுத்திவிடுகிறார்கள். இதனால்தான் மீண்டும் மீண்டும் ஆஸ்துமா பிரச்னை வருகிறது.
பொதுவாக மூச்சை இழுக்கும்போது, அது நுரை யீரலின் சின்னச் சின்னக் குழாய்கள் வழியாக உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் செல்கிறது. ஆஸ்துமா பாதிப்பில், இந்தக் குழாய்கள் சுருங்கி விடும். மருந்து செலுத்தியதும் மீண்டும் பழைய வடிவத்துக்குத் திரும்பும். இந்த தடுப்பு மருந்துகளை முறையாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நிரந்தரமாகவே அந்தக் குழாய்கள் சுருங்கிவிடுகின்றன. இதை ஏர்வே ரீ-மாடலிங் என்று சொல் வோம். அப்படி நிரந்தரமாகக் குறுகி விட்டால், மிகப் பெரிய பிரச்னையாகி விடலாம். எனவே, தற்காலிக நிவாரணம் கிடைத்துவிட்டது என்பதற்காக மருந்து எடுப்பதை நிறுத்திவிடாமல், குறிப்பிட்ட காலத்துக்குத் தொடர்ந்து மருந்து எடுத்துக்கொள்வது அவசியம்.
சில குழந்தைகளுக்கு தூசு அலர்ஜி மிகப் பெரிய பிரச்னை. அதற்காக, அந்தக் குழந்தையை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்க முடியாது. பள்ளிக்குச் சென்றுதான் ஆகவேண்டும், மற்ற குழந்தைகளுடன் விளையாடத்தான் வேண்டும். அப்படிப்பட்ட குழந்தை களுக்கு அந்த அலர்ஜியைத் தவிர்க்க, 'சப்லிங்குவல் இம்யூனோதெரபி’ அறிமுகமாகி உள்ளது. இந்தியா வில் ஒரு சில இடங்களில்தான் இந்த வசதி உள்ளது. இந்த முறையில், முதலில் குழந்தைகளுக்கு எதனால், என்ன மாதிரியான அலர்ஜி ஏற்படுகிறது என்பதைப் பரிசோதனை செய்து கண்டறிவோம். அதன் அடிப் படையில், அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பை உருவாக்கும் 'அலர்ஜன்’களை அந்தக் குழந்தையின் நாக்கில் வைப்போம். முதலில் சிறிய அளவில் ஆரம் பித்து நாளுக்கு நாள் அலர்ஜனின் அளவை அதிகமாக்குவோம். இதனால், குழந்தையின் உடலில் அலர்ஜிக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கூடிக் கொண்டே போகும். சிறிது காலத்தில் அந்த குழந் தைக்கு அலர்ஜி என்பதே இல்லாமல் போய் விடும்!
ஆஸ்துமா நோயில் இன்ஹேலர் விஷயத்தில்கூட பெற்றோர் மத்தியில் பயம் இருக்கிறது. அதாவது, போதைப் பழக்கம்போல, தங்கள் குழந்தைகள் இதற்கு அடிக்ட் ஆகிவிடுவார்களோ என்று அஞ்சுவார்கள். இந்த பயம் தேவை இல்லாதது. இதுபோன்ற தவறான எண்ணங்கள் பெற்றோர்களிடம் இருந்து விலகவேண்டும்.
அடிக்கடி இருமல், மூச்சு வாங்குதல், மாடிப்படி ஏறினாலோ, விளையாடினாலோ அதிகம் இளைப்பது, மூச்சு விடும்போது விசில் சத்தம் வருவது, மூச்சுவிட முடியாதபடி நெஞ்சில் அழுத்தம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். இந்த அறிகுறிகள் இருந்தாலே ஆஸ்துமாதான் என்றும் முடிவு செய்துவிட முடியாது. வேறு சில நோய்களுக்கும் இதே அறிகுறிகள் உள்ளன. ஆனால், எதுவாக இருந்தாலும் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சையைத் தொடர்வதுதான் நல்லது.
பெற்றோரில் ஒருவருக்கு ஆஸ்துமா பிரச்னை இருந்தாலும், குழந்தைக்கும் வர வாய்ப்பு அதிகம். தாய் கருவுற்று இருக்கும்போது புகைபிடித்தாலும், குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தியாவில் பெண்கள் புகைப்பது இல்லை என்றாலும், மற்றவர்கள் புகைக்கும்போது அதை கர்ப்பிணி சுவாசித்தாலும் அது கருவையும் பாதிக்கும். எனவே, கர்ப்ப காலத்தில் சிகரெட் புகையை சுவாசிக்கும் சூழலைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைக்கு ஆறு மாதங்களுக்கு வேறு ஆகாரங் களைத் தவிர்த்து, தாய்ப்பால் மட்டுமே புகட்டினால், அந்தக் குழந்தைக்கு ஆஸ்துமா வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு!' என்கிறார்.
அலர்ஜியை அண்டாமல் காக்க முயற்சிப்போம்!
- பா.பிரவீன்குமார்
***
thanks ஜீனியர் விகடன்
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
மருத்துவ ஆலோசனைகள்
பீர்பால் கதைகள் ! பாதுஷாக்களுக்கு என்றே வரும் சந்தேகம்..!
டில்லிப் பாதுஷாக்கள் என்றாலே கொஞ்சம் கேணத்தனமான, விபரீதமான, வித்தியாசமான சந்தேகங்கள் தினசரி வருவதை வாடிக்கையாகக் கொண்டவர்கள் என்பதை இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பாதுஷாக்களுக்கு சந்தேகம் வந்துவிட்டால் நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி என்று தண்டோரா எல்லாம் கிடையாது! அதற்குத் தான் முட்டாள் மந்திரி, பிரதானி, அப்புறம் கலைச் சேவை செய்கிறவர்கள், ஏதோ ஒரு காரணத்தை வைத்துப் பாராட்டு விழா ஏற்பாடு செய்கிறவர்கள் என்று ஒரு பெரிய துதி பாடிக் கும்பலே இருக்கிறதே! இப்படிக் கேணத்தனமான கூத்தை வேடிக்கை பார்க்க மற்ற எல்லாவற்றையும் மறந்து விட்டு வரத் தயாராக இருக்கிற மக்களுக்கு இலவசமாகக் கொஞ்சம் அனுமதி வழங்கி கலைச் சேவை "காட்டுகிற" தர்பாரும் உண்டு! இது போதாதா?
இப்படி அறிமுகத்துடன் இந்தப் பக்கங்களில் பீர்பால் கதைகளாக கொஞ்சம் பார்த்து வந்திருக்கிறோம்.நடுவில் கொஞ்சம் இடைவெளி விழுந்ததைச் சுட்டிக் காட்டி டில்லிப் பாதுஷாக்களின் பாதம் தாங்கி ஒருவர் மிகவும் வருத்தத்துடன் கேட்டார்.""ஏன் இப்போதெல்லாம் டில்லி பாதுஷா அக்பர் பீர்பால் கதைகள் வருவதே இல்லை? பாதுஷாவையும் பிரதமர் மாதிரி டம்மிப் பீஸ் பட்டியலில் சேர்த்து விட்டீர்களோ?"
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை! பீர்பாலையும், அக்பரையும் மறந்து விட்டால் டில்லி எப்படி நினைவுக்கு வரும்? நடுவில் வேறு கவனங்கள், வாசிப்பு என்று இருந்துவிட்டதால் மே மாதக் கடைசி வாரத்துக்குப் பிறகு பீர்பால் கதைகளைத் தொட நேரம் கிடைக்கவில்லை. அதற்குப் பரிகாரமாக, இந்த வாரம், ஒரே பதிவில் இரண்டு குட்டிக் கதைகள்! குட்டி என்றால் சின்னது என்று மட்டுமே அர்த்தம்!
குட்டி என்று சொன்னேன் அல்லவா! இதோ, பீர்பாலுடைய குட்டிப் பெண் அக்பரைத் திணற அடித்த கதை!
ஒரு தரம் பீர்பால், தன்னுடைய ஐந்து வயது மகளை அக்பருடைய தர்பாரைக் காட்டுவதற்காகத் தன்னுடன் அழைத்துச் சென்றார். டில்லிப் பாதுஷாக்களுடைய மண்டையில் எப்போதுமே விசித்திரமான சந்தேகங்கள் தான் இருக்கும் என்பதை ஏற்கெனெவே பார்த்திருக்கிறோம் அல்லவா! அக்பருக்கும் ஒரு சந்தேகம் வந்தது! பீர்பாலுடைய சிறுவயது மகள் பீர்பாலைப் போல அறிவுக்கூர்மை உள்ளவளா, அல்லது சாதாரண சிறுமியைப் போலத் தானா என்ற சந்தேகம் வந்தது.
"குட்டிப் பெண்ணே! உனக்குப் பாரசீக மொழி தெரியுமா?" என்று சிறுமியிடம் கேட்டார் அக்பர்.
சிறுமியிடமிருந்து தயங்காமல் வந்தது பதில், " ஒ! தெரியுமே! கொஞ்சம் கூட, கொஞ்சம் கம்மி!"
எப்போதும்போல பாதுஷாவுக்கு இதுவும் புரியவில்லை. பீர்பாலைப் பார்த்து அந்த சிறுமி என்ன சொல்கிறாள் என்று வினவினார்.
"ஹூசூர்! பாரசீக மொழி தெரியாதவர்களைக் காட்டிலும் கொஞ்சம் கூடுதலாகத் தெரியும்! பாரசீக மொழி தெரிந்தவர்களைக் காட்டிலும் கொஞ்சம் கம்மியாகத் தான் தெரியும் என்று தான் சொல்கிறாள்!" என்று பீர்பால் வியாக்கியானம் செய்தார்.
பாதுஷாவுக்குக் கொஞ்சம் சுயமாக யோசித்துத் தான் பார்ப்போமே என்று கொஞ்சம் சபலம் தட்டிற்று!
சுயமாகச் சிந்திப்பது பாதுஷாக்களின் கௌரவத்திற்கு இழுக்கு என்ற நினைப்பு வந்தவுடன் அதைக் கை விட்டு விட்டார்! பணம் போனால் வரிவிதித்து ஈடு செய்து கொள்ளலாம்! கௌரவம் குறைந்து போனால்....!
அப்புறம் என்ன, வழக்கம் போல பரிசு கொடுத்து கௌரவப் படுத்தி, பரிசு கொடுத்த தானும் பெரிய ஆள் தான் என்று காட்டிக் கொள்கிற கூத்தும் அரங்கேறியது.
***
எப்போதுமே தர்பாரிலேயே சந்தேகம் கேட்கிற சீனை நடத்தி நடத்தி அக்பருக்கே கொஞ்சம் அலுத்துப் போய் விட்டது!
அதனால் வித்தியாசமாக அரண்மனைத் தோட்டத்தில், பீர்பால், எப்போதும் முதுகு வளைந்து துதிபாடும் கவிஞர்கள், முக்கியமான கைத்தடிகளுடன் அக்பர் உலாத்திக் கொண்டிருந்தார். அங்கே ஏராளமான பூச்செடிகள் பூத்துக் குலுங்கிக் கொண்டிருந்தன. அந்தப் பூக்களைப் பார்த்ததும் துதிபாடிக் கவிஞர் ஒருவருக்கு ஆவேசம் வந்து விட்டது. துதிபாடிகளுக்கு ஆவேசம் வந்தால் அங்கே உளறலைத் தவிர வேறென்ன வரும்?
" ஒ!ஹூசூர்! உலகத்திலேயே இந்த அரண்மனைத் தோட்டத்தில் பூக்கிற மலர்கள் மாதிரி எங்கேயும் பார்க்க முடியாது! அக்பர் என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே மலர்கிற பூக்களை வேறெங்கு தான் பார்க்க முடியும்?"
அக்பருக்குப் பெருமை தாங்க முடியவில்லை! என்னதான் பொய் என்று தெரிந்தாலும், வலுக்கட்டாயமாகப் பாராட்டுவிழாக்களை ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு அங்கே காரியமாக வேண்டி வந்த துதிபாடிகள் நீதான் சூரியன்! நீதான் இந்த உலகத்துக்கே ஆதாரம்! உனக்கோ பல தாரம் அதனால் நீயுமொரு அவதாரம் என்று பாட்டுப் பாடச் சொல்லிக் கேட்பதில் ஒரு தனி சுகம் இருக்கத் தான் செய்கிறது அல்லவா!
பீர்பால் இந்தப் பாட்டை அங்கீகரிக்கிறாரா என்று தெரிந்து கொள்ளும் ஆசை வந்தது.நேரடியாக பீர்பாலை எப்படி இந்தத் துதிபாடியைப் போலவே சொறிந்து விடச் சொல்வது? பீர்பால் ஏதாவது இடக்கு மடக்காகச் சொல்லி விட்டால்...? அதனால் சுற்றி வளைத்துக் கேட்டார்.
"பீர்பால்! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்தப் பூவை விட அழகானதொன்றும் இருக்க முடியுமா?"
"நாளை காலை, இந்தப் பூவை விட அழகானதாக ஒன்று இருக்க முடியுமா இல்லையா என்பதை நிரூபிக்கிறேன் ஹூசூர்!" என்று பணிவாகச் சொன்னார் பீர்பால்.
மறுநாள் தர்பாரில் பீர்பாலை, அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆவலோடு அக்பர் எதிர் கொண்டார். ஆக்ராவில் இருந்து வந்த கைவினைக் கலைஞர் ஒருவரை பீர்பால் அக்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தக் கலைஞர் அக்பருக்குப் பரிசாக பளிங்கில் செதுக்கிய மலர் ஒன்றைப் பரிசாக அளித்தார். உண்மையான பூவைப் போல, மிக நேர்த்தியாக, இயல்பான வண்ணங்களை எப்படித்தான் அதற்குள் கொடுத்தாரோ தெரியாது, அப்படி ஒரு அழகான படைப்பைப் பார்த்த அக்பர் மெய்மறந்துபோனார். ஆயிரம் தங்க முஹராக்களை அந்தக் கலைஞனுக்குப் பரிசாக அளித்தார்.
சிறிது நேரம் கழித்து வேறொருவர் அரண்மனைத் தோட்டத்தில் முந்தைய தினம் பார்த்த நிஜப் பூக்களைக் கொத்தாக அக்பருக்கு வணங்கி கையில் அளித்தார், எப்போதும் பார்க்கிற பூ தானே என்று அக்பர் இரண்டொரு வெள்ளி நாணயங்களை அவருக்கு அளிக்க உத்தரவிட்டார்.
"ஆக, செயற்கையாகச் செதுக்கிய பூ, இயற்கையான பூவை விட நிஜமாகவே அழகு அதிகம் தான் போலிருக்கிறது!" என்றார் பீர்பால்.
பாதுஷாவுக்கு அவர் முந்தைய தினம் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்து விட்டது!
புரிவதற்குத் தான் அதிக நேரமாயிற்று!
***
bt- எஸ். கிருஷ்ணமூர்த்தி
thanks http://consenttobenothing.blogspot.com/
***
"வாழ்க வளமுடன்"
சீடியில் விழுந்த சிக்கலான சி.டி.களிலிருந்து தகவல்களை பெற !!!
இன்று கணினி வைத்திருப்பவர்கள் என்று இல்லாமல் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய சிக்கல் என்ன வென்றால் சி.டி தாங்க சி.டி யில் நாம் நம்முடைய போடோக்களிலிருந்து, பிறந்தநாள் நிகழ்சிகள், திருமண நிகழ்சிகள், நமது தனிப்பட்ட விஷயங்கள் அவரைக்கும் பதிவு பண்ணி பாதுகாத்து வருகிறோம். ஆனால், இதிலும் ஒரு பெரிய சிக்கல் வந்து விடும்.
அதுதான் சி.டி.கள் மோசமாகி போவது அதாவது சி.டி களில் சிக்கல் ஏற்பட்டு விடும் உராய்வு, தூசு படித்தல் போன்ற பல காரணங்களால் சி.டியில் இருக்கும் தகவல்களை நாம் பெற முடியாத சூழல் ஏற்படும் போது தான் நாம் அதிகமாக பாதிக்கப்படிகிறோம். நாம் ஆசை ஆசையாக சேமித்து வைத்த வீடியோக்கள். அனைத்தும் வீணாகி போகும் பொது அதனால் நாம் அடையும் பாதிப்பு மிக மிக அதிகம்.
இப்படி பட்ட சிக்கல் சி.டி.க்களில் இருந்து தகவல்களை பெறும் வழிமுறைகளைப் பற்றி இன்றைக்கு பார்க்க போகிறோம்.வேறொரு சி.டி.யில் இருந்து தகவல்களை, வீடியோக்களை காப்பி செய்து கொண்டு வந்து நமது கணினியில் போட்டு பார்த்தல்,அல்லது நாமது சி.டி.க்களை போட்டு பார்த்தால் 'டொயிங்' என்ற சத்தத்துடன் cannot read from the source destination என்று கணினியில் பதில் வரும்.சி.டி.யில் நமக்கு தெரியாமல் ஏற்பட்டிருக்கும் கீறல்கள், பதிந்திருக்கும் தூசுக்களால் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
எனவே, முதலில் மெல்லிய துணி கொண்டு சி.டி.க்களை உள்ளே இருந்து வெளிப்புறமாக துடைக்க வேண்டும். சோப்பு கலந்த நீரில் போட்டு கழுவவும் செய்யலாம். அதன் பிறகும் சிக்கல்கள் ஏற்பட்டால் கீழே இருக்கும் வழிமுறைகளை கையாளலாம்.
நீங்கள் இந்த( http://isobuster.com/ ) இணையத்தளம் வழங்கும் மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். பிறகு பிறகு மென்பொருளின் ஆய்வுக்கு சி.டி.யை உட்படுத்த வேண்டும். அப்போது இந்த மென்பொருள் பாதிக்கப்பட்ட சி.டி.யிலுள்ள தகவல்களை பெற்று தரும். அல்லது அதிகமாக பாதிக்கப்பட்டிருப்பின் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டும் விட்டுவிட்டு மற்ற பகுதிகளில் உள்ள தகவல்களை நமக்கு பெற்று தரும்.
இதன் மூலம் நாம் சிக்கல் சி.டி.களில் இருந்தும் தகவல்களை பெறலாம். நண்பர்களே இன்னும் சிக்கல் விழுந்த சி.டி.க்களை தூக்கி வீசாமல் தகவல்களை பெற இந்த வழியில் முயற்சித்து பாருங்கள்.
***
thanks விழியே பேசு
***
"வாழ்க வளமுடன்"
Labels:
கணினி டிப்ஸ்.,
பொது அறிவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "