...

"வாழ்க வளமுடன்"

16 ஆகஸ்ட், 2011

நில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடிக்கை


நில நடுக்கம் தற்பொழுது தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகி விட்டது. ரிக்கடர் அளவில் 6 மேல் ஏற்படும் போது அதிக இழப்பு ஏற்படுகிறது.

நில நடுக்கம் பூகம்பம் வரும் முன் ஏற்படும் ஒரு முதல் அறிகுறியாக இருப்பதால் நில நடுக்கம் குறைந்த அளவாக உணரப்பட்டாலும் அதற்கு முக்கியதுத்துவம் கொடுத்து பாதுகாப்பு இடத்திற்கு செல்வது அவசியம் ஆகிறது.

சில சமயங்களில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. பூமிக்கடியில் உள்ள 7 முக்கிய அடுக்குகளில் சில அடுக்குகள் லூசாக நகர்வதுண்டு அதுவே நில நடுக்கமாக உணரப்படுகிறது.


சொல்லாமல் வரும் திடீர் விருந்தினராக வரும் நில நடுக்கம்:

இது எந்த உயிரையையும் கொல்வதில்லை எனபதுதான் உண்மை. பூகம்பத்தை தாக்கு பிடிக்கும் வகையில் கட்டபடாத கட்டிடங்களின் இடிபாடுகள் தான் பல உயிர்களின் இழப்புக்கு காரணமாக இருக்கிறது.

எனவே நில நடுக்கம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பூகம்பத்தை தாக்கும் பிடிக்கும் வகையில்( BIS code) கட்டிடத்தை கட்டவேண்டும்.


நில நடுக்கம் உணர்ந்தவுடன் செய்யவேண்டியது:

1) வீட்டை விட்டு வெளியில் விரைவாக ஒரு நிமிடத்தில் செல்லமுடியும் என்றால் வந்து திறந்த வெளியில் அருகில் எந்த கட்டிடமோ, மரமோ, மின் கம்பம், தொலைபேசி கம்பங்கள் இல்லாத இடத்தில் நிற்கவேண்டும். மேலே மின் கம்பிகள் இல்லாத இடமாகவும் இருக்கவேண்டும்


2) நடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயை பூகம்பமாக மாறி கட்டிடங்கள் இடிபட ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் வெளியேரும் பலரும் இடிபாடுகளில் மாட்டி கொள்கிறார்கள். வீட்டின் உள்ளேயும் தங்கள் விலைமதிப்பான பத்திரபடுத்த ஆங்கேங்கே நடமாடும் ஆசாமிகள் மாட்டிக்கொள்கிறார்கள்.


3) அடுக்கு மாடி கட்டிடத்தில் உள்ளவர்கள் கட்டாயம் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். எல்லோரும் ஒன்றாக படிகட்டில் அடைந்து நெரிசலில் பல உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது. எந்த காரணத்தை கொண்டும் லிஃப்ட் ஐ பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மின் தடை ஏற்பட்டு பாதியில் நின்றுவிடும் வாய்ப்புள்ளது.


4) நில நடுக்கம் உணரப்பட்டதும் விரைவில் வெளியே செல்ல வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வழுவான கட்டில் அல்லது மேஜை அடியில் படுத்துக்கொள்ளவேண்டும். அடியில் பயத்துடன் படுத்திருக்கும் போது நில நடுக்கத்தினால் மேஜை அல்லது கட்டிலோ இடம் பெயர்ந்துவிட்டிற்கும்.

எனவே அதன் கால்களை கெட்டியாக அசையாமல் பிடித்துக் கொள்ளவேண்டும். குடும்ப உறுப்பினர்கள் முன் கூட்டியே யார்யார்க்கு எந்த கட்டில் என்றும் அப்பொழுது நடந்து கொள்ளவேண்டிய முறைகளை பற்றி ஒத்திகை நடத்திருந்தால் மிகவும் சிறப்பு.

கட்டிலின் அடியில் பொதுவாக பலபொருட்களை வைக்கும் பகுதியாக பயன்படுத்துவதை கைவிடவேண்டும்.


5) மேஜை அல்லது கட்டில் கிடைக்காதபோது வீட்டின் உள்ளே உள்ள கதவின் நிலை கால் அடியில் நின்றுகொள்ளவேண்டும். கதவின் வாசற்கால் வைத்திருக்கும் அமைப்பின் மேல் லிண்டல் அமைப்பு காங்கிரிட்டில் இருக்கும். அது இடிபாடுகளின் பகுதிகள் நம் மேல் விழும் பாதிப்பை குறைக்கும்.


6) கதவு குறைவாக இருந்து உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால் கட்டிடத்தின் மூலை பகுதியில் அட்டைப்போல் ஒட்டிக்கொள்ளவேண்டும். நில நடுக்கத்தின் போது கட்டத்தின் மையபகுதிதான் முதலில் விழும், மேலும் அவைகளின் மூலம் தான் பாதிப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன்.


7) ஒரு தலையாணையை தலையில் ஐயப்ப பக்தர் போல் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.


8) இடிபாட்டில் மாட்டிக்கொண்டால், முதலில் ஆசுவாசபடுத்திக்கொண்டு நீண்ட உள் மூச்சு இழுத்து காற்றை நன்றாக இழுத்துக்கொள்ளவேண்டும். பின்னால் இடிபாடுகள் அதிகமாகி காற்றே கிடைக்காமல் போகலாம்.

இடிப்பாட்டு தூசுகளை மற்றும் புகை மூட்டத்தை தவிர்க்க ஒரு கர்ச்சீப்பை முகத்தில் கட்டிகொள்ளவேண்டும். துகள்கள் மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.


9) இடிபாடுகளை உள்ளே இருந்து நீக்கி வெளியே வர முயலக்கூடாது. வெளியா எப்படிப்பட்ட நிலை உள்ளது என தெரியாது. நம்முடைய முயற்சி சரிவை அதிகப் படுத்திவிடும்.


10) இடிபாட்டிற்குள் இருந்து சத்தம் இட்டு அல்லது கூக்குரல் செய்வதை தவிர்க்கவேண்டும். இவைகள் நம்மை எளிதில் பலம் இழக்கசெய்துவிடும்.உதவிக்கு சத்தம் இடுவது கடைசி முயற்சியாமட்டுமே இருக்கவேண்டும்.


11) அருகில் உள்ள சுவரை தட்டுவது, கையில் விசில் வைத்துகொள்ளுதல் வெளிநாட்டில் வழமையாக உள்ளது. நாமும் விசில் ஒன்று வைத்திருந்தால் அதை ஒலிக்கசெய்து காப்பாற்று பணியில் உள்ளவரை நம் பக்கம் ஈர்க்கலாம்.சிறிய டார்ச் லைட் வைத்துகொள்ளுவது கூட உதவி செய்யும்.


12) நில நடுக்கத்தின் போது வெளியில் வந்தபின் நமது இடிபட்ட வீட்டிற்குள் எதேனும் முக்கிய எடுக்கவேண்டும் உள்ளே செல்லக்கூடாது. சில இடிப்பாடுகள் தாமதமாக ஏற்படலாம். மீட்பு குழுவினர் மட்டுமே அப்பணிகளை செய்யவேண்டும்.


13) நிலநடுக்கம் முடிந்த பின் பாதுகாப்பான இடத்திலிருந்து ரேடியோ அல்லது தொலைக்காட்சி மூலம் செய்திகள் கேட்கவேண்டும்.அரசு நில நடுக்கத்தின் ரிக்டர் அளவு, மீண்டும் வரும் எச்சிரிக்கை, பாதுகாப்பு ஆலோசனைகள் கேட்டு அதை கடைப்பிடிக்கவேண்டும்.


14) நிலநடுக்கத்தின் போது கார் ஒட்டி கொண்டிருந்தால் காரை பாதுகாப்பாக மரமோ, மின் கம்பமோ. மின் கம்பிகள் பாதை இல்லாத இடமாக ஓரமாக நிறுத்தி காரின் உள்ளேயே இருக்கவேண்டும். நிலநடுக்கம் நின்று விட்டதை உறுதியாக அறிந்து பின் பாலங்கள் இல்லாத வழியாக தேர்வு செய்து வீடு திரும்பவேண்டும்.

ஏனேன்றால் பாலங்கள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு கார்செல்லும் போது விபத்து ஏற்படலாம்.

வெளிநாட்டில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் இது போன்ற பேரிடர் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை நன்றாக பயின்று அவைகள் மாதம் ஒரு முறை ஒத்திகை பார்த்து தயார்நிலையில் இருப்போம்.

நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இன்றைக்கே பேரிடர் ஒத்திகை பார்த்துவிடுங்கள், இழப்புகளை குறைத்துக்கொள்ளுவோம்!


***
thanks spselvam
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "