...
"வாழ்க வளமுடன்"
08 மார்ச், 2016
சரும பிரச்சனைகளை தீர்க்கும் பழத்தோல்
மாதுளம்பழத் தோலைப் பொடி செய்து, அதனுடன் சம அளவு பயத்தம் பருப்பைக் கலந்து, குளித்தாலோ, உடலில் பூசிக்கொண்டாலோ, வியர்வை துர்நாற்றம் நீங்கும்; உடலுக்குக் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.
மாதுளம்பழத் தோலைப் பொடித்து, தண்ணீர்விட்டுக் குழைத்து, சருமம், தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளித்தால், முகப்பரு உள்ளிட்ட சருமப் பிரச்னைகள், முடி உதிர்தல் நீங்கும்.
எலுமிச்சைத் தோல் ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படுகிறது. சிலருக்குக் கை, கால் முட்டிகளில் கறுப்பாக இருக்கும். எலுமிச்சைத் தோலை கருமையான இடங்களில் தேய்த்துவர, கருமை நீங்கி, நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது சருமத்துக்குப் பளபளப்பையும் தர வல்லது.
பொடுகுத் தொல்லை இருப்பவர்கள், எலுமிச்சைப்பழத் தோலை நன்கு கசக்கி, தலையில் தேய்த்து, 10 நிமிடங்கள் ஊறவைத்துக் குளித்தால், பொடுகு குறைந்து, சில வாரங்களில் நல்ல பலன் தெரியும்.
எலுமிச்சைப்பழத் தோலை நகங்கள் மீது தேய்க்க பளபளப்புக் கிடைக்கும்.
மாம்பழத்தோலைக் கூழாக்கி, அதனுடன் பால் கலந்து சருமத்தில் தடவி வந்தால், கருவளையம் மெள்ள நீங்கும்.
இதனுடன் சிறிது தேன் கலந்து, கழுத்தில் கருமையாக இருக்கும் பகுதிகளில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும்.
ஆரஞ்சுப்பழத் தோலை பாத வெடிப்புகளில் பூசி வந்தால், ஒரு வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
ஆரஞ்சுப்பழத் தோல் பொடியுடன் சிறிதளவு பால், தயிர் சேர்த்து, ஃபேஸ்பேக் போல பயன்படுத்த, பொலிவிழந்த முகம் களைகட்டும்.
ஆரஞ்சுப்பழத் தோலில் இருந்து சாறு எடுத்து, முகத்துக்குப் பூசிவர கரும் புள்ளிகள் நீங்கி, முகம் பளபளப்பாக மாறும்.
***
"வாழ்க வளமுடன்"
Labels:
அழகு குறிப்பு,
உடல்நலம்
நாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்
நாட்டு மருந்துகளும் நோய் நிவாரணமும்
அகத்தி – வலி, கபம், சோகை, குன்மம்
அதிமதுரம்- பித்தம், ரத்த தோஷம், வாந்தி, நீர் வேட்கை, சோர்வு, வலி
அரளி - அரிப்பு, கண் நோய், கிருமி
அருகம்புல் - கபம், பித்தம், நாவறட்சி, எரிச்சல், தோல்நோய்
ஆடாதோடை - இரத்த தோஷம், பித்தம், இழுப்பு, இருமல், நாவறட்சி
ஆவாரை - நீரிழிவு, ரத்த பித்தம்
இஞ்சி - அஜீரணம், காய்ச்சல், இருமல், வாந்தி, வயிறு உப்புசம்
எலுமிச்சை - பிரட்டல், வாந்தி, நாவறட்சி, ருசியின்மை, கிருமி நோய்
ஓமம் - கண்நோய், கபம், விக்கல்
கடுக்காய் - இருமல், நீரழிவு, மூலம், பெருவயிறு, அக்கி, விஷக் காய்ச்சல், இதய வலி, காமாலை, நீர்க்கடுப்பு
கண்டங்கத்திரி - இருமல், இழுப்பு, காய்ச்சல், கபம், வாயு, நாட்பட்ட சளி
கரிசலாங்கண்ணி - பகம், வாதம், கிருமி நோய், இருமல், கண்நோய், தலைவலி
கருவேப்பிலை - இரத்த பித்தம்
கருவேலம் - பல்வலி, இரத்த தோஷம், கபம், அரிப்பு, கிருமி நோய், விரணம்
கீழாநெல்லி - காமாலை, பித்தம், இருமல்
குங்குலியம் – பாண்டு நோய், காதுவலி
கொடிவேலி - கிரஹணி, வீக்கம்
கொத்தமல்லி - காய்ச்சல், நாவறட்சி, வாந்தி இருமல், இளைப்பு
சதகுப்பை - இருமல், யோனி நோய்கள்
சீரகம் - வயிறு உப்புசம், காய்ச்சல்,வாந்தி
தும்பை - நீர்ச்சுருக்கு, மூத்திரப்பைக் கல், நாவறட்சி, இரத்த தோஷம்.
திப்பிலி - இருமல், அஜீரணம், சுவையின்மை, இதய நோய், சோகை
தும்பை - கபம், அஜீரணம், வீக்கம்
நன்னாரி - ஜிரணக் குறைவு, சுவையின்மை, இருமல், காய்ச்சல்
நாயுருவி - கபம், கொழுப்பு, இதய நோய், உப்புசம், மூலம், வயிற்றுவலி
நாவல் - பித்தம், ரத்த தோஷம், எரிச்சல்
நிலவாரை- கபம், பித்தம், நீரழிவு
பூசணி - புத்தம், ரத்த தோஷம், மனநோய்
பூண்டு - இதய நோய், இருமல்
பூவரசு - நஞ்சு, நீரழிவு, விரணம்
பெருங்காயம் - வயிற்றுவலி, உப்புசம்
பேரீச்சை - கஷயம், வாதம், வாந்தி, காய்ச்சல், நாவறட்சி
மணத்தக்காளி - இருமல், ரத்த தோஷம், அஜீரணம், பித்தம்
மிளகு - வயிற்று உப்புசம், பல்வலி
முள்ளங்கி – காய்ச்சல், இழுப்பு , கண் மூக்கு தொண்டை நோய்கள்
வசம்பு - மலபந்தம், வயிறுஉப்புசம், கைகால் வலி, நீர்பெருக்கு, கிருமி நோய்
வல்லாரை – சோகை, நீரழிவு, வீக்கம்
வாகை - வீக்கம், அக்கி, இருமல்
வால்மிளகு - வாய்நாற்றம், இதய நோய், பார்வைக்குறைவு
வில்வம் - வாதம், கபம்
விளாமிச்சம் வேர் – நாவறட்சி, எரிச்சல்
வெற்றிலை - கபம், வாய்நாற்றம், சோர்வு
ஜாதிக்காய் - சுவையின்மை, இருமல்
***
fb
***
"வாழ்க வளமுடன்"
Labels:
பாட்டி வைத்தியம்
புரதச்சத்து குறைபாடா? இந்த 5 உணவுகளை சாப்பிடுங்கள்
தசைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்து அவசியம், உடலின் எடையில், ஒரு கிலோவுக்கு 0.8 கிராம் புரதம் தேவை.
50 கிலோ எடை கொண்டவர் என்றால், 40 கிராம் தேவை.
தினமும் ஏதாவதொரு வகையில் புரதச்சத்து நிறைந்த உணவு பொருட்களை சாப்பிட்டு வந்தால் உடல் உறுதியாகும்.
முட்டை
முட்டையில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது, நன்றாக உடற்பயிற்சி செய்பவர்கள், தினமும் அதிகமாக உடல் உழைப்பு செய்பவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் மூன்று முட்டை சாப்பிடலாம். 100 கிராமில் 13 கிராம் புரதம் இருக்கிறது.
அசைவ உணவுகள்
சிக்கன் போன்ற அசைவ உணவுகளில் புரதச்சத்து அதிகமாக இருக்கிறது. சிக்கனை எண்ணெயில் பொறித்து சாப்பிடக்கூடாது. ஹார்மோன் ஊசிகள் ஏற்றப்படாத நல்ல நாட்டுக்கோழியை வாரம் 300 – 500 கிராம் அளவுக்கு நீராவியில் வேகவைத்து, மசாலா தடவாமல் சாப்பிடலாம்.
சிக்கன் சாலட் செய்தும் சாப்பிடலாம். 100 கிராம் கோழி இறைச்சியில் 27 கிராம் புரதம் உள்ளது.
பருப்பு வகைகள்
துவரம் பருப்பு, பாசி பருப்பு என பருப்பு வகைகள் அனைத்திலும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. முளைக்கட்டிய பயிர்களில் புரதச்சத்து அதிகளவு உள்ளது. எனவே அசைவ உணவுகளை தவிர்ப்பவர்கள் தினமும் சிறிதளவு முளைக்கட்டிய பயிர்களை சமைத்து சாப்பிடலாம். பச்சைப் பயிரில் மட்டும் 24 கிராம் அளவுக்குப் புரதம் உள்ளது.
யோகர்ட், சீஸ்
யோகர்ட் எனப்படும் தயிர், சீஸ் போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது. எனினும் இதில் கொழுப்பு சத்தும் நிறைந்து காணப்படுவதால், இதனை அளவகாவே உண்ண வேண்டும். பால் பொருட்களில் 10 கிராம் அளவுக்கு புரதம் உள்ளது.
சோயா பீன்ஸ்
புரதச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு சோயா நல்ல மருந்து. சோயாவை அவ்வப்போது சீரான இடைவெளி விட்டு சமையலில் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
சோயா பால், சோயா சீஸ் போன்றவற்றிலும் புரதச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் சோயாவில் 28.6 கிராம் புரதம் உள்ளது.
***
fb
***
"வாழ்க வளமுடன்"
Labels:
உடல்நலம்,
குழந்தைகள் நலன்
ஆரோக்கியம் என்ற பெயரில் நாம் அன்றாடம் செய்யும் தவறுகள்
நாம் அனைவருமே ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்பவர்கள் தான், ஏதேனும் உடல்நல குறைபாடு வரும் போது மட்டும். பிறகு மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுவது போல மறந்து விடுவோம். நம்மில் பலரும் தினமும் சிலவற்றை ஆரோக்கியமான விஷயம் என்ற பெயரில் சில தவறுகளை செய்து வருகிறோம்.
சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது அல்லது கழுவாமல் இருப்பது. வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பதை வரை நாம் பல தவறுகளை செய்து வருகிறோம். அவற்றை பற்றி இனிக் காண்போம்....
உள்ளாடைகளை துவைக்கும் முறை உள்ளாடைகளை வாஷின் மெஷினில் துவைக்க வேண்டாம். முக்கியமாக மற்ற ஆடைகளுடன் சேர்த்து துவைப்பதை தவிர்க்க வேண்டும். மேலும்இதமான நீரில் தான் உள்ளாடைகளை துவைக்க வேண்டும் எனவும் ஆரோக்கிய வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
மற்றவரது பொருட்கள் உள்ளாடை மட்டுமின்றி டவல் நெய்ல் கட்டர் போன்ற பொருட்களை கூட மற்றவருடையதை பயன்படுத்தக் கூடாது. இதன் மூலமாகவும் கூட நிறைய பாக்டீரியாக்கள் பரவுகின்றன.
வியர்வை துடைப்பது வியர்வையை துடைப்பதில் கவனமாக இருக்க வேண்டும். கைகளை கொண்டு வெறுமென துடைப்பதை தவிர்த்துவிடுங்கள். சுத்தமான டவல் அல்லது கர்சீப் கொண்டு துடைக்க பழகுங்கள். ஏனெனில், வியர்வையில் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருக்கின்றன.
ஒருமுறைக்கு மேல் குளிப்பது நாம் தினமும் குளிப்பதே சருமத்தில் இருக்கும் அழுக்களை போக்க தான். இரவு குளிர்ந்த நீரில் குளிப்பது நல்ல உறக்கத்தை தரும்.
ஆனால், சிலர் ஓர் நாளுக்கு இரண்டு மொன்று முறை எல்லாம் குளிப்பார்கள். காலை, மாலை, இரவு என, இது உங்கள் சருமத்தில் வறட்சியை ஏற்படுத்தி எரிச்சலை உண்டாக்கும். எனவே, இதை தவிர்த்துவிடுங்கள்.
பல் துலக்குவது தினமும் ஒருமுறை மட்டும் பல் துலக்குவது போதாது. காலை, இரவு என இரண்டு முறை பல் துலக்குவது அவசியம். ஏனெனில், இரவு சாப்பிட்ட உணவின் மூலமாக தான் நிறைய பாக்டீரியாக்கள் உண்டாகின்றன.
கை கழுவும் திரவம் அளவுக்கு அதிகமாக கை கழுவும் திரவத்தை பயன்படுத்த வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதிகமாக பயன்படுத்துவது சரும வறட்சி மற்றும் சரும பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.
எப்போது கை கழுவ வேண்டும் சாப்பிடுவதற்கு முன்பு, பிறகு மட்டுமின்றி, கழிவறை சென்று வந்த பிறகு, அழுக்கான பொருட்களை கையாண்ட பிறகு, என் வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய பிறகும் கூட கை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தாலே பாக்டீரியா தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியும்.
கார்பெட் சுத்தம் செய்வது தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட், பாய்கள் போன்றவற்றை மாதத்திற்கு ஒருமுறையாவது சுத்தம் செய்து வைக்க மறக்க வேண்டாம். இதன் மூலமாக தான் நிறைய சுவாச பிரச்சனைகள் வருகின்றன.
***
fb
***
"வாழ்க வளமுடன்"
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
இந்த வலைப்பதிவில் தேடு
தமிழில் எழுத உதவும் தூண்டில்
வானம் வசப்படும்
" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "