...

"வாழ்க வளமுடன்"

21 மார்ச், 2010

இலந்தைப் பழத்தின் மருத்துவ குணங்கள்

இலந்தை பழம், இலை, பட்டையின் மருத்துவ குணங்கள்:

*

இலந்தை பழம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று. ஆனால் அம்மரத்தின் ஓவ்வெரு பாகமும் மருத்துவ குணம் கொண்டவை என்று உங்களுக்கு தெரியுமா?



இலந்தை மரப் பட்டையின் குணம்:

*

1. இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர, ஆறாத புண்ணும் ஆறும்.

*
2. இலந்தை இலையையும், பட்டையையும் ஒன்றிரண்டாக இடித்து குளிக்கின்ற நீரில் கலந்து காய்ச்சி குளித்து வர தலைக்குத்தல், குடைச்சல் நீங்கும்.

*

3. இலந்தையைப் பட்டையை இடித்து நீர்விட்டு கஷாயமாக காய்ச்சி குடித்து வர சுரம் தணியும்.

*

4. இலந்தை மரத்தின் வேரை அரைத்து பூச மூட்டு வலி குணமாகும்.

*

5. இதன் வேர்ப்பட்டையை இடித்து பிழிந்தச் சாற்றை 15 மில்லி அளவு குடிக்க மலச்சிக்கல் குணமாகும்.

***

இலந்தை இலையின் மகத்துவம்:

*

1. இல‌ந்தை பழ‌த்‌தி‌ல் ‌நிறைய ச‌க்‌தி‌க‌ள் உ‌ள்ளன. அதே‌ப்போல இல‌ந்தை இலை‌யிலு‌ம் அ‌திக மரு‌‌த்துவ ச‌க்‌திக‌ள் உ‌ள்ளன.

*

2. இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும்.

*

3. இலந்தை இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும்.

*

4. இலந்தை இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.

*

5. இலந்தை இலையை மைபோல் அரைத்து பூசி வர மயிர் புழுவெட்டு நீங்கும்.

*

6. இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.

*

கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு ( இலந்தை இலை ):

*

1. தற்போதைய காலக்கட்டத்தில் பல பெண்களுக்கு கருப்பையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.கருப்பை பிரச்சினையால் மாதவிலக்கு சமயங்களில் அதிக வலி, கரு உருவாகாமை, அ‌‌ப்படியே உ‌ண்டானாலு‌ம் கரு‌ச்‌சிதைவு போன்றவை ஏற்படும்.

*

2. கரு‌ப்பை தொட‌ர்பான ‌பிர‌ச்‌சினைகளு‌க்கு ஆ‌ங்‌கில மரு‌த்துவ‌த்தை ‌விட இய‌ற்கை வை‌த்‌தியமே ந‌ல்ல‌ப் பலனை‌த் தரு‌ம். இதற்கு இலந்தை இலை நல்ல மருந்தாக விளங்குகிறது.

*

3. இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன் 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.


*

4. இப்படி செய்து வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி, வலியும் குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்


***

வயிற்றுக் கடுப்புக்கு மருந்து:

*

1. பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.


*

2. இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும்.

*

3. வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.


***

இளநரை‌க்கு இல‌ந்தை மரு‌த்து‌வம‌்:

*

1. த‌ற்போது பெரு‌ம்பாலான இளைய தலைமுறை‌க்கு தலையாய ‌பிர‌ச்‌சினையே தலை முடிதா‌ன். தலை முடி உ‌தி‌ர்வது, இள நரை, பொடுகு போ‌ன்றவைதா‌ன்.

*

2. இவை பெரு‌ம்பாலு‌ம், சு‌ற்று‌ச்சூழ‌ல் கெ‌ட்டிரு‌ப்பது ம‌ற்று‌ம் ப‌ணி‌ச் சுமை காரணமாக ஏ‌ற்படு‌கிறது.

*

3. இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.

*

4. இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.

*

5. மேலு‌ம், இள நரை ஏ‌ற்ப‌ட்டது‌ம் மன‌ம் கல‌‌ங்‌கி‌விடாம‌ல், உண‌வி‌ல் அ‌திகமான அளவு க‌றிவே‌ப்‌பிலையை சா‌ப்‌பி‌ட்டு வர வெ‌ள்ளை முடிக‌ள் ‌மீ‌ண்டு‌ம் கரு‌ப்பாக மாறு‌ம்.

***

இலந்தைப் பழத்தின் நன்மை:

1. இழந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

*

2. இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி ப¦றும்.

*

3. எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு.

*

4. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு.


*

5. கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.


**

இலந்தை நினைவாற்றலுக்கு உகந்தது:

*
1. தினமும் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.

*

2. இலந்தை பழம் நினைவாற்றலுக்கு ஏற்றது. மாணாக்கர்கள் இலந்தை சாப்பிட்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.

*

3. இலந்தைப் பழந்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.

*

4. தொடர்ந்து அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றெரிச்சல் ஏற்படும்.

*

5. இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு.


*

6. மந்த புத்தியுள்ளவர்கள் இல‌ந்தை‌ப் பழ‌த்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும். ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது 1_2 லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும்.

*

7. பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும்.


*

8. இ‌தி‌ல் கா‌ல்‌சிய‌ம் ச‌த்து அ‌திகமாக இரு‌ப்பதா‌ல் ப‌ற்க‌ள் ம‌ற்று‌ம் எலு‌ம்புகளு‌க்கு அ‌திக ந‌ன்மைகளை அ‌ளி‌க்‌கிறது.


*

9. எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியும், உடம்புக்கு பலமும் தரும் வகை‌யி‌ல் இ‌ல‌ந்தை பழ‌ம் அமை‌ந்து‌ள்ளது.


*

1o. எ‌ல்லா‌ப் பழ‌ங்களையு‌ம் உணவு‌க்கு மு‌ன்பு தா‌ன் சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம். ஆனா‌ல் இல‌ந்தை‌ப் பழ‌த்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.


***

இல‌ந்தை‌யி‌ன் ப‌ண்புக‌ள்:

*


1. இல‌ந்தை பழ‌ம் ம‌ற்ற பழ‌ங்களோடு ஒ‌ப்‌பிடு‌ம்போது விலை மலிவு. ஆனால் அது தரும் பலன்களோ அரிது. 4000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானதுதான் இந்த இலந்தை.

*

2. இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும் எனப்படுகிறது.

*

3. அ‌வ்வளவு ‌சி‌ன்ன பழமாக இரு‌ந்தாலு‌ம் அ‌தி‌ல் ‌அடங்கியுள்ள வி‌ட்ட‌மி‌ன்க‌ள் ஏராள‌ம்.

*

4. 100 கி இலந்தையில் கிடைக்கும் கலோரி 74. இதில் 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், கொண்ட இதில் விட்டமின் ஏ-வும், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இரும்பு சத்தும் கூட அடங்கியுள்ளன.

*

5. இது உடலு‌க்கு சூ‌ட்டை த‌ணி‌த்து கு‌ளி‌ர்‌ச்‌சியை‌‌த் தர‌க் கூடியது. கு‌ளி‌ர்‌ச்‌சியான உட‌ல் வாகு கொ‌ண்டவ‌ர்க‌ள் ம‌திய வேளை‌யி‌ல் ம‌ட்டு‌ம் இதனை உ‌ண்ணலா‌ம்.


***


நன்றி வெதுப்னியா.
Webdunia.com

***

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "