...

"வாழ்க வளமுடன்"

17 மார்ச், 2011

கோடைக்கு ஏற்ற இளநீர் !



காலையில் இளநீர் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது .இது உடலுக்கு ஊக்கமும் சத்தும் தரும் ஆரோக்கியமான மருந்து.தோல் பளபளப்பாக சிவப்பாக மாற தினமும் இளநீரில் குடிக்க வேண்டும் .

இது இரத்தம் சுத்தம் அடையவும் கல்லீரல் நன்றாக இயங்கவும் உதவுகிறது. இத்துடன் தோல்,முடி,நகங்கள் ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றன. இளநீர் இளமையைக் காக்கும் அரிய பானமாகும்.


உடல் நலம் ஆரோக்கியமாக இருந்தால் தான் இளமையும் பொலிவும் உடலிலும் உள்ளத்திலும் பிறக்கும். குழந்தைகள் இதை அருந்தினால் ஓரளவு சதைப்பற்றுடன் ஆரோக்கியமாக வளருவார்கள். இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன.


இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது உணவு எடுத்த பின்னரே சாப்பிடவேண்டும். சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன.


பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. மந்தம், உணவு செரியாமை போன்றவற்றிக்கு இது மருந்து மற்றும் சிறந்த உணவும் ஆகும்.


காலரா நோயாளிகள் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வரவேண்டும். பித்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து நிறைந்த மருந்து ஆகும்.


இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. சிறுநீரில் கற்கள் உருவாகாமல் தடுக்க இளநீர் மிகவும் உதவுகிறது. .


மஞ்சள் நிற சிறுநீரை மாற்ற இளநீரை தவறாமல் குடிக்க வேண்டும் அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யவும் இது உதவுகிறது .


இது சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். மற்றும் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காலரா நோயாளிகளுக்கு நல்ல மருந்தாக உதவுகிறது.


காலையில் உடல் நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் குடிக்கலாம். தாகத்தைத் தீர்க்க உடலில் சக்தியைப் புதுப்பிக்க தினமும் ஓர் இளநீர் குடிக்கலாம் உங்கள் வாழ்நாள் முழுக்க அழகான தோற்றத்துடன், நலனை நீடிக்கும் சக்தியாக இளநீர் உள்ளது.

***
thanks cnn
***



"வாழ்க வளமுடன்"


தயிர் வேண்டாமே மோர் குடிங்க!


கோடை ஆரம்பித்துவிட்டது. ஆனால், கத்திரி பருவம் வருவதற்கு முன்னரே, வெயில் கொளுத்துகிறதே, இந்த கோடை காலத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என, புலம்புகிறீர்களா? இதோ உங்களுக்காக சில டிப்ஸ் ....

* கோடை காலத்தில் அதிக வெப்பம் காரணமாக, உடலில் ஏற்படும் நீரிழப்பை ஈடு செய்ய, அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்; நுங்கு, கிர்ணிப் பழம், தர்பூசணி போன்ற பழங்கள், இளநீர், பிரஷ்ஷான பழச்சாறுகள் ஆகியவற்றை சாப்பிடலாம்; முடிந்த வரை குளிர்பானங்களாக குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜலதோஷம் போன்றவை ஏற்படாமல், காத்துக் கொள்ளலாம்.
தயிராக சாப்பிடாமல், அதில் நிறைய தண்ணீர் கலந்து மோராக சாப்பிட வேண்டும். கறிவேப்பிலை மற்றும் கல் உப்பை சேர்த்து பிசைந்து, அதன் சாறு மோரில் இறங்கும் படி செய்ய வேண்டும். பின், அதில், பெருங்காயத் தூள் சேர்த்து குடித்தால், உடலுக்கு மிகவும் நல்லது.


* தினமும் இரண்டு வேளை குளிக்க வேண்டும். அப்போது தான், கோடை காலத்தில் அதிகளவு வியர்ப்பதால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.


* இறுக்கமான உடைகளை அணிவதை தவிர்த்து, தளர்வான பருத்தி ஆடைகள் அணியலாம். இதனால், கசகசவென இருக்கும் உணர்வு தவிர்க்கப்படும்; குறிப்பாக, உள்ளாடைகளும், பருத்தியாலானவற்றை அணிவது, மிகவும் நல்லது.


* உடல் சூட்டின் அளவை குறைக்க உதவும் வைட்டமின் சி எலுமிச்சம்பழத்தில் காணப்படுகிறது. எனவே, எலுமிச்சம் பழச்சாறு அருந்துவது உடலுக்கு மிகவும் நல்லது.


* வெயில் காலத்தில் உடல் சூடு அதிகரிப்பதால், ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள உதவும் வெள்ளரிக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிகளவு உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.


* வெயிலில் வெளியே செல்வதாக இருந்தால், குடை எடுத்துச் செல்லுங்கள். இதனால், அதிகளவு சூரிய வெப்பம், உடலை தாக்குவதை தவிர்க்கலாம்.


* பகல் வேளைகளில், வீட்டில் அறைகளின் ஜன்னல் கதவுகளை நன்கு திறந்து, இயற்கையான வெளிக் காற்று வரும் வகையில் வைக்க வேண்டும். வீட்டின் கதவு மற்றும் ஜன்னல் ஆகியவற்றிற்கும், பருத்தியாலான திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.


* கோடை காலத்தில் உண்டாகும் உதடு வெடிப்பை போக்க, பாலாடை தேய்க்கலாம். கோடை காலத்தில், உடலின் நீர்ச்சத்து வற்றாமல் பராமரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டால், பல்வேறு பிரச்னைகளில் இருந்து, நம்மை காத்துக் கொள்ளலாம்.


***
thanks cnn
***


"வாழ்க வளமுடன்"


வெயிலை வெல்வோம்!



ஏப்ரல், மே மாதங்களில் சுட்டெரிக்கும் சூரியன் என்ன சும்மாவா வருகிறான்? வெரைட்டியான வியாதிகளையும் சருமத் தொந்தரவுகளையும் அல்லவா கூடவே கூட்டிக் கொண்டு வருகிறான்! நாம் கோடை விடுமுறைக்குத் தயாராகும்போதே, இந்த அசௌகரியங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தயராகத்-தான் வேண்டியிருக்கிறது. அதற்குத்தான் இங்கே வழிகாட்டுகிறார்கள் நிபுணர்கள்..

கோடை நோய்களிலிருந்து பாதுகாப்பு பற்றிச் சொல்கிறார், மயிலாடுதுறையைச் சேர்ந்த பொது மருத்துவர் மகேந்திரன்!

“கோடை காலத்தில் வெயிலால் நேரடியாக வரக் கூடிய ஆபத்தென்று பார்த்தால், ‘ஹீட் ஸ்ட்ரோக்’ தான். நம் உடல் சீராக இயங்கத் தேவையான வெப்பநிலை 98.7 டிகிரி செல்சியஸ். நாம் வெயிலில் அதிகமாக அலையும்போது இந்த வெப்பநிலை அதிகரித்து விடும். இது 100 டிகிரியைத் தாண்டும்போது, திடீரென்று மயக்கம் ஏற்பட்டு உடல் செயல் இழக்கும் நிலை ஏற்படும். இதைத்தான் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்கிறோம்.

தண்ணீர் அதிகம் அருந்துதல், சுட்டெரிக்கும் வெயிலில் தொடர்ந்து வேலை செய்யாமல் அடிக்கடி நிழலில் இளைப்பாறுதல்.. போன்ற எளிமையான நடவடிக்கைகளே ‘ஹீட் ஸ்ட்ரோக்’கில் இருந்து நம்மைக் காப்பாற்றி விடும்.

இது தவிர, குறிப்பிட்ட சில நோய்களைப் பரப்பும் கிருமிகள், வெயில் காலத்தில் பல்கிப் பெருகும் குணம் உடையவை. அப்படிப்பட்ட கிருமிகளின் தாக்குதலால் சின்னம்மை, டயரியா போன்ற வியாதிகள் பரவலாம். பெரும்பாலும் இந்தக் கிருமிகள் காற்று, சுகாதாரமற்ற உணவு மற்றும் தண்ணீர் போன்றவற்றால் பரவக் கூடியவை. எனவே, வெளியிடங்களில் உணவு, தண்ணீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, சாலையோரங்களில் கிடைக்கும் ஜங்க் உணவுகளுக்கும் குளிர் பானங்களுக்கும் முழுக்குப் போட்டு விட வேண்டும்.

இவை தவிரவும், வெயில் காலத்து உஷ்ணத்தால், சருமத்தில் கொப்புளங்கள், சிறுநீர்க் கடுப்பு, தலைவலி, வாந்தி போன்றவை ஏற்படலாம். ஒரு சில அடிப்படை விஷயங்களைக் கடைப்பிடித்தாலே, இப்படிப்பட்ட பிரச்னைகளில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம். அவை..

ஸி காட்டன் உடைகளையே பெருமளவு பயன்-படுத்து-வது..

ஸி காரமான உணவு வகைகள், ஃப்ரைட் ரைஸ் முதலானவற்றைத் தவிர்ப்பது..

ஸி வெள்ளரிக்காய், இளநீர், மோர், மற்றும் பழவகைகளை நிறைய உட்கொள்வது..

ஸி திரவ உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வது..

ஸி புரோட்டின் கலந்த உணவு வகைகளைத் தவிர்ப்பது..

இவை தவிர, தினமும் இரண்டு முறை குளிப்பது மிகவும் நல்லது.”

சருமப் பராமரிப்பு பற்றிச் சொல்கிறார் திருச்சியைச் சேர்ந்த தோல், நகம், கூந்தல், பாத நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் பி.சுதாகரன்.

“வியர்வை மூலம் ஏற்படக் கூடிய அரிப்பு, மாசுபட்ட காற்றின் மூலம் வரக் கூடிய அலர்ஜி, ஃபங்கஸ், பருக்கள், வியர்க்குரு, முகம் கருத்துப் போதல்.. என்று தோல், நகம், கூந்தல் இப்படி அனைத்தையும் பாதிக்கக் கூடிய நோய்கள் இந்தக் கடும் உஷ்ணத்தால் வர வாய்ப்பு இருக்கிறது. டூ வீலரில் செல்பவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் இருக்கும். இதைத் தவிர்க்க கூடுமானவரை குட்டைக் கை, ஸ்லீவ்லெஸ் போன்ற ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். முழுக்கைச் சட்டை அணிய முடிந்தால் நலம். அல்லது கைகளுக்கு க்ளவ்ஸ், தலைக்கு ஹெல்மெட் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்-.

வெயிலின் புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சன் ஸ்கிரீன் லோஷன் தடவுவது நல்லது. அப்படிப்பட்ட லோஷன்கள் வாங்கும்போது, அதில் 15 சதவீதம் எஸ்.பி.எஃப் (சன் புரொடக்ஷன் ஃபேக்டர்) இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்கவும். மேலும், அது ஆயில் பேஸ்டு லோஷனாக இல்லாமல், வாட்டர் பேஸ்டு லோஷனாக (தண்ணீரில் கரையக் கூடியது) இருப்பதே சிறந்தது. அப்போதுதான், முகத்தில் எண்ணெய் வழிவது போலத் தெரியாது. அதோடு, தோலுக்கும் பாதிப்பு இருக்காது. வெயிலில் உதடு கருத்துப் போவதும் உண்டு. அப்படி கருக்காமல் இருக்க, சன் ஸ்கிரீன் லிப் பார்ம் தடவலாம்.

காட்டன் உடைதான் என்றாலும் இறுக்கமாக அணியக் கூடாது. ஃப்ரீ சைஸாக இருக்க வேண்டும். வெயில் நேரத்தில் வியர்வை அதிகம் சுரக்கும். அதிக நேரம் ஷூ அணிய வேண்டிய கட்டாயத்தில் இருப்-பவர்கள், ஒரு நாளில் மூன்று அல்லது நான்கு முறை அதைக் கழற்றி வைத்து, சிறிது நேரம் கழித்து அணிந்து கொள்ள வேண்டும். அல்லது, இதற்-கென்றே கடைகளில் கிடைக்கும் ‘ஸ்வெட் கன்ட்ரோல் பவுடர்’ வாங்கிப் பயன்படுத்தலாம்.

வெயிலின் தாக்கத்தால் தோலின் எதிர்ப்பு சக்தி குறைந்திருக்கும். அதை மீட்டெடுக்க, தினமும் கண்டிப்பாக 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகப்படி வியர்வையால் தலையில் ‘டேண்ட்ரஃப்’ வர வாய்ப்பு உள்ளது. வாரத்துக்கு மூன்று முறையாவது தலைக்கு ஷாம்பு போட்டுக் குளித்தால், இதைக் கட்டுப்படுத்தலாம்.

பருக்கள் வந்தால் கை வைத்துக் கிள்ளக் கூடாது. அதற்கென்று இருக்கும் மருந்துகளைப் பயன்படுத்திதான் அதை குணப்படுத்த வேண்டும். தினமும் நான்கு அல்லது ஐந்து முறை முகம் கழுவ வேண்டும். வாரத்துக்கு ஒருமுறை நீராவி பிடிக்கலாம். தயிர், தேன், எலுமிச்சைச் சாறு, சோள மாவு கலந்து, முகத்தில் பூசி, பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவினால், முகம் கருத்துப் போகாது.”

அழகுப் பராமரிப்பு பற்றிச் சொல்கிறார், சென்-னையைச் சேர்ந்த அழகுக் கலை நிபுணர் வாசுகி.

“வெயில் காலத்தில் சருமத்தைப் பாதுகாக்க ஆலிவ் ஆயில் ஐந்து சொட்டு, பாதாம் எண்-ணெய் ஐந்து சொட்டு, தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் கலந்து, வாரம் ஒரு முறை-யாவது உடம்பிலும், தலை-யிலும் தேய்த்துக் குளிப்பது நல்லது.

மூன்று எண்ணெயையும் ஒரு கரண்டியில் விட்டு, நேரடியாக சூடாக்காமல் சுடு தண்ணீரின் மேல் வைத்து இளஞ்சூடாக்கி, உடலில் தேய்க்க வேண்டும். வெந்தயம், தயிர், முட்டையின் வெள்ளைக் கரு இம்மூன்றையும் கலந்து தலையில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம். வெளியே போய் விட்டு வீட்டுக்கு வந்ததும், கிளென்ஸிங் மில்க்கை முகத்தில் தடவி பஞ்சில் துடைத்து எடுத்தால், அழுக்குகள் வெளியேறி விடும். இதனால் முகம் கருப்பது குறையும்.”

*

தொகுப்பு: பாரதி, பாஸ்கர்
படங்கள்: ஆர்.பாஸ்கர், ரவி

***
thanks தீ ku
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "