...
"வாழ்க வளமுடன்"
28 மார்ச், 2011
புதிதாக மணம் முடித்த பெண்களே இப்படி சமாளியுங்க...!
`உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி' என்று பழமொழி சொல்வார்கள். பெண்களுக்கு இந்த சொலவடை நிச்சயம் பொருந்தும். புதிதாக மணம் முடித்து கணவர் வீட்டில் காலெடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் `கடி'கள், ஏச்சு பேச்சுகள் அவர்களின் மனதை ரொம்பவே துடிக்க வைத்து விடும். அப்படிப்பட்ட நிலைமையை எப்படி சமாளிப்பது? இங்கே சில ஐடியாக்கள்... `இந்த வீட்ல நான்தான் எல்லா வேலையும் பார்க்க வேண்டி இருக்குது. வேலைக்குப் போனா வீட்டு வேலையை பார்க்கக்கூடாதா? பார்த்தா குறைஞ்சு போகுமோ' - வேலைக்குப் போகும் மருமகளை, ஏதோ சிங்காரித்து சினிமாவுக்கு சென்று வருவதைப்போல நினைத்து இப்படிப் பேசும் மாமியார்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலை நீங்கள் சந்தித்தால், "நான் தினமும் ஆபீஸ் போய்விட்டு, இத்தனை மணிக்குத்தான் திரும்புவேன், நான் வந்தபிறகு இந்தெந்த வேலைகளை கவனித்துக் கொள்கிறேன்'' என்று முன்கூட்டியே சொல்லிவிடுங்கள். `உங்கப்பா நல்லா இருக்கும்போதே உனக்கு வேணுங்கறதை கேட்டு வாங்கிட்டு வந்துடு, பின்னாடி உங்க அண்ணன்கள்கிட்டே எதிர்பார்த்துகிட்டு நிக்க முடியாது பாரு...'' இந்த வார்த்தைச் சாட்டைக்கு இப்படி பதிலளியுங்கள்.."எனக்கு என்ன செய்யணும்னு எங்க அப்பா அம்மாவுக்குத் தெரியும். நான் போய் கேட்க வேண்டியதில்லை, கேட்கவும் மாட்டேன். எனக்கு தேவைன்னு தெரிஞ்சா அவங்களே தேடி வந்து செய்வாங்க'' "உன் பெண்டாட்டி வரவர என்னை மதிக்கிறதே இல்லை. நான் சொன்னா காதிலேயே வாங்காமப் போறா, ஆபிசிற்கு ரொம்ப குலுக்கி மினுக்கிப் போறா?'' இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆரம்பத்திலேயே உங்களின் உண்மை நிலையை கணவரிடம் விளக்கி விடுவதுதான் சிறந்த வழி. மாமியாரின் கோபத்துக்கான காரணத்தை தெரிந்து பேசித் தீர்க்க முடியுமா? என்றும் முயற்சி செய்யுங்கள். "இவள் காசை கன்னாபின்னான்னு செலவழிச்சு கரியாக்குறா. திடீர்ன்னு ஆயிரம், ரெண்டாயிரத்துக்கு புதுப்புடவை எடுத்துக்கிறா, நகைநட்டு வாங்கி குவிக்கிறா, என் மகன் பாவம் வாயில்லாப்பூச்சி, எதையும் கேட்கறதில்லை.''எல்லோர் வீட்டு மாமியார்களும் கூறும் பொதுவான `கம்ப்ளெயிண்ட்' இது... "சிக்கனம் தேவைதான். அதுக் காக டிரஸ்ஸில் சிக்கனம் பிடிக்கலாமா? தேவைக்குத்தான் வாங்கி இருக்கிறேன்'' என்று சொல்லுங்கள். அடுத்து விசேஷ நாட்களில் மாமியார், நாத்தனாருக்கும் (கடமைக்காக அல்லாமல் அன்புடன்) ஒரு புடவை எடுத்துக் கொடுங்கள். பிரச்சினை வந்தவழி தெரியாமல் ஓடிப் போய்விடும். "பெரிய ஆபீசர் வீட்ல இருந்து வந்தவளே பாத்திரம் கழுவுறா, எல்லா வேலையும் பாக்குறா? இவளுக்கென்ன? மூத்த மருமகள் கேட்ட அடுத்த மாசமே என் மகனுக்காக பைக் வாங்கி தந்துட்டா..! உன்கிட்ட கேட்டாலும் கிடைக்குமா, உங்கப்பா நெலமைதான் ஊருக்கே தெரியுமே? `இப்படிப் பேசுவது சுத்தமாகப் பிடிக்கவில்லை' என்பதை கணவரிடம் நேரடியாகச் சொல்லி விடுங்கள். அதன்பிறகு ஓரளவாவது இந்த மாதிரி ஒப்பீடு குறையும். எவ்வளவு இடையூறுகள் வந்தாலும் `எங்கம்மாவை அப்படிப் பேசாதே' என்று சொல்ல வாரிசு வளரும் வரை நீங்களாகத்தான் சமாளிக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் புதுப்பெண்களே! *** thanks தினதந்தி! *** "வாழ்க வளமுடன்"
Labels:
ஆண்கள் நலன்,
படித்ததில் பிடித்தது,
பெண்கள் நலன்
வீட்டில் உள்ள தரை பளிச்சிட :)
கீறல்கள் மறைய தளத்தில் உள்ள கீறல்கள் மறைய ஒரு தேக்கரண்டி பேக்கிங் பவுடர் கலந்த நீரை ஒரு வாளி நிறைய எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வெள்ளைத்துணியை நனைத்து எடுத்து பிழிந்து கீறல்கள் விழுந்த இடத்தை அழுத்தித் தேய்த்து விடுங்கள். காய்ந்த பிறகு பாருங்கள். கீறல் விழுந்த தடமே இல்லாமல் போய்விடும். * வினைல் தளம் வினைல் தளமாக இருந்தால், பேக்கிங் பவுடரை சிறிதளவு எடுத்து தளத்தில் தூவி விடுங்கள். பிறகு, கறைபடிந்த தரையை, வினிகரில் நனைத்த துணியால் அழுத்தி துடைத்து விடுங்கள். அதன்பிறகு சுத்தமான நீரில் துணியை நனைத்து பிழிந்து தரையை சுத்தம் செய்யுங்கள். இப்படி செய்வதால், வினிகரின் மணம் பரவாமல் தடுக்கப்படும். * காங்கிரீட் தளம் சில துளிகள் வீரியமிக்க டிடர்ஜென்ட் பவுடர் கலந்த நீரை காங்கிரீட் தரையில் இட்டு, தரையை பிரஷால் அழுத்தித் துடைத்துவிட்டு, ஸ்பான்ஜை வைத்து ஈரமான தளத்தை ஒற்றி எடுங்கள். இந்த தளத்தில் எண்ணை பிசுக்குகள் இருந்தால், கறைபடிந்த இடங்களில் ஆல்கலின் சோப் போட்டு, அழுத்தமாக தேய்த்து கழுவி விடுங்கள். * மார்பிள் தளம் பேக்கிங் சோடா பேஸ்டை எடுத்து, ஊறவைத்த துணியால் தரை முழுவதும் தேய்த்து விடுங்கள். பின்பு உலர்ந்த துணியால் சுத்தமாக துடைத்து விடுங்கள். இப்போது கறைபடிந்த மார்பிள் தரை, சுத்தமாக பளிச்சென்று இருக்கும். * எண்ணை பிசுக்குளை நீக்க சொரசொரப்பான தளத்தில் படிந்துள்ள எண்ணை பிசுக்குகள் போன்ற கறையைப் போக்க ஐஸ்கட்டியுடன் மென்மையான ஸ்பாஞ்ச்சைக் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இது தரையைக் குளுமைப்படுத்துவதோடு மட்டுமின்றி `பளிச்' என பளபளக்கும். வீட்டின் தரையை எப்போதும் துடைத்துக் கொண்டே இருங்கள். *** thanks சிவா *** "வாழ்க வளமுடன்"
Labels:
பாட்டி வைத்தியம்,
வீட்டுக் குறிப்பு
சத்தான உணவு... சரியான நேரம்!
ஹெல்த் பக்கங்களுக்கு... தீபிகா!’ - எடிட்டரின் ஒரு வரி எஸ்.எம்.எஸ். மலேசியாவில் இருந்து அப்போதுதான் லேண்ட் ஆன தீபிகா பல்லிக்கல் முன் லேண்ட் ஆனேன். இந்தியாவின் நம்பர் 1 ஸ்குவாஷ் நட்சத்திரம். சர்வதேச அளவில் டாப் 30 பேரில் ஒருவர். படிப்பும் பயிற்சியுமாகச் சுற்றி வரும் இடங்கள் அனைத்தையும் சுற்றுலாத் தலமாக்குவது தீபிகாவின் பழக்கம். படபடக்கும் விழிகள் பார்த்தாலே, குறிப்பெடுக்க மறுக்கிறது மனசு. * ''அழகு என் அடையாளங்களில் ஒண்ணா இருக்கலாம். ஆனா, எந்த விதத்திலும் அதுவே ஒரு ''ஆரம்பத்தில் சாப்பாட்டு விஷயத்தில் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால், பாசு சார் தான் எந்த மாதிரி சாப்பாடு எடுத்துக்கணும்னு சொல்லிக்கொடுத்தார். இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு தடவை எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக் கிட்டே இருப்பேன். * 'வெள்ளை நிற உணவுகளைத் தவிர்த்திடுங்க’ன்னு தன் இளமை ரகசியம் சொன்னாரே ரஜினி, அதே ஃபார்முலாதான் என் டயட்டுக்கும். நான் அரிசிச் சாப்பாடு சாப்பிட்டே பல வருஷங்கள் ஆச்சு. ரொம்பப் போராடி கஷ்டப்பட்டு இப்போ சாக்லேட் சாப்பிடுறதையும் கன்ட்ரோல் பண்ணிட்டேன். சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரி, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு... அதில் நம்ம பயிற்சிக்குத் தேவையான அளவு என்ன என்பதை கால்குலேட் பண்ணித்தான் சாப்பிடுவேன். உடலுக்கு எல்லாவிதச் சத்துக்களும் பேலன்ஸ்டா சேர்வது மாதிரி சாப்பிடுவதுதான் சரியான வழி. * போட்டி இல்லாத நாட்களிலும் ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரத்துக்கும் மேலாக ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபடுவேன். அதனால், எப்பவும் சத்தான சாப்பாட்டை நான் மிஸ் பண்ண மாட்டேன். சாப்பாட்டு நேரத்தை அடிக்கடி மாத்திட்டே இருப்பது நம்ம உடம்பை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணும். எந்த நேரத்துக்கு என்ன சாப்பாடுன்னு பட்டியல் போட்டுவெச்சு, அதை ஸ்ட்ரிக்ட்டா கடைபிடிக்கணும். 'சத்தான உணவு... சரியான நேரம்’ இதுதான் என் டயட் சீக்ரெட்!'' எனும் தீபிகா, ஸ்குவாஷ் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன் நிசப்த அமைதியைக் கடைபிடிப்பாராம். * ''சேலஞ்சிங்கான எந்த விஷயத்தையும் எதிர்கொள்வதற்கு முன்பு, மனதளவில் நம்மைத் தயார்படுத்திக்கணும். நின்னு, நிதானிச்சு அடிச்சா... எந்த எதிரியும் நம்மை எதிர்கொள்ள முடியாது!'' * by- தீபிகா சாய்ஸ் *** நன்றி விகடன் ***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
படித்ததில் பிடித்தது,
மருத்துவ ஆலோசனைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "